Thursday, 29 May 2014

துன்பங்கள் தீரக் கனவில் தீர்வு தரும் ஸ்ரீ ஸ்வப்நேஸ்வரி மந்திரம்:-


வாழ்க்கையில் நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அநேகம் பிரச்சனைகள் வரும் போகும்.ஆனால் ,இக்கட்டான சில சூழ்நிலைகளில் ,நமக்கு என்ன செய்து அதை தீர்ப்பது என்று தெரியாமல் குழம்பி ஜோதிடரையோ ,குறி சொல்பவரையோ (அவர்களில் பெரும்பாலானவர்கள்MONEY MINDED)  நாடிச் சென்று பெரும் பணத்தை வீணாக செலவு செய்தும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை என சொல்வோர் ஏராளம்.

இந்த ஸ்வப்நேஸ்வரி மந்திரத்தை தினம் உறங்கும் முன் குறைந்தது 108 எண்ணிக்கை 90 நாட்கள் ஜெபித்து வரவும்.அருகில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.முதல் நாளும் 90ஆவது நாளும்  மட்டும் வெற்றிலை, பாக்கு,அவல்,பழங்கள் ,பால்,பன்னீர்,பாயசம் வைத்து ஜெபிக்கவும்.மற்ற நாட்களில் முடிந்ததை அல்லது கல்கண்டும் பாலும் படைத்து ஜெபித்து வரவும்.


தவறான மனிதர்கள்,மந்திரவாதிகளின் தொடர்பு உங்கள் சூக்ஷும உடலில் கீழான சக்கரங்களை இயங்கச் செய்து உங்களை தவறான நடத்தை உள்ளவராக மாற்றிவிடும்.இந்த மந்திர ஜெபத்தின் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டு கொள்ளலாம்.

ஓம்||
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ||
ஸ்வப்நேஸ்வரி ||
ஹ்ரீம் ஹ்ரீம் க்ரீம் க்ரீம் க்ரீம் ||
ஓம் ||

இந்த மந்திரத்தை ஜெபித்து வரும் நாட்களில் அருகில் ஒரு பேப்பர் ,பேனா வைத்துக்கொள்ளவும்.இரவில் கனவில் ஏதேனும் தேர்வினை அம்பாள் கூறினால் அதை குறித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.இதனால் எந்தத்  தீங்கும் ஏற்படாது பயமின்றிச் செய்து பயன்  பெறுங்கள்.


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன்||

M.சூர்யா  -தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072

பயம்,கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்



நரசிம்ம மந்திரம்.

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து  "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"
என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர  பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.





துர்கா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்க ஹந்த்யை துர்க்காயை தே நம ஸ்வாஹா ||

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து  மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர  பயம் நீங்கித் தைரியமும்  நல்வாழவும் பெறுவார்கள்.

 
வாழ்க வையகம் || வாழ்கவளமுடன் ||

M.சூர்யா -  தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

தீர்க்கமான கண் பார்வை பெற,கண் நோய்கள் தீர


கீழே உள்ள சூர்ய மந்திரத்தை தினமும் அதிகாலையில் இளஞ்சூரியனைப் பார்த்தபடி 108 தடவை ஜெபித்து வர விரைவில் கண்ணாடி அணியும் தேவையின்றி நல்ல கண் பார்வை கிடைக்கும்.இதை செய்யும் பொழுது சூரிய ஒளி தொப்புளில் படுமாறு நின்று அல்லது அமர்ந்து ஜெபிக்க மிக நன்று.

ஓம் ஹ்ரீம் க்ருணிஹி சூர்ய ஆதித்யாய ஹ்ரீம் ஓம்||

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் || 

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Tuesday, 27 May 2014

சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்





மந்திரம்:-

ஓம் ஸ்ரீம் அகண்ட சௌபாக்ய தன சம்ருத்திம் தேஹி தேஹி நம:||

இந்த மந்திரத்தை ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணிமுதல் 7:00 மணி வரை துளசி மாலை கொண்டு 600 உரு ஜெபித்துப்  பின்னர் 90 நாட்களுக்குத் தினமும் குறைந்தது 27 தடவையாவது ஜெபித்து வரத் தொடர்தோல்விகள் ,தொழில் நஷ்டம், காரியத்தடைகள், வறுமை,கடன் நீங்கி வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர்ந்திட நல்வாய்ப்புகளையும் ,அதிர்ஷ்டங்களையும் அருளும்.


வாழ்க வையகம் ||  வாழ்கவளமுடன்||

M.சூர்யா
தச்சநல்லூர் ,திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Saturday, 17 May 2014

செல்வ விருத்தி தரும் ஸ்ரீ தனாகர்ஷண லக்ஷ்மி மந்திரம்






செல்வ விருத்திக்குக் கீழ்க்கண்ட லக்ஷ்மி மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன் கிழமை அன்று தொடங்கித் தொடர்ந்து 90 நாட்கள்  தினமும் பிரம்ம முஹுர்த்தத்தில் நெய் விளக்கேற்றி 108 தடவை மேற்குத் திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறைவான செல்வம் கிடைக்கும்.

கேரளா மற்றும் கல்கத்தாவில் உள்ள பிராமணர்களால் இம்முறை பின்பற்றப்படுகிறது.

மேலும் விளக்கேற்றும் நேரத்தில் ஊதுபத்தி ஏற்றி அதை வாசல் வரை கொண்டு வந்து,என் குலதெய்வத்துடன் ,கணபதி முதலான அனைத்து சுப தெய்வங்களும் என் இல்லத்தில் எழுந்தருளுங்கள் என வேண்டியபடி பின்னோக்கி நடந்து வந்து பின்னர் '' கணபதி முதலான அனைத்து சுப தெய்வங்களும் இத்தீபத்தில் எழுந்தருளவேண்டும்'' என வேண்டியபடியே விளக்கு ஏற்ற வேண்டும்.இப்படி ஏற்றி வர காரியத்தடை, பணம் இருப்பின்றி விரயமாதல் இவை நீங்கி ஐஸ்வர்யமான நல்வாழ்வு அமையும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது.

மந்திரம்:-
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||

வெண்ணிறப் பூக்களால் அர்ச்சித்தாலும் ,ஏலக்காய் வெல்லம் போட்டுக்  காய்ச்சிய பால் நைவேத்யம் செய்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும்.

லக்ஷ்மி யந்திரம் வாங்கி அதைப் பால்,பன்னீர்,துளசி இலை கலந்த நீர் ,  இவற்றால் கழுவிப் பின்னர் அந்த யந்திரத்தை விளக்கின் முன்புறம் வைத்துப் பூஜை முடிந்தபின் விளக்கின் கருக்கை யந்திரத்தின் மையத்தில் வைத்து வர  யந்திரத்திற்குச் சக்தி உண்டாகும்.90 நாட்கள் கழிந்தபின் யந்திரத்தை பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்கக் குறையாத செல்வம் கிடைக்கும். யந்திரத்தைப் பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்கும் போது ஏதேனும் மஞ்சள் பட்டுத் துணியில் சிறிது பன்னீர்  தெளித்து அதில் வைக்கவும்.



                          வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Friday, 9 May 2014

நோய் நீக்கும் மந்திரங்கள்

ஆரோக்ய ப்ரத ஸ்ரீ தன்வந்திரி மந்திரம் :-

வடக்கு நோக்கி அமர்ந்து முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு   கீழ்க்காணும் மந்திரத்தை 108 தடவை ஜெபித்துப் பின்னர் வலது கையின் நடு மூன்று விரல்களை  நீரைத்தொட்டபடி வைத்து  ''நான்  ஜெபித்த மந்திரத்தின் சக்தி இந்தத் தீர்த்தத்தில் இறங்கட்டும் '' என்று சொல்லிப் பின்னர்  தன்வந்திரி பகவானை வியாதிகள் குணமாக ,அதன் தாக்கம் குறைய வேண்டி அந்த நீரை அருந்தி வரவும்.கொஞ்சம் கொஞ்சமாக வியாதியும் அதன்  தாக்கமும் குறையும். முடிந்தால் அந்த நீரில் கொஞ்சம்  துளசி இலைகளைப் போட்டு ஜெபிக்க நல்ல பலன் தரும்.

