Thursday, 13 October 2016

நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம் 28.8.2026 வெள்ளிக்கிழமை காலை 9.29 முதல் 11.29 வரை

சோடசக்கலை நேரம்

சோடசக்கலை நேரம் 28.8.2026 வெள்ளிக்கிழமை காலை 9.29 முதல் 11.29 வரை 


எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர்.

( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!

இந்த சோடசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள்  
Trinity எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும்,  
முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த  ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும்          (பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன்,கடல்பசு,கடல் பாசிகள்,ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,
பல்லி,ஆந்தை,புறா,கிளி,காட்டெருமை, காண்டாமிருகம், நாய்,குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும்  சூட்சுமமாக அதிரும்.


அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.


ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.


இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும் போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்து விடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

 
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.

அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை (திருமணம்,
 பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.
தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.


இந்த நேரத்தில் தியானம் செய்யலாம் அல்லது கீழே உள்ள மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.

1.ஓம் ரீங் சிவ சிவ
2.ஓம் ரீங் அங் உங் 
3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் 




சோடசக்கலை நேரத்தில் கிறிஸ்தவர்கள் "யா கேப்ரியல்" (YAA GABRIEL) என்று பச்சை மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிக்கலாம்.பச்சை மெழுகுவர்த்தி கிடைக்காதவர்கள் வெள்ளை மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிக்கலாம்.மேற்குத் திசை பார்த்து நின்று ஜெபிக்கவும்.



இஸ்லாமியர்கள் வெள்ளை ஆடை அணிந்து ஒழுச் செய்த பின், அத்தர்  பூசி  மேற்குத் திசை பார்த்து நின்று "யா வஹ்ஹாப்"(YAA WAHHAAB) அல்லது யா ராஃபியு (YAA RAAFIYU) என்று ஓதவும்.




வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் : 9788493072
ms.spiritual1@gmail.com 
facebook ID:  https://www.facebook.com/surya.joy.52


Tuesday, 11 October 2016

கயிறு மந்திரித்து கட்ட ஆஞ்சநேயர் மந்திரம்


மந்திர ஸ்லோகம் 

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷமாம்



ஒரு சிகப்பு அல்லது கருப்புக் கயிறு எடுத்துக் கொண்டு மேலே உள்ள மந்திரம் ஒரு தடவை அல்லது 3 தடவை சொல்லி ஒரு முடிச்சுப் போடவும். இப்படியாக 11 முடிச்சு போடவும்.அதன் பின்  கயிற்றுக்குச் சாம்பிராணி தூபம் அல்லது ஊதுவத்திப் புகை காண்பித்து ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் கட்டத் தீய சக்திகளைக் கொண்டு தொந்தரவு ,கெட்ட கனவுகள்,விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும்.

இதைச் செவ்வாய்க்கிழமை அன்று செய்ய விசேஷமான பலன் உண்டாகும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com    

Wednesday, 14 September 2016

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி சென்னையில்

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி

25.09.2016 ஞாயிறு அன்று சென்னையில் 

சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக் கவலைகள்,வறுமை, கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சர்வ ஐஸ்வர்யத்தோடு கூடிய நிறைவான வாழ்வு வாழ  உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர்கள்: 

M.சூர்யா,திருநெல்வேலி மற்றும் திரு.அலிபாய்,திருநெல்வேலி

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும், அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள், மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்க பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர மற்றும் பஞ்சபக்ஷி சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் வெற்றியும் பெற உதவும் இந்து மத,இஸ்லாமிய,மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் தெய்வங்களின் சக்திவாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்கள்..
  
5.உங்கள் குல தெய்வ, அதிர்ஷ்ட தெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களின் உத்தரவாதமான அருளுதவி பெற உபாசனை முறைகள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.திதி சூனிய பரிகார ரகசியம்.

8.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள். 

9.உடனடி பலன் தரும் மந்திரங்கள் மற்றும் தாந்த்ரீக ரகசியங்கள் . 

10.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

11.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளை பெறும் வழிமுறைகள். 

12.எந்தத் தீயசக்திகள் மற்றும் எதிரிகளால் ஏற்படும் துன்பங்களைத் தீர்க்கவும், உங்கள் பிரச்சனைகள் யாவற்றுக்கும் அலிபாய் அவர்களிடம் கேட்டுத் தீர்வுகளைப் பெறலாம்.


வகுப்பு முடிவில் தொழில் விருத்தி,பணப்புழக்கம் அதிகரிக்க மற்றும் குடும்பப் பாதுகாப்பிற்கு யந்திரம் வழங்கப்படும்.

வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.



M.சூர்யா :-9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப்
எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள் !!!

