Thursday, 23 October 2014

திருமணத்தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வரகலா மந்திரம்





களத்திர தோஷம் ,பித்ரு தோஷம், மற்றும் பல்வேறு தோஷங்களாலும்,       ஜாதகத்தில் கிரகநிலைகள் சரியின்மையாலும் ,எந்த காரணத்தினால் திருமணம் தடைபட்டு, தாமதமாகி அவதிப்படுபவர்கள் ஸ்வயம்வராபார்வதி யந்திரம் வைத்து மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நடைபெறும்.


உமாமகேஸ்வரி  பார்வதியாக அவதரித்த போது பராசக்தியை வேண்டி இந்த மந்திரத்தைச் ஜெபம் செய்து அதன் பலனாகச் சிவபெருமானை மணந்தார்கள்.

ஸ்ரீ ஸ்வயம்வர கலா மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் யோகினி  யோகினி |
யோகேஸ்வரி யோக பயங்கரி|
ஸகல ஸ்தாவர ஜங்கம முக ,ஹ்ருதயம்|
மம வசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா ||

வளர்பிறையில் திருமணம் ஆகவேண்டியவருக்குப் படுபக்ஷி இல்லாத    நல்ல நாளாகப் பார்த்து சங்கல்பம் செய்து  நைவேத்யங்கள் படைத்து  விளக்கேற்றி இந்த மந்திரத்தைக் கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து  108 தடவை ஜெபித்து வரவும்.குறைந்தது 90 நாட்கள் ஜெபம் செய்து வரவும்.விளக்கின் பாதத்தில் ஒரு மஞ்சள் தடவிய கயிறு வைத்து 90 நாட்கள் ஜெபம் கழிந்த பின்னர் அதை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும்.90 நாட்கள் ஜெபம் முடிந்ததும் ஹோமம் செய்து கொள்ள நிறைவான பலன் உண்டாகும்.ஹோமம் செய்ய முடியாதவர்கள் ஆண்களானால் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்றும் ,பெண்களானால் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றும் அருகில் உள்ள ஏதேனும் ஒரு சாந்தமான அம்மன் கோவிலுக்கு         விளக்குக்கு எண்ணையும் அந்த தினத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகமும் செய்து திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாக வேண்டிக் கொள்ள  விரைவில் திருமணம் ஆகும்.அர்ச்சகரிடம் ஒரு எழுமிச்சை , ஒரு மஞ்சள் ,குங்குமம் ஒரு பாக்கெட் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்து தரச்சொல்லி அதை வீட்டில் விளக்கு முன்னால் வைத்து விட்டு அந்தக் குங்குமத்தைத் தினமும் மேற்கண்ட மந்திரத்தை 3 தடவை ஜெபித்து நெற்றில் இட்டுக்கொள்ளவும்.

ஸ்ரீஸ்வயம்வரா பார்வதி ஹோமம் செய்யப்பட்ட ஹோமச்சம்பலைத் திருமணத்தடை உள்ளவர் குளிக்கும் நீரில் சிறிது போட்டுக் குளித்து வரத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.             




வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com

Wednesday, 15 October 2014

ஆன்மீகத்தில் உயர்வும் நோய் தீர்க்கும் சக்தியும் தரும் ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்


மும்மூர்த்தி ஸ்வரூபமான ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதூத சத்குருவாவார். யோக மற்றும் ஞான நிலையில் உயர்வு பெற விரும்புபவர்கள் ,ஆன்மீக,தியான பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் இவரை வழிபட்டு வர ஆன்மீகப்பாதையில் நிறைவான விரைவான முன்னேற்றம் காணலாம்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் குரு தத்தாத்ரேயாய நமஹ   



இந்த மந்திரத்தைக் வடக்கு நோக்கி அமர்ந்து பிரம்ம முஹூர்த்தம் அல்லது இரவு 11:30 முதல் 12:30 மணிக்குள் குறைந்தது 108 தடவை ஜெபித்து வர விரைவில் சித்தியாகும்.   

ரெய்கி,ப்ராணிக் ஹீலிங் போன்ற வைத்திய முறைகளின் மூலம் சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் வைத்தியத்தைத் தொழிலாகக் கொண்டவர்களும்  இந்த மந்திரத்தை ஜெபித்து வர அவர்களின் குணமளிக்கும் சக்தி அதிகரிக்கும் நோயாளிகளின் வியாதி நமக்குப் பரவாமல் காக்கும். 


வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com



Tuesday, 14 October 2014

மூலிகை சாப நிவர்த்தி மற்றும் பிராண பிரதிஷ்டை மந்திரங்கள்

                                                    
மூலிகைகள் தெய்வீக சக்தி கொண்டவை.அதுவும் நமது ஹிந்து தர்மத்தில் மூலிகை,செடி,மரம் இவை தெய்வ அம்சமாகவே பார்க்கப்படுகின்றன.

உதாரணம் :-

விநாயகர் - அருகம்புல்
சிவபெருமான்  - வில்வம்
அம்மன் - வேம்பு
விஷ்ணு - துளசி
ஹனுமான்  - வெற்றிலை,துளசி
துர்க்கை - வன்னிமரம்
அரசமரம் - விநாயகர்,திரிமூர்த்தி ஸ்வரூபம்

அந்த அந்த தெய்வங்களின் அருள் பெற குறிப்பிட்ட தெய்வத்திற்கு இஷ்டமான மரம்,செடியின் அருகில் தேவைக்கேற்ப திசை நோக்கி அமர்ந்து மந்திரம் ஜெபித்து அந்த செடியின் வேரடி மண்ணை பயன்படுத்திப் பல காரியங்களில் வெற்றி பெறலாம்.  (இந்த சக்தி வாய்த்த பிரயோகம் பற்றி எழுதினால் அதிகம் நீளும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்)  

பல மூலிகைகள் அஷ்ட கர்மம் எனப்படும் மாந்திரீக வேலைகளுக்கும் தவறாகப் பயன்படுவதால் சித்தர்கள் ,ரிஷிமார்கள்,தெய்வங்களின் சாபம் மூலிகைகளுக்கு உண்டு.  எனவே எந்த மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம் ஜெபித்த பின்னரே பறிக்கவேண்டும்.



மூலிகை பிடுங்கும் முன்னர் கன்னிப்பெண் நூற்ற நூல் கொண்டு அல்லது  மஞ்சள் தடவிய வெள்ளை நூல் கொண்டு காப்பு கட்டி எலுமிச்சம்பழம் படைத்துக்  குறைந்தது 3 நாட்கள் கழித்துப் பறிக்க சிறப்பு  என்று  மந்திர சாஸ்திரம் கூறுகிறது.சில குறிப்பிட்ட பிரயோகங்களுக்குக் குறிப்பிட்ட நாள்,நட்சத்திரம்,திதி , பட்சி  எல்லாம் பார்த்துச் செய்ய வேண்டும்.இங்கு நான் பொதுவான காரியங்களுக்குப் பயன்படுத்துவது பற்றி எழுதியுள்ளேன்.

குறிப்பிட்ட மூலிகையின் முன் கிழக்கு முகமாக நின்று கொண்டு கீழே உள்ள சாபநிவர்த்தி மந்திரத்தை 3 தடவை சொல்லிக் கொஞ்சம் விபூதியை அந்த மூலிகையின் மேல் போட்டு வணங்க வேண்டும்.
.
மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் 

ஆனைமுகனை அனுதினம் மறவேன் 
அகஸ்தியர் சாபம் நசி நசி 
பதினென் சித்தர் சாபம் நசி நசி 
தேவர்கள் சாபம் நசி நசி
மூவர்கள் சாபம் நசி நசி  
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி 
   

 பின்னர் கீழே உள்ள ப்ராணப்ரதிஷ்டை மந்திரம் 3 தடவை ஜபித்து    சிறிது அருகம்புல்லை மூலிகையின் மேல் போட்டு வணங்கி எடுக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே மூலிகை மண்ணில் உயிர்ப்புடன்  இருந்த போது உள்ள அதே சக்தியுடன் .விளங்கும்.சோதனை செய்து பாருங்கள். சாதாரணமாகப் பறிக்கும்  மூலிகையை   விட சாபநிவர்த்தி மற்றும் ப்ராண ப்ரதிஷ்டை மந்திரம் ஜெபித்து எடுக்கப்பட்ட மூலிகை நீண்ட நேரம் ,நாட்கள் வாடாமல் இருக்கும்.

