Thursday, 21 January 2016

ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி எண் யந்திரங்கள்



தாந்த்ரீக சாஸ்திரங்களில் பலவிதமான யந்திரங்கள் உள்ளன.அதில் மிக எளிமையான எந்திரங்கள் எண் யந்திரங்களே .குறிப்பிட்ட பலன்களைப் பெரும் விதமாக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பீஜ மந்திரங்களின் நியூமராலஜி கணக்கின் படி எண் யந்திரங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

கீழே உள்ள யந்திரங்களைச் செம்புத் தகட்டில் எழுதினால் பலன் அதிகம். முடியாதவர்கள் சுத்தமான வெள்ளைப் பேப்பரில் சிகப்பு மையால் அல்லது குங்குமத்தால் எழுதி வைத்துக்கொள்ளவும்.பின்னர் யந்திரத்திற்கு 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
விளக்கேற்றி விளக்கின் பாதத்தில் யந்திரங்களை வைத்து விளக்கில் ஸ்ரீ மகாலக்ஷ்மியை எழுந்தருள வேண்டி பால்,பழங்கள்,கற்கண்டு,பாயசம் வைத்து யந்திரத்தித்தைச் செந்தாமரை அல்லது மல்லிகைப் பூக்களால் குறைந்தது 27 தடவையாவது கீழே உள்ள மந்திரம் ஜெபித்து அர்ச்சித்து வைத்துக் கொள்ளவும்.

ஜெபிக்க  வேண்டிய மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்| லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச |மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||  

எண் 1ல் உள்ள யந்திரத்தைப் பர்சிலும் எண் 2 ல் உள்ள யந்திரத்தைப்  பணப்பெட்டி,கேஷ் பாக்ஸ்,பீரோவில்  இடத்தில் வைத்துக் கொள்ளவும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Saturday, 16 January 2016

தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு வர




ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் அரசமரத்தில் இருந்து 11 இலைகளைப் பறித்துப் பன்னீரால் சுத்தம் செய்து  செஞ்சந்தனத்தை அரைத்துக் குழைத்து அதைக் கொண்டு அந்த இலைகள் ஒவ்வொன்றிலும் "ராம் ராம்"  என்று 4 தடவை எழுதவும்.பின்னர் அந்த 11 இலைகளையும் அனுமன் விக்ரகம் உள்ள ஏதேனும் கோவிலில் அனுமனின் பாதத்தில் வைத்து வணங்கிக் கொள்ளவும்.


இந்தப் பரிகாரத்தைத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் சரியாகி நல்ல நிலைக்கு வரும்வரை செய்துவரவும்.இடையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஏதாவது ஒரு திங்கள்கிழமை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை.முடிந்த திங்கட்கிழமைகளில் செய்து வர நற்பலன்களைக் காண்பீர்கள்.





வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Wednesday, 13 January 2016

துஷ்ட சக்திகளிடம் இருந்து காக்கும் திசைகட்டு மந்திரம்



சில தெய்வங்களின் மந்திரங்களை ஜெபிக்கும் போதோ அல்லது சில தெய்வங்களுக்குப் பூஜை செய்யும் பொழுதும் எதிர்பாராத ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு.எனவே பூஜை அல்லது மந்திர ஜபம் செய்யும் முன் விபூதியை கையில் வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை 11 தடவை ஜெபித்து கிழக்கு,தெற்கு,மேற்கு,வடக்கு என்று நான்கு  திசைகளிலும் பூமி  மற்றும் ஆகாயத்திலும் சிறிது தூவிப் பின்னர் தலை உச்சியிலும்,நெற்றியிலும் இட்டுப் பின்  அமர்ந்து பூஜை,ஹோமம்,ஜெபம் செய்ய எந்த தீய சக்தியும் தேவதையும் உங்களுக்குத் தீங்கு செய்ய இயலாது.


ஜோதிடர்களும் குளித்து முடித்து ஜோதிடம் பார்க்க  இம்மந்திரத்தை ஜெபித்த பின் ஜோதிடம் பார்க்க வந்திருப்பவர்களை உள்ளே அழைத்துப் பலன் கூறவும். ஏன் என்றால் தீய சக்திகள்,பேய்,பிசாசு,தோஷம்,பில்லி,சூன்யம்,ஏவல் போன்றவற்றால் கஷ்டம் அனுபவிப்பவர்கள் உங்களை நாடி வந்து பலன் கேட்க வரும் பட்சத்தில் அவர்களிடம் உள்ள சக்திகளாலோ,தோஷத்தாலோ உங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.எனவே இதைச் செய்து கொள்ள உங்களுக்கு கவசமாக விளங்கும்.


