Showing posts with label கிரகதோஷ பரிகாரங்கள். Show all posts
Showing posts with label கிரகதோஷ பரிகாரங்கள். Show all posts

Saturday, 16 July 2016

சனீஸ்வர தோஷம் நீக்கும் ஸ்லோகம்

ஏழரைச்சனி மற்றும் சனீஸ்வர கிரகம் சார்ந்த பிற தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் ஜெபிக்கத் துவங்கி,தினமும் குறைந்தது 3 தடவை ஜெபித்து வர சனீஸ்வரர் அருள் கிட்டும்.


சனீஸ்வர ஸ்லோகம்:-

கோணஸ்த பிங்களோ பப்ரு கிருஷ்ணோ ரௌத்ராந்தகோ யமஹ: |
சௌரி சனைச்சரோ மந்த பிப்பலாதேன சம்ஸ்துதஹ: |
நமஸ்தே கோண ஸம்ஸ்தாய பிங்களாய நமோஸ்துதே
நமஸ்தே ரௌத்ரதேஹாய நமஸ்தே  சண்டகாயச |
நமஸ்தே  மந்த சஞ்சாய நமஸ்தே  சௌரயேவிபோ
நமஸ்தே  யம சஞ்சாய சனைஸ்சர நமோஸ்துதே |
 பிரசாத குரு தேவேச தீனஸ்ய ப்ரணதாஸ்யச |

வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 4 February 2016

(ட்ரான்ஸ்பர்) பணிஇடமாற்றம் தரும் தாந்த்ரீகப் பரிகாரம்




பணி இடமாற்றம் விரும்புவோர் அதிகாலையில் குளித்து முடித்துச் சுத்தமான ஆடை அணிந்து 11 காய்ந்த மிளகாய் வற்றலை எடுத்துச் சூரியனை நோக்கி நின்று உங்கள் பணியிட மாற்றம் குறித்து வேண்டியபடியே அந்த மிளகாய்வற்றலைக் கிழக்குத் திசை நோக்கி எறிந்து விடவும்.இதை 43 நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவும்.43 நாட்களுக்கு முன்னரே உங்கள் விருப்பம் நிறைவேறினால் பரிகாரத்தை நிறுத்தி விடலாம்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஸ்ரீ சனீஸ்வரபகவானால் உண்டாகும் பாதிப்புகள் நீக்கும் எளிய தாந்த்ரீகப் பரிகாரங்கள்



1.உணவில் கருப்பு உப்பு அள்ளது கல்உப்பு  சேர்த்து வரலாம்.


2.கண்மை அல்லது இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சுர்மா பவுடர் கண்களில் போட்டு வர சனிக்கிரக கெடுபலன்கள் குறையும்.


3.ஜனன ஜாதகத்தில் 7 மற்றும் 11 ஆம் வீட்டில் சனி பகவான் அமையப் பெற்றவர்கள் புதிதாக ஒரு சிறு மண்கலயம் அல்லது பானை வாங்கி ஆலயத்திற்கு அல்லது வயதானவர்களுக்குத் தானமாக வழங்க சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.


4.மேலும்,ஏழாம் இடத்தில் சனிபகவான் அமையப் பெற்றவர்கள் ஏற்கனவே செய்துவரும் பரிகாரங்கள் எதுவானாலும் அவை முழுப் பலன்தர மது, மாமிசம்,புகையிலை,பீடி ,சிகரெட் போன்ற பழக்கங்களை அறவே கைவிட்டு விட தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.அல்லது பெரும்பொருள் இழப்பு,அவமானம்,நண்பர்கள் எதிரிகளைச் சரியாகக் கணித்து நடந்து கொள்ளும் திறன் இன்மை இவை ஏற்படும்.


5.இரும்பாலான பர்னிச்சர் பொருட்கள் பயன்படுத்துவது சனீஸ்வரருக்கு பிரியமானது எனவே இதுவும் கெடுபலன்கள் குறைய உதவும்.



6.ஜாதகத்தில் சனீஸ்வரர் பாதகமான ஸ்தானத்தில் அமைந்து  அதனால் குழந்தை இன்மை அல்லது அடிக்கடி கரு களைந்து போகுதல் இவை ஏற்பட்டால் அந்தப் பெண்மணி தான் உண்ணும் முன் தான் உண்ணும் உணவில் உள்ள அத்தனை வகைகளிலும் தனியே சிறிது எடுத்து வைத்து அதை கருப்பு நிறமுள்ள நாய்க்கு போட்டு வர இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.கருப்பு நிற நாய்க்கு இடுவது சிறப்பு, தங்கள் பகுதியில் கருப்பு நிற நாய் இல்லாதவர்கள் வேறு நாய்க்குப் போடலாம்.
நாய்க்கு உணவு படைக்கும் பொழுது அதை பைரவராகப் பாவித்து மனதிற்குள் ஓம் ஹ்ரீம் காலபைரவாய மம சனிக்கிரக தோஷம் நசி நசி என்ற  மந்திரத்தை 3 தடவை ஜெபித்துக் கொள்ளவும்.
இந்தப் பரிகாரத்தைச் செய்ய முடியாத பெண்கள் ,குளிக்கும் முன்  அந்த நீரில் ஒன்றிரண்டு மரமஞ்சளைப் போட்டுச் சில நிமிடங்கள் கழித்துக் குளித்து வரவும்.

7.ஜனன ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனியும்,ராகுவும் சேர்ந்து 
இருந்தால் அல்லது சனிதசை,புத்தி,அந்தரம் இவற்றில் பாதகமான பலன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால் சனிக்கிழமை தோறும் யூகலிப்டஸ் இலை ஒன்றை எடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொள்ளவும்.இதனால் சனிக்கிரக பாதிப்புகள் குறையும்.


