Wednesday, 17 August 2016

தொட்டதெல்லாம் துலங்க,வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்பட அகஸ்தியர் அருளிய சிவ மந்திரம் .




அகஸ்தியர் தனது வாத சௌமியம் 1200 என்ற நூலில் மந்திரவாள் என்ற பகுதியில் சில மந்திரப் பிரயோகங்களைக் கூறியிருக்கிறார்.அதில் ஓம் ரீங் சிவ சிவ என்ற மந்திரம் எல்லா நன்மைகளையும் தரக்கூடியது என்று சிறப்பித்து கூறியிருக்கிறார் இதன் பலனை அனுபவித்தவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.இதனை ஜெபித்து வர நன்மை உண்டாகும். மேலும்,இடது உள்ளங்கையில் அல்லது ஒரு செம்பு,பித்தளை அல்லது வெண்கலத் தட்டில் விபூதி பரப்பி வைத்துக் கொண்டு அதில் இம்மந்திரத்தை எழுதி மந்திரத்தை 1008 உரு ஜெபித்து வைத்துக் கொண்டு அதைத் தினமும் அணிந்து வர எல்லா நிலைகளிலும் மேன்மை பெறலாம்.

 வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 

Wednesday, 10 August 2016

அடிக்கடி நோயால் பாதிக்கப்படுதல் நீங்கவும்,தீராத நோய் தீரவும் காளி பீஜ மந்திரம்:-


வடக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து இடது கையில் நீர் வைத்துக் கொண்டு வலது கையின் ஆள்காட்டிவிரல்,நடுவிரல்,மோதிர இம்மூன்று விரல்களும் நீரினுள் வைத்தபடி க்ரீம் என்ற காளிதேவியின் பீஜ மந்திரத்தை 7 தடவை ஜெபித்து  காளிமாதாவிடம் நோய்  தீர வேண்டிக்கொள்ளவும். நோயாளியை அந்த தீர்த்தத்தை குடிக்க சொல்லவும்.வெளி உறுப்பில் பாதிப்பு இருந்தால் குடித்த பின் சிறிது நீரை அந்த உறுப்பில் கொஞ்சம் தொட்டுத் தடவிக் கொள்ளவும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

 

Thursday, 28 July 2016

மன அமைதியும்,வளமான வாழ்வும் தரக்கூடிய எளிய தாந்த்ரீக தியானம்.



ஆண்கள் புருவநடுவிலும் ,பெண்கள் அனாஹத சக்கரம் என்று கூறப்படும் நெஞ்சுக்குழியிலும் மனம் வைத்து அங்கு ஒரு ஜோதி இருப்பதாகப் பாவித்துக் கொண்டு உள்மூச்சு இழுக்கும்  பொழுதும்,வெளிமூச்சு விடும்போது  ஹ்ரீம் என்ற மந்திரத்தை மனத்தால் ஜெபிக்கவும்.இதை 5 முதல் பத்து நிமிடங்கள் செய்து வரவும்.உங்களுக்கு லௌகீக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் நல்ல பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.அவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 
அதிகாலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.அல்லது மாலை வேளையில் 5: 30 முதல் இரவு 9:30 மணிக்குள் செய்ய நல்லது.

   
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!


M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday, 27 July 2016

தீய சக்திகளின் தொல்லை நீங்க



செவ்வாய்க்கிழமை தோறும் மாலை நேரத்தில்

லக்ஷ்மி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம பாஹிமாம்  
உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம ரக்ஷமாம்

என்று ஜெபித்த படியே வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி வர தீய சக்திகள் விலகி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com




Tuesday, 19 July 2016

பெண்களின் மனத்துயர் நீக்கும் சக்தி மந்திரம்

இது  பெண்களின் உடல் ரீதியான,மன ரீதியான துன்பங்களைத் தீர்த்து உடல், மனபலம், நல்வாழ்வு தருவது .ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களோ ,தீய கிரகங்களின் சேர்க்கையாலோ அவஸ்தைப்படுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள்,திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திர ஜெபத்தினால் துன்பம் நீங்கப் பெறலாம்.காதல் தோல்வி, விவாகரத்து போன்றவற்றால்  மனம் வருந்துபவர்களும் இம்மந்திரம் ஜெபித்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.