வளர்பிறையில் உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நாளாகப் பார்த்து 11 நாட்களுக்குத் தினமும் 1008 தடவை ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.பின் மேற்கூறிய படித் தேவையான நேரங்களில் பயன்படுத்திப் பாதுகாப்பாக வாழவும்.


திசைகட்டு மந்திரம் 

வஜ்ரக்ரோதாய மகாதண்டாய தச திஷோ பந்த் பந்த்  ஹூம் பட் ஸ்வாஹா ||



வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

மாமனார் மாமியாருக்குப் பிரியமான மருமகளாக விளங்க உதவும் பரிகாரம்




உலகின் மிக நீண்ட போராக விளங்கும் மாமியார் மருமகள் சண்டை தீர, இருவருக்கும் இணக்கமான உறவு ஏற்பட உதவும் எளிய பரிகாரங்கள்.


1.கிழக்குத் திசையில் தலைவைத்து உறங்க மாமியார்  மருமகள் சண்டை தீரும்.

2.வளர்பிறையில் வெள்ளி  மோதிரத்தில் 4.5 முதல் 5.5 காரட் தரமான சந்திரகாந்தக் கல் பதித்து அந்த மோதிரத்தை முதலில் பசும்பாலிலும் பின்னர் சுத்தமான தண்ணீரிலும் கழுவிக் கொள்ளவேண்டும்.பின்னர் வளர்பிறை திங்கட்கிழமை அன்று சந்திரோதய வேளையில் அல்லது பௌர்ணமி அன்று இரவில் நிலவைப்  பார்த்தபடியே அம்பாளை வணங்கி ஓம் ஹ்ரீம் வம் சந்திரதேவாய நமஹா என்று 27 தடவை  ஜெபித்து வலதுகை மோதிர விரலில் அணிந்து கொள்ள மாமியார்  மருமகள் சண்டை தீரும்.


3.அஷ்டலோக மோதிரம் செய்து வலது கை நடுவிரலில் அணிந்து கொள்ள   மாமியார்  மருமகள் சண்டை தீரும்.

4.200 கிராம் படிகாரம் வாங்கி அதைப் படுக்கை அறையில் தெற்குத் திசை  தவிர்த்து ஏதேனும் ஒரு திசையில் படுக்கையறையின் ஒரு பகுதியில் வைத்துக் கொள்ள மாமியார்  மருமகள் சண்டை தீரும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

திருமணத்தடை நீக்கும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்கள்






உரிய வயது வந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ பெண்ணோ யாரும் இந்தப் பரிகாரங்களைச் செய்து பலனடையலாம்.


1.வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் அம்பாள் விக்ரகம் அல்லது படத்தின் முன் பஞ்சு அல்லது தாமரைத் தண்டுத் திரியில் கொஞ்சம் ஜவ்வாது தடவி அந்தத் திரியைக் கொண்டு விளக்கேற்றி  "ஓம் ஆனைமுகன்  வருக கலைமகள்,மலைமகள்,திருமகள் வருக தேவர்கள் யாவரும் சேர்ந்திங்கு வருக" என்ற துதியை 3 தடவை சொல்லி விளக்கிற்கு சாம்பிராணி அல்லது ஊதுவத்தி தூபம் காண்பித்து விளக்கின் பாதத்தில்  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் " என்ற மந்திரம் ஜெபித்தபடியே குங்குமம் இடவும்.


ஜெபித்து முடித்த பின் திருமணத் தடை நீங்க வேண்டிக்கொள்ளவும்.


அந்தக் குங்குமத்தை ஒரு வெள்ளிக் குங்குமச் சிமிழில் எடுத்து வைத்துக் கொண்டு,தினமும் குளித்து முடித்த பின் நெற்றியில் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.


2. ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள் 7 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் குரு ஹோரையில் அத்திமரத்தின் அடிப்பகுதியில் 7 மஞ்சள் நிறப் பூக்களைப் பன்னீரில் நனைத்துப் போட்டு வர விரைவில் திருமணமாகும்.


3.ஜாதகத்தில் சந்திர பலம் இல்லாதவர்கள்  செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு  5 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.


4.ஜாதகத்தில் செவ்வாய் பலம் இல்லாதவர்கள் 5 வாரங்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு  11 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.


குங்குமப்பூ 


5. 11 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் அதிகாலையில் குளிக்கும் நீரில் கொஞ்சம் குங்குமப்பூ போட்டுச் சில நிமிடங்கள் கழித்துக் குளித்து வர விரைவில் திருமணமாகும்.


