Showing posts with label மந்திர ஜப முறைகள். Show all posts
Showing posts with label மந்திர ஜப முறைகள். Show all posts

Friday, 5 July 2013

மந்திர ஜபம் 3 - ஸ்ரீ பாலா மந்திரம்





மந்திர ஜபம் 3 :-

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,
சித்தர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்  இருக்கிறான் என்று  கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்குப் புரிந்தாலும் எவ்வாறு,நமக்குள் எங்கு உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது  (இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை  விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.
பீஜம் என்றால் விதை  என்று பொருள்.விதைக்குள் எப்படி மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ  பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-

ஐம்|க்லீம்|சௌம்|


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

வாலையடி சித்தருக்குத் தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.

பாலா மந்திரம் மிக உயர்வான சித்திகளைத் தரக் கூடியது.

சக்தி உபாசனை கத்தி மேல் பயணம் போன்றது.வசீகர சக்தி,ஆண், பெண் வசீகரம் எல்லாம் தருவதால் பல நேரங்களில் வழி தவறிப் போகும் சாத்தியம் உண்டு அப்படிச் செயல்பட்டால் உங்கள் மந்திர ஆற்றல் விரயமாகி வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைச் சந்திக்க நேரும்.
எனவே,முறைப்படி குருவிடம் சாபநிவர்த்தி செய்யப்பெற்று தீட்சை பெற்று ஜெபிப்பதே நிறைவான பலன்களைத் தரும்.

தீட்சை மற்றும் பிரயோக விதிகளை அறியத் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Thursday, 4 July 2013

மந்திர ஜபம் 2



மந்திர ஜபம் 2:-

1.க்ஷிப்ர கணபதி :-

ஓம்|கம் க்ஷிப்ர ப்ரசாதனாய நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர எண்ணிய காரியங்கள் காலதாமதமின்றி விரைவில் முடியும்.

2.ஹேரம்ப கணபதி:-

ஓம் கூம் நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மனச்சாந்தி உண்டாகும்

3.நிதிகணபதி:-

ஓம் |வக்ரதுண்டாய ஹூம்||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை நீங்கும் .தேவைகள் நிறைவேறத் தேவைப்படும் தனம் தடையின்றி வரும் .

4.சங்கஷ்டஹர கணபதி :-

ஓம் |நமோ ஹேரம்ப |மதமோதித|மம சர்வ சங்கஷ்டம் நிவாரய|ஹூம் பட் ஸ்வாஹா||   

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர துன்பங்கள் நீங்கும்.இதனை சங்கடஹரசதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி)அன்று ஆரம்பித்து செய்யவேண்டும். வளர்பிறை சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது அதனால் தோஷம் உண்டாகும்,பல பிரச்சனைகள் வரும்.கிருஷ்ணபரமாத்மாவே அவ்வாறு பார்த்ததனால் பல சங்கடங்களை அனுபவித்தார்.மேற்கண்ட கணபதி வழிபாட்டை தேய்பிறை சதுர்த்தியில் செய்து தன மனக்கவலை நீங்கப்பெற்றார்.நீங்களும் இதை செய்து துன்பம் நீங்கிய வளவாழ்வை வாழுங்கள்.

5.கடன் தீர கணபதி வழிபாடு :-

கீழ்க்கண்ட இரு மந்திரங்களும் கடன் தீர உதவும் சிறந்த மந்திரங்கள்.இரண்டில் எதையும் செய்யலாம்.

ருணஹர கணபதி:-
ஓம் |கணேசாய |ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||

ருஊநாசன கணபதி:-    

ஓம்|க்லௌம் க்ரோம் கணேசாய|ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||ஸ்வாஹா || 

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மலையளவு  கடனும் விரைவில் தீரும்.

கடன் பட்டவர்கள் செவ்வாய் கிழமை மதியம் 12:00 - 1:30 மணிக்குள் கடன் தொகையில் சிறிதளவாவது  திரும்பசெலுத்தினால் கடன் விரைவில் தீரும்.புதன் கிழமை கடனை திரும்பச்செலுத்தக்கூடாது அவ்வாறு செலுத்தினால் கடன் அடையாது கூடிவிடும்.
கிருத்திகை,கேட்டை,பூராடம் நட்சத்திரத்தன்று கடனை திரும்பச்செலுத்த,அடகு வைத்த பத்திரம்,நகை இவைகளை மீட்க திரும்பவும் கடன் வாங்கும் அடகு வைக்கும் சூழ்நிலை வராது.


