Showing posts with label தொழில் விருத்திக்கு. Show all posts
Showing posts with label தொழில் விருத்திக்கு. Show all posts

Monday, 29 February 2016

செல்வ வளமும்,தொழில் விருத்தியும் தரும் ஸ்ரீ ஐஸ்வர்யலட்சுமி மந்திரம்







இந்தப் பூஜையைத் தீபாவளி,நவராத்திரி,மாதப்பிறப்பு போன்ற ஏதாவது சுப தினங்களில் வருடத்திற்கு 2 அல்லது 3 தடவை செய்து வர நிறைவான பலன்களை எதிர்பார்க்கலாம்.


வளர்பிறை வியாழக்கிழமை அன்று மாலை குளித்து முடித்துச் சுத்தமான ஆடை அணிந்து மஞ்சள் துண்டு மேல்வஸ்திரமாக அணிந்து அகல் விளக்கு அல்லது வெள்ளி விளக்கில் நெய் ஊற்றித் தாமரைத்தண்டு அல்லது பன்னீரில் நனைத்துக் காய்ந்த பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றவும்.

ஒரு கும்பத்தில் நீர் நிரப்பி அதில் இரண்டு ஏலக்காய்,இரண்டு கற்கண்டு, சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு,ஒரு மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து அதில் 11 மாவிலைகளைச்   சுற்றி வைத்து கும்பத்திற்குப் பூச்சூடவும்.வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு வாழை இலையில் மஞ்சள் பொடியால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அந்தச் செம்பை அதன் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபிக்கவும்.

நைவேத்தியமாக வெல்லம்,தேங்காய்த் துருவல்,ஏலக்காய் போட்டுக் காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பழங்கள் வைக்கவும்.மல்லிகை,பிச்சி (முல்லை ) அல்லது வாசனை உள்ள ரோஜாப் பூக்கள் ஜெபத்திற்கு உகந்தவை.

ஜெபம் முடிந்ததும் ஜெபம் யாருக்காகச் செய்யப்பட்டதோ அவர் தன் மீது அந்த கும்பதீர்த்தத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்துக் கொள்ளவும்.பின் கும்பதீர்த்தத்தை  தொழிற்சாலை,கடை முழுவதும் தெளித்து விடவும்.சர்வ பீடை,கண் திருஷ்டி,தரித்திரம் நீங்கி லாபம் கொழிக்கத் துவங்கும்.



இந்த பூஜையை வீட்டிலும் செய்யலாம்.தரித்திரம் நீங்கி செல்வநிலையில் உயர்வு கிட்டும்.



மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் லக்ஷ்மீ | துர்பாக்ய நாசினி சௌபாக்ய ப்ரதாயினி |
ஸ்ரீம் ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Saturday, 16 January 2016

தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு வர




ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் அரசமரத்தில் இருந்து 11 இலைகளைப் பறித்துப் பன்னீரால் சுத்தம் செய்து  செஞ்சந்தனத்தை அரைத்துக் குழைத்து அதைக் கொண்டு அந்த இலைகள் ஒவ்வொன்றிலும் "ராம் ராம்"  என்று 4 தடவை எழுதவும்.பின்னர் அந்த 11 இலைகளையும் அனுமன் விக்ரகம் உள்ள ஏதேனும் கோவிலில் அனுமனின் பாதத்தில் வைத்து வணங்கிக் கொள்ளவும்.


இந்தப் பரிகாரத்தைத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் சரியாகி நல்ல நிலைக்கு வரும்வரை செய்துவரவும்.இடையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஏதாவது ஒரு திங்கள்கிழமை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை.முடிந்த திங்கட்கிழமைகளில் செய்து வர நற்பலன்களைக் காண்பீர்கள்.





வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Friday, 8 January 2016

தொழில் விருத்தி தரும் ஜன ஆகர்ஷண யந்த்ரம்





மலேசியா ,தாய்லாந்து,இந்தோனேசியா,சிங்கப்பூர்,இந்தியா,வங்காளதேசம்   போன்ற நாடுகளில் அனைத்து மதத்தினராலும் பயன்படுத்திப் பலன் கண்டுவரும் ,தொழில் ஸ்தாபனங்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் சக்தி உள்ள   ஜன ஆகர்ஷண சுலைமான் யந்திரம்.இது சாதாரண பேப்பரில் வரைந்து உருவேற்றப்பட்டிருந்தாலும் நிறைந்த பலன் தரக் கூடியது.


பலரும் இந்த யந்திரத்திற்குத் தூபம் காண்பித்துப் பூஜித்து வந்ததன் பலனாகத் தங்களது கடை,தொழில் ஸ்தாபனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகஅளவு வரத் துவங்கிப்  பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.



விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட செல்போனுக்குத் தொடர்பு கொண்டு தகவல் பெறவும்.ஒரு வாரத்தில் லேமினேஷன் செய்து அனுப்பி வைக்கப்படும். அத்துடன் பயன்படுத்தும் முறைகள் குறித்த கையேடும் அனுப்பி வைக்கப்படும்.     


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 /97884930472


Friday, 16 October 2015

தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்கவும்,உண்டான நஷ்டம் நீங்கவும் வேத பரிகாரம்


வளர்பிறையில் உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து அதிகாலையில் ஆலமர வேர் ஒரு சிறு துண்டு எடுத்துக் கொள்ளவும்.வீட்டிற்குக் கொண்டு வந்து பஞ்சகவ்ய அல்லது பன்னீர் விட்டுக் கழுவி வைத்துக்கொள்ளவும்.ஒரு வெள்ளை அல்லது மஞ்சள் பட்டு நூல் வாங்கி செஞ்சந்தனக் கட்டையை உரைத்து  அதை அந்தப் பட்டு  நூலில் தடவி தொழில்,வியாபார ஸ்தாபனங்களில்  வாசலில் கட்டவும்.பலரால் பயன்படுத்தி வெற்றி கண்ட இம்முறையைப் பின்பற்றி நீங்களும் தொழிலில் சிறக்க வாழ்த்துகிறேன்.   

குறிப்பு:மரத்தின் தெற்கு பக்கம் உள்ள வேரை மட்டும் எடுக்கக் கூடாது.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Wednesday, 18 March 2015

வியாபார விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்







தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களில்  விளக்கேற்றிக்  கற்கண்டு படைத்து இந்த மந்திரத்தை முடிந்த வரை ஜெபித்து வரத் தொழில் / வியாபாரத்தில் நிறைவான முன்னேற்றம் உண்டாகும்.



மந்திரம் :

ஓம் ஐம் ஸ்ரீம்|மஹாலக்ஷ்ம்யை |
கமலதாரிண்யை  கருட வாஹின்யை |
ஸ்ரீம் ஐம் நமஹ ||  


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 26 February 2015

தொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்




இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும்.தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.

கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை  மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர்.காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும்.அல்லது மாலை 6:15 முதல்  6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை,தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.   


மந்திரம் :-

ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா || 


வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன்  !

M.சூர்யா
தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

வியாபாரம்,தொழில் விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்




வட இந்திய வியாபாரிகள் பின்பற்றும் ஒரு ரகசிய முறையை இங்கு தருகிறேன் .படித்துப் பயன்பெறுங்கள்.

தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில்  மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பாயசம்,கற்கண்டு,பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.விளக்கேற்றி "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்" என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.
தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும்.

மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

மந்திரம் :-   

ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ || 

வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன்  !

M.சூர்யா
தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday, 15 February 2015

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்





1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.


3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .


4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.


5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.


6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"  என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது  தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.  



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Tuesday, 23 December 2014

தொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாக

தொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாக:-




வளர்பிறை வெள்ளிக்கிழமை  அன்று தொடங்கிப் பின் வெள்ளிக்கிழமை தோறும் பிரம்ம முகூர்த்தம் (4:30 முதல் 6:00 மணிக்குள்) அல்லது சுக்ர ஹோரையில் கீழ்க்காணும் பிரயோகத்தைச் செய்து வர தொழில் ,வியாபாரம் விருத்தியடையும்.அதிகமான வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குவார்கள்.


ஒரு புது செம்புப் பாத்திரத்தில் நீர் வைத்து அதில் கொஞ்சம் பச்சைக்கற்பூரம் பொடி செய்து போட்டு,மஞ்சள் பொடி கொஞ்சம் போட்டு கீழ்க்கண்ட மந்திரம் 108 முறை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்துப் பின்னர் அந்த நீரைக் கடை, தொழிற்சாலை  முழுவதும் தெளித்து விடவும்.வலம்புரி சங்கில் நீரை ஊற்றித் தெளித்தால் சிறப்பான பலன் உண்டாகும்.தெளித்து ,முடித்த பின் நீர் மீதம்  இருந்தால் அதை  மேனேஜர்,முதலாளி அல்லது காசாளர் அறையில் ஈசான மூலையில் பலகை போட்டு அதன் மேல் வைக்கவும்.  

மந்திரம் 

ஓம் ஹ்ரீம் தும் துர்க்காயை சர்வாகர்ஷணாயை ஹ்ரீம் தும் பட் ||


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Thursday, 11 December 2014

வியாபார விருத்தி யந்திரம்


வேலை செய்பவர்களுக்கு என்னதான் கஷ்டமான வேலையாக இருந்தாலும் மாதமானால் சம்பளம் வந்துவிடும்.ஆனால் ,தொழில் செய்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் போட்ட தொகை நஷ்டமாகாமல் லாபம் வர வேண்டும் என்ற சிந்தனை மனதை ஆக்கிரமித்தபடியே இருக்கும்.தொடர்ந்த தொழில் முன்னேற்றத்திற்குச்  செம்பு தகட்டை சுத்தம் செய்து அபிஷேகித்து அதில் கீழே உள்ள வியாபார விருத்தி யந்திரத்தை வரைந்து முறைப்படி பிராணப்  பிரதிஷ்டை செய்து நெய் விளக்கேற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்துக் கடை,தொழிற்சாலை, அலுவலகத்தின் முகப்பு அல்லது வெளிப்புறச் சுவற்றில் மாட்டி அல்லது ஒட்டி வைக்கத் தொழிலில் தொடர்ந்த முன்னேற்றமும் அதிக லாபமும் உண்டாகும்.

செம்புத் தகட்டில் வரைய முடியாதவர்கள் ஒரு சுத்தமான வெள்ளை நிறப் பேப்பரில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம்  ஜவ்வாது எடுத்து அதில் கொஞ்சம் பன்னீர் கலந்து அதைத் தடவி பின்னர் செந்தூரம் கொண்டு  கீழே உள்ள யந்திரத்தை வரைந்து  நெய் விளக்கேற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்துக்  கடை,தொழிற்சாலை,அலுவலகத்தின் முகப்பு அல்லது வெளிப்புறச் சுவற்றில் மாட்டி அல்லது ஒட்டி வைக்கத் தொழிலில் தொடர்ந்த முன்னேற்றமும் ,அதிக லாபமும் உண்டாகும்.
    
இதை வளர்பிறை புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மாலை 6:30 முதல் 8:00 மணிக்குள் செய்யவேண்டும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Sunday, 22 June 2014

தொழில் விருத்திக்கு ஸ்ரீ பகளாமுகி மந்திரம்



ஓம் ஐம் ஹ்லீம்|
வியாபார விருத்திம்|
ஹ்லீம் ஐம் ஓம் ||

ஏதேனும் ஒரு வியாழக்கிழமை அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் கிழக்கு முகமாக  விளக்கேற்றி மேற்கு நோக்கி அமர்ந்து விளக்கின் முன்னால் மஞ்சள் பட்டுத்துணி வைத்து விளக்கிற்கு இந்த மந்திரத்தைச் சொல்லி 18 தடவை மஞ்சள் அல்லது செந்நிறப் பூக்களால் அர்ச்சிக்கவும்.பின்னர் மஞ்சள் பட்டுத்துணியில் மஞ்சளால் (தண்ணீரில் குழைத்த மஞ்சள்) கீழ்நோக்கிய முக்கோணம் ஒன்று வரைந்து அதனுள் ஹ்லீம் என்று எழுதி முக்கோணத்தின் மூலைகளிலும் நடுவிலும்  குங்குமம் வைத்து அதன் மேல் ஒரு தேங்காயும் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 எண்ணிக்கை ஜெபித்து மஞ்சள்  துணியில் தேங்காயை முடிந்து கடை அல்லது தொழில் ஸ்தாபனங்களில் முதலாளி அமரும் இடத்தில் உள்ள விளக்கின் அருகில் வைக்க எதிரிகளின் தொல்லை,திருஷ்டி இவை நீங்குவதுடன் தொழிலில் வியக்கத்தக்க முன்னேற்றம் உண்டாகும்.


வெள்ளி,செவ்வாய்,அமாவாசை, பௌர்ணமி நாட்களில் செம்பில் தண்ணீர் வைத்து அதில் சிறிது மஞ்சள் பொடி போட்டு இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து அந்த நீரை வீடு ,கடை,அலுவலகங்களில் தெளிக்க சிறப்பான பலன்கள் ஏற்படும்.



வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com