Monday, 22 December 2014

பயம்,கோபம், தீய பழக்கங்கள் நீங்க




அதீத கோபம் நீங்க :-

ஷாந்தே ப்ரஷாந்தே சர்வ  க்ரோத உபஷமணி  ஸ்வாஹா||

இந்த மந்திரத்தை வெள்ளைத்துணி விரித்து வடக்கு நோக்கி அமர்ந்து மாலை வேளையில் ஜெபித்து வர அதீத கோப உணர்ச்சி நீங்கி அமைதி உண்டாகும்.



அதீத பயம் நீங்க :-
ஷாந்தே ப்ரஷாந்தே சர்வ பய  உபஷமணி  ஸ்வாஹா|| 

செவ்வாய்க்கிழமை அன்று இந்த மந்திரத்தைச் சிகப்புத்துணி  விரித்து  வடக்கு நோக்கி அமர்ந்து மாலை வேளையில் ஜெபித்து வர அதீத பயம்,கோழை மனப்பான்மை நீங்கி மனதைரியம் உண்டாகும்.


தீய பழக்கங்களில் இருந்து விடுபட:-

ஷாந்தே ப்ரஷாந்தே சர்வ ------------உபஷமணி  ஸ்வாஹா||

தீய பழக்கங்களில் இருந்து விடுபட விரும்புவோர் கோடிட்ட இடத்தில் தம்மிடம் என்ன கெட்ட பழக்கம் உள்ளதோ அதைக் குறிப்பிட்டு ஜெபிக்க விடுபடலாம்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

செல்வவளம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரப் பிரயோகம்





ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையை மெழுகிச் சுத்தம் செய்து கொள்ளவும்.மாம்பலகை,வாழைஇலை அல்லது செந்தாமரை இலை போட்டு அதில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் கொஞ்சம் பச்சரிசி போட்டு பரப்பவும்.ஒரு அகல் விளக்கு அல்லது வெள்ளி விளக்கில் நல்லெண்ணெய் மற்றும் பசுநெய்யைக் கலந்து ஊற்றி மஞ்சள்துணியைப் பன்னீரில் நனைத்துக் காயவைத்துத் திரியாக்கி அதனைக் கொண்டு விளக்கேற்றவும்.அதிகாலையிலும்,மாலை நேரத்திலும் விளக்கு  ஏற்றி அந்த விளக்கை வலது கையிலும்,ஊதுபத்தி ஏற்றி அதை இடது கையிலும் பிடித்துக் கொண்டு வாசல் வரை எடுத்துச் சென்று "ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி வந்து எனது இல்லத்தில் குடியிருந்து அஷ்ட ஐஸ்வர்யம் நிறைந்த வாழ்வு தந்தருள வேண்டும் " என வேண்டிப்  பின்னோக்கி நடந்து சென்று அந்த விளக்கைப் பூஜை அறையில் மஞ்சள் வட்டத்தின் நடுவே பரப்பிய பச்சரிசி மீது கிழக்கு அல்லது தெற்கு முகமாக வைத்து நீங்கள் வடக்கு அல்லது மேற்கு முகமாக விளக்கை நோக்கி அமரவும்.                 

பின்னர் ஓம் ஸ்ரீ வாமேச ரிஷியே நமஹ  என ஒரு தடவை சொல்லிப் பின்னர் தினமும் கீழ்க்கண்ட மந்திரத்தைத் தினமும் குறைந்தது 108 தடவை அல்லது அதற்கும் அதிகமாக ஜெபித்து வரவும்.இந்தப் பிரயோகத்தை தொடங்கும் முதல் நாள் அன்றும் ,பௌர்ணமி அன்றும் கற்கண்டுப் பாயசம் அல்லது பால்பாயசம் நைவேத்தியம் செய்யவும்.பௌர்ணமி அன்று மட்டும் நிலவைப் பார்த்தபடியே மந்திரம் ஜெபிக்க நிறைந்த செல்வத்தைத் தரும். படைத்த நைவேத்யத்தை முதலில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் அல்லது மந்திரம் ஜெபம் செய்தவர் சாப்பிடலாம்.அதன் பிறகே மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

மந்திரம் :-

ஓம் ஸ்ரீம்  ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி |ஏஹியேஹி  ஏஹியேஹி சர்வ சௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா


உத்தரவாதமான  பலனைத்தரும் இந்தப் பூஜையைச் செய்து எல்லா வளமும், கூடிய நல்வாழ்வு வாழ ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

suryatamil1.blogspot.com
yogisway.blogspot.com

Sunday, 21 December 2014

சனிப்பெயர்ச்சி கெடுபலன்கள் குறைய ஸ்ரீ காலபைரவர் வழிபாடு






ஹனுமான்,விநாயகர் மற்றும் சிவபெருமான் வழிபாடு சனிக்கிரகப் பாதிப்பை ஓரளவிற்கே குறைக்கும். ஆனால் ஸ்ரீ காலபைரவரின் உடலில் நவக்கிரகங்களும் வாசம் செய்வதால் அவரது வழிபாட்டால் சனிக்கிரகக் கெடுபலன்கள் பெருமளவில் குறையும் மட்டுமின்றி மற்ற கிரகங்களால் ஏற்படும்  பாதிப்பையும் குறைத்து நன்மை தரும்.சனீஸ்வரபகவானின் குரு   ஸ்ரீ காலபைரவர் ஆவார். 

ஸ்ரீ பைரவரே தாந்த்ரீகத்தின் அதிபதி தெய்வமாவார்.பெரும்பாலான  தாந்த்ரீக நூல்கள் ஸ்ரீ காலபைரவபெருமான் அன்னை  ஸ்ரீ பைரவி தேவிக்கு உபதேசம் செய்யும் விதமாகவே உள்ளன.இவரை வழிபடுபவர்களை எந்த துர்மந்திரசக்தியும் பாதிக்காது.மந்திர சாஸ்திரத்தில் பைரவருக்கு 2 க்கு மேற்பட்ட சஹஸ்ரநாம ஸ்தோத்ரங்கள் உள்ளன.அவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது காலபைரவ ஸ்தோத்ரம் ஜெபித்து வரலாம்.


ஸ்ரீ காலபைரவர் மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபதுத்தாரணாய குரு குரு வடுகாய ஹ்ரீம் ||

என்ற மந்திரத்தை சிவாலயம் அல்லது வீட்டில் வடக்கு நோக்கி அமர்ந்து   ஜெபித்து வரச் சனிக்கிரகப் பாதிப்புகள் குறையும்.மாலை 4:30 முதல்  6 மணிக்குள் ஜெபித்து வர பலன் அதிகம்.

ஜப எண்ணிக்கை :குறைந்தது 27 எண்ணிக்கை அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.

தேய்பிறை அஷ்டமி ஸ்ரீ காலபைரவருக்கு உகந்த விசேஷமான நாள்.அன்று சிவாலயத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவருக்கு மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் வேளையில் ஏதேனும் ஒரு பூஜைப்பொருள் (பூ,பழங்கள்,அபிஷேகத்திற்கு பால்,பன்னீர் ) வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்ள நற்பலன்கள் உண்டாகும்.

ஸ்ரீ பைரவரின் 1008 நாமங்களைச் சொல்லி வழிபட்ட பலனைத் தரும் சக்தி வாய்ந்த 22 திருநாமங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.மந்திர ஜெபத்துடன் இந்த நாமங்களையும் கூறி வணங்கி வரக் கஷ்டங்கள் நீங்கிய நிறைவான வாழ்வு கிட்டும்.  

