Sunday, 15 February 2015

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்





1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.


3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .


4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.


5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.


6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"  என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது  தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.  



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 12 February 2015

செரிமானக் கோளாறு போக்கும் மந்திரம்


தற்காலத்தில் உடல் உழைப்பு குறைந்து விட்டதாலும் ரசாயன உரங்கள் தெளிக்கப்பட்ட உணவுகள் உண்பதாலும் நம்மில் பலருக்கு உண்ட உணவு சரிவர செரிமானம் ஆவதில்லை.செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் வயிற்றில் வலது கையை வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 7 தடவை ஜெபிக்க உணவு விரைவில் செரிமானமாகும்.

மந்திரம் :-

நம சர்வ பூதாதிபதயே ஹும் பட் ஸ்வாஹா ||



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம்


                                 எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வி கண்டு வருபவர்கள் இம்மந்திரத்தைத்  தினமும்  கிழக்கு முகமாக அமர்ந்து 108 தடவை ஜெபித்து வரக் காரியத்தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.

ஏதேனும் காரியம் தொடங்கும் முன் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ விநாயகரை வணங்கி எந்தக் காரியம் செய்யவிருக்கிறோமோ  அதைக் குறிப்பிட்டுச் சங்கல்பம் செய்து கொண்டு இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின் துவங்க அதில் வெற்றி உண்டாகும்.

ஏற்கனவே ஆரம்பித்துப் பாதியில் நிற்கும் வேலை சிறப்பாக  நடந்து முடிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 6:30 மணிக்குள்  ஒரு  தேங்காய் வாங்கி தலையை  3 தடவை சுற்றி ஆறு அல்லது நீர் நிலையில் போட்டு விடவும்.பின்னர் ஆலயம் சென்று கணபதியை வணங்கி அவர் முன் கிழக்கு முகமாக அமர்ந்து சங்கல்பம் செய்து மந்திரத்தை 108 தடவை ஜெபிக்க வெற்றி கிட்டும்.

எந்தச் செயலைத் துவங்கும் முன்னும் கோயிலில் உள்ள யானைக்குப் பழம், கரும்பு,வெல்லம் கலந்த பச்சரிசி இவற்றில் ஏதாவது கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.        



சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம் 

ஓம் கம் கணபதயே கார்ய சித்தி குரு குரு ஸ்வாஹா ||


                        வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

கால சர்ப்ப தோஷ பாதிப்பு நீக்கும் பரிகாரங்கள்





1.முடிந்த நாட்களில் ஒரு இரும்புப் பாத்திரத்தில் பால் கலந்த நீரை வைத்துக் கொண்டு அதை அரச மரத்தின் நிழலில் நின்று மர வேரில் விட்டு வரலாம்.

------------------------------------------------------------------------------------------------------------
2.அமாவாசை அன்று ஆறு அல்லது கடற்கரையில் இதைச் செய்யவும். மூன்று தேங்காய் ,1 கிலோ நிலக்கரி எடுத்துகொண்டு அவற்றைக் கொண்டு தலையை 3 தடவை சுற்றவும்.பின், முதலில் தேங்காய்களையும் பின் நிலக்கரியையும் ஆறு அல்லது கடலில் எறிந்து விட்டு நேரே வீட்டிற்கு வந்து விடவும். வீட்டினுள் நுழையும் முன் கை,கால்களைக் கழுவிக்கொண்டு உட்செல்லவும்.

------------------------------------------------------------------------------------------------------------
3.கீழ் உள்ள மூன்று மந்திரங்களை ஜெபித்து வரலாம்.

ஓம் நவகுலாய வித்மஹே 
விஷதண்டாய தீமஹி 
தன்னோ சர்ப்ப ப்ரசோதயாத் 

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராகவே நமஹ ||

ஓம் ஷ்ராம் ஷ்ரீம் ஷ்ரௌம் சஹ கேதவே நமஹ ||

வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரங்களைத் தினமும் 18 தடவை ஜெபித்து வரலாம்.

------------------------------------------------------------------------------------------------------------

4.கால சர்ப்ப தோஷ நிவாரண மந்திரம் 

ஓம் குரு குரு  குல்லே ஹூம்  பட் ஸ்வாஹா ||

வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வரலாம்.


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

கிரக பாதிப்புகள் நீங்க ஸ்ரீ சூரிய மந்திரம்


ஜாதகத்தில் கிரகங்கள் அனுகூலமாக இல்லாமல் பலவிதமான துன்பங்கள் அனுபவித்து வருபவர்கள், அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனைப் பார்த்தபடி 108 தடவை ஜெபித்து வர கிரக பாதிப்புகள் குறைந்து நிம்மதியான வாழ்வு அமையும்.இந்த ஜெபத்தைக் காலையில் சூரிய உதயம் முதல் 6:45 க்குள் முடித்து விட வேண்டும்.பாதகமான கிரகங்களின் தசை,புத்தி நடப்பவர்களும் இந்த ஜெபத்தைச் செய்து பலன் பெறலாம்.

சூர்ய அல்லது சந்திர கிரகணத்தன்று ஜெபிக்க விசேஷமான பலன் கிட்டும்.

பீடாநாஷன ஸ்ரீ சூர்ய மந்திரம் :-

ஓம் நமோ பாஸ்கராய சர்வக்ரஹ பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா ||   


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

சனீஸ்வர சாந்தி பரிகாரம்

                                             

கீழே உள்ள யந்திரத்தைச் சனிக்கிழமை மாலை அல்லது இரவு ஒரு கருப்புப்  பேப்பரில் கரித்துண்டு கொண்டு வரையவும்.சனிக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் அந்த யந்திரம் வரைந்த பேப்பரை 9 தடவை தன் தலையைச் சுற்றி  அதை ஒரு கிணற்றில் போட்டுவிடவும்.பின்னர் அந்தக் கிணற்று  நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ கூடாது.இது எளிய பரிகாரமாகத் தோன்றினாலும் நல்ல பலன்களைத் தரும்.அதிகம் கடன்,அவமானம்,தரித்திரம் போன்ற கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களும் இதைச் செய்து நற்பலன் பெறலாம். 


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday, 11 February 2015

முதுகு வலி ,இடுப்பு வலி தீர அதர்வண வேத பரிகாரம்


ஆண்களுக்கு :-
 அதிகமான முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் அரச மரத்தின் வடக்குப் பக்கம் செல்லும் வேரில் ஒரு சிறு துண்டை வணங்கி எடுத்து ஒரு கருப்புத் துணியில் சிறிது பன்னீர் தெளித்து அதில் அந்த வேரை வைத்து முடிந்து தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்படியாக வலி குறையும். 


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Tuesday, 10 February 2015

சர்வ ரக்ஷாகர ஸ்ரீ சுதர்சன சக்கர மந்திரம்






ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :-

ஓம் நமோ சுதர்சன சக்ராய |
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய | 
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா ||      



மஹாரக்ஷையாக,சக்தி வாய்ந்ததாக விளங்கும் இந்த மந்திரத்தைச் சித்தி செய்யும் முறை மிக எளிது.ஒரு சூரிய அல்லது சந்திர கிரகணத்தன்று விளக்கேற்றி,ஊதுவத்தி ஏற்றி வைத்து 1008 தடவை ஜெபிக்கச் சித்தியாகும். பின்னர் தேவையான போது 3 தடவை  ஜெபிக்க எந்தவிதமான ஆபத்துக்களில் இருந்தும் ,கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும்.


மருத்துவர்கள் மற்றும் ரெய்கி ,ப்ராணிக் ஹீலிங் போன்ற குணப்படுத்தும் சேவை செய்பவர்கள் ,இந்த மந்திரத்தைக் காலையில் குளித்த பின்  3 தடவை ஜெபித்துத் தலையில் நீர் தெளித்துக் கொள்ள அல்லது அட்சதை போட்டுக் கொள்ள நோயாளிகளிடம் இருந்து நோய் மற்றும் கர்ம வினை தாக்காது தடுக்கும். 

