Saturday, 27 July 2019

ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெ...




பயிற்சி நாள் : 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை 
நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை


பயிற்சி நடைபெறும் இடம்:-

MDT மேல்நிலைப்பள்ளி 
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  
பாரதி மெடிக்கல் எதிரில் 
திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001

  • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

  வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 18 July 2019

நோய்,நொடிகள்,விபத்துகள்,அகால மரணம் நீக்கும் ஸப்த சிரஞ்ஜீவி ஸ்துதி



அஸ்வத்தாமா பலிர்வ்யாஸோ ஹநூமாம்ஸ்ச விபீஷண:
க்ருப: பரசுராம
ஸ்ச ஸப்தைதே சிரஞ்ஜீவிந: 

ஸப்தைதாந் ஸம்ஸ்மரேந்நித்யம் மார்கண்டேயமதாஷ்டமம்
ஜீவேத்  வர்ஷ
ஸதம் ஸோபி ஸர்வவ்யாதி விவர்ஜித: 

நீண்ட நாட்களாக அல்லது அடிக்கடி நோய் நொடிகள்,விபத்துக்களால் துன்பப்பட்டு வருபவர்கள் அல்லது அகால மரணம் ஏற்படும் என்று அஞ்சுபவர்கள் அவற்றில் இருந்து விடுபட இந்த ஸ்லோகத்தைக் குரு ஹோரை அல்லது சுக்ர ஹோரையில் தொடர்ந்து ஜபித்து வரவும்.


ஒரு செம்பில் நீர் நிரப்பி முன்னால் வைத்துக் கொண்டு 11 தடவை மந்திரம் ஜெபித்து அந்த தீர்த்தத்தை அருந்தி வர நோய்கள் விலகி தீர்க்காயுசு உண்டாகும்.


குறைந்தது இரவில்  உறங்கும் முன் 3 தடவையாவது ஜெபித்து வருதல் நலம்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw


Thursday, 4 July 2019

ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 7.7.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை T.நகரில்

முற்றிலும் புதிய விஷயங்களுடன்....


நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய தெளிவான விபரம் அறிய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவைப் பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=3tmvmXcISso&feature=youtu.be


விரும்பியபடி நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைகிறோம்? ஏன் ? எப்படி சரி செய்வது?


கேட்டது வரங்களை ! பெற்றது சாபங்களை ! என்பது போல் வீடு,வாகனம், திருமணம் என  ஆசைப்பட்ட எல்லாம் கிடைத்தும்  நிம்மதி இல்லையே ஏன் இப்படி ?


என்ற கேள்விகளுக்கு விடையாகவும்,மேலும் ............


  • துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே  வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).


  • மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச  பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?


  • ஒரே ஒரு ஆன்மீகப் பயிற்சியை மட்டுமே செய்து வாழ்விலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கலாம்.பல விதமான வழிபாடுகள், தியானங்கள்,பயிற்சிகளால் என்ன சக்தி கிடைக்குமோ அதைவிட அதிகமான சக்தி தரும்,இடம், பொருள், நேரம்,காலம் என எந்த விதமான விதிமுறைகளும் தேவை இல்லாத எளிய பயிற்சி முறையைப் பற்றிய விரிவான விளக்கம்.


  • எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

  • வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள் மற்றும் உயர்நிலை தியான முறைகளும் அவற்றின் மூலம் பலன் பெறும்  ரகசியங்கள்.

  • புலம்பித் தவிக்கும் படியான பல கஷ்டங்களை  விரைவில் நீக்கி செல்வமும், உயர்வும் அடைய உதவும் உயர்நிலை மந்திரங்கள்.

  • சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.

  • தவறான ஆன்மீகவாதிகளிடம் பெற்ற பயிற்சி,தீட்சை,மந்திரங்கள், பொருட்கள் ஏற்படுத்திய தீமைகளைச் சரி செய்யும் முறைகள்.

  • நல்வாழ்விற்கு உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்கள்,சித்தி முறைகள், பலன் பெறும் ரகசியங்கள்.

    • எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

    • சக்கரங்களை முறையாக இயக்கி ஆன்மீகத்திலும்,வாழ்விலும் சமநிலையாக இருக்க உதவும் வழிகள்.

    • பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப்  பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.

    • நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

    • ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில்  வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?

