Showing posts with label ஸ்ரீ முருக வழிபாடு. Show all posts
Showing posts with label ஸ்ரீ முருக வழிபாடு. Show all posts

Wednesday, 22 April 2015

ஸ்ரீ சுப்பிரமணிய மாலா மந்திரம்




ஓம் சரஹணபவாய  ஸாம் ஸீம் ஸூம் ஸைம்  ஸௌம் ஸஹ சுப்ரஹ்மண்யாய | குமாராய, குக்குடத்வஜாய, குங்குமவர்ணாய, மஹாமோஹனாய |த்வாதசாக்ஷராய, சர்வ சத்ருஹராய,பரசைன்ய வித்வம்சகாய,தேவசேனாதிபதயே ஸ்வாஹா ||


இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 108 தடவை ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தீமைகளில் இருந்து காப்பாற்றும்.எதிரிகள் பலர் இருந்தாலும் அவர்களின் தீய செயல்களை ஸ்தம்பனம் செய்து உங்களை ரட்சிக்கும். மேலும் நல்ல வசீகரண சக்தியையும் தரும்.இம்மந்திரத்தைச்  சந்தனத்தில் ஜெபித்து அணிந்து வர  ராஜ வசீகரமும் பிரம்ம தேஜசும் உண்டாகும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம்







மந்திரம் 

ஓம் வஜ்ரபுவே நமஹ||


இம்மந்திரம் மந்திர சாஸ்திர நூலான ஸ்ரீ சாரதா திலகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.தொடர்ந்து பல விபத்துக்கள்,எதிர்பாராத பிரச்சனைகளால் துன்பம் அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தை ஜெபித்து வர ரக்ஷையாக விளங்கிக் காக்கும்.

பிரயோகம் :-

கிழக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் ஜவ்வாது கலந்த விபூதி பரப்பி அதில் இம்மந்திரத்தை ஊதுவத்திக் குச்சி அல்லது வலது கை மோதிர விரல் கொண்டு எழுதி 108 தடவை  இம்மந்திரத்தை ஜபம் செய்த பின் அணிந்து வர உயர்ந்த பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Tuesday, 10 September 2013

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்

முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்:-




சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே


மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்   அருளியது  எந்த காரியத்திற்காக  கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு  அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.

ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து  மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின்  பிரயோகம்:-

1.சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர  சர்வ வசீகரம் உண்டாகும்.

2.ரஹணபவச - என தொடர்ந்து ஜெபித்து வர  செல்வம், செல்வாக்குடன் கூடிய  வளவாழ்வு உண்டாகும்.

3.ஹணபவசர - என தொடர்ந்து ஜெபித்து வர  பகை,பிணி நோய்கள் தீரும்.

4.ணபவசரஹ - என தொடர்ந்து ஜெபித்து வர  எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள்  நீங்கும்.

5.பவசரஹண - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள்   வரை  நம்மை விரும்பும்.

6.வசரஹணப - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது  கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும்  வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து  வழிபடவும்.மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம்.டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.

ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து   (அதாவது மேலே முதலாவது கோணம் ) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில் ''றீங்'' என்று எழுதி ஜெபம்  செய்து அந்த விபூதியை அணிந்து வர  விரைவான சிறந்த பலன் உண்டாகும்.

மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் ஓம் றீங் எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும்.
உதாரணமாக :-

சர்வ வசீகரம் வேண்டி ''சரஹணபவ'' என ஜெபிக்கவேண்டும் அதை ''ஓம் றீங் சரஹணபவ'' என ஜெபிக்க வேண்டும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072