நோய் நீக்கவும்,தீய சக்திகளை விரட்டவும் பல ரகசியப் பிரயோகங்கள் உள்ளன.அவற்றை துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்று அஞ்சி வெளியிடவில்லை.குருமுகமாக அல்லது உங்கள் அருகில் உள்ள விஷயம் தெரிந்த பெரியவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.

உயர்வான பலன் தரும் முறை :-

சித்தபுருஷர்களும், யோகிகளும் இம்மந்திர சித்தியினால் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தைக் காணும் பெரும்பேறு பெற்றிருந்தனர்.மந்திரம் சித்தியான பின்னர் தினமும் நள்ளிரவில் 108 தடவை ஜெபித்து வர சுதர்சன சக்கரத்தைத் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம்.ஜெபம் செய்யும் போது  பெரும் பிரகாசத்தோடு ஸ்ரீ சுதர்சன சக்கரம் விரிவடைந்து கொண்டே வரும்.அப்படி வந்தால் நீண்ட நேரம் அதைப் பார்க்காமல் கண்களை மூடி வணங்கி " உங்கள் திருவருள் என்றென்றும் எனக்குக் காப்பாக விளங்க வேண்டுகிறேன் "  என்று வேண்டிக்கொண்டு மந்திரத்தை 3 தடவை ஜெபித்து நீர் அருந்தவும்.       

சைவ உணவு உண்பவர்கள் மட்டும் இம்மந்திரத்தை ஜெபிக்கவும்.உங்களையும் வசிப்பிடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.அல்லது ஏதேனும் விஷ்ணு ஆலயத்தில் வைத்து ஜெபிக்கலாம்.
           
                         வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Tuesday, 3 February 2015

மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் பரிகாரம்

                                                            


மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை விடுவிக்க இந்த பரிகாரம் உதவும்.மகாராஷ்டிரா,மத்தியப்ரதேசம் போன்ற மாநிலங்களில் இதைச்  செய்கின்றனர்.


பாதிக்கப்பட்டவர் தானே செய்துகொள்ளலாம் அல்லது  குடும்பத்தில் யாராவது ஒருவர் அவருக்கு இதைச் செய்யலாம்.


பரிகாரம்:-

வளர்பிறை அஷ்டமி,தேய்பிறை அஷ்டமி,அமாவாசை ஆகிய மூன்று நாட்களிலும் செய்ய வேண்டும்.

கொஞ்சம் மஞ்சளை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
கொஞ்சம் குங்குமத்தை நீரில் குழைத்து வைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் கண்மை எடுத்துக்கொள்ளவும்.

ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பர் எடுத்துக்கொள்ளவும்.அந்தப் பேப்பரில் மஞ்சளால் ஒரு கோடும், குங்குமக்கலவையால் ஒரு கோடும்,கண்மையால் ஒரு கோடுமாக மொத்தம் மூன்று கோடுகள் வரையவும்.பின்,வேகவைத்த அரிசிசாதம் கொஞ்சம் அந்தப் பேப்பரில் வைத்துக்கொண்டு அந்த சாதத்தின் மேல் கொஞ்சம் தயிர் விட்டு சாதத்தின் மேல் சிகப்பு மிளகாய் விதைகள் கொஞ்சம் தூவவும்.    .

பின் அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு மது/ போதைப் பழக்கத்துக்கு அடிமையானவரின் தலை மற்றும் உடலை 11 தடவை இடமிருந்து வலமாக ஓம் நமசிவாய என்று மனதுக்குள் ஜெபித்தபடியே சுற்றவும்.


11 தடவை சுற்றி முடித்த பின் அந்த பேப்பரையும் அதில் உள்ளவற்றையும் அப்படியே ஓடும் நீர்,கிணறு,ஏரி ,குளம்,கடல்,ஆறு எதிலாவது போட்டு விடவும். பின் காலையும் கையையும் கழுவிக் கொண்டு தலையில் கொஞ்சம் நீர் தெளித்துக் கொண்ட பின் வீட்டுக்குள் செல்லவும். 



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

மேன்மை தரும் ஸ்ரீ அக்னி சூர்யன் மந்த்ரம்



சூரியன் இன்றி உலக இயக்கம் இல்லை.சூரியன் அருளும் ஒளியையும் பிராண சக்தியையும் கொண்டே தாவரங்கள் முதல் மனிதர்கள் உட்பட யாவரும் ஜீவித்திருக்கிறோம்.எனவே வேதம் அவரை ப்ரத்யக்ஷ பரமாத்மஹா என்று போற்றுகிறது.இதையே தமிழில் நம் பாரதியார் கண்ணுக்குத் தெரிந்த கடவுளே என்று சூரியதேவனைப் போற்றுவார்.இதன் காரணமாகவே நவக்கிரஹங்களில் ஒருவராகவும், நவக்கிரகங்களுக்குத் தலைவராகவும் போற்றப்படுகிறார்.ரசவாதத்தில் கூட இவரது அருளும், பங்கும் பிரதானமானது.பஞ்ச பூதங்களில் அக்னி அம்சமாகக் கருதப்படுபவர். சூரியன் வெப்பத்தை அளிக்கிறது.ஆனால், குளிர்ச்சியைத் தரும் சந்திரனும் கூட சூரியனிடம் இருந்தே அதற்கான சக்தியைப் பெற்றுச் செயல்படுகிறது.


வேதம்,உபநிஷதம் ,மந்திர,தந்திர சாஸ்திர நூல்களும் ஆதி தேவன் என்று அழைக்கப்படும் சூரியனைப் பற்றி மிக  உயர்வாகவே பேசுகின்றன.இன்றும்  பலர் வேத முறையிலும்,தாந்த்ரீக முறையிலும் சூர்யபகவானை உபாசனை செய்து வருகின்றனர்.

இங்கு நாம் பார்க்கவிருப்பது அக்னி சூர்ய மந்திரம் இம்மந்திர ஜெப பலத்தால் கர்ம வினையின் கெடுபலன்கள் வெகுவாகக் குறையும்.பித்ரு தோஷம் தீரும்.வேலையில்,அதிகாரிகளுடன் உள்ள பிரச்சனைகள் தீரும்.ஜாதகத்தில் சூரியன் பலமாக அமையப் பெறாதவர்கள் இம்மந்திர ஜபம் செய்து வர சூரியனின் அருள் பெற்று அவரது காரகத்துவ பலன்களைக் குறைவின்றிப் பெறலாம்.அதோடு வேலை,தொழில்,அரசாங்க காரியம் இவற்றில் உயர்வும்  கிட்டும்.இதை குடும்பத்தில் உள்ள யாவரும் தனியாகவோ அல்லது சேர்ந்தோ செய்யலாம்.

அமாவாசை அன்று துவங்கிக் குறைந்தது 10 ஞாயிற்றுக்கிழமைகள் 108 எண்ணிக்கை ஜெபித்து வரலாம்.
                                                 
                                                           அல்லது

ஒரே நாளில் (அமாவாசை அன்று) 1008 உரு ஜெபித்தும் முடிக்கலாம்.


ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசையில் செய்ய மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம்.


சுத்தமான பசு நெய் ஊற்றி  விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டு அதன் முன் கிழக்கு முகமாக அமர்ந்து, குருவையும்,குலதெய்வத்தையும்  வணங்கிக் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபிக்கவும்.

ஸ்ரீ அக்னி சூர்ய மந்திரம் :-

ஓம் பூர் புவ ஸூவஹா |அக்னயே ஜாதவேத இஹாவஹா | 
சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா ||


                              வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com 

குழந்தைகளுக்குத் தீர்க்காயுள் தரும் ஸ்ரீ துர்க்காதேவி மந்திரம்



சில குழந்தைகள் கொடிய நோய்களால் பாதிப்படைந்து ஆபத்தான சூழ்நிலையில் இருப்பார்கள்.சில குழந்தைகளுக்கு ஜாதகப்படி ஆயுள் கண்டம்,பிறவியில் இருந்தே நோய்,பாதிப்புகள் இருக்கும்.இவை தீரக்  கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்யவும்.


முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தைத் தினமும் வடக்கு நோக்கி அமர்ந்து 27 தடவை ஜெபித்து அந்தத் தீர்த்தத்தைக் குடிக்கக் கொடுத்து வர குழந்தைகளின் ஆயுள் கண்டம்,கொடிய நோய்களின் பாதிப்புகள் நீங்கும்.அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளுக்கும் இதைச்  செய்யலாம்.            