மந்திரம்:-


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் | ஸர்வபூஜ்யே தேவி மங்கள சண்டிகே | ஹூம் பட் ஸ்வாஹா || 

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com


புலனடக்கம் பெற உதவும் நிக்ரஹ மந்திரம்

குறிப்பு :-   பிரம்மச்சாரிகள் அல்லது முழுநேர ஆன்ம சாதகர்கள் மட்டுமே இம்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.குடும்பஸ்தர்கள்,திருமண வாழ்வை மேற்கொள்ள விரும்புபவர்கள் ஜெபித்தால் முழுநேர யோகியின் மனோநிலை வந்து விடும்.எனவே குண்டலினி விழிப்பு,ஆன்மீக உயர்வு நாடுபாவரக்ள் ஜெபித்துப் பயன்பெறலாம்.இது வட இந்திய சாதுக்கள் பயன்படுத்தப்படும் மந்திரம்.

மந்திரம் 

ஓம் ஹ்ரீம் ஹூம் கே மச்சே க்ஷஹ ஸ்த்ரி ஹூம் க்ஷேம் ஹ்ரீம் பட் த்வரிதாயை நமஹ ||




வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

பிறவித்தளை நீங்க,ஆன்மீக முன்னேற்றம் பெற மிருத்யுஞ்சய மந்திரம்


மிருத்யுஞ்சய மஹாதேவ த்ராஹி மாம் சரணாகதம் |
ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி சம்சார பயநாசனம் ||

இந்த மிருத்யுஞ்சய மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வரச் சிவ சரணாகதி ஏற்பட்டு இல்வாழ்க்கைத் துன்பங்கள்,பயம்,சஞ்சலங்கள்,நோய்கள் யாவும் நீங்கிப் பிறவிப் பயனை அடைய வழிபிறக்கும்.

1,25,000 தடவை ஜெபிக்க மந்திர சித்தி ஏற்படும்.




வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

கணவன் மனைவி ஒற்றுமைக்கு உதவும் மந்திரங்கள்

மந்திரம்  1:

ஓம் காம் காமமாலினி  பதிம் மே வசமானய ட்டஹ  ட்டஹ ||

சூர்ய அல்லது சந்திர கிரகண நேரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து மேற்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.

அதன் பின்னர் குங்குமம் கஸ்தூரி கோரோசனை மூன்றையும் சேர்த்து அரைத்துக் குழைத்து வைத்துக் கொள்ளவும்.தினமும் குளித்து முடித்தபின் கிழக்கு நோக்கி நின்று அல்லது அமர்ந்து வலது கைப் பெருவிரலில் அந்தக்  கலவையைத் தொட்டு  இம்மந்திரத்தை 7 தடவை ஜெபித்து நெற்றியில் அல்லது புருவ நடுவில் வைத்து வரத் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் பிரியமும் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------------------

மந்திரம் 2 :-

ஓம் ஹும் ஜும்  ஸஹ அர்த்தநாரிஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா

இம்மந்திரத்தை மனைவி 41 நாட்கள் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 108 தடவை ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.(மாதவிலக்கு நாட்கள் தவிர இடைவெளி இல்லாமல் 41 நாட்கள் ஜெபிக்கவும்).

-------------------------------------------------------------------------

மந்திரம் 3 :-
 ஓம் கம் கம் க்யாம் க்யஹ மம ..............வஷ்யம் குரு குரு ஸ்வாஹா ||

குறிப்பு :
கணவன் ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பத்னி என்ற வார்த்தையும் ,

மனைவி ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பதி  என்ற வார்த்தையும்
சேர்த்து ஜெபிக்கவும்.

இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 27 தடவை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இன்று அல்லது அமர்ந்து ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Saturday, 16 July 2016

சனீஸ்வர தோஷம் நீக்கும் ஸ்லோகம்

ஏழரைச்சனி மற்றும் சனீஸ்வர கிரகம் சார்ந்த பிற தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் ஜெபிக்கத் துவங்கி,தினமும் குறைந்தது 3 தடவை ஜெபித்து வர சனீஸ்வரர் அருள் கிட்டும்.