பயிற்சி நாள் :- 25.09.2016 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி கட்டணம் :- ரூபாய் 1,500 மட்டும்.
பயிற்சி நேரம் :காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை  பயிற்சிக்கு வருபவர்களுக்கு நோட்புக்,பேனா,இருவேளை தேனீர் ,மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சிக்கு வரும் அன்பர்கள் மண்டபத்திற்கு வந்தே குளித்து முடித்து தயாராகிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

K.M.L. நாதன் திருமண மண்டபம் 
பெரம்பூர்  - ரெட்ஹில்ஸ் ரோடு 
புதிய லட்சுமி புரம்
கொளத்தூர் 
சென்னை 600099
9442193072 / 9788493072  
பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் : ரெட்டேரி சிக்னல் 

வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ளத் தொடர்பு கொள்ளவும்.
திரு.சக்திவேல்  - 9841530789

கீழ்க்கண்ட என்னுடைய வங்கிக் கணக்கில் ரூபாய் 1,500 டெபாசிட் செய்துவிட்டுத் தகவல் தெரிவிக்கவும். 

வங்கியில்பணம்செலுத்தமுடியாதவர்கள்நேரில்வந்து கட்டணம் செலுத்தலாம்.

M.SUBRAMANIAN,STATE BANK OF INDIA,                                                           TIRUNELVELI BRANCH,A/C NO.32986914404
IFSC CODE:SBIN0000932 BRANCH CODE:932

--------------------------------------------------------------------------------------------------
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com    

Monday, 12 September 2016

சர்வ ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீ காளிதேவி மந்த்ரம்


காளி மந்திரங்களில் அனைத்தும் குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் ஜெபித்து சித்தி செய்யக் கூடியதல்ல.ஆனால்,இம்மந்திரம்  சர்வ ஐஸ்வர்யங்களையும் கொடுத்து வாழ்வில் அனுபவித்து மகிழ்ந்து தெளிய வேண்டிய எல்லா இன்பங்களையும் நிறைவாகக் கொடுத்துப் பின் சாதகனை ஆன்மீக உயர்வுக்கு அழைத்துச் செல்லும்.இது லட்சுமி மந்திரங்களுக்குச் சமமானது விரைவாக பலன் அளிக்கக் கூடியது.


ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை அன்று ஜபம் ஆரம்பம் செய்வது நல்லது.


மந்திரம் :-
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் காளிகே க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com    

Saturday, 10 September 2016

பஞ்சமஹா பீஜ பரமேஸ்வரி மந்திரம்



மூல மந்திரம் :-
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம்  பரமேஸ்வர்யை நமஹ


இம்மந்திரத்தில் உள்ள பீஜ மந்திரங்களின் சக்தியும்,அவற்றின் விளக்கமும்:-


ஐம் -  இது வாக் பீஜம் என்றும் வாக்பவ பீஜம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பீஜ மந்திரத்தின் அதிதேவதைகள் ப்ரம்மா,சரஸ்வதி.இந்த பீஜ மந்திரம்   வாக்குவன்மை, நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி தரும்.

க்லீம் -  இது காமராஜ பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள  தேவதைகள்  விஷ்ணு ,லக்ஷ்மி,ரதி,மன்மதன்,காளி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,வசீகர சக்தி, செல்வம், செல்வாக்கு,கௌரவம் தரும்.

சௌம்  - இது பரா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள  தேவதைகள்  ருத்ரன்,பார்வதி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,தைர்யம்,சௌபாக்கியம் தரும்.சௌபாக்கியம் என்ற சொல் இந்த பீஜ மந்திரத்தில் இருந்து தோன்றியதாக மந்திர சாஸ்திரம் சொல்கிறது.

ஹ்ரீம்  - இது மாயா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள  தேவதைகள்  மகேஸ்வரன்,மஹேஸ்வரி ,புவனேஸ்வரி.இந்த பீஜ மந்திரம் எல்லா நன்மைகளையும் தரவல்லது.இந்த ஒன்றை ஜெபித்தே நலமும்,வளமும் கொண்ட அடைந்தவர்கள் பலர்.

ஸ்ரீம்  - இது லக்ஷ்மி பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள  தேவதைகள் சதாசிவன்,மனோண்மணி,லட்சுமி.இந்த பீஜ மந்திரம் ஐஸ்வர்யம்,மரியாதை,தேஜஸ்,கவர்ச்சி தரும்.


இவை ஐந்தும் பஞ்ச மஹா பீஜங்கள் எனப்படும்.

இதை வளர்பிறைத் திங்கள் அன்று அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்க ஆரம்பிக்கலாம்.வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வாருங்கள்.ஆரம்பம் செய்யும் அன்று அதிகாலையில் சிவாலயம் சென்று அங்குள்ள அம்மன் சன்னதிக்குச் சென்று அம்மனை மந்திரம் பலிக்க வேண்டி வணங்கி அங்கிருந்து  குறைந்தது 108 எண்ணிக்கையாவது ஜெபித்துப் பின்வரும்   நாட்களில் வீட்டில் வைத்து ஜெபித்து வருதல் சிறப்பு.