மந்திரம் :-

கும் கும் கும் தும் தும் தும் |துர்கே துர்கே மஹாதுர்கே|
நாசய நாசய ஹன ஹன பச பச முத முத பந்த பந்த ஹிசான் |
மகாஷாஷ்தி ரூபிணி|இமாம் பாலகம் ரக்ஷ ரக்ஷ சிரஞ்ஜீவினம் குரு குரு|
ஹ்ரீம் ஸ்ரீம் கும் தும் பட் ஸ்வாஹா ||  


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

நன்றாகப் படிக்க,ஞாபகசக்தி அதிகரிக்க,சகல கலைகளிலும் சிறந்து விளங்க ஸ்ரீ மாதங்கி மந்திரம்





சகலகலாவல்லி  ஸ்ரீ மாதங்கி மஹாமந்த்ரம்:-

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் |
ஓம் நமோ பகவதி சாரிகே சகலகலா கோவிதே | 
மம தேவி போதய போதய ஸ்வாஹா ||


இந்த மந்திரத்தை வளர்பிறை புதன் அல்லது வியாழக்கிழமை அன்று கிழக்கு நோக்கிய அம்ர்ந்து ஜெபிக்கத் தொடங்கவும்.முதல் நாள் வெற்றிலை,பாக்கு, பழங்கள்,பால்,பாயசம் படைக்கவும் ,மற்ற நாட்களில் இயன்றதைப் படைக்க்கவும்.வெண்ணிறப் பூக்களால் கீழ்க்கண்ட 16 நாமங்களால் அர்ச்சனை செய்து பின் மந்திரம் ஜெபிக்கவும்.குறைந்தது 27 தடவையும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் எண்ணிக்கை கூடக்கூட பலன் அதிகம் கிடைக்கும்.


பிரயோகம்: 1       12 நாட்கள் ஜெபத்திற்கு பின் முகத்தில் தேஜஸ் கூடும். மந்திரத்தை ஜெபித்தபடியே சந்தனக்கட்டையை  அரைத்து அந்த சந்தனத்தை நெற்றியில் அணிந்து வர சகல கலைகளிலும் மேன்மை அடைவீர்கள்.     பார்ப்பவர்கள் உங்களை அறிவில் சிறந்தவர்களாகக் கருதி நடத்துவார்கள்.

பிரயோகம் : 2   அஞ்சனம் செய்து பயன்படுத்த 100 சதவீதம் பலன் பெறலாம்.(குருமுகமாக அறிந்து கொள்ளவும்).
   

             ஸ்ரீ  ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்:-

ஓம் சங்கீதயோகின்யை நமஹ
ஓம் ஷ்யாமாயை நமஹ
ஓம் ஷ்யாமளாயை நமஹ
ஓம் மந்திரநாயிகாயை நமஹ
ஓம் மந்திரிண்யை நமஹ
ஓம் சசிவேசான்யை நமஹ
ஓம் ப்ரதானேச்யை நமஹ
ஓம் சுகப்ரியாயை நமஹ
ஓம் வீணாவத்யை நமஹ
ஓம் வைணிகீயை நமஹ
ஓம் முத்ரிண்யை நமஹ
ஓம் ப்ரியகப்ரியாயை நமஹ
ஓம் நீபப்ரியாயை நமஹ
ஓம் கதம்பேஸ்யை நமஹ
ஓம் கதம்பவனவாசினியை நமஹ
ஓம் சதாமதாயை நமஹ

                           வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 2 February 2015

கஷ்டங்கள் தீர,எதிரிகளை வெல்ல ஸ்ரீ பகளாமுகி மாலா மந்த்ரம்



ஸ்ரீ  பகளாமுகி தேவியின் மாலா மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர ஆயுள் கூடும்,அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது.எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.பித்ரு தோஷம்,கிரக தோஷம் ,மாந்த்ரீக பாதிப்புகள் நீங்கும். கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பிரயோகத்தைச் செய்ய நிறைவான பலன் கிடைக்கும்.

பிரயோகம் 1:-
மஞ்சள் கிழங்கை எடுத்து "ஓம் ஹ்ரீம் பகளாமுகி  ஸ்வாஹா "  என்று ஜெபித்தபடியே அரைத்து  அந்த விழுதை ஒரு மஞ்சள் நூலில் தடவி  மந்திரத்தை 21 தடவை ஜெபித்து அந்தக் கயிற்றை ரக்ஷையாக அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் கிட்டும்.

பிரயோகம் 2:-

மஞ்சள் கிழங்கை எடுத்து "ஓம் ஹ்ரீம் பகளாமுகி  ஸ்வாஹா " என்று ஜெபித்தபடியே அரைத்து  அந்த விழுதை ஒரு வெற்றிலையில் வைத்துக் கொண்டு மந்திரத்தை 21 தடவை ஜெபித்து முடித்த பின் அந்த மஞ்சள் விழுதை ஒரு செம்பில் நீர் வைத்து அதில் கரைத்து வீட்டின் மேலும், வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து விட மேற்கண்ட பலன்கள் கிட்டும்.

பிரயோகம் 3 :-   இதை உடற்கட்டு மந்திரமாகவும் பயன்படுத்தலாம்.ஏதேனும் பூஜை செய்யும் முன் அல்லது காடு,பயங்கரமான இடங்களுக்குச் செல்லும் பொழுது இதை ஆபத்து ஏதும் ஏற்படாது காக்கும்.பயந்தவர்களுக்கு இதை 3 தடவை ஜெபித்துத் தண்ணீரில் 3 தடவை ஊதி அந்தத் தண்ணீரால் முகத்தில் தெளிக்கப் பயந்ததால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.


ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்:-

ஓம் நமோ பகவதி | ஓம் நமோ வீரப்ரதாப விஜய பகவதி பகளாமுகி | மம சர்வ நிந்தகானாம் சர்வ துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய | ஜிஹ்வாம் முத்ரய முத்ரய |  புத்திம் விநாசய விநாசய |அபாரபுத்திம் குரு குரு ||ஆத்ம விரோதினாம் சத்ரூனாம் சிரோ லலாடம் முகம் நேத்ர கர்ண நாசிகோரு பாத அன்னு அன்னு |தந்தோஷ்டஹ ஜிஹ்வாம் தாலு குஹ்ய குதா கட்டி ஜானு சர்வாங்கேஷு கேசாதி பாதானாம் பாதாதி கேச பர்யந்தம் ஸ்தம்பய  ஸ்தம்பய | கேம் கீம் மாரய மாரய |பரமந்திர பரயந்திர பரதந்த்ராணி ச்சேதய ச்சேதய |ஆத்ம மந்தர தந்த்ராணி ரக்ஷ  ரக்ஷ | க்ரஹம் நிவாரய நிவாரய |வ்யாதிம் விநாசய விநாசய |துக்கம் ஹர ஹர | தாரித்ர்யம் நிவாரய நிவாரய |சர்வ மந்த்ரஸ்வரூபிணி துஷ்ட க்ரஹ பூத க்ரஹ பாஷான் சர்வ சாண்டாள க்ரஹ யக்ஷ கின்னர கிம்புருஷ க்ரஹ பூத பிரேத பிசாசானாம் சாகினி டாகினி க்ரஹானாம் |பூர்வ திஷம் பந்தய பந்தய வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ | தக்ஷிண திஷம் பந்தய பந்தய ஸ்வப்ன வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ |பச்சிம திஷம் பந்தய பந்தய உக்ரகாளி  மாம் ரக்ஷ ரக்ஷ |பாதாள திஷம் பந்தய பந்தய பகளா பரமேஸ்வரி  மாம் ரக்ஷ ரக்ஷ |சகல ரோகான் விநாசய  விநாசய  | சத்ரு பலாயணம் பஞ்சயோஜன்மாதயே  ராஜஜன ஸ்வபக்ஷம் குரு குரு |சத்ரூன் டஹ டஹ பச பச ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய ஆகர்ஷய ஆகர்ஷய |மம சத்ரூன் உச்சாடய உச்சாடய ஹ்லீம் பட் ஸ்வாஹா ||

 

                           வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Tuesday, 27 January 2015

பலன் தரும் ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்



1.ஸ்ரீ ஹனுமத் சுலோகம் :-

அசாத்ய  சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|

எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கி வேண்டிய பின்னர் துவங்க சிறப்பாக முடியும்.
ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில் முடிவடையாமல் நின்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ஹனுமன் ஆலயம் சென்று அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி அமர்ந்து இந்த ஸ்லோகத்தை  27 தடவை ஜெபித்து வேண்டிக்கொள்ள தடைபட்ட காரியம் விரைவில் முடியும் சூழல் உருவாகும்.


