Tuesday, 2 January 2018

மந்திர ஜபம் நினைவில் கொள்ள வேண்டியவை


நமக்கான சரியான உபாசனை தெய்வத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது ?



நம் ஜாதகப்படி எந்தத் தெய்வத்தை வழிபட்டால் நம் வாழ்வு வளமாகும் எனக் கண்டறிந்து வழிபடுவது நிச்சயமான வெற்றியும்,உயர்வும் தரும்.


குறிப்பிட்ட பிரச்சனைகள் தீரவும்,குறிப்பிட்ட இலட்சியங்கள் நிறைவேறவும் எந்தத் தெய்வ வழிபாடு உதவும் எனக் கண்டறிந்து வழிபட வேண்டும்.


மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம். முடிந்தால் 90 நாள் ஜெபத்தின் பின் ஹோமம், தர்ப்பணம், மார்ஜனம், அன்னதானம் இவற்றை முறைப்படி செய்து முழு சித்தி பெறுதல் நலம்.



சங்கல்பம்,அங்க ந்யாஸம்,கர ந்யாஸம்,மூர்த்தி தியானம்,பஞ்சபூஜை, ஜபசமர்ப்பணம் இவற்றைக் கற்றுக் கொண்டு முறைப்படி ஜெபித்து வந்தால் நிறைவான பலன்கள் கிட்டும்.


ஒவ்வொரு தெய்வத்திற்கும் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள், விசேஷமான நாட்கள்,நட்சத்திரங்கள், திதிகள், கிழமைகள், நைவேத்தியம், ஆடை மற்றும் அதன் நிறம்,விரதம்,எவ்வளவு எண்ணிக்கை ஜெபிக்க வேண்டும்,எந்தத்திசை நோக்கி ஜெபிக்க வேண்டும்,ஜபம் செய்யவேண்டிய நேரம் காலையா,மாலையா ,இரவா மற்றும் உபாசனையின் பொழுது கடைபிடிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன அவற்றைக் குருவிடம் கேட்டறிந்து அதன் படி செயல்பட்டால் மட்டுமே உத்தம சித்தி உண்டாகும்.




ஜெபம் சித்திக்கச் சரியான நேரத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது? 

ஜெபம் சித்திக்க சரியான நேரம் பார்த்து ஜெபத்தை ஆரம்பிக்க
 வேண்டும்.

நமது ஜனன ஜாதகப்படியும், கோச்சாரப் படியும் மந்திர சித்திக்கான நல்ல முகூர்த்த நேரமாகக் கணித்து,அந்த நேரத்தில் மந்திரஜபம் ஆரம்பிக்கவும்.

பஞ்சபட்சி சாஸ்திரப்படி படுபட்சி நாளைத் தவிர்க்கவும்.அந்த நாளில் துவங்கும் மற்றும் செய்யும் எந்தக் காரியமும் நிச்சயம் எதிர்பார்த்த பலனைத் தராது.

பஞ்சபட்சி சாஸ்திரப்படி நமக்கு  அதிகார நாளில்,அரசு நேரத்தில் ஜெபம் ஆரம்பிக்க அல்லது தொடர்ந்து அரசு நேரத்தில் ஜெபித்து வரத் தடையின்றி விரைவில் மந்திரம் சித்தியாகும்.

நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து குருவையும்,குலதெய்வத்தையும் 
வேண்டி, நாம் ஜெபிக்கும் மந்திரத்திற்கு உண்டான ரிஷி அல்லது சித்தரை வணங்கி  மந்திரம் சித்தியாக ஆசீர்வதிக்க வேண்டிக் கொள்ளவும்.


அதன் பின் மந்திரத்தின் தேவதையை  (தெய்வம்) வணங்கி ஜெபத்தை 
ஆரம்பிக்கவும்.


ஜபம் ஆரபிக்கும் நாளில் சங்கல்பம் செய்து கொண்டு குறிப்பிட்ட நாட்கள் அல்லது மாதம் என ஒரு காலம் நிர்ணயம் செய்து அதற்குள் மந்திர சித்திக்கான எண்ணிக்கையை ஜெபித்து முடிப்பது சிறந்த முறை.

கணக்கு இல்லாமல் மந்திரங்களை ஜெபிக்கக்கூடாது.