எதுவும் குறைவில்லாதபடி வளமும்,நலமும் கூடிய நல்வாழ்விற்கு இம்மந்திரம் வழிசெய்யும்.எனவே,பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் பராசக்தி திருப்பாதத்தை.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com    

Thursday, 8 September 2016

பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம்

தினமும் ராகு காலத்தில் ராகு பகவானையும்,துர்க்கையையும் வழிபட்டு வாருங்கள்.

ராகு மந்திரம்

ஓம் ப்ராம்  ப்ரீம் ப்ரௌம் ஸஹ ராகுவே நமஹ

துர்க்கா மந்திரம்

ஓம் ஹ்ரீம் தும் துர்க்காயை சர்வாகர்ஷணாயை ஹ்ரீம் தும் பட் ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
     

Thursday, 1 September 2016

மனம் விரும்பியபடி மனைவியும்,மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் தரும் தாந்த்ரீகப் பரிகாரம்






ஒரு வளர்பிறை திங்கள் அல்லது வியாழக்கிழமை அன்று சுக்ர ஹோரை அல்லது குரு ஹோரையில் இந்த யந்திரத்தை ஒரு சுத்தமான வெள்ளைப்  பேப்பரில் மாதுளை மரக்குச்சியினால் அஷ்டகந்தத்தைத் தொட்டு வரைந்து கொள்ளவும்.அதற்கு ஊதுவத்தி காண்பித்த பின்  கற்பூரம் ஒன்றை ஏற்றி அதில் அந்த யந்திரத்தை எரித்து விடவும்.அந்தச்சாம்பலை  ஏதாவது பழங்கள் காய்க்கும்  மரத்தின் வேர்ப் பகுதியில் தூவி விடவும்.இது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழி செய்யும்.இந்த பூஜைமுறையைச் செய்யும் பொழுது கீழே உள்ள மந்திரத்தை ஜெபித்தபடியே செய்யவும்.

இதைச் செய்த பின் தினமும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வர திருமணத் தடை நீங்கி மனம் விரும்பும் படி மனைவியும், தம்பதிகளுக்குள் மகிழ்ச்சியோடு கூடிய வாழ்க்கையும் ஏற்படும்.



மந்திரம் :-

ஓம் மனோரமாம் பார்யாம் தேஹி மே ஸ்வாஹா ஹ்ரீம் ஓம்  

   
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 18 August 2016

ஸ்ரீ ராஜமாதங்கி வழிபாடு

இசை,இலக்கியம் ,நடனம் மற்றும் சகலகலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும்,பதவி நிர்வாக சாமர்த்யமும் நல்கும் ஞான வடிவினள் அன்னை   ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா தேவி .அன்னையை வணங்கி அவளை வழிபடும் முறைகளை விளக்குகிறேன்.

மந்திர சாஸ்திர உபாசனையில் மேலான இடம் வகிக்கும் ஸ்ரீ வித்யா உபாசனையில் முதலில் ஸ்ரீ மஹா கணபதி மந்திரம் ,ஸ்ரீ பாலாத்ரிபுர சுந்தரி மந்திரம்,பின்னர் ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம் உபதேசிக்கப்படும் அதன் பிறகே ஸ்ரீ வாராஹி மந்திரம் உபதேசம் செய்யப்படும்.

ஸ்ரீ மகாகணபதி,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி உபாசனை இரண்டும் சித்தி செய்தவர்களுக்கு எந்த மந்திரமும் எளிதில் சித்திக்கும்.ஸ்ரீ மகாகணபதி,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி உபாசனை ஸ்ரீ வித்யா உபாசனைக்கான உள்ளப்பண்பாடு,சித்த சுத்தி,சத்வ குணம், இவற்றை நல்கும்.அது ஸ்ரீ ராஜமாதங்கி வழிபாட்டில் முழுமை பெறும்.

ஸ்ரீ மதங்க முனிவர் ஸ்ரீ பஞ்சதசி மந்திரத்தை அக்ஷர லக்ஷம் ஜெபம் செய்து ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின்  தரிசனம் பெற்று அவளையே தன் மகளாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றார்.அதன் பயனாக ஸ்ரீ ராஜமாதங்கி  மதங்க முனிவரின் மகளாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று தோன்றினாள். ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் கரத்தில் உள்ள கரும்பு வில்லில் இருந்து உண்டானவள்.ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி எனும் பராசக்தியின் மந்திரியாய் விளங்குகிறாள்.அவளின் ராஜ்ய பாரம் முழுதும் கவனிப்பவள்.சங்கீதத்திற்கு இவளே அதிபதி (அதிஷ்டான தேவதை ).