ஓம் ஹ்ரீம் தன்வந்திரியே ஆரோக்ய சித்திம் ஹ்ரீம் நமஹ||



வாழ்க வையகம்||  வாழ்கவளமுடன்||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072/ 9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Thursday, 8 May 2014

சத்ரு ஜெய யந்த்ரம்



எதிரிகளால் தொல்லைகள் ,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் வரைந்து யந்திரத்தைப் பால் ,மஞ்சள் கலந்த நீர்,விபூதி கலந்த நீர்,பன்னீர் இவற்றால் கழுவி படுபக்ஷி இல்லாத நல்ல நாளில் அணிந்து குலதெய்வத்தையும், துர்கையையும்   வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
இதே யந்திரத்தை மோதிரத்தில் செதுக்கி அணிந்து கொள்ள  மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.

இதனால் எதிரிகளால் நமக்கு உண்டாகும் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.

இந்த யந்திரம் பற்றி தாந்திரீக சாஸ்திரத்தில் மிக உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.இது நம்மிடம் இருக்க எந்த மனிதராலும் ,தெய்வ சக்திகளாலும் நமக்கு கெடுதல் செய்ய முடியாது.

பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.


பூஜிக்கப்பட்ட  யந்திரம், ரக்ஷை, குங்கும பிரசாதம் தேவைக்கு தொடர்பு கொள்க


வாழ்க வையகம் || வாழ்கவளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Tuesday, 6 May 2014

குரு வந்தனம் :-




இது ஒரு உபநிஷத சுலோகம்.முற்காலத்தில் குருகுலத்தில் எந்த ஒரு போதனை தொடங்கும் போதும் சீடர்கள் இந்த ஸ்லோகத்தைச்  ஜெபித்த பின்னரே தொடங்கப்படும்.

வேதம் ,மகான்கள் எழுதிய நூல்கள்,உபநிஷத் போன்ற தெய்வீக நூல்களைப் படிக்கத் துவங்கும் போது இந்த ஸ்லோகத்தை ஜெபித்து அந்த நூலை எழுதிய மகானை, ரிஷியை மனதார வணங்கி அவரின் திருவடிகளை சிரசின் மேல் தியானித்துப் பின்னர் படிக்கத் துவங்கினால் அந்த நூலை இயற்றிய ரிஷி,ஞானி என்ன பொருளில் அதை எழுதினாரோ அந்த மெய்ப்பொருள் நமக்கு விளங்கும்.
தியானம் செய்யத் துவங்கும் முன்னரும் அவரவர் குருவை வணங்கி இதை ஜெபித்துப் பின் தியானம் செய்ய தியானம் நன்கு சித்திக்கும்.

சுலோகம்:-

ஓம் சஹனா வவது||
சஹனௌ புனக்து ||
சஹ வீர்யம் கரவாவஹை ||
தேஜஸ்வி நாவதீத மஸ்து  ||
மா வித் விஷாவஹை ||

பொருள்:-நம்மை இறைவன் பாதுகாப்பானாக||
நாம் மகிழ்ச்சியாய் இருக்கவும்,உழைக்கவும் இறைவன் அருள்வானாக |
நமது கல்வி நிறைவானதாகவும் பலனளிப்பதாகவும் அமைய இறைவன் அருள்வானாக  ||
நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க அருள்வானாக ||

தலை உச்சியில்(சஹஸ்ராரத்தில்) கீழ்க்கண்ட முத்திரையைப்  போட்டபடி  இந்த மந்திரத்தை ஜெபிக்க பன்மடங்கு பலன் தரும்.



வாழ்க வையகம் ||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 5 May 2014

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரம்






ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி  மந்திரம் வாராஹி மந்திரங்களில் சிரேஷ்டமான ஒரு மந்திரம்.
இந்த மந்திரத்தை சித்தி செய்து கொண்டால் ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி நம்  கனவில் வந்து நம் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாள்.

ஜெபமுறை :
ஓம் அஸ்ய ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மந்த்ரஸ்ய| ஈஸ்வர ரிஷிஹி |ஜகதீச்சந்தஹ |ஸ்வப்ன வாராஹி தேவதா ||ஓம் பீஜம் |ஹ்ரீம்  சக்தி|ட்டஹ ட்டஹ   கீலகம் ||

மூல மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் நமோ  வாராஹி || அகோரே ஸ்வப்னம் தர்ஷய ட்டஹ ட்டஹ ஸ்வாஹா ||

இதை வளர்பிறை பஞ்சமி திதி அன்றோ ,வளர்பிறை அஷ்டமி அன்றோ ஜெபிக்க ஆரம்பிக்க நன்று .
தினம் 1100 உரு வீதம் தொடர்ந்து 11 நாட்கள் படுக்கையில் அமர்ந்தவாறே ஜெபித்து அங்கேயே உறங்கி விட வேண்டும்.ஜெபித்த இடத்தில் மாதுளம்பழம்,செவ்வாழைப்பழம்,வெண்ணை எடுக்காத  தயிர் சாதம் நிவேதனம் செய்யலாம்.

வாழ்க வளமுடன் || வாழ்க வையகம் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
 ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 14 April 2014

நன்றாக உறக்கம் வர:-





இரவில் சரியாகத் தூங்கினால் மட்டுமே பகலில் நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் திறம்படச் செய்யவோ,சுறுசுறுப்புடன் இயங்கவோ முடியும் .

மன வேதனை,ஏதேனும் ஒன்றைப்பற்றித் தொடர்ந்து சிந்தித்தல், கவலைப்படுதல்,மருந்துகள்  தொடர்ந்து சாப்பிடுதல் போன்ற பல காரணங்களால் தூக்கமின்றித்  தவிப்பார்கள்.

தூங்கும் முன் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை ஜெபித்துப் பால் அல்லது தண்ணீர் அருந்தி பின் தூங்க நன்கு உறக்கம் வரும்.

 சுத்தே சுத்தே மகாயோகினி மகாநித்ரே ஸ்வாஹா||


மேலும் உறங்கும் முன் இரு காலின் பெருவிரல்களை மென்மையாக பிடித்து விட்டு பின் தூங்க நல்ல தூக்கம் வரும்.

வாழ்க வையகம் ||       வாழ்க வளமுடன் ||

M.சூர்யா 
தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072 / 9788493072

Monday, 7 April 2014

உடல்,பிராணன்,மனம்,பொருளாதாரம்,ஆன்மிகம் இவற்றில் சிறந்து விளங்க உதவும் பயிற்சிகள்.

உடல்,பிராணன்,மனம்,பொருளாதாரம்,ஆன்மிகம் இவற்றில் சிறந்து விளங்க உதவும் பயிற்சிகள்.


உடல் 

பசி,தூக்கம்,காமம் இவற்றைச் சரியாகக் கையாளும் முறைகள்.
ஆரோக்கியமாய் வாழும் வழிகள் ,நமக்கும் பிறருக்கும் நோய் நீக்கும் வழிமுறைகள்.

வாழ்வில் வெற்றி பெற விரும்புவோர் குறைவாகச் சாப்பிடுதல்,குறைவாகத் தூங்குதல்,குறைவாகப் பேசுதல் இவற்றைக் கைக்கொள்ள வேண்டும்.அதற்கு என்ன செய்யவேண்டும்.