வாழ்கவளமுடன்
M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 /9 788493072

Tuesday, 26 January 2016

குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்




உங்கள் ஜாதகத்தில் குரு க்ரஹ தோஷம் உள்ளது என்று ஜோதிடர் கூறினால் அதன் பாதிப்பு நீங்கித் திருமணம் மற்றும் வாழ்வில் சுப காரியங்கள் இனிதே நடைபெறக் கீழ்க்கண்ட செலவற்ற,எளிய பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ செய்து வர விரைவில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


1.அதிகாலையில் எழுந்து,குளித்துவிட்டு நெற்றியில் மஞ்சள்பொடி,சந்தனம் அல்லது குங்குமம் வைத்துக் கொள்ளவும்.

2.அரசமர வேருக்கு வலது உள்ளங்கையில் பட்டுச் செல்லும்படி  நீர் ஊற்றவும்.
3.வீட்டிலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ மஞ்சள்நிறமான பூக்கள் கொண்ட செடிகளை வளர்க்கலாம்,

4.முடிந்தால் வியாழக்கிழமை தோறும் விரதமிருக்கலாம்.அல்லது அரை வயிறு உண்டு ,தகாத மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கவும்.

5.வியாழக்கிழமை அன்று மௌன விரதம் இருக்கலாம்.நாள் முழுக்க மௌன விரதம் இருக்க முடியாதவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 மணிக்குள் குளித்து முடித்து 6 முதல் 7 மணி வரை மௌனமாக இருந்து ஏதேனும் மந்திரங்களை மனதிற்குள் ஜெபித்து வரலாம்.அல்லது தியானம் செய்யலாம்.

6.கீழே உள்ள குரு யந்திரத்தை ஒரு தூய்மையான வெள்ளைப் பேப்பரில் மஞ்சள் பொடியும்,பன்னீரும் கலந்த கலவையினால் வரைந்து 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைத்து பிரேம் செய்து வடக்குப் பக்கச் சுவற்றில் மாட்டி வணங்கி வரவும்.

குருபகவான் எண் யந்திரம் 



   


வாழ்கவளமுடன்

M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday, 13 January 2016

மாமனார் மாமியாருக்குப் பிரியமான மருமகளாக விளங்க உதவும் பரிகாரம்




உலகின் மிக நீண்ட போராக விளங்கும் மாமியார் மருமகள் சண்டை தீர, இருவருக்கும் இணக்கமான உறவு ஏற்பட உதவும் எளிய பரிகாரங்கள்.


1.கிழக்குத் திசையில் தலைவைத்து உறங்க மாமியார்  மருமகள் சண்டை தீரும்.

2.வளர்பிறையில் வெள்ளி  மோதிரத்தில் 4.5 முதல் 5.5 காரட் தரமான சந்திரகாந்தக் கல் பதித்து அந்த மோதிரத்தை முதலில் பசும்பாலிலும் பின்னர் சுத்தமான தண்ணீரிலும் கழுவிக் கொள்ளவேண்டும்.பின்னர் வளர்பிறை திங்கட்கிழமை அன்று சந்திரோதய வேளையில் அல்லது பௌர்ணமி அன்று இரவில் நிலவைப்  பார்த்தபடியே அம்பாளை வணங்கி ஓம் ஹ்ரீம் வம் சந்திரதேவாய நமஹா என்று 27 தடவை  ஜெபித்து வலதுகை மோதிர விரலில் அணிந்து கொள்ள மாமியார்  மருமகள் சண்டை தீரும்.


3.அஷ்டலோக மோதிரம் செய்து வலது கை நடுவிரலில் அணிந்து கொள்ள   மாமியார்  மருமகள் சண்டை தீரும்.

4.200 கிராம் படிகாரம் வாங்கி அதைப் படுக்கை அறையில் தெற்குத் திசை  தவிர்த்து ஏதேனும் ஒரு திசையில் படுக்கையறையின் ஒரு பகுதியில் வைத்துக் கொள்ள மாமியார்  மருமகள் சண்டை தீரும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Thursday, 12 February 2015

கால சர்ப்ப தோஷ பாதிப்பு நீக்கும் பரிகாரங்கள்





1.முடிந்த நாட்களில் ஒரு இரும்புப் பாத்திரத்தில் பால் கலந்த நீரை வைத்துக் கொண்டு அதை அரச மரத்தின் நிழலில் நின்று மர வேரில் விட்டு வரலாம்.

------------------------------------------------------------------------------------------------------------
2.அமாவாசை அன்று ஆறு அல்லது கடற்கரையில் இதைச் செய்யவும். மூன்று தேங்காய் ,1 கிலோ நிலக்கரி எடுத்துகொண்டு அவற்றைக் கொண்டு தலையை 3 தடவை சுற்றவும்.பின், முதலில் தேங்காய்களையும் பின் நிலக்கரியையும் ஆறு அல்லது கடலில் எறிந்து விட்டு நேரே வீட்டிற்கு வந்து விடவும். வீட்டினுள் நுழையும் முன் கை,கால்களைக் கழுவிக்கொண்டு உட்செல்லவும்.

------------------------------------------------------------------------------------------------------------
3.கீழ் உள்ள மூன்று மந்திரங்களை ஜெபித்து வரலாம்.

ஓம் நவகுலாய வித்மஹே 
விஷதண்டாய தீமஹி 
தன்னோ சர்ப்ப ப்ரசோதயாத் 

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராகவே நமஹ ||

ஓம் ஷ்ராம் ஷ்ரீம் ஷ்ரௌம் சஹ கேதவே நமஹ ||

வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரங்களைத் தினமும் 18 தடவை ஜெபித்து வரலாம்.

