Monday, 16 June 2014

திருஷ்டி பரிகாரங்கள்



ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.

வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடி மாளிகையில் தெரியும் உங்கள் உருவத்தை பார்க்கலாம்.



வாழ்க வையகம் ||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com


Saturday, 14 June 2014

ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு



ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிபாடு 

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே  ஸ்ரீ தத்தாத்ரேயர்.

இவரது மந்திரம் ஞாபக சக்தி தரும்.ஞானம்,மோக்ஷம்,நற்குணங்கள் தரும்.(க்ஷிப்ர பிரசாதனர் ) விரைந்து அருள் செய்பவர்.இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற ,கடன் தீர ,அடமானம் வைத்த பொருள் ,நகைகளை மீட்ட,காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.   


ஸ்ரீ வித்யா உபாஸனை மந்திர சாஸ்திரத்தில் உயர்வான வித்தை இதைப் பற்றி இயற்றப்பட்ட கிரந்தங்களில் பெரியதும் சிறந்ததும் இவரால் இயற்றப்பட்டதே.அதை பின்பற்றி இவரது சீடரான ஸ்ரீ பரசுராமரால் சுருக்கமாக  இயற்றப்பட்ட கிரந்தமே ஸ்ரீ வித்யா உபாசகர்களால் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது.

அவதூதர்களுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரே சத்குரு.சகுன உபாசகர்களுக்கு கற்பக மரம் போல் நல்வாழ்வு தருபவரும்,நிர்குண உபாசகர்களுக்கு சத்குருவாய் விளங்கி ஆன்ம உயர்வு தந்து ஜீவசமாதி ஆகும் நிலை வரை அருள் செய்பவர்.


தத்தாத்ரேயர் வழிபாடு யோகிகளால் அதிகம் பின்பற்றப் பட்டு வருகிறது. விரைவில் பலன் தரக் கூடியது.

தத்தாத்ரேயரை உபாஸிக்க விரும்புவோர்  ஒரு குருவிடம் முறைப்படி தீக்ஷை பெற்று உபாசனை விதிகளை நன்கு அறிந்து ஜெபிப்பதே உயர்வுக்கு வழி.


ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம் :-

மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
அத்யஸ்த ஊர்த்வ கரயோ : சுப சங்க சக்ரே |
வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||

பொருள்: மாலை,கமண்டலம் ,உடுக்கை, ஈட்டி ,சங்கு, சக்கரம் இவற்றைக் தம் ஆறு கரங்களில் தாங்கியவரும்  அத்ரி மகரிஷியின் மகனுமான                           ஸ்ரீ தத்தாத்ரேயரே தியானிக்கிறேன்.


ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி 

ஓம்  தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய  தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||

ஸ்ரீ தத்தாத்ரேயர் மந்திரம் :-

1.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ||

2.ஓம் குரு தத்த நமோ நமஹ||

குடும்பஸ்தர்கள் மேற்கண்ட மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.


ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-

1.நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி,மன நிம்மதி உண்டாகும்.வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.



2.பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||

செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில்  இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்கப் பீடைகள்,திருஷ்டி,தீவினைகள்,பேய்,பிசாசு தொந்தரவுகள் விலகும். தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.


தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி  இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை  வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.

புது வீடு கட்டிக்  குடியேறுபவர்கள்  யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட  நன்மை உண்டாகும். 



முற்பிறவிப் பாவவினைகள் தீர, கர்மவினையின் பதிப்பால் தீராவியாதி,வறுமை நீங்க :-

அத்ரி புத்ரோ மஹாதேஜ தத்தாத்ரேயோ மஹாமுனியே |
தஸ்ய ஸ்மரண மாத்ரேன சர்வபாபை ப்ரமுச்யதே ||

இந்த மந்திரத்தை தினம் ஜெபிக்க நன்று .ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனைப் பார்த்தபடி ஜெபிக்கப்  பன்மடங்கு பலன்தரும்.


சித்த புருஷர்களாக ,யோகிகளாக விரும்புபவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்து வர உயர்ந்த ஆன்மீக நிலைகளை அடையலாம்.

1.ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி தத்தாத்ரேயாய நமஹ |

2.ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் குரு தத்தாத்ரேயாய நமஹ||



ஸ்ரீ தத்தாத்ரேயரைத்  தரிசிக்க :-

யதுகுலோ வனிகம் வௌஷட் ||

இந்த மந்திரத்தை இரவில் படுக்கையில் அமர்ந்தபடியே ஜபித்து வர ஸ்ரீ தத்தாத்ரேயரை தரிசிக்கலாம்.



சந்தானபாக்கிய ப்ரத (குழந்தை வரம் தரும்) ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்:     

தூரிக்ருத பிஸாச்சார்த்தி  ஜீவயித்வம் ம்ருதம் சுதம்|
யோபுவபிஷ்டதா பாது ச ந: சந்தான விருத்தி க்ருத்||

இந்த மந்திரத்தை வியாழக்கிழமை குருஹோரையில் வெண்ணையில் மந்திரித்து உண்டு வர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.


குருவிடம் தீட்சை பெற்று உபாசனை விதிகளை முழுமையாகத் தெரிந்து கொண்டு ஜெபிக்க ஜபம் சித்திக்கும்.


வாழ்க வையகம் || வாழ்கவளமுடன்|||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
9442193072 / 9788493072

Sunday, 8 June 2014

காயத்ரி மந்திரங்களும் பயன்களும் 1




ஓம் |
பூர் புவ ஸுவஹா |
தத் சவிதுர் வரேண்யம் |
பர்கோ தேவஸ்ய தீமஹி |
தியோ யோனஹ ப்ரசோதயாத் ||

இது வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவியின் மந்திரம்|| இதை ஒரு குருவிடம் முறைப்படி சாபநிவர்த்தி செய்து உபதேசம் பெற்றுத்தான் ஜெபிக்கவேண்டும்.