ஸ்ரீ  கால பைரவரின் 22 திருநாமங்கள் :-

ஓம் வடுகாய நமஹ
ஓம் ஸார பூதாய நமஹ
ஓம் த்ரைலோக்ய நாத நாதாய நமஹ
ஓம்  நாத நாதாய நமஹ
ஓம் வடுக நாதாய நமஹ
ஓம் காளிகா நாதாய நமஹ
ஓம் காமதாய நமஹ
ஓம் லோகரக்ஷகாய நமஹ
ஓம் பூதநாதாய நமஹ
ஓம் கணச்ரேஷ்டாய நமஹ
ஓம் வீரவந்த்யாய நமஹ
ஓம் தயாநிதயே நமஹ
ஓம் கபாலினே நமஹ
ஓம் குண்டலினே நமஹ
ஓம் பீமாய நமஹ
ஓம் பைரவாய நமஹ
ஓம் பீமவிக்ரமாய நமஹ
ஓம் வ்யாளயஜ்ஞோபவீதினே நமஹ
ஓம் கவசினே நமஹ
ஓம் சூலினே நமஹ
ஓம் சூராய நமஹ
ஓம் சிவப்ரியாய நமஹ


வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர் திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

suryatamil1.blogspot.com
yogisway.blogspot.com


Monday, 15 December 2014

ஆன்மீக ரகசியங்கள்:பாகம் 8 (தாந்த்ரீகப் பரிகாரங்கள் )




1.தினமும்  சூர்யோதய வேளையில் சூரியனை நோக்கி நின்று 11 தடவை நீரால் தர்ப்பணம் கொடுக்க சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகி பெரிய மனிதர் என புகழும் படி கௌரவமான வாழ்வு அமையும்.ஒவ்வொரு முறை தர்ப்பணம்  கொடுக்கும் பொழுதும்  "ஓம் க்ருனிஹி சூர்யஆதித்யாய சர்வ தோஷ நிவாரணாய நமஹ"  என்று ஜெபித்தபடியே கொடுக்கவும்.

2.பித்ரு தோஷம் தீர :-

                     ஆள் நடமாட்டம் இல்லாத தனி இடத்தில் அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று  காலையில் தெற்கு நோக்கி நின்று 5 ஊதுவத்தி ஏற்றி முன்னோர்களை வழிபட்டு வரப் பித்ரு தோஷ கெடுபலன்கள்  நீங்கி சுபகாரியத்தடைகள் நிவர்த்தியாகி நலம் உண்டாகும்.மேலும்,உடல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறையத் துவங்கும்.


3. சூரியன் மறையும் வேளையில் ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீர் நிரப்பி அதன் அருகில் விளக்கேற்ற வீட்டில்,உடலில் ஆகாச மற்றும் ஜல பூத தோஷங்கள் இருந்தால் அவை நிவர்த்தியாகும்.

 
வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள்:7 (தாந்த்ரீகப் பரிகாரங்கள் )

 
              


நாம் நல்வாழ்விற்காக என்னதான் இறைவழிபாடுகள் செய்தாலும் ஆலயம் சென்றாலும் நம்மையும் நம் இருப்பிடத்தையும் சுற்றியுள்ள விஷயங்களில் ரிஷிமார்கள் கூறிய தாந்த்ரீக விதிகளின் படிச் சில சிறிய மாறுதல்களைச் செய்வதன் மூலம் பெரும் நன்மைகளை அடையலாம்.


சில பரிகாரங்கள் சாதாரணமாக இருக்கலாம் நாம் அவற்றை உதாசீனப்படுத்தி கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டு பெரும் துன்பத்தில்,வியாதியில்  அகப்பட்டு அதற்காகப் பெருமளவில் வைத்தியம்,பூஜை,யாகம் என்று பெரும் பணம் செலவழித்துக் கொண்டிருப்பபோம்.இப்போது நாம் கீழே பதிவிட்டுள்ள தாந்த்ரீக பரிகாரங்கள் நம் நலவாழ்வில் பெரும் பல அவசியமான  மாற்றங்களைச் செய்யவல்லது.

1.வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில்  வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப்  பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை  ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

2. வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

3.கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல்  கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப்  பரிகாரம்:-
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று .


4.சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால்  வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.    
இதற்குப்  பரிகாரம்:-

ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு  "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய" என  3 தடவை  ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Saturday, 13 December 2014

ஜோதிடக்கலையில் புகழ் பெற ஸ்ரீ வாக்வாதினி மந்திரப் பிரயோகம்





ஜோதிடம் ஒரு கடல்.பல்வேறு ரிஷிமார்களும்,சித்தர்பெருமக்களும் இயற்றிய பல்வேறு ஜோதிட நூல்கள் போக அவ்வப்போது தோன்றிய பல அறிஞர் பெருமக்களும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து ஜோதிடக் கலைக்குப் பலம் சேர்த்து வருகின்றனர். நினைவாற்றல், சமயோசித புத்தி,மந்திரசித்தி இருந்தாலும் வாக்குப்பலிதம் இல்லையென்றால் ஜோதிடக்கலையில் சிறக்க முடியாது.

சிலருக்கு ஜோதிடம் கற்க விருப்பம் இருக்கும் அதில் உள்ள பல்வேறு சூத்திரங்கள் ,கணிதங்களை மனதில் இருத்திக்கொள்ள முடியாமல் இருப்பார்கள். அவர்கள் இம்மந்திரத்தை ஜபித்து வர ஜோதிடம் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.

சரஸ்வதி மந்திரங்கள் பல இருந்தாலும்  இந்த வாக்வாதினி மந்திரம் குறிப்பாக ஜோதிடக் கலையில் சிறந்து,புகழுடன் விளங்கப் பேருதவியாக இருக்கும்.

ஜோதிடம் சொல்லும் போது, அதிகப்பணம் சம்பாதிக்க்கும் நோக்கில் பொய் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து அறவே நிறுத்திவிட வேண்டும். ஏனென்றால் மந்திரம் சித்தியாக ஆக படிப்படியாகப் புகழ்,தேஜஸ், வாக்பலிதம்,கௌரவம் எல்லாம் கூடிய வளவாழ்வு அமையும்.எனவே,பொய்களைத் தவிர்த்து ஜோதிடம் சொல்லி வர மந்திரசித்தியின் காரணமாக ஜோதிடத்தில் நிறைந்த புகழுடன் விளங்கலாம்.

ஜெப விதிமுறைகள்:-

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம்:- 

ஓம் ஐம் நமோ பிரம்மாணி பிரம்மபுத்ரி|
வத வத வாசா சித்திம் குரு குரு ஸ்வாஹா ||       


குறிப்பு:- மந்திரத்தில் வரும் வாசா என்ற இடத்தில் உள்ள சா என்பதை சந்துரு (CHA) என்ற பெயரில் வரும் உச்சரிப்பில் உச்சரிக்கவும்.அதாவது சா என்ற எழுத்தை அழுத்தமாக உச்சரிக்கவும். 


வளர்பிறையில் உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகப் பார்த்து மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.அதிகாலை  3:50 முதல் 5:50 க்குள் ஜெபிக்க நிறைவான பலன் உண்டாகும்.கிழக்கு நோக்கி அமர்ந்து 1008 தடவை ஜெபிக்கவும்.90 நாட்கள் ஜெபத்தில் மந்திரத்தில் சம்பூர்ண சித்தி உண்டாகும். 18 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் தேஜசும்,வாக்கு பலிதம் உண்டாகத் துவங்கும்.

1008 உரு ஜெபிக்க முடியாதவர்கள் குறைந்தது 508 அல்லது 108 தடவையாவது ஜெபித்து வரவும்.