பிரிஞ்சி இலை 



6.ஒரு கவர் அல்லது பேப்பரில் 9 பிரிஞ்சி இலைகளை எடுத்து வைத்துக் கொண்டு உறங்கும் பொழுது தலையணையின் அடியில் வைத்து உறங்கி வர விரைவில் திருமணமாகும்.



7.சனிக்கிரகம் ஜாதகத்தில் சுப பலன்களைத் தராத காரணத்தினால் திருமணத் தடை உள்ளவர்கள் திங்கட்கிழமை தோறும் சிகப்பு நிற ஆடைகள் அணிந்து வரத் சனீச்வரரால் உண்டான தடைகள் விலகி விரைவில் திருமணமாகும்.


வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072



Friday, 8 January 2016

தொழில் விருத்தி தரும் ஜன ஆகர்ஷண யந்த்ரம்





மலேசியா ,தாய்லாந்து,இந்தோனேசியா,சிங்கப்பூர்,இந்தியா,வங்காளதேசம்   போன்ற நாடுகளில் அனைத்து மதத்தினராலும் பயன்படுத்திப் பலன் கண்டுவரும் ,தொழில் ஸ்தாபனங்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் சக்தி உள்ள   ஜன ஆகர்ஷண சுலைமான் யந்திரம்.இது சாதாரண பேப்பரில் வரைந்து உருவேற்றப்பட்டிருந்தாலும் நிறைந்த பலன் தரக் கூடியது.


பலரும் இந்த யந்திரத்திற்குத் தூபம் காண்பித்துப் பூஜித்து வந்ததன் பலனாகத் தங்களது கடை,தொழில் ஸ்தாபனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகஅளவு வரத் துவங்கிப்  பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.



விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட செல்போனுக்குத் தொடர்பு கொண்டு தகவல் பெறவும்.ஒரு வாரத்தில் லேமினேஷன் செய்து அனுப்பி வைக்கப்படும். அத்துடன் பயன்படுத்தும் முறைகள் குறித்த கையேடும் அனுப்பி வைக்கப்படும்.     


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 /97884930472


Tuesday, 5 January 2016

செல்வவிருத்தி தரும் தாந்த்ரீகப் பிரயோகம்




தொடர்ந்த பணப்புழக்கமும்,செல்வ நிலையில் உயர்வும் தரும் இந்த தாந்த்ரீக பிரயோகம் மிக எளிமையான ஆனால் வலிமையான் ஒன்று.இதை அன்பர்கள் யாவரும் செய்து பலன் பெற வாழ்த்துகிறேன்.

இதைச் சங்கடஹர  சதுர்த்தி அன்று வெள்ளை அல்லது மஞ்சள் நிற விரிப்பு விரித்துக் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து செய்யவும்.

தேவையான பொருட்கள் :-
மஞ்சள் துண்டு ஒன்று
மஞ்சள் காட்டன் அல்லது பட்டுத் துணி
தேங்காய் ஒன்று
கொட்டைப்பாக்கு ஐந்து



கொட்டைப்பாக்கையும் தேங்காயையும் மஞ்சள்பொடி தடவி வைக்கவும். பின்னர் மஞ்சள் துண்டு,தேங்காய்,ஐந்து கொட்டைப்பாக்கு இவற்றை மஞ்சள் துணியில் போட்டு முடிந்து கட்டவும்.அதற்குக் கற்பூரம், சாம்பிராணி தூபம், ஊதுவத்தி தூபம் கட்டவும்.இந்தப் பிரயோகத்தைச் செய்யும் பொழுது மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ  "ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹா" என்ற மந்திரத்தை ஜெபித்தவாறே  செய்யவேண்டும்.  

பின்னர் சக்தி வாய்ந்த இந்த செல்வவசியத் தேங்காய்முடியை வீடு அல்லது கடையில் சுத்தமான இடத்தில் வைக்கச் செல்வம் பெருகத் துவங்கும்.இதை நீங்களே அனுபவத்தில் உணரலாம்.வீட்டாரைத் தவிர வெளி நபர்கள் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகச்  செய்யவும்.வெளிநபர்கள் யாரிடமும் சொல்ல விரும்பினால் செய்த பின்னர் சொல்லிக் கொள்ளலாம்.
தினமும் அல்லது சங்கட சதுர்த்தி,திங்கள்கிழமை,வெள்ளிகிழமை, பௌர்ணமி நாட்களில் அதற்கு கற்பூரம் ,ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காட்டி வர சக்தி குறையாமல் இருக்கும்.

