Showing posts with label தீவினைகள் தீர. Show all posts
Showing posts with label தீவினைகள் தீர. Show all posts

Wednesday, 27 July 2016

தீய சக்திகளின் தொல்லை நீங்க



செவ்வாய்க்கிழமை தோறும் மாலை நேரத்தில்

லக்ஷ்மி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம பாஹிமாம்  
உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம ரக்ஷமாம்

என்று ஜெபித்த படியே வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி வர தீய சக்திகள் விலகி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com




Friday, 29 April 2016

வாகனப் பாதுகாப்பிற்குப் பரிகாரம்



வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுதல்,அதிக மெயின்டனன்ஸ் செலவுகள் ஏற்படுவது,ப்ரேக் டவுன் ஆகுதல் போன்ற துன்பங்கள் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட பரிகாரம் செய்ய நிவர்த்தியாகும்.


1 பாக்கு,1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு,1 ஸ்பூன் கருப்பு எள்,கொஞ்சம் சிகப்பு குங்குமம் இவற்றை ஒன்றை சேர்த்து  ஒரு சுத்தமான கறுப்புத்துணியில் போட்டு முடிச்சுப் போட்டு  அதை வாகனத்தில் பம்பரில் அல்லது முன்பகுதியில் எங்காவது கட்டி வைத்துவிடவும்.

இதை எந்த நல்ல நாளிலும் செய்யலாம் அமாவாசை அன்று செய்வது சிறப்பு.
ஏற்கனவே உள்ளது கிழிந்தோ,தொலைந்தோ போய்விட்டால் மீண்டும் ஒன்றைத் தயார் செய்து கட்டி வைத்துக் கொள்ளவும்.


                           வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Wednesday, 13 January 2016

துஷ்ட சக்திகளிடம் இருந்து காக்கும் திசைகட்டு மந்திரம்



சில தெய்வங்களின் மந்திரங்களை ஜெபிக்கும் போதோ அல்லது சில தெய்வங்களுக்குப் பூஜை செய்யும் பொழுதும் எதிர்பாராத ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு.எனவே பூஜை அல்லது மந்திர ஜபம் செய்யும் முன் விபூதியை கையில் வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை 11 தடவை ஜெபித்து கிழக்கு,தெற்கு,மேற்கு,வடக்கு என்று நான்கு  திசைகளிலும் பூமி  மற்றும் ஆகாயத்திலும் சிறிது தூவிப் பின்னர் தலை உச்சியிலும்,நெற்றியிலும் இட்டுப் பின்  அமர்ந்து பூஜை,ஹோமம்,ஜெபம் செய்ய எந்த தீய சக்தியும் தேவதையும் உங்களுக்குத் தீங்கு செய்ய இயலாது.


ஜோதிடர்களும் குளித்து முடித்து ஜோதிடம் பார்க்க  இம்மந்திரத்தை ஜெபித்த பின் ஜோதிடம் பார்க்க வந்திருப்பவர்களை உள்ளே அழைத்துப் பலன் கூறவும். ஏன் என்றால் தீய சக்திகள்,பேய்,பிசாசு,தோஷம்,பில்லி,சூன்யம்,ஏவல் போன்றவற்றால் கஷ்டம் அனுபவிப்பவர்கள் உங்களை நாடி வந்து பலன் கேட்க வரும் பட்சத்தில் அவர்களிடம் உள்ள சக்திகளாலோ,தோஷத்தாலோ உங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.எனவே இதைச் செய்து கொள்ள உங்களுக்கு கவசமாக விளங்கும்.


வளர்பிறையில் உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நாளாகப் பார்த்து 11 நாட்களுக்குத் தினமும் 1008 தடவை ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.பின் மேற்கூறிய படித் தேவையான நேரங்களில் பயன்படுத்திப் பாதுகாப்பாக வாழவும்.