       
    • பயிற்சியின் முடிவில் மந்திர தீக்ஷையும் உண்டு.
    • உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


    பயிற்சி நாள் : 7.7.2019 ஞாயிற்றுக்கிழமை 
    நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை


    பயிற்சி நடைபெறும் இடம்:-

    கேசரி மேல்நிலைப்பள்ளி 
    பாண்டி பஜார் 
    தி.நகர் 
    சென்னை 600017

    ஹோட்டல் GRT கிராண்ட் அருகில்/தேனாம்பேட்டை சிக்னல் அருகில்



    • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 



    வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

    M.சூர்யா,
    தச்சநல்லூர்,திருநெல்வேலி
    9442193072
    Whatsapp/ Telegram : 9788493072
    ms.spiritual1@gmail.com 
    YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

    Monday, 1 July 2019

    வராஹி நவராத்திரி வழிபாடு - 15.07.2026 புதன்கிழமை முதல் 23.07.2026 வியாழக்கிழமை

    வராஹி நவராத்திரி வழிபாடு 




    வருகிற - 15.07.2026 புதன்கிழமை முதல் 23.07.2026   வியாழக்கிழமை  வரை ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வராஹி நவராத்திரி தினங்களாகும்.


    அன்னை ஸ்ரீ மகாவாராஹி  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள்.இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).


    ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த  வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள்,எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும்.அபிச்சாரம் எனப்படும் பில்லி,சூனியம்,ஏவல்களை நீக்குவாள்.இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்  தேவையில்லை.எதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை  ஸ்தம்பனம் செய்பவள்.வழக்குகளில் வெற்றி தருபவள்.


    மந்திர சாஸ்திரபழமொழி :- "வாராஹிக்காரனோடு வாதாடாதே" .


    ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிப்பது சிறப்பு.


    வழிபாட்டு முறைகள் :-

    வராஹியைப் பொதுவாகப் புதன்,சனிக்கிழமைகள்,திரயோதசி திதி,பஞ்சமி திதி,நவமி,திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம்.எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.


    ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் வராஹி நவராத்திரி.அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன் பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.


    செல்வம் ,அரசியல் வெற்றி,பதவி,புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும்,
    மனவலிமை,ஆளுமை,எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.


    எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும்,எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.


    ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.


    வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில் மேன்மை உண்டாகும்.


    மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்,திருமணத்தடை நீங்கும்.


    பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.


    நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.


    ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு,தாமரைத்தண்டு,வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.


    நைவேத்தியங்கள்:-

    தொலி எடுக்காத உளுந்து வடை,மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம்,மொச்சை ,சுண்டல்,சுக்கு அதிகம் சேர்த்த பானகம்,மிளகு சீரகம் கலந்து செய்த தோசை,நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம்,பச்சைகற்பூரம் கலந்த பால்,கருப்பு எள் உருண்டை ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு,தேன் படைக்கலாம்.

    மாதுளம்பழம் மிகச் சிறப்பு.



    ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்கள் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.



    வராஹி சித்தி அர்ச்சனையில் உள்ள மந்த்ரங்களைக் கொண்டும் 
    அர்ச்சிக்கலாம். 



    செல்வ வளம் தரும்  ஸ்ரீ வராஹி மந்திரம் 


    க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||



    ஸ்ரீ மஹாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:-
    மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள்,ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மஹாவாராஹியின் 12 நாமங்களைக் காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.

    1.பஞ்சமி 
    2.தண்டநாதா
    3.சங்கேதா 
    4.சமயேச்வரி
    5.சமயசங்கேதா 
    6.வாராஹி 
    7.போத்ரிணி 
    8.சிவா 
    9.வார்த்தாளி 
    10.மகாசேனா 
    11.ஆக்ஞா சக்ரேச்வரி 
    12.அரிக்னீ


    வராஹி மாலை மற்றும் வராஹி சித்தி அர்ச்சனை PDF கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து செய்து கொள்ளவும்.

    வராஹி மாலை டவுன்லோட் லிங்க்
    வராஹி சித்தி அர்ச்சனை PDF டவுன்லோட் லிங்க்

    வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

    M.சூர்யா சுப்பிரமணியன் 
    தச்சநல்லூர்,திருநெல்வேலி 
    Whatsapp/ Telegram : 9788493072
    ms.spiritual1@gmail.com

    Thursday, 16 May 2019

    நரசிம்ம ஜெயந்தி - 30.04.2026

    நரசிம்ம ஜெயந்தி 30.04.2026




    நரசிம்மர் பற்றிய வழிபாட்டுக் குறிப்புகள்

                                                                                                                                                                        1. 1.நரசிம்மரைத் தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.