சிறு வயது முதலே காமம் தவறு என்று கற்பிக்கப்படுகிறது ஆனால் தினம் காமம் சார்ந்த அதீத ஆசைகள் எண்ணங்கள் தொந்தரவு செய்கின்றன.சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்புப் பயிற்சிகள். 

உடல் பருமன் குறைய ,அறிவார்ந்த, நீளாயுள் உள்ள விரும்பிய குழந்தையைப் பெற்றுக்கொள்ள,கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள் மந்திரங்கள் , கணவன் மனைவிக்குள் உள்ள மனம் மற்றும் செக்சுவல் பிரச்சனை தீர உதவும் நுட்பங்கள்.      



பிராணன் 

மற்ற எந்த வழியில் செலவாகும் ஜீவ சக்தியை விட நமது சுவாசத்தின் மூலமாகவே அதிகமான உயிர்சக்தி வீணாகிறது.அதை எப்படி உடல்,மன,ஆன்ம சக்தியை பெருக்க,ஞாபக சக்தியை அதிகரிக்க,நோய் நீங்கிய நல்வாழ்வு வாழப் பயன்படுத்தும் முறைகள்.     


மனம் 

ஆன்மாவில் கர்ம வினையின் பதிவுகள் இருந்தாலும் மனம் தான் அந்த கர்ம வினைகளை எண்ணமாக,சொல்லாக,செயலாக செயல்பட வைத்து அனுபவிக்க வைக்கிறது.
கர்ம வினைகளைக் கழிக்க, அவற்றில் இருந்து விடுபட உதவும் பயிற்சிகள்.
மனதின் சக்தியைப் பல பயனுள்ள,ஆக்கபூர்வ வழிகளில்  வழிகளில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறும் முறைகள்.




பொருளாதாரம் 

நம் தேவைகள் நிறைவேறத் தேவையான பணம் (பொருளாதாரம்)  தடையின்றிக் கிடைத்திட,வரும் பணம் அனைத்தும் செலவாகி தீர்ந்துவிடும் வழிகளைச் சரிசெய்யும் தந்திரங்கள்,கடன் தீரக் ,கொடுத்த பணம் வசூலாக,தொழில் ,பணிசெய்யும் இடங்களில் உள்ள தீய அதிர்வுகளை நீக்க ,தொழிலில் ,வேலையில் உயரப் பின்பற்ற வேண்டிய நுட்பங்கள்,   




ஆன்மிகம்

வாழ்வில் மற்றும் ஆன்மீகத்தில் உயர நம் ஜாதகப்படி  வழிபட வேண்டிய தெய்வங்கள்,அந்த தெய்வத்தின் மந்திரங்களைச் சித்தி செய்து பயனடையும் முறைகள்,எந்த பிரச்சனையையும் தெய்வஉபாசனை,பஞ்சபக்ஷி சாஸ்திரம்,சர சாஸ்திரம் (சூரியகலை,சந்திரகலை ) இவற்றைப் பயன்படுத்தி  எவ்வாறு தீர்ப்பது என்ற நுட்பங்கள்,குழந்தைகள,மனைவி,கணவன் என குடும்பத்தில் நிம்மதியாக வளமாக வாழ வழிமுறைகள், தெய்வங்களின் சக்தி வாழ்வில் கர்மாக்களை தீர்க்க எந்த அளவு உதவும்,அதை விடப் பெரிய கர்மாக்களை கடக்க உதவும் தவ முறைகள் , சக்திமிக்க தியான முறைகள்.தீய பழக்கங்கள்,தவறான தொடர்புகள் ,குடிப்பழக்கம் இவற்றில் இருந்து விடுபட.ரெய்கி மற்றும் சித்தர்கள் வழியில் மருந்தின்றி குணமாக்கும் முறை,இந்து ,கிறிஸ்தவ,இஸ்லாமிய,பௌத்த மத தியான முறைகள் மந்திர ஜெப முறைகள்.


காமம் முதல்  கடவுள் வரை எது பற்றியும் தெளிவு பெறவும் .பயிற்சிகளுக்கும் தொடர்பு கொள்க


வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா
திருநெல்வேலி 
9442193072  /9788493072
ms.spiritual1@gmail.com

சுகப் பிரசவத்திற்கு மந்திரம்






விளக்கேற்றி அமர்ந்து கீழ்க்காணும் மந்திரத்தை குறைந்தது 27 தடவை ஜெபித்து வர சுகப்பிரசவம் ஆகும்.ஜெபித்து முடித்தபின் விளக்கின் மேல் வலது கையை மூன்று முறை சுற்றி அதே கைகொண்டு வயிற்றையும் மூன்று முறை சுற்றித் தடவவும்.

மந்திரம்:-

1.ஹே | சங்கர ஸ்மரஹர பிரமதாதீ நாத|
மன்னாத சாம்ப சசிசூடஹர த்ரிசூலினி ||
சம்போ சுகப்ரசவக்ருத் பாவமே தயாசோ|
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே ||
மாத்ரு பூதேஸ்வரோ தேவோ பக்தானா மிஷ்டதாயக|
சுகந்தி குந்தளா நாவஹ  சுகப்ரசவ ம்ருச்சது||

2.ஹிமவத் உத்தரே பார்ஸ்வே சுரதா நாம யக்ஷனி
தஸ்ய ஸ்மரண மாத்ரேன விசல்யா கர்ப்பிணி பவேத்|


3.ஹிமவத் உத்தரே பார்ஸ்வே சுரசா நாம யக்ஷணி 
தஸ்ய நூபுர சப்தேன விசல்யா பவது கர்ப்பிணீ ஸ்வாஹா  



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072

Tuesday, 1 April 2014

கணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-




இன்றைய நாட்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றி கூட்டுக்குடும்பங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இருந்தாலும், தனிக்குடித்தனம் இருக்கும் தம்பதிகளிலும்  பெரும்பாலும் அன்பும், இணக்கமும் கொண்டு வாழ்பவர்கள் குறைவே.

இதை அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து ''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ'' என 3 தடவை ஜெபித்து , ''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ'' என 3 தடவை ஜெபித்து பின்னர் கீழ்க்கண்ட மந்திரங்களைக்  குறைந்தது 27 தடவை குங்குமத்தில் ஜெபித்து அணிந்து வர தம்பதிகளிடையே அன்பும்,இணக்கமும் உண்டாகும்.கணவன் மனைவிக்குள் உள்ள பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் SEXUAL MISUNDERSTANDING தான் காரணம்.இந்த மந்திரங்கள் தம்பதிகளிடையே உள்ள SEXUAL MISUNDERSTANDING உட்பட நீக்கி அன்யோன்யம் நல்கும்..

1.அர்த்தநாரீஸ்வர மந்திரம் 

ஓம் |
ஹும் ஜும் சஹ |
அர்த்தநாரீஸ்வர ரூபே|
ஹ்ரீம் ஸ்வாஹா ||

இந்த மந்திரத்தை ஆண் ,பெண் யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.


பெண்கள் ஜெபிக்க  வேண்டிய மந்திரம் :-

ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பதிம் மே வசமானய நமஹ |

ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||

ஆண்கள் ஜெபிக்க  வேண்டிய மந்திரம் :-

ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பத்னிம் மே வசமானய நமஹ |

ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன்||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 24 February 2014

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற பயிற்சிகள்




எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.

நாடிசுத்தி :-

உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.

1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்கு துவாரத்தை அடைத்து இடது மூக்கு துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்கு துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

இப்படி செய்தால் ஒரு தடவை(சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதை காலை,மதியம் உணவுக்கு முன்,மாலையிலும் செய்து வர நல்ல நினைவாற்றல் ,மன ஒருமைப்பாடு ஏற்படும்.

பிராணயாமம்:-

இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக  மூச்சை உள்ளிழுத்து பின்னர் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.

இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளை பெரிதாக்கி சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதை சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.தேர்வுக்கு முன் ,நேர்முகத் தேர்வுக்குக்  காத்திருக்கும் போது சில தடவைகள் செய்ய பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய  மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.

சீத்காரி :-

சீதளம் என்றால் குளிர்ச்சி   எனப்பொருள்.

பற்களைச்  சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.
இரவில் முறையாக உறங்காமல் அதிக நேரம் கண்விழித்துப் படித்தால்  கண் எரிச்சல்,உடற்சூடு,தலைசுற்றல் உண்டாகும்.தவிர்க்க முடியாத சூழல்களில் இந்தப் பயிற்சியை இடையிடையே செய்து படிக்க உறக்கம் வராது அதோடு நல்ல சுறுசுறுப்பும் சக்தியும் உண்டாகும்.

தேர்வுக்கு முன் தேர்வு அறையில் செய்ய வேண்டிய பயிற்சி:-

தேர்வு தொடங்கும் முன் வினாத்தாள் கொடுத்ததும் கீழ்வரும் பயிற்சியைச் செய்ய மனதில் பயம்,பதற்றம் நீங்கி தெளிவு உண்டாகும் அதன் பின் விடைத்தாளில் பதில் எழுத ஆரம்பியுங்கள்.

பயிற்சி:-

மெல்ல மூச்சை உள்ளிழுத்து அடக்காமல் உடனே மெல்ல மூச்சை வெளிவிட்டு பின் 3 முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கி பின்னர் உள்மூச்சு இழுக்க வேண்டும்.இவ்வாறு ஒரு வெளிமூச்கிக்கும் உள்மூச்சுக்கும் இடையே 3 முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கி பின் உள்ளிழுக்கும் இந்த பயிற்சியை குறைந்தது 10 தடவை செய்து வர மனம் அமைதியாகும்.ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தெரிந்தும் நினைவுக்கு வராத சமயத்திலும் இதை குறைந்தது 3லிருந்து 5 தடவை செய்து பின் யோசிக்க விடை மனதில் உதிக்கும்.

முக்கிய குறிப்பு :-
நம் சரீரத்தில் சுவாசம் எப்பொழுதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வலது பக்கம் ,இடது பக்கம் என மாறி மாறி ஏதேனும் ஒரு மூக்குத் துவாரம் வழியாக இயங்கும்.

வலது பக்கம் சுவாசம் ஓடும் போது கடினமான கணிதம்(MATHS) , அறிவியல் (SCIENCE),புள்ளியியல்(STATISTICS) போன்ற பாடங்களைப் படிக்க எளிதில் விளங்கும்,மனதில் பதியும். வலதுபக்கம் சுவாசம் ஓடாத நேரங்களில் வலது கால் இடது கால் இருக்கும் படி போட்டுகொண்டு தரையில் அமர்ந்தோ,சேரில் அமர்ந்தோ படித்தாலும் அதே பலன் உண்டாகும்.

வல்லாரை லேகியம் சிறிதளவு தினமும் சாப்பிட்டு வர நல்ல நினைவாற்றல் உண்டாகும்.




வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற பாகம் 2


எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.

ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்:

நம்மில் பலரும் அனேக விஷயங்கள்,நூல்களை படிக்கிறோம் ஆனால் மிகச்சிலரே படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கிறோம்.கீழ்க்கண்ட மந்திரங்களை ஜெபித்து வருவதின் மூலம் நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

ஸ்ரீ சரஸ்வதி மாலா மந்திரம் :-

ஓம்|ஆம்| ஐம் சரஸ்வதி|க்லீம் சரஸ்வதி|சௌம் சரஸ்வதி|
வேணுகாணி |வித்யாவதி |பாலமோகினி|பக்தரட்சகி|
வித்தக சக்தி|வேதபூஷணி |
உருவாய் அருவாய் உள்ளே இரு இரு|
சிந்தையில் நின்று செந்தமிழ் ஓது|
மனதில் இருந்து மாமறை ஓது |
கருத்தில் இருந்து கலை பல ஓது|
நாவில் இருந்து நானே நீயாய்
சொல்லும் பொருளாய் வல்லியே வா வா|
சொல்லால் உலகம் எல்லாம் வணங்க|
நில்லு நில்லு என் நினைவினில் நில்லு|
வெல்லு வெல்லு வல்லோர் வணங்க|
மானமும் கல்வியும் மோனமும் தா தா |
அஷ்டலக்ஷ்மியும் அடியேனைக் காக்க|
இஷ்ட சக்தியாய் இருந்து நீ காக்க|
வா வா தேவி வரம் தர வா வா|
காவாய் காவாய் கடாட்சம் குரு குரு||

இதனை தினமும் 3 அல்லது 11 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்|

ஓம்| ஐம்|வத வத வாக்வாதினி நமஹ|

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

ஓம்|ஐம் க்லீம் சௌம் பாலா திரிபுரசுந்தரி தேவி நமஹ ||

அல்லது

ஓம்|ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்| பாலா திரிபுரே மம முக வாக் சித்தம் குரு குரு ஸ்வாஹா ||

இதனை தினமும் குறைந்தது 27 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.





வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற பாகம் 1:-




ஆண்டு இறுதித் தேர்வு நெருங்கும் சமயம் மாணவ,மாணவிகள் மிகுந்த மன நெருக்கடிக்குள் தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் இந்தப் பதிவு அவசியம் தேவையானதாக இருக்கும் என்று பகிர்கிறேன்.

எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.


நல்ல நினைவாற்றலுக்கு மந்திர சாஸ்திரம் கூறும் சில வழிமுறைகளை விளக்குகிறேன்.பின்பற்றி பலன் பெறுங்கள்.

1.ஸ்ரீ ஹயக்ரீவர் சுலோகம்,காயத்ரி,மூல மந்திரம்:-
கீழ்க்காணும் சுலோகம்,மூலமந்திரம்,காயத்ரி அனைத்தையுமோ அல்லது இயன்றதையோ ஜெபித்து வர கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

ஸ்ரீ ஹயக்ரீவர் சுலோகம்:

ஓம் ருக்யஜுர் சாமரூபாய |
வேதாஹரண கர்மணே |
பிரணவோத்கீத வசசே |
மஹா அச்வ சிரசே நமஹா ||

ஓம் உத்கீத பிரணவோத்கீத |
சர்வ வாகீச்வரேச்வரஹ |
சர்வ வேத மயா சிந்த்ய |
சர்வம் போதய போதய ||

ஓம் விச்வோத் தீர்ணஸ்வரூபாய |
சின்மயானந்த ரூபிணே |
துப்யம் நமோ ஹயக்ரீவ |
வித்யா ராஜாய விஷ்ணவே ||

ஓம் ஆசக்ராய விசக்ராய |
ஸுசக்ராய தீசக்ரிணே |
ஜ்வாலா சக்ராய ச இத்யுக்த்வா |
மஹா சக்ராய தே நமஹா ||

இதைப் படிப்போர் நல்ல கல்வியும்,செல்வமும்,ஞானமும் பெறுவார்கள்  என ஸ்ரீ  விஷ்ணு  புராணம்  குறிப்பிடுகிறது.
   
ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரி :-

ஓம் ஸ்ரீ வாகீச்வராய வித்மஹே |
ஹயக்ரீவாய தீமஹி |
தன்னோ ஹம்சஹ ப்ரசோதயாத் ||

இந்த ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரி ஜெபம் சகல கலைகளிலும் தேர்ச்சியைத் தரும்.