வாக்தேவதை மந்திரங்களைச் சித்தி செய்ய விரும்புவோர் வெண்ணிற ஆடைகளை அணியவேண்டும்.வெண்ணிறப் பட்டு அல்லது காட்டன் துணியில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.பலகையில் அமர்ந்து ஜெபித்தால் அதன் மீது வெண்ணிறத் துணி போர்த்தி அதன் மேல் அமர்ந்து ஜெபிக்க வேண்டும். ஸ்படிகம் அல்லது வெண்தாமரைக் கொட்டை மாலையை ஜெபத்திற்குப் பயன்படுத்தலாம்.அந்த மாலையை அணிந்தும் வரலாம். பௌர்ணமி அன்று இரவில் 9 மணிக்குள் நிலவைப் பார்த்தபடி மந்திரம் ஜெபித்து கற்கண்டுப்பாயசம் படைத்து ,ஜபம் முடிந்தபின் மொட்டை மாடியில் நிலவொளியில் சுத்தமான நீரில் செம்புப் பாத்திரத்தில் ஜபத்திற்குப் பயன்படுத்திய ஸ்படிக மாலையைப் போட்டு வைத்து  அதிகாலையில் பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து குளித்து விட்டு அந்த நீரை அருந்தி வர விரைவில் மந்திரம் சித்தியாகும்.

மேலும் இந்த மந்திர சித்தி தொடர்பான அநேகப் பிரயோக சித்தி ரகசியங்கள் உள்ளன.அவற்றைக் குருமுகமாகக் கேட்டு அறிந்து கொள்ளவும்.


முக்கியக் குறிப்பு:-

யாரையும் சபிக்கக்கூடாது.வாக்கு பலித சக்தியால் அவை பலித்துவிடும். நமக்கு வெற்றி கிடைத்தாலும் சாபத்தினால் பாதிக்கப்படுபவரின் துன்பச்சுமை நம்மைப்  பிற்காலத்தில் துன்பத்திற்கு ஆளாக்கும்.நானும்  வாழவேண்டும்  யாவரும் வாழட்டும் என்று நல்ல எண்ணத்தோடு இருக்க முயற்சியுங்கள்.
ஸ்ரீ வாக்வாதினி தேவி உங்கள் யாவருக்கும் வாக்பலிதத்தோடு ஜோதிஷ தெய்வக்ஞராக விளங்க அருள் செய்ய வேண்டுகிறேன்.

                            வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com




Thursday, 11 December 2014

வியாபார விருத்தி யந்திரம்


வேலை செய்பவர்களுக்கு என்னதான் கஷ்டமான வேலையாக இருந்தாலும் மாதமானால் சம்பளம் வந்துவிடும்.ஆனால் ,தொழில் செய்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் போட்ட தொகை நஷ்டமாகாமல் லாபம் வர வேண்டும் என்ற சிந்தனை மனதை ஆக்கிரமித்தபடியே இருக்கும்.தொடர்ந்த தொழில் முன்னேற்றத்திற்குச்  செம்பு தகட்டை சுத்தம் செய்து அபிஷேகித்து அதில் கீழே உள்ள வியாபார விருத்தி யந்திரத்தை வரைந்து முறைப்படி பிராணப்  பிரதிஷ்டை செய்து நெய் விளக்கேற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்துக் கடை,தொழிற்சாலை, அலுவலகத்தின் முகப்பு அல்லது வெளிப்புறச் சுவற்றில் மாட்டி அல்லது ஒட்டி வைக்கத் தொழிலில் தொடர்ந்த முன்னேற்றமும் அதிக லாபமும் உண்டாகும்.

செம்புத் தகட்டில் வரைய முடியாதவர்கள் ஒரு சுத்தமான வெள்ளை நிறப் பேப்பரில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம்  ஜவ்வாது எடுத்து அதில் கொஞ்சம் பன்னீர் கலந்து அதைத் தடவி பின்னர் செந்தூரம் கொண்டு  கீழே உள்ள யந்திரத்தை வரைந்து  நெய் விளக்கேற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்துக்  கடை,தொழிற்சாலை,அலுவலகத்தின் முகப்பு அல்லது வெளிப்புறச் சுவற்றில் மாட்டி அல்லது ஒட்டி வைக்கத் தொழிலில் தொடர்ந்த முன்னேற்றமும் ,அதிக லாபமும் உண்டாகும்.
    
இதை வளர்பிறை புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மாலை 6:30 முதல் 8:00 மணிக்குள் செய்யவேண்டும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Wednesday, 10 December 2014

சாந்தி கர்ம மந்திரம்


நம் மனோவிருப்பங்கள் நிறைவேற உதவும் பல பிரயோகங்கள் தாந்த்ரீக சாஸ்திரத்தில் இருந்தாலும் தாந்த்ரீகத்தின் முக்கியமான கர்மாக்கள் ஆறாகும்.அவற்றில் சாந்தி கர்மாவும் ஒன்று.ஆனால் மற்ற கர்மாக்கள் அளவிற்கு சாந்தி கர்மாவில் மக்கள் கவனம் செலுத்துவதோ,முக்கியத்துவம் கொடுப்பதோ இல்லை.ஆனால் என் பார்வையில் சாந்தி கர்மாவே மற்றவற்றை விடப் பிரதானமானது.ஏனென்றால் எவ்வளவுதான் செல்வம், சக்திகள்,புகழ் இருந்தாலும்,குடும்பத்தில்,மனதில் நிம்மதி,அமைதி இன்றி என்ன பயன்?.எனவே விதிமுறைப்படி செய்யப்படும் சாந்தி கர்மா பிரயோகம் இல்லத்தில்,மனதில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நல்ல சூழலையும் மலரச்செய்யும்.நிம்மதி,மகிழ்ச்சி,நல்ல சூழல் இவை கிட்டினால் மட்டுமே இல்வாழ்க்கையிலும்,பொருளாதாரம்,ஆன்மீகத்திலும் தொடர்ந்து முன்னேற முடியும்.

எனவே  கிரகங்கள் ,தீவினைகளினால் மட்டுமின்றி நமது சொந்த புத்தியின் விகாரங்களான அதீத காமம்,அதீத கோபம்,அதீத துக்கம்,தீரா நோய்கள், பேராசையாலும் நமக்கு நிம்மதிக்குறைவு ஏற்படலாம்.சாந்தி கர்மா மந்திரம் ஜெபித்து வர நன்மை உண்டாகும்.

மாலை நேரத்தில் அரச மர வேரில் இனிப்பு கலந்த  நீரை விடவும்.பின்னர் அரசமர அடியில் அமர்ந்து ஊதுபத்தி ஏற்றி வைத்து கீழே உள்ள மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.
அரசமர அடியில் அமர்ந்து ஜெபிக்க முடியாதவர்கள்  மாலை நேரத்தில் அரச மர வேரில் இனிப்பு கலந்த  நீரை விடவும்.பின்னர்,அரச மரத்தில் இருந்து வடக்கு பக்கம் உள்ள  வேர் அல்லது கிளையில் உள்ள குச்சியில் ஒன்றை ஒடித்து அதில் மஞ்சள் தடவி சிகப்புத் துணியில் வைத்து அரசங் குச்சியால்
இந்த மந்திரம் ஜெபித்து ஹோமம் செய்யலாம்.அதே பலன் கிடைக்கும்.

மந்திரம்:-

ஓம் நமஹ :ஷாந்தே ப்ரஷாந்தே ஓம் ஹ்ரீம் ஹ்ராம் சர்வ க்ரோத பிரசமனி ஸ்வாஹா ||

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Tuesday, 9 December 2014

உடல்பலம்,மனோபலம் பெற :-


சிலர் எதற்கெடுத்தாலும் உடனே அழுபவர்களாக,பயப்படுவர்களாக இருப்பார்கள்.மனபலம் இன்மையே இதற்குக் காரணம்.கீழே சொல்லியுள்ள பிரயோகத்தின் மூலம் அவர்களை மனோபலம் கொண்டவர்களாக மாற்ற முடியும்.