வாழ்க வையகம்  || வாழ்கவளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072
Whatsapp: 9788493072
Youtube Channel: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw


Tuesday, 29 December 2015

வாக்குவன்மை,தேஜஸ்,நினைவாற்றல்,சகல கலைகளிலும் உயர்வு தரும் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி மந்திரம்



வளர்பிறைத் திங்கள்,புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு நோக்கி வெள்ளை விரிப்பில் அமர்ந்து இதைச் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

செம்பு அல்லது பித்தளைத் தட்டு  - 1
வெண்தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூக்கள்
ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர்


விளக்கேற்றி வைத்து அதில் மாதா ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை எழுந்தருள வேண்டி இரண்டு சிறிய கற்கண்டுகளை விளக்கில் போடவும்.பால் ,பழங்கள் வெற்றிலை,பாக்கு மற்றும் இயன்ற நைவேத்யம் வைக்கவும்.

ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் கொஞ்சம் சந்தானம் பரப்பி அதில் கொஞ்சம் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் விட்டுக் குழைத்து தட்டு முழுவதும் பரப்பி அதில் வலது கை மோதிர விரலால் ஐம் என்று எழுதவும்.கொஞ்சம் காய்ந்த பின்னர்    தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூ எடுத்து கீழே உள்ள மூலமந்திரம் சொல்லி தட்டில் உள்ள ஐம் என்ற எழுத்தில் படும் படிப் போடவும். பின்னர் மந்திரம் குறைந்தது 108 தடவை ஜெபித்து அன்னை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியே உன் திருமந்திரம் கொண்டு இந்த அர்ச்சிக்கப்பட்ட இந்த சந்தனத்தை அணிவதால் எங்களுக்கு நல்ல ஞானம், வாக்குவன்மை,கல்வியில் ஆர்வம்,வாழ்விலும் ஆன்மீகத்திலும் உயர்வு, தேஜஸ் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த சந்தனத்தைப் பன்னீரில் குழைத்துத் தினமும் அணிந்து கொள்ளவும்.பின்னர் அந்த சந்தனத்தை சேர்த்து எடுத்து ஒரு பித்தளை,செம்பு,தங்கம்,வெள்ளி இதில் எந்த டப்பி அல்லது பாத்திரம் உங்கள் வசதிக்கு உகந்ததோ அதில் போட்டு வைத்துக் கொள்ளவும்.பௌர்ணமி தோறும் அந்தப் பாத்திரம் அல்லது டப்பிக்கு மந்திரம் ஜெபித்துப் பூக்களால் அர்ச்சித்து வர சக்தி கூடும்.

தினமும் குளித்து முடித்த பின் கிழக்கு முகமாய் நின்று 3 முறை மந்திரம் ஜெபித்துச் சந்தனத்தைப் பன்னீர் விட்டுக் குழைத்து அணிந்து வர வாலைத்தாய் அருளால் நல்வாழ்வு கிட்டும்.


அசைவம் தவிர்க்கவும்.

மூலமந்திரம் 

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலா திரிபுர சுந்தரி |
என் வாக்கிலும் மனதிலும் முகத்திலும் வந்து நிற்க ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday, 20 December 2015

மன விருப்பங்களை நிறைவேற்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்




ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லூம் ஐம் |
மஹாலக்ஷ்மீம் மம வாஞ்சிதார்த்த சித்திம் |
குரு குரு ஸ்வாஹா ||

 இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஜெபிக்கத் துவங்கி 23 ஆயிரம் தடவை ஜெபித்து முடிக்க மந்திரம் சித்தியாகி நமது விருப்பம் நிறவேற ஏற்ற சூழல் உருவாகும்.

ஜப ஆரம்பத்தில் உங்கள் நோக்கம் இன்னதென்று குறிப்பிட்டு அது நிறைவேறும் பொருட்டு இம்மந்திரம் ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து பின் மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்..

ஜப ஆரம்பத்தில் விளக்கேற்றி ஸ்ரீ மகாவிஷ்ணு சமேத ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி இத்தீப ஜோதியில் வந்தருள வேண்டும் என்று ஊதுவத்தி காண்பித்து 3 தடவை வேண்டவும்.பின்னர் விளக்கின் பாதத்தில் சந்தனம் ,பன்னீர் அல்லது ரோஸ்வாட்டர் கலந்த நீரைக் கொஞ்சம்  விட்டு விளக்கிற்குச் சந்தனம் குங்குமம் வைக்கவும்.
                                          முதல் நாள் மற்றும் கடைசி நாள் சிறப்பாக நைவேத்யம் படைத்துப் பூஜிக்கவும். மற்ற நாட்களில் இயன்றதைப் படைத்து வழிபடலாம்.


வீட்டில் காலை மாலை சந்தி வேளையில் நறுமணம் வீசும்படி சாம்பிராணி அல்லது ஊதுவத்தி ஏற்றிவைக்கவும்.

