Showing posts with label சித்தர் தரிசன மந்திரங்கள். Show all posts
Showing posts with label சித்தர் தரிசன மந்திரங்கள். Show all posts

Tuesday, 9 July 2013

சித்தர் தரிசன மந்திரங்கள்

                                        சித்தர் தரிசன மந்திரங்கள்


சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார்.


1.சித்தர் தரிசன மந்திரம்:-

ஓம் || கிலி  ரங் அங் சிங் ||

இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன்,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும் யோக, ஞான  ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது பரிபூரணம் 1000 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

2.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம கிலி ஓம்  |||


இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்  உண்டாவதுடன் தொழில் முறைகள் (வாதம் ,வைத்தியம்), யோக ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது ஞான சைதன்யம் 51 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.



3.சித்தர் தரிசன மந்திரம்:-


சிவயநம ஓம் கிலீம் ||

இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாகும்.சித்தர் பெருமக்கள் யாராவது காட்சி தருவார்கள் அச்சமயம் யார் வழியைப் பின்பற்றி அல்லது யார் நூலைப் பின்பற்றி இந்த முறையை அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள்.அப்பொழுது அகஸ்தியரின் நூலைப் பின்பற்றி இம்முறையை அறிந்தேன் அய்யா என்று மறுமொழி கூற வேண்டும்.


தெரிசிக்கத் தியானமொன்று சொல்லக்கேளாய் 
சிவயநம ஓம் க்லீம் என்று சேவி
வரிசிக்குஞ் சித்தரெல்லாம்  வெளியிற்காணு 
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு 
பரிசிக்கும் படியவரைக் கண்டாயானால் 
பணிந்திடுவாய் பாதத்திற் சிரசு தட்ட
கிரிசிக்கும் ஆர்நூலிற் சார்ந்தாயென்று 
கேட்கிலகத்தீசுரர் தன கிருபை யென்னே

- அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் 97 



4.சித்தர் தரிசன மந்திரம்:-


ஓம்|சிங் ரங் அங் சிங்|


இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர  சித்தர்கள் தரிசனம் தந்து நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் .


மேற்கண்ட மந்திரங்களில் எது உங்களுக்கு பிரியமானதோ அதைத்  தேர்ந்தெடுத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும்.


ஜெப விதிமுறை :

1.ஜெபிக்கும் போது அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் வைத்துக் கொள்ளவும்.

2.ஜெபம் செய்யும் இடத்தில் சந்தனமும்,பன்னீரும் கலந்து தெளிப்பது நல்லது.

3.அசைவம் எப்போதும் தவிர்க்கவும்.சைவ உணவு விரைவான பலன் தரும்.

4.குடும்பஸ்தர்கள் வெள்ளை உடை அணிவது நல்லது.

5.முழு நேர ஆன்மீகவாதிகள்,பிரம்மச்சாரிகள்,போன்றோர் மட்டும் காவி அணிந்து கொள்ளலாம்.

6.உணவு,உறக்கம்,உணர்ச்சி இவற்றில் சமநிலையைப் பேணவும்.

7.தனக்கும்,பிற உயிர்களுக்கும் தீமை தரக்கூடிய செயல்களைத் தவிர்க்கவும். 

8.இரவில் ஜெபம் செய்வதாக ஜெபித்து முடித்த பின் இருந்தால் தனியாக உறங்கினால் நல்லது. 

9.விரிப்பின் மேல் வெள்ளை வேஷ்டி விரித்து அதில் உறங்கவும்.

10.சந்தன அத்தர் அல்லது ஜாவ்வாது  சிறிது பூசிக் கொள்ளவும்.

11.மல்லிகை,ரோஜா,முல்லை போன்ற பயன்படுத்தலாம்.

12.பழங்கள்,இனிப்பு வகைகள் படைக்கவும்.   


மேலும் விபரங்களுக்குக்  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வீடியோ பார்க்கவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Monday, 8 July 2013

அகத்தியர் துதி

அகத்தியர் துதி




ஓம் ஸ்ரீ ஸ்ரீ சத்குரு ஸ்வகுரு அகத்திய குருப்யோ நமஹ
ஓம் ஸ்ரீ ஸ்ரீ குருபத்னி லோபாமுத்ராயை நமஹ 
அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

சித்தர்களில் முதன்மையானவரும்,ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாடல்களின் மூலம் வைத்தியம்,ஜோதிடம்,மந்திரசாஸ்திரம் முதலான பல கலைகளைப்பற்றி இவரைப்போல் தெளிவுபட விளக்கியவர்கள் இலர்.             
அகத்தியர் எனது மானசீக குரு.

நான் இயற்றி அன்றாடம் கூறி வரும் ஸ்ரீ அகத்தியர் துதியை கீழே கொடுத்துள்ளேன். 

தலை உச்சியில்(சஹஸ்ராரத்தில்) கீழ்க்கண்ட குரு வந்தன முத்திரையைப்  போட்டபடி  இந்த ஸ்துதியை ஜெபித்து யோகம்,தவம்,தியானம்,மந்திரஜபம் செய்து வர அவற்றில் சித்தி கிடைக்கும்.

குரு வந்தன முத்திரை என்ற ம்ருகி முத்திரை 



அகஸ்தியர் துதி:- 

1.தமிழ் மொழிக்குக் கர்த்தாவும்

2.வைத்தியம்,ஜோதிடம்,மந்திரங்கள் குறித்துத் தமிழில் பல நூல்கள் இயற்றியவரும்       

3.முருகப்பெருமானிடம் பிரணவ மந்திரோபதேசம் பெற்ற முனிசிஷ்யரும் (முனி ச்ரேஷ்டரும்)

4.சண்முகப்ரியரும் 

5.சக்திதாசரும்,சாக்த உபாசனா சிகரமும்

6.பொதிகைமுனி,கும்பமுனி,குறுமுனி,குருமுனி என்றழைக்கப்படுபவரும்

7.ராவணேஸ்வரரை வீணையால் வென்றவரும்

8.புலஸ்தியர்,தேரையர் போன்ற சித்தர் பெருமக்களின் குருநாதரும்

9.சிவபெருமான்,அன்னைபார்வதி திருமணத்தின் போது பூமியின் வடபாகம் தாழ்ந்து தென்பக்கம் உயர்ந்ததைச் சமன் செய்தவரும்  

10.ஸ்ரீ ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்தவரும்

11.ஸ்ரீ வித்யா உபாசனையில் துதிக்கப்படுபவரும் 

12.ஸ்ரீ ஹயக்ரீவரால் ஸ்ரீ வித்யா உபதேசமும்,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமமும் உபதேசிக்கப்பட்டவருமான  

ஸ்ரீ அகஸ்திய குருவே உங்கள் திருவடிகளும்,அன்னை ஸ்ரீ லோபாமுத்திரையின் திருவடிகளும் அடியேன் துரிய கமலத்தின் மேல் இருந்து நான் வாழ்விலும்,ஆன்மீகத்திலும் உயர ஆசீர்வதித்து வழிகாட்ட வேண்டுகிறேன்.
            


திருநெல்வேலி -பாபநாசம்-அகஸ்தியர் அருவியின் மேல் உள்ள கல்யாணி தீர்த்தம் என்ற புனித ஸ்தலத்தில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குரு ஸ்ரீ அகஸ்தியர் -அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா விக்ரஹம்.     

        
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
WHATSAPP/TELEGRAM NO : 9788493072