வளர்பிறை செவ்வாய்க்கிழமை விஷ்ணு அலல்து ஹனுமான் ஆலயம் சென்று அங்குள்ள ஆஞ்சநேயருக்குக் கொய்யாப்பழம் ,அச்சுவெல்லம், பழங்கள் படைத்து ஹனுமனை வழிபட்டு அர்ச்சகரிடம் ஹனுமனின் மேனியில் பூசிய செந்தூரம் கொஞ்சம் தருமாறு வேண்டி வாங்கி அதைக்  கையில் வைத்துக் கீழே உள்ள மந்திரம் ஜெபித்து நெற்றியில் பூசி வர
உடலில் மனதில் பலம் பெருகி  எந்த ஒரு சூழ்நிலையையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனோநிலையை அடையப் பெறுவார்கள்.

மந்திரம் :-

" ஓம் ஹம் ஹனுமந்தாய வீரரூபாய நமஹ "





வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

நல்வாழ்விற்கு உதவும் தாந்த்ரீக ரகசியங்கள் - பாகம்: 2


திங்கட்கிழமை  அன்று 7 வில்வ இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றில் குங்குமப்பூ கொண்டு "ஓம் சிவாய ஸமஸ்த தோஷ நிவாரணாய பட்"  என்று எழுதவும்.எழுதிய பின் "ஓம் சிவாய ஸமஸ்த தோஷ நிவாரணாய பட்" என்று 7 தடவை ஜெபிக்கவும். இப்படி ஒவ்வொரு வில்வ இலையிலும் எழுதி மேற்சொன்ன மந்திரத்தை 7 தடவை ஜெபிக்கவும்.7 இலைகளிலும் எழுதி, ஜெபித்து முடிந்த பின்னர் ஆலயத்தில் அல்லது வீட்டில் உள்ள சிவலிங்கத்திற்கு மேற்சொன்ன மந்திரத்தை ஜெபித்தபடியே வில்வ இலைகளைச் சமர்ப்பித்து சர்வ தோஷங்களும் நீங்க அர்ச்சனை செய்யவும். இவ்வாறு தொடர்ந்து 3 அல்லது 7 திங்கட்கிழமைகள் செய்து வர சர்வ தோஷங்களும்,  நாம் இப்பிறவியில் கொண்டுவந்த தீய கர்மாக்களின் பாதிப்புகளும் குறைந்து ,குடும்பம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும்.

அநேகர் நல்ல ஜோதிடர்களாக இருந்தாலும் ,சிலர் ஜோதிடத்தின் பெயராலும் ,மாந்திரீகத்தின் பெயராலும் மக்களிடம் அதிகப் பணத்தை அபகரித்து வருகின்றனர்.அதன் காரணமாகவே எனக்குத் தெரிந்த பல ஆன்மீக ரகசியங்களை ஒளிவு மறைவின்றி வெளியிடுகின்றேன்.இவை உத்தரவாதமான பலன்களைத் தர வல்லவை.பயன்படுத்திப் பலன் பெறுங்கள். 

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

நல்வாழ்விற்கு உதவும் தாந்த்ரீக ரகசியங்கள் - பாகம் :1


1.செல்வம் பெருக :-

பயன்படுத்தாத மற்றும் பழைய பொருட்களை வீட்டின் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் அல்லது அந்த திசையில் உள்ள மேற்கூரையில் வைத்தால் அந்த இடத்தில் நிரந்தர பணப்புழக்கம் இருக்காது.வேண்டுமானால் அந்த மாதிரியான பொருட்களை வீட்டின் தெற்குப் பகுதி அல்லது தெற்கே உள்ள அறையில் வைக்கலாம்.10 நாட்களுக்கு மேல் ஒரு பொருளை பயன்படுத்தாமல் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தாலோ அல்லது வீட்டை அல்லது ஒரு அறையை 10 நாட்களுக்கு மேல் அடைத்தே வைத்திருந்தாலோ தீய சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் நுழைந்து குடிகொள்ளும்.அந்த வீட்டில் எப்போதும் சண்டை, சச்சரவுகள்,உறக்கமின்மை,கெட்ட கனவுகள்,தொடர் வியாதி போன்றவை சம்பவிக்கும்.இந்த பாதிப்புகள் நீங்க செவ்வாய்க்கிழமை  அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் சாம்பிராணி.குங்கிலியம்.கொஞ்சம் காய்ந்த அருகம்புல் இவை கொண்டு தூபம் போட (புகை போட)  தீய சக்திகள் நீங்கி வீடு சுபிட்சம் ,பெரும்.அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும்.

தூபம் போடும் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்தபடி போடவும்.

மந்திரம் :-
ஓம் ஹம் ஹனுமதே மாம் ரக்ஷ ரக்ஷ | மம குலம் ரக்ஷ ரக்ஷ||



2.ஆன்மீக முன்னேற்றம் வேண்டுவோர் தூங்கும் பொழுது கிழக்கே தலை வைத்து மேற்கே கால் நீட்டி தூங்க ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

3.தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டி படுத்து வர பொருளாதாரம் மேம்படும் .

4.வடக்கே தலை வைத்து உறங்கினால் மனோநிலையில் பாதிப்பு ஏற்படும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 8 December 2014

சர்வ தோஷ நிவாரண தாந்த்ரீகப் பரிகாரம்


வாழ்க்கையில் திரும்பத்திரும்ப அவமானம்,வறுமை,கடன்,நோய்கள் என அவதிப்படுபவர்கள் பௌர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி அமாவாசை வரை காலையில் குளிக்கும் போது கொஞ்சம் கருப்பு எள் எடுத்து குளிக்கும் நீரில் கலந்து குளித்து வர எல்லாத் தோஷங்களும் தீரும்.குறிப்பாகச்  சனிப் பெயர்ச்சியினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள ராசிக்காரர்கள் இதைச் செய்து வர பாதிப்பு குறையும்.இறுதி நாளான அமாவாசை அன்று மாலையில் சிவன் கோயில் சென்று பைரவரை வழிபட்டு பைரவர் அருகில் உள்ள விளக்கில் உள்ள எண்ணையை வலது கை மோதிர விரலால் தொட்டு உச்சந்தலையில் வைத்துக்கொள்ள சர்வ தோஷங்களும் விலகும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

சர்வ தோஷங்களும் நீங்கி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய

ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை சூரியோதய வேளையில் ஒரு கிண்ணம் அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான நீர் எடுத்துக்கொண்டு சூரிய வெளிச்சம் தன மேல் படும்படிக் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். அந்தப் பாத்திரத்தில் தெரியும் தன் முகத்தைப் பார்த்தபடியே "ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ"  என்று 108 தடவை ஜெபிக்கவும்.ஜபத்திற்கு எந்த மாலையையும் பயன்படுத்தலாம்.அதன் பின்னர் வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர அருள் செய்யுமாறு சூரிய பகவானை வேண்டிய பின் அந்த நீரை ஏதேனும் மரம் அல்லது செடியின் வேர் பாகத்தில் ஊற்றி விடவும்.(அரச மர வேரில் ஊற்றினால் மிகவும்  சிறப்பு).