இது தவிர ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனியே காயத்ரி மந்திரங்கள் .உள்ளன.அவற்றிற்கு மேற்கண்ட நியமங்கள் தேவை இல்லை.யாவரும் ஜெபிக்கலாம்.அசைவம்  சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்து ஜெபிக்கவும் .

1.ஸ்ரீ மஹாகணபதி காயத்ரி மந்திரம்

ஓம் ஏகதந்தாய வித்மஹி |
வக்ரதுண்டாய தீமஹி |
தன்னோ தந்தி ப்ரசோதயாத் ||

இதை ஜெபித்து வர காரியத்தடைகள் நீங்கும்.எல்லா வளமும் நலமும் அமையும்.குறிப்பிட்ட காரியத்திற்காக வெளியில் கிளம்பும் முன் இந்த மந்திரத்தை 3 முறை ஜெபித்து கணபதியை வேண்டிச் செல்ல காரிய சித்தி கிட்டும்.கடை,தொழில் இடங்களில் திறந்து அமரும் முன் இதை 3 தடவை ஜெபித்துக் கணபதியை வேண்டிய பின் அமரத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இதை ஒரு வியாழன் அல்லது ஞாயிற்றுக்கிழமை ஜெபிக்கத்  தொடங்கலாம்.


2.ஸ்ரீ ஷண்முக காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே |
மஹாசேனாய தீமஹி |
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத் ||


எதிரிகளின் தொல்லை நீங்கும்,அடிக்கடி பில்லி,சூனியம் ,திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஜெபித்து குங்குமம் அணிந்து வர பாதிப்புகள் ஏற்படாது.சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

3.ஸ்ரீ விஷ்ணு காயத்ரி 

ஓம் நாராயணாய வித்மஹே |
வாசுதேவாய தீமஹி |
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் ||

செல்வம்,செல்வாக்கு,வசீகர சக்தி உண்டாகும்.

4.ஸ்ரீ சிவ காயத்ரி
ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே |
மகாதேவாய தீமஹி |
தன்னோ ருத்ர ப்ரசோதயாத் ||

மங்களம் ,வீரம்,தைர்யம் ,ஆன்மீக முன்னேற்றம் உண்டாகும்

5.ஸ்ரீ பிரம்ம காயத்ரி

ஓம் சதுர்முகாய வித்மஹே |
ஹம்சாரூடாய தீமஹி |
தன்னோ பிரம்ம ப்ரசோதயாத் ||

ஞாபகசக்தி,வாக்கு சித்தி ,படைப்பாற்றல் உண்டாகும்.

6.ஸ்ரீ ராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே |
சீதா வல்லபாய தீமஹி|
தன்னோ ராம ப்ரசோதயாத் ||

நன்னடத்தை ,நிதானம் ,ஹனுமன் அருள் உண்டாகும்.

7.ஸ்ரீ கிருஷ்ண  காயத்ரி

ஓம்  தேவகி நந்தனாய வித்மஹே |
வாசுதேவாய  தீமஹி|
தன்னோ  கிருஷ்ண ப்ரசோதயாத் ||

சர்வஜன ஆகர்ஷணம்,சந்தோசம்,சமயோசித புத்தி,குழந்தைபாக்கியம்  உண்டாகும்.


8.ஸ்ரீ இந்திர காயத்ரி
ஓம் சஹஸ்ரநேத்ராய வித்மஹே |
வஜ்ரஹஸ்தாய தீமஹி|
தன்னோ இந்திர ப்ரசோதயாத் ||

சகல விதமான மாந்திரிக,மனோரீதியான ,திருஷ்டி முதலான பாதிப்புகள் நீங்கும்.

9.ஸ்ரீ ஹனுமன் காயத்ரி

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே |
வாயுபுத்ராய தீமஹி|
தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத் ||

வீரியம்,தைர்யம்,புலனடக்கம்,சகலகலா பாண்டித்யம்,எடுத்த செயலைத்  திறம்படச் செய்யும் தன்மை உண்டாகும்.

10.ஸ்ரீ சூர்ய காயத்ரி

ஓம் பாஸ்கராய வித்மஹே |
திவாகராய தீமஹி|
தன்னோ சூர்ய ப்ரசோதயாத் ||

பார்வைக்கோளாறு,பித்ரு தோஷம் நீங்கும்.மேலாண்மைத்திறன்,பதவி உயர்வு,அரசு வேலை கிடைக்கும்.மிகுந்த மந்த புத்தி,மந்தமாக செயல்படுபவர்கள் தொடர்ந்து ஜெபித்து வரச் செயல்வேகம் உண்டாகும்.

11.ஸ்ரீ சந்திர காயத்ரி

ஓம் பத்மத்வஜாய வித்மஹே |
ஹேமரூபாய தீமஹி|
தன்னோ சந்திர ப்ரசோதயாத் ||

நிம்மதி, அமைதி,அழகு,மனோசக்தி கிட்டும். அதிகம் கோபப்படுபவர்கள் இதை ஜெபித்து வரக் கோபம் குறையும்.இதை ஜெபித்துக் குங்குமம்,அல்லது மஞ்சள்  அணிந்து வர அழகு கூடும்.

12.ஸ்ரீ யமதர்மராஜா காயத்ரி

ஓம் காலரூபாய வித்மஹே |
தண்ட தராய தீமஹி|
தன்னோ யம ப்ரசோதயாத் || 

மரணபயம் நீங்கும்,அகால மரணம் ஏற்படாது.தொடர் விபத்துக்கள் ஏற்படாது தடுக்கும்.


13.ஸ்ரீ வருண காயத்ரி

ஓம் ஜலபிம்பாய வித்மஹே |
நீலபுருஷாய தீமஹி|
தன்னோ வருண ப்ரசோதயாத் || 

எண்ணம்,சொல்,செயல் இவற்றில் மென்மையாகச் செயல்படும் குணம் உண்டாகும்.பலரும் ஒன்று கூடி வருண திசை நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபித்து மழைபெய்ய வேண்டினால் மழை வரும். 