ஆவாஹனாதி பூஜை விதிகள் அறிந்தவர்கள் முறைப்படி பூஜிக்கவும்.


23,000 ஜெபம் முடிந்து வேண்டிய காரியம் பலிக்கும் வரை இந்தக் காரியம் நடைபெற வேண்டி இம்மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று வெளியில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகச் செய்யவும்.

ஜெப காலங்களில் சைவ உணவை மேற்கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday, 18 October 2015

வழக்குகளில் வெற்றி பெற,எதிரிகள் தொல்லை நீங்க காளி மந்திரம்




ஏதேனும் வழக்கில் சிக்கி உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் மட்டும் இந்த பிரயோகத்தைச் செய்யவும்.தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தினால் காரிய வெற்றி கிடைக்காது மேலும் தெய்வ நிந்தனை ஏற்படும்.


ஏதேனும் ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை
இரவில் 8 மணிக்கு மேல் விளக்கேற்றி  அதில் ஸ்ரீ காளிதேவியை எழுந்தருள வேண்டும் என்று வேண்டி உங்கள் கோரிக்கையை முன்வைத்து செந்நிறப் பூக்களால் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்து அர்ச்சிக்கவும்.
முதல் நாளும் 11 வது நாளும் வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும் மற்ற நாட்களில் வெற்றிலை,பாக்கு,பால்,பழம் மட்டும் வைத்து மந்திரம் ஜெபித்து வழிபடவும்.இவ்வாறு  தொடர்ந்து 11 நாட்கள் செய்யவும்.
தாமரைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றவும்.தினமும் திரியை மாற்ற வேண்டும்.முந்தைய நாள் பயன்படுத்திய திரியை ஒரு வெள்ளி அல்லது பித்தளை குங்குமச்சிமிழில் போட்டு வைக்கவும்.11 நாட்கள் முடிந்த பின் 12 ஆம் நாள் இரவில் எல்லாத்  திரிகளையும் போட்டு வைத்த குங்குமச்சிமிழை மூடி செந்நிரப்பூ பூக்கள் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி அர்ச்சிக்கவும். பின் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின் வடக்கு நோக்கி நின்று 3 தடவை  மந்திரம் ஜெபித்து ஸ்ரீ காளிதேவியை வழக்கில் வெற்றி தரவேண்டி  குங்குமச்சிமிழில் உள்ள எண்ணையைக் கொஞ்சம் எடுத்துப் புருவத்தில் தடவி வரவும். எதிரிகளால் தொல்லை நேராது.வழக்கிலும் வெற்றியுண்டாகும்.இதை வெளியில் எல்லோரிடமும் சொல்லாமல் ரகசியமாய்ச் செய்யவும்.

மந்திரம் :
ஓம் க்லீம் பீஜ ரூபிண்யை மஹாகாளிகாயை க்லீம் பட் ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Friday, 16 October 2015

வீட்டில் செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்

ஒரு சிறிய மண்பானை வாங்கி அதைப் பன்னீரும் தண்ணீரும்கலந்த கலவையால் கழுவிப் பின் அதில் கொஞ்சம் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைப் போட்டுக் கொஞ்சம் முனை மழுங்காத பட்டை தீட்டப்படாத பச்சரிசி அல்லது கோதுமையைப் போட்டுச் சிகப்புப் பட்டுத் துணியால் பானையின் வாயை மூடி அதை ஒரு வெண்பட்டு நூலால் கட்டி விடவும்.இதை வீட்டின் வடமேற்கு மூலையில் ஒரு பலகை போட்டு அல்லது ஒரு ஸ்டேண்ட் அடித்து அதில்  வைத்து விடவும்.சிறிது காலத்தில் செல்வம் பெருகத் துவங்கும்.இதை வீட்டினர் தவிர வெளியில் யாரிடமும் சொல்லாமல் செய்யவும்.நல்ல பலன் கண்ட பின்னரே பிறரிடம் சொல்லவேண்டும்.



இதைச் செய்ய வசதியற்றவர்கள் ஒரு கலசத்தில் மூன்று புண்ணிய நதிகளின் தீர்த்தத்தை ஊற்றி வடகிழக்குத் திசையில் வைக்கலாம்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்கவும்,உண்டான நஷ்டம் நீங்கவும் வேத பரிகாரம்


வளர்பிறையில் உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து அதிகாலையில் ஆலமர வேர் ஒரு சிறு துண்டு எடுத்துக் கொள்ளவும்.வீட்டிற்குக் கொண்டு வந்து பஞ்சகவ்ய அல்லது பன்னீர் விட்டுக் கழுவி வைத்துக்கொள்ளவும்.ஒரு வெள்ளை அல்லது மஞ்சள் பட்டு நூல் வாங்கி செஞ்சந்தனக் கட்டையை உரைத்து  அதை அந்தப் பட்டு  நூலில் தடவி தொழில்,வியாபார ஸ்தாபனங்களில்  வாசலில் கட்டவும்.பலரால் பயன்படுத்தி வெற்றி கண்ட இம்முறையைப் பின்பற்றி நீங்களும் தொழிலில் சிறக்க வாழ்த்துகிறேன்.   