தொடர்ந்து அல்லது விட்டு விட்டு 10  ஞாயிற்றுக்கிழமைகள் செய்து வர வேலையின்மை,நிர்வாகத்திறமை இன்மை நீங்கும்.அரசு தேர்வு எழுதுபவர்கள் இதைச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Wednesday, 3 December 2014

ஆன்மீக ரகசியங்கள்:6 வீட்டில் நிம்மதி நிலவ ,துரதிர்ஷ்டம் நீங்க





ஒரு பௌர்ணமி அன்று நல்ல தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு  சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் வரையவும்.பின்னர் அந்தத் தேங்காயின் மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றவும்.பின்னர் அதைக் கொண்டு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தையும் வீட்டில் உள்ளவர்களையும் (தலையையும்) சுற்றவும்.முடித்தபின் ஆறு அல்லது கடலுக்குச் சென்று செருப்பைக் களற்றிவிட்டு வெறும் காலுடன் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று 11 தடவை ஜெபித்து மஹாவிஷ்ணுவிடம் இல்லத்தில் துரதிர்ஷ்டம்,துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக அருள் செய்ய வேண்டிக் கொண்டு அந்தத் தேங்காயை நீரில் போட்டு விடவும். இதன் மூலம் வீட்டில் வளமும்,நலமும்,மகிழ்ச்சியும் உண்டாகும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள்:5 செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்





கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம்  நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது  மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர் ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள் :4 சர்வ க்ரஹ தோஷ நிவாரண பரிகாரம்



செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர்  அல்லது 1 மீட்டர் நீளமுள்ள  சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு  கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும்.சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை)  ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.பின்னர் அந்தச் சிகப்பு முடியை  அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும்.அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும்.இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

மந்திரம் :-

அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம்  ப்ரம்மசாரிணம்|
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||

   
வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள் :3 (தாந்த்ரீக பரிகாரம்) அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம்


ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமன வேளையில் ஊருக்கு வெளியில்,காட்டில், அல்லது மயானத்தில் உள்ள ஒரு அரசமரத்தடியில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் நல்லெண்ணெய் விட்டு அகல் விளக்கேற்றி, விளக்கிற்கு குங்குமம்,மஞ்சள் வைத்து பாயசம் படைத்து வழிபடவும்.பின்னர் பிரதட்சிணமாக அதாவது இடமிருந்து வலமாக 11 தடவை வலம் வரவும்.வலம் வந்து முடிந்தவுடன் விளக்கின் முன்  நின்று  கவலை, பிரச்சனை என உங்கள் மனக்குறை என்னவோ  அது விரைவில் தீர வேண்டிக்கொள்ளவும்.பின்னர் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடவும்.இதைக் குறைந்தது 3 வாரம் செய்யவும்.துன்பங்கள் நீங்கும்,சுபகாரியத்தடைகள் தீரும்.தொழில் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ,பணப்பற்றாக்குறை என வேண்டிக்கொண்ட பிரச்சனை என்னவோ அது தீரும் அல்லது அதைத் தீர்க்கும் வழி மனதில் தோன்றும்.
 

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


Tuesday, 2 December 2014

ஆன்மீக ரகசியங்கள் :2. செல்வவளம் பெற ஸ்ரீ புவனேஸ்வரி வித்யா பிரயோகம்




ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன் குளித்து வெண்ணிற ஆடை அணிந்து சூரியனைப் பார்த்தபடியே ஹ்ரீம் என்று 108 தடவை ஜெபிக்கவேண்டும்.ஜெபத்திற்கு மாலைகள் அவசியம் இல்லை.பயன்படுத்த வேண்டும் என்றால் ஸ்படிகம் அல்லது ருத்ராக்ஷ மாலை பயன்படுத்தவும்.
ஜெபித்து முடித்த பின் வெண்சந்தனப் பொடி அல்லது வெண்சந்தனக் கட்டையை அரைத்து ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் அணிந்து கொள்ளவும்.பின் மற்ற நாட்களில் ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் வெண்சந்தனம் அணிந்து வரவும்.இதை எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்து வர செல்வம், புகழ் இவற்றில் படிப்படியாக உயர்ந்த அந்தஸ்தை அடையலாம் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது. 



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஆன்மீக ரகசியங்கள் :- 1


ஏதேனும் ஒரு முக்கியமான வேலையாக அல்லது தொலைதூர வெளியூர் பயணம் கிளம்பினாலும் கானம் எனப்படும் காராமணிப்  பயிர் கொஞ்சம் வலது கையில் வைத்து வாசலுக்கு அருகில் நின்று கொண்டு விநாயகரை வேண்டிக் கீழே உள்ள மந்திரத்தை 7 தடவை ஜெபித்து அந்தக்  காராமணிப் பயிரில் ஊதி பின்னர் வாசலைத் தாண்டி வெளியே வந்து காராமணிப் பயிரை எறிந்து விடவும்.பின்னர் விநாயகரை வேண்டிகே கிளம்பிச் செல்ல காரியத்தடைகள் நீங்கி  வெற்றியுண்டாகும்.ஒரு குறிப்பிட்ட நல்ல காரியம் செய்யும் போது பலரின் எதிர்ப்பு,பொறாமை,திருஷ்டி இருந்தால் அந்த மாதிரி நேரங்களில் இந்தப் பிரயோகத்தை உபயோகிக்க நிச்சயம் வெற்றி கிட்டும்.

இதை செய்த வெளியூர்,வெளிநாடு பயணம் கிளம்ப வெற்றியுடனும் பாதுகாப்புடன் திரும்பலாம். 

மந்திரம்:-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சர்வ விக்ன வினாசாய, சர்வ கார்ய சித்திம் நமஹ ||


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


Monday, 1 December 2014

துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக ரகசியங்கள்


1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை   தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்து வர வறுமை   நீங்கிச் செல்வ நிலையில் உயர்வு உண்டாகும்.

2.தொழில் முடக்கம் நீங்கி தொழில் விருத்தி அடைய

ஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம்  ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும் கையில் வைத்து சுற்றி பின்னர் வெளியில் தெற்கு முகமாக நின்று நான்கு துண்டாக நறுக்கி குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும்.கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்த கடைகளில் இதைச் செய்த பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.

3.திருமணத்தடை,வறுமை,வேலையின்மை மற்றும் தோஷம் உள்ளவர்கள்  நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.

ஆண்கள் - சனிக்கிழமை

பெண்கள் - வெள்ளிக்கிழமை

4.பொருளாதாரம் உயர:-

ஞாயிற்றுக்கிழமையும் பூசம்  நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில்  நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி
அதைக் கையில்  வைத்துக்கொண்டே சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர் வெள்ளைநிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில்  நனைத்து அந்தத் துணியால்  நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.


5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை செய்யாது.இரவில் தானாக விந்தி சக்தி வெளியேறாது.


6.அடிக்கடி ஆபத்துகளைச்  சந்தித்து வருபவர்கள்,அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.


7.அரச மரத்தின் அற்புத சக்தி :

1. தீரா நோய் தீர

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு  / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு
வைக்கவும்.விரைவில் குணம் கிடைக்கும்.


2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .

3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட  விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.

4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.

5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Wednesday, 19 November 2014

ஸ்ரீ ஹனுமான் பயவிமோசன மந்திரம் :-





அஞ்சனாகர்ப்ப சம்பூதாய கபீந்த்ரோ சர்வோத்தம |
ராமப்ரிய நமஸ்துப்யம் ஹனுமந் ரக்ஷ ரக்ஷ சர்வதா ||


இரவில் தூங்கும் போது துர்சக்திகள் பிடித்து அழுக்குவது,பயங்கர கனவு கண்டு விழித்துக்கொள்வது ,அமானுஷ்ய சத்தங்கள் காதில் விழுந்து பயப்படுதல் நீங்க செவ்வாய்க்கிழமை அன்று ஹனுமனுக்கு கொய்யாப்பழம்,வெற்றிலை,பாக்கு,பழங்கள்,உளுந்துவடை படைத்து  முன்னால் விபூதி அல்லது செந்தூரம் வைத்து மேற்கண்ட மந்திரத்தை 108 தடவை ஜெபிக்கவும்.பின்னர் உறங்கும் முன் அந்த விபூதி அல்லது  செந்தூரத்தை நெற்றி அணிந்து கொள்ள மேற்சொன்ன தீமைகள் ஏற்படாது.தினமும் இவ்வாறு செய்து வரவும்.