    2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.


    3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடுகிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.


    4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.


    5. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.


    6. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.


    7.நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.


    8. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.


    9. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.


    10. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.


    11. நரசிம்மரை ‘மருத்யுவே ஸ்வாஹா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.


    12. ‘அடித்த கை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்துக் கேட்ட மறு வினாடியே உதவுபவர்’ என்று இதற்கு பொருள்.

    13.நரசிம்ம ஜயந்தி அன்று பெருமாளை மாலை 7 மணிக்கு மேல் வழிபாடு செய்வது விசேஷம். அந்த வேளையில் சதுர்த்தசி திதி இருக்கவேண்டியது அவசியம். சில வேளை களில் சுவாதி நட்சத்திரமும் கூடிவரும். இது மிகவும் சிறப்பு.

    14.நரசிம்மரை வழிபட.கராவலம்பம், நரசிம்ம சகஸ்ரநாமம் உள்ளிட்ட பல துதிகள் உள்ளன.அவற்றைச் சொல்ல இயலாதவர்கள் உக்ரம் வீரம் எனும் கீழ்க்காணும் ஸ்லோகத்தை 11 முறை சொன்னாலே அந்தப் பலன் கிடைக்கும்.

    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்

    ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்

    ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்

    ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

    15. நரசிம்மருக்கு உகந்த நிவேதனம் பானகம் மற்றும் வடை பருப்பு. எளிமையாகச் செய்ய உகந்த இந்த நிவேதனங்களைப் படைத்து வழிபடலாம்.

    16. சுவாமிக்கு ‘ஓம் ஸ்ரீ நரசிம்மாய நம:’ என்று சொல்லி, செண்பக புஷ்பம் சாத்தி அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷம். மனோ ரஞ்சிதம் மலரும் சாத்தலாம்.

    17. நரசிம்மருக்குப் பலாப்பழம் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால், மனதில் இருக்கும் கவலைகள் எல்லாம் விலகி ஓடும் என்பார்கள்.

    18.சிலர் காலை முதலே விரதம் இருந்து மாலை வழிபாடு செய்வார்கள். காலையில் எழுந்து நீராடி பின் உபவாசம் இருக்க வேண் டும். நீராகாரங்கள் சாப்பிடலாம். மாலை பூஜை செய்வதற்கு முன்பும் நீராட வேண்டி யது அவசியம்.


    நன்றி ! வாழ்கவளமுடன் !!


    M.சூர்யா,சுப்பிரமணியன் 
    தச்சநல்லூர்,திருநெல்வேலி 
    9788493072

    Thursday, 9 May 2019

    ஸ்ரீ பகளாமுகி ஜெயந்தி - 12.05.2019 - ஞாயிறு - வைஷாக சுக்ல அஷ்டமி


    வருகின்ற 12.05.2019 வைஷாக சுக்ல அஷ்டமி ஸ்ரீ பகளாமுகி ஜெயந்தி


    சக்தி உபாசனையில் தசமஹாவித்யா என்ற பத்து பெருந்தேவியர் வழிபாடு மிகுந்த சக்தி வாய்ந்தது.

    தசமஹாவித்யாதேவிகளில் பகளாமுகி என்ற அன்னையின் ஜயந்தி அதாவது அவதார தினம் வரும் 12.5.2019 (வளர்பிறை அஷ்டமி) அன்று.


    வளர்பிறை அஷ்டமி திதி 11.5.2019 சனிக்கிழமை இரவு 7.13 PM துவங்கி 12.5.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.49 PM க்கு முடிவடைகிறது.இந்த நேரத்தில் பகளாமுகி தேவியை பூஜிப்பது சிறப்பு.


    பகளாமுகி மூலமந்திரம்:-

    ஓம் ஹ்ர்லீம் பகலாமுகீ சர்வ துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய ஜிஹ்வாம் கீலய புத்திம் வினாசய ஹ்ர்லீம் ஓம் ஸ்வாஹா 

    (ஹ்ர்லீம் என்பதை ஹ்லீம் என்றும் ஜெபிப்பார்கள்)

    இம்மந்திரத்தை அருளிய நாரத மகரிஷியை மந்திரம் சித்தியாக வேண்டியபின் மூலமந்திரம் ஜெபிக்கவும்.

    மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சித்து வழிபடவும்.

    வழக்கு,தர்க்கம்,வாதம் போன்ற சூழ்நிலைகளில் முறைப்படி இவள் மந்திரம் ஜெபித்து வேண்டிக்கொண்டு செல்ல.வெற்றி உண்டாகும்.   

    உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்+சனி சேர்க்கை,செவ்வாய்+ராகு சேர்க்கை, செவ்வாய் நீச்சம் போன்ற அமைப்பு இருந்து அதனால் பாதிப்புகளை அனுபவித்து வருபவர்கள் இந்த அம்பாளை வணங்கி வருவதன் மூலம் கெடுபலன்கள் குறைந்து நலம் பெறலாம்.  

    மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும்.



    வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


    M.சூர்யா - தச்சநல்லூர்
    திருநெல்வேலி
    MOBILE: 9442193072
    WHATSAPP / TELEGRAM : 9788493072
    ms.spiritual1@gmail.com

    fb link: https://www.facebook.com/surya.joy.52



    Thursday, 4 April 2019

    அம்பிகையின் அருள் பொழியும் வசந்த நவராத்திரி - 2026 மார்ச் 19 முதல் மார்ச் 27 வரை

    அம்பிகையின் அருள் பொழியும் வசந்த  நவராத்திரி - 2026 மார்ச் 19 முதல் மார்ச் 27 வரை 



    வசந்த நவராத்திரி மஹிமை:


    வசந்த மாதம் அதாவது பங்குனி அமாவாசைக்கு மறுநாளிலிருந்து வரும் ஒன்பது தினங்கள் ஸ்ரீலலிதா நவராத்ரோத்சவம் அல்லது வசந்த நவராத்ரோத்ஸவம் எனும் விஷேஷமான நவராத்திரி.ஸ்ரீவித்யோபாசகர்கள் சந்த்ரகலையை அனுஸரித்து பதினைந்து தினங்கள் அதாவது பௌர்ணமி வரை ஸ்ரீ லலிதா பரமேச்வரியையும், ஸ்ரீ வித்யோபாஸகர் அல்லாதவர் ஒன்பது தினங்களில் நவமி வரை ஸ்ரீ லலிதேச்வரியை உபாஸிக்க வேண்டிய அத்புதமான தினங்கள்.


    இந்த நவராத்திரிஷ ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி உபாஸனைக்கு விஷேஷம் என்பது மஹான்களின் வாக்கு. பன்னிரண்டு மாத சுக்ல பக்ஷ பதினைந்து தினங்களுமே நவராத்ரம் என்றும் அபிப்ராயம் உண்டு. அவற்றும் சைத்ர நவராத்ரியும், சரத் நவராத்ரியும் அதிவிஷேஷமானவை.


    போகமோக்ஷாதிகளை அளிக்கக்கூடியதான வல்லமை இந்த நவராத்திரி பூஜைக்கு உண்டு. ராஜராஜேச்வரியான அம்பாளே வஸந்த நவராத்ரத்திற்கு அதிதேவதையானதால் இதன் மஹத்வத்தினைக் கூற முடியாது. தேவீ பாகவதமும் வஸந்த சரத் நவராத்ரங்களின் வைபவத்தினை விஷேஷமாகக் கூறுகின்றது.


    வேதமும் தந்த்ரமும் என இரு வழிகளாலும் ஆராதிக்கப்படவேண்டியவள் பரதேவதை. அவளே ஆத்மஸ்வரூபிணி. அதை உணர்வதற்கான புண்யகாலமே இந்த வஸந்த நவராத்ரி உத்ஸவம்.

    பரதேவதையை ஆராதித்து போகமோக்ஷாதிகளை பெறுவோம்.


    நன்றி :- மயிலாடுதுறை ராகவன்

    Sunday, 31 March 2019

    மரணபயம் போக்கும் தாந்த்ரீக சின்னம்



    அடிக்கடி இறந்து விடுவது போல் கனவு கண்டு பயம் கொண்டவர்களும், மனதில் சீக்கிரம் இறந்துவிடுவது போன்ற உணர்வு மற்றும் எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த படத்தை லேமினேஷன் செய்து சட்டைப்பையில் அல்லது தலையணை அடியில் வைத்துக் கொள்ளவும்.


    வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


    M.சூர்யா - தச்சநல்லூர்
    திருநெல்வேலி
    MOBILE: 9442193072
    WHATSAPP / TELEGRAM : 9788493072
    ms.spiritual1@gmail.com
    fb link: https://www.facebook.com/surya.joy.52

    Wednesday, 20 March 2019

    தனாகர்ஷண மந்திரங்களும்,தாந்த்ரீக ரகசியங்களும் பயிற்சி வகுப்பு சென்னையில் 24.3.2019 ஞாயிறு அன்று

    பயிற்சி வகுப்பு பற்றிய முழு விளக்கம் தெரிந்து கொள்ள  கீழே உள்ள வீடியோ பார்க்கவும்.அல்லது லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

     






    வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


    M.சூர்யா - தச்சநல்லூர்
    திருநெல்வேலி
    MOBILE: 9442193072
    WHATSAPP / TELEGRAM : 9788493072
    ms.spiritual1@gmail.com
    fb link: https://www.facebook.com/surya.joy.52

    Monday, 18 March 2019

    தனாகர்ஷண மந்திரங்களும்,தாந்த்ரீக ரகசியங்களும் பயிற்சி வகுப்பு சென்னையில் 24.3.2019 ஞாயிறு அன்று






    1.பல ஆண்டுகள் தொழில் அல்லது வேலை செய்தும் ஏன் இன்னும் கடனும்,
    வறுமையும் நீங்கவில்லை?

    கடன்,வறுமை நீங்கி ஐஸ்வர்யம் நிலைத்திருக்க உதவும் மந்திர ஜெபங்களும்,தாந்த்ரீக விதிகளும்.



    2.குடும்பத்தில் ஒருவரின் ஜாதகப்படி மோசமான தசா புத்தியினால் உண்டாகும் கடன்,நோய்,பகை,வழக்கு போன்ற சங்கடங்கள் தீர குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர் செய்யும் சில சிறிய பரிகாரங்கள் மூலம் குடும்ப நிலை உயர்வு அடையும் விதிமுறைகள்.


    3.பல ஆண்டுகள் ஜெபித்த மந்திர ஜபமும்,வழிபாடும் ஏன் பலன் தரவில்லை? முறைப்படி பலன் பெற என்ன முறையில் தெய்வங்களை வணங்க வேண்டும்?


    4.அவசியமான தேவைகள் அனைத்திற்கும் பணம் வந்து கொண்டே இருக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.


    5.தொழில்,வேலையில் பிரச்சனைகள் குறைந்து வளர்ச்சி அடைய உதவும் தாந்த்ரீக பரிகாரங்களும் ,வழிபாடுகளும்.


    6.குழந்தைகள் ஒழுக்கமாகவும்,நன்றாகப் படிக்கவும் செய்ய வேண்டியவை.


    7.தம்பதிகளுக்குள் ஒற்றுமையும்,அன்பும் நிலைக்கச் செய்ய வேண்டியவை.


    8.அளவுக்கு அதிகமான வழிபாடு,தவறான பரிகாரங்கள் மற்றும் நம் வாழ்விற்குப் பொருந்தாத மந்திரஜபம் மற்றும் யோகப் பயிற்சிகளால் உண்டான எதிர்மறைச் சக்தியை வெளியேற்றும் முறைகள். (சக்கரங்களை ஹீலிங் மூலம் முறைப்படி இயங்க வைத்தல்)



    9. சில நாட்களுக்கு மேல் மந்திர ஜெபமோ யோகப் பயிற்சிகளோ தொடர்ந்து
    செய்ய முடியவில்லை அல்லது நேரம் இல்லை என்ற நிலையில் உள்ள
    நபர்களுக்கான எளிய மாற்று வழிகள் .


    10.ஒவ்வொருவர் வாழ்விலும் நிச்சயமான வளர்ச்சி தரும் அதிர்ஷ்ட தெய்வங்களை ஜாதகப்படி தேர்ந்தெடுத்து வழிபடும் முறை.


    11.விரைவான மந்திர சித்தி பெற உதவும் ரகசிய வழிமுறைகள்.



    12.வாழ்விலும் ஆன்மீகத்திலும் உயர்வு அடைய உடலிலும்,மனதிலும் சக்தியை அதிகரிக்கும் பயிற்சிகள்.