ஸ்ரீ  ராஜமாதங்கி  நம் உடலில் புத்தி தத்துவமாகவும்,ஸ்ரீ வாராஹி நம் உடலில் சைதன்ய தத்துவமாகவும் விளங்குகிறார்கள்.மனம் செயல்பட புத்தியும்,உடல் செயல்பட சைதன்யமும் வேண்டும்.ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கு மிக நெருக்கமானவர்கள் இவர்கள் இருவரே.

இவளை அனாஹத சக்கரம் என்ற ஹ்ருதய ஸ்தானத்தில் தியானிக்க வேண்டும்.

இவளது அங்க தேவதை லகு ஷ்யாமளா,உபாங்க தேவதை வாக்வாதினி , பிரத்யங்க தேவதை நகுலீ.இவர்கள் சாதகனுக்கு நல்ல வாக்குவன்மை, கலைகளில் தேர்ச்சி ,சங்கீத ஞானம்,சகலகலா பாண்டித்தியம் அருள்வார்கள்.


இவள் உபாசனை அருள்,புகழ் பெற்றோர் ஸ்ரீ மகாகவி காளிதாசர், ஸ்ரீ பாஸ்கரராயர்,சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோர்.


மதுரை மீனாக்ஷி ஸ்ரீ ராஜமாதங்கி அம்சம்.திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ மகா வாராஹி அம்சம்.எனவே இவள் மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிப்பவர்கள் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வைத்து ஜெபத்தைத் தொடங்கலாம்.

ஸ்ரீ ராஜமாதங்கியைத் தினமும் வழிபடலாம். அதிலும், அஷ்டமி, பௌர்ணமி, சித்திரை மாதம் வளர்பிறை,மாசி மாதம் வளர்பிறைகளிலும் வழிபட,பூஜை செய்ய இவள் பேரருள் பெறலாம்.

அரசாங்க காரிய வெற்றி,சர்வ ஜன வசீகரம்,பெரிய பதவிகள் கிடைத்தல், அவற்றைச் சிறப்பாக நிர்வாகம் செய்தல் போன்ற பலன்களுக்கு  ஸ்ரீ ராஜமாதங்கியையும்,சங்கீதம்,கலைகளில் தேர்ச்சி இவைகளுக்கு ஸ்ரீ லகு ஷ்யாமாவையும் வழிபடலாம்.

ஸ்ரீ   ராஜமாதங்கி மந்திரம்:

ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் |
ஓம் நமோ பகவதி ஸ்ரீ ராஜமாதங்கீஸ்வரி|
சர்வஜன  மனோஹரி| சர்வ முக ரஞ்சனி|
க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்|சர்வ ராஜ வசங்கரி |
சர்வ ஸ்திரீ புருஷ வசங்கரி |
சர்வ துஷ்டமிருக வசங்கரி |
சர்வ சத்வ வசங்கரி |
சர்வ லோக வசங்கரி த்ரைலோக்யம் மே |
வசமானய நமோ நமஹா ||
சௌம் க்லீம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்||

அல்லது

ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம்|
ஓம் நமோ பகவதி ஸ்ரீ ராஜமாதங்கீஸ்வரி|
சர்வஜன  மனோஹரி| சர்வ முக ரஞ்சனி |
க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்|சர்வ ராஜ வசங்கரி |
சர்வ ஸ்திரீ புருஷ வசங்கரி |
சர்வ துஷ்டமிருக வசங்கரி |
சர்வ சத்வ வசங்கரி |
சர்வ லோக வசங்கரி|
 த்ரைலோக்யம் மே |
வசமானய நமோ நமஹா ||

என்றும் ஜெபிக்கலாம்.ஹோமம் செய்தால் அப்பொழுது நமோ நமஹ என்பதற்குப்  பதிலாக ஸ்வாஹா என மாற்றி ஜெபிக்கவும்.


ஸ்ரீ  லகு ஷ்யாமா  மந்திரம்:

ஐம் நமஹ உச்சிஷ்ட சாண்டாளி மாதங்கி சர்வ வசங்கரி நமோ நமஹ ||

அல்லது

ஐம் க்லீம் நமஹ உச்சிஷ்ட சாண்டாளி மாதங்கி சர்வ வசங்கரி நமோ நமஹ||


மூலமந்திரம் ஜெபிப்பவர்களும்,ஜெபிக்க இயலாதவர்களும் கீழே காணும் ஸ்ரீ ராஜமாதங்கி 16 நாமங்களை தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு நோக்கி நின்றோ,அமர்ந்தோ ஒரு முறையேனும் சொல்பவர்களுக்கும் இவள் அருள் கிட்டும்.முக்கியமான அலுவல் நிமித்தமான பேச்சு வார்த்தை,  மேடைப் பிரசங்கம்,பாடங்கள் படிக்கும் முன் இந்த நாமங்களை ஜெபிப்பது நன்மை தரும்.