------------------------------------------------------------------------------------------------------------

4.கால சர்ப்ப தோஷ நிவாரண மந்திரம் 

ஓம் குரு குரு  குல்லே ஹூம்  பட் ஸ்வாஹா ||

வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வரலாம்.


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

கிரக பாதிப்புகள் நீங்க ஸ்ரீ சூரிய மந்திரம்


ஜாதகத்தில் கிரகங்கள் அனுகூலமாக இல்லாமல் பலவிதமான துன்பங்கள் அனுபவித்து வருபவர்கள், அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனைப் பார்த்தபடி 108 தடவை ஜெபித்து வர கிரக பாதிப்புகள் குறைந்து நிம்மதியான வாழ்வு அமையும்.இந்த ஜெபத்தைக் காலையில் சூரிய உதயம் முதல் 6:45 க்குள் முடித்து விட வேண்டும்.பாதகமான கிரகங்களின் தசை,புத்தி நடப்பவர்களும் இந்த ஜெபத்தைச் செய்து பலன் பெறலாம்.

சூர்ய அல்லது சந்திர கிரகணத்தன்று ஜெபிக்க விசேஷமான பலன் கிட்டும்.

பீடாநாஷன ஸ்ரீ சூர்ய மந்திரம் :-

ஓம் நமோ பாஸ்கராய சர்வக்ரஹ பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா ||   


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

சனீஸ்வர சாந்தி பரிகாரம்

                                             

கீழே உள்ள யந்திரத்தைச் சனிக்கிழமை மாலை அல்லது இரவு ஒரு கருப்புப்  பேப்பரில் கரித்துண்டு கொண்டு வரையவும்.சனிக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் அந்த யந்திரம் வரைந்த பேப்பரை 9 தடவை தன் தலையைச் சுற்றி  அதை ஒரு கிணற்றில் போட்டுவிடவும்.பின்னர் அந்தக் கிணற்று  நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ கூடாது.இது எளிய பரிகாரமாகத் தோன்றினாலும் நல்ல பலன்களைத் தரும்.அதிகம் கடன்,அவமானம்,தரித்திரம் போன்ற கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களும் இதைச் செய்து நற்பலன் பெறலாம். 


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Saturday, 10 January 2015

உங்கள் ராசிப்படி ஜெபிக்க வேண்டிய மந்திரம்


மேஷம்  - ஓம் ஐம் க்லீம் சௌம்

ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்

கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம்  - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

தனுசு  - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்



                                         வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Friday, 9 January 2015

கேது கிரஹ தோஷ நிவாரணப் பரிகாரங்கள்



                               ஜனன ஜாதகத்தில் பாதகமான ஸ்தானங்களில் கேதுபகவான் அமையப்பெற்றவர்கள் கேதுபகவானின் தசை மற்றும் புத்தி நடைபெறும் காலங்களில் கீழ்க்கண்ட பரிகாரங்களில் ஏதாவது ஒன்றைச் செய்து வரப் பாதிப்புகள் பெருமளவில் குறையும்.


1.43 நாட்களுக்குத் தொடர்ந்து நாய்க்கு சப்பாத்தி அல்லது ரொட்டி கொடுக்கலாம்.

2.வெள்ளை அல்லது கருப்பு எள் தானமளிக்கலாம்.

3.ஒரு வெள்ளி நாணயத்தைப் பட்டு நூலில் கட்டி கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

4.பாய்,தரை விரிப்பு,போர்வை இவற்றை ஆன்மீக அல்லது புனித ஸ்தலங்களுக்கு தானமளிக்கலாம்.

5.வெள்ளி மோதிரம் அணியலாம்.

6. விநாயகர் அல்லது காலபைரவரைத் தொடர்ந்து வழிபட நல்ல பலன்களைத்  தரும்.

7.காலபைரவருக்கு வாழை இலையில் பச்சரிசி பரப்பி அளிக்கலாம்.

8.திரயோதசி திதியில் விரதம் இருக்கலாம்.

9.மாலை வேளையில் விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றலாம்.

10.பிராமணர் அல்லது பூசாரிக்கு சர்க்கரை (சீனி) தானமளிக்கலாம்.

11.காலை மாலை பெற்றோரின் காலில் விழுந்து அவர்கள் ஆசியைப் பெறலாம்.

12.சுமங்கலிப் பெண்களுக்கு எள்ளுருண்டை தானம் செய்யலாம்.

13.பச்சை நிற கர்சீப் வைத்துக் கொள்வது நல்லது.

14.ஞாயிற்றுக்கிழமை அன்று கன்னிப்பெண்களுக்கு  லசி வழங்கலாம்.

15.ஒரு ஐஸ் கட்டியை நாலு துண்டாக உடைத்து அதை ஓடும் நீரில் போட்டு விடவும்.

16.வெறும்  தரையில் படுத்து உறங்கக் கூடாது.

17.வெண்பட்டு நூலை கையில் கட்டிக்கொள்ளவும்.

18.காதில் தங்கக்  கம்மல்,கடுக்கன் அணியலாம்.

19.பஞ்சலோகத்தில் செய்யப்பட மோதிரம் அல்லது காப்பு அணியலாம்.

20.வாழைப்பழம்,கோதுமை இவற்றை ஒரு மஞ்சள் தியில் வைத்து பிராமணர் அல்லது பூசாரிக்கு தானமளிக்கலாம்.