நாமும்,நம் இருப்பிடமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

ஒரு நேரத்தில் ஒரு தேவதையின் மந்திரம் என சங்கல்பம் செய்து கொண்டு  அதற்கென முடிவு செய்த நாட்களில் வேறு மந்திரத்தை ஜெபிக்காமல் மந்திரத்திற்குண்டான ரிஷியின் பாதகமலங்களை சிரசின் மேல் (சஹஸ்ராரம்) தியானித்து ,தன்னையே வழிபடும் தேவதையாகப் பாவித்து வர மந்திரம் சித்தியாவதுடன் உயர்ந்த பலன்களை தரும்.

அதிகாலை எழும்போதும்,உறங்கும் போதும் ரிஷியையும் தெய்வத்தையும் வணங்கி ஒரு நாளைத் தொடங்கவும் முடிக்கவும் செய்ய வேண்டும்.

தன்னையே தன்  உபாசனா  தெய்வமாக அல்லது குருவாகப் பாவித்துத்  தியானம் செய்து வர அவர்களின் தன்மை,சக்தி நம்மில் உண்டாகும் என தந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.வேதமும் ''யத் பாவ தத் பவதி'' என்கிறது இதன் பொருள் ''எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்'' என்பதாகும்.

குருபாதுகையை சிரசில் தியானித்து வர மந்திரம் விரைவில் சித்தியாகும்.

உபதேசம் பெற:

சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரத்தன்று ,கடகம் அல்லது விருச்சிக லக்னத்தன்று உபதேசம் பெற மிக சிறப்பாகும்.

குரு மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்கள் மற்றும் குரு எப்பொழுது தீட்சை  தருவதாக அழைத்தாலும் அந்த நேரம் சிறந்ததே.குருவின் மன இசைவே முக்கியம்.

தீட்சை தருபவருக்கும்,பெறுபவருக்கும் நல்ல நாள் நேரமாக அமைந்தால் அன்றிலிருந்தே வாழ்க்கை வளர்ச்சிப் பாதையில் செல்லத் துவங்கும்.


பெரும்பாலான மந்திரங்களுக்கு தேவர்கள்,முனிவர்கள்,ரிஷிகளின் 
 சாபங்கள் இருக்கும்.முறைப்படி சாபநிவர்த்தி செய்த பின் செய்யப்படும் மந்திர ஜெபமே முழுப்பலன் தரவல்லது. 

மந்திரங்களைத்  தீட்சை பெற்று ஜெபிப்பது நிறைந்த பலன்களைத்
தரும்.

மந்திர ஜபம் பற்றி ஆழமான பல விஷ்யங்கள் உள்ளன அவற்றைக்  குருநாதரிடம் நேரிடையாகக் கேட்டுத் தெளிவு பெறுவதே முறை.



வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல்    :  9442193072
வாட்ஸ் அப் :  9788493072

Thursday, 21 December 2017

காணாமல் போனவர்கள்,கடத்தப்பட்டவர்கள் மற்றும் பிறருடைய கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டவர்கள் விரைவில் திரும்பி வர / கிடைக்கச் செய்ய வேண்டிய தாந்த்ரீக பரிகாரம்.




உங்கள் குடும்பத்தில் யாரேனும் கடத்தப்பட்டால் சட்டப்படியான முறையான நடவடிக்கைகளைச் செய்வதோடு, இந்தப் பரிகாரத்தையும் செய்ய விரைவில் அவர்கள் மீண்டு வர உதவியாக இருக்கும். 


தினம் அதிகாலையில் எழுந்ததும் தெற்கு நோக்கி நின்று பாதிக்கப்பட்ட நபரின் பெயரை 31 தடவை சொல்லிவர விரைவில் தீர்வு கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Tuesday, 19 December 2017

புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழத் தாந்த்ரிக பரிகாரம்



திருமணமாகி உங்கள் மகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பும் பொழுது ஒரு ஜாரில் தண்ணீர் நிரப்பி அதில் 11 மஞ்சள் போட்டு உங்கள் மகளின் தலையை 7 தடவை சுற்றிய பின் தண்ணீரை யார் காலிலும் மிதிபடாதபடி ஊற்றி விடவும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

அதிர்ஷ்டம்,அழகு,மன அமைதி தரும் வெள்ளி மோதிரம்


வலது கையின் சுண்டு விரலில் வெள்ளி அணிவதன் மூலம் பல நல்ல பலன்களைப் பெறலாம்.


