Showing posts with label திருமணத்தடை நீங்க. Show all posts
Showing posts with label திருமணத்தடை நீங்க. Show all posts

Wednesday, 13 January 2016

திருமணத்தடை நீக்கும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்கள்






உரிய வயது வந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ பெண்ணோ யாரும் இந்தப் பரிகாரங்களைச் செய்து பலனடையலாம்.


1.வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் அம்பாள் விக்ரகம் அல்லது படத்தின் முன் பஞ்சு அல்லது தாமரைத் தண்டுத் திரியில் கொஞ்சம் ஜவ்வாது தடவி அந்தத் திரியைக் கொண்டு விளக்கேற்றி  "ஓம் ஆனைமுகன்  வருக கலைமகள்,மலைமகள்,திருமகள் வருக தேவர்கள் யாவரும் சேர்ந்திங்கு வருக" என்ற துதியை 3 தடவை சொல்லி விளக்கிற்கு சாம்பிராணி அல்லது ஊதுவத்தி தூபம் காண்பித்து விளக்கின் பாதத்தில்  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் " என்ற மந்திரம் ஜெபித்தபடியே குங்குமம் இடவும்.


ஜெபித்து முடித்த பின் திருமணத் தடை நீங்க வேண்டிக்கொள்ளவும்.


அந்தக் குங்குமத்தை ஒரு வெள்ளிக் குங்குமச் சிமிழில் எடுத்து வைத்துக் கொண்டு,தினமும் குளித்து முடித்த பின் நெற்றியில் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.


2. ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள் 7 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் குரு ஹோரையில் அத்திமரத்தின் அடிப்பகுதியில் 7 மஞ்சள் நிறப் பூக்களைப் பன்னீரில் நனைத்துப் போட்டு வர விரைவில் திருமணமாகும்.


3.ஜாதகத்தில் சந்திர பலம் இல்லாதவர்கள்  செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு  5 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.


4.ஜாதகத்தில் செவ்வாய் பலம் இல்லாதவர்கள் 5 வாரங்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு  11 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.


குங்குமப்பூ 


5. 11 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் அதிகாலையில் குளிக்கும் நீரில் கொஞ்சம் குங்குமப்பூ போட்டுச் சில நிமிடங்கள் கழித்துக் குளித்து வர விரைவில் திருமணமாகும்.


பிரிஞ்சி இலை 



6.ஒரு கவர் அல்லது பேப்பரில் 9 பிரிஞ்சி இலைகளை எடுத்து வைத்துக் கொண்டு உறங்கும் பொழுது தலையணையின் அடியில் வைத்து உறங்கி வர விரைவில் திருமணமாகும்.



7.சனிக்கிரகம் ஜாதகத்தில் சுப பலன்களைத் தராத காரணத்தினால் திருமணத் தடை உள்ளவர்கள் திங்கட்கிழமை தோறும் சிகப்பு நிற ஆடைகள் அணிந்து வரத் சனீச்வரரால் உண்டான தடைகள் விலகி விரைவில் திருமணமாகும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072



Monday, 11 May 2015

பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்




கீழே உள்ள இரண்டு பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து வரவும்.


பரிகாரம் 1:-
பௌர்ணமி அன்று ஆலமரத்தை    108 தடவை வலம் வந்து சர்க்கரை கலந்த நீரை மாற வேறில் ஊற்றி வழிபட விரைவில் திருமணமாகும்.


பரிகாரம் 2:-

ஒரு வளர்பிறை வியாழக்கிழமை அன்று தொடங்கி வியாழக்கிழமைகள்  தோறும் ஆலமரம்,அரசமரம் அல்லது வாழை மரத்திற்கு நீர் விட்டு வரத்  திருமணத் தடை நீங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Thursday, 16 April 2015

அழகு,செல்வம்,நற்குணம் நிறைந்த கணவன் கிடைக்க ஸ்ரீ ருக்மிணீ மந்திரம்

ஸ்ரீ ருக்மிணீ தேவி மந்திரம் 

ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா 

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது பெருமாள் கோயில் சென்று மேற்கு நோக்கி அமர்ந்து நற்குணம்,செல்வம்,அழகும் நிறைந்த கணவன் கிடைக்க அருள் செய் என்று ஸ்ரீ கிருஷ்ணனோடு சேர்ந்த ருக்மிணீ தேவியை மனதார வேண்டிய பின் மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.

பின் வரும் நாட்களில் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ ஜெபித்து வரலாம்.