2.வியாதிகள்,எதிரிகள் நீங்க ,வசீகரம் தரும் மந்திரம் 

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||


3.எல்லா ஆபத்துக்களில் இருந்தும் விடுபட :-

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |ஆத்யாத்மிகாதி தெய்வீகாதி
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||

உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து 108 தடவை இம்மந்திரம் ஜெபித்து கையில் ரக்ஷை கட்டிக்கொள்ள மனிதர்களாலும், இயற்கை மற்றும் துஷ்ட சக்திகளாலும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது சர்வரக்ஷையாக விளங்கிக் காக்கும்.ரக்ஷையை அணியும் முன் மேற்சொன்ன மந்திரம் 3 தடவை ஜெபித்து அர்ச்சித்து பின் அணிந்து கொள்ளவும். 


4.பிறரால் செய்யப்பட திருஷ்டி,மந்திர யந்திரங்களால் உண்டான பாதிப்புகள் நீங்க, நோய்கள் ,பயம் நீங்க,சர்வ கார்யங்களிலும் வெற்றி பெற :   
ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய |
சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய |
சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய |
சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா ||

மேற்சொன்ன பலன்கள் போக மேலும் சில காரியங்களுக்கும் இம்மந்திரம் பயன்படும்.எதிர்களுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வெற்றி கிட்டும்.

5.கெட்ட சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்க :-
ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா ||

அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் இருந்தால் இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும்.உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு "ஹ்ராம்" என்று எழுதி  இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச்  சுருட்டித் தாயத்துக்குள்  அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத,ப்ரேத,பிசாசு,துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.
தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு,கடை,தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீடு,கடை,தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்.


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Sunday, 25 January 2015

திருட்டு பயம் நீக்கும் ஸ்ரீ காளிதேவி மந்திரம்

பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மந்திரத்தைப் பதிவு செய்கிறேன்.அனேக இடங்களில் பொருட்கள் திருடு போகின்றன, மேலும் திருடர்கள் அதன் உரிமையாளர்களையும் கொலை செய்து விடுகின்றனர். பெண்கள் இரவில் தனியே வீட்டில் தங்க நேரிட்டால் நிச்சயம் பயத்துடனே உறங்க வேண்டிவரும்.எவராலும் வீட்டில்,அலுவகத்தில் திருட்டு நேராது தடுக்கும் மந்திரபிரயோகம் கீழே தரப்பட்டுள்ளது.செய்து பலன் பெறுங்கள்.

செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலையில் 6 முதல் 7 மணிக்குள் 12 மிளகு எடுத்துக்கொண்டு  தென்மேற்கு மூலையிலிருந்து வீட்டை வலமிருந்து இடமாக 3 தடவை சுற்றி வரவும் ஒவ்வொரு சுற்றிலும் ஒரு மிளகை வீட்டின் ஒவ்வொரு மூலையில் போட்டு விட்டுச் சுற்றவும்.
வீட்டைச் சுற்றும் பொழுது கீழே உள்ள மந்திரம் ஜெபித்தபடி சுற்றவும்.
இந்தப் பிரயோகத்தைச்  செய்யும் முன் விளக்கேற்றி வெற்றிலை,பாக்கு,பால், பழங்கள்,பாயசம்,எலுமிச்சம்பழம் படைத்து ஸ்ரீ காளிமாதாவை வேண்டி பூஜை செய்யவும்.

மந்திரம் :-

ஓம் கராலினி ஸ்வாஹா |
ஓம் கபாலினி ஸ்வாஹா |
ஹ்ரௌம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் |
சோர பந்தக ட்டஹ ட்டஹ ||            



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 15 January 2015

கணவன் மனைவி ஒற்றுமைக்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள்

               

தம்பதிகள் ஒற்றுமைக்கு உதவும் பொதுவான மற்றும் குறிப்பிட்ட தேவைகளுக்கான சில ஆன்மீக ரகசியங்கள் உள்ளன.இவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது தேவையான ஒன்றைப் பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்வு வாழுங்கள்.


1.திருமணம் ஆனதும் தம்பதிகள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ ஆலயங்களுக்குச் செல்லும் முன் முதலில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்திற்குச் சென்று வணங்குவது தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தையும் அன்பையும் வளர்க்கும்.


2.மனைவியின் அன்பைப் பெற திங்கட்கிழமை அன்று ஏதாவது வெள்ளை நிறமுடைய பொருட்களை அன்பளிப்பாக (GIFT) அளிக்கலாம்.

3.நீங்கள் ஒழுக்கமாக நடந்து கொண்டாலும் உங்கள் மனைவி உங்களுக்கு வேறு ஒருவருடன் தவறான தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்து வந்தால் வெள்ளிக்கிழமை தோறும் பசுவுக்குப் புல் வாங்கிக் கொடுத்து வர உங்கள் மனைவியின் மனம் மாறி உங்கள் மீது அன்பு ஏற்படும்.

4.வளர்பிறை அஷ்டமி அன்று மனைவியின் நெற்றி மற்றும் வகிட்டில் கணவர் செந்தூரம் அல்லது குங்குமம் இட்டு வரத் தம்பதிகளுக்குள் அன்யோன்யம் பெருகும்.

5.கௌரி ஷங்கர் ருத்ராக்ஷம் ( இயற்கையாக இணைந்த ருத்ராக்ஷம் )  வீடு அல்லது அலுவலகத்தில் வைத்துப் பூஜித்து அணிந்து வர தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தையும் ஏற்படும்.


                              வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday, 14 January 2015

தீராத நோய்கள் தீர ,சர்க்கரை நோய் பாதிப்புகள் குறைய,கணவன் மனைவி அன்யோன்யம் உண்டாக ஸ்ரீ சுக்ரபகவான் மந்திரம்


ஓம் நமோ பகவதே பார்கவாய சுக்ரமுனியே |
ம்ருதசஞ்ஜீவினீம் தாபய தாபய ஸ்வாஹா |ஓம் நமஹ ||


வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர ஹோரையில் ஸ்ரீ துர்க்கை ஆலயத்தில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து வரத் தீராத நோய்கள் தீரும்.சர்க்கரை நோய் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.தம்பதிகளுக்குள் அன்யோன்யம் உண்டாகும்.செல்வநிலையில் உயர்வு உண்டாகும்.

வெண்ணிற ஆடைகள் அணிந்து ஜெபித்தால் நிறைவான பலன் கிடைக்கும்.


                                வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

ஸ்ரீ ஹனுமன் உடல்கட்டு மந்திரம்

                                         ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜய ராம்
                ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம் || 
                  ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் || 




சாத்வீக மந்திரம் தவிர்த்த பிற வகையான ராஜச மற்றும் தாமச தெய்வ மந்திர உபாசனை மற்றும் பூஜையின் போது எதிர்பாராத சில ஆபத்துக்கள் அல்லது துஷ்ட சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகலாம்.அதைத் தவிர்க்க உடல் கட்டு மந்திரம் ஜெபித்த பின் மந்திர ஜபம் செய்வது பாதுகாப்பானது.