சனீஸ்வர ஸ்லோகம்:-

கோணஸ்த பிங்களோ பப்ரு கிருஷ்ணோ ரௌத்ராந்தகோ யமஹ: |
சௌரி சனைச்சரோ மந்த பிப்பலாதேன சம்ஸ்துதஹ: |
நமஸ்தே கோண ஸம்ஸ்தாய பிங்களாய நமோஸ்துதே
நமஸ்தே ரௌத்ரதேஹாய நமஸ்தே  சண்டகாயச |
நமஸ்தே  மந்த சஞ்சாய நமஸ்தே  சௌரயேவிபோ
நமஸ்தே  யம சஞ்சாய சனைஸ்சர நமோஸ்துதே |
 பிரசாத குரு தேவேச தீனஸ்ய ப்ரணதாஸ்யச |

வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 11 July 2016

வாழ்வில் உயர்வான நிலை அருளும் ஸ்ரீ துர்கா மந்திரம்



இது தந்திர சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ துர்கா ஆவாஹன மந்திரம்.இம்மந்திரம்  எளிமையாக இருந்தாலும்  உங்கள் வாழ்வில் ஸ்ரீ துர்கா மாதாவின் அருளை ஆகர்ஷித்து வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க உதவக்கூடியது.

பூஜா விதிகள் :


இம்மந்திர ஜெபத்தை நவராத்திரியில் ஆரம்பித்து நவராத்திரி காலமான 9 நாட்களுக்கும் செய்யவேண்டும்..

துர்கா தேவியின் படம் வைத்து அதன் முன் விளக்கேற்றி ஊதுவத்தி ஏற்றி வைக்கவும்.

மஞ்சள் நிற ஆடை அணியவும்.

வடக்கு நோக்கி அமர்ந்து  ருத்ராக்ஷம் அல்லது ஸ்படிக மாலையால் காலையிலும் இரவிலும் 540 தடவைகள் ஜெபிக்க வேண்டும். (108*5=540).

பழங்கள் ,இனிப்பு வகைகள் நைவேத்யம் செய்யவும்.

ஜபம்,பூஜை முடிந்த பின் பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கவும்.

பூஜா காலங்களில் ஏற்படும் ஆன்மீக அனுபவங்களை  யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.அது நிறைவான பலனை குறைக்கும்.



மந்திரம் 


ஓம் ஹ்ரீம் பகவதி ஆகச்ச ஓம் நமஹா 



வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Sunday, 10 July 2016

பாதுகாப்பும் செல்வமும் தரும் ஸ்ரீ பைரவ மந்திரமும் ஹோமமும்





இது பைரவரின் நவாட்சர மந்திரம் இதை 14000 உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.பின்னர் பத்தில் ஒரு பங்கு அதாவது 1400 எண்ணிக்கை பால் கொண்டு ஹோமம் செய்தால் மந்திரம் பூரண சித்தியாகி விடும்.இதை பயன் கள் :-நம்மைச் சுற்றி நடக்கும் தீய சக்திகளின் தொந்தரவுகள்,தொடர்ந்த உடல் நலக் குறைபாடுகள்  நீங்கும்,உணவு,உடைக்குப் பஞ்சம் என்ற நிலை மாறி நிரந்தரமான பணப் புழக்கம் உண்டாகும்.


மந்திரம் 

ஓம் நமோ பைரவாய ஸ்வாஹா




வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Friday, 8 July 2016

அதிகமான பலன்கள் தரும் யந்திரம்




இந்த யந்திரத்தை  எப்படிக் கூட்டினாலும் 20 வரும்.3 விதமான வேறுபட்ட நோக்கங்களுக்கு இந்த யந்திரத்தைப் பயன்படுத்தலாம்.அவற்றை  வரிசையாகப் பார்க்கலாம்.