வீட்டில் ஜெபிப்பதானால் நெய் விளக்கேற்றி அந்தத் தீப ஒளியில் ஸ்ரீ ருக்மிணீ சமேத ஸ்ரீ கிருஷ்ணரை எழுந்தருள வேண்டிப் பின்  ஜெபிக்கவும்.இயன்றதைப் படைத்து ஜபம் முடிந்த பின் விளக்கின் கருக்கை வகிடு அல்லது நெற்றியில் இட்டு  வர விரைவில் நல்ல இடத்தில் திருணம் நடைபெறும்.




வாழ்கவளமுடன்  

M.சூர்யா - தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Friday, 26 December 2014

விரைவில் திருமணமாக


வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி 12 வெள்ளிக்கிழமைகள் செய்து வரவும்.

வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பாயசம் படைக்கவும்.மஞ்சள் துணி விரித்து மஞ்சள் ஆடை அணிந்து செய்யவும்.விளக்கேற்றிக் கிழக்கு முகமாக அமர்ந்து மல்லிகை அல்லது பிச்சிப்பூவால் அர்ச்சித்தபடி மந்திரத்தை 108 தடவை ஜெபிக்கவும்.மந்திரம் ஜெபம் முடிந்த பின் விளக்கைக் குளிர வைத்து திரியின் கருக்கை நெற்றியில் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.  


மந்திரம்:-

ஓம் வம் சிவப்ரியாயை  சீக்ரம் விவாஹம் குரு குரு ஸ்வாஹா ||



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Thursday, 23 October 2014

திருமணத்தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வரகலா மந்திரம்





களத்திர தோஷம் ,பித்ரு தோஷம், மற்றும் பல்வேறு தோஷங்களாலும்,       ஜாதகத்தில் கிரகநிலைகள் சரியின்மையாலும் ,எந்த காரணத்தினால் திருமணம் தடைபட்டு, தாமதமாகி அவதிப்படுபவர்கள் ஸ்வயம்வராபார்வதி யந்திரம் வைத்து மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நடைபெறும்.


உமாமகேஸ்வரி  பார்வதியாக அவதரித்த போது பராசக்தியை வேண்டி இந்த மந்திரத்தைச் ஜெபம் செய்து அதன் பலனாகச் சிவபெருமானை மணந்தார்கள்.

ஸ்ரீ ஸ்வயம்வர கலா மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் யோகினி  யோகினி |
யோகேஸ்வரி யோக பயங்கரி|
ஸகல ஸ்தாவர ஜங்கம முக ,ஹ்ருதயம்|
மம வசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா ||

வளர்பிறையில் திருமணம் ஆகவேண்டியவருக்குப் படுபக்ஷி இல்லாத    நல்ல நாளாகப் பார்த்து சங்கல்பம் செய்து  நைவேத்யங்கள் படைத்து  விளக்கேற்றி இந்த மந்திரத்தைக் கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து  108 தடவை ஜெபித்து வரவும்.குறைந்தது 90 நாட்கள் ஜெபம் செய்து வரவும்.விளக்கின் பாதத்தில் ஒரு மஞ்சள் தடவிய கயிறு வைத்து 90 நாட்கள் ஜெபம் கழிந்த பின்னர் அதை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும்.90 நாட்கள் ஜெபம் முடிந்ததும் ஹோமம் செய்து கொள்ள நிறைவான பலன் உண்டாகும்.ஹோமம் செய்ய முடியாதவர்கள் ஆண்களானால் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்றும் ,பெண்களானால் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றும் அருகில் உள்ள ஏதேனும் ஒரு சாந்தமான அம்மன் கோவிலுக்கு         விளக்குக்கு எண்ணையும் அந்த தினத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகமும் செய்து திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாக வேண்டிக் கொள்ள  விரைவில் திருமணம் ஆகும்.அர்ச்சகரிடம் ஒரு எழுமிச்சை , ஒரு மஞ்சள் ,குங்குமம் ஒரு பாக்கெட் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்து தரச்சொல்லி அதை வீட்டில் விளக்கு முன்னால் வைத்து விட்டு அந்தக் குங்குமத்தைத் தினமும் மேற்கண்ட மந்திரத்தை 3 தடவை ஜெபித்து நெற்றில் இட்டுக்கொள்ளவும்.

ஸ்ரீஸ்வயம்வரா பார்வதி ஹோமம் செய்யப்பட்ட ஹோமச்சம்பலைத் திருமணத்தடை உள்ளவர் குளிக்கும் நீரில் சிறிது போட்டுக் குளித்து வரத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.             




வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com

Monday, 21 July 2014

திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடைபெற ,நல்ல குணமுடைய கணவன் அமையப் பெண்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள் :-


1. ஓம் |
    காத்யாயனி மஹாமாயே |
    மகாயோகின்யதீச்வரி |
    நந்தகோபசுதம் தேவீ  | 
    பதிம் மே குருதே நமஹ ||


ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.