ஸ்ரீ  ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்:-

1.சங்கீதயோகினி
2.ஷ்யாமா
3.ஷ்யாமளா
4.மந்திரநாயிகா
5.மந்திரிணி
6. சசிவேசானி
7.ப்ரதானேசி
8.சுகப்ரியா
9.வீணாவதி
10.வைணிகீ
11.முத்ரிணி
12.ப்ரியகப்ரியா
13.நீபப்ரியா
14.கதம்பேசி
15.கதம்பவனவாசினி
16.சதாமதா

ராஜமாதங்கி மந்திரம் உபதேசம் (தீக்ஷை) பெற்று ஜெபிப்பது உத்தமம்.

வாழ்க வையகம் || வாழ்கவளமுடன்||

M.சூர்யா
தச்சநல்லூர் ,திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Wednesday, 17 August 2016

தொட்டதெல்லாம் துலங்க,வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்பட அகஸ்தியர் அருளிய சிவ மந்திரம் .




அகஸ்தியர் தனது வாத சௌமியம் 1200 என்ற நூலில் மந்திரவாள் என்ற பகுதியில் சில மந்திரப் பிரயோகங்களைக் கூறியிருக்கிறார்.அதில் ஓம் ரீங் சிவ சிவ என்ற மந்திரம் எல்லா நன்மைகளையும் தரக்கூடியது என்று சிறப்பித்து கூறியிருக்கிறார் இதன் பலனை அனுபவித்தவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.இதனை ஜெபித்து வர நன்மை உண்டாகும். மேலும்,இடது உள்ளங்கையில் அல்லது ஒரு செம்பு,பித்தளை அல்லது வெண்கலத் தட்டில் விபூதி பரப்பி வைத்துக் கொண்டு அதில் இம்மந்திரத்தை எழுதி மந்திரத்தை 1008 உரு ஜெபித்து வைத்துக் கொண்டு அதைத் தினமும் அணிந்து வர எல்லா நிலைகளிலும் மேன்மை பெறலாம்.

 வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 

Wednesday, 10 August 2016

அடிக்கடி நோயால் பாதிக்கப்படுதல் நீங்கவும்,தீராத நோய் தீரவும் காளி பீஜ மந்திரம்:-


வடக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து இடது கையில் நீர் வைத்துக் கொண்டு வலது கையின் ஆள்காட்டிவிரல்,நடுவிரல்,மோதிர இம்மூன்று விரல்களும் நீரினுள் வைத்தபடி க்ரீம் என்ற காளிதேவியின் பீஜ மந்திரத்தை 7 தடவை ஜெபித்து  காளிமாதாவிடம் நோய்  தீர வேண்டிக்கொள்ளவும். நோயாளியை அந்த தீர்த்தத்தை குடிக்க சொல்லவும்.வெளி உறுப்பில் பாதிப்பு இருந்தால் குடித்த பின் சிறிது நீரை அந்த உறுப்பில் கொஞ்சம் தொட்டுத் தடவிக் கொள்ளவும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

 

Thursday, 28 July 2016

மன அமைதியும்,வளமான வாழ்வும் தரக்கூடிய எளிய தாந்த்ரீக தியானம்.



ஆண்கள் புருவநடுவிலும் ,பெண்கள் அனாஹத சக்கரம் என்று கூறப்படும் நெஞ்சுக்குழியிலும் மனம் வைத்து அங்கு ஒரு ஜோதி இருப்பதாகப் பாவித்துக் கொண்டு உள்மூச்சு இழுக்கும்  பொழுதும்,வெளிமூச்சு விடும்போது  ஹ்ரீம் என்ற மந்திரத்தை மனத்தால் ஜெபிக்கவும்.இதை 5 முதல் பத்து நிமிடங்கள் செய்து வரவும்.உங்களுக்கு லௌகீக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் நல்ல பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.அவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 
அதிகாலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.அல்லது மாலை வேளையில் 5: 30 முதல் இரவு 9:30 மணிக்குள் செய்ய நல்லது.

   
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!


M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday, 27 July 2016

தீய சக்திகளின் தொல்லை நீங்க



செவ்வாய்க்கிழமை தோறும் மாலை நேரத்தில்

லக்ஷ்மி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம பாஹிமாம்  
உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம ரக்ஷமாம்

என்று ஜெபித்த படியே வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி வர தீய சக்திகள் விலகி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com




Tuesday, 19 July 2016

பெண்களின் மனத்துயர் நீக்கும் சக்தி மந்திரம்

இது  பெண்களின் உடல் ரீதியான,மன ரீதியான துன்பங்களைத் தீர்த்து உடல், மனபலம், நல்வாழ்வு தருவது .ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களோ ,தீய கிரகங்களின் சேர்க்கையாலோ அவஸ்தைப்படுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள்,திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திர ஜெபத்தினால் துன்பம் நீங்கப் பெறலாம்.காதல் தோல்வி, விவாகரத்து போன்றவற்றால்  மனம் வருந்துபவர்களும் இம்மந்திரம் ஜெபித்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.