முதலில் ஊதுபத்தி ஏற்றி வெற்றிலைப் பாக்கு ,வாழைப்பழம் ,கொய்யாப்பழம் படைத்து முன்னால் ஒரு டப்பியில் விபூதி வைத்துக் கொண்டு மந்திரத்தை 1008 தடவை ஜெபித்துச் சித்தி செய்து கொள்ளவும்.பின்னர் தேவையான போது 3 தடவை ஜெபித்துச் சிரசிலும்,நெற்றியிலும், மார்பிலும் விபூதி அணிந்து கொள்ளக் காப்பாக விளங்கும்.குளக்கரை,நதிக்கரை,கடற்கரையில் மந்திரத்தைச் சித்தி செய்வது சிறப்பு.


உடற்கட்டுக்கு மட்டுமின்றி பயந்த குழந்தைகள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த விபூதியைப் பூசி வர அவற்றின் பாதிப்புகள் நீங்கும்.இரவில் தனியாக உறங்கப் பயப்படுபவர்கள் இதை ஜெபித்து நெற்றியில் விபூதி பூசி உறங்கப் பயமற்ற உறக்கம் உண்டாகும்.


மந்திரம்:-

ஓம் நமோ பரமாத்மனே அஞ்சனாசுதாய |
ஹும் ஹும் ஹும் மம சரீரம் பந்தனம் |
ரக்ஷ குரு குரு ஸ்வாஹா ||  



                                 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

துக்க நாசன,சத்ரு ஜெய ஸ்ரீ துர்க்கா மந்திரங்கள்




துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்  துக்கார்த்தி நாசின்யை மகாமாயே ஸ்வாஹா ||


தினமும்  ராகு காலத்தில் அல்லது சுக்ர ஹோரையில்  இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரத் துன்பங்கள் தீரும்.



சத்ருக்கள் தொல்லை நீங்க :-

ஓம் ஹ்ரீம் மகிஷமர்தின்யை ஸ்வாஹா

தினமும் செவ்வாய் ஹோரையில் ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Tuesday, 13 January 2015

இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்துடன் பேச,தரிசிக்க உதவும் மந்திரம்





இம்மந்திரம் பல தாந்த்ரீகர்கள்,ஜோதிடர்கள் மற்றும் யோகிகளால் பயன்படுத்தப்படுகிறது.

இம்மந்திர ஜெபத்தின் பயனாக நமக்கு விருப்பமான தேவதையின் ( இஷ்ட தெய்வம்,குலதெய்வம்) தரிசனம் கனவில் கிடைக்கும்.சில நாட்களில் அந்த தெய்வத்தோடு பேசி நம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.மேலும் உறங்கும் முன் ஏதேனும் ஒன்றை கனவில் காண வேண்டுமென்றால் ஊதுபத்தி ஏற்றிச் செம்பில் தண்ணீர் வைத்துக் கொண்டு இன்ன காரியம் அறியவேண்டும் என்று சங்கல்பம் செய்து 108 தடவை மந்திரம் ஜெபித்து செம்பில் உள்ள தீர்த்தத்தைக் குடித்து உறங்கினால் வேண்டியது கனவில் வெளிப்படும். 

சனிக்கிழமை காலை அல்லது இரவில் ஆரம்பிக்கலாம்.ஸ்வப்நேச்வரி தேவியின் படத்தை பிரேம் செய்து முன்னால் வைத்துக் கொள்ளவும். வீட்டை அல்லது பூஜை அறையை பச்சைக் கற்பூரம் கலந்த நீரால் சுத்தம் செய்யவும்.பின்னர் நெய் விளக்கேற்றி பூக்களால் விளக்கை அர்ச்சனை செய்து ,சாம்பிராணி,குங்கிலியம் போட்டு கற்பூரஆரத்தி காட்டவும்.வெள்ளை விரிப்பு விரித்துக் கிழக்கு முகமாக அமரவும்.தினமும் குறிப்பிட்ட ஒரே எண்ணிகையில் ஜெபம் செய்து 45 முதல் 90 நாட்களுக்குள் 51000 உரு மந்திரம் ஜெபித்து முடிக்க மந்திரம் சித்தியாகும்.

(45 நாட்கள் என்றால் 44 நாட்களுக்கு 1133 எண்ணிக்கையும் 45 வது நாள் 1148 உரு ஜெபித்து பூஜையை முடிக்கவும்.)

 (90 நாட்கள் என்றால் 89 நாட்களுக்கு 566 எண்ணிக்கையும் 90 வது நாள் 626 உரு ஜெபித்து பூஜையை முடிக்கவும்.)

மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே இஷ்ட தர்ஷய நமஹா||  



                            வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

ஸ்ரீ ஸ்வப்ன காளி மந்திரம்




ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணிக்கு மேல் பூஜையைத் தொடங்கவும்.தாமரைத்தண்டுத் திரி போட்டு விளக்கேற்றி வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பூக்கள்,குங்குமம் படைத்துக் கரும்புள்ளி   இல்லாத ஒரு எலுமிச்சம்பழத்தை நாலு துண்டுகளாக நறுக்கி அதில் குங்குமம் தடவி விளக்கின் முன் வைத்து மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்.முதல் நாளும் 21 வது நாளும் சிறப்பாகப் பூஜை செய்து பாயசம் படைக்கவும்.தினமும் 351 தடவை 21 நாட்களுக்குத் தொடர்ந்து ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் நம் மனதில் தோன்றும் குழப்பங்கள் மற்றும் எந்தக் கேள்விக்கும் உறங்கும் முன்னர் ஊதுபத்தி ஏற்றி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்துக் காளிதேவியை வேண்டி உறங்கக் கனவில் நம் கேள்விக்கான விடை கிடைக்கும்.

குறிப்பு:-
முதல் நாள் மந்திரம் ஜெபிக்கும் முன் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்து ரக்ஷை அணிந்து கொண்டு ஜெபம் தொடங்கவும்.
ஓம் க்ரீம் பத்ரகாள்யை ஏஹிஏஹி மகாதேவி பாதுகாப்யம் தயாநிதே || என்று 7 தடவை ஜெபித்து ஒரு கறுப்புக் கயிற்றில் 7 முடிச்சுப் போட்டு அதை வலது கையில் கட்டிக் கொள்ளவும்.


ஸ்ரீ ஸ்வப்ன காளி மந்திரம் 

காளி தேவி நமஸ்துப்யம் சர்வ காமார்த்த சாதிகே |
மம சித்தமசித்தம் வா  ஸ்வப்னே சர்வ ப்ரதர்ஷய ||



                                     வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Saturday, 10 January 2015

உங்கள் ராசிப்படி ஜெபிக்க வேண்டிய மந்திரம்


மேஷம்  - ஓம் ஐம் க்லீம் சௌம்

ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்

கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம்  - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

தனுசு  - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்



                                         வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Friday, 9 January 2015

கேது கிரஹ தோஷ நிவாரணப் பரிகாரங்கள்



                               ஜனன ஜாதகத்தில் பாதகமான ஸ்தானங்களில் கேதுபகவான் அமையப்பெற்றவர்கள் கேதுபகவானின் தசை மற்றும் புத்தி நடைபெறும் காலங்களில் கீழ்க்கண்ட பரிகாரங்களில் ஏதாவது ஒன்றைச் செய்து வரப் பாதிப்புகள் பெருமளவில் குறையும்.


1.43 நாட்களுக்குத் தொடர்ந்து நாய்க்கு சப்பாத்தி அல்லது ரொட்டி கொடுக்கலாம்.

2.வெள்ளை அல்லது கருப்பு எள் தானமளிக்கலாம்.

3.ஒரு வெள்ளி நாணயத்தைப் பட்டு நூலில் கட்டி கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

4.பாய்,தரை விரிப்பு,போர்வை இவற்றை ஆன்மீக அல்லது புனித ஸ்தலங்களுக்கு தானமளிக்கலாம்.

5.வெள்ளி மோதிரம் அணியலாம்.

6. விநாயகர் அல்லது காலபைரவரைத் தொடர்ந்து வழிபட நல்ல பலன்களைத்  தரும்.

7.காலபைரவருக்கு வாழை இலையில் பச்சரிசி பரப்பி அளிக்கலாம்.

8.திரயோதசி திதியில் விரதம் இருக்கலாம்.

9.மாலை வேளையில் விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றலாம்.

10.பிராமணர் அல்லது பூசாரிக்கு சர்க்கரை (சீனி) தானமளிக்கலாம்.

