Wednesday, 2 April 2025

மகிழ்ச்சியான வாழ்விற்கான ரகசியங்கள் மற்றும் மனதைக் கையாளுதல் பயிற்சி வகுப்பு 6.4.2025 ஞாயிறு மதியம் 10 மணி முதல் 1 மணி வரை

SECRETS OF HAPPY LIFE AND MIND MANAGEMENT - ONLINE CLASS (GOOGLE MEET) 6.4.2025 – 10:00 PM TO 1:00 PM

 

மனரீதியான காயங்கள்,வலி,தேங்கி நிற்றல்,உறவுச் சிக்கல், ஏமாற்றம், துக்கம், இழப்பு,உற்சாகமின்மை,தள்ளிப்போடும் பழக்கம், சோகத்தில் மூழ்குதல், தாழ்வு மனப்பான்மை,தற்கொலை முயற்சி,பழிவாங்கும் எண்ணம்,கோழைத்தனம்,சந்தேக மனப்பான்மை,தனிமை உணர்வு,மரணபயம் போன்ற நம் நல்வாழ்விற்குத் தேவையற்ற எந்த உணர்வில் இருந்தும் விடுபடுவதற்கான திறவுகோல் இந்த வகுப்பில் கிடைக்கும்.

மேலும் மகிழ்ச்சியாக வாழ்வது என்பது ஒரு கலை.அதை உங்களுக்குப் புரியும் படியும் பிடிக்கும் படியும் கற்றுத் தரப்படும்.


வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல விரும்பும் பலரின் கேள்விகளுக்குப் பதிலாக இருப்பதோடு வகுப்பின் முடிவில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழத்  துவங்கும் புதிய மனிதராக இருப்பீர்கள் என்பது உத்தரவாதம்.

 

 

நடைமுறையில் பின்பற்றிப் பலன் பெறக் கூடிய  எளிமையான விதிகள் மட்டுமே வகுப்பில் இடம்பெறும்

 

வகுப்பில் இடம்பெறும் விஷயங்களில் சில 

 

1.வாழ்க்கை முழுமையாக விதிப்படியானதா அல்லது நம் சிந்தனை,சொல், செயல்களால் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடியதா ? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும் ?

 

வாழக்கையில் நாம் விரும்பியபடி உறவுகள் நண்பர்கள் இல்லாவிட்டாலும் / மாறாவிட்டாலும் நாம் நினைத்தபடி நாமே ஏன் இருக்கவும்/ மாறவும்  முடிவதில்லைஎனக்குள்ளேயே ஏன் இவ்வளவு முரண்பாடுகள்ஒரு நாளில் நான் செய்யும் செயல்களில் பலவும் தேவையற்றவை தான்.அந்த நேரங்களில் வாழ்க்கை நலமடைய எவ்வளவோ விஷயங்களைச் செய்யலாம். ஆனால்,எதுவும் உருப்படியாகச் செய்வதில்லை.பல நேரங்களில் எனக்கே என்னைப் பிடிப்பதில்லை போன்ற எண்ணம் தோன்றுகிறது.எனக்கே என்னையும் என் செயல்பாடுகளையும் பிடிக்கும்படி என்னை மாற்றிக் கொண்டாலே போதும்.நாம் நிம்மதியாக இருப்பதோடு அடுத்தடுத்து முன்னேறவும் உதவியாக இருக்கும்.அதற்கான மன நிலையை அடையும் வழிமுறைகள்.

 

 

2.உடலுக்கு உணவைப் போல் மனதிற்கு மகிழ்ச்சி அவசியமான தேவை. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால்,மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போல் அவ்வளவு எளிதில் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லையே ஏன் ?

எப்போதும் துன்பம்,கவலை,வருத்தம்,வெறுமை நிறைந்த மனதில் மகிழ்ச்சியைக் கொண்டு வர என்ன செய்யவேண்டும் ?

 

மனதை லேசாகவும்,விசாலமாகவும்,மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளப் புரிந்து கொள்ள வேண்டியவை /செய்ய வேண்டியவை -GOLDEN KEYS. 

 

3. நீண்ட நாள்களாக மனதை வருத்தும் கவலைகள்,அவமானம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறைச் சிந்தனைகள்,சோம்பல்,தள்ளிப்போடும் குணம்,அதீத கோபம்,அதீத காமம்,பிறரை  அடக்கி ஆள நினைத்தல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல்,பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல், உறவுகளிடம் அதீத எதிர்பார்ப்பு போன்ற மனச்சமநிலைக் கேடுகளைச் சரி செய்யும் முறைகள் .

 

4.நல்ல விஷயங்களைச் செய்யத் துவங்குவதும்,அதைத் தொடர்ந்து செய்வதும் ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ? அதே நேரத்தில் கெட்ட காரியத்தைத்  துவங்குவதும் அதை விடாமல் செய்வதும் ஏன் இவ்வளவு எளிதில் நடைபெறுகிறது ? செய்த பின் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது ஏன் ? இதில் இருந்து விடுபடுவது எப்படி ?

 

5.மனமும் அதன் தன்மையும்,மகிழ்ச்சியும்,நிம்மதி கொண்ட வாழ்க்கைக்கு மனதைப் பயன்படுத்தும் விதம்.