மந்திரம்:-


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் | ஸர்வபூஜ்யே தேவி மங்கள சண்டிகே | ஹூம் பட் ஸ்வாஹா || 

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com


புலனடக்கம் பெற உதவும் நிக்ரஹ மந்திரம்

குறிப்பு :-   பிரம்மச்சாரிகள் அல்லது முழுநேர ஆன்ம சாதகர்கள் மட்டுமே இம்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.குடும்பஸ்தர்கள்,திருமண வாழ்வை மேற்கொள்ள விரும்புபவர்கள் ஜெபித்தால் முழுநேர யோகியின் மனோநிலை வந்து விடும்.எனவே குண்டலினி விழிப்பு,ஆன்மீக உயர்வு நாடுபாவரக்ள் ஜெபித்துப் பயன்பெறலாம்.இது வட இந்திய சாதுக்கள் பயன்படுத்தப்படும் மந்திரம்.

மந்திரம் 

ஓம் ஹ்ரீம் ஹூம் கே மச்சே க்ஷஹ ஸ்த்ரி ஹூம் க்ஷேம் ஹ்ரீம் பட் த்வரிதாயை நமஹ ||




வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

பிறவித்தளை நீங்க,ஆன்மீக முன்னேற்றம் பெற மிருத்யுஞ்சய மந்திரம்


மிருத்யுஞ்சய மஹாதேவ த்ராஹி மாம் சரணாகதம் |
ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி சம்சார பயநாசனம் ||

இந்த மிருத்யுஞ்சய மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வரச் சிவ சரணாகதி ஏற்பட்டு இல்வாழ்க்கைத் துன்பங்கள்,பயம்,சஞ்சலங்கள்,நோய்கள் யாவும் நீங்கிப் பிறவிப் பயனை அடைய வழிபிறக்கும்.

1,25,000 தடவை ஜெபிக்க மந்திர சித்தி ஏற்படும்.




வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

கணவன் மனைவி ஒற்றுமைக்கு உதவும் மந்திரங்கள்

மந்திரம்  1:

ஓம் காம் காமமாலினி  பதிம் மே வசமானய ட்டஹ  ட்டஹ ||

சூர்ய அல்லது சந்திர கிரகண நேரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து மேற்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.

அதன் பின்னர் குங்குமம் கஸ்தூரி கோரோசனை மூன்றையும் சேர்த்து அரைத்துக் குழைத்து வைத்துக் கொள்ளவும்.தினமும் குளித்து முடித்தபின் கிழக்கு நோக்கி நின்று அல்லது அமர்ந்து வலது கைப் பெருவிரலில் அந்தக்  கலவையைத் தொட்டு  இம்மந்திரத்தை 7 தடவை ஜெபித்து நெற்றியில் அல்லது புருவ நடுவில் வைத்து வரத் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் பிரியமும் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------------------

மந்திரம் 2 :-

ஓம் ஹும் ஜும்  ஸஹ அர்த்தநாரிஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா

இம்மந்திரத்தை மனைவி 41 நாட்கள் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 108 தடவை ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.(மாதவிலக்கு நாட்கள் தவிர இடைவெளி இல்லாமல் 41 நாட்கள் ஜெபிக்கவும்).

-------------------------------------------------------------------------

மந்திரம் 3 :-
 ஓம் கம் கம் க்யாம் க்யஹ மம ..............வஷ்யம் குரு குரு ஸ்வாஹா ||

குறிப்பு :
கணவன் ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பத்னி என்ற வார்த்தையும் ,

மனைவி ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பதி  என்ற வார்த்தையும்
சேர்த்து ஜெபிக்கவும்.

இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 27 தடவை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இன்று அல்லது அமர்ந்து ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Saturday, 16 July 2016

சனீஸ்வர தோஷம் நீக்கும் ஸ்லோகம்

ஏழரைச்சனி மற்றும் சனீஸ்வர கிரகம் சார்ந்த பிற தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் ஜெபிக்கத் துவங்கி,தினமும் குறைந்தது 3 தடவை ஜெபித்து வர சனீஸ்வரர் அருள் கிட்டும்.


சனீஸ்வர ஸ்லோகம்:-

கோணஸ்த பிங்களோ பப்ரு கிருஷ்ணோ ரௌத்ராந்தகோ யமஹ: |
சௌரி சனைச்சரோ மந்த பிப்பலாதேன சம்ஸ்துதஹ: |
நமஸ்தே கோண ஸம்ஸ்தாய பிங்களாய நமோஸ்துதே
நமஸ்தே ரௌத்ரதேஹாய நமஸ்தே  சண்டகாயச |
நமஸ்தே  மந்த சஞ்சாய நமஸ்தே  சௌரயேவிபோ
நமஸ்தே  யம சஞ்சாய சனைஸ்சர நமோஸ்துதே |
 பிரசாத குரு தேவேச தீனஸ்ய ப்ரணதாஸ்யச |

வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 11 July 2016

வாழ்வில் உயர்வான நிலை அருளும் ஸ்ரீ துர்கா மந்திரம்



இது தந்திர சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ துர்கா ஆவாஹன மந்திரம்.இம்மந்திரம்  எளிமையாக இருந்தாலும்  உங்கள் வாழ்வில் ஸ்ரீ துர்கா மாதாவின் அருளை ஆகர்ஷித்து வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க உதவக்கூடியது.