திசைகட்டு மந்திரம் 

வஜ்ரக்ரோதாய மகாதண்டாய தச திஷோ பந்த் பந்த்  ஹூம் பட் ஸ்வாஹா ||



வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Friday, 26 December 2014

துர்மந்திர பாதிப்புகள் நீங்க



தேய்பிறை ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமை அன்று  மதியம் 12 முதல் 1:30 மணிக்குள் பூஜையைத் தொடங்கவும்.ஸ்ரீ காளி தேவியின் படம் வைத்து அதன் முன் ஒரு புது கருப்புத்துணியில் கொஞ்சம் பன்னீர்  தெளித்து அதன் மேல் ஒரு புது அகல் விளக்கேற்றி விளக்கின் முன் மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்று வைக்கவும்.கருப்பு நிறக் கம்பளி அல்லது கருப்புத் துணியில் அமர்ந்து கருப்பு ஆடை அணிந்து  கருமணி மாலை வைத்து வடக்கு முகமாக அமரவும். முதலில் 18 எண்ணிக்கை செந்நிறப்பூக்களால் விளக்கின் பாதத்தில் அர்ச்சித்து ஜபம் செய்த பின்  தீபத்தை பார்த்தபடி 1008 உரு ஜெபிக்கவும்.ஜபம் முடிந்த பின் விளக்கின் முன் வைக்கப்பட்ட தேங்காயை எடுத்து விளக்கை 3 தடவை சுற்றி ஸ்ரீ காளி மாதாவை வணங்கி எந்தத் தீய மந்திரங்கள்  / சக்திகளின் பாதிப்பு இருந்தாலும் அவை உன் மேல் ஆணையாக நீங்கட்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேபாதிக்கப்பட்டுள்ள நபர் அல்லது இடத்தை 3  தடவை சுற்றி அந்தத் தேங்காயைத் தெற்கு முகமாக நின்று எரித்துவிடவும்.
பின்னர் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து அருகில் உள்ள அம்மன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டுக் குங்குமம் வைத்துக்கொள்ளவும். இதை செய்யும் போது வெளிநபர்களையும்,அதிகம் கூட்டத்தையும் அழைக்காமல் செய்வது சிறப்பு.சுபமுண்டாகும்.

முக்கியமான விஷயம் :பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு அன்றைய தினம் படுபட்சி நாளாக இருக்கக்கூடாது.

மந்திரம்:-

ஓம் க்ரீம் தந்த்ரபாத நிவாரணாய க்லீம் ஓம் பட் ||


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Thursday, 21 November 2013

செய்வினை,ஏவல்,வசியம் மற்றும் மாந்திரீக பாதிப்புகளால் உண்டான தீமைகள் நீங்க வழிபாடு

தற்சமயம் உறவுகள் மற்றும் பிறருடன் அனுசரிப்பு ,கர்ம பலன்களை ஏற்றுக்கொள்ளுதல்  போன்ற நற்குணங்களின்றி  தன் மகிழ்ச்சி மீதே குறியாக இருந்து,வெற்றி வேண்டும் என்பதற்காக எந்த தீய செயலையும் செய்து விட தயாராக இருக்கிறார்கள்.எந்த வினையும் அதற்கான பின் விளைவுகளை உரிய காலத்தில் தந்தே தீறும்.எனவே அத்தகைய தீவினை,தீயவர்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வர அவை யாவும் நீங்குவதுடன் மீண்டும் வராது காத்துக்கொள்ளலாம்.

இந்து தர்மத்தில்  அநேக தெய்வங்கள் இருந்தாலும் ஒவ்வொரு தெய்வமும் சில குறிப்பிட்ட பலன்களை அதிகமாக வளங்கக்கூடியவர்களாக    இருப்பார்கள்.உதாரணமாக ஸ்ரீ சரஸ்வதி நல்ல கல்வி, அறிவு, மேதாவிலாசம், ஞாபக சக்தி போன்ற தன்மைகளை அதிகமாக அருளும் தெய்வம்.

5 ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது .நாம் மிக பிரியத்துடன் தெய்வ வழிபாடு செய்து வருகிறோம்.ஆனால் தெய்வங்கள் நன்மையும் செய்கின்றன தீமையும் செய்கின்றன .இக்கருத்து என்னை முன் போல் உபாசனை செய்ய விடாமல் தடை செய்தது.வழக்கம் போல் தியானம் செய்கையில் என் மானச குரு அகஸ்தியரிடம் உளமார வேண்டி விளக்கம் அளிக்க வேண்டினேன்.சில நாட்களில் விடை கிடைத்தது.நம் பூமியைப்போல் பல்வேறு உலகங்கள் இருக்கின்றன அவற்றின் இயக்கத்தின் பொருட்டும் ,உயிர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப  பலன்களைத் தரவும் ஏக பரம்பொருளின் சார்பில் செயல்படும்  பணியாளர்களே  தெய்வங்களும், கிரகங்களும்,மற்றைய பூதங்கள் முதலான கணங்களும். எனவே அவர்கள் கர்ம தாதா எனப்படுகின்றனர்.
  
மந்திரசாஸ்திரத்தில் அபிசார பிரயோகம் எனப்படும்  செய்வினை, ஏவல், வசியம் மற்றும் மாந்திரீகப் பிரயோகங்களால்  உண்டான தீமைகள் நீங்க அநேக தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் கூறப்பட்டிருந்தாலும் அதில் மிக வலிமையானதும் எளிதானதும் ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடே.