21.மஞ்சள் சந்தனம் நெற்றில் இட்டுக் கொள்ளவும்.



   

கேது கிரஹ தோஷ நிவாரண பரிகாரங்கள்

                     

மேலே சொன்னவை பொதுவானது.மேலும்,அன்பர்கள் தங்கள் ஜாதகத்தில் கேது பகவான் 12 பாவங்களில் எங்கெங்கு இருந்தால் என்ன பரிகாரங்களைச் செய்து கொள்வது நன்மை தரும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


லக்னம் - சிறு இரும்பு உருண்டை வாங்கி அதற்க்கு சிகப்பு பெயிண்ட் அடித்து வீட்டில் வைத்துக்கொள்ளவும்.

2 ஆம் பாவம் - நெற்றியில் எப்போதும் குங்குமம் அணிந்து கொள்ளவும்.

3 ஆம் பாவம் - 3*3 அளவுள்ள செம்புத் தகடு வாங்கி வீட்டு முன்கதவின் மேல்பகுதியில் மாட்ட அல்லது பதிக்கவும்.

4 ஆம் பாவம் - தங்கம் போட்டுக் காய்ச்சிய பாலை அருந்தி வரவும்.   

ஆம் பாவம் - பிராமணர் அல்லது பூசாரிக்கு மஞ்சள் பட்டுத்துணி  தானம் தரலாம்.

ஆம் பாவம் -   வீட்டிற்கு இரும்புப் பூட்டு பயன்படுத்தக்கூடாது .

ஆம் பாவம் - 4 எலுமிச்சம் பழம் எடுத்து தலையைச் சுற்றி ஓடும் நீர் அல்லது கடலில் போடவும். 

ஆம் பாவம் - நாய்க்கு உணவளித்து வரலாம். 

ஆம் பாவம் - வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளவும்.முடிந்த உதவிகளைச் செய்யவும்.

10 ஆம் பாவம்  - வீட்டின் அஸ்திவாரத்தில் கொஞ்சம் பால் ஊற்றி பின்னர் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம்  தேன்  ஊற்றி சுட வைத்து அதையும் ஊற்றி விடவும்.

11 ஆம் பாவம் - பாலில் குங்குமப்பூ போட்டுக் காய்ச்சிக்  குடித்து வரவும்.

12 ஆம் பாவம் -   விநாயகரை வழிபட்டு வரவும்.
                      
                         
                                          வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ராகு கிரஹ தோஷ நிவாரணப் பரிகாரங்கள்


ஜனன ஜாதகத்தில் பாதகமான ஸ்தானங்களில் ராகுபகவான் இடம் பெற்றிருந்தால் அது சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்பை விட அதிகமான சங்கடங்களைத் தரும்.உதாரணமாக நோய்,எதிரிகளால் தொல்லை,மாந்திரீக மற்றும் அமானுஷ்ய சக்திகளால் பாதிப்பு ஏற்படலாம்.அப்படி அமையப் பெற்றவர்கள் ராகுபகவானின் தசை மற்றும் புத்தி நடைபெறும் காலங்களில் கீழ்க்கண்ட பரிகாரங்களில் ஏதாவது ஒன்றைச் செய்து வரப் பாதிப்புகள் பெருமளவில் குறையும்.


1.வீட்டில் கருப்பு நிற நாய் வளர்க்கலாம்.அல்லது கருப்பு நிற நாய்க்குத்  தினமும்  உணவளிக்கலாம்.கருப்பு நிற நாய் இல்லை என்றால் சிகப்பு தவிர மற்ற நிறமுள்ள நாய் வளர்க்கலாம் அல்லது உணவளிக்கலாம்.

2.நிலக்கரி கொஞ்சம் வாங்கி அதை தலையைச் சுற்றி ஆறு அல்லது கடலில் போடத் தொழிலில் தொடர்ந்த நஷ்டம்,பிரச்சனைகள் ,அரசாங்கத் தொல்லைகள் தீரும்.

3.சம சதுர வடிவ வெள்ளித்தாயத்தைக் கழுத்தல் அணிய நன்மை உண்டாகும்.
4.ஒரு தேங்காயைத் தலையைச் சுற்றி ஓடும் நீரில் போடப் பாதிப்புகள் குறையும்.

5.  கடுகு எண்ணையைத் தானமாக அளிக்கலாம்.

6.மஞ்சள் சந்தனம் அல்லது குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றில் அணிந்து வரலாம்.

7.இரவில் பார்லி அரிசியைப் பாலில் ஊறவைத்துக் காலையில் ஓடும் நீரில் போடலாம் அல்லது பறவைகளுக்கு உணவாக அளிக்கலாம்.

8.சாதுக்கள் ,மகான்களுக்கு வெண்ணிறப் போர்வை தானமாக அளிக்கலாம்.

9.மாதாந்திர மளிகைப் பொருட்கள் வாங்கும் பொழுது கொஞ்சம் குங்குமப்பூ அல்லது குங்குமம் வாங்குவது அதிர்ஷ்டம் தரும்.
 
 
மேலே சொன்னவை பொதுவானது.மேலும்,அன்பர்கள் தங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் 12 பாவங்களில் எங்கெங்கு இருந்தால் என்ன பரிகாரங்களைச் செய்து கொள்வது நன்மை தரும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



ராகு கிரஹ தோஷ நிவாரண பரிகாரங்கள்

                     

லக்னம் - கழுத்தில் வெள்ளி செயின் அணிவது நல்லது.