பிரயோகம் 1:-     ஒரு குறிப்பிட்ட காரிய சித்திக்கு உதாரணமாக வேலை, தொழில், திருமணம்,போன்ற விஷயங்களில் வெற்றி வேண்டிச்  செய்யலாம்.இது போன்ற காரிய வெற்றிக்குச் செய்யும் பொழுது பூர்ஜபத்ரம் அல்லது தூய வெள்ளை பேப்பரில் அஷ்டகந்தம்  கொண்டு  மாதுளை மரக்குச்சியில் தொட்டு இந்த யந்திரம் வரையவேண்டும்.பின் அந்த யந்திரத்திற்கு தூபம்,தீபம் காட்டி ஒரு தாயத்தில் போட்டு வலது கையின் மேல்பாகத்தில் அணிந்து கொள்ளவும்.குறிப்பிட்ட காரியம் நிறைவேறியபின் அதைக் கழட்டிப்  பூஜை அறையில் வைத்து விடவும். முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது அதே யந்திரத்தை மேற்சொன்ன முறைப்படி அணிந்து கொள்ளலாம்.


பிரயோகம் 2:-     வீடு மற்றும் அலுவலகத்தில் பேய்,பிசாசுகள்,கண்திருஷ்டி ,கேட்ட சக்திகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த யந்திரத்தாய் வீடு அல்லது அலுவலகத்தின் முகப்பில் எளிதில் பார்வையில் படும்படி வரையவேண்டும்.அஷ்டகந்தம் மற்றும் பசுநெய் கலந்து வரைய வேண்டும்.பின் அந்த யந்திரத்திற்கு தூபம்,தீபம் காட்ட எல்லா தீய சக்திகளில் இருந்தும் காக்கும்.

பிரயோகம் 3:-     தோட்டம்,வயல் ,நர்சரி கார்டன் இவற்றில் விளைச்சல் அதிகரிக்க பிரயோகம் 1 ல் கூறிய முறைப்படி வரைந்து வயல் அல்லது தோட்டத்தில் புதைத்து வைக்க விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்.


வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 7 July 2016

லக்ஷ்மி கடாட்சம் பெறத் தாந்த்ரீக ரகசியங்கள்




1.வீட்டில் உள்ள பெண்களை மரியாதையுடன் நடத்தவும்.பெண்களுடன் மரியாதையுடன் பழகவும்.

2.வீட்டில் மண் அகல் விளக்கு ஏற்றி நல்லெண்ணெய் ஊற்றித்  தீபம்  ஏற்றவும். அந்தத் தீபத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை  எழுந்தருளுமாறு வேண்டவும். இதனால் லக்ஷ்மி மகிழ்ச்சி அடைவாள்.

3.சூரியன் மறையும் வேளையில் வீட்டைப் பெருக்கக் கூடாது.

4.ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்க்கவோ ,தேய்த்துக் கழுவவோ கூடாது.

5.ப்ரஹ்ம முஹூர்த்த  நேரத்தில் எழுந்து குளித்து விட வேண்டும்.சோப் பயன்படுத்தக் கூடாது.

6.முடிந்தவரை தான,தருமங்கள் செய்து வரவும்.குறிப்பாக வெள்ளிக்கிழமை மட்டுமாவது செய்வது நல்லது.

7.வீடு மற்றும் கடைகளில் நடராஜர்,மலைகள்,ஆறு,குளம் போன்ற படங்கள் வைத்தால் பணம் வரும் ,போகும் தங்காது.

8.செவ்வாய் தசை நடப்பில் உள்ளவர்கள் இனிப்பு வாங்கி லக்ஷ்மிக்குப் படைத்து உண்ணுவதும், ஸ்வீட்ஸ் தானம் செய்வதும் லக்ஷ்மி கடாட்சத்தைப் பெருக்கும்.

9.சந்திர தசை நடப்பில் உள்ளவர்கள் பாலைக் காய்ச்சாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள வேறு யாரேனும் ஒருவரை பால் காய்ச்ச சொல்லவும். இது தரித்திரத்தை ஏற்படுத்தும்.