ஹிரண்யனை வதம் செய்த பின்னும் ஸ்ரீ நரசிம்மரின் உக்கிரம் கட்டுப்படவில்லை அவரைக்கண்டு அன்னை ஸ்ரீ லக்ஷ்மியே அஞ்சினார் என புராணம் சொல்கிறது மற்ற தேவர்களை கேட்கவேண்டுமா எல்லோரும் சிவபிரானை வேண்ட சிவன் வீரபாகுவை அனுப்புகிறார் வீரபாகுவையும் தன் நகத்தால் கீறி அடித்து காயப்படுத்தி அனுப்புகிறார் நரசிம்மர்.இறுதியில் சிம்ம முகமும் மனித உடலும் தாங்கிய வடிவம் கொண்ட ஸ்ரீ நரசிம்மரை அடக்க  அதைவிட பிரம்மாண்டமான ஒரு சக்தியாக ஸ்ரீ சரபேஸ்வரரைப் படைத்து அனுப்புகிறார் சிவபெருமான்.இருவருக்கும் நடந்த யுத்தத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் ஜெயித்து ஸ்ரீ நரசிம்மரைத்  தன் மடியில் கிடத்தி ஆசுவாசப்படுத்தினார் .அதன் பின்னர் ஸ்ரீ நரசிம்மர் தெளிவடைந்து ஸ்ரீ சரபேஸ்வரரைப் போற்றிப் பாடிய சுலோகம் தான் ஸ்ரீ சரபேஸ்வராஷ்டகம். ஸ்ரீ சரபேஸ்வரர் யாழியைப் போன்ற உருவம் தாங்கி இருபுறமும் இறக்கைகளும் கொண்டவர்.ஒரு புறம் உள்ள இறக்கையில் இருந்து அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கையும் மறு புறம் உள்ள இறக்கையில் இருந்து அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியும் தோன்றினர்.இவர்கள் இருவரும் ஸ்ரீ சரபேஸ்வரரின் மனைவியர்.

இன்று பெரும்பாலோரால் நன்கு அறியப்பட்ட தெய்வமான அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியின் ஆலயம் ஒன்று கும்பகோணம் அருகில் அய்யாவாடியில் உள்ளது.இங்கு செய்யப்படும் ஹோமத்தில் சமித்தாக மிளகாய் வற்றல் இடப்படுகிறது.ஆனால் மிளகாய் நெடி வருவதில்லை. இவளும் சரபரை போன்று மாந்திரீக பாதிப்புகளை நீக்குபவள்.

அன்னை ஸ்ரீ சூலினி துர்கா -இவள் மாடன் முதலிய துர்தேவதைகளின் ஏவல்,மற்றும் நவக்கிரக தோஷங்களை நீக்கும் சக்தியுள்ள தெய்வம்.

மேற்கண்ட மாந்திரீக பாதிப்பு உள்ளவர்கள்,அல்லது நடப்பு தசா புத்திகளில் இத்தகைய தீமைகளை அனுபவிக்கும் அமைப்பு உள்ளவர்கள் ஸ்ரீ பிரத்யங்கிரா,ஸ்ரீ சரபேஸ்வரர் இவர்களை வழிபடுங்கள்.மற்றபடி இவர்களை சாதாரணமாக மிகத் தீவிரமாக உபாசிக்க வேண்டாம்.       

நவக்கிரங்களில் எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும்,குறிப்பாக ராகு கிரகம் மோசமாக இருந்தால்  தான் மாந்திரீக பாதிப்புகள் உண்டாகும்.எதுவாக இருப்பினும்  அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கையை வழிபட நன்மை உண்டாகும்.

மாந்திரீக பாதிப்பு உள்ளவர்கள் காலை மாலை அல்லது ராகு காலத்தில் எச்சில் படாத செம்பில் நீர் நிரப்பி சிறிது மஞ்சள் பொடி கலந்து கீழ்க்கண்ட சரப காயத்ரி மந்திரத்தை குறைந்தது 27 தடவை தெற்கு நோக்கி இருந்து ஜெபித்து அதை வீடு முழுவதும் தெளித்து வர மாந்திரீக பாதிப்புகள்  நீங்கும்.வீட்டில் உபயோகப்படுத்தாத பழைய துணிகள்,சாமான்கள் இருந்தால் அவற்றை வெளியேற்றுங்கள்.தீய சக்திகள் வர அவைகள் காரணமாகலாம்.ஸ்ரீ சரபரின்   காயத்ரி மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர தீய சக்திகளிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்..

மந்திரங்கள்:-

ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி:

ஓம் சாலுவேசாய வித்மஹே! 
பக்ஷி ராஜாய தீமஹி !
தன்னோ சரப ப்ரசோதயாத்!!

ஸ்ரீ சரபேஸ்வரர் மந்திரம் :

ஓம் கேம் காம் பட் ப்ராண க்ரஹாஸி ப்ராண க்ரஹாஸி ஹூம் பட் சத்ரு ஸம்ஹரணாய சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம் பட் ஸ்வாஹா ||


ஸ்ரீ ப்ரத்யங்கிரா  மந்திரம்:       

ஓம் க்ஷம்!
பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே !
கராள தம்ஷ்ட்ரே!
ப்ரத்யங்கிரே !
க்ஷம் ஹ்ரீம் ஹூம் ப்பட்!!  

ஸ்ரீ சூலினி துர்கா மந்திரம் 

ஜ்வல ஜ்வல சூலினி!!
துஷ்ட கிரஹ ஹூம் ப்பட் ஸ்வாஹா!!


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072