1.ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஹோரையில் வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும் பன்னீரும் கலந்த நீரில் கழுவி உங்கள் இஷ்ட தெய்வம், சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பின் அணிந்து கொள்ளவும்.

2.மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் பதித்து அணிந்து கொள்ள செல்வ நிலையில் உயர்வு கிடைக்கும்.


3.தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும்,தொழில்,வியாபாரம்,மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், க்லீம் என்ற மந்திரம் பதித்து மோதிரம் அணியலாம்.

4.வாழ்வில் செல்வ வளமும்,அதிர்ஷ்டமும் பெருகும்.

5.அழகும்,மன அமைதியும் உண்டாகும்.

6.கபம் என்று சொல்லப்படும் நீர் பூதத்தினால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

7.உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.


8.கோபத்தைக் குறைத்து,வசீகர சக்தியை அதிகரிக்கும்.

9.மூட்டு வலி,மனநிலை பாதிப்பு,மனக்குழப்பம்,தொடர் சளித் தொந்தரவு, மற்றும் ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.   

10.மோதிரம் அணிய விரும்பாதவர்கள் கழுத்தில் வெள்ளி செயின் அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com



Monday, 11 December 2017

சர்வ கார்ய சித்தி மந்திரம்




ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ப்லூம் ஐம் நம ஸ்வாஹா 



கிரஹணம் அன்றோ அல்லது ஒரு சுபமான திதியுடன் கூடிய  நாளில் இம்மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து 12,500 எண்ணிக்கை ஜெபிக்க வேண்டும்.

12,500 ஜெபத்தில் இம்மந்திரம் சித்தியாகி விடும்.


அதன் பின் மந்திரத்தைக் கீழ்க்கண்ட பிரயோகங்களுக்குப்  பயன்படுத்தலாம். 



1.எதிரிகள் தொல்லை நீங்கி நண்பனாக மாற


உங்கள் எதிரியின் முகத்தை நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 7 தடவை ஜெபித்து வலது கையால் முகத்தை லேசாகத் தடவவும்.இதைச்  செய்து வர நமக்குத் தொல்லை தருபவர்கள் கூட மெல்ல மெல்ல  நம்  நண்பர்களாக மாறிவிடுவார்கள்.    

வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் அல்லது அதிகாரிகளால் பிரச்னைகளைச் சந்தித்து வருபவர்களும் ஜெபிக்கலாம்.



2.காரியத்தடைகள் நீங்க 

முக்கியமான வேலைகளில் ஈடுபடும் முன் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின்னர் செயலில் இறங்க, காரியத் தடைகள் நீங்கும்.


3.வழக்குகளில் வெற்றி உண்டாக 

கோர்ட் கேஸ்,வாய்தா மற்றும் வழக்கு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் பொழுது இம்மந்திரத்தை 21 தடவை ஜெபித்த பின் ஈடுபட வெற்றி உண்டாகும்.



4.வெளியூர்ப் பயணம் சிறப்பாக அமைய

தொழில்,பணம் தொடர்பாக  வெளியூர்,வெளிமாநிலம் செல்பவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும் முன் குளித்து முடித்து, அந்த ஊரின்  அருகில் உள்ள ஏதேனும் குளம்,ஏரி,ஆறு,கடல் இவற்றில் ஒன்றின் அருகில் அமர்ந்து  அல்லது நின்று 108 தடவை ஜெபித்த பின் திட்டமிட்ட நபர் அல்லது இடத்திற்குச் செல்ல சிறப்பான மரியாதையும்,தொழில் சம்பந்தமான விஷயங்களில் வெற்றியும்,உயர்வும் உண்டாகும்.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com  

Monday, 4 December 2017

ஆன்மீக,யோக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு - தென்காசியில் - 10.12.2017 ஞாயிறு அன்று

வாழ்வின் முன்னேற்றத்திற்கும்,ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.நலமும் வளமும் கூடிய வாழ்விற்குச் சித்தர்கள்,மஹான்கள் மற்றும் தெய்வங்களின் பூரண அருளும்,உதவியும் பெறும் வழிமுறைகள். 