ஸ்ரீ ஹயக்ரீவர் மூலமந்திரம் :-

1. ஓம் ஞானானந்த மயம் தேவம்|
    நிர்மலம் ஸ்படிகாக்ருதிம் |
   ஆதாரம் சர்வ வித்யானாம் |
    ஹயக்ரீவம் உபாஸ்மஹே ||

2. ஓம் ஐம் ஹ்ரீம் ஹ்ரசௌம் | ஓம் நமோ பகவதே ஹயக்ரீவாய விஷ்ணவே | மஹ்யம் மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ப்ரயச்ச ஸ்வாஹா ||

3. ஓம் ஐம் ஐம் | ஓம் ஹ்ராம் ஹ்ரௌம் ஹயக்ரீவாய ஸ்வாஹா ||


மேற்கண்ட மந்திரங்கள் ஜெபிக்க பெரியதாகவும் கடினமாகவும் இருப்பதாகத் தோன்றினால் ''ஓம் ஹ்ரசௌம் ஹயக்ரீவாய நமஹ '' என்று ஜெபித்து வரலாம் .

சிறப்பான முறையில் பலன் பெற விரும்புவோர் ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜெபித்து ஹோமம் செய்து ரஹஸ்ய குங்கும அர்ச்சனை செய்த குங்குமத்தை அணிவதன் மூலமோ, ரக்ஷை அணிந்தோ அல்லது அஞ்சனம் செய்து திலகமாக அணிந்து வர அல்லது வகிட்டில் வைத்து வர  விரைவான் நிறைவான பலன் பெறலாம் .

ஏதேனும் ஒரு வளர்பிறை புதன் கிழமை அன்று நவக்ரஹங்களில் புதனுக்கு அல்லது ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கோ பச்சைப் பட்டு சார்த்தி ஒரு பச்சை நிற துண்டு வாங்கி அதை ஸ்ரீ மகாவிஷ்ணு அல்லது ஸ்ரீ புதபகவான் பாதத்தில் வைத்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வாங்கி பின்னர் அதில் சிறிது பன்னீர் தெளித்து புதன் எந்திரம் அதில் கைகொண்டு வரைந்து  அதில் ஈசான்ய திசை  (வடகிழக்கு) நோக்கி அமர்ந்து படித்து வர நல்ல நினைவாற்றலும்,கல்வியில் பிரியமும்,சிறந்த தேர்ச்சியும் உண்டாகும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 6 January 2014

ஆன்மீக முன்னேற்றத்திற்கு அகஸ்தியர் கூறும் மந்திரங்கள் :-


அகஸ்தியர் தனது "பரிபூரணம் 1000" என்ற  நூலில் பின்வரும் மந்திரங்களை ஜெபித்து வருவதன் மூலம் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம்  ஏற்படும் எனக் கூறுகிறார்.

பிரம்மச்சரியம் :-திருமணத்திற்கு முந்தைய பருவம் அல்லது திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.

மந்திரம்: "அம் கிலி  சிம்"  என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.



கிரகஸ்தம் : -  திருமணம் செய்து மனைவி ,குழந்தைகளோடு வாழ்ந்து வருபவர்கள்.

மந்திரம்: "ஓம் றீங் அங் உங்"  என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும். 

சந்நியாசிகள்:-

"ஓம் ஐம் க்லீம் சௌம்" என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.


வானப்ரஸ்தம் :-

50 முதல் 75 வயதுக்குள் உள்ளவர்கள்.வாழ்ந்து முடித்த பெரியவர்கள்.

மந்திரம்: "ஓம் அம் சிவ வசி " என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.

அவரவருக்கு எந்த வாழ்வு நிலை பொருந்துகிறதோ அதற்குண்டான மந்திரத்தை ஜெபித்து வர ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.


சித்தர் விதிகளின் படி முறைப்படி தீட்சை பெற்று நியமங்களுடன் ஜெபித்து வர நல்ல பலன்கள் உண்டாகும்.மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9442193072


Friday, 27 December 2013

ஸ்ரீ வாராஹி வழிபாடு

                                    





கருணாசாகரி ஓம் ஸ்ரீ  மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே|| 

அன்னை ஸ்ரீ மகாவாராஹி  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள்.இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).

ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த  வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள்,எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும்.அபிச்சாரம் எனப்படும் பில்லி,சூனியம்,ஏவல்களை நீக்குவாள்.இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்  தேவையில்லை.ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை  ஸ்தம்பனம் செய்பவள்.வழக்குகளில் வெற்றி தருபவள்.

மந்திர சாஸ்திரபழமொழி :- "வாராஹிக்காரனோடு வாதாடாதே" .

ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப் போலவே முதன்மையானவள் .எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும் ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் நம்மை வந்தே சேரும் அதில் இருந்து அன்னை நம்மைக் காக்க மாட்டாள்.எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் ''எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு" வேண்டி வழிபட வேண்டும்.

ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும்,வாத,பித்த வியாதிகளும் தீரும்.

ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

வழிபாட்டு முறைகள் :-

புதன்,சனிக்கிழமைகள்,திரயோதசி திதி,பஞ்சமி திதி,நவமி,திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம்.எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன்  பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

செல்வம் ,அரசியல் வெற்றி,பதவி,புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும்,
மனவலிமை,ஆளுமை,எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.

எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும்,எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.

ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.

வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில் மேன்மை உண்டாகும்.

மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்,திருமணத்தடை நீங்கும்.

பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.

நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.

ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு,தாமரைத்தண்டு,வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.

நைவேத்தியங்கள்:-

தொலி எடுக்காத உளுந்து வடை,மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம்,மொச்சை ,சுண்டல்,சுக்கு அதிகம் சேர்த்த பானகம்,மிளகு சீரகம் கலந்து செய்த தோசை,நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம்,பச்சைகற்பூரம் கலந்த பால்,கருப்பு எள் உருண்டை ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு,தேன் படைக்கலாம்.

மாதுளம்பழம் மிகச் சிறப்பு.



ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம்:-

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி  வாராஹமுகி ||
அந்தே அந்தினி நமஹ|
ருந்தே ருந்தினி நமஹ|
ஜம்பே ஜம்பினி நமஹ|
மோஹே மோஹினி நமஹ|
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
சர்வ வாக்சித்த சக்ஷூர்  முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||


ஸ்ரீ மகாவாராஹியின் அங்க தேவதை -லகு வார்த்தாளி
உபாங்க தேவதை :-ஸ்வப்ன வாராஹி
பிரத்யங்க தேவதை :திரஸ்கரணி

ஸ்ரீ லகு வார்த்தாளி மூல மந்திரம் :-

லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவி பாதுகாப்யாம் நமஹ|| 

இவள் ஸ்ரீ மகாவாராஹியின்  அங்க தேவதை ஸ்ரீ மஹாவாராஹி மந்திரம் ஜெபிக்க இயலாதவர்கள் லகு வாராஹி மந்திரத்தை ஜெபித்து வரலாம்.இது எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக விளங்கும்.

ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி மூல மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் ட்ட:  ட்ட:  ஸ்வாஹா||

அல்லது 

ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி அகோரே ஸ்வப்னம் தர்சய ட்ட:  ட்ட:  ஸ்வாஹா|| 

இவள் ஸ்ரீ  மகாவாராஹியின்  உபாங்க தேவதை.இவளை உபாசனை செய்தால் நமக்கு வரும் நன்மை,தீமைகளைக் கனவில் வந்து அறிவித்து நம்மைக்  காப்பாள்.இம்மந்திரத்தை நியமங்களுடன் உறங்கும் முன் 11 நாட்கள் தொடர்ந்து தினமும் 1100 முறை ஜெபித்து வந்தால்  11 நாட்களுக்குள் அன்னை ஸ்ரீ ஸ்வப்ன வாராஹி கனவில் வந்து நம் மன விருப்பங்களை நிறைவேற்றி  ,பிரச்சனைகளைத் தீர்ப்பாள்.இவளுக்குப் பிடித்த நைவேத்யம் இளநீர்.