6.அர்க்க கணபதி:-

ஒம்|நமோ கணபதயே|அர்க்க கணபதே|வரவரத சர்வஜனம் |மே வசமானய ஸ்வாஹா ||   

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர சூர்யன் மற்றும் நவக்ரஹ சாந்தி உண்டாகும்.அதாவது நவக்ரகங்களால் உண்டான தோஷம் விலகும்.   

7.அபீஷ்டவரத கணபதி:-

ஓம்|ஸ்ரீம் ஸ்ரீம் கணாதிபதயே |ஏகதந்தாய |லம்போதராய|ஹேரம்பாய|நாளிகேரப்ரியாய|மோதக பக்ஷணாய|மமாபீஷ்ட பலம் தேஹி |ப்ரதிகூலம் மே நச்யது |அனுகூலம் மே வசமானய ஸ்வாஹா||    

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர எண்ணிய காரியம் சித்தியாகும்.தொடர்ந்த ஜெபத்தின் பலனாக தொட்ட காரியம் எல்லாம் சிறந்து விளங்கும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Wednesday, 3 July 2013

மந்திர ஜபம் :1

மந்திர ஜபம் :1

 51 பிரதான கணபதி மந்திரங்கள் இருக்கின்றன அவற்றில் சில பயனுள்ள பிரயோகங்களை காணலாம்.

1.தருண கணபதி :-

ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம்| நமோ பகவதே நித்ய யௌவனாய |யுவதி ஜன சமா ச்லிஷ்டாய |கணபதயே நமஹ ஸ்வாஹா||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வியாதிகள் யாவும் நீங்கும்.

2.புத்தி கணபதி

ஓம் |ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வாக்குவன்மை ,கல்விகேள்விகளில் சிறந்து விளங்குதல் உண்டாகும்.குழந்தைகளுக்கு வித்யாரம்பத்தில் (பள்ளிக்கு அனுப்பும் சமயம்) தேனில் ஜெபித்து நாவில் தடவ நல்ல படிப்பும் ,வாக்குவன்மையும் உண்டாகும்.எழுத்துப்பணி,ரெப்ரசெண்டேடிவ்,ஜோதிடர் போன்ற  வாக்கு        சாதுர்யம் தேவைப்படும் துறையில் உள்ளோர் ஜெபிக்க சிறந்து விளங்கலாம்.


3.சந்தான கணபதி:-

ஓம் |நமோ லக்ஷ்மி கணேசாய |மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர புத்திர பாக்கியம் உண்டாகும்.வெண்ணையில் ஜெபித்து தம்பதிகள் உண்டு வர விரைவில் குழந்தைபாக்கியம் உண்டாகும்.கீழ்க்கண்ட மந்திரமும் இதே பலன் தரும்.

4.திருதாரி சந்தான கணபதி:

ஓம் \ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்\ஓம் |நமோ லக்ஷ்மி கணேசாய |மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா ||


5.துர்கா கணபதி:-

ஓம்|ஹ்ரீம் கம் ஹ்ரீம்|தும் துர்கா புத்ராய|சக்தி ஹஸ்தாய ,மாத்ருவத்சலாய |
மகாகணபதயே நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர துன்பங்கள் நீங்கும்.விளக்கில் துர்க்கையையும்,கணபதியையும் ஆவாஹனம் செய்து மாதுளம்பழம்,அவல் ,பொரி,கடலை,வெற்றிலை,பழம்,பாக்கு வைத்து விளக்கின் பாதத்தில் குங்குமம் போட்டு ஜெபித்து அந்த குங்குமத்தை இட்டு வர துன்பங்கள் விரைவில் நீங்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Tuesday, 2 July 2013

மந்திர ஜெபம்

மந்திர ஜெபம் :-



தெய்வங்களிடமிருந்து அருள் பெற நாம் ஸ்தோத்திரம், கவசம், நாமாவளி, மந்திரம் இவற்றைச் செய்து வருகிறோம்.நிபந்தனையற்ற ஆழ்ந்த அன்புடன் அழைத்தால் எந்தத் தெய்வமும் உடனே வந்து அருள் செய்யும்.நமக்கு அந்த  அளவுக்கு அன்பும் பக்தியும் செய்யத் தெரியாததால் நாம் மேற்காணும் வழிகளைப் பின்பற்றுகிறோம்.அவற்றுள் மிக விரைந்து பலன் தருவது மூலமந்திரங்களே.