2.செல்வ வளம் பெற உதவும் எளிமையான மற்றும் விரைவான பலன் தரும் மந்திரங்களும்,விதிமுறைகளும்.



3.ஒன்று அல்லது இரண்டு மந்திங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஜெபித்து வருவதன் மூலம் அனைத்து வகையான நன்மைகளையும் வாழ்வில் பெறும் ரகசியம் 



4.நமக்கான சரியான ஆன்மீகப் பாதை எது என்று கண்டறிந்து அதில் விரைவாக உயர்வடைய உதவும் வழிமுறைகள்.



5.யோக நிலையில் வளர்ச்சி அடையவும்,உடலும்,மனமும் ஆரோக்கியம் பெறவும் உதவும் சித்தர்கள் அருளிய பயிற்சி முறைகள்.


6.தடைகள் யாவும் தகர்ந்து சகல காரியங்களிலும் வெற்றி தரும் ஆன்மீக விதிகள்.


7.மந்திரங்கள் விரைவில் பலன் தரவும்,சாபங்கள்,தோஷங்கள் நீங்கவும் செய்ய வேண்டியவை.


8.மந்திர ஜெபம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போவதற்கான காரணங்களும்,அவற்றைச் சரி செய்யும் முறைகளும்.



9.வீடு,கடை மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து தோஷம் மற்றும் எந்த தோஷமும் நீங்கச் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்.


10.சைவ மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வளம் பெறும் உபாசனை முறைகள்.


-------------------------------------------------------------------------------

முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழலில் எளிய முறையில் செய்து பார்த்து விரைவான பலன் பெறக் கூடிய,
பலமுறை அனுபவத்தில் வெற்றி கண்ட முறைகளை மட்டும்
பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

*************************************
வகுப்பு முடிந்து செல்லும் பொழுது வாழ்க்கை என்றால் என்ன? விதி என்றால் என்ன? அதை நாம் மாற்ற முடியுமா?
நாம் விரும்பியபடி நாம் வாழ முடியாமல் தடுப்பது எது ?
சரியை,கிரியை,யோகம்,ஞானம் போன்ற ஆன்மீகப் பாதையில் எது சிறந்தது ? இதில் எனக்கான பாதை எது? வாழ்க்கையை நிறைவும், மகிழ்ச்சியும்,ஞானமும் உள்ள விதம் சரியான
கோணத்தில் வாழ்வது எப்படி? மற்றும் காமம் முதல் கடவுள் வரை அனைத்தயும் பற்றி தெளிவு பெறுவீர்கள்.

-------------------------------------------------------------------------------
தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ,
மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

-------------------------------------------------------------------------------
விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 


---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  10.12.2017 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : யோகா டவர்ஸ்,தென்காசி 
107,தெற்கு மாசி வீதி,காசிவிஸ்வநாதர் கோயில் பின்புறம், 
தென்காசி 

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில்

------------------------------------------------------------------------------

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக்  கட்டணம் பற்றிய விபரங்களை கீழ்க்கண்ட மொபைல் எண்ணில்  தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

----------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072 
ms.spiritual1@gmail.com 
suryatamil1.blogspot.com

Thursday, 9 November 2017

அதிர்ஷ்டமும் பாதுகாப்பும் தரும் யந்திரம்

அடிக்கடி விபத்து,நோய்,தொடர் தோல்வி,பகை இவற்றால் தொடர்ந்து துரதிர்ஷ்டமான சம்பவங்களை வாழ்வில் சந்தித்து வருபவர்கள், இந்த யந்திரத்தைச் செம்புத் தகட்டில் எழுதி சக்தியூட்டி அணிந்து கொள்ளவும்.


வளர்பிறை வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் வடக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து செய்யவும்.


பிராணிக் ஹீலிங் பயிற்சி பெற்றவர்கள் இந்த யந்திரத்திற்குப் பிராண சக்தியளித்தும் ,ரெய்கி பயின்றவர்கள்  இந்த யந்திரத்தின் மேல் சோகுரே சிம்பல் வரைந்தும்  சக்தி அளித்த பின் அணிந்து கொள்ளவும்.