    13.அதீத கோபம்,காமம்,படபடப்பு ,கவலை,மனஅழுத்தமில்லாமல் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ உதவும் வழிமுறைகள்.


    14.அதிஉன்னத பலன்களைத் தரும் எளிய முறை ஹோம விதிகள்.


    15.ஆரம்பித்த பல காரியங்கள் தடைபட்டு நிற்பதைச் சரி செய்யும் தாந்த்ரீக ரகசியங்கள்.


    16.செய்யும் மந்திர ஜெபங்களும்,பரிகாரங்களும் முழுமையான பலன் தர
    பின்பற்ற வேண்டிய விதிகள்.



    மதிய உணவு இடைவேளைக்குப் பின் உங்கள் வாழ்க்கை சார்ந்த அல்லது ஆன்மீகம் சார்ந்த சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


    இன்னும் பல பயனுள்ள விஷயங்கள் வகுப்பில் கற்றுத் தரப்படும்.


    ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

    ------------------------------------------------------

    விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

    பயிற்சி நடத்துபவர் :
    M.சூர்யா,தச்சநல்லூர்
    திருநெல்வேலி


    ---------------------------------------------------------------------------------------

    பயிற்சி நாள் : 24.3.2019
    நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
    பயிற்சிக் கட்டணம்: ரூ.1500


    பயிற்சி நடைபெறும் இடம்:-

    கேசரி மேல்நிலைப்பள்ளி 
    பாண்டி பஜார் 
    தி.நகர் 
    சென்னை 600017

    ஹோட்டல் GRT கிராண்ட் அருகில்


    ---------------------------------------------------------------------

    பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேனீர்,குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.


    பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
    பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.


    வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


    M.சூர்யா - தச்சநல்லூர்
    திருநெல்வேலி
    MOBILE: 9442193072
    WHATSAPP / TELEGRAM : 9788493072
    ms.spiritual1@gmail.com
    fb link: https://www.facebook.com/surya.joy.52

    Thursday, 14 March 2019

    படிப்பில்,கலைகளில் உயர்வு தரும் தாந்த்ரீகப் பரிகாரமும்,மந்திரமும்





    ஓம் ஸம் ஸரஸ்வத்யை விஸ்வபிரியாயை  |
    விஸ்வ மோதாயை | ஸாம கோஷாலங்க்ருதாயை |
    ஐம் க்லீம் சௌம் | வித்யா விஜயம் மே |
    தேஹிதாபய ஸ்வாஹா ||


    தாமரைத் தண்டு திரியிட்டு விளக்கேற்றி வெண்ணிறப்  பட்டு விரித்து அமர்ந்து முன்னால் சாரஸ்வத க்ருதம் (ஆயுர்வேத மருந்து ) அல்லது  ஒரு கிண்ணத்தில் சுத்தமான பசு நெய் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 3008 தடவை ஜெபிக்கவும்.


    ஒரே நாளில் ஜெபிக்க முடியாதவர்கள் இடைவெளியின்றி  3 முதல் 11 நாட்களுக்குள் ஜெபிக்கலாம்.


    அதன் பின் தினமும் இரவில் கை,கால்,முகம் கழுவி வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தை 54 தடவை ஜெபித்து சாரஸ்வத க்ருதம் (ஆயுர்வேத மருந்து ) அல்லது சிறிது நெய்யைச் சாப்பிட்டு வரவும்.அதன் பின் அரை மணி நேரம் கழித்து ஏதேனும் உணவு எடுத்துக் கொள்ளலாம்.இப்படி தொடர்ந்து 41 நாட்கள் செய்து வரவும்.


    இந்த பரிகாரம் செய்து வரும் நாட்களில் அசைவத்தை முற்றிலும் தவிர்க்கவும்.




    வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


    M.சூர்யா - தச்சநல்லூர்
    திருநெல்வேலி
    MOBILE: 9442193072
    WHATSAPP / TELEGRAM : 9788493072
    ms.spiritual1@gmail.com
    fb link: https://www.facebook.com/surya.joy.52

    Saturday, 2 February 2019

    சியாமளா நவராத்திரி - 30.1.2025 முதல் 07.02.2025 வரை



    தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரைஅம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம்.

    சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

    சியாமளா நவராத்திரி தினங்களில் அம்பிகையை வழிபட்டு, ஸ்ரீ மாதங்கி தேவியின் அருளால், வெற்றி பெறுவோம்!!!!

    .
    சியாமளா சகஸ்ரநாமம்,ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே.ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்ன த்தைத் துதித்தாலும் சிறப்பான பயன்களைப் பெறலாம்.

    ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி. இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகையிடம் லயிக்கச் செய்ய முடியும்.

    தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் ‘மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

    ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் விளங்குவதால், சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. எனவே சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.

    கலைகளின் தேவதையாகவும், அரசபோக வாழ்வை அளிப்பவளாகவும் இவளே விளங்குகிறாள்.

    கலைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு பெற, வாக்கு வளம் பெற, இவளை வணங்க வேண்டும்.

    நவாவர்ண பூஜையும், குங்கும அபிஷேகமும் அம்பாள் ராஜமாதங்கிக்கு பிடித்தமானது.

    மீனாட்சி அன்னையே ராஜமாதங்கியின் அம்சம்தான் என்பதால், மீனாட்சியை வணங்குவதே ராஜ ஷியாமளாவை வணங்குவது போல்தான்.

    எனவே இந்த சியாமா நவராத்திரி நாட்களில்- சியாமளாவை- மீனாட்சியம்மனை வணங்கினால் சங்கீத சாகித்ய கலையருள் கிட்டுமென்பது திண்ணம். மாணவ மாணவியர் கல்வியில் உயர்வு பெறுவதும் திண்ணம்.
     நன்றி:இணையதள மற்றும் முகநூல் நண்பர்கள்  

    வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


    M.சூர்யா - தச்சநல்லூர்
    திருநெல்வேலி
    MOBILE: 9442193072
    WHATSAPP / TELEGRAM : 9788493072
    ms.spiritual1@gmail.com
    fb link: https://www.facebook.com/surya.joy.52

    Friday, 1 February 2019

    மகத்தான வாழ்வு தரும் மந்திரங்களும்,ஆன்மிக ரகசியங்களும் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் 3.2.2019 ஞாயிறு அன்று





    பல சமயங்களின் குருமார்களிடம் கற்று,அனுபவித்துப் பலன் கண்ட ஆன்மீக ரகசியங்களில் எளிமையானதும்,இன்றைய அவசர உலகில் பயிற்சி செய்து வெற்றி,உயர்வு,பொருளாதாரம்,குடும்பஒற்றுமை,கல்வி,மகிழ்ச்சியோடு,நலமும்,வளமும்,நிம்மதியும் சேர்ந்த வாழ்விற்கான பயிற்சி வகுப்பு.



    வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்றிரண்டு வகைகளில் அடக்கி விடலாம்.அவற்றை எளிய மந்திர ஜெபம் மற்றும் சில ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றிக் குறுகியகாலத்தில் சரி செய்து கொள்ள முடியும்.



    சாதாரணமான பக்தர்கள்,உயர்நிலை உபாசகர்கள்,ஞானம் மற்றும் யோகநிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான விஷயங்கள் வகுப்பில் இடம் பெறும்.


    ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
    விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

    https://www.youtube.com/watch?v=o_zqc4FaMe8&feature=youtu.be

    ------------------------------------------------------

    விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

    பயிற்சி நடத்துபவர் :
    M.சூர்யா,தச்சநல்லூர்
    திருநெல்வேலி


    ---------------------------------------------------------------------------------------

    பயிற்சி நாள் : 3.2.2019
    நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
    பயிற்சிக் கட்டணம்: ரூ.1000

    பயிற்சி நடைபெறும் இடம்:-

    M.D.T. SCHOOL 
    NEAR TIRUNELVELI OLD BUS STAND /RAILWAY STATION
    TIRUNELVELI JUNCTION


    M.D.T.ஸ்கூல் (ம.தி.தா. மேல்நிலைப்பள்ளி )  
    திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் / ரயில்நிலையம் அருகில் 
    திருநெல்வேலி சந்திப்பு  



    ---------------------------------------------------------------------

    பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேனீர்,குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.



    பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
    பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.



    வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


    M.சூர்யா - தச்சநல்லூர்
    திருநெல்வேலி
    MOBILE: 9442193072
    WHATSAPP / TELEGRAM : 9788493072
    ms.spiritual1@gmail.com
    fb link: https://www.facebook.com/surya.joy.52