Showing posts with label பணம் திரும்பக் கிடைக்க. Show all posts
Showing posts with label பணம் திரும்பக் கிடைக்க. Show all posts

Saturday, 12 March 2016

கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்


ஒரு சுத்தமான இரும்புத் தட்டு ஒன்று எடுத்துக் கொள்ளவும்.ஒரு கற்பூரத்தைத் தரையில் ஏற்றி அதற்குச் சில அங்குலம் மேல் அந்தத் தட்டைக் கவிழ்த்துப் பிடிக்கவும்.அதில் புகைபட்டு, கரி பிடிக்கும்.அந்தக் கரியைத் தொட்டுத் தெற்கு நோக்கி அமர்ந்து, ஒரு தூய்மையான வெள்ளை நிறப் பேப்பரில் யார் பணம் தர வேண்டுமோ அவருடைய பெயரை வலது கை நடுவிரலால் எழுதவும்.எழுதும் பொழுது அவர் முகத்தை மனதில் நிறுத்தி அவர் விரைவில் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டே எழுதவும்.பின்னர் அந்தப் பேப்பரை மடித்து அதன் மேல் ஒரு கனமான பொருள் அல்லது கல் ஒன்றை வைத்து விடவும்.விரைவில் அந்தப் பணம் உங்களிடம் வந்து சேரும்.இதை வியாபாரிகள்,தனி நபர்கள்,தொழில் செய்பவர்கள், நிறுவனங்கள் நடுத்துபவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Thursday, 4 February 2016

கொடுத்த பணம் வசூலாகத் தாந்த்ரீகப் பரிகாரம்

மஞ்சள் பொடியைக் கொஞ்சம் நீர் விட்டுக் குழைத்து வைத்துக் கொள்ளவும். ஓம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனாய நமஹா  என்று 27 தடவை   ஜெபித்து விரைவில் இன்ன நபர் என் பணத்தை திருப்பித்தர அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிய பின்  பணம் திருப்பித்தர வேண்டியவரின் முகத்தை மனதில் நினைத்தபடியே அவரது பெயரை அந்த மஞ்சள் கலவையை ஒரு சிறு குச்சியால் தொட்டு  ஒரு தூய வெள்ளைப் பேப்பரில் எழுதவும். எழுதிய பின் அதைச் சுருட்டி ஒரு வெள்ளைநூலால் கட்டி ஆறு ,ஏரி ,கடல் போன்ற ஏதேனும் நீர் நிலைகளில் விட்டு விடவும்.விரைவில் பணம் திரும்பிவிடும்.இதை வெளிநபர்களிடம் சொல்லாமல் ரகசியமாகச் செய்யவும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com