10.கரித்துண்டுகளை  வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். கரித்துண்டுகளின் அருகில் வைக்கப்பட்ட பொருள் எதுவானாலும் 4 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பயனற்றுப் போகும்.இது லட்சுமியை வெளியேற்றும்.

11.கூர்மையான பொருட்களை  அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது.


வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 23 June 2016

ஞானம் தரும் தக்ஷிணாமூர்த்தி மந்திரம்



வீட்டில்  வடக்கு நோக்கி அமர்ந்து அல்லது தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் ஸ்வாமியை நோக்கி அமர்ந்தோ இம்மந்திரத்தை ஜெபித்து வர ஆன்மீகப் பயிற்சி, முயற்சிகளில் உயர்ந்த நிலை அடையலாம்.

ஓம் ப்ரூம் நமோ ஹ்ரீம் ஐம் தக்ஷிணாமூர்த்தயே ஞானம் தேஹி ஸ்வாஹா ||




வாழ்கவளமுடன்


M.சுப்பிரமணியன் @ சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com


Friday, 17 June 2016

சகல காரிய சித்தி தரும் ஸ்ரீ சுதர்சன மந்திரம்



எடுத்த காரியம் யாவும் தாமதமாகியோ,தடைபட்டோ அதனால் கஷ்டம் அனுபவித்து வரும் அன்பர்கள் இம்மந்திர ஜெப வலிமையின் காரணமாக அந்தத் துரதிர்ஷ்டநிலை நீங்கி நலம் பெறலாம்.

பூஜைக்கு முந்தைய நாள் விஷ்ணு ஆலயம் சென்று ஸ்ரீ சுதர்சனருக்குத் துளசி மாலை சாற்றி  அகல் விளக்கில் நெய் விட்டுத் தீபமேற்றி மந்திரம் பலிக்க அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொள்ளவும்.

இம்மந்திரத்தைக் கிருஷ்ண ஜெயந்தி அன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.ஒரு நாள் பூஜை செய்தாலே போதும். 1100 எண்ணிக்கை ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும்.அதன் பின் தேவையான சமயங்களில் 21 தடவை ஜெபித்துக் காரிய வெற்றிக்காக வேண்டிக் கொள்ளவும்.


சர்வ கார்ய விஜய சுதர்சன மந்த்ரம்

ஓம் சுதர்சன சக்ராய மம சர்வ கார்ய  விஜயம் தேஹி தேஹி ஹூம் பட்



சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில் நிறைந்த பலன் தரும்.  

வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 19 May 2016

சர்வ வசீகரண மந்திரம்

வளர்பிறை திங்கட்கிழமை அன்று சிவாலயம் அல்லது அம்பாள் சன்னதியில் வைத்து 108 எண்ணிக்கை ஜெபிக்கவும்.பின் வரும் நாட்களில் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ வைத்துக் கிழக்கு முகமாக அமர்ந்து 108 எண்ணிக்கை ஜெபித்து வர மனிதர்,தேவர்,விலங்குகள் என்று யாவும் வசமாகி எல்லோருடனும் இணக்கமான சூழ்நிலையுடன் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

மந்திரம் :-
ஓம் நமோ பகவதே ருத்ராய சர்வ ஜகன்மோகனம் குரு குரு ஸ்வாஹா

வாழ்க வையகம் வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Friday, 29 April 2016

வாகனப் பாதுகாப்பிற்குப் பரிகாரம்



வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுதல்,அதிக மெயின்டனன்ஸ் செலவுகள் ஏற்படுவது,ப்ரேக் டவுன் ஆகுதல் போன்ற துன்பங்கள் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட பரிகாரம் செய்ய நிவர்த்தியாகும்.


1 பாக்கு,1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு,1 ஸ்பூன் கருப்பு எள்,கொஞ்சம் சிகப்பு குங்குமம் இவற்றை ஒன்றை சேர்த்து  ஒரு சுத்தமான கறுப்புத்துணியில் போட்டு முடிச்சுப் போட்டு  அதை வாகனத்தில் பம்பரில் அல்லது முன்பகுதியில் எங்காவது கட்டி வைத்துவிடவும்.