11.காலை மாலை பெற்றோரின் காலில் விழுந்து அவர்கள் ஆசியைப் பெறலாம்.

12.சுமங்கலிப் பெண்களுக்கு எள்ளுருண்டை தானம் செய்யலாம்.

13.பச்சை நிற கர்சீப் வைத்துக் கொள்வது நல்லது.

14.ஞாயிற்றுக்கிழமை அன்று கன்னிப்பெண்களுக்கு  லசி வழங்கலாம்.

15.ஒரு ஐஸ் கட்டியை நாலு துண்டாக உடைத்து அதை ஓடும் நீரில் போட்டு விடவும்.

16.வெறும்  தரையில் படுத்து உறங்கக் கூடாது.

17.வெண்பட்டு நூலை கையில் கட்டிக்கொள்ளவும்.

18.காதில் தங்கக்  கம்மல்,கடுக்கன் அணியலாம்.

19.பஞ்சலோகத்தில் செய்யப்பட மோதிரம் அல்லது காப்பு அணியலாம்.

20.வாழைப்பழம்,கோதுமை இவற்றை ஒரு மஞ்சள் தியில் வைத்து பிராமணர் அல்லது பூசாரிக்கு தானமளிக்கலாம்.

21.மஞ்சள் சந்தனம் நெற்றில் இட்டுக் கொள்ளவும்.



   

கேது கிரஹ தோஷ நிவாரண பரிகாரங்கள்

                     

மேலே சொன்னவை பொதுவானது.மேலும்,அன்பர்கள் தங்கள் ஜாதகத்தில் கேது பகவான் 12 பாவங்களில் எங்கெங்கு இருந்தால் என்ன பரிகாரங்களைச் செய்து கொள்வது நன்மை தரும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


லக்னம் - சிறு இரும்பு உருண்டை வாங்கி அதற்க்கு சிகப்பு பெயிண்ட் அடித்து வீட்டில் வைத்துக்கொள்ளவும்.

2 ஆம் பாவம் - நெற்றியில் எப்போதும் குங்குமம் அணிந்து கொள்ளவும்.

3 ஆம் பாவம் - 3*3 அளவுள்ள செம்புத் தகடு வாங்கி வீட்டு முன்கதவின் மேல்பகுதியில் மாட்ட அல்லது பதிக்கவும்.

4 ஆம் பாவம் - தங்கம் போட்டுக் காய்ச்சிய பாலை அருந்தி வரவும்.   

5 ஆம் பாவம் - பிராமணர் அல்லது பூசாரிக்கு மஞ்சள் பட்டுத்துணி  தானம் தரலாம்.

6 ஆம் பாவம் -   வீட்டிற்கு இரும்புப் பூட்டு பயன்படுத்தக்கூடாது .

7 ஆம் பாவம் - 4 எலுமிச்சம் பழம் எடுத்து தலையைச் சுற்றி ஓடும் நீர் அல்லது கடலில் போடவும். 

8 ஆம் பாவம் - நாய்க்கு உணவளித்து வரலாம். 

9 ஆம் பாவம் - வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளவும்.முடிந்த உதவிகளைச் செய்யவும்.

10 ஆம் பாவம்  - வீட்டின் அஸ்திவாரத்தில் கொஞ்சம் பால் ஊற்றி பின்னர் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம்  தேன்  ஊற்றி சுட வைத்து அதையும் ஊற்றி விடவும்.

11 ஆம் பாவம் - பாலில் குங்குமப்பூ போட்டுக் காய்ச்சிக்  குடித்து வரவும்.

12 ஆம் பாவம் -   விநாயகரை வழிபட்டு வரவும்.
                      
                         
                                          வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ராகு கிரஹ தோஷ நிவாரணப் பரிகாரங்கள்


ஜனன ஜாதகத்தில் பாதகமான ஸ்தானங்களில் ராகுபகவான் இடம் பெற்றிருந்தால் அது சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்பை விட அதிகமான சங்கடங்களைத் தரும்.உதாரணமாக நோய்,எதிரிகளால் தொல்லை,மாந்திரீக மற்றும் அமானுஷ்ய சக்திகளால் பாதிப்பு ஏற்படலாம்.அப்படி அமையப் பெற்றவர்கள் ராகுபகவானின் தசை மற்றும் புத்தி நடைபெறும் காலங்களில் கீழ்க்கண்ட பரிகாரங்களில் ஏதாவது ஒன்றைச் செய்து வரப் பாதிப்புகள் பெருமளவில் குறையும்.


1.வீட்டில் கருப்பு நிற நாய் வளர்க்கலாம்.அல்லது கருப்பு நிற நாய்க்குத்  தினமும்  உணவளிக்கலாம்.கருப்பு நிற நாய் இல்லை என்றால் சிகப்பு தவிர மற்ற நிறமுள்ள நாய் வளர்க்கலாம் அல்லது உணவளிக்கலாம்.

2.நிலக்கரி கொஞ்சம் வாங்கி அதை தலையைச் சுற்றி ஆறு அல்லது கடலில் போடத் தொழிலில் தொடர்ந்த நஷ்டம்,பிரச்சனைகள் ,அரசாங்கத் தொல்லைகள் தீரும்.

3.சம சதுர வடிவ வெள்ளித்தாயத்தைக் கழுத்தல் அணிய நன்மை உண்டாகும்.
4.ஒரு தேங்காயைத் தலையைச் சுற்றி ஓடும் நீரில் போடப் பாதிப்புகள் குறையும்.

5.  கடுகு எண்ணையைத் தானமாக அளிக்கலாம்.

6.மஞ்சள் சந்தனம் அல்லது குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றில் அணிந்து வரலாம்.

7.இரவில் பார்லி அரிசியைப் பாலில் ஊறவைத்துக் காலையில் ஓடும் நீரில் போடலாம் அல்லது பறவைகளுக்கு உணவாக அளிக்கலாம்.

8.சாதுக்கள் ,மகான்களுக்கு வெண்ணிறப் போர்வை தானமாக அளிக்கலாம்.

9.மாதாந்திர மளிகைப் பொருட்கள் வாங்கும் பொழுது கொஞ்சம் குங்குமப்பூ அல்லது குங்குமம் வாங்குவது அதிர்ஷ்டம் தரும்.
 
 
மேலே சொன்னவை பொதுவானது.மேலும்,அன்பர்கள் தங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் 12 பாவங்களில் எங்கெங்கு இருந்தால் என்ன பரிகாரங்களைச் செய்து கொள்வது நன்மை தரும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



ராகு கிரஹ தோஷ நிவாரண பரிகாரங்கள்

                     

லக்னம் - கழுத்தில் வெள்ளி செயின் அணிவது நல்லது.

 
2 ஆம் பாவம் - ஓட்டை அல்லது பழுதில்லாத வெள்ளி உருண்டை ஒன்றை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 
3 ஆம் பாவம் - வெள்ளியில் சிறு பெட்டி போல் செய்து அதில் கொஞ்சம் அக்ஷதை வைத்துச் சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 
4 ஆம் பாவம்- 4 கிலோ அல்லது 400 கிராம் பார்லி அரிசி வாங்கி அதை ஓடும் நீரில் போடவும். 

 
5 ஆம் பாவம் - மனைவி /கணவன் தவிர பிறரோடு தவறான தொடர்பைத் தவிர்க்கவும்.வெள்ளியில் யானை உருவத்தை டாலராகவோ அல்லது  பிம்பமாகவோ செய்து கழுத்தில் அணியலாம் அல்லது சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம்.

 
6 ஆம் பாவம் -   ஈயத்தில் திக்காக சிறிய உருண்டை ஒன்று செய்து அதை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 
7 ஆம் பாவம் - சரஸ்வதி வழிபாடு செய்ய நன்மை உண்டாகும்.

 
8 ஆம் பாவம் -  கொஞ்சம் பெருஞ்சீரகத்தைக் வெள்ளைத் துணியில் முடிந்து உறங்கும் பொழுது தலையணைக்கடியில் வைத்து உறங்கி வரலாம்.

9 ஆம் பாவம் - நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.நெற்றியில் எப்போதும் குங்குமம் இருப்பது நல்லது.  