 
2 ஆம் பாவம் - ஓட்டை அல்லது பழுதில்லாத வெள்ளி உருண்டை ஒன்றை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 
3 ஆம் பாவம் - வெள்ளியில் சிறு பெட்டி போல் செய்து அதில் கொஞ்சம் அக்ஷதை வைத்துச் சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 
4 ஆம் பாவம்- 4 கிலோ அல்லது 400 கிராம் பார்லி அரிசி வாங்கி அதை ஓடும் நீரில் போடவும். 

 
ஆம் பாவம் - மனைவி /கணவன் தவிர பிறரோடு தவறான தொடர்பைத் தவிர்க்கவும்.வெள்ளியில் யானை உருவத்தை டாலராகவோ அல்லது  பிம்பமாகவோ செய்து கழுத்தில் அணியலாம் அல்லது சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம்.

 
ஆம் பாவம் -   ஈயத்தில் திக்காக சிறிய உருண்டை ஒன்று செய்து அதை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 
ஆம் பாவம் - சரஸ்வதி வழிபாடு செய்ய நன்மை உண்டாகும்.

 
ஆம் பாவம் -  கொஞ்சம் பெருஞ்சீரகத்தைக் வெள்ளைத் துணியில் முடிந்து உறங்கும் பொழுது தலையணைக்கடியில் வைத்து உறங்கி வரலாம்.

ஆம் பாவம் - நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.நெற்றியில் எப்போதும் குங்குமம் இருப்பது நல்லது.  

 
10 ஆம் பாவம்  - வெள்ளை நிறத்தில் தொப்பி,ஹெல்மெட் ,தலைப்பாகை அணிவது பாதிப்பைக் குறைப்பதோடு அதிர்ஷ்டம் தரும்.நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் தொப்பி,ஹெல்மெட் ,தலைப்பாகை அணியக் கூடாது.

 
11 ஆம் பாவம் - வெள்ளி டம்ளரில் நீர் அருந்தலாம் .

 
12 ஆம் பாவம் - கொஞ்சம் பாசிப்பயிரை வெள்ளைத் துணியில் முடிந்து உறங்கும்  பொழுது தலையணைக்கடியில் வைத்து உறங்கி வரலாம்.  
                      
                         
  வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Saturday, 3 January 2015

வாஸ்து சாந்தி யந்திரம்


வாஸ்து தோஷ நிவாரணத்திற்கு பல பரிகாரங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றைச் செய்து முடிக்க அதிகம் செலவாகும்.குறைந்த செல்வில் வாஸ்து தோஷத்தைச் சரிசெய்யலாம்.

வீட்டின் உரிமையாளர் அல்லது வீட்டை நிர்வாகம் செய்பவர் வளர்பிறையில் தனக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகப் பார்த்து  அதிகாலையில் எழுந்து குளித்து மஞ்சள் வஸ்திரம் உடுத்திக் கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு கனமான செம்புத் தகடு வாங்கி அதைப் பஞ்சகவ்யம்,பன்னீர் இவற்றால் சுத்தி செய்து சுத்தமான துணி கொண்டு துடைத்துக் கொள்ளவும். பின்னர் கீழே உள்ள யந்திரத்தில் உள்ளபடி எண் யந்திரத்தை வரையவும்.பூக்கள் போட்டு அர்ச்சித்து சாம்பிராணி,குங்கிலியம் போட்டுத் தூபம் காண்பித்து அந்த யந்திரத்தை வீட்டின் பூஜை அறையில் அல்லது வீட்டின் பிரதான வாயில் கதவில் மாட்டி வைக்கவும்.

                     இந்த யந்திரம் வாஸ்து தோஷத்தை நீக்குவதோடு  வீட்டில் பாசிடிவ் வைப்ரேஷனையும் அதிகரிக்கும்.இது செலவு குறைந்த சக்தி மிகுந்த முறை .

      



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Sunday, 21 December 2014

சனிப்பெயர்ச்சி கெடுபலன்கள் குறைய ஸ்ரீ காலபைரவர் வழிபாடு






ஹனுமான்,விநாயகர் மற்றும் சிவபெருமான் வழிபாடு சனிக்கிரகப் பாதிப்பை ஓரளவிற்கே குறைக்கும். ஆனால் ஸ்ரீ காலபைரவரின் உடலில் நவக்கிரகங்களும் வாசம் செய்வதால் அவரது வழிபாட்டால் சனிக்கிரகக் கெடுபலன்கள் பெருமளவில் குறையும் மட்டுமின்றி மற்ற கிரகங்களால் ஏற்படும்  பாதிப்பையும் குறைத்து நன்மை தரும்.சனீஸ்வரபகவானின் குரு   ஸ்ரீ காலபைரவர் ஆவார். 

ஸ்ரீ பைரவரே தாந்த்ரீகத்தின் அதிபதி தெய்வமாவார்.பெரும்பாலான  தாந்த்ரீக நூல்கள் ஸ்ரீ காலபைரவபெருமான் அன்னை  ஸ்ரீ பைரவி தேவிக்கு உபதேசம் செய்யும் விதமாகவே உள்ளன.இவரை வழிபடுபவர்களை எந்த துர்மந்திரசக்தியும் பாதிக்காது.மந்திர சாஸ்திரத்தில் பைரவருக்கு 2 க்கு மேற்பட்ட சஹஸ்ரநாம ஸ்தோத்ரங்கள் உள்ளன.அவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது காலபைரவ ஸ்தோத்ரம் ஜெபித்து வரலாம்.


ஸ்ரீ காலபைரவர் மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபதுத்தாரணாய குரு குரு வடுகாய ஹ்ரீம் ||

என்ற மந்திரத்தை சிவாலயம் அல்லது வீட்டில் வடக்கு நோக்கி அமர்ந்து   ஜெபித்து வரச் சனிக்கிரகப் பாதிப்புகள் குறையும்.மாலை 4:30 முதல்  6 மணிக்குள் ஜெபித்து வர பலன் அதிகம்.