குறிப்பு:மரத்தின் தெற்கு பக்கம் உள்ள வேரை மட்டும் எடுக்கக் கூடாது.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Tuesday, 22 September 2015

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஸ்ரீ துர்கா மந்திரம்









வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் சிகப்பு அல்லது வெண்ணிற ஆடை அணிந்து விளக்கேற்றி ஸ்ரீ துர்கா தேவியை விளக்கில் எழுந்தருள வேண்டி நைவேத்தியமாக வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பாயசம் வைத்து விரிப்பில் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் தெளித்து அமர்ந்து  கீழ்க்கண்ட மந்திரத்தை 108 தடவை முதல் நாள் ஜெபிக்கவும்.அடுத்து வரும் நாட்களில் குறைந்தது  54 தடவையாவது ஜெபித்து வர உங்கள் கர்ம பலனைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்களில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.

ஜெபம் செய்து முடிந்ததும் " ஸ்ரீ துர்கா மாதா தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் அழைத்தால் வந்து அருள் செய்ய வேண்டுகிறேன் " என்று வேண்டி விளக்கைக் குளிர்வித்து விளக்குத் திரியின் கருக்கை நெற்றியில் அல்லது தலை வகிட்டில் அல்லது புருவத்தில் தடவி வரவும்.விரைவான பலனைத் தரும்.


மந்திரம்  

வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ...........................வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா

முக்கிய குறிப்பு : .மந்திரத்தில் .....................கோடிடப்பட்டுள்ள இடத்தில் கணவன் அல்லது மனைவி பெயரைக் குறிப்பிட்டு ஜெபிக்கவும்.
உதாரணமாக கணவர் பெயர் கிருஷ்ணன் என்றால்

வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே கிருஷ்ணன் வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா  என்று ஜெபிக்கவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

ஸ்ரீ விஷ்ணு மந்திரங்கள்







1.வறுமை நீங்க

ஓம் ஸ்ரீம் ஹரயே  நமஹ


2.பக்தி,ஞானம்,முக்தி பெற 

 ஓம் ஹ்ரீம் ஹரயே நமஹ

3.தம்பதிகள் ஒற்றுமைக்கு ,குடும்பம் நலம் பெற

ஓம் க்லீம் ஹரயே நமஹ

4.எதிரிகளை வெல்ல 

ஓம் ஹூம் ஹரயே நமஹ



மேலே உள்ள மந்திரங்களில் உங்கள் தேவைக்கேற்ற மந்திரத்தைத்  தேர்ந்தெடுத்து, 90 நாட்கள் தொடர்ந்து ஜெபம் செய்து வரக் குறிப்பிட்ட பலன் கிட்டும்.இவை எளிமையான வலிமையான மந்திரங்கள்.ஜெப காலங்களில் அசைவ உணவு தவிர்க்கவும்.அசைவம் சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்து ஜெபிக்கவும்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday, 13 September 2015

ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம்



வைஷ்ணவத்தில் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி அருள் செய்வதைப் போலவே சைவத்தில் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கி அருள் புரிபவள்.

சித்தர்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வங்கள் வாலை,புவனை,திரிபுரை என்ற முப்பெரும் மகாசக்திகளே.அகஸ்தியர் தனது பல பாடல்களில் இவர்களது உபாசனை பற்றியும் எந்த வாழ்க்கை முறை உள்ளவர்கள் யாரை உபாசனை செய்து சித்தி பெறலாம் என்பது பற்றியும் விரிவாகவே கூறுகிறார்.

தரித்திரம் நீக்கி நிறைந்த செல்வம் தருவதில் தனிச் சிறப்பானது புவனேஸ்வரி வழிபாடு.இது விரைவான பலன்களைத் தரவல்லது.


இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி அன்று துவங்கித் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை,கடன்,நோய்கள் அற்ற வளமான,நலமான வாழ்வு தருவாள். புவனேஸ்வரி யந்திரம் வைத்து வழிபட்டால் நல்லது.ஏன் என்றால் நாம் எல்லா நேரத்திலும் சுத்தமாக,ஆன்மீக விதிகளின்படி இருக்க இயலாது.எனவே யந்திரம் முன்னே வைத்து ஜெபித்தால் நமது மந்திர ஜெபத்தின் சக்தியை யந்திரம் உள்வாங்கி சக்தியைப்  வீடு முழுவதும் பரப்பி வாழ்வை வளமாக்கும்.