14.ஸ்ரீ  அக்னி காயத்ரி

ஓம் மஹாஜ்வாலாய வித்மஹே |
அக்னிதேவாய தீமஹி|
தன்னோ அக்னி ப்ரசோதயாத் || 

பெண்கள் குளித்து முடித்து சமையல் செய்ய அடுப்பைப் பற்ற வைக்கும் முன் இதை ஜெபித்து வர நெருப்பால் தீங்கு நேராது.ஹோமம் செய்ய நெருப்பு உண்டாக்கும் பொழுது இதை ஜெபிக்கலாம்.விளக்கு ஏற்றும் பொழுதும் இதை ஜெபிக்கலாம்.

வாழ்க வையகம் ||  வாழ்கவளமுடன் ||

M.சூர்யா - தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Friday, 6 June 2014

மனம் அடங்க,தியானம் சித்திக்க உதவும் மந்திரம்:-



முறையான யோகப்பயிற்சி செய்துவருவதுடன் இந்த மந்திரத்தை ஜெபித்து நீர்  அல்லது பால் அருந்தி வர மனம் அடங்கும்.தீவிர காம சிந்தனைகளால் ஒழுக்கம் தவறியவர்கள் ,ஒழுக்கம் தவறி விடுவோமோ என அஞ்சுபவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி ஒரு வளர்பிறை வியாழக்கிழமை குரு ஹோரையில் ஸ்ரீ ஹனுமனை வணங்கி வேண்டி இந்த மந்திரத்தை ஒரு தடவை ஜெபித்து ஒரு முடிச்சு என ஒன்பது தடவை ஜெபித்து ஒன்பது முடிச்சுகள் போட்டு அணிந்து கொள்ள சத்வகுணம் உண்டாகும்.

தியானம் செய்யும் முன் இதனை 27 தடவை ஜெபித்துப் பின்னர் தியானம் செய்ய நன்கு தியானம் சித்திக்கும்.அனுபவித்துப் பாருங்கள்.

மந்திரம்:-

ஓம் நமோ பகவதே |
மஹாபல பராக்ரமாய|
மனோபிலஷிதாம் |
மன ஸ்தம்ப குரு குரு ஸ்வாஹா ||


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072 / 9788493072

Thursday, 29 May 2014

துன்பங்கள் தீரக் கனவில் தீர்வு தரும் ஸ்ரீ ஸ்வப்நேஸ்வரி மந்திரம்:-


வாழ்க்கையில் நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அநேகம் பிரச்சனைகள் வரும் போகும்.ஆனால் ,இக்கட்டான சில சூழ்நிலைகளில் ,நமக்கு என்ன செய்து அதை தீர்ப்பது என்று தெரியாமல் குழம்பி ஜோதிடரையோ ,குறி சொல்பவரையோ (அவர்களில் பெரும்பாலானவர்கள்MONEY MINDED)  நாடிச் சென்று பெரும் பணத்தை வீணாக செலவு செய்தும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை என சொல்வோர் ஏராளம்.

இந்த ஸ்வப்நேஸ்வரி மந்திரத்தை தினம் உறங்கும் முன் குறைந்தது 108 எண்ணிக்கை 90 நாட்கள் ஜெபித்து வரவும்.அருகில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.முதல் நாளும் 90ஆவது நாளும்  மட்டும் வெற்றிலை, பாக்கு,அவல்,பழங்கள் ,பால்,பன்னீர்,பாயசம் வைத்து ஜெபிக்கவும்.மற்ற நாட்களில் முடிந்ததை அல்லது கல்கண்டும் பாலும் படைத்து ஜெபித்து வரவும்.


தவறான மனிதர்கள்,மந்திரவாதிகளின் தொடர்பு உங்கள் சூக்ஷும உடலில் கீழான சக்கரங்களை இயங்கச் செய்து உங்களை தவறான நடத்தை உள்ளவராக மாற்றிவிடும்.இந்த மந்திர ஜெபத்தின் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டு கொள்ளலாம்.

ஓம்||
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ||
ஸ்வப்நேஸ்வரி ||
ஹ்ரீம் ஹ்ரீம் க்ரீம் க்ரீம் க்ரீம் ||
ஓம் ||

இந்த மந்திரத்தை ஜெபித்து வரும் நாட்களில் அருகில் ஒரு பேப்பர் ,பேனா வைத்துக்கொள்ளவும்.இரவில் கனவில் ஏதேனும் தேர்வினை அம்பாள் கூறினால் அதை குறித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.இதனால் எந்தத்  தீங்கும் ஏற்படாது பயமின்றிச் செய்து பயன்  பெறுங்கள்.


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன்||

M.சூர்யா  -தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072

பயம்,கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்



நரசிம்ம மந்திரம்.

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து  "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"
என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர  பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.





துர்கா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்க ஹந்த்யை துர்க்காயை தே நம ஸ்வாஹா ||

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து  மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர  பயம் நீங்கித் தைரியமும்  நல்வாழவும் பெறுவார்கள்.

 
வாழ்க வையகம் || வாழ்கவளமுடன் ||

M.சூர்யா -  தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

தீர்க்கமான கண் பார்வை பெற,கண் நோய்கள் தீர


கீழே உள்ள சூர்ய மந்திரத்தை தினமும் அதிகாலையில் இளஞ்சூரியனைப் பார்த்தபடி 108 தடவை ஜெபித்து வர விரைவில் கண்ணாடி அணியும் தேவையின்றி நல்ல கண் பார்வை கிடைக்கும்.இதை செய்யும் பொழுது சூரிய ஒளி தொப்புளில் படுமாறு நின்று அல்லது அமர்ந்து ஜெபிக்க மிக நன்று.