ஸ்ரீ திரஸ்கரணி  மூல மந்திரம் :-

ஓம் நமோ பகவதி திரஸ்கரணி மஹாமாயே| மஹாநித்ரே|சகலபசுஜன மனஸ் சக்ஷு ச்ரோத்ரம் திரஸ்கரணம் குரு குரு ஸ்வாஹா||    

இவள் மாயைக்கு அதிபதி .இவளை வழிபட மாயை நீங்கும்.மனகுழப்பங்கள் தீரும்.


குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-

1.வாக்கு வன்மை,சபைகளில் பேர் பெற,கல்விஞானம் பெற:-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||

2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :-

ஓம் சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய ||  

3.செல்வவளம் பெருக:-

க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||

4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற :-

ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா| மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||

5.எல்லா வகையான பயமும் நீங்க :-
    
ஓம் ஹ்ரீம் பயங்கரி| அதிபயங்கரி|ஆச்சர்ய பயங்கரி| சர்வஜன பயங்கரி|சர்வ பூதப் பிரேத பிசாச பயங்கரி |சர்வ பயம் நிவாரய சாந்திர்ப்பவது மே  சதா||   

6.வறுமை நீங்க :-

ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய  த்வம்சய||

ஸ்ரீ மகாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:-
மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள்,ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மஹாவாராஹியின் 12 நாமங்களைக் காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.

1.பஞ்சமி 
2.தண்டநாதா
3.சங்கேதா 
4.சமயேச்வரி
5.சமயசங்கேதா 
6.வாராஹி 
7.போத்ரிணி 
8.சிவா 
9.வார்த்தாளி 
10.மகாசேனா 
11.ஆக்ஞா சக்ரேச்வரி 
12.அரிக்னீ  

ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் நலம் பெற வேண்டி ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும் அதில் உங்கள் தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்துத் தினமும் படித்து வரத் தேவை நிச்சயம் நிறைவேறும். 

காரியசித்தி ஏற்பட,பயம் நீங்க மற்றும் பல காரியங்களுக்கும் சிறப்பு பூஜை,யந்திர,மந்திர,ஹோமம் ,ரக்ஷை, உள்ளது .ஸ்ரீ அச்வாரூடா , ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள் ,அரசாங்க காரியங்களில் வெற்றி தருவதுடன் ,எத்தகைய வழக்கு, எதிர்ப்புகளையும் தீர்க்கும் .பதிப்பின் நீளம் கருதி இத்துடன்  ஸ்ரீ மஹாவாராஹி உபாசனை  பற்றிய விளக்கத்தை நிறைவு செய்கிறேன்.


வராஹி உபாசனை பல நன்மைகளையும் ,உடனடி பலனையும் தருவது.இதில் பல பிரயோக ரகசியங்கள் உள்ளன.எனவே, முறைப்படி சாப நிவர்த்தி செய்து தீக்ஷை பெற்று ஜெபிப்பது உத்தமம்.

கருணாசாகரி ஓம் ஸ்ரீ  மஹா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே|| 

வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்||
வார்த்தாளி வார்த்தாளி வார்த்தாளி ரக்ஷமாம் ||


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி 
9442193072
ms.spiritual1@gmail.com

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - மனம் 2

மனமும்,விழிப்புணர்வும் 
மனம் நம்  நண்பனாக வேண்டுமானால் நாம் அதனோடு இணக்கமான உறவு  கொண்டிருக்கவேண்டும்.இணக்கமான உறவு இருந்தால் மட்டுமே அதன்  அனைத்து முகங்கள் ,பரிமாணங்களையும் அறிய முடியும்.அதன் பின்னே தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும்.

எப்படி????........ பார்க்கலாம் .

புத்தரிடம் ஒருமுறை ஒரு சீடர் "இன்பம்,துன்பம் என்றால் என்ன? அதன் உண்மை நிலை என்ன?"

"நம் பார்வையில் தான் உள்ளது.இருந்தாலும்,கொஞ்சம் விளக்குகிறேன்.
உன் சுய இயல்புக்கு உடன்பாடாக நடந்தால் வருவது இன்பம்,உன் சுய இயல்புக்கு  மாறாக நடந்தால் வருவது துன்பம்".

"சரி அப்படி என்றால் நம் மனம் போன போக்கில் நடப்பது என்று அர்த்தமா?"

"இல்லை.முதலில் நீ என்றால் என்ன? நீ உன் பெயரா,உடலா, பிராணனா மனமா எது நீ என்று கண்டுபிடி .ஞானிகளின்  கூற்றை அப்படியே நம்பாதே, வெறும் புத்தகங்களைப் படித்து விட்டுப் பிதற்றாமல் உன் சொந்த அனுபவத்தில் அவற்றை அறிந்து கொள்.அப்பொழுது  மட்டுமே நான் என்றால் என்ன என்று முதன்முறையாக அறிய வருவாய் .அந்தத் தெளிவு ஏற்பட்ட பின் நான் கூறியதை (உன் சுய இயல்புக்கு உடன்பாடாக நடந்தால் வருவது இன்பம்,உன் சுய இயல்புக்கு  மாறாக நடந்தால் வருவது துன்பம்") மறுபரிசீலனை செய்து பார்."

சட்டமோ,சமூகமோ நம்மைத் தண்டிக்காது என்ற ஒரு நிலை வந்தால் நம்மில் எத்தனை பேர் உண்மையான ஒழுக்கத்தோடு இருப்போம்?.உள்ளபடியே எனக்கு ஒழுக்கத்தில் உடன்பாடு இல்லை.ஒழுக்கம் ஒரு காலத்தில் நம் சுபாவமாக மாறினால் சரி ஆனால் நாம் மரணம் வரை ஒழுக்கத்தை ஒரு பயிற்சியாகவே செய்து வருகிறோமே அன்றி ஒழுக்கம் உள்ளவர்களாக இல்லை.உதாரணமாக, நான் குளித்து 10 நாட்கள் ஆகின்றன என்று வைத்துக்கொள்வோம் ஒரு கோட் வாங்கி அணிந்து கொள்கிறேன் என் உடலைத் தாண்டி நாற்றம் வெளியில் அதிகம் வராமல் அந்த கோட் தடுக்கிறது.மீண்டும் 10,20 நாட்கள் குளிக்கவில்லை இன்னும் ஒரு கோட் அதன்மேல் அணிந்து கொள்கிறேன். முன்போல்,இந்தப் புதிய கோட்டும் நாற்றம் வெளியில் அதிகம் வராமல் தடுக்கிறது.ஆனால,உள்ளுக்குள் நான் கெட்ட நாற்றம் வீசுபவனாகவே இருக்கிறேன்.இது போல் நாம் ஒருவரை விஞ்சி ஒருவர் நல்லவராகக் காண்பித்துக்கொண்டும்,நடித்துக்கொண்டும் இருக்கிறோமே தவிர  உண்மையில் நாம் அவ்வாறு இல்லை.

ஏன்.??

ஒழுக்கம் ஊருக்கு ஊர்,சமயத்திற்குச் சமயம் மாறுபடும்.புத்த மதத்தில் மட்டும் 13,000 க்கும் அதிகமான செயல் திட்ட ஒழுக்க முறைகள் உள்ளன என்று ஓஷோ கூறுகிறார்.

பல்லாயிரம் ஆண்டுகள் இருளடைந்த ஒரு அறைக்குள்ளோ,குகைக்குள்ளோ    ஒரு மெழுகுவர்த்தியோ ஒரு விளக்கோ ஏற்றினால் அந்த ஒளி சுடர் விட்டுப்  பிரகாசிக்க பல நாட்களோ ,அதிகநேரமோ பிடிக்காமல் உடனே அதன் ஒளி  அங்கு பரவி வெளிச்சம் தரும்.அதுபோல், விழிப்புணர்வு ஒன்றே உண்மையான ஒழுக்கம்.பல புத்தகங்கள்,அறிவுரைகளைப் பின்பற்றிப்  பல  நூறு ஒழுக்க விதிகளைப் பின்பற்றுகிறேன் என்று இயல்பு மீறி வாழக்கூடாது.