 
10 ஆம் பாவம்  - வெள்ளை நிறத்தில் தொப்பி,ஹெல்மெட் ,தலைப்பாகை அணிவது பாதிப்பைக் குறைப்பதோடு அதிர்ஷ்டம் தரும்.நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் தொப்பி,ஹெல்மெட் ,தலைப்பாகை அணியக் கூடாது.

 
11 ஆம் பாவம் - வெள்ளி டம்ளரில் நீர் அருந்தலாம் .

 
12 ஆம் பாவம் - கொஞ்சம் பாசிப்பயிரை வெள்ளைத் துணியில் முடிந்து உறங்கும்  பொழுது தலையணைக்கடியில் வைத்து உறங்கி வரலாம்.  
                      
                         
  வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Thursday, 8 January 2015

மீன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்




1.சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.

2.பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது.

3.மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.

4.ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.

5.வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.

6.வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.

7.அரசமரப் பிரதட்சிணம் மற்றும்  வழிபாடு நன்மை பயக்கும்.

8. யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது.

9.வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

10.தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக்  கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.

11.பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்.

12.கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.

13.குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

கும்ப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்



1.கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.

2.குங்குமப்பூ அரைத்துக் குழைத்து  நெற்றியில் திலகம்  இட்டு வர  நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.

3.மாதம் ஒரு முறை  குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள்  நீங்கும்.

4.சதுரவடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்துக்  கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழிழில் உயர்ந்த நிலை கிட்டும்.

5.வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாகச் செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்திருந்தால் செல்வம் பெருகும்.

6.ஏழைகள் அலல்து கோவில்களுக்கு  எண்ணெய் தானம் செய்யலாம்.

7.ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம்.ஆனால் அதை அருந்தக்கூடாது.

8.வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் வைக்கக் கூடாது.

9.விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்.

10.மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்




1.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள்,யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்பு,ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள்,எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.

2.ஆண் /  பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ ,அதற்காக முயற்சிக்கவோ கூடாது.இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.

3.பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும்.அதில் இருந்து மண் எடுத்து  நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.

4. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.

5.48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நாளது.அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல.

6.கருப்பு,நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.

7.ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால்,மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும்.இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.

8.கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்




1.தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.

2.தந்தையின் படுக்கை,ஆடைகள்,உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.

3.பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.

4.திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர்,அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.

5.வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

6.வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.

7.அரசமரப் பிரதட்சிணம்,வழிபாடு நன்மை தரும்.

8.யாரையும் ஏமாற்றவோ ,பொய் சாட்சி கூறவோ கூடாது.

9.  வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்





1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.

2.தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.

3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.

4.செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.

5.சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.

6.பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7.இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.

8.யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள்.அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.

9.செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா  இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.

10.செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.

11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.

12.மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .

13.செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை,கடன்,நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

துலாம் ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்





1.இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.

2.கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை,தயிர்,உருளைக்கிழங்கு  தானமாக அளிக்கலாம்.

3.வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில்  கோமியம் ( பசுமூத்திரம் ) தெளித்து வர செல்வம் பெருகும்.

4.மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.

5.நீங்கள் ஆண் என்றால்  மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்.

6.வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.

7.நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள்.அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.

8.பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.

9. வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன்  விட்டு  வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.

10.தானமாக எதையும் பெறாதீர்கள்.அது வறுமையை ஏற்படுத்தும்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

கன்னி ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்



1.பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.

2.மழை பெய்யும் பொழுது  மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

3.வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக் கூடாது.

4.புத்தாடை அணியும் முன் அவற்றில் கொஞ்சம் கங்கா ஜலம் அல்லது தீர்த்தாகர்ஷண மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறிது  தெளித்த பின் அணிந்து வர என்றும் ஆடை ,அணிகலன்களுக்குக் குறை இருக்காது.

5.சனிக்ரஹ சாந்தி செய்து கொள்ளவும்.

6.மது,புகையிலை,புகை போன்ற போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது  வாழ்வில் உயர்வு தரும்.

7.புதன்கிழமை அன்று  ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.

8.புதன்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.மேலும் அன்று யாரையும் சபிக்கவோ யாருக்கும் வாக்குறுதி (PROMISE) அளிக்கவோ கூடாது.

9.பச்சை நிற கர்ச்சீப் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்


1.முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.

2.மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.

3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.

4.கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.

5. உங்கள் ப[பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.

6.யாரேனும் அன்பளிப்பாக  ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.

7.மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.

8. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள்  காலையில்,அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும்.சுப காரியத் தடைகள் நீங்கும்.இதை  சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.

9.உண்மையே பேச முயற்சியுங்கள்.நன்கு யோசித்த பின்  வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

கடக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்





1.செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டியில் உறங்குவது நல்லது.

2.வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.

3.நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக  சேவை செய்வது நன்மை தரும்.

4.எப்பொழுதும் வெறும் காலுடன்  கோயிலுக்கு செல்லவேண்டும்.

5.ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த தொண்டாற்ற வேண்டும்.

6.பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து  வாங்கி அதை   எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.

7.சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும்.இதுவும் வறுமை கடன் ஏற்படாது தடுக்கும்.
  

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 5 January 2015

மிதுன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்





1.படிகாரத்தூள் கொண்டு  அல்லது படிகாரத்தூள்சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.

2.முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும்.

3.புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்.

4.உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.

5.12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத்  திட்டக்கூடாது.அவர்களை புதன்கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்.

6.பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது.துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.

7.வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.

8.பச்சை நிறப்  பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும்.ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.

 
வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்




1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும்.

2.சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.

3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன்  தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு,         மன உளைச்சல் ,பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.கவனம் தேவை.

4.மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப்  போடச் சொல்லலாம்.இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.

5.பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.

6.பட்டு,நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.

7.ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.

8.நீடித்த நல்வாழ்விற்கு :-
உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள்.இது நிறைந்த செழிப்பான வாழ்வைத்  தரும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

லால் கிதாப் பரிகாரங்கள் :-



இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
இவற்றிற்கு தீக்ஷை எதுவும் தேவை இல்லை .இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்.


இன்று முதல் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :- 

1.எந்தப் பொருளையும் இலவசமாக வான்காதேர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .

2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.

3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.

4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால்  அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும். 

5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.

6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.

7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திரங்கள் : பாகம் 2

                                                  ஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ  



ஸ்ரீ ஷீரடி சாய்பாபா தியான மந்திரம் :-

நமாமி சாய் குரு பாத பங்கஜம் |
கரோமி பாபா தவ பூஜனம் வரம் |
வதாமி சாய் சுப நாம நிர்மலம் |
ஸ்மராமி பாபா தவ தத்வ மவ்யயம் |
சச்சிதானந்த ரூபாய பக்தானுக்ரஹ காரினே |
ஷீரடின்யாய ஸ்தைகதேஹாய ஷாயீஷாய நமோ நமஹ |
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய சர்வதாயச்ச விஷ்ணவே |
ஸ்ருஷ்டீச்ச த்ரிஸ்வரூபாய சாயிநாதாயதே  நமஹ|
சாய் சாயிதி சாயிதி ஸ்மர்தவ்யம் நாம சஜ்ஜனயே|
சஹஸ்ர நாம தத்துல்யம் சாயி நாம வரப்ரதம் |
ஸ்ரீ சாயிதி சதா ஸ்நானம் |
ஸ்ரீ சாயிதி சதா ஜபஹா |
ஸ்ரீ சாயிதி சதா த்யானம் |
 சதா சாயிதி கீர்த்தனம் ||       


ஆபத் நிவாரண சாய் மந்த்ரம் :-

ஆபத்தான தருணங்களில் அல்லது ஆபத்துக்கள் ஏற்படும் என்று பயம் ஏற்பட்டாலோ  இந்த மந்திரத்தை சாய்பாபா படத்தின் முன் அமர்ந்து அல்லது அவரை நினைத்து ஜெபித்து வர ஆபத்துக்கள்,விபத்துக்கள்,எதிரிகளால் உண்டாகும்  துன்பங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பரப்ரம்ம கீ ரூப ஜோ ஜக் கோ சனாத் ||
சோ ஹமாரி ரக்ஷா கரே ஜகத் குரு சாயிநாத் ||

தொலை தூரப் பயணம் ,குழந்தைகள் பாதுகாப்பு என எந்த சூழ்நிலையிலும் இதை ஜெபித்து விபூதி அணிந்து அவரை வேண்டிக் கிளம்ப அவர் அருள் ரக்ஷையாக நின்று காக்கும்.