வீட்டில் பேய், பிசாசு,மந்திரங்களால் அல்லது  தீய சக்திகளின் தொல்லை இருந்தால் இந்த மந்திரத்தைத் தேய்பிறை செவ்வாய்கிழமை (அன்று இப்பூஜையைச் செய்பவருக்குப் படுபக்ஷி நாளாக இருக்ககூடாது)   ஹனுமனுக்கு கொய்யாப்பழம்,வெற்றிலை, பாக்கு,பழங்கள், உளுந்துவடை படைத்து  முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்து அதில் கொஞ்சம் துளசி இலைகளைப்  போட்டு ,விபூதி வைத்து மந்திரத்தை 1008 தடவை  ஜெபம் செய்யவும்.ஜபம் முடிந்ததும் அந்த விபூதியை செம்பில் உள்ள நீரில் போட்டு  அந்த தீர்த்தத்தை வீட்டின் உட்புறம் ,வெளிப்புறம்,வீட்டில் உள்ளோர் மீதும் வெற்றிலை கொண்டு தெளித்து விடவும்.இவ்வாறு 3 செவ்வாய்க் கிழமைகள்  செய்ய எந்த துஷ்ட சக்திகளாலும் துன்பம் நேராது.


                      வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
  


Monday, 17 November 2014

ஸ்ரீ சிவ சஹஸ்ரநாம ஸ்லோக பாராயணமும் பலன்களும்:-



ஸ்ரீ சிவ சஹஸ்ரநாமம் சிவபெருமானின் 1008  திருநாமங்களைக் கொண்டது .அதைத் தினமும் கூற முடியாதவர்கள் ,சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.



1.வேத அத்யாயனம்,தியானம்,மந்திரஜபம் பலிக்க:- 

மந்த்ரவித் பரமோ மந்திர: ஸர்வபாவகரோ ஹர:
கமண்டலுதரோ தந்வீ  பாணஹஸ்த : கபாலவாந்||    
வேதகாரோ மந்த்ரகாரோ வித்வாந் சமர மர்த்தன:|
மஹாமோக நிவாசீ ச மஹாகோரோ வசீகர:||    
அதர்வசீர்ஷ :ஸாமாஸ்ய:ருக் சஹஸ்ராமிதேக்ஷன:|
யஜூர் பாத புஜோ குஹ்ய :பிரகாசோ ஜங்கமஸ் ததா :||
    
கிழக்கு முகமாக அமர்ந்து தினமும் 27 தடவை ஜெபித்து வர வேதபாராயணம்,மந்த்ரஜெபம்,தியானம் சித்திக்கும்.  


2.பேய்,பிசாசு துர்சக்திகளின்  தொல்லை நீங்க :-

நிஸாசர :பிரேதராஜோ பூதசாரீ மகேஸ்வர :|
பஹுபூதோ பஹுதர: ஸ்வர்ப்பானு ரமிதோ கதி:||

இதைத் தினமும் 27 தடவை  வடக்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம்  செய்து ஜெபித்து வர  அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.

3.கிரகதோஷம் நீங்க:-
ஸஹஸ்ராக்ஷோ விசாலாக்ஷ : சோமோ நக்ஷத்ர ஸாதக:|
சந்த்ர சூர்ய :சனி:கேது:க்ரஹோ க்ரஹபதிர் வர :||

வடக்கு முகமாய் அமர்ந்து 27 தடவை ஜெபித்து வர கிரகதோஷங்கள் நீங்கும்.

 4.எல்லா தெய்வங்களையும் வணங்கிய பலனைப்பெற 

தேவாசுர குருர்தேவோ தேவாசுர நமஸ்க்ருத :|
தேவாசுர மஹாமாத்ரோ தேவாசுர கணாஸ்ரய:||
தேவாசுர கணாத்யக்ஷோ தேவாசுர கணாக்ரனீ:|
தேவாதிதேவோ தேவர்ஷி : தேவாசுர வரப்ரத :||
தேவாசுரேஸ்வரோ விஸ்வோ தேவாசுர மகேஸ்வர:|
சர்வதேவமயோசிந்த்யோ தேவதாத்மாத்ம சம்பவ :||

இதை சிவாலயத்தில் அல்லது சிவலிங்கத்தின் முன் 27 தடவை ஜெபித்து வர சர்வ தேவதைகளின் அனுக்ரஹம் உண்டாகும். 
    
வாழ்க வையகம் || வாழ்கவளமுடன்||


M.
சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
9442193072 /9788493072        
ms.spiritual1@gmail.com


Sunday, 16 November 2014

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாம ஸ்லோகங்களும் பலன்களும்






ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000  திருநாமங்களைக் கொண்டது .அதைத் தினமும் கூற முடியாதவர்கள் ,சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.இது அனுபவத்தில் கண்டது.


1.காரியத்தடைகள் நீங்க 

மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :|
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும்.ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.


2.எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க 

வஜ்ராத்யஸ்த்ர பரீவார:கனசண்ட ஸமாஸ்ரய :|
ஜயோஜய பரீவார :விஜயோ விஜயாவஹ :||

இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம்  செய்து ஜெபித்து வர  எதிர்ப்புகள் ,எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.


3.கல்வியில் முன்னேற்றம் உண்டாக :-

சரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரி நந்தன ஸ்ரீ நிகேதன :|
குருகுப்த பதோ வாசா சித்தோ வாகீஸ்வரேச்வர :||

இதைத் தினமும் 18 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து கல்வி,கலைகளில் உயர்வுபெற வேண்டிச் சங்கல்பம்  செய்து ஜெபித்து வர நல்ல முன்னேற்றம் உண்டாகும்.


4.செல்வம் பெருக,தியானம் சித்திக்க  :-

தனதான்யபதிர் தந்யோ  தனதோ தரணீதர :|
த்யானைக பிரக்டோ த்யேய :த்யாநோ த்யான பராயண:||

இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும் ,ஆன்மீக,தியான நிலையில் உயர்வும்  கிட்டும் .

5.நாகதோஷம் நீங்க,புத்திர ப்ராப்தி உண்டாக :-

ஸ்தம்பகாகார  கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||

இந்த  ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர  சர்ப்பதோஷம் நீங்கும்.சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இதை அரசமரமும்,வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும்.


6.வழக்குகள்,எதிர்ப்புகளை வெல்ல 

மேதாத :கீர்த்தித:சோகஹாரி தௌர்பாக்ய நாசன :|
பிரதிவாதி முகஸ்தம்ப: துஷ்ட சித்த பிரசாதன :||

வாக்குவாதம்,வழக்குகளுக்குச் செல்லும் பொழுது  இந்த ஸ்லோகத்தை 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து  ஜெபித்து குங்குமம் அணிந்து செல்ல வெற்றி கிடைக்கும்.

7.கிரக தோஷ பாதிப்புகள் விலக :-

ராசிஸ் தாரா திதிர் யோக : வார :காரண அம்சக :|
லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு :சப்தர்ஷயோ த்ருவ:||
ராஹூர் மந்த:கவிர் ஜீவ :புதோ பௌம  சசீ ரவிஹி :|
கால: ஸ்ருஷ்டி :ஸ்திதிர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்||

இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து  ஜெபித்து வர கிரகதோஷம் நீங்கும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Monday, 10 November 2014

கடன் தீர உதவும் ஆன்மீக ரகசியங்கள்

                                                                     வாழ்க வளமுடன்





கடன் தீர்க்கும்  கணபதி மந்திரம் 

ஓம்| கணேசாய | ருணம் சிந்தி வரேண்யம் | ஹூம் நம பட் || 

இந்த மந்திரத்தை ஜெபிக்கும் முன்னர்  தலை உச்சியில் முத்திரை போட்டு ''ஓம் ஸ்ரீ கனகரிஷியே நமஹ'' என்று 3 தடவை சொல்லி மந்திரம் பலிக்க வேண்டிக்கொள்ளவும்.