பூஜா விதிகள் :


இம்மந்திர ஜெபத்தை நவராத்திரியில் ஆரம்பித்து நவராத்திரி காலமான 9 நாட்களுக்கும் செய்யவேண்டும்..

துர்கா தேவியின் படம் வைத்து அதன் முன் விளக்கேற்றி ஊதுவத்தி ஏற்றி வைக்கவும்.

மஞ்சள் நிற ஆடை அணியவும்.

வடக்கு நோக்கி அமர்ந்து  ருத்ராக்ஷம் அல்லது ஸ்படிக மாலையால் காலையிலும் இரவிலும் 540 தடவைகள் ஜெபிக்க வேண்டும். (108*5=540).

பழங்கள் ,இனிப்பு வகைகள் நைவேத்யம் செய்யவும்.

ஜபம்,பூஜை முடிந்த பின் பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கவும்.

பூஜா காலங்களில் ஏற்படும் ஆன்மீக அனுபவங்களை  யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.அது நிறைவான பலனை குறைக்கும்.



மந்திரம் 


ஓம் ஹ்ரீம் பகவதி ஆகச்ச ஓம் நமஹா 



வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Sunday, 10 July 2016

பாதுகாப்பும் செல்வமும் தரும் ஸ்ரீ பைரவ மந்திரமும் ஹோமமும்





இது பைரவரின் நவாட்சர மந்திரம் இதை 14000 உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.பின்னர் பத்தில் ஒரு பங்கு அதாவது 1400 எண்ணிக்கை பால் கொண்டு ஹோமம் செய்தால் மந்திரம் பூரண சித்தியாகி விடும்.இதை பயன் கள் :-நம்மைச் சுற்றி நடக்கும் தீய சக்திகளின் தொந்தரவுகள்,தொடர்ந்த உடல் நலக் குறைபாடுகள்  நீங்கும்,உணவு,உடைக்குப் பஞ்சம் என்ற நிலை மாறி நிரந்தரமான பணப் புழக்கம் உண்டாகும்.


மந்திரம் 

ஓம் நமோ பைரவாய ஸ்வாஹா




வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Friday, 8 July 2016

அதிகமான பலன்கள் தரும் யந்திரம்




இந்த யந்திரத்தை  எப்படிக் கூட்டினாலும் 20 வரும்.3 விதமான வேறுபட்ட நோக்கங்களுக்கு இந்த யந்திரத்தைப் பயன்படுத்தலாம்.அவற்றை  வரிசையாகப் பார்க்கலாம்.


பிரயோகம் 1:-     ஒரு குறிப்பிட்ட காரிய சித்திக்கு உதாரணமாக வேலை, தொழில், திருமணம்,போன்ற விஷயங்களில் வெற்றி வேண்டிச்  செய்யலாம்.இது போன்ற காரிய வெற்றிக்குச் செய்யும் பொழுது பூர்ஜபத்ரம் அல்லது தூய வெள்ளை பேப்பரில் அஷ்டகந்தம்  கொண்டு  மாதுளை மரக்குச்சியில் தொட்டு இந்த யந்திரம் வரையவேண்டும்.பின் அந்த யந்திரத்திற்கு தூபம்,தீபம் காட்டி ஒரு தாயத்தில் போட்டு வலது கையின் மேல்பாகத்தில் அணிந்து கொள்ளவும்.குறிப்பிட்ட காரியம் நிறைவேறியபின் அதைக் கழட்டிப்  பூஜை அறையில் வைத்து விடவும். முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது அதே யந்திரத்தை மேற்சொன்ன முறைப்படி அணிந்து கொள்ளலாம்.


பிரயோகம் 2:-     வீடு மற்றும் அலுவலகத்தில் பேய்,பிசாசுகள்,கண்திருஷ்டி ,கேட்ட சக்திகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த யந்திரத்தாய் வீடு அல்லது அலுவலகத்தின் முகப்பில் எளிதில் பார்வையில் படும்படி வரையவேண்டும்.அஷ்டகந்தம் மற்றும் பசுநெய் கலந்து வரைய வேண்டும்.பின் அந்த யந்திரத்திற்கு தூபம்,தீபம் காட்ட எல்லா தீய சக்திகளில் இருந்தும் காக்கும்.