காரியத் தடை நீங்க :-
எந்த ஒரு காரியம் செய்யும் முன்னர் விநாயகரை வேண்டி கீழே உள்ள ஸ்லோகம் சொல்லி ஸ்ரீ சாய்பாபாவையும் வேண்டி காரியம் த்தொடங்க காரியத்தடைகள் நீங்கி சிறப்படைவீர்கள் .

ஸ்ரீ கணேசாய நம |ஸ்ரீ சாயிநாதாய நம மம கார்ய நிர்விக்னமஸ்து ||


குறிப்பு :-
சாய்பாபா அதிகமாக ஜெபித்த சித்தி பெற்ற மந்திரம்

"அல்லா மாலிக்".

அவர் சமயபேதம் அற்றவர்.ஆனால் ,அவர் சித்தி பெற்ற "அல்லா மாலிக்" என்ற மந்திரத்தை எல்லோரும் அப்படியே ஜெபிக்க வேண்டாம். சூஃபி வழிமுறையில் (இஸ்லாமிய ஞான வழி ) மந்திரங்களை முறைப்படி ஒரு சூஃபி குருவை அணுகித் தீக்ஷை பெற்ற பின்னரே ஜெபிப்பது சிறப்பு.
ஏன் என்றால் மந்திர உரு ஏற ஏறச் சில எதிர்பாராத அனுபவங்கள் அல்லது ஆன்மீகத்தில் வேறு உயர்ந்த படித்தரங்களையோ பெறலாம்.எல்லோருக்கும் அது ஏற்புடையதாக இருக்காது.

மேலும்,சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Sunday, 4 January 2015

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திரங்கள் : பாகம் 1

                            


                                      ஓம் ஸ்ரீ சாய் நாதாய நமஹ 

கூப்பிட்ட குரலுக்கு உடன் வந்து அருள் செய்பவர்கள்  ஸ்ரீ சாய்பாபா மற்றும் வள்ளலார் என்று பல்வேறு ஆன்மீக  மற்றும் மறைபொருள் ஆய்வாளர்கள்   தெரிவிக்கின்றனர்.( ENSURED BY A LOT OF SPIRITUAL RESEARCHERS & MYSTICS )


ஷீரடி சாய்பாபா சிறந்த வரப்ரசாதி எனவே அவர் மத பேதமின்றி அனைத்து மக்களாலும் வழிபடப்படுகின்றார்.இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா தவிர்த்த பிற மாநிலங்களில் பெருமளவில் இவர் வழிபாடு இருந்தது ஆனால் இப்போது தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் சாய்பாபா வழிபாடும் ,ஆலயங்களும்  பெருகி வருகின்றன .

இங்கு சாய்பாபாவின்  மந்திரங்கள் சில உள்ளன,உங்களுக்கு எது பிடித்தமாக உள்ளதோ அதை ஜெபித்து வழிபடவும்.

                                                 ஸ்ரீ ஷீரடி சாய்பாபா காயத்ரி 

                                            ஓம் ஷீரடி வாசாய வித்மஹே 
                                                   சச்சிதானந்த தீமஹி 
                                            தன்னோ சாய் ப்ரசோதயாத் 

சாய்பாபா அருட்பிரசாதமாக வழங்கப்படும் உடி எனப்படும் விபூதி மிகச் சக்தி வாய்ந்தது.இருந்தாலும் கீழே உள்ள மந்திரம் சொல்லி வைத்துக் கொள்ள எல்லா துன்பங்களில் இருந்தும் காக்கும் ரக்ஷையாக விளங்கும்.


1.சாய் விபூதி மந்திரம்
மஹோ க்ராஹ பீடாம்  மஹோத் பாத பீடாம் |
மஹா ரோக பீடாம் மஹா தீவ்ர பீடாம் |
ஹரத்யாசுதே த்வாரகாமாயி பஸ்ம நமஸ்தே |
குரு ஸ்ரேஷ்ட சாயீஸ்வராய |
ஸ்ரீகரம் நித்யம் சுபகரம்  பரமம் பவித்ரம் |
மகாபாபஹரம் பாபா விபூதிம் தாரயாம்யஹம் |
பரமம் பவித்ரம் பாபா விபூதிம் |
பரமம் விசித்ரம் லீலா விபூதிம் |
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதாதிம் |
பாபா விபூதிம் இதமஸ்ரயாமி |
சாய்  விபூதிம் இதமஸ்ரயாமி |
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாதாய  நமஹ ||

   
மேலே கண்ட மந்திரம் சொல்ல கஷ்டமாக இருந்தால் கீழே உள்ள மந்திரம் சொல்லி விபூதி அணியலாம்.

2.சாய் விபூதி மந்திரம்

பரமம் பவித்ரம் பாபா விபூதிம் |
பரமம் விசித்ரம் லீலா விபூதிம் |
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ ப்ரதானம் |
பாபா விபூதிம் இதமஸ்ரயாமி |


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Saturday, 3 January 2015

வாஸ்து சாந்தி யந்திரம்


வாஸ்து தோஷ நிவாரணத்திற்கு பல பரிகாரங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றைச் செய்து முடிக்க அதிகம் செலவாகும்.குறைந்த செல்வில் வாஸ்து தோஷத்தைச் சரிசெய்யலாம்.

வீட்டின் உரிமையாளர் அல்லது வீட்டை நிர்வாகம் செய்பவர் வளர்பிறையில் தனக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகப் பார்த்து  அதிகாலையில் எழுந்து குளித்து மஞ்சள் வஸ்திரம் உடுத்திக் கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு கனமான செம்புத் தகடு வாங்கி அதைப் பஞ்சகவ்யம்,பன்னீர் இவற்றால் சுத்தி செய்து சுத்தமான துணி கொண்டு துடைத்துக் கொள்ளவும். பின்னர் கீழே உள்ள யந்திரத்தில் உள்ளபடி எண் யந்திரத்தை வரையவும்.பூக்கள் போட்டு அர்ச்சித்து சாம்பிராணி,குங்கிலியம் போட்டுத் தூபம் காண்பித்து அந்த யந்திரத்தை வீட்டின் பூஜை அறையில் அல்லது வீட்டின் பிரதான வாயில் கதவில் மாட்டி வைக்கவும்.

                     இந்த யந்திரம் வாஸ்து தோஷத்தை நீக்குவதோடு  வீட்டில் பாசிடிவ் வைப்ரேஷனையும் அதிகரிக்கும்.இது செலவு குறைந்த சக்தி மிகுந்த முறை .

      



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Thursday, 1 January 2015

விருப்பம் நிறைவேற ஸ்ரீ மகாலக்ஷ்மி மந்திரம்



ஓம்  |ஹ்ரீம் ஸ்ரீம் ப்லூம்  ஐம் மகாலக்ஷ்மீம் |மம வாஞ்சிதார்த்த சித்திம் குரு குரு ஸ்வாஹா || 
  
கீழ்க்கண்ட யந்திரத்தை ஒரு வெள்ளைப் பேப்பரில் குங்குமம்,கஸ்தூரி, பன்னீர் கலந்து வரைந்து நடுவில் உள்ள வட்டத்தில் பெயர் எழுதிப் பெயரின் கீழ் நமது மனோ விருப்பத்தை எழுதிக் கீழே வைத்து அதன் மேல் விளக்கேற்றி இம்மந்திரத்தை ஜெபித்து வர நாளுக்கு நாள் படிப்படியாக விருப்பம் நிறைவேறும் சூழல் உண்டாகும்.

இந்தப் பிரயோகம் நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படும்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com