ஓம் ஹ்ரீம் க்ருணிஹி சூர்ய ஆதித்யாய ஹ்ரீம் ஓம்||

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் || 

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Tuesday, 27 May 2014

சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்





மந்திரம்:-

ஓம் ஸ்ரீம் அகண்ட சௌபாக்ய தன சம்ருத்திம் தேஹி தேஹி நம:||

இந்த மந்திரத்தை ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணிமுதல் 7:00 மணி வரை துளசி மாலை கொண்டு 600 உரு ஜெபித்துப்  பின்னர் 90 நாட்களுக்குத் தினமும் குறைந்தது 27 தடவையாவது ஜெபித்து வரத் தொடர்தோல்விகள் ,தொழில் நஷ்டம், காரியத்தடைகள், வறுமை,கடன் நீங்கி வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர்ந்திட நல்வாய்ப்புகளையும் ,அதிர்ஷ்டங்களையும் அருளும்.


வாழ்க வையகம் ||  வாழ்கவளமுடன்||

M.சூர்யா
தச்சநல்லூர் ,திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Saturday, 17 May 2014

செல்வ விருத்தி தரும் ஸ்ரீ தனாகர்ஷண லக்ஷ்மி மந்திரம்






செல்வ விருத்திக்குக் கீழ்க்கண்ட லக்ஷ்மி மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன் கிழமை அன்று தொடங்கித் தொடர்ந்து 90 நாட்கள்  தினமும் பிரம்ம முஹுர்த்தத்தில் நெய் விளக்கேற்றி 108 தடவை மேற்குத் திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறைவான செல்வம் கிடைக்கும்.

கேரளா மற்றும் கல்கத்தாவில் உள்ள பிராமணர்களால் இம்முறை பின்பற்றப்படுகிறது.

மேலும் விளக்கேற்றும் நேரத்தில் ஊதுபத்தி ஏற்றி அதை வாசல் வரை கொண்டு வந்து,என் குலதெய்வத்துடன் ,கணபதி முதலான அனைத்து சுப தெய்வங்களும் என் இல்லத்தில் எழுந்தருளுங்கள் என வேண்டியபடி பின்னோக்கி நடந்து வந்து பின்னர் '' கணபதி முதலான அனைத்து சுப தெய்வங்களும் இத்தீபத்தில் எழுந்தருளவேண்டும்'' என வேண்டியபடியே விளக்கு ஏற்ற வேண்டும்.இப்படி ஏற்றி வர காரியத்தடை, பணம் இருப்பின்றி விரயமாதல் இவை நீங்கி ஐஸ்வர்யமான நல்வாழ்வு அமையும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது.

மந்திரம்:-
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||

வெண்ணிறப் பூக்களால் அர்ச்சித்தாலும் ,ஏலக்காய் வெல்லம் போட்டுக்  காய்ச்சிய பால் நைவேத்யம் செய்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும்.

லக்ஷ்மி யந்திரம் வாங்கி அதைப் பால்,பன்னீர்,துளசி இலை கலந்த நீர் ,  இவற்றால் கழுவிப் பின்னர் அந்த யந்திரத்தை விளக்கின் முன்புறம் வைத்துப் பூஜை முடிந்தபின் விளக்கின் கருக்கை யந்திரத்தின் மையத்தில் வைத்து வர  யந்திரத்திற்குச் சக்தி உண்டாகும்.90 நாட்கள் கழிந்தபின் யந்திரத்தை பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்கக் குறையாத செல்வம் கிடைக்கும். யந்திரத்தைப் பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்கும் போது ஏதேனும் மஞ்சள் பட்டுத் துணியில் சிறிது பன்னீர்  தெளித்து அதில் வைக்கவும்.



                          வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Friday, 9 May 2014

நோய் நீக்கும் மந்திரங்கள்

ஆரோக்ய ப்ரத ஸ்ரீ தன்வந்திரி மந்திரம் :-

வடக்கு நோக்கி அமர்ந்து முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு   கீழ்க்காணும் மந்திரத்தை 108 தடவை ஜெபித்துப் பின்னர் வலது கையின் நடு மூன்று விரல்களை  நீரைத்தொட்டபடி வைத்து  ''நான்  ஜெபித்த மந்திரத்தின் சக்தி இந்தத் தீர்த்தத்தில் இறங்கட்டும் '' என்று சொல்லிப் பின்னர்  தன்வந்திரி பகவானை வியாதிகள் குணமாக ,அதன் தாக்கம் குறைய வேண்டி அந்த நீரை அருந்தி வரவும்.கொஞ்சம் கொஞ்சமாக வியாதியும் அதன்  தாக்கமும் குறையும். முடிந்தால் அந்த நீரில் கொஞ்சம்  துளசி இலைகளைப் போட்டு ஜெபிக்க நல்ல பலன் தரும்.

ஓம் ஹ்ரீம் தன்வந்திரியே ஆரோக்ய சித்திம் ஹ்ரீம் நமஹ||



வாழ்க வையகம்||  வாழ்கவளமுடன்||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072/ 9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Thursday, 8 May 2014

சத்ரு ஜெய யந்த்ரம்



எதிரிகளால் தொல்லைகள் ,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் வரைந்து யந்திரத்தைப் பால் ,மஞ்சள் கலந்த நீர்,விபூதி கலந்த நீர்,பன்னீர் இவற்றால் கழுவி படுபக்ஷி இல்லாத நல்ல நாளில் அணிந்து குலதெய்வத்தையும், துர்கையையும்   வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
இதே யந்திரத்தை மோதிரத்தில் செதுக்கி அணிந்து கொள்ள  மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.

இதனால் எதிரிகளால் நமக்கு உண்டாகும் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.

இந்த யந்திரம் பற்றி தாந்திரீக சாஸ்திரத்தில் மிக உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.இது நம்மிடம் இருக்க எந்த மனிதராலும் ,தெய்வ சக்திகளாலும் நமக்கு கெடுதல் செய்ய முடியாது.

பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.