பௌர்ணமி அன்று விசேஷமாக பூஜை செய்து நைவேத்யங்கள் படைத்து வழிபடவும்.மற்ற நாட்களில் உங்களால் முடிந்ததைப் படைத்து வழிபடுங்கள்.


முறைப்படி ஒரு குருவிடம் தீக்ஷை பெற்று ஜெபித்து பூஜை விதிகளை அறிந்து ஜெபித்து வருவதன் மூலம் மட்டுமே நிறைவான பலன் கிடைக்கும். 




1. ஓம் ஸ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை நமஹா 

2. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை ஸ்வாஹா 

3. ஸ்ரீம் ஹ்ரீம் புவனேஸ்வர்யை நமஹா 



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Friday, 11 September 2015

வீட்டில் திருட்டு நேராமல் காக்க ,திருடர் பயம் நீங்க ஆன்மீகத் தீர்வு




                                      சமீப காலமாக திருட்டு அதிகரித்து நகை,பணம் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வதோடு  அதன் உரிமையாளர்களைக் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.அனேக அன்பர்களின் வேண்டுகோளின்படி
இதற்கு எளிமையும்,வலிமையான  இரண்டு தீர்வுகளை  இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.இவற்றில் எது உங்களுக்கு எளிமையானதோ அதைச் செய்து பயன்பெறுங்கள்.


பரிகாரம் 1




மேற்கண்ட இந்த அரேபிய யந்திரத்தை, சுத்தமான வெள்ளைப் பேப்பரில் பிரிண்ட் எடுத்து அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து அசுத்தம் படாத படி வைத்திருக்கவும்.இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க திருடர் அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள். இது எளிமையான மற்றும் மிகச்சக்தி வாய்ந்த முறை.


பிரிண்ட் எடுக்க முடியாதவர்கள் குளித்து முடித்து மேற்கு நோக்கி அமர்ந்து ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பரில் மேற்கண்ட படத்தில் உள்ள படி எழுதி
அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து அசுத்தம் படாத படி வைத்திருக்கவும்.இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க திருடர் அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள்.


பரிகாரம் 2





மேற்கண்ட இந்த அரேபிய யந்திரத்தை சுத்தமான வெள்ளை பேப்பரில் பிரிண்ட் எடுத்து அல்லது எழுதி அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பித்து லேமினேஷன் அல்லது  பிரேம் செய்து  வீட்டின் தலைவாசலில் மாட்டவும். தலைவாசலுக்குக் கிழக்கு ஓரத்தில் படம் இருக்கும் படி இருந்தால் மிக நல்லது.இதுவும் திருடர்கள் வராமல் காக்கும்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com







Wednesday, 2 September 2015

பொன்னும் பொருளும் அள்ளித்தரும் ஸ்ரீ ஐஸ்வர்யதாரா தேவி மந்திரம்






மந்திரம்

ஓம்|ஸ்ரீங் ஸ்த்ரீம் |மஹாபத்மே பத்மவாஸினி |திரவ்ய சித்திம்|
ஸ்த்ரீம் ஸ்ரீங் ஹூம் பட் || 


 எளிமையான,நிறைவான பலனைத் தரும் இம்மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்கத் துவங்கி தினமும் அல்லது 90 நாட்களுக்கு ஜெபித்து வரவும்.

தேங்காய்த் துண்டுகள்,தேன்,பச்சரிசி,ஏலக்காய் கலந்த நைவேத்யம் படைத்து வழிபட ஆபரணம்,ஆடைகள் நிறைவாகச் சேரும் யோகம் உண்டாகும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com



தந்த்ரோக்த சர்வ கார்ய சித்தி மந்திரம்




எல்லா காரியங்களிலும் வெற்றி அருளும் இம்மந்திரத்தைத் தாந்த்ரீக குருமார்கள் ரகசியமாக குருபரம்பையாக உபதேசித்து வருகின்றனர்.எனது வலைத்தளத்தைத் தொடர்ந்து பார்வையிட்டு வரும் அன்பர்களின் நலன் கருதி வெளியிடுகிறேன்.