 

6.தனியாக இருக்கும் பொழுதும்,உறங்கும் பொழுதும் தேவையில்லாத எண்ணங்கள் வந்து நிம்மதியைக்  கெடுக்கிறதே  ஏன் ? இதைக் கையாள்வது  எப்படி?

 

7.வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவே கடினமாக உழைக்கிறேன் என்ற பெயரில் உடலையும்,மனதையும் கெடுத்துக் கொள்பவர் பலர். உடலும் மனமும் கெட்டு விட்டால் எப்படி உழைப்பின் பலனை ரசித்து மகிழ முடியும்.

உழைக்கவும் வேண்டும்.அதே நேரத்தில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் வேண்டும். அப்பொழுது  மட்டுமே ஊக்கத்துடன் தொடர்ந்து உழைக்கும் சக்தி நம்மிடம் நிலைக்கும். அதற்கான வழிமுறைகள்.

 

8.நம்மைப் பின்னோக்கி இழுக்கும் பலவீனங்களைச் சரிசெய்தால் மட்டுமே முன்னேறிச் செல்வது சாத்தியம்.

நம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.வளர்ச்சிக்கு இது மிக முக்கியம்.பலவீனம் நம்மை இனியும் தாழ்த்தாமல் இருக்க என செய்ய வேண்டும்

 

 

9.கணவன்,மனைவி,குழந்தைகள் இவர்களைப் புரிந்து கொள்ளவும்  உறவுகளைச் சரியாக நிர்வகிக்கவும் தெரிந்தால் நம் நிம்மதிக்கும் முன்னேற்றத்திற்கும் பேருதவியாக இருக்கும்.அதற்கான சில ரகசியங்கள்.

 

10.சுயமுன்னேற்ற  வகுப்புகளில் சேர்வது அல்லது சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்கள் அதிகம் படிப்பது அவசியமா  ?  பயன் என்ன ?

சுயமுன்னேற்ற வகுப்புகளுக்குச் சென்று கற்றுக் கொண்ட விஷயங்கள் மற்றும் சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்கள் படிக்கும் பொழுதும் இருக்கும் மனநிலை / மனஉறுதி மிகச் சீக்கிரமே தளர்ந்து போகிறதே ஏன் ?.

சிறு சிறு தோல்விகள்,பிறரின் விமர்சனங்களுக்கு சீக்கிரமே மனம் உடைந்து போகிறேன்.தன்நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மனதில் மாறி மாறி வரும் நிலையில் நம்மை மனோ ரீதியில் வலிமையாக வைத்துக் கொள்வது எப்படி

 

 11.தவறான தொடர்பு,கள்ளக்காதல்,மது,போதை,புகையிலை மற்றும் சில தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது ஏன் ? அவற்றில் விடுபடுவது எப்படி

 

12.உறவுகளுக்கு உதவிகள் செய்து பிற்காலத்தில் அவர்களால் புறக்கணிப்பு அல்லது அவமானம் செய்யப்பட்டால் அதில் இருந்து மனதளவில் விடுபடுவது எப்படி?

 

13.மன அமைதி கெடாமல் வாழ்வது எப்படி?

 

14.உடலிலும் மனதிலும் போதுமான சக்தி இருந்தால் மட்டுமே நாம் விரும்பும் விஷயங்கள் விரும்பிய காலத்திற்குள் நடக்கும். உடலையும் மனதையும் சக்தியுடன் வைத்துக் கொள்ள உதவும் ரகசியங்கள்.

 

15.பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் மற்றும் தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள்

 

16.தீவிரமான ஆன்மீக ஈடுபாடு சரியா,தவறா

 

17.எத்தனையோ ஞானிகள்,மஹான்களின் தத்துவங்கள், பயிற்சிகளைக் கற்றும் ஏன் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.அவர்களின் போதனைகள் நம் வாழ்வில் பிரதிபலிக்காதது ஏன் ?


18.உறவுகளிடம் மனோ ரீதியிலான அடிமைத்தனமாக இருக்கும் மனோபாவத்தில் இருந்து விடுபடும் வழிமுறைகள்.


19.நமக்கே நம்மைப் பிடிக்கும்படி குணாம்சத்தில் மாற்றம் கொண்டு வருவதற்குச் செய்ய வேண்டியவை .


இன்னும் பல உபயோகமான விஷயங்களை வகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

 

வகுப்பு 12.15 மணிக்கு முடிந்து விடும்.12.15 முதல் 1 மணி வரை வகுப்பில் கற்றுத் தரப்பட்ட  விஷயங்கள் தொடர்பாக அல்லது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்து கொள்ள விரும்பும் மாற்றங்களுக்கு உதவும் கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

 

வகுப்பின் முடிவில் புதிதாய்ப் பிறந்தது போல் உணர்வீர்கள்.அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.மற்றபடி அந்த நெருப்பை அணையாமல் காத்துக் கொண்டால் மகிழ்ச்சியும் முன்னேற்றமும்  உங்கள் கையில்


பயிற்சிக் கட்டணம் :RS.2000


தேதி : 6.4.2025 - ஞாயிறு காலை 10 மணி முதல் 1 மணி வரை 


பயிற்சிக் கட்டணத்தைக் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.




GOOGLE PAY /PHONEPE NUMBER : 9788493072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

 

நன்றி! வாழ்க வளமுடன் !

 

M.சூர்யா,

தச்சநல்லூர்,

திருநெல்வேலி 

வாட்சப் எண் : 9788493072