ப்ராண பிரதிஷ்டை மந்திரம் :-

ஓம் மூலி மகாமூலி ஜீவமூலி உன்னுயிர் உன் உடலில் நிற்க சிவா 




வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
suryatamil1.blogspot.com





Friday, 26 September 2014

ஸ்ரீ சரஸ்வதி தேவியின் 12 திருநாமங்கள்


சரஸ்வதி தேவியை வழிபடுபவர்கள் சரஸ்வதி தேவியின் மூலமந்திரம், அஷ்டோத்ர நாமம் , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ,நாமாவளி ,ஸ்லோகங்கள் ஜெபித்து வழிபடலாம்.

சம்ஸ்கிருத வார்த்தைகளை உச்சரிக்க இயலாதவர்கள் குளித்து முடித்த பின்னர் தினமும் கிழக்கு நோக்கி அமர்ந்து அல்லது நின்று கீழே உள்ள சரஸ்வதியின் பன்னிரு திருநாமங்களை ஜெபித்து விபூதி,குங்குமம் அணிந்து வரக்  கல்வியில் முன்னேற்றம்,நல்ல வாக்குவன்மை உண்டாகும்.

மாணவர்கள் ,பணிபுரிபவர்கள்,கலைத்துறையில் உள்ளவர்கள் என யாவரும் இதைச் செய்து வருவதன் மூலம் தாங்கள் இருக்கும் நிலையில் இருந்து உயரவும்,இருக்கும் நிலையைத் தக்க வைத்துக்கொள்ளவும் உதவும்.


ஸ்ரீ சரஸ்வதி த்வாதச நாமங்கள் :-

பாரதி  

சரஸ்வதி 
சாரதா தேவி 
ஹம்சவாகினி  
ஜகதீக்யாதா
மகேஸ்வரி
கௌமாரி
பிரம்மச்சாரிணி
வித்யதாத்ரிணி
வரதாயினி
ருத்ரகண்டா
புவனேஸ்வரி


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.


M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com



Tuesday, 23 September 2014

ஸ்ரீ கருட மந்திரம் :- சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க






                                                           ஸ்ரீ கருட காயத்ரி 

                                                ஓம் தத்புருஷாய வித்மஹே|
                                                ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
                                                தன்னோ கருட ப்ரசோதயாத் ||


ஸ்ரீ கருட பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.


கேரளாவில் இவரை மட்டுமே உபாசனா தெய்வமாக வழிபடுபவர்கள் பலர். ஆனால் சுத்த சாத்வீகம் அவசியம்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இவரது மந்திரம் சித்திக்காது.எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.


ஸ்ரீ கருடனின் கதையை விளக்கினால் அதிகம் நீளும்.எனவே நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.


இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும்  சுவாதி  நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார்.


சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி  மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது.


ப்ரகலாதப்ரியன் பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான் .


ஸ்ரீ கருடபகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி.


ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப் போல மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.


கருட உபாசனை  பற்றியும் அவரது பிரபாவம் பற்றியும் மிகச்  சிலரே அறிவர்,கருட உபாசனை அஷ்டமா சித்துக்களைத் தரவல்லது என்றால் ஆச்சர்யம் அடைவீர்கள் ஆம் கருட உபாசானையின் பலன்களுள் அதுவும் ஒன்று.


ஸ்ரீ கருட பகவானுக்கு சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி,மரிக்கொழுந்து,
செண்பக மலர்களால் அர்ச்சிக்க மகிழ்ந்து வரங்களை அருள்வார்.


கருட மந்திரங்கள் பல உள்ளன.அதில் மிக எளியதும் மிக வலிமையானதும் காருடப் பிரம்ம வித்யா என்றழைக்கப்படும் கருட பஞ்சாக்ஷரி  மந்திரம் தான்.இம்மந்திரத்தை குருவிடம்  தீக்ஷை பெற்று விதிமுறைகளை நன்கு தெரிந்து கொண்டு ஜெபிக்கவும்.



கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-


க்ஷிப   ஓம்  ஸ்வாஹா  

KSHIPA OM SWAHA


ஒரு வளர்பிறைப் பஞ்சமி அன்று ஜபத்தை தொடங்கி 90 நாட்களில் அல்லது 90 நாட்களுக்குள் லக்ஷம் உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் விஷம் தீண்டியவர்களுக்கு நீரில் 108 உரு மந்திரம் ஜெபித்து அருந்தச் செய்தாலும், பிரம்பு அல்லது கத்தி கொண்டு மந்திரித்தாலும் விஷம் நீங்கும்.