உங்களில் ஒருவரின் கைரேகை இந்த உலகில் இப்போது உள்ள, இதற்கு முன் வாழ்ந்த யாருடனும் பொருந்தாது.உங்களைப்போல் இன்னொருவர் இல்லை, உலகில் ஒருவரைப்போல் இன்னொருவர் என்றுமே இருந்ததில்லை. எனவே, பொதுவான ஒழுக்கம் என்று ஒன்றே கிடையாது.ஒவ்வொருவரும் வேறு, வேறு மனோ இயல்பு கொண்டவர்களாக இருக்கிறோம்.

முன் பதிவில் கூறியபடி,அவரவர் கர்ம வினை மனதின் அடியாழத்தில் பதிந்துள்ளது இதையே சம்ஸ்காரம் என்கிறோம்.அது இறைநியதிப்படி உரிய காலங்களில் எண்ணமாகவும், சொல்லாகவும், செயலாகவும் பரிணமிக்கிறது.இதைப் புரிந்து கொண்டு மனதில் நன்கு இருத்த வேண்டும்.
எல்லாமே,கர்மாவின் படியே நடக்கிறதென்றால் பின் ஆன்மீகத்தில் பல மகான்கள் நம்மை விட மிக மேலான நிலைகளை எட்டி இருக்கிறார்களே என்ற கேள்வி எழுவது நியாயமே.அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத வாழ்க்கையில்,எந்த வகையான முன்னேற்பாட்டைச் செய்துவிட முடியும்,எந்த வகையானஒழுக்கத்தின் மூலம் சரியானபடி   வாழ்ந்து விடமுடியும்.

ஒழுக்கம் ஒரு தற்காலிகமான உதவி ,ஆனால் விழிப்புணர்வு கர்ணனின் கவசம் போல் நம்முடன் எப்போதும் இருந்து உதவும் அதோடு மட்டுமின்றி மேலும் கர்மப் பதிவுகளை பெருக்கிக் கொள்லாமல் இருக்கவும் உதவும்.

தனியாக வீட்டில்  இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.பெரிய வீரன்,மெத்தப்படித்தவன் என யாராக இருந்தாலும் சரி,என்ன செய்வோம், உடனே டிவியை ஆன் செய்வோம் அல்லது பேப்பர் ,புத்தகம் என படிப்போம் ஆனால் சும்மா இருக்க  நம்மில் எத்தனை பேரால் முடியும். நண்பர்கள், உறவினர்கள் உட்பட யாருடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசும்,நேரம் செலவிடும்  நாம் நம்முடன் நேரம் செலவிடுவது கிடையாது. ஏனென்றால் நம்மைக் கண்டு நமக்கே பயம்.

ஏனென்றால்,நாம் பிறர் முன் நமது நல்ல முகத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம்.ஆனால் ,தீய பதிவுகள்,எண்ணங்கள் நமக்குள் அப்படியே உள்ளதால் நாம் தனிமையில் இருக்கும் போதும்,தியானம் செய்யும் போதும் அந்த சம்ஸ்காரங்கள் மேல் எழுந்து வருகின்றன.இவற்றை நாம் தவம் செய்து அழிக்காத வரை நமக்கு மன அமைதி கிட்டாது. சரி,இதற்கு, என்ன செய்யலாம்?
தியானம் செய்யும் சமயம் இந்த வகையான சிந்தனைகள் வந்தால் அவற்றோடு சண்டையிடாமல்,உடன்படாமல் அந்த எண்ணங்களை சும்மா கவனித்தாலே போதும்.அவை வெளியேறி அவற்றின் வீரியம் குறைந்து விடும்.ஆங்கிலத்தில் சொல்வதென்றால் AT MEDITATION HOURS ''NEITHER CO-OPERATE ,NOR CONDEMN YOUR THOUGHTS" .

ஆரம்பத்தில் இது ஒரே நாளில் கைவராவிட்டாலும், தொடர்ந்த பயிற்சியினால் இது கைவரும்.

குழப்பமான மனநிலையில் எடுக்கும் முடிவுகள் குழப்பத்தையே கொண்டு வரும்.இது வரை பல்லாயிரம் பேரைத் தவறாக எண்ணியிருப்போம், கோபத்தில் அடிக்க அல்லது திட்ட நினைத்திருப்போம் ஆனால் செய்திருக்க மாட்டோம் அதன் பதிவுகள் அடுத்து எவர் மேலாவது காமமோ, கோபமோ வந்தால் முன்னதாக அடக்கிவைத்துள்ள காமம்,கோபத்தின் எஞ்சிய பதிவுகளுடன் சேர்ந்தே வெளிப்படும் எனவே நம்மால் அந்த உணர்வுகளை கவனமாகக் கையாள முடிவதில்லை.முந்தைய பதிவில் சொன்ன மூச்சைக்  கவனிக்கும் பயிற்சியை முறையாய்ச் செய்து வர வாழ்வைத் தெளிவுடன் நடத்தத் தேவையான விழிப்புணர்வும் அமைதியும் உண்டாகும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday, 8 December 2013

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - மனம்,கர்ம வினையும் கடக்கும் வழிகளும் 1

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்  - மனம்:-

முந்தைய பதிவுகளில் இரண்டு தளங்களான உடல்,ப்ராணன் பற்றி ஓரளவு தெளிவு பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்.இப்பொழுது அதற்கு அடுத்த தளமான மனம் பற்றி பார்க்கலாம்.

பிராணனை விட அதி நுட்பமான சக்தி நிறைந்த அடுக்கே மனம்,மனம் செயல்படும் வரை மட்டுமே நம் உடலில் உயிர் நிற்கும்.

உதாரணமாக:-
உடல்+மனம் = உயிர்
உடல்-மனம் = பிணம்

கோமா நிலையில் உள்ளவர்களுக்கும் கூட மனம் உறக்க நிலையில் இருக்கும்.மனம் அறவே தன் செயல்பாட்டை நிறுத்தி விட்டால் மரணம் ஏற்படும்.

யாவற்றையும் அறியவும்,அறிந்ததை நினைவில் இருத்தவும், அவற்றைத் தேவையான தருணங்களில் நினைவு கூர்ந்து செயல்படவும் மனம்  அவசியம். மனம் இன்றி எதுவும் செய்ய முடியாது.

அநேகர் மனதை அடக்க வேண்டும் என்று கடினமாக முயற்சிக்கின்றனர் அப்படி அடக்கினால் மட்டுமே இறைவனை அறியவும்,ஆன்மீகத்தில் உயரவும் முடியும் என்று நினைக்கின்றனர்.உண்மை அதுவல்ல.மனதை அடக்க முடியாது அப்படி அடக்கியதாக நினைத்துக் கொண்டாலும் அது தற்காலிகமானதுதானே தவிர நிரந்தரமல்ல.

மனம் தன் இயல்பில் வெறும் களிமண் போன்றது அது  நன்மையானதோ தீமையானதோ இல்லை அது நடுநிலையானது.நாம் வாழும் முறையில் இருந்தே அது தன்னை சரியாகவோ,தவறாகவோ வடிவமைத்துக் கொள்கிறது.

