Showing posts with label ஜோதிடக்கலையில் புகழ் பெற. Show all posts
Showing posts with label ஜோதிடக்கலையில் புகழ் பெற. Show all posts

Tuesday, 29 December 2015

வாக்குவன்மை,தேஜஸ்,நினைவாற்றல்,சகல கலைகளிலும் உயர்வு தரும் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி மந்திரம்



வளர்பிறைத் திங்கள்,புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு நோக்கி வெள்ளை விரிப்பில் அமர்ந்து இதைச் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

செம்பு அல்லது பித்தளைத் தட்டு  - 1
வெண்தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூக்கள்
ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர்


விளக்கேற்றி வைத்து அதில் மாதா ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை எழுந்தருள வேண்டி இரண்டு சிறிய கற்கண்டுகளை விளக்கில் போடவும்.பால் ,பழங்கள் வெற்றிலை,பாக்கு மற்றும் இயன்ற நைவேத்யம் வைக்கவும்.

ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் கொஞ்சம் சந்தானம் பரப்பி அதில் கொஞ்சம் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் விட்டுக் குழைத்து தட்டு முழுவதும் பரப்பி அதில் வலது கை மோதிர விரலால் ஐம் என்று எழுதவும்.கொஞ்சம் காய்ந்த பின்னர்    தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூ எடுத்து கீழே உள்ள மூலமந்திரம் சொல்லி தட்டில் உள்ள ஐம் என்ற எழுத்தில் படும் படிப் போடவும். பின்னர் மந்திரம் குறைந்தது 108 தடவை ஜெபித்து அன்னை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியே உன் திருமந்திரம் கொண்டு இந்த அர்ச்சிக்கப்பட்ட இந்த சந்தனத்தை அணிவதால் எங்களுக்கு நல்ல ஞானம், வாக்குவன்மை,கல்வியில் ஆர்வம்,வாழ்விலும் ஆன்மீகத்திலும் உயர்வு, தேஜஸ் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த சந்தனத்தைப் பன்னீரில் குழைத்துத் தினமும் அணிந்து கொள்ளவும்.பின்னர் அந்த சந்தனத்தை சேர்த்து எடுத்து ஒரு பித்தளை,செம்பு,தங்கம்,வெள்ளி இதில் எந்த டப்பி அல்லது பாத்திரம் உங்கள் வசதிக்கு உகந்ததோ அதில் போட்டு வைத்துக் கொள்ளவும்.பௌர்ணமி தோறும் அந்தப் பாத்திரம் அல்லது டப்பிக்கு மந்திரம் ஜெபித்துப் பூக்களால் அர்ச்சித்து வர சக்தி கூடும்.

தினமும் குளித்து முடித்த பின் கிழக்கு முகமாய் நின்று 3 முறை மந்திரம் ஜெபித்துச் சந்தனத்தைப் பன்னீர் விட்டுக் குழைத்து அணிந்து வர வாலைத்தாய் அருளால் நல்வாழ்வு கிட்டும்.


அசைவம் தவிர்க்கவும்.

மூலமந்திரம் 

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலா திரிபுர சுந்தரி |
என் வாக்கிலும் மனதிலும் முகத்திலும் வந்து நிற்க ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Saturday, 13 December 2014

ஜோதிடக்கலையில் புகழ் பெற ஸ்ரீ வாக்வாதினி மந்திரப் பிரயோகம்





ஜோதிடம் ஒரு கடல்.பல்வேறு ரிஷிமார்களும்,சித்தர்பெருமக்களும் இயற்றிய பல்வேறு ஜோதிட நூல்கள் போக அவ்வப்போது தோன்றிய பல அறிஞர் பெருமக்களும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து ஜோதிடக் கலைக்குப் பலம் சேர்த்து வருகின்றனர். நினைவாற்றல், சமயோசித புத்தி,மந்திரசித்தி இருந்தாலும் வாக்குப்பலிதம் இல்லையென்றால் ஜோதிடக்கலையில் சிறக்க முடியாது.

சிலருக்கு ஜோதிடம் கற்க விருப்பம் இருக்கும் அதில் உள்ள பல்வேறு சூத்திரங்கள் ,கணிதங்களை மனதில் இருத்திக்கொள்ள முடியாமல் இருப்பார்கள். அவர்கள் இம்மந்திரத்தை ஜபித்து வர ஜோதிடம் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.

சரஸ்வதி மந்திரங்கள் பல இருந்தாலும்  இந்த வாக்வாதினி மந்திரம் குறிப்பாக ஜோதிடக் கலையில் சிறந்து,புகழுடன் விளங்கப் பேருதவியாக இருக்கும்.