கிரஹண காலத்தில் நீரில் நின்று ஜெபிக்க நிறைவான சித்தி கிடைக்கும்.நீரில் நின்று ஜெபிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே ஜெபிக்கலாம்.



பயந்த சுபாவம் கொண்டவர்கள் கருடனை வழிபட்டு  வர மனோதிடம் உண்டாகும்.


கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.



கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-


1.விசாலா -புன்னகை பூத்த பார்வை

2.கல்யாணி - மான் போன்ற பார்வை

3.தாரா - குருக்குப்பார்வை

4.மதுரா - அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை

5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை

6.அவந்தீ  -  பக்க வாட்டுப் பார்வை

7.விஜயா  -  கணவன் மனைவியிடையே நேசத்தைப்  பூக்கச் செய்யும் பார்வை

8.அயோத்யா - வெற்றியைத் தரும் பார்வை



இவ்வளவு சிறப்புகள் உள்ள கருட பகவானைப் பற்றி அறியாமல் இருப்பது சரிதானா?


முற்காலத்தில் சன்யாசிகள்,சாதுக்கள் கிடைத்ததை உண்டு எங்காவது தங்கி  தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்வார்கள் .அவர்கள் தங்கள் கையில் ஒரு பிரம்பு அல்லது கம்பு வைத்திருப்பார்கள் .கருட மந்திரத்தை லக்ஷம் உருவேற்றி அதன் சக்தியை அந்த கம்பில் இறக்கி வைத்திருப்பார்கள்.இரவில் உறங்கும் தாங்கள் படுக்கும் இடத்தில் அந்த கம்பினால் கருட மந்திரம் ஜெபித்தபடி ஒரு வட்டம் போட்டு அதனுள் உறங்கி விடுவார்கள்.அந்த வட்டத்திற்குள் எந்த விஷ ஜந்துக்களும் தீய சக்திகளும் வராது.யாரையேனும் விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் அந்த கம்பு கொண்டு மந்திரித்து விஷத்தை நீங்கச் செய்வார்கள்.


ஜன்ம ஜாதகத்தில் ராகு,கேது என்ற சர்ப்ப கிரகங்களின் அமைப்பு
கெடுபலன்களைச் செய்யும் அமைப்பு உள்ளவர்கள் கருட பகவானை வழிபட்டு வரக் கெடுபலன்கள் குறையும்.

கால சர்ப்ப தோஷ  பாதிப்புகள் குறைய கருட உபாசனை செய்து வரலாம்.


தோல் வியாதி கொடிய கர்ம வினையினால் வருவதே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.சில சித்தர் நூல்கள் தோல் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்தால் அந்த கர்மா நம்மைப் பாதிக்கும் என்று சொல்கின்றன.தோல் வியாதி உள்ளவர்கள் குளிக்கும் பொழுது கிழக்கு நோக்கி நின்று கொண்டு கருட மந்திரத்தை 108 ஜெபித்து அதன் சக்தி நீரில் இறங்கட்டும் என சங்கல்பம் செய்து குளித்து வர தோல் வியாதிகள் நீங்கும்.


பாம்பு கடித்து விஷம் தலைக்கேறினால் முகம் நிறம் மாறிவிடும் காப்பாற்றுவது கடினம்,விரைவில் மரணம் ஏற்படும் .அப்படி விஷத்தால் கடுமையாகப் பாதிப்பு அடைந்தவர்களைக் கூட எனது சிலம்ப ஆசான் கருட மந்திரப் பிரயோகத்தினால் விஷம் நீக்கி இயல்பு நிலை பெறச்செய்துள்ளார். இது நான் நேரில் கண்ட அனுபவம்.



அடிக்கடி பாம்பு,தேள் மற்றும் இதர விஷ ஜந்துக்களால் தொல்லை ஏற்பட்டால் அதற்கு சித்தர்கள் முறைப்படி மந்திரிக்க உடனே விஷம் இறங்கும்.



M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com





Monday, 22 September 2014

ஸ்ரீ சரஸ்வதி தேவி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரம்






குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ,எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும்  ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்கள் மற்றும் உபாசனை முறைகள் .

பகவான் ஸ்ரீ ஹயக்ரீவர் வேத ஸ்வரூபி .அவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச்  சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


ஸ்ரீ ஹயக்ரீவர்,ஸ்ரீ சரஸ்வதி தேவியின் மந்திரங்கள் ,ஜெபிக்கும் முறைகள்,வாக்குவன்மை கல்வியில் மேன்மை பெற உதவும் சிலப் பிரயோக முறைகளும் கற்றுத்தரவிருக்கிறோம். 