மற்றவர்கள் அவரவரின் இஷ்ட தெய்வங்களை வேண்டி யந்திரத்திற்கு சக்தி  அளிக்கும்படி பிரார்த்தனை செய்த பின் அணிந்து கொள்ளவும்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072 
ms.spiritual1@gmail.com 

வீண் செலவுகள் குறையவும்,சேமிப்பு அதிகரிக்கவும் தாந்த்ரீக பரிகாரம்


1.வியாழக்கிழமை தோறும் துளசிச் செடிக்குப் பால் ஊற்றி வரவும்.

2.சனிக்கிழமை தோறும் சப்பாத்தி அல்லது ரொட்டி தயார் செய்து அதில் நல்லெண்ணெய் தடவி கருப்பு நிறமுள்ள நாய்க்கு சாப்பிடக் கொடுத்து வரவும்.


மேற்கண்ட இரண்டு பரிகாரத்தில் உங்களுக்கு எளிமையானது அதைத் தொடர்ந்து செய்து வர வீண் செலவுகள் குறைந்து,சேமிப்பு அதிகரிக்கத் துவங்குவதைக் கண்கூடாகக் காணலாம்.

 
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072 
ms.spiritual1@gmail.com 



Saturday, 4 November 2017

குருவருள் சூர்யா ஆன்மீக வாட்ஸப் குழு மற்றும் டெலெக்ராம் குழு GURUVARUL SURYA SPIRITUAL WHATSAPP AND TELEGRAM GROUP

குருவருள் சூர்யா ஆன்மீக வாட்ஸப் குழு மற்றும் டெலெக்ராம் குழு 

GURUVARUL SURYA SPIRITUAL WHATSAPP AND TELEGRAM GROUP


குருமார்களின் அருளாலும்,இறை அருளாலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் தத்துவம்,இந்து சமயம், இஸ்லாம்,கிறிஸ்தவம்,இந்திய,திபெத்திய புத்த சமயம்,மேற்கத்திய சமயங்கள்,மந்திர ஜபம்,உபாசனை, பஞ்சபட்சி,பல சமய சித்தர்கள் ஞானிகளின் மறைஞானம், ஆன்மீக, யோக, ஞான ரகசியங்கள் மற்றும் பயிற்சி முறைகளில் படிப்பும், அறிவும், அனுபவமும்,கொண்ட நான் கடந்த 8 வருடங்களாக என்னுடைய வாட்ஸ் அப் மற்றும் டெலெக்ராம் க்ரூப்பில் கீழ்க்கண்டவிஷயங்களைப் பகிர்ந்து வருகிறேன்.

 
பல்வேறு தேவைகள் நிறைவேறுவதற்கும்,பிரச்சனைகள் தீர்வதற்குமான மந்திரங்கள் மற்றும் பரிகாரங்கள்,பல சமயங்களைச் சார்ந்த மஹான்களின் ஆன்மீக உபதேசங்கள்,இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின்  ஆன்மீக  ரகசியங்கள்,உபாசனை ரகசியங்கள்,யோகம்,ஞானம்,சித்தர்கள்,யோகிகள்,
மந்திர ஜபம்,பக்தியோகம்,கர்மயோகம்,ராஜயோகம்,ஞானயோகம்,ஆன்மீக முன்னேற்றத்திற்கான பல தகவல்கள் மற்றும் மேற்கண்ட ஆன்மீக விஷயங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறேன்.



ஆன்மீகம்,இறைவழிபாடு,தியானம்,தத்துவம்,மந்திர ஜபம்,மனவியல், யோகம்,பல மதங்களில் பின்பற்றப்படும் ஆன்மீகப் பயிற்சிகள்,புத்தக அறிமுகம்,யோகப் பயிற்சி முறைகள்,இந்திய மற்றும் மேற்கத்திய ஆன்மீக ரகசியங்கள்,வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் வழிமுறைகள் ,நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் புரிந்து கொள்ளுதல் போன்ற பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.


வாட்சப் அல்லது டெலெக்ராம் எந்தக் குழுவில் இணைய விரும்புகிறீர்கள்  என்பதையும் உங்கள் பெயர் மற்றும் மாவட்டம் குறிப்பிட்டு 9788493072  என்ற நம்பருக்கு மெசேஜ் அனுப்பவும்..

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயர் சேர்க்க விரும்பினால் அவர்கள் பெயர் மற்றும் மாவட்டம் குறிப்பிட்டு அனுப்பவும்.