ஜப எண்ணிக்கை :குறைந்தது 27 எண்ணிக்கை அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.

தேய்பிறை அஷ்டமி ஸ்ரீ காலபைரவருக்கு உகந்த விசேஷமான நாள்.அன்று சிவாலயத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவருக்கு மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் வேளையில் ஏதேனும் ஒரு பூஜைப்பொருள் (பூ,பழங்கள்,அபிஷேகத்திற்கு பால்,பன்னீர் ) வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்ள நற்பலன்கள் உண்டாகும்.

ஸ்ரீ பைரவரின் 1008 நாமங்களைச் சொல்லி வழிபட்ட பலனைத் தரும் சக்தி வாய்ந்த 22 திருநாமங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.மந்திர ஜெபத்துடன் இந்த நாமங்களையும் கூறி வணங்கி வரக் கஷ்டங்கள் நீங்கிய நிறைவான வாழ்வு கிட்டும்.  

ஸ்ரீ  கால பைரவரின் 22 திருநாமங்கள் :-

ஓம் வடுகாய நமஹ
ஓம் ஸார பூதாய நமஹ
ஓம் த்ரைலோக்ய நாத நாதாய நமஹ
ஓம்  நாத நாதாய நமஹ
ஓம் வடுக நாதாய நமஹ
ஓம் காளிகா நாதாய நமஹ
ஓம் காமதாய நமஹ
ஓம் லோகரக்ஷகாய நமஹ
ஓம் பூதநாதாய நமஹ
ஓம் கணச்ரேஷ்டாய நமஹ
ஓம் வீரவந்த்யாய நமஹ
ஓம் தயாநிதயே நமஹ
ஓம் கபாலினே நமஹ
ஓம் குண்டலினே நமஹ
ஓம் பீமாய நமஹ
ஓம் பைரவாய நமஹ
ஓம் பீமவிக்ரமாய நமஹ
ஓம் வ்யாளயஜ்ஞோபவீதினே நமஹ
ஓம் கவசினே நமஹ
ஓம் சூலினே நமஹ
ஓம் சூராய நமஹ
ஓம் சிவப்ரியாய நமஹ


வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர் திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

suryatamil1.blogspot.com
yogisway.blogspot.com


Wednesday, 10 December 2014

சாந்தி கர்ம மந்திரம்


நம் மனோவிருப்பங்கள் நிறைவேற உதவும் பல பிரயோகங்கள் தாந்த்ரீக சாஸ்திரத்தில் இருந்தாலும் தாந்த்ரீகத்தின் முக்கியமான கர்மாக்கள் ஆறாகும்.அவற்றில் சாந்தி கர்மாவும் ஒன்று.ஆனால் மற்ற கர்மாக்கள் அளவிற்கு சாந்தி கர்மாவில் மக்கள் கவனம் செலுத்துவதோ,முக்கியத்துவம் கொடுப்பதோ இல்லை.ஆனால் என் பார்வையில் சாந்தி கர்மாவே மற்றவற்றை விடப் பிரதானமானது.ஏனென்றால் எவ்வளவுதான் செல்வம், சக்திகள்,புகழ் இருந்தாலும்,குடும்பத்தில்,மனதில் நிம்மதி,அமைதி இன்றி என்ன பயன்?.எனவே விதிமுறைப்படி செய்யப்படும் சாந்தி கர்மா பிரயோகம் இல்லத்தில்,மனதில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நல்ல சூழலையும் மலரச்செய்யும்.நிம்மதி,மகிழ்ச்சி,நல்ல சூழல் இவை கிட்டினால் மட்டுமே இல்வாழ்க்கையிலும்,பொருளாதாரம்,ஆன்மீகத்திலும் தொடர்ந்து முன்னேற முடியும்.

எனவே  கிரகங்கள் ,தீவினைகளினால் மட்டுமின்றி நமது சொந்த புத்தியின் விகாரங்களான அதீத காமம்,அதீத கோபம்,அதீத துக்கம்,தீரா நோய்கள், பேராசையாலும் நமக்கு நிம்மதிக்குறைவு ஏற்படலாம்.சாந்தி கர்மா மந்திரம் ஜெபித்து வர நன்மை உண்டாகும்.

மாலை நேரத்தில் அரச மர வேரில் இனிப்பு கலந்த  நீரை விடவும்.பின்னர் அரசமர அடியில் அமர்ந்து ஊதுபத்தி ஏற்றி வைத்து கீழே உள்ள மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.
அரசமர அடியில் அமர்ந்து ஜெபிக்க முடியாதவர்கள்  மாலை நேரத்தில் அரச மர வேரில் இனிப்பு கலந்த  நீரை விடவும்.பின்னர்,அரச மரத்தில் இருந்து வடக்கு பக்கம் உள்ள  வேர் அல்லது கிளையில் உள்ள குச்சியில் ஒன்றை ஒடித்து அதில் மஞ்சள் தடவி சிகப்புத் துணியில் வைத்து அரசங் குச்சியால்
இந்த மந்திரம் ஜெபித்து ஹோமம் செய்யலாம்.அதே பலன் கிடைக்கும்.