ஜோதிடம் சொல்லும் போது, அதிகப்பணம் சம்பாதிக்க்கும் நோக்கில் பொய் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து அறவே நிறுத்திவிட வேண்டும். ஏனென்றால் மந்திரம் சித்தியாக ஆக படிப்படியாகப் புகழ்,தேஜஸ், வாக்பலிதம்,கௌரவம் எல்லாம் கூடிய வளவாழ்வு அமையும்.எனவே,பொய்களைத் தவிர்த்து ஜோதிடம் சொல்லி வர மந்திரசித்தியின் காரணமாக ஜோதிடத்தில் நிறைந்த புகழுடன் விளங்கலாம்.

ஜெப விதிமுறைகள்:-

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம்:- 

ஓம் ஐம் நமோ பிரம்மாணி பிரம்மபுத்ரி|
வத வத வாசா சித்திம் குரு குரு ஸ்வாஹா ||       


குறிப்பு:- மந்திரத்தில் வரும் வாசா என்ற இடத்தில் உள்ள சா என்பதை சந்துரு (CHA) என்ற பெயரில் வரும் உச்சரிப்பில் உச்சரிக்கவும்.அதாவது சா என்ற எழுத்தை அழுத்தமாக உச்சரிக்கவும். 


வளர்பிறையில் உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகப் பார்த்து மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.அதிகாலை  3:50 முதல் 5:50 க்குள் ஜெபிக்க நிறைவான பலன் உண்டாகும்.கிழக்கு நோக்கி அமர்ந்து 1008 தடவை ஜெபிக்கவும்.90 நாட்கள் ஜெபத்தில் மந்திரத்தில் சம்பூர்ண சித்தி உண்டாகும். 18 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் தேஜசும்,வாக்கு பலிதம் உண்டாகத் துவங்கும்.

1008 உரு ஜெபிக்க முடியாதவர்கள் குறைந்தது 508 அல்லது 108 தடவையாவது ஜெபித்து வரவும்.

வாக்தேவதை மந்திரங்களைச் சித்தி செய்ய விரும்புவோர் வெண்ணிற ஆடைகளை அணியவேண்டும்.வெண்ணிறப் பட்டு அல்லது காட்டன் துணியில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.பலகையில் அமர்ந்து ஜெபித்தால் அதன் மீது வெண்ணிறத் துணி போர்த்தி அதன் மேல் அமர்ந்து ஜெபிக்க வேண்டும். ஸ்படிகம் அல்லது வெண்தாமரைக் கொட்டை மாலையை ஜெபத்திற்குப் பயன்படுத்தலாம்.அந்த மாலையை அணிந்தும் வரலாம். பௌர்ணமி அன்று இரவில் 9 மணிக்குள் நிலவைப் பார்த்தபடி மந்திரம் ஜெபித்து கற்கண்டுப்பாயசம் படைத்து ,ஜபம் முடிந்தபின் மொட்டை மாடியில் நிலவொளியில் சுத்தமான நீரில் செம்புப் பாத்திரத்தில் ஜபத்திற்குப் பயன்படுத்திய ஸ்படிக மாலையைப் போட்டு வைத்து  அதிகாலையில் பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து குளித்து விட்டு அந்த நீரை அருந்தி வர விரைவில் மந்திரம் சித்தியாகும்.

மேலும் இந்த மந்திர சித்தி தொடர்பான அநேகப் பிரயோக சித்தி ரகசியங்கள் உள்ளன.அவற்றைக் குருமுகமாகக் கேட்டு அறிந்து கொள்ளவும்.


முக்கியக் குறிப்பு:-

யாரையும் சபிக்கக்கூடாது.வாக்கு பலித சக்தியால் அவை பலித்துவிடும். நமக்கு வெற்றி கிடைத்தாலும் சாபத்தினால் பாதிக்கப்படுபவரின் துன்பச்சுமை நம்மைப்  பிற்காலத்தில் துன்பத்திற்கு ஆளாக்கும்.நானும்  வாழவேண்டும்  யாவரும் வாழட்டும் என்று நல்ல எண்ணத்தோடு இருக்க முயற்சியுங்கள்.
ஸ்ரீ வாக்வாதினி தேவி உங்கள் யாவருக்கும் வாக்பலிதத்தோடு ஜோதிஷ தெய்வக்ஞராக விளங்க அருள் செய்ய வேண்டுகிறேன்.

                            வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com