ஆண்களுக்கு தனி க்ரூப் பெண்களுக்கு தனி க்ரூப் வைத்திருப்பதால் பெயர்,ஆண் அல்லது பெண் என்ற விபரமும் குறிப்பிட்டு அனுப்பவும்.


குருவருள் சூர்யா டெலெக்ராம் குழுவும் உள்ளது.அதில் இணைந்து கொண்டால் பழைய பதிவுகள் மற்றும் இனிவரும் பதிவுகளையும் படித்துப் பயன் பெறலாம்.
 

கடந்த சில வருடங்களாக மாதத்தில் ஒரு நாள் குழுவில் உள்ளவர்களின் ஆன்மீகம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் வருகிறேன்.


இதுவரை 6000 க்கும் அதிகமான கேள்விகளுக்குப்  அளித்திருக்கிறேன்.அந்தக் கேள்விகளும் பதில்களும் குருவருள் சூர்யா பதில்கள் என்ற டெலெக்ராமில் குழுவில் உள்ளது.அந்தக் குழுவில் இணைந்து கொள்ள விருப்பம்  உள்ளவர்கள் மெஸேஜ் செய்யவும்.


------------------------------


அற்புதமான பலன்கள் தரக்கூடிய மந்திரங்கள்,பரிகாரங்கள் பற்றி  2013 முதல்  கீழ்க்கண்ட இணைய தளத்தில் எழுதி வருகிறேன்.

விருப்பம் உள்ளவர்கள் க்ளிக் செய்து படித்துப் பலன் பெறலாம்.

https://suryatamil1.blogspot.com/2013/

---------

நன்றி .வாழ்கவளமுடன்

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9788493072 

Sunday, 15 October 2017

தொழில் விருத்தி ,தன விருத்தி யந்திரம்


இந்த யந்திரத்தின் பலன் :-
அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்து வ்ரும். 
பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தொழில் சார்ந்த கடன்கள் தீரும்.
-----
இந்த பூஜையைச் செய்யும் நாளில் உங்களுக்கு ஆகாத திதி,நட்சத்திரம் மற்றும் படுபட்சி நாட்களைத் தவிர்த்து அதிர்ஷ்டமும்,பலமும் கூடிய நாளில் செய்யவும்.

வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ரஹோரையில்  அல்லது  வளர்பிறை  வியாழக்கிழமை அன்று  குரு ஹோரையில் செய்வது சிறப்பு.

வெள்ளிக்கிழமை அன்று செய்வதாக இருந்தால் வெள்ளை நிற ஆடை அணிந்து வெள்ளை விரிப்பில் அமர்ந்து பூஜை செய்யவும்.

வியாழக்கிழமை அன்று செய்வதாக இருந்தால் மஞ்சள் நிற ஆடை அணிந்து மஞ்சள் விரிப்பில் அமர்ந்து பூஜை செய்யவும்.

வெள்ளி அல்லது தங்கத்தகட்டில் வரைந்து பயன்படுத்தினால் நீண்ட கால பயனைத் தரும்.

வெள்ளித்தகடு பயன்படுத்துபவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ரஹோரையில் வரையவும்.

தங்கத்தகடு பயன்படுத்துபவர்கள் வளர்பிறை  வியாழக்கிழமை அன்று  குரு ஹோரையில் வரையவும்.

வெள்ளி அல்லது தங்கத்தகடு பயன்படுத்த முடியாதவர்கள் செம்புத் தகட்டில் யந்திரத்தை எழுதவும்.
 
நெய் விளக்கேற்றி விளக்கிற்குச் சந்தனம்,குங்குமம் வைத்துப் பூக்களால் அலங்கரிக்கவும்.அர்ச்சிக்கவும்.

வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பால் பாயசம் வைக்கவும்.

யந்திரத்தைப் பால்,இளநீர்,பன்னீர் விட்டுக் கழுவி,விபூதி போட்டு ஒரு சுத்தமான துணியால் துடைத்த பின் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமர்ந்து எழுதவும்.

யந்திரம் வரைய  இரும்பு பயன்படுத்தாமல் செம்பு,பித்தளை அல்லது வெள்ளிக் குச்சி பயன்படுத்தவும்.மாதுளை மரக்குச்சி பயன்படுத்தலாம்.

யந்திரம் வரைந்த பின்,பச்சரிசி பரப்பி அதன் மேல் யந்திரத்தை வைத்துச்   சந்தனம்,குங்குமம் வைத்து  நான்கு மூலையிலும் ஜவ்வாது தடவி "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வரியை நமஹ"  என்று 108 தடவை ஜெபித்து  மல்லிகை,முல்லை,பிச்சி போன்ற வெண்ணிறப் பூக்களால் யந்திரத்திற்கு  அர்ச்சனை செய்யவும். 

அர்ச்சனை செய்த பின் விளக்கிற்கும்,யந்திரத்திற்கும் தூபம்,தீபம் காட்டவும்.

பூஜை முடிந்ததும் ஒரு சிறிய மண்பானையில் யந்திரத்தை வைத்து அதனுள்  கொஞ்சம் பூக்கள் போட்டு, கீழ்க்கண்ட நான்கு பொருள்களையும் பானையில் போட்டு மஞ்சள் துணியால் பானையின் வாய்ப்பகுதியை மூடவும்.பூஜை செய்த அன்றே நல்ல நேரமிருந்தால் அன்றும் அல்லது இன்னொரு நல்ல நாள்,நல்ல நேரத்திலோ தொழில் ஸ்தாபனத்தில் முக்கியமான பொறுப்பில் உள்ள நபர் அல்லது முதலாளி அமரும் இடத்தின் கீழ் பானையைப் புதைத்து வைக்கவும்.  

பானையில் யந்திரத்துடன் போட வேண்டிய பொருட்கள்:-
கொட்டைப்பாக்கு கொஞ்சம் 
மஞ்சள் கொஞ்சம் 
தனியா (கொத்துமல்லி விதை) கொஞ்சம் 
வெள்ளி நாணயம் அல்லது ஒரு ரூபாய் நாணயம் 


நன்றி .வாழ்கவளமுடன்

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      :  9442193072


WHATSAPP : 9788493072

Wednesday, 4 October 2017

குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்


ஓம் கம் கணபதயே நமஹ மம புத்ரஸ்ய புத்தி தேஹி தேஹி ஹூம் பட்


வளர்பிறை புதன்கிழமை அன்று  தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமையும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும்.

கிழக்கு பார்த்து ஜெபிக்கவும்.

ஒவ்வொரு தடவை மந்திரம் ஜெபிக்கும் பொழுதும் அருகம்புல்லால் கணபதி படம் அல்லது சிலைக்கு அர்ச்சிக்கவும்.

என் மகன் / மகள் (உங்கள் குழந்தையின் பெயர் குறிப்பிடவும்) கல்வி வளர்ச்சிக்காக இந்த மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஜெபிக்க ஆரம்பிக்கவும் .

வெற்றிலை,பாக்கு,அவல்,பொரிகடலை,பால்,பழம் படைக்கவும். 


நன்றி.வாழ்கவளமுடன் 

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      : 9442193072

WHATSAPP : 9788493072

எதிர்பாராத பணவரவைத் தரும் ஸ்ரீ துர்கா தேவி மந்திரம்

உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத ஏதேனும் ஒரு நல்ல நாளில் வடக்குப் பார்த்து அமர்ந்து இந்த மந்திர ஜெபத்தை செய்யவும்.

துர்கா தேவி சிலை அல்லது படத்திற்கு பூக்கள் அணிவித்து,அதன் முன்  நெய் விளக்கேற்றி ,ஊதுவத்தி ஏற்றி வைக்கவும்.

நாள் ஒன்றுக்கு 1188 (108*11=1188) எண்ணிக்கை வீதம் தொடர்ந்து 1 வாரம் ஜெபிக்கவும்.

துர்கா தேவிக்கு நைவேத்யமாக இனிப்புகள் படைக்கவும்.பூஜை முடிந்த பின் ,சிறு பெண் குழந்தைகளுக்கு இனிப்புப் பலகாரங்கள் கொடுக்கவும்.

மூல மந்த்ரம்:-

ஓம் ஸ்ரீம் க்லீம் க்ரீம் தேவத்யை நமஹ : குரு குரு ரித்தி வ்ருத்தி ஸ்வாஹா 

நன்றி.வாழ்கவளமுடன் .