இதை எந்த நல்ல நாளிலும் செய்யலாம் அமாவாசை அன்று செய்வது சிறப்பு.
ஏற்கனவே உள்ளது கிழிந்தோ,தொலைந்தோ போய்விட்டால் மீண்டும் ஒன்றைத் தயார் செய்து கட்டி வைத்துக் கொள்ளவும்.


                           வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Sunday, 17 April 2016

ஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்



மகரிஷி வசிஷ்டர் செய்த கடும்தவத்தின் போது அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றி இந்த மந்திரத்தை உபதேசித்தார்கள்.இந்த மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து ஜெபித்து வருகிறாரோ அவரை ஒருபோதும் வறுமை பீடிப்பதில்லை என்று அருளியதோடு தினம் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தை ஜெபித்தால் கூட நான் அவர்கள் இல்லத்தில் குடியிருப்பேன் என்று ஆசி கூறியதாக மந்திர நூல்களில் உள்ளது.

இந்த மந்திரத்தை முன்பு ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும் இந்தத் தகவல் விடுபட்டதால் மீண்டும் குறிப்பிடுகிறேன்.

மந்திரம் 

ஓம் |ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் | லக்ஷ்மீ ஆகச்ச ஆகச்ச|
மம மந்திரே | திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

செல்வ விருத்தி தரும் அதிர்ஷ்ட தேங்காய் பிரயோகம்

ஏதேனும் ஒரு நல்ல நாளில் ஒரு மிகச்சிறிய அளவுள்ள தேங்காயை வாங்கி பூஜை அறையில் ஒரு இடத்தை பன்னீர் கொண்டு மெழுகித் துடைத்து அந்த இடத்தில் ஒரு வாழை இலை போட்டு அதில் தேங்காயை வைத்து சந்தனப் பொடி மற்றும் மல்லி,முல்லை அல்லது செந்தாமரை மலர் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்தபடியே அர்ச்சிக்கவும்.மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.அர்ச்சித்து முடித்த பின் அந்த தேங்காயை ஒரு மஞ்சள் துணியில்  முடிந்து கடை அல்லது பூஜை அறை அல்லது வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும்.தினமும் சாமி படங்களுக்கு ஊதுவத்தி,கற்பூரம் காட்டும் பொழுது இதற்கும் காட்டிவரக் கடன்,வறுமை தீர்ந்து நிறைவான செல்வம் கிட்டும்.

மந்திரம்:

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரசீத ப்ரசீத |
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹா ||


 


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

துன்பம் தீர ,நினைத்தது நிறைவேற ஹனுமான் சாலிசா பிரயோகம்

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று ஒரு தேங்காய் வாங்கிக் கொள்ளவும்.ஒரு சிகப்புநிற  காட்டன் நூல் வாங்கி அதை உங்கள் தலை முதல் பாதம் வரை அளக்கவும்.அந்தச் சிகப்பு நூலைத் தேங்காயில் சுற்றவும்.பின்னர் தேங்காயில் செந்தூரம் (ஆரஞ்சு நிறம்) கொண்டு ஒரு ஸ்வஸ்திக் வரையவும்.


பின்னர் அந்தத் தேங்காயைக் கையில் வைத்துக் கொண்டு  ஹனுமான் சாலிசா ஸ்லோகத்தைக் குறைந்தது 3 தடவை அதிகபட்சம் 9 தடவை ஜெபிக்கவும்.ஜெபித்து முடித்த பின் அந்தத் தேங்காயை ஹனுமான் ஆலயத்தில் கொடுத்து விடவும்.உங்கள் நியாயமான கோரிக்கைகள்  நிறைவேறும்.மேலும்,வாழ்வில் பல துன்பங்கள்,தொடர் இழப்புகள், சரிவுகளைச் சந்தித்து வாழ்வா,சாவா என்ற நிலையில் உள்ளவர்களும் இதைச் செய்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.


கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்ய ஹனுமான் சாலிசா ஸ்லோகத்தைக் காணலாம்.

http://anumar.vayusutha.in/sthuthi1.html





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com