சரஸ்வதி பீஜ மந்த்ரம்       - ஐம் 
ஹயக்ரீவர் பீஜ மந்த்ரம் - ஹ்ரஸௌம் 

நினைவாற்றல் கூட படிப்பில் விருப்பம் ஏற்பட :-

செம்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் பன்னீர் கலந்து,சிறிய துண்டு பச்சைக்  கற்பூரம்  போட்டுப் பாத்திரத்தில் வெண்தாமரையை  இதழ் விரித்து வைத்து ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவரின் பீஜ மந்திரம் ஜெபிக்கப்பட்ட தீர்த்தத்தைப் பச்சை நிறப் போர்வை அல்லது துண்டில் தெளித்து அதில் அமர்ந்து படித்து வர நினைவாற்றல் அதிகரிப்பதோடு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். மந்தமான புத்தி படைத்த குழந்தைகள் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் பெறுவார்கள்.

புதன்கிழமை மற்றும் பௌர்ணமிகளில் இதைச் செய்து வர நிறைவான தொடர்ந்த பலனைப் பெறலாம்.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள்,கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்களும் இதைச் செய்து  வியக்கத்தக்க பலன்களைப்  பெறலாம்.இது அனுபவ உண்மை.

மேலும் ஒரு பிரயோகம் 

புதன்கிழமைகளில் கிழக்கு நோக்கி அமர்ந்து சரஸ்வதிக்கு பூஜை செய்யும் போதோ அல்லது பூஜை முடிந்த பிறகோ  ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் சுத்தமான தேன் விட்டு அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதிப் பின்னர் வாக்வாதினி மந்திரம் குறைந்தது  27 தடவையாவது ஜெபித்து அந்தத் தேனைச்  சாப்பிட மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்கள் என்று யாவருக்கும் நல்ல வாக்கு வன்மையும்,கல்வி,கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும்.

வாழ்க வையகம் ||   வாழ்கவளமுடன் ||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


    

Sunday, 21 September 2014

விளக்கேற்றும் முறைகள் , பலன்கள், சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

விளக்கைத் தரையில் வைக்காமல் தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்க வேண்டும். செவ்வாய் வெள்ளி தவிர்த்து மற்ற நாட்களில் விளக்கைச்  சுத்தம் செய்யலாம்.

பித்தளை,வெண்கலம்,வெள்ளி விளக்குகள் சிறந்தவை,எவர்சில்வர் உத்தமமல்ல.


விளக்குத் திரியும் பயன்களும்:- 

தாமரைத் தண்டில் விளக்கேற்ற முன்வினை ,கர்மவினைப் பயன்கள் தீரும்.

வாழைத்தண்டில் விளக்கேற்ற குழந்தை பாக்கியம் கிட்டும்.

வெள்ளை துணியைப் பன்னீரில் நனைத்துக் காயவைத்து அந்த துணியால் விளக்கேற்ற சகல நன்மைகளும் உண்டாகும்.

வெள்ளெருக்கன் பட்டை திரியை கொண்டு   விளக்கேற்ற பேய்,பிசாசு ,தீய சக்திகளின் தொல்லைகள் நீங்கும்.

நீல நிறத்துணி கொண்டு விளக்கேற்ற பேய்,பிசாசு ,தீய சக்திகளின் தொல்லைகள் நீங்கும்.

மஞ்சள் நிறத்துணி கொண்டு விளக்கேற்ற அம்மன் அருள் கிட்டும்.

சிவப்பு நிறத்துணி கொண்டு விளக்கேற்ற திருமணத்தடை ,மலட்டுத்தன்மை
நீங்கும்.

பஞ்சு திரியினால் விளக்கேற்ற குடும்பம் சிறக்கும்.

விளக்கின் முகங்களும் பலன்களும்  :-

ஒரு முகம்  - மத்திமம்

இரு முகம்  - குடும்ப ஒற்றுமை

மூன்று முகம் - புத்திர சுகம்

நான்கு முகம் - வீடு,வாகனம்,கால்நடைச் செல்வங்கள் பெருகும்.

ஐந்து முகம்  - சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.


விளக்கேற்றும் திசைகளும் பலன்களும் :-

கிழக்கு - