Showing posts with label ஸ்ரீ ஹனுமன் வழிபாடு. Show all posts
Showing posts with label ஸ்ரீ ஹனுமன் வழிபாடு. Show all posts

Tuesday, 27 January 2015

பலன் தரும் ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்



1.ஸ்ரீ ஹனுமத் சுலோகம் :-

அசாத்ய  சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|

எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கி வேண்டிய பின்னர் துவங்க சிறப்பாக முடியும்.
ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில் முடிவடையாமல் நின்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ஹனுமன் ஆலயம் சென்று அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி அமர்ந்து இந்த ஸ்லோகத்தை  27 தடவை ஜெபித்து வேண்டிக்கொள்ள தடைபட்ட காரியம் விரைவில் முடியும் சூழல் உருவாகும்.


2.வியாதிகள்,எதிரிகள் நீங்க ,வசீகரம் தரும் மந்திரம் 

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||


3.எல்லா ஆபத்துக்களில் இருந்தும் விடுபட :-

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |ஆத்யாத்மிகாதி தெய்வீகாதி
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||

உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து 108 தடவை இம்மந்திரம் ஜெபித்து கையில் ரக்ஷை கட்டிக்கொள்ள மனிதர்களாலும், இயற்கை மற்றும் துஷ்ட சக்திகளாலும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது சர்வரக்ஷையாக விளங்கிக் காக்கும்.ரக்ஷையை அணியும் முன் மேற்சொன்ன மந்திரம் 3 தடவை ஜெபித்து அர்ச்சித்து பின் அணிந்து கொள்ளவும். 


4.பிறரால் செய்யப்பட திருஷ்டி,மந்திர யந்திரங்களால் உண்டான பாதிப்புகள் நீங்க, நோய்கள் ,பயம் நீங்க,சர்வ கார்யங்களிலும் வெற்றி பெற :   
ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய |
சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய |
சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய |
சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா ||

மேற்சொன்ன பலன்கள் போக மேலும் சில காரியங்களுக்கும் இம்மந்திரம் பயன்படும்.எதிர்களுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வெற்றி கிட்டும்.

5.கெட்ட சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்க :-
ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா ||

அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் இருந்தால் இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும்.உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு "ஹ்ராம்" என்று எழுதி  இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச்  சுருட்டித் தாயத்துக்குள்  அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத,ப்ரேத,பிசாசு,துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.
தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு,கடை,தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீடு,கடை,தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்.


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday, 14 January 2015

ஸ்ரீ ஹனுமன் உடல்கட்டு மந்திரம்

                                         ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜய ராம்
                ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம் || 
                  ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் || 




சாத்வீக மந்திரம் தவிர்த்த பிற வகையான ராஜச மற்றும் தாமச தெய்வ மந்திர உபாசனை மற்றும் பூஜையின் போது எதிர்பாராத சில ஆபத்துக்கள் அல்லது துஷ்ட சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகலாம்.அதைத் தவிர்க்க உடல் கட்டு மந்திரம் ஜெபித்த பின் மந்திர ஜபம் செய்வது பாதுகாப்பானது.

முதலில் ஊதுபத்தி ஏற்றி வெற்றிலைப் பாக்கு ,வாழைப்பழம் ,கொய்யாப்பழம் படைத்து முன்னால் ஒரு டப்பியில் விபூதி வைத்துக் கொண்டு மந்திரத்தை 1008 தடவை ஜெபித்துச் சித்தி செய்து கொள்ளவும்.பின்னர் தேவையான போது 3 தடவை ஜெபித்துச் சிரசிலும்,நெற்றியிலும், மார்பிலும் விபூதி அணிந்து கொள்ளக் காப்பாக விளங்கும்.குளக்கரை,நதிக்கரை,கடற்கரையில் மந்திரத்தைச் சித்தி செய்வது சிறப்பு.


உடற்கட்டுக்கு மட்டுமின்றி பயந்த குழந்தைகள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த விபூதியைப் பூசி வர அவற்றின் பாதிப்புகள் நீங்கும்.இரவில் தனியாக உறங்கப் பயப்படுபவர்கள் இதை ஜெபித்து நெற்றியில் விபூதி பூசி உறங்கப் பயமற்ற உறக்கம் உண்டாகும்.


மந்திரம்:-

ஓம் நமோ பரமாத்மனே அஞ்சனாசுதாய |
ஹும் ஹும் ஹும் மம சரீரம் பந்தனம் |
ரக்ஷ குரு குரு ஸ்வாஹா ||  



                                 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Tuesday, 9 December 2014

உடல்பலம்,மனோபலம் பெற :-


சிலர் எதற்கெடுத்தாலும் உடனே அழுபவர்களாக,பயப்படுவர்களாக இருப்பார்கள்.மனபலம் இன்மையே இதற்குக் காரணம்.கீழே சொல்லியுள்ள பிரயோகத்தின் மூலம் அவர்களை மனோபலம் கொண்டவர்களாக மாற்ற முடியும்.


வளர்பிறை செவ்வாய்க்கிழமை விஷ்ணு அலல்து ஹனுமான் ஆலயம் சென்று அங்குள்ள ஆஞ்சநேயருக்குக் கொய்யாப்பழம் ,அச்சுவெல்லம், பழங்கள் படைத்து ஹனுமனை வழிபட்டு அர்ச்சகரிடம் ஹனுமனின் மேனியில் பூசிய செந்தூரம் கொஞ்சம் தருமாறு வேண்டி வாங்கி அதைக்  கையில் வைத்துக் கீழே உள்ள மந்திரம் ஜெபித்து நெற்றியில் பூசி வர
உடலில் மனதில் பலம் பெருகி  எந்த ஒரு சூழ்நிலையையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனோநிலையை அடையப் பெறுவார்கள்.

மந்திரம் :-

" ஓம் ஹம் ஹனுமந்தாய வீரரூபாய நமஹ "





வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Wednesday, 19 November 2014

ஸ்ரீ ஹனுமான் பயவிமோசன மந்திரம் :-





அஞ்சனாகர்ப்ப சம்பூதாய கபீந்த்ரோ சர்வோத்தம |
ராமப்ரிய நமஸ்துப்யம் ஹனுமந் ரக்ஷ ரக்ஷ சர்வதா ||


இரவில் தூங்கும் போது துர்சக்திகள் பிடித்து அழுக்குவது,பயங்கர கனவு கண்டு விழித்துக்கொள்வது ,அமானுஷ்ய சத்தங்கள் காதில் விழுந்து பயப்படுதல் நீங்க செவ்வாய்க்கிழமை அன்று ஹனுமனுக்கு கொய்யாப்பழம்,வெற்றிலை,பாக்கு,பழங்கள்,உளுந்துவடை படைத்து  முன்னால் விபூதி அல்லது செந்தூரம் வைத்து மேற்கண்ட மந்திரத்தை 108 தடவை ஜெபிக்கவும்.பின்னர் உறங்கும் முன் அந்த விபூதி அல்லது  செந்தூரத்தை நெற்றி அணிந்து கொள்ள மேற்சொன்ன தீமைகள் ஏற்படாது.தினமும் இவ்வாறு செய்து வரவும்.

வீட்டில் பேய், பிசாசு,மந்திரங்களால் அல்லது  தீய சக்திகளின் தொல்லை இருந்தால் இந்த மந்திரத்தைத் தேய்பிறை செவ்வாய்கிழமை (அன்று இப்பூஜையைச் செய்பவருக்குப் படுபக்ஷி நாளாக இருக்ககூடாது)   ஹனுமனுக்கு கொய்யாப்பழம்,வெற்றிலை, பாக்கு,பழங்கள், உளுந்துவடை படைத்து  முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்து அதில் கொஞ்சம் துளசி இலைகளைப்  போட்டு ,விபூதி வைத்து மந்திரத்தை 1008 தடவை  ஜெபம் செய்யவும்.ஜபம் முடிந்ததும் அந்த விபூதியை செம்பில் உள்ள நீரில் போட்டு  அந்த தீர்த்தத்தை வீட்டின் உட்புறம் ,வெளிப்புறம்,வீட்டில் உள்ளோர் மீதும் வெற்றிலை கொண்டு தெளித்து விடவும்.இவ்வாறு 3 செவ்வாய்க் கிழமைகள்  செய்ய எந்த துஷ்ட சக்திகளாலும் துன்பம் நேராது.


                      வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
  


Friday, 12 September 2014

ஸ்ரீ ஹனுமத் சத்ரு ஜெய மந்திரம்


ஓம் நமோ பகவதே |
மஹாபலபராக்ரமாய |
மஹா விபத்தி நிவாரனாய |
பக்த ஜன மனோபீஷ்ட கல்பனா கல்பத்ருமாய |
துஷ்ட ஜன மனோரத ஸ்தம்பனாய| 
பிரபஞ்சன ப்ராணப்ரியாய ஸ்ரீம்||


ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று  ஒரு செம்புப் பாத்திரத்தில் நீர் வைத்துக் கொண்டு கொய்யாப்பழம் ,வெற்றிலை பாக்கு ,பால்,பழங்கள் படைத்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபிக்கவும். துளசிச் செடியின் வடக்கு பக்கம் வேரும் 3 வெற்றிலையும் சேர்த்து சிகப்பு நூலால் கட்டி செம்பில் உள்ள நீரால் கழுவி  ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீட்டு வாசலில் தொங்க விடவும்.மீதி நீரை வீடு முழுவதும் வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து விடவும்.

இந்த மந்திரப்பிரயோகத்தைச் செய்தால் நமது மன விருப்பங்கள் நிறைவேறும்.எதிரிகளால் ஏற்படும் தீவினைகள் பலிக்காமல் நீங்கும்.பேய் ,பிசாசு மற்றும் தீய சக்திகள் வீட்டை அண்டாது.

இந்த மந்திரத்தை ஒரு செம்பு யந்திரத்தில் எழுதி பன்னீர்,பால்,பச்சைக் கற்பூரம் கரைத்த தீர்த்தம்  மற்றும் பஞ்சகவ்யத்தால் அதைச் சுத்தி செய்து 1008  உரு மந்திரம் ஜெபித்துப் ப்ராண ப்ரதிஷ்டை செய்து  புஷ்ப அர்ச்சனை செய்து தாயத்தில் அடைத்து அதை வாகனத்தில் தொங்க விட விபத்துகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
உடலில் அணிந்து கொண்டால் எதிரிகளின் தீவினைகளாலோ தீய சக்திகளாலோ ஆபத்து நேராமல் காக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com






Saturday, 16 August 2014

ஸ்ரீ ஹனுமன் வழிபாடு


                              ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ||

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||


ஸ்ரீ ஹனுமன் சிவ அம்சம் சிவனது வீரியத்தில் இருந்து தோன்றியவர் எனவே இவரது சஹஸ்ரநாமத்தில் '' ருத்ர வீர்ய ஸமுத்பவாய '' என்றொரு நாமம் உண்டு.

ஸ்ரீ ஹனுமான் சிவபெருமானின் 11 அவதாரங்களில் ஒருவர்(ஏகாதச ருத்ரர்களில்) .
  
ஸ்ரீ ஹனுமானை மகான்கள் ராமாயணம் என்ற பெரிய மாலையில் உள்ள ரத்தினம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஸ்ரீ ஹனுமான் பிரம்மா சரஸ்வதி முதலான அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும்,பல சிறப்பான சக்திகளும்,தன்மைகளும் கொண்டவர்.
இராமாயண காலத்தில் ராமாவதார நோக்கம் பூர்த்தி அடைந்த பின் ராமர் ,சீதா முதலானோர் விண்ணுலகம் செல்லும் போது ஸ்ரீ ஹனுமன் ஸ்ரீ ராமரிடம் நான் உங்கள் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டு இந்த மண்ணிலேயே இருந்து விடுகிறேன் எனக் கூறி என்றும் சிரஞ்சீவியாய் இருந்து வருபவர்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி,ஸ்ரீ மஹா வாராஹியைப்போல் ஸ்ரீ ஹனுமனும் விரைந்து அருள் செய்பவர்.

மாந்திரீகத்தில் இவரைக் கட்ட முடியாது.இவரைக்கொண்டு நியாயமான மற்றும் நல்ல காரியங்களை மட்டுமே செய்ய முடியும்.

இவருக்குத் தன் பலம் தெரியாததால் இவரைப் போற்றித் துதிப்பவர்களுக்கு மற்ற தெய்வங்களை விடச் சிறப்பான அருளை வழங்குவார்.இதன் காரணமாகவே "ஸ்தோத்ரப்பிரியர்" என்று அழைக்கப்படுகிறார்.

எல்லாத் தெய்வங்களைப்போல இவருக்கும் 108,1008 நாமங்கள் உள்ளன. இருந்தாலும் இவரது நாமங்களில் கீழ்க்காணும் 12 நாமங்கள் பிரசித்தி வாய்ந்தவை அவற்றைத் தினமும் அதிகாலையில் ஜெபித்து வருவது அவர் அருளை நிறைவாய்ப் பெற்றுத்தரும்.

1.ஹனுமத் த்வாதச நாமங்கள் :-

ஹனுமான்
ஆஞ்சநேயன்
வாயுபுத்திரன்
மகாபலிஷ்டன்
ராமேஷ்டன்
அர்ஜுனசகன்
பிங்காக்ஷன்
அமிர்தவிக்ரமன்
சமுத்திரத்தைத் தாண்டியவன்
சீதாசோகவிநாசகன்
லக்ஷ்மணப்ராண  ரக்ஷகன்
ராவணனின் கொழுப்பைப் பரிகாசம் செய்தவன்



தினமும் குளித்து முடித்து மேற்கண்ட இவரது பன்னிரு திருநாமங்களை ஜெபித்து  வர இவர் அருளைப் பூரணமாகப்  பெறலாம்.மேலும்,இந்த நாமங்களை யாத்திரையின் போதும்,ஆபத்தான தருணங்களிலும்,பயம் கொண்ட நேரத்திலும் ஜெபித்து வேண்டக் காவலாய் விளங்குவதோடு காரிய வெற்றியும் தரும்.


2. ஸ்ரீ ஹனுமான் ராம பக்தருள் சிறந்தவர். மேலும் இவர் தன்னை வணங்குபவர்களை விட ஸ்ரீ ராமரை வணங்கி அவர் நாமத்தைப் பாடுபவர்களுக்கு சிறப்பான பலன்களை நல்குவார்.எனவே .அதிகாலையில் குளித்த பின்னர்  "ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்" என்று குறைந்தது 27 தடவையும், அதிகமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபித்து வர இவர் அருளைப் பூரணமாகப் பெறலாம்.


3.ஆபத்தான தருணங்களில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஜெபித்து அவரை வேண்ட ஆபத்துகள் விலகும்.

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 

ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||




4.பாதுகாப்பான பயணத்திற்கு :- 

தொலைதூரப் பயணம் செல்கையில் வழியில் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும்,தனிமையில் பயணம் செய்யும் போது பயம்,ஆபத்து நீங்கவும்,அடிக்கடி வாகன விபத்துகளைச் சந்திப்பவர்களும் இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப  ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது .

அபராஜித நமஸ்தேஸ்து நமஸ்தே ராமபூஜித |
பிரஸ்தானந்த கரிஷ்யாமி சித்திர்ப்பவது மே  ஸதா|| 






வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Sunday, 13 July 2014

காரிய சித்திக்கான ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்





1.ஆரோக்யமான வலிமையான உடலைப் பெற

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | வஜ்ர தேஹாய |வஜ்ர நகாய |வஜ்ர முஹாய| வஜ்ர ரோம்னே |வஜ்ர நேத்ராய|வஜ்ர தந்தாய |வஜ்ர கராய| வஜ்ர பக்தாய|ராம தூதாய ஸ்வாஹா||

2.எதிரிகள் நோய்கள் தீர

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ சத்ரு சம்ஹரணாய| சர்வ ரோகஹராய |சர்வ வசீகரணாய| ராம தூதாய ஸ்வாஹா||

3.மந்திர மாந்திரீகம் ,எதிரிகள்,த்ருஷ்டி,வியாதி ,பயம் நீங்க ,காரியன் சித்திக்க


ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ யந்த்ர மந்த்ர தந்த்ர த்ராடக நாசகாய | சர்வ ஜ்வரச் சேதகாய|சர்வ வ்யாதி நிக்ருந்தகாய |சர்வ பய ப்ரசமனாய |சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய|சர்வ கார்ய சித்திப்ரதாய | ராம தூதாய ஸ்வாஹா||

4. துர்தேவதைகளின் உபத்ரவம் நீங்க 

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ| பூத பிரேத பிசாச |டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய | ராம தூதாய ஸ்வாஹா||

இந்த மந்திரத்தைச் செவ்வாய்க்கிழமை அன்று 1008 தடவை ஜெபித்து அந்த நீரை வீட்டில் தெற்குத் திசை தொடங்கி கடிகாரச் சுற்றில்,தென்மேற்கு,மேற்கு , ,வடமேற்கு ,வடக்கு,வடகிழக்கு,கிழக்கு ,தென்கிழக்கு என 8 திசைகளிலும் தெளித்துப் பின்னர் வீட்டின் தலை வாசலிலும் தெளித்து அதன் பின்னர் வீட்டில் உள்ளவர்கள் மீதும் தெளித்துக் கொள்ள துஷ்ட சக்திகளின் உபத்ரவம் நீங்கும். 


5.மந்திரம் 

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ க்ரஹான பூத பவிஷ்ய வர்த்தமானான் சமீப ஸ்தான் |சர்வ கால துஷ்ட புத்தி உச்சாடய  உச்சாடய| பர பலானி க்ஷோபய க்ஷோபய|மம சர்வ கார்யானி சாதய சாதய ஸ்வாஹா||

இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து  வர கெட்ட புத்தி நீங்கும்.தீய சக்திகளால் தீங்கு நேராது.ஒரு நபரை பார்த்தவுடன் சரியாக கணிக்க முடியும்.
சகல காரியமும் சித்தியாகும்.


செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று வெற்றிலை, பாக்கு, கொய்யாப்பழம்,பழங்கள் வைத்துத் தேவையான மந்திரத்தை 108 வீதம் வேண்டிய காரியம் நிறைவேறும் வரை ஜெபித்து வரவும். 


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com