பூஜிக்கப்பட்ட  யந்திரம், ரக்ஷை, குங்கும பிரசாதம் தேவைக்கு தொடர்பு கொள்க


வாழ்க வையகம் || வாழ்கவளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Tuesday, 6 May 2014

குரு வந்தனம் :-




இது ஒரு உபநிஷத சுலோகம்.முற்காலத்தில் குருகுலத்தில் எந்த ஒரு போதனை தொடங்கும் போதும் சீடர்கள் இந்த ஸ்லோகத்தைச்  ஜெபித்த பின்னரே தொடங்கப்படும்.

வேதம் ,மகான்கள் எழுதிய நூல்கள்,உபநிஷத் போன்ற தெய்வீக நூல்களைப் படிக்கத் துவங்கும் போது இந்த ஸ்லோகத்தை ஜெபித்து அந்த நூலை எழுதிய மகானை, ரிஷியை மனதார வணங்கி அவரின் திருவடிகளை சிரசின் மேல் தியானித்துப் பின்னர் படிக்கத் துவங்கினால் அந்த நூலை இயற்றிய ரிஷி,ஞானி என்ன பொருளில் அதை எழுதினாரோ அந்த மெய்ப்பொருள் நமக்கு விளங்கும்.
தியானம் செய்யத் துவங்கும் முன்னரும் அவரவர் குருவை வணங்கி இதை ஜெபித்துப் பின் தியானம் செய்ய தியானம் நன்கு சித்திக்கும்.

சுலோகம்:-

ஓம் சஹனா வவது||
சஹனௌ புனக்து ||
சஹ வீர்யம் கரவாவஹை ||
தேஜஸ்வி நாவதீத மஸ்து  ||
மா வித் விஷாவஹை ||

பொருள்:-நம்மை இறைவன் பாதுகாப்பானாக||
நாம் மகிழ்ச்சியாய் இருக்கவும்,உழைக்கவும் இறைவன் அருள்வானாக |
நமது கல்வி நிறைவானதாகவும் பலனளிப்பதாகவும் அமைய இறைவன் அருள்வானாக  ||
நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க அருள்வானாக ||

தலை உச்சியில்(சஹஸ்ராரத்தில்) கீழ்க்கண்ட முத்திரையைப்  போட்டபடி  இந்த மந்திரத்தை ஜெபிக்க பன்மடங்கு பலன் தரும்.



வாழ்க வையகம் ||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 5 May 2014

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரம்






ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி  மந்திரம் வாராஹி மந்திரங்களில் சிரேஷ்டமான ஒரு மந்திரம்.
இந்த மந்திரத்தை சித்தி செய்து கொண்டால் ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி நம்  கனவில் வந்து நம் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாள்.

ஜெபமுறை :
ஓம் அஸ்ய ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரஸ்ய| ஈஸ்வர ரிஷிஹி |ஜகதீச்சந்தஹ |ஸ்வப்ன வாராஹி தேவதா ||ஓம் பீஜம் |ஹ்ரீம்  சக்தி|ட்டஹ ட்டஹ   கீலகம் ||

மூல மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் நமோ  வாராஹி || அகோரே ஸ்வப்னம் தர்ஷய ட்டஹ ட்டஹ ஸ்வாஹா ||

இதை வளர்பிறை பஞ்சமி திதி அன்றோ ,வளர்பிறை அஷ்டமி அன்றோ ஜெபிக்க ஆரம்பிக்க நன்று .
தினம் 1100 உரு வீதம் தொடர்ந்து 11 நாட்கள் படுக்கையில் அமர்ந்தவாறே ஜெபித்து அங்கேயே உறங்கி விட வேண்டும்.ஜெபித்த இடத்தில் மாதுளம்பழம்,செவ்வாழைப்பழம்,வெண்ணை எடுக்காத  தயிர் சாதம் நிவேதனம் செய்யலாம்.

வாழ்க வளமுடன் || வாழ்க வையகம் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
 ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 14 April 2014

நன்றாக உறக்கம் வர:-





இரவில் சரியாகத் தூங்கினால் மட்டுமே பகலில் நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் திறம்படச் செய்யவோ,சுறுசுறுப்புடன் இயங்கவோ முடியும் .

மன வேதனை,ஏதேனும் ஒன்றைப்பற்றித் தொடர்ந்து சிந்தித்தல், கவலைப்படுதல்,மருந்துகள்  தொடர்ந்து சாப்பிடுதல் போன்ற பல காரணங்களால் தூக்கமின்றித்  தவிப்பார்கள்.

தூங்கும் முன் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை ஜெபித்துப் பால் அல்லது தண்ணீர் அருந்தி பின் தூங்க நன்கு உறக்கம் வரும்.

 சுத்தே சுத்தே மகாயோகினி மகாநித்ரே ஸ்வாஹா||


மேலும் உறங்கும் முன் இரு காலின் பெருவிரல்களை மென்மையாக பிடித்து விட்டு பின் தூங்க நல்ல தூக்கம் வரும்.

வாழ்க வையகம் ||       வாழ்க வளமுடன் ||

M.சூர்யா 
தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072 / 9788493072

Monday, 7 April 2014

உடல்,பிராணன்,மனம்,பொருளாதாரம்,ஆன்மிகம் இவற்றில் சிறந்து விளங்க உதவும் பயிற்சிகள்.

உடல்,பிராணன்,மனம்,பொருளாதாரம்,ஆன்மிகம் இவற்றில் சிறந்து விளங்க உதவும் பயிற்சிகள்.


உடல் 

பசி,தூக்கம்,காமம் இவற்றைச் சரியாகக் கையாளும் முறைகள்.
ஆரோக்கியமாய் வாழும் வழிகள் ,நமக்கும் பிறருக்கும் நோய் நீக்கும் வழிமுறைகள்.

வாழ்வில் வெற்றி பெற விரும்புவோர் குறைவாகச் சாப்பிடுதல்,குறைவாகத் தூங்குதல்,குறைவாகப் பேசுதல் இவற்றைக் கைக்கொள்ள வேண்டும்.அதற்கு என்ன செய்யவேண்டும்.