நமக்கு தொழில்,வியாபாரம்,வேலை,குழந்தைகள் படிப்பு,பள்ளியில் சேர்க்கை,பெரிய மனிதர்களின் உதவி வேண்டுதல் இப்படிப் பல தேவைகள் வாழ்வில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.அவற்றில் சரி பாதி அல்லது அதற்கு மேலான காரியங்களில் தோல்வியையும் துன்பத்தையும் சந்தித்து வருபவர்கள் ஏராளம்.ஒவ்வொரு காரிய வெற்றிக்கும் தனிப்பட்ட சிறப்பான பூஜை மற்றும் மந்திரங்களை இன்றைக்குள்ள பிஸியான காலகட்டத்தில் செய்ய இயலாது.அதற்கு ஒரு எளிதான மந்திர ரீதியான தீர்வாக இம்மந்திரம் விளங்கும்.

ஜெப விதிகள் :-

இம்மந்திரத்தைக் கிரகணத்தன்று ஜெபிக்கவேண்டும்.
வெள்ளை நிற ஆடை அணிந்து வெள்ளை நிற விரிப்பில் அமர்ந்து வடக்கு முகமாக ஜெபிக்கவும்.
முதலில் குருவை மனதில் நினைத்து ஓம் கும் குருப்யோ நமஹ என 108 தடவை ஜெபிக்கவேண்டும்.அதன் பின்னரே கார்ய சித்தி மந்திரம் 1008 தடவை ஜெபிக்கவேண்டும்.இவ்வாறு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.

இது உங்கள் காரியங்கள் யாவிலும் வெற்றி தரும்.எந்த ஒரு முக்கியமான வேலையில் ஈடுபடுவதாக இருந்தாலும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வேண்டிச் செல்ல அதில் வெற்றி கிட்டும்.தனக்கோ பிறருக்கோ துன்பம் தரும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. 

தந்த்ரோக்த சர்வ கார்ய சித்தி மந்திரம் 


ஓம் சர்வோதய சம்பூர்ண லாப ப்ராப்த்யர்த்தே நமஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com


Sunday, 16 August 2015

கர்ப்பம் கலையாமல் இருக்க ,பிறந்த குழந்தை இறப்பில் இருந்து காக்கப்பட




அடிக்கடி கர்ப்பம் கலைந்து விடுபவர்கள் ,தொடர்ந்து குழந்தை பிறந்து பிறந்து இறந்து விடுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கர்ப்பிணியின் உடல் உயரத்தை அளந்து அதே அளவிற்குச் சிகப்புக் கயிறு அளந்து அதை எனது முகவரிக்கு அனுப்பி வைத்தால் பூஜித்து அனுப்புகிறேன்.அதை அணிந்தால் சர்வ நிச்சயமாகக் கர்ப்பம் கலையாது. கர்ப்பிணியின் பெயர் மற்றும் கர்ப்பிணியின் தாயின் பெயர் குறிப்பிட்டு ஒரு ஒரு பேப்பரில் எழுதிக் கயிறுடன் வைத்து அனுப்பவும்.

அநேகர் தொந்தரவு செய்யக் கூடும் என்பதால் எனது முகவரியை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை.எனவே நேரில் வரவேண்டாம்.மேலே குறிப்பிட்ட தேவை உள்ளவர்கள் எனது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் எனது முகவரியை SMS செய்கிறேன்.   

வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com


Sunday, 9 August 2015

சர்வ கார்ய சித்தியும் சர்வ ஐஸ்வர்யமும் தரும் ஸ்ரீ பகளாமுகி மந்திரம்




தசமஹா வித்யா என்ற 10 பெரும்தெய்வங்களில் இவளும் ஒருவள். விரைந்து அருள் செய்யும் தெய்வங்களில் ஸ்ரீ பகளமுகியும் ஒரு சக்தி.அதர்வண ரஹசிய ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயம் மிக உயர்ந்த பலன்களைத் தருவது. இம்மந்திர ஸ்லோகத்தில் கீழ்க்கண்ட மந்திரம் வருகிறது. ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயத்தையும் இம்மந்திரத்தையும் சேர்த்துப் படித்து வந்தால் சர்வ காரியமும் சித்திப்பதொடு மனோ விருப்பங்களை விரைவில் நிறைவேற்றும்.வறுமை ஒழியும்.


மஞ்சள் வண்ண ஆடை அணிந்து மேற்கு முகமாக அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.மஞ்சள் நிறப்பூக்கள் மிக பிடித்தமானவை.தேன்,எள் , சம்பாஅவல், நெய் கலந்த நைவேத்யம் மிகப் பிடித்தமானது.

ஸ்ரீ பகளாமுகி மந்திரம் :-  

ஓம் ஹ்ராம் ஐம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீ பகலானனே |
மம ரிபூன் நாசய நாசய |
மம ஐஸ்வர்யாணி தேஹி தேஹி |
சீக்ரம் மனோ வாஞ்ச்சித கார்யம் ஸாதய ஸாதய |
ஹ்ரீம் ஸ்வாஹா ||



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com