கிழக்கு முகமாக அமர்ந்து  குறைந்தது 27 தடவை அதிகபட்சமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபிக்கலாம்.

பிரயோகம் :-

இரவில் அல்லது பகலில் யாரும் பாராமல் இருந்து விளக்கேற்றி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து விளக்கின் பாதத்தில் குங்குமம் இட்டு அந்தக் குங்குமத்தை அணிந்து வர விரைவில் மந்திர சித்தியாகும்.

எண்ணிக்கை கூடக்கூட கடன் தீர்ந்து எல்லா நிலைகளிலும் விருத்தி உண்டாகும்.

90 நாட்களுக்கு குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.90 நாட்கள் கழித்து கணபதி ஹோமம் செய்து கொள்ளவும்.

கணபதி ஹோமம் முடிந்ததும் கணபதி ஹோமம் செய்யப்பட்ட ஹோமச் சாம்பலை வெற்றிலையில் நெய் விட்டு தர்ப்பையை கருக்கி வைத்த மையை  அணிந்து வரவும்.


2.ஸ்ரீ சங்கடஹர கணபதி பிரயோகம் :-

சங்கடஹர சதுர்த்தி அன்று அருகில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சகரிடம் சொல்லி மறுநாள் அந்த மாலையில் கொஞ்சம் வேண்டும் என்று வாங்கி அந்த அருகம்புல்லில் கொஞ்சம் மட்டும் எடுத்து  ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் நிரப்பி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து அந்த  நீரை  வீட்டில் உள்ளோர் முகத்தில் தெளித்து பின்னர் வீடு முழுவதும் தெளித்து விட்டு மீதம் உள்ள  அருகம்புல்லை வெள்ளை அல்லது மஞ்சள் பட்டு துணியில் சுற்றி வீடு,அலுவலகம் ,கடைகளில் சாமிபடத்தின் முன்னால்  அல்லது  ஈசான்ய மூலையில் வைக்கத் தரித்திரம், பீடை, காரியத்தடை  விலகி சுபிட்சம் உண்டாகும்.


ஸ்ரீ சங்கடஹர கணபதி மந்திரம் :-

ஒம் நமோ ஹேரம்ப மதமோதித |
மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய|
ஹூம் பட் ஸ்வாஹா || 

சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும்.


3.ஸ்ரீ பைரவ மந்திரம்

தேய்பிறை அஷ்டமி  தோறும் சிவாலயத்தில் உள்ள பைரவருக்குப் பாலாபிசேகம் செய்து அந்த ஆலயத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபிக்கத் தொடங்கவும்.

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன  பைரவ மந்திரம்

ஓம்  ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணாகர்ஷன பைரவாய ஹூம் பட ஸ்வாஹா  

ஸ்வர்ணாகர்ஷன பைரவ யந்திரத்தை வெண்ணிற அல்லது செந்நிறப் பூக்களால் அர்ச்சிக்கவும். மந்திரத்தைத் தினமும் குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.


செவ்வாய்க்கிழமை மதியம் 12 முதல் 1:30 மணிக்குட்பட்ட நேரத்தில்  கடன் தொகையில் ஒரு சிறு பகுதியையாவது திரும்பச் செலுத்தவும்.விரைவில் கடன் தீரும்.


செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பச்சை நிற பட்டுத் துண்டு வாங்கி பன்னீர் கலந்த தண்ணீரில் அலசிக் காயவைக்கவும்.மறுநாள் புதன்கிழமை அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் அந்தத் துண்டில் சிறிது கிழித்து அல்லது வெட்டி அதில் சிறிது வெந்தயம் போட்டுப் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும். தொடர்ந்து பணவரவு உண்டாகும்.

             வாழ்க வையகம் !!!                                          வாழ்கவளமுடன் !!!

M.சூர்யா 
தச்சநல்லூர்,திருநெல்வேலி 
9442193072  / 9788493072

ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com




Tuesday, 28 October 2014

கலைகளில் தேர்ச்சியும்,வாழ்வில் உயர்வும் தரும் ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம் :-







மந்திரசாஸ்திர நூல்களில் உயர்ந்த ஒன்றான மந்திர மகோததியில் இந்த மந்திரம் உள்ளது.ஸ்ரீ ராஜமாதங்கி தேவியின் 1000 திருநாமங்களில் ஒன்றே உச்சிஷ்ட சாண்டாளி. 

இம்மந்திரத்தை ஜபம் செய்து வர வாக்கு பலிதம்,கல்வி,கலைகளில் உயர்வு, சர்வ வசீகரம்,சகலகலா பாண்டித்தியம்,சங்கீதத்தில் மேன்மை,பதவி உயர்வு,நிர்வாகத்திறமை கிட்டும். 


இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வருவதன் மூலம் எதிரிகள் இல்லாத வாழ்க்கை,சர்வஜன வசீகரம் எனப்படும் எல்லா மக்களுடனும் அன்பும் இணக்கமும் கொண்ட வாழ்வும் கிட்டும்.

ஜோதிடர்கள்,மாணவர்கள்,கலைத்துறையில் உள்ளவர்கள்,பதவி உயர்வு வேண்டுபவர்கள் இம்மந்திர ஜபத்தினால் நிச்சயம் உயர்வு அடைவார்கள். 

வளர்பிறையில் உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகத் தேர்வு செய்து ஜெபத்தைத் தொடங்கவும்.தொடர்ந்து 90 நாட்கள் ஜெபித்து வரவும்.கிழக்குத் திசை நோக்கி ஜெபிக்கவும்.யந்திரத்திற்கு 108 தடவை மூலமந்திர ஜபம் செய்து அட்சதை அல்லது வெண்ணிற பூக்களால் அர்ச்சிக்கவும்.15 நாட்களுக்கு மேல் மந்திரத்தின் சக்தி வெளிப்படத் தொடங்கும்.     


புதன்,வியாழக்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் சிறிது கற்கண்டு பச்சை கற்பூரம் கலந்த நீர் நிரப்பி இந்த மந்திரத்தை  108 எண்ணிக்கை கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து அந்த நீரை மாணவர்கள்,குழந்தைகளை அருந்தச்செய்ய நல்ல நினைவாற்றலும் படிப்பில் உயர்வும் உண்டாகும்.


இம்மந்திரத்தை வெறுமனே ஜெபிப்பதை விட ஸ்ரீ ராஜமாதங்கி யந்திரம் வைத்துப் பூஜித்து ஜபம் செய்வது நிறைந்த பலன்களைத் தரும்.

மந்திரம் :-

ஓம்|
ஹ்ரீம் ஐம் ஸ்ரீம் |
நமோ பகவதி உச்சிஷ்டசாண்டாளி |
ஸ்ரீ மாதங்கீச்வரி |
ஸர்வஜன வசங்கரி ஸ்வாஹா ||



வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com





Thursday, 23 October 2014

திருமணத்தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வரகலா மந்திரம்





களத்திர தோஷம் ,பித்ரு தோஷம், மற்றும் பல்வேறு தோஷங்களாலும்,       ஜாதகத்தில் கிரகநிலைகள் சரியின்மையாலும் ,எந்த காரணத்தினால் திருமணம் தடைபட்டு, தாமதமாகி அவதிப்படுபவர்கள் ஸ்வயம்வராபார்வதி யந்திரம் வைத்து மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நடைபெறும்.


உமாமகேஸ்வரி  பார்வதியாக அவதரித்த போது பராசக்தியை வேண்டி இந்த மந்திரத்தைச் ஜெபம் செய்து அதன் பலனாகச் சிவபெருமானை மணந்தார்கள்.