மந்திரம்:-

ஓம் நமஹ :ஷாந்தே ப்ரஷாந்தே ஓம் ஹ்ரீம் ஹ்ராம் சர்வ க்ரோத பிரசமனி ஸ்வாஹா ||

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 8 December 2014

சர்வ தோஷ நிவாரண தாந்த்ரீகப் பரிகாரம்


வாழ்க்கையில் திரும்பத்திரும்ப அவமானம்,வறுமை,கடன்,நோய்கள் என அவதிப்படுபவர்கள் பௌர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி அமாவாசை வரை காலையில் குளிக்கும் போது கொஞ்சம் கருப்பு எள் எடுத்து குளிக்கும் நீரில் கலந்து குளித்து வர எல்லாத் தோஷங்களும் தீரும்.குறிப்பாகச்  சனிப் பெயர்ச்சியினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள ராசிக்காரர்கள் இதைச் செய்து வர பாதிப்பு குறையும்.இறுதி நாளான அமாவாசை அன்று மாலையில் சிவன் கோயில் சென்று பைரவரை வழிபட்டு பைரவர் அருகில் உள்ள விளக்கில் உள்ள எண்ணையை வலது கை மோதிர விரலால் தொட்டு உச்சந்தலையில் வைத்துக்கொள்ள சர்வ தோஷங்களும் விலகும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

சர்வ தோஷங்களும் நீங்கி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய

ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை சூரியோதய வேளையில் ஒரு கிண்ணம் அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான நீர் எடுத்துக்கொண்டு சூரிய வெளிச்சம் தன மேல் படும்படிக் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். அந்தப் பாத்திரத்தில் தெரியும் தன் முகத்தைப் பார்த்தபடியே "ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ"  என்று 108 தடவை ஜெபிக்கவும்.ஜபத்திற்கு எந்த மாலையையும் பயன்படுத்தலாம்.அதன் பின்னர் வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர அருள் செய்யுமாறு சூரிய பகவானை வேண்டிய பின் அந்த நீரை ஏதேனும் மரம் அல்லது செடியின் வேர் பாகத்தில் ஊற்றி விடவும்.(அரச மர வேரில் ஊற்றினால் மிகவும்  சிறப்பு).

தொடர்ந்து அல்லது விட்டு விட்டு 10  ஞாயிற்றுக்கிழமைகள் செய்து வர வேலையின்மை,நிர்வாகத்திறமை இன்மை நீங்கும்.அரசு தேர்வு எழுதுபவர்கள் இதைச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Wednesday, 3 December 2014

ஆன்மீக ரகசியங்கள் :4 சர்வ க்ரஹ தோஷ நிவாரண பரிகாரம்



செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர்  அல்லது 1 மீட்டர் நீளமுள்ள  சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு  கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும்.சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை)  ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.பின்னர் அந்தச் சிகப்பு முடியை  அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும்.அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும்.இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

மந்திரம் :-

அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம்  ப்ரம்மசாரிணம்|
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||

   
வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள் :3 (தாந்த்ரீக பரிகாரம்) அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம்


ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமன வேளையில் ஊருக்கு வெளியில்,காட்டில், அல்லது மயானத்தில் உள்ள ஒரு அரசமரத்தடியில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் நல்லெண்ணெய் விட்டு அகல் விளக்கேற்றி, விளக்கிற்கு குங்குமம்,மஞ்சள் வைத்து பாயசம் படைத்து வழிபடவும்.பின்னர் பிரதட்சிணமாக அதாவது இடமிருந்து வலமாக 11 தடவை வலம் வரவும்.வலம் வந்து முடிந்தவுடன் விளக்கின் முன்  நின்று  கவலை, பிரச்சனை என உங்கள் மனக்குறை என்னவோ  அது விரைவில் தீர வேண்டிக்கொள்ளவும்.பின்னர் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடவும்.இதைக் குறைந்தது 3 வாரம் செய்யவும்.துன்பங்கள் நீங்கும்,சுபகாரியத்தடைகள் தீரும்.தொழில் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ,பணப்பற்றாக்குறை என வேண்டிக்கொண்ட பிரச்சனை என்னவோ அது தீரும் அல்லது அதைத் தீர்க்கும் வழி மனதில் தோன்றும்.
 

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


Tuesday, 23 September 2014

ஸ்ரீ கருட மந்திரம் :- சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க






                                                           ஸ்ரீ கருட காயத்ரி 

                                                ஓம் தத்புருஷாய வித்மஹே|
                                                ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
                                                தன்னோ கருட ப்ரசோதயாத் ||


ஸ்ரீ கருட பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.


கேரளாவில் இவரை மட்டுமே உபாசனா தெய்வமாக வழிபடுபவர்கள் பலர். ஆனால் சுத்த சாத்வீகம் அவசியம்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இவரது மந்திரம் சித்திக்காது.எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.


ஸ்ரீ கருடனின் கதையை விளக்கினால் அதிகம் நீளும்.எனவே நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.


இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும்  சுவாதி  நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார்.


சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி  மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது.


ப்ரகலாதப்ரியன் பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான் .


ஸ்ரீ கருடபகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி.


ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப் போல மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.


கருட உபாசனை  பற்றியும் அவரது பிரபாவம் பற்றியும் மிகச்  சிலரே அறிவர்,கருட உபாசனை அஷ்டமா சித்துக்களைத் தரவல்லது என்றால் ஆச்சர்யம் அடைவீர்கள் ஆம் கருட உபாசானையின் பலன்களுள் அதுவும் ஒன்று.


ஸ்ரீ கருட பகவானுக்கு சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி,மரிக்கொழுந்து,
செண்பக மலர்களால் அர்ச்சிக்க மகிழ்ந்து வரங்களை அருள்வார்.