2. துர்கா மந்த்ரம் :-

ஓம்|ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதி ஹிஸா |
    பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா பிரயச்சதிஹி ||  

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி,  இம்மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

3.ஜாதகப்படி தாமதத் திருமண அமைப்புள்ளவர்கள் இந்த மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நிகழும்.  


ஓம் |
ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் க்லீம் க்லூம்  ஜம் ஜம் |
வனாக்யே காமேச்வரி வனதேவதே ஸ்வாஹா||

4.திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகக் கீழ்க்கண்ட   மந்திரங்களில் ஒன்றைத் தினமும் 108 முறை கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.

ஸ்ரீ கணேஷ மந்திரம் :-

ஓம் |ஸ்ரீகணேஷம் விக்னேஷம் விவாஹார்த்ததே நமஹா ||

வேத மந்திரம்:-

ஓம் யக்ஞோ பவித்ரம் சஹஜம் ரஹத் பிரஜாபதி ஸ்வாஹா ||


5.அம்மன் குங்கும பரிகாரம்:-

பேரம் பேசாமல் குங்குமம் வாங்கி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயம் சென்று அந்தக் குங்குமத்தை அம்மன் காலடியில்
வைத்து உங்கள் பெயருக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்று அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை அம்மன் பிரசாதமாக வாங்கி வீட்டில் விளக்கு முன் வைத்து கொள்ளவும்.தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு முகமாய் நின்று அந்தக் குங்குமத்தை வலது கை மோதிர மற்றும் பெருவிரலால் எடுத்து "ஓம் ஹ்ரீம் சிவப்ரியாயை நம" என்று 3     தடவை ஜெபித்துக் குங்குமம் இட்டுக் கொள்ளவும்.விரைவில் திருமணம் நடக்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர் ,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9442193072 / 9788493072


Tuesday, 9 July 2013

திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடக்க ,நல்ல குணமுடைய மனைவி அமைய ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-

1.திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடக்க ,நல்ல  குணமுடைய மனைவி அமைய ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-

ஓம் |பத்னீம் மனோரமாம் தேஹி|| மனோ விருத்தானுசாரிநீம் |தாரிநீம் துர்கசம்சார சாகரஸ்ய குலோத்பவாம்||

மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டு திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தை குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும்  ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

2நல்ல குணமுடைய மனைவி அமைய, சீக்கிரம் கல்யாணமாக ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-

ஓம்|கந்தர்வராஜ விச்வாவஸோ ||மமாபிலஷிதாம் கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||

மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டு திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தை குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும்  ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.ஹோமம் செய்து ரக்ஷை கட்டினால் விரைவான பலன் கிட்டும்.
3. துர்கா மந்த்ரம் :-

ஓம்|ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதி ஹிஸா |
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா பிரயச்சதிஹி ||  

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி, இம்மந்திரத்தைக் குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

4.ஜாதகப்படி தாமதத் திருமண அமைப்புள்ளவர்கள் இந்த மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நிகழும்.  

ஓம் |ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் க்லீம் க்லூம்  ஜம் ஜம் |
வனாக்யே காமேச்வரி வனதேவதே ஸ்வாஹா||

5.திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகக் கீழ்க்கண்ட   மந்திரங்களில் ஒன்றைத் தினமும் 108 முறை கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.

ஸ்ரீ கணேஷ மந்திரம் :-

ஓம் |ஸ்ரீகணேஷம் விக்னேஷம் விவாஹார்த்ததே நமஹா ||

வேத மந்திரம்:-

ஓம் யக்ஞோ பவித்ரம் சஹஜம் ரஹத் பிரஜாபதி ஸ்வாஹா ||


6.அம்மன் குங்கும பரிகாரம்:-

பேரம் பேசாமல் குங்குமம் வாங்கி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயம் சென்று அந்தக் குங்குமத்தை அம்மன் காலடியில்
வைத்து உங்கள் பெயருக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்று அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை அம்மன் பிரசாதமாக வாங்கி வீட்டில் விளக்கு முன் வைத்து கொள்ளவும்.தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு முகமாய் நின்று அந்தக் குங்குமத்தை வலது கை மோதிர மற்றும் பெருவிரலால் எடுத்து "ஓம் ஹ்ரீம் சிவப்ரியாயை நம" என்று 11 தடவை ஜெபித்துக் குங்குமம் இட்டுக் கொள்ளவும்.விரைவில் திருமணம் நடக்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072