மூலமந்திரங்களை ஜெபிக்கும் போது ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு சில விதிமுறைகள் உள்ளன அவற்றைப் பின்பற்றினால் உயர்ந்த பலன்கிட்டும்.

எல்லாருக்கும் எல்லா மந்திரங்களும் பலிப்பதில்லை.மேலும் தேவையில்லாத
துர்மந்திரங்களை ஜெபிக்காமல் சாத்வீக மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.

முதலில் விநாயக மந்திரத்தைச் சித்தி செய்து கொள்ளவேண்டும்.

எல்லாத் தெய்வ வடிவங்களுக்கும் ஒரு உயர்ந்த தத்துவார்த்த விளக்கம் உள்ளது.

விநாயகருக்கான  விளக்கம்.

1.விநாயகருக்கான தனிப்பெரும் அடையாளம் துதிக்கை.அதன் பொருள் மூச்சு ஆழமாக இழுக்கப்பட வேண்டும்.

2.காதுகள்-வலது காதிலிருந்து இடது காது வரை துதிக்கையையும் சேர்த்து
உற்று நோக்கினால் ஓம்கார வடிவம்.

3.இருந்த இடத்திலிருந்தே பிரபஞ்ச இயக்கம்,ஜோதிடம்,வைத்தியம் யாவற்றையும் அறிந்த ரிஷி,சித்தர்கள் யானையான விநாயகருக்கு எலியை வாகனமாக ஏன் வைத்தார்கள் என்பதற்குத் தரும் விளக்கம்.எலி எப்போதும் வெளிச்சத்தில் நடமாடுவதோ,தங்குவதோ கிடையாது.அதுபோல்
மூலாதாரத்திற்கு அதிதெய்வமான  கணபதி எலியின் மேல் அமர்ந்திருப்பது   எலியைப்போல் மனம் இயல்பு நிலையில் அல்லது மூலாதாரச்சக்கரம் செயல்படுகின்றநிலையில் இருள் போன்ற தீய மற்றும் அற்ப விஷயங்களைப் பற்றியே சிந்திக்கவும், செயல்படவும் செய்யும்.எனவே, அதுபோன்ற மாயையில் இருந்து உயர எலியாகிய நம் மனம் கீழேயும்,நம் மூச்சு ஆழமாகவும் இழுக்கப்பட்டு யோக நிலையில் இருந்து நம் வினைக்கு நாமே நாயகனாக இருக்க வேண்டும் என்பதாகும்.


விநாயகருக்கு 51 வகையான வடிவங்கள் உண்டு அதற்கென்றுள்ள  பிரத்யேக மந்திரங்களும் உள்ளன.அவற்றில் சில மந்திரங்களையும்,பலன்களையும் பார்க்கலாம்.


ஸ்ரீ மகாகணபதி மந்திரம்:-

1.ஓம் ||ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ||க்லௌம் கம் கணபதயே|| வரவரத சர்வ ஜனம் மே|| வசமானய ஸ்வாஹா||

மேற்கண்டவாறு இம்மந்திரத்தை 5 இடங்களில் சிறிது நிறுத்தி ஜெபிக்கவும்.இதனைக் கிழக்கு முகமாக அமர்ந்து முதல் நாள் 27 முறை பின்னர் 54,108 என்று இயன்றவரை ஜெபித்துவரவும்.

மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம். இம்மந்திரத்திற்கு ரிஷி கனக ரிஷி.

மந்திர சாஸ்திரத்தின் உயர்ந்த வித்தையான ஸ்ரீ வித்யையில் இதுவே முதல் உபதேசமாக வழங்கப்பட்டு வருகிறது,மேலும் இதுவே  மந்திர சாஸ்திரத்தின் முதல் படி என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் கிட்டும் பிரதான பலன் சத்வகுண சுத்தி எனப்படும் எண்ணத்தூய்மை.தேஜஸ்,செல்வம்,சௌபாக்கியம்,மனிதன் உட்பட சர்வ ஜீவராசிகளும் வசீகரம் ஆகி அதாவது எல்லா உயிர்களுடனும் இணக்கமான உறவு கொண்ட நல்வாழ்வு கிடைக்கப்பெறும்.