கருட மந்திரங்கள் பல உள்ளன.அதில் மிக எளியதும் மிக வலிமையானதும் காருடப் பிரம்ம வித்யா என்றழைக்கப்படும் கருட பஞ்சாக்ஷரி  மந்திரம் தான்.இம்மந்திரத்தை குருவிடம்  தீக்ஷை பெற்று விதிமுறைகளை நன்கு தெரிந்து கொண்டு ஜெபிக்கவும்.



கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-


க்ஷிப   ஓம்  ஸ்வாஹா  

KSHIPA OM SWAHA


ஒரு வளர்பிறைப் பஞ்சமி அன்று ஜபத்தை தொடங்கி 90 நாட்களில் அல்லது 90 நாட்களுக்குள் லக்ஷம் உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் விஷம் தீண்டியவர்களுக்கு நீரில் 108 உரு மந்திரம் ஜெபித்து அருந்தச் செய்தாலும், பிரம்பு அல்லது கத்தி கொண்டு மந்திரித்தாலும் விஷம் நீங்கும்.


கிரஹண காலத்தில் நீரில் நின்று ஜெபிக்க நிறைவான சித்தி கிடைக்கும்.நீரில் நின்று ஜெபிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே ஜெபிக்கலாம்.



பயந்த சுபாவம் கொண்டவர்கள் கருடனை வழிபட்டு  வர மனோதிடம் உண்டாகும்.


கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.



கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-


1.விசாலா -புன்னகை பூத்த பார்வை

2.கல்யாணி - மான் போன்ற பார்வை

3.தாரா - குருக்குப்பார்வை

4.மதுரா - அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை

5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை

6.அவந்தீ  -  பக்க வாட்டுப் பார்வை

7.விஜயா  -  கணவன் மனைவியிடையே நேசத்தைப்  பூக்கச் செய்யும் பார்வை

8.அயோத்யா - வெற்றியைத் தரும் பார்வை



இவ்வளவு சிறப்புகள் உள்ள கருட பகவானைப் பற்றி அறியாமல் இருப்பது சரிதானா?


முற்காலத்தில் சன்யாசிகள்,சாதுக்கள் கிடைத்ததை உண்டு எங்காவது தங்கி  தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்வார்கள் .அவர்கள் தங்கள் கையில் ஒரு பிரம்பு அல்லது கம்பு வைத்திருப்பார்கள் .கருட மந்திரத்தை லக்ஷம் உருவேற்றி அதன் சக்தியை அந்த கம்பில் இறக்கி வைத்திருப்பார்கள்.இரவில் உறங்கும் தாங்கள் படுக்கும் இடத்தில் அந்த கம்பினால் கருட மந்திரம் ஜெபித்தபடி ஒரு வட்டம் போட்டு அதனுள் உறங்கி விடுவார்கள்.அந்த வட்டத்திற்குள் எந்த விஷ ஜந்துக்களும் தீய சக்திகளும் வராது.யாரையேனும் விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் அந்த கம்பு கொண்டு மந்திரித்து விஷத்தை நீங்கச் செய்வார்கள்.


ஜன்ம ஜாதகத்தில் ராகு,கேது என்ற சர்ப்ப கிரகங்களின் அமைப்பு
கெடுபலன்களைச் செய்யும் அமைப்பு உள்ளவர்கள் கருட பகவானை வழிபட்டு வரக் கெடுபலன்கள் குறையும்.

கால சர்ப்ப தோஷ  பாதிப்புகள் குறைய கருட உபாசனை செய்து வரலாம்.


தோல் வியாதி கொடிய கர்ம வினையினால் வருவதே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.சில சித்தர் நூல்கள் தோல் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்தால் அந்த கர்மா நம்மைப் பாதிக்கும் என்று சொல்கின்றன.தோல் வியாதி உள்ளவர்கள் குளிக்கும் பொழுது கிழக்கு நோக்கி நின்று கொண்டு கருட மந்திரத்தை 108 ஜெபித்து அதன் சக்தி நீரில் இறங்கட்டும் என சங்கல்பம் செய்து குளித்து வர தோல் வியாதிகள் நீங்கும்.


பாம்பு கடித்து விஷம் தலைக்கேறினால் முகம் நிறம் மாறிவிடும் காப்பாற்றுவது கடினம்,விரைவில் மரணம் ஏற்படும் .அப்படி விஷத்தால் கடுமையாகப் பாதிப்பு அடைந்தவர்களைக் கூட எனது சிலம்ப ஆசான் கருட மந்திரப் பிரயோகத்தினால் விஷம் நீக்கி இயல்பு நிலை பெறச்செய்துள்ளார். இது நான் நேரில் கண்ட அனுபவம்.



அடிக்கடி பாம்பு,தேள் மற்றும் இதர விஷ ஜந்துக்களால் தொல்லை ஏற்பட்டால் அதற்கு சித்தர்கள் முறைப்படி மந்திரிக்க உடனே விஷம் இறங்கும்.



M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com





Monday, 11 August 2014

நவக்ரஹ தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்




அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி  நின்று இந்த மந்திரத்தை 108 தடவை  ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.

வடஇந்தியாவில் இதனை அதிகம் பேர் ஜபித்துப் பலன் அடைந்து வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை  அன்று இதைத் துவங்கவும்.

மந்திரம் :-

நமக்காக ஜெபிக்கும் போது 
ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா|| 


பிறருக்காக ஜெபிக்கும் போது 

ஓம் நமோ பகவதே பாஸ்கராய .................... சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா|| 

( ................ என்ற இடத்தில் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவருடைய அல்லது அந்த குடும்பத்தின் பெயர்    )


யந்திரம் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

சூர்யா,தச்சநல்லூர் 
திருநல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com