ஸ்ரீ ஸ்வயம்வர கலா மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் யோகினி  யோகினி |
யோகேஸ்வரி யோக பயங்கரி|
ஸகல ஸ்தாவர ஜங்கம முக ,ஹ்ருதயம்|
மம வசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா ||

வளர்பிறையில் திருமணம் ஆகவேண்டியவருக்குப் படுபக்ஷி இல்லாத    நல்ல நாளாகப் பார்த்து சங்கல்பம் செய்து  நைவேத்யங்கள் படைத்து  விளக்கேற்றி இந்த மந்திரத்தைக் கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து  108 தடவை ஜெபித்து வரவும்.குறைந்தது 90 நாட்கள் ஜெபம் செய்து வரவும்.விளக்கின் பாதத்தில் ஒரு மஞ்சள் தடவிய கயிறு வைத்து 90 நாட்கள் ஜெபம் கழிந்த பின்னர் அதை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும்.90 நாட்கள் ஜெபம் முடிந்ததும் ஹோமம் செய்து கொள்ள நிறைவான பலன் உண்டாகும்.ஹோமம் செய்ய முடியாதவர்கள் ஆண்களானால் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்றும் ,பெண்களானால் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றும் அருகில் உள்ள ஏதேனும் ஒரு சாந்தமான அம்மன் கோவிலுக்கு         விளக்குக்கு எண்ணையும் அந்த தினத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகமும் செய்து திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாக வேண்டிக் கொள்ள  விரைவில் திருமணம் ஆகும்.அர்ச்சகரிடம் ஒரு எழுமிச்சை , ஒரு மஞ்சள் ,குங்குமம் ஒரு பாக்கெட் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்து தரச்சொல்லி அதை வீட்டில் விளக்கு முன்னால் வைத்து விட்டு அந்தக் குங்குமத்தைத் தினமும் மேற்கண்ட மந்திரத்தை 3 தடவை ஜெபித்து நெற்றில் இட்டுக்கொள்ளவும்.

ஸ்ரீஸ்வயம்வரா பார்வதி ஹோமம் செய்யப்பட்ட ஹோமச்சம்பலைத் திருமணத்தடை உள்ளவர் குளிக்கும் நீரில் சிறிது போட்டுக் குளித்து வரத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.             




வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com

Wednesday, 15 October 2014

ஆன்மீகத்தில் உயர்வும் நோய் தீர்க்கும் சக்தியும் தரும் ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்


மும்மூர்த்தி ஸ்வரூபமான ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதூத சத்குருவாவார். யோக மற்றும் ஞான நிலையில் உயர்வு பெற விரும்புபவர்கள் ,ஆன்மீக,தியான பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் இவரை வழிபட்டு வர ஆன்மீகப்பாதையில் நிறைவான விரைவான முன்னேற்றம் காணலாம்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் குரு தத்தாத்ரேயாய நமஹ   



இந்த மந்திரத்தைக் வடக்கு நோக்கி அமர்ந்து பிரம்ம முஹூர்த்தம் அல்லது இரவு 11:30 முதல் 12:30 மணிக்குள் குறைந்தது 108 தடவை ஜெபித்து வர விரைவில் சித்தியாகும்.   

ரெய்கி,ப்ராணிக் ஹீலிங் போன்ற வைத்திய முறைகளின் மூலம் சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் வைத்தியத்தைத் தொழிலாகக் கொண்டவர்களும்  இந்த மந்திரத்தை ஜெபித்து வர அவர்களின் குணமளிக்கும் சக்தி அதிகரிக்கும் நோயாளிகளின் வியாதி நமக்குப் பரவாமல் காக்கும். 


வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com



Tuesday, 14 October 2014

மூலிகை சாப நிவர்த்தி மற்றும் பிராண பிரதிஷ்டை மந்திரங்கள்

                                                    
மூலிகைகள் தெய்வீக சக்தி கொண்டவை.அதுவும் நமது ஹிந்து தர்மத்தில் மூலிகை,செடி,மரம் இவை தெய்வ அம்சமாகவே பார்க்கப்படுகின்றன.

உதாரணம் :-

விநாயகர் - அருகம்புல்
சிவபெருமான்  - வில்வம்
அம்மன் - வேம்பு
விஷ்ணு - துளசி
ஹனுமான்  - வெற்றிலை,துளசி
துர்க்கை - வன்னிமரம்
அரசமரம் - விநாயகர்,திரிமூர்த்தி ஸ்வரூபம்

அந்த அந்த தெய்வங்களின் அருள் பெற குறிப்பிட்ட தெய்வத்திற்கு இஷ்டமான மரம்,செடியின் அருகில் தேவைக்கேற்ப திசை நோக்கி அமர்ந்து மந்திரம் ஜெபித்து அந்த செடியின் வேரடி மண்ணை பயன்படுத்திப் பல காரியங்களில் வெற்றி பெறலாம்.  (இந்த சக்தி வாய்த்த பிரயோகம் பற்றி எழுதினால் அதிகம் நீளும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்)  

பல மூலிகைகள் அஷ்ட கர்மம் எனப்படும் மாந்திரீக வேலைகளுக்கும் தவறாகப் பயன்படுவதால் சித்தர்கள் ,ரிஷிமார்கள்,தெய்வங்களின் சாபம் மூலிகைகளுக்கு உண்டு.  எனவே எந்த மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம் ஜெபித்த பின்னரே பறிக்கவேண்டும்.



மூலிகை பிடுங்கும் முன்னர் கன்னிப்பெண் நூற்ற நூல் கொண்டு அல்லது  மஞ்சள் தடவிய வெள்ளை நூல் கொண்டு காப்பு கட்டி எலுமிச்சம்பழம் படைத்துக்  குறைந்தது 3 நாட்கள் கழித்துப் பறிக்க சிறப்பு  என்று  மந்திர சாஸ்திரம் கூறுகிறது.சில குறிப்பிட்ட பிரயோகங்களுக்குக் குறிப்பிட்ட நாள்,நட்சத்திரம்,திதி , பட்சி  எல்லாம் பார்த்துச் செய்ய வேண்டும்.இங்கு நான் பொதுவான காரியங்களுக்குப் பயன்படுத்துவது பற்றி எழுதியுள்ளேன்.

குறிப்பிட்ட மூலிகையின் முன் கிழக்கு முகமாக நின்று கொண்டு கீழே உள்ள சாபநிவர்த்தி மந்திரத்தை 3 தடவை சொல்லிக் கொஞ்சம் விபூதியை அந்த மூலிகையின் மேல் போட்டு வணங்க வேண்டும்.
.
மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் 

ஆனைமுகனை அனுதினம் மறவேன் 
அகஸ்தியர் சாபம் நசி நசி 
பதினென் சித்தர் சாபம் நசி நசி 
தேவர்கள் சாபம் நசி நசி
மூவர்கள் சாபம் நசி நசி  
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி 
   

 பின்னர் கீழே உள்ள ப்ராணப்ரதிஷ்டை மந்திரம் 3 தடவை ஜபித்து    சிறிது அருகம்புல்லை மூலிகையின் மேல் போட்டு வணங்கி எடுக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே மூலிகை மண்ணில் உயிர்ப்புடன்  இருந்த போது உள்ள அதே சக்தியுடன் .விளங்கும்.சோதனை செய்து பாருங்கள். சாதாரணமாகப் பறிக்கும்  மூலிகையை   விட சாபநிவர்த்தி மற்றும் ப்ராண ப்ரதிஷ்டை மந்திரம் ஜெபித்து எடுக்கப்பட்ட மூலிகை நீண்ட நேரம் ,நாட்கள் வாடாமல் இருக்கும்.

ப்ராண பிரதிஷ்டை மந்திரம் :-

ஓம் மூலி மகாமூலி ஜீவமூலி உன்னுயிர் உன் உடலில் நிற்க சிவா 




வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com