இம்மந்திரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் ஜெபிப்பது 100 % பலன் தரும்.அல்லது இளஞ்சூரியன் உள்ள நேரத்திற்குள் ஜெபிப்பது நலம்.வசதி இல்லாதவர்கள் நேரம் கிடைக்கையில் ஜெபிக்கலாம்

சித்தி பெற்ற குருவிடம் மந்திரங்களை முறைப்படி உபதேசம் (தீட்சை) பெற்று வழிபாடு பற்றிய போதுமான விஷயங்களைத் தெரிந்து
ஜெபிப்பதே நிறைவான பலன்களைத் தரும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Sunday, 30 June 2013

வழிபடவேண்டிய தெய்வங்கள்

வழிபடவேண்டிய தெய்வங்கள் :-

 நட்சத்திரம்  - அதிதேவதை 

1.அஸ்வினி   - சரஸ்வதி
2.பரணி     - துர்க்கை
3.கார்த்திகை   - அக்னி
4.ரோஹிணி  - ப்ரஹ்மன்
5.மிருகசிரீஷம்  - சந்திரன்
6.திருவாதிரை  -  பரமசிவன்
7.புனர்பூசம் - அதிதி
8.பூசம் - ப்ரஹஸ்பதி
9.ஆயில்யம்  - ஆதிசேஷன்
10.மகம் - சுக்ரன்
11.பூரம் - பார்வதி
12.உத்திரம்  - சூரியன்
13.அஸ்தம்  - சாஸ்தா
14.சித்திரை  - விஸ்வகர்மா
15.சுவாதி  - வாயு
16.விசாகம்   - முருகன்
17.அனுஷம்  - லட்சுமி
18.கேட்டை  - இந்திரன்
19.மூலம்  - அசுரர்
20.பூராடம்  - வருணன்
21.உத்திராடம்  - கணபதி
22.திருவோணம்  - விஷ்ணு
23.அவிட்டம்  - வசுக்கள்
24.சதயம் - யமன்
25.பூரட்டாதி  -  குபேரன்
26.உத்திரட்டாதி  - காமதேனு
27.ரேவதி - சனீஸ்வரன்

நட்சத்திரம்                                                    தேவதை      அதிதேவதை   
கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்     - சூரியன்      - சிவன்
ரோஹிணி,அஸ்தம்,திருவோணம்     - சந்திரன்       - பார்வதி
மிருகசிரீஷம்,சித்திரை ,அவிட்டம்     - செவ்வாய்   - முருகன்
திருவாதிரை,சுவாதி,சதயம்                 - ராகு               - காளி,துர்க்கை
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி            - குரு                 -  பிரம்மா,பிரஹஸ்பதி
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி              -  சனி               -  யமன் ,சாஸ்தா
ஆயில்யம்,கேட்டை,ரேவதி                   - புதன்             - விஷ்ணு
மகம்,மூலம்,அஸ்வினி                            - கேது              -  விநாயகர்
பரணி,பூரம், பூராடம்                               - சுக்ரன்         - லக்ஷ்மி (இந்திரன்)



ராசி,லக்னம்                     அதிபதி   

  1.சிம்மம்                           - சூரியன்
  2.கடகம்                            - சந்திரன்
  3.மேஷம்,விருச்சிகம் - செவ்வாய்
  4.ரிஷபம்,துலாம்           - சுக்ரன்
  5.மிதுனம்,கன்னி           - புதன்
  6.தனுசு,மீனம்                 - குரு
  7.மகரம்,கும்பம்              - சனி


 
நட்சத்திர,ராசி,லக்ன தேவதை,அதிதேவதிகளை வழிபடுவதன் மூலம் நிறைவான வளவாழ்வை வாழலாம்.

உதாரணமாக :-

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதன் அதிபதியான கணபதியையும், நவக்கிரகங்களில் அதன் அதிபதியான சூரியனையும் நிச்சயம் வழிபடவேண்டும்.

மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயையும் அதன் அதிதெய்வமான முருகனையும் வழிபடவேண்டும்.

இவ்வாறு அவரவர் நட்சத்திர,ராசி,லக்ன தேவதை,அதிதேவதைகளை வழிபட்டு வர நம் ஜாதகப்படி வரவேண்டிய நன்மைகள் விரைவாகவும் நிறைவாகவும் வந்துசேரும் .தீமைகள் வந்தாலும் குறைவான தீமைகளைத்தந்து அதைச் சமாளிக்க, ற்றுக்கொள்ள மனவலிமை
உண்டாகும்.                               

 
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072