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      : 9442193072
WHATSAPP : 9788493072



Sunday, 1 October 2017

ஆன்மீக,யோக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு - சென்னையில் 08.10.2017 ஞாயிறு அன்று

வாழ்வின் முன்னேற்றத்திற்கும்,ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.நலமும் வளமும் கூடிய வாழ்விற்குச் சித்தர்கள்,மஹான்கள் மற்றும் தெய்வங்களின் பூரண அருளும்,உதவியும் பெறும் வழிமுறைகள். 


2.செல்வ வளம் பெற உதவும் எளிமையான மற்றும் விரைவான பலன் தரும் மந்திரங்களும்,விதிமுறைகளும்.

3.ஒன்று அல்லது இரண்டு மந்திங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஜெபித்து வருவதன் மூலம் அனைத்து வகையான நன்மைகளையும் வாழ்வில் பெறும் ரகசியம் 

4.நமக்கான சரியான ஆன்மீகப் பாதை எது என்று கண்டறிந்து அதில் விரைவாக உயர்வடைய உதவும் வழிமுறைகள்.

5.யோக நிலையில் வளர்ச்சி அடையவும்,உடலும்,மனமும் ஆரோக்கியம் பெறவும் உதவும் சித்தர்கள் அருளிய பயிற்சி முறைகள்.

6.நமது சூக்கும உடலில் உள்ள 7 சக்கரங்களையும் தூய்மை செய்து  சக்தியூட்டும் பயிற்சிகள்.

7.தடைகள் யாவும் தகர்ந்து சகல காரியங்களிலும் வெற்றி தரும் ஆன்மீக விதிகள்.

8.மந்திரங்கள் விரைவில் பலன் தரவும்,சாபங்கள்,தோஷங்கள் நீங்கவும் செய்ய வேண்டியவை.

9.மந்திர ஜெபம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போவதற்கான காரணங்களும்,அவற்றைச் சரி செய்யும் முறைகளும்.

10.வீடு,கடை மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து தோஷம் மற்றும் எந்த தோஷமும் நீங்கச் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்.

11.சைவ மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வளம் பெறும் உபாசனை முறைகள்.

-------------------------------------------------------------------------------

முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழலில் எளிய முறையில் செய்து பார்த்து விரைவான பலன் பெறக் கூடிய,
பலமுறை அனுபவத்தில் வெற்றி கண்ட முறைகளை மட்டும்
பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

*************************************
வகுப்பு முடிந்து செல்லும் பொழுது வாழ்க்கை என்றால் என்ன? விதி என்றால் என்ன? அதை நாம் மாற்ற முடியுமா? நாம் விரும்பியபடி நாம் வாழ முடியாமல் தடுப்பது எது ?
சரியை,கிரியை,யோகம்,ஞானம் போன்ற ஆன்மீகப் பாதையில் எது சிறந்தது ? இதை எனக்கான பாதை எது? வாழ்க்கையை நிறைவும், மகிழ்ச்சியும்,ஞானமும் உள்ள விதம் சரியான
கோணத்தில் வாழ்வது எப்படி? மற்றும் காமம் முதல் கடவுள் வரை அனைத்தயும் பற்றி தெளிவு பெறுவீர்கள்.
*************************************


வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஹீலிங் மற்றும் ஏழு ஆதாரச் சக்கரங்கள் தூய்மை செய்து அவற்றின் இயக்கம் சரி செய்யப்படும்.  

-------------------------------------------------------------------------------
தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ,
மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

-------------------------------------------------------------------------------
விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 


---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  08.10.2017 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : K.M.L.நாதன் திருமண மண்டபம் 
பெரம்பூர் -ரெட் ஹில்ஸ் ரோடு,புதிய லட்சுமி புரம்,கொளத்தூர்  
சென்னை 600009


பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் :கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம்(ரெட்ஹில்ஸ்) செல்லும் பேருந்தில் ஏறி ரெட்டேரி சிக்னல்  ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து நடந்து வரவும் 


வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள கீழ்கண்ட இரு நபர்களில் ஒருவரைத் தொடர்பு கொள்ளவும்.
திரு.சக்திவேல்  -   9841530789
திரு.செல்வம்     -   9841685645
------------------------------------------------------------------------------

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


M.சூர்யா-தச்சநல்லூர்,
திருநெல்வேலி

மொபைல்   : 9442193072
வாட்ஸ்அப்  : 9788493072

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

----------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072 

ms.spiritual1@gmail.com