சிறு வயது முதலே காமம் தவறு என்று கற்பிக்கப்படுகிறது ஆனால் தினம் காமம் சார்ந்த அதீத ஆசைகள் எண்ணங்கள் தொந்தரவு செய்கின்றன.சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்புப் பயிற்சிகள். 

உடல் பருமன் குறைய ,அறிவார்ந்த, நீளாயுள் உள்ள விரும்பிய குழந்தையைப் பெற்றுக்கொள்ள,கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள் மந்திரங்கள் , கணவன் மனைவிக்குள் உள்ள மனம் மற்றும் செக்சுவல் பிரச்சனை தீர உதவும் நுட்பங்கள்.      



பிராணன் 

மற்ற எந்த வழியில் செலவாகும் ஜீவ சக்தியை விட நமது சுவாசத்தின் மூலமாகவே அதிகமான உயிர்சக்தி வீணாகிறது.அதை எப்படி உடல்,மன,ஆன்ம சக்தியை பெருக்க,ஞாபக சக்தியை அதிகரிக்க,நோய் நீங்கிய நல்வாழ்வு வாழப் பயன்படுத்தும் முறைகள்.     


மனம் 

ஆன்மாவில் கர்ம வினையின் பதிவுகள் இருந்தாலும் மனம் தான் அந்த கர்ம வினைகளை எண்ணமாக,சொல்லாக,செயலாக செயல்பட வைத்து அனுபவிக்க வைக்கிறது.
கர்ம வினைகளைக் கழிக்க, அவற்றில் இருந்து விடுபட உதவும் பயிற்சிகள்.
மனதின் சக்தியைப் பல பயனுள்ள,ஆக்கபூர்வ வழிகளில்  வழிகளில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறும் முறைகள்.




பொருளாதாரம் 

நம் தேவைகள் நிறைவேறத் தேவையான பணம் (பொருளாதாரம்)  தடையின்றிக் கிடைத்திட,வரும் பணம் அனைத்தும் செலவாகி தீர்ந்துவிடும் வழிகளைச் சரிசெய்யும் தந்திரங்கள்,கடன் தீரக் ,கொடுத்த பணம் வசூலாக,தொழில் ,பணிசெய்யும் இடங்களில் உள்ள தீய அதிர்வுகளை நீக்க ,தொழிலில் ,வேலையில் உயரப் பின்பற்ற வேண்டிய நுட்பங்கள்,   




ஆன்மிகம்

வாழ்வில் மற்றும் ஆன்மீகத்தில் உயர நம் ஜாதகப்படி  வழிபட வேண்டிய தெய்வங்கள்,அந்த தெய்வத்தின் மந்திரங்களைச் சித்தி செய்து பயனடையும் முறைகள்,எந்த பிரச்சனையையும் தெய்வஉபாசனை,பஞ்சபக்ஷி சாஸ்திரம்,சர சாஸ்திரம் (சூரியகலை,சந்திரகலை ) இவற்றைப் பயன்படுத்தி  எவ்வாறு தீர்ப்பது என்ற நுட்பங்கள்,குழந்தைகள,மனைவி,கணவன் என குடும்பத்தில் நிம்மதியாக வளமாக வாழ வழிமுறைகள், தெய்வங்களின் சக்தி வாழ்வில் கர்மாக்களை தீர்க்க எந்த அளவு உதவும்,அதை விடப் பெரிய கர்மாக்களை கடக்க உதவும் தவ முறைகள் , சக்திமிக்க தியான முறைகள்.தீய பழக்கங்கள்,தவறான தொடர்புகள் ,குடிப்பழக்கம் இவற்றில் இருந்து விடுபட.ரெய்கி மற்றும் சித்தர்கள் வழியில் மருந்தின்றி குணமாக்கும் முறை,இந்து ,கிறிஸ்தவ,இஸ்லாமிய,பௌத்த மத தியான முறைகள் மந்திர ஜெப முறைகள்.


காமம் முதல்  கடவுள் வரை எது பற்றியும் தெளிவு பெறவும் .பயிற்சிகளுக்கும் தொடர்பு கொள்க


வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா
திருநெல்வேலி 
9442193072  /9788493072
ms.spiritual1@gmail.com

சுகப் பிரசவத்திற்கு மந்திரம்






விளக்கேற்றி அமர்ந்து கீழ்க்காணும் மந்திரத்தை குறைந்தது 27 தடவை ஜெபித்து வர சுகப்பிரசவம் ஆகும்.ஜெபித்து முடித்தபின் விளக்கின் மேல் வலது கையை மூன்று முறை சுற்றி அதே கைகொண்டு வயிற்றையும் மூன்று முறை சுற்றித் தடவவும்.

மந்திரம்:-

1.ஹே | சங்கர ஸ்மரஹர பிரமதாதீ நாத|
மன்னாத சாம்ப சசிசூடஹர த்ரிசூலினி ||
சம்போ சுகப்ரசவக்ருத் பாவமே தயாசோ|
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே ||
மாத்ரு பூதேஸ்வரோ தேவோ பக்தானா மிஷ்டதாயக|
சுகந்தி குந்தளா நாவஹ  சுகப்ரசவ ம்ருச்சது||

2.ஹிமவத் உத்தரே பார்ஸ்வே சுரதா நாம யக்ஷனி
தஸ்ய ஸ்மரண மாத்ரேன விசல்யா கர்ப்பிணி பவேத்|


3.ஹிமவத் உத்தரே பார்ஸ்வே சுரசா நாம யக்ஷணி 
தஸ்ய நூபுர சப்தேன விசல்யா பவது கர்ப்பிணீ ஸ்வாஹா  



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072

Tuesday, 1 April 2014

கணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-




இன்றைய நாட்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றி கூட்டுக்குடும்பங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இருந்தாலும், தனிக்குடித்தனம் இருக்கும் தம்பதிகளிலும்  பெரும்பாலும் அன்பும், இணக்கமும் கொண்டு வாழ்பவர்கள் குறைவே.