உதாரணமாக நாம் ஒரு நபரை அடிக்கின்றோம் நாமே இறுதியில் வெற்றி பெற்றோம் என வைத்துக்கொள்வோம்.இதில் நமக்கு அந்நியமான ஒருவரைத்  தாக்கி வெற்றி பெற்றோம்.இதற்குப் பதிலாகக் கண்ணாடியில் தெரியும் நம் உருவையே எதிரியாகப் பாவித்து அதைத் தாக்கினால் நம் கைகளில் கண்ணாடி உடைந்ததால் காயம் ஏற்படுமே தவிர அந்த உருவம் எந்த பாதிப்பும் இன்றி முன்போலவே இருக்கும்.அதுபோல நாம் மனதை வலிந்து அடக்கினால் மூளைக்கோளாறு,இயல்பாக வாழமுடியாமல் போய் வாழ்வே சாபமாகும்.

நண்பன் நம் சொல்லை கேட்பானா அல்லது எதிரி நம் சொல்லை கேட்பானா.நண்பனே கேட்பான்.எனவே முதலில் செய்ய வேண்டியது முறையான பயிற்சிகளின் மூலம் மனதை நட்பாக்கிக்  கொள்ளவேண்டும்.

மனதை ஏதோ எதிரியாகவும்,மிகத் தவறானதாகவும் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.இயற்கையில் ஒவ்வொரு செயலுக்கும் சரியான எதிர் வினை உண்டு எனவே மனதை எதிரியாக நினைத்தால் அது உங்களிடமும் எதிர் இயல்பாக செயல்பட்டு இணக்கமற்ற சூழலை உண்டாக்கும்.

மனமும்,அதன் இயக்கத்தைப் பற்றிய தெளிவும் இல்லையென்றால் ஆன்மீகப் பயணத்தைச் சரியாகத் தொடங்கி நடத்தவோ,வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபடவோ முடியாது.


கர்மவினை:-

கர்மா என்றாலே நம்மில் பலர் பயம் கொள்கின்றனர்.உண்மையில்,கர்மா என்ற சம்ஸ்கிருத சொல்லின் பொருள் செயல் என்பதே.

கர்ம வினை மூன்று வகை.

1.சஞ்சித கர்மா
2.பிராரப்த கர்மா
3.ஆகாம்ய கர்மா

1.சஞ்சித கர்மா - மனிதனாய்,மிருகமாய்,மரமாய் எனப் பல்லாயிரம் பிறவிகளில் நாம் வாழ்ந்த வாழ்வில் செய்த புண்ணிய,பாவங்களின் சேர்க்கையே சஞ்சித கர்மா.

2.பிராரப்த கர்மா - இந்தப் பிறவியில் அனுபவிக்கக் கொண்டு வந்த  வினைகள்

3.ஆகாம்ய கர்மா - இந்த ஜென்மத்தில் புதிதாகச் சேர்க்கும் வினைகள்.

உதாரணமாக:-

சஞ்சித கர்மா எனப்படும் முற்பிறவிகளில் நீங்கள் செய்த நன்மை தீமைகளின் கணக்கு 80,000 நன்மைகள் 20,000 தீமைகள் என்று வைத்துக்கொள்வோம். மொத்தம் 1 லட்சம் பதிவுகள்.

எப்படி 3 வேளைக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் உண்ண முடியாதோ அதுபோல் பல ஜென்மங்களில் செய்த கர்மாக்களை மொத்தமாய் இந்த ஒரு பிறவியிலேயே கழிக்கமுடியாது.எனவே   அதில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்துக்கொண்டு (உதாரணமாக:ஒரு பத்தாயிரம் பதிவுகள்=8,000 நன்மைகள்,2,000 தீமைகள்) இந்த ஜென்மத்தை அனுபவிக்கப் பிறந்து வருகிறோம் இது பிராரப்த கர்மா.

இந்த ப்ராரப்த கர்மாவில் உள்ள பதிவுகளின்படி நம் வாழ்வில் நன்மை ,தீமைகள் நடக்கும்.அவை நடப்பதற்கான சூழல்,மற்றும் எண்ணங்களை ஏற்படுத்துவதே கிரகங்கள் மற்றும் தெய்வங்களின் வேலை.
எனவே தெய்வங்களையோ நவக்ரஹங்களையோ திட்டுவதோ, குறை கூறுவதோ கூடாது.நாம் கொண்டு வந்த நமது சொந்த (கர்மா) செயல்களுக்கான பலன்களையே நாம் அனுபவித்துக் கழிக்க உதவுகின்றனரே அன்றி நம்மை வதைப்பது அவர்களின் நோக்கமல்ல.உதாரணமாக:நாம் பூர்வ ஜன்மத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதிப்படைந்த சமயம் உதவி செய்திருக்கிறோம் என்றால் நமது ப்ராரப்த கர்மத்தில் அந்த பதிவு இருந்தால் அதற்கான நன்மை நமக்கும் தேவையான நேரத்தில் யாரிடமேனும் இருந்து உதவி வரும்.இதுபோல் நன்மை தீமைகளை அடையச் செய்வதே கிரகங்கள் மற்றும் தெய்வங்களின் வேலை.எனவே அவர்களுக்கு கர்ம தாதா எனப்பெயர்.  

இங்கு தான் நாம் சரியாகப்புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் வருகிறது.
பிறப்பு எடுத்து வந்தது முன்வினையில் ஒரு பகுதியைக் கழிக்க ஆனால் நாம் இந்தப் பிறவியில் மேலும் வினைகளைக் கூட்டவே செய்கிறோம்.அப்படிக்  கூடும் வினைகளுக்கே ஆகாம்ய கர்மா  என்று பெயர்.

உதாரணமாக:-

சஞ்சித கர்மா = 1 லட்சம் என்று வைத்துக்கொள்வோம்.
பிராரப்த கர்மா =10 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம்.
எஞ்சிய கர்மா சஞ்சிதத்தில் = 90000 இருக்கும்.

மனமுதிர்ச்சி இன்றியும் , இறை வழிபாடு என்ற பெயரிலும்  எந்த துன்பத்தையும் அனுபவிக்க மாட்டேன் அப்படி அனுபவித்தால் நீ என்ன வலிமையான தெய்வம் என்று இஷ்ட தெய்வத்தையோ இறைவனையோ குறை கூறி நிந்தனை செய்யும் அளவுக்கு மனப் பக்குவம் இன்றிக்  குழந்தைகளாகவே இருக்கிறோம்.என்னதான் இறைவழிபாடு செய்தாலும் சில கர்மாக்களின் பலனை நாம் அனுபவித்துத் தான் ஆகவேண்டும். இறைவழிபாடு அந்தக் கர்மாக்களைத் தள்ளி வைக்கும் ஆனால் முழுமையாகக்  காப்பாற்றாது இன்றில்லாவிட்டால் இன்னொரு நாள் அவற்றை அனுபவித்தே தீர வேண்டும்.தவமும் தியானமும் மட்டுமே அவற்றைக்  கடக்க உதவும்.

நமக்குச் சிறு வயது முதலே நம் பெரியவர்கள் மற்றும் சமுதாயத்தால் அனேக விஷயங்கள் இன்ன விஷயம் இப்படித் தான்,இதெல்லாம் செய்யக்கூடாது   எனக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்படி, எதைச் செய்யவேண்டும்,சரியாக வாழ்வது எப்படி எனக் கற்பிக்கக்  கூடியவர்கள் நம் குடும்பத்திலோ, வெளியிலோ யார் உள்ளார்கள் என்று தேடித்தான் பிடிக்க வேண்டும்.


வந்ததே கர்மாவைக் கழிக்கத்தான் நமக்கு வரும் நன்மையோ,தீமையோ எல்லோரும் செய்வது காரியமே காரணம் நமது கர்மங்களே என்று உணர்ந்து வாழ்வைச்  சரியாகவும்,விழிப்புணர்வுடனும் வாழ்ந்து தானம்,தவம்,தியானம் செய்து கர்மவினைச் சக்கரத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல ஏக பரம்பொருளும்,மகான்களும் நமக்கு அருள்புரிந்து வழிநடத்தட்டும் .

அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா-தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com