பிரயோகம் 3:-     தோட்டம்,வயல் ,நர்சரி கார்டன் இவற்றில் விளைச்சல் அதிகரிக்க பிரயோகம் 1 ல் கூறிய முறைப்படி வரைந்து வயல் அல்லது தோட்டத்தில் புதைத்து வைக்க விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்.


வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 7 July 2016

லக்ஷ்மி கடாட்சம் பெறத் தாந்த்ரீக ரகசியங்கள்




1.வீட்டில் உள்ள பெண்களை மரியாதையுடன் நடத்தவும்.பெண்களுடன் மரியாதையுடன் பழகவும்.

2.வீட்டில் மண் அகல் விளக்கு ஏற்றி நல்லெண்ணெய் ஊற்றித்  தீபம்  ஏற்றவும். அந்தத் தீபத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை  எழுந்தருளுமாறு வேண்டவும். இதனால் லக்ஷ்மி மகிழ்ச்சி அடைவாள்.

3.சூரியன் மறையும் வேளையில் வீட்டைப் பெருக்கக் கூடாது.

4.ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்க்கவோ ,தேய்த்துக் கழுவவோ கூடாது.

5.ப்ரஹ்ம முஹூர்த்த  நேரத்தில் எழுந்து குளித்து விட வேண்டும்.சோப் பயன்படுத்தக் கூடாது.

6.முடிந்தவரை தான,தருமங்கள் செய்து வரவும்.குறிப்பாக வெள்ளிக்கிழமை மட்டுமாவது செய்வது நல்லது.

7.வீடு மற்றும் கடைகளில் நடராஜர்,மலைகள்,ஆறு,குளம் போன்ற படங்கள் வைத்தால் பணம் வரும் ,போகும் தங்காது.

8.செவ்வாய் தசை நடப்பில் உள்ளவர்கள் இனிப்பு வாங்கி லக்ஷ்மிக்குப் படைத்து உண்ணுவதும், ஸ்வீட்ஸ் தானம் செய்வதும் லக்ஷ்மி கடாட்சத்தைப் பெருக்கும்.

9.சந்திர தசை நடப்பில் உள்ளவர்கள் பாலைக் காய்ச்சாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள வேறு யாரேனும் ஒருவரை பால் காய்ச்ச சொல்லவும். இது தரித்திரத்தை ஏற்படுத்தும்.

10.கரித்துண்டுகளை  வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். கரித்துண்டுகளின் அருகில் வைக்கப்பட்ட பொருள் எதுவானாலும் 4 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பயனற்றுப் போகும்.இது லட்சுமியை வெளியேற்றும்.

11.கூர்மையான பொருட்களை  அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது.


வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 23 June 2016

ஞானம் தரும் தக்ஷிணாமூர்த்தி மந்திரம்



வீட்டில்  வடக்கு நோக்கி அமர்ந்து அல்லது தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் ஸ்வாமியை நோக்கி அமர்ந்தோ இம்மந்திரத்தை ஜெபித்து வர ஆன்மீகப் பயிற்சி, முயற்சிகளில் உயர்ந்த நிலை அடையலாம்.

ஓம் ப்ரூம் நமோ ஹ்ரீம் ஐம் தக்ஷிணாமூர்த்தயே ஞானம் தேஹி ஸ்வாஹா ||




வாழ்கவளமுடன்


M.சுப்பிரமணியன் @ சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com


Friday, 17 June 2016

சகல காரிய சித்தி தரும் ஸ்ரீ சுதர்சன மந்திரம்



எடுத்த காரியம் யாவும் தாமதமாகியோ,தடைபட்டோ அதனால் கஷ்டம் அனுபவித்து வரும் அன்பர்கள் இம்மந்திர ஜெப வலிமையின் காரணமாக அந்தத் துரதிர்ஷ்டநிலை நீங்கி நலம் பெறலாம்.

பூஜைக்கு முந்தைய நாள் விஷ்ணு ஆலயம் சென்று ஸ்ரீ சுதர்சனருக்குத் துளசி மாலை சாற்றி  அகல் விளக்கில் நெய் விட்டுத் தீபமேற்றி மந்திரம் பலிக்க அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொள்ளவும்.

இம்மந்திரத்தைக் கிருஷ்ண ஜெயந்தி அன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.ஒரு நாள் பூஜை செய்தாலே போதும். 1100 எண்ணிக்கை ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும்.அதன் பின் தேவையான சமயங்களில் 21 தடவை ஜெபித்துக் காரிய வெற்றிக்காக வேண்டிக் கொள்ளவும்.


சர்வ கார்ய விஜய சுதர்சன மந்த்ரம்

ஓம் சுதர்சன சக்ராய மம சர்வ கார்ய  விஜயம் தேஹி தேஹி ஹூம் பட்



சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில் நிறைந்த பலன் தரும்.  

வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com