இதை அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து ''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ'' என 3 தடவை ஜெபித்து , ''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ'' என 3 தடவை ஜெபித்து பின்னர் கீழ்க்கண்ட மந்திரங்களைக்  குறைந்தது 27 தடவை குங்குமத்தில் ஜெபித்து அணிந்து வர தம்பதிகளிடையே அன்பும்,இணக்கமும் உண்டாகும்.கணவன் மனைவிக்குள் உள்ள பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் SEXUAL MISUNDERSTANDING தான் காரணம்.இந்த மந்திரங்கள் தம்பதிகளிடையே உள்ள SEXUAL MISUNDERSTANDING உட்பட நீக்கி அன்யோன்யம் நல்கும்..

1.அர்த்தநாரீஸ்வர மந்திரம் 

ஓம் |
ஹும் ஜும் சஹ |
அர்த்தநாரீஸ்வர ரூபே|
ஹ்ரீம் ஸ்வாஹா ||

இந்த மந்திரத்தை ஆண் ,பெண் யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.


பெண்கள் ஜெபிக்க  வேண்டிய மந்திரம் :-

ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பதிம் மே வசமானய நமஹ |

ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||

ஆண்கள் ஜெபிக்க  வேண்டிய மந்திரம் :-

ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பத்னிம் மே வசமானய நமஹ |

ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன்||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 24 February 2014

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற பயிற்சிகள்




எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.

நாடிசுத்தி :-

உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.

1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்கு துவாரத்தை அடைத்து இடது மூக்கு துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்கு துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

இப்படி செய்தால் ஒரு தடவை(சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதை காலை,மதியம் உணவுக்கு முன்,மாலையிலும் செய்து வர நல்ல நினைவாற்றல் ,மன ஒருமைப்பாடு ஏற்படும்.

பிராணயாமம்:-

இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக  மூச்சை உள்ளிழுத்து பின்னர் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.

இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளை பெரிதாக்கி சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதை சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.தேர்வுக்கு முன் ,நேர்முகத் தேர்வுக்குக்  காத்திருக்கும் போது சில தடவைகள் செய்ய பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய  மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.

சீத்காரி :-

சீதளம் என்றால் குளிர்ச்சி   எனப்பொருள்.

பற்களைச்  சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.
இரவில் முறையாக உறங்காமல் அதிக நேரம் கண்விழித்துப் படித்தால்  கண் எரிச்சல்,உடற்சூடு,தலைசுற்றல் உண்டாகும்.தவிர்க்க முடியாத சூழல்களில் இந்தப் பயிற்சியை இடையிடையே செய்து படிக்க உறக்கம் வராது அதோடு நல்ல சுறுசுறுப்பும் சக்தியும் உண்டாகும்.

தேர்வுக்கு முன் தேர்வு அறையில் செய்ய வேண்டிய பயிற்சி:-

தேர்வு தொடங்கும் முன் வினாத்தாள் கொடுத்ததும் கீழ்வரும் பயிற்சியைச் செய்ய மனதில் பயம்,பதற்றம் நீங்கி தெளிவு உண்டாகும் அதன் பின் விடைத்தாளில் பதில் எழுத ஆரம்பியுங்கள்.

பயிற்சி:-

மெல்ல மூச்சை உள்ளிழுத்து அடக்காமல் உடனே மெல்ல மூச்சை வெளிவிட்டு பின் 3 முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கி பின்னர் உள்மூச்சு இழுக்க வேண்டும்.இவ்வாறு ஒரு வெளிமூச்கிக்கும் உள்மூச்சுக்கும் இடையே 3 முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கி பின் உள்ளிழுக்கும் இந்த பயிற்சியை குறைந்தது 10 தடவை செய்து வர மனம் அமைதியாகும்.ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தெரிந்தும் நினைவுக்கு வராத சமயத்திலும் இதை குறைந்தது 3லிருந்து 5 தடவை செய்து பின் யோசிக்க விடை மனதில் உதிக்கும்.

முக்கிய குறிப்பு :-
நம் சரீரத்தில் சுவாசம் எப்பொழுதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வலது பக்கம் ,இடது பக்கம் என மாறி மாறி ஏதேனும் ஒரு மூக்குத் துவாரம் வழியாக இயங்கும்.

வலது பக்கம் சுவாசம் ஓடும் போது கடினமான கணிதம்(MATHS) , அறிவியல் (SCIENCE),புள்ளியியல்(STATISTICS) போன்ற பாடங்களைப் படிக்க எளிதில் விளங்கும்,மனதில் பதியும். வலதுபக்கம் சுவாசம் ஓடாத நேரங்களில் வலது கால் இடது கால் இருக்கும் படி போட்டுகொண்டு தரையில் அமர்ந்தோ,சேரில் அமர்ந்தோ படித்தாலும் அதே பலன் உண்டாகும்.

வல்லாரை லேகியம் சிறிதளவு தினமும் சாப்பிட்டு வர நல்ல நினைவாற்றல் உண்டாகும்.




வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற பாகம் 2


எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.

ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்:

நம்மில் பலரும் அனேக விஷயங்கள்,நூல்களை படிக்கிறோம் ஆனால் மிகச்சிலரே படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கிறோம்.கீழ்க்கண்ட மந்திரங்களை ஜெபித்து வருவதின் மூலம் நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

ஸ்ரீ சரஸ்வதி மாலா மந்திரம் :-

ஓம்|ஆம்| ஐம் சரஸ்வதி|க்லீம் சரஸ்வதி|சௌம் சரஸ்வதி|
வேணுகாணி |வித்யாவதி |பாலமோகினி|பக்தரட்சகி|
வித்தக சக்தி|வேதபூஷணி |
உருவாய் அருவாய் உள்ளே இரு இரு|
சிந்தையில் நின்று செந்தமிழ் ஓது|
மனதில் இருந்து மாமறை ஓது |
கருத்தில் இருந்து கலை பல ஓது|
நாவில் இருந்து நானே நீயாய்
சொல்லும் பொருளாய் வல்லியே வா வா|
சொல்லால் உலகம் எல்லாம் வணங்க|
நில்லு நில்லு என் நினைவினில் நில்லு|
வெல்லு வெல்லு வல்லோர் வணங்க|
மானமும் கல்வியும் மோனமும் தா தா |
அஷ்டலக்ஷ்மியும் அடியேனைக் காக்க|
இஷ்ட சக்தியாய் இருந்து நீ காக்க|
வா வா தேவி வரம் தர வா வா|
காவாய் காவாய் கடாட்சம் குரு குரு||

இதனை தினமும் 3 அல்லது 11 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்|

ஓம்| ஐம்|வத வத வாக்வாதினி நமஹ|

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

ஓம்|ஐம் க்லீம் சௌம் பாலா திரிபுரசுந்தரி தேவி நமஹ ||

அல்லது

ஓம்|ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்| பாலா திரிபுரே மம முக வாக் சித்தம் குரு குரு ஸ்வாஹா ||

இதனை தினமும் குறைந்தது 27 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.





வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற பாகம் 1:-




ஆண்டு இறுதித் தேர்வு நெருங்கும் சமயம் மாணவ,மாணவிகள் மிகுந்த மன நெருக்கடிக்குள் தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் இந்தப் பதிவு அவசியம் தேவையானதாக இருக்கும் என்று பகிர்கிறேன்.

எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.


நல்ல நினைவாற்றலுக்கு மந்திர சாஸ்திரம் கூறும் சில வழிமுறைகளை விளக்குகிறேன்.பின்பற்றி பலன் பெறுங்கள்.

1.ஸ்ரீ ஹயக்ரீவர் சுலோகம்,காயத்ரி,மூல மந்திரம்:-
கீழ்க்காணும் சுலோகம்,மூலமந்திரம்,காயத்ரி அனைத்தையுமோ அல்லது இயன்றதையோ ஜெபித்து வர கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

ஸ்ரீ ஹயக்ரீவர் சுலோகம்:

ஓம் ருக்யஜுர் சாமரூபாய |
வேதாஹரண கர்மணே |
பிரணவோத்கீத வசசே |
மஹா அச்வ சிரசே நமஹா ||

ஓம் உத்கீத பிரணவோத்கீத |
சர்வ வாகீச்வரேச்வரஹ |
சர்வ வேத மயா சிந்த்ய |
சர்வம் போதய போதய ||

ஓம் விச்வோத் தீர்ணஸ்வரூபாய |
சின்மயானந்த ரூபிணே |
துப்யம் நமோ ஹயக்ரீவ |
வித்யா ராஜாய விஷ்ணவே ||

ஓம் ஆசக்ராய விசக்ராய |
ஸுசக்ராய தீசக்ரிணே |
ஜ்வாலா சக்ராய ச இத்யுக்த்வா |
மஹா சக்ராய தே நமஹா ||

இதைப் படிப்போர் நல்ல கல்வியும்,செல்வமும்,ஞானமும் பெறுவார்கள்  என ஸ்ரீ  விஷ்ணு  புராணம்  குறிப்பிடுகிறது.
   
ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரி :-

ஓம் ஸ்ரீ வாகீச்வராய வித்மஹே |
ஹயக்ரீவாய தீமஹி |
தன்னோ ஹம்சஹ ப்ரசோதயாத் ||

இந்த ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரி ஜெபம் சகல கலைகளிலும் தேர்ச்சியைத் தரும்.

ஸ்ரீ ஹயக்ரீவர் மூலமந்திரம் :-

1. ஓம் ஞானானந்த மயம் தேவம்|
    நிர்மலம் ஸ்படிகாக்ருதிம் |
   ஆதாரம் சர்வ வித்யானாம் |
    ஹயக்ரீவம் உபாஸ்மஹே ||

2. ஓம் ஐம் ஹ்ரீம் ஹ்ரசௌம் | ஓம் நமோ பகவதே ஹயக்ரீவாய விஷ்ணவே | மஹ்யம் மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ப்ரயச்ச ஸ்வாஹா ||

3. ஓம் ஐம் ஐம் | ஓம் ஹ்ராம் ஹ்ரௌம் ஹயக்ரீவாய ஸ்வாஹா ||


மேற்கண்ட மந்திரங்கள் ஜெபிக்க பெரியதாகவும் கடினமாகவும் இருப்பதாகத் தோன்றினால் ''ஓம் ஹ்ரசௌம் ஹயக்ரீவாய நமஹ '' என்று ஜெபித்து வரலாம் .

சிறப்பான முறையில் பலன் பெற விரும்புவோர் ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜெபித்து ஹோமம் செய்து ரஹஸ்ய குங்கும அர்ச்சனை செய்த குங்குமத்தை அணிவதன் மூலமோ, ரக்ஷை அணிந்தோ அல்லது அஞ்சனம் செய்து திலகமாக அணிந்து வர அல்லது வகிட்டில் வைத்து வர  விரைவான் நிறைவான பலன் பெறலாம் .

ஏதேனும் ஒரு வளர்பிறை புதன் கிழமை அன்று நவக்ரஹங்களில் புதனுக்கு அல்லது ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கோ பச்சைப் பட்டு சார்த்தி ஒரு பச்சை நிற துண்டு வாங்கி அதை ஸ்ரீ மகாவிஷ்ணு அல்லது ஸ்ரீ புதபகவான் பாதத்தில் வைத்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வாங்கி பின்னர் அதில் சிறிது பன்னீர் தெளித்து புதன் எந்திரம் அதில் கைகொண்டு வரைந்து  அதில் ஈசான்ய திசை  (வடகிழக்கு) நோக்கி அமர்ந்து படித்து வர நல்ல நினைவாற்றலும்,கல்வியில் பிரியமும்,சிறந்த தேர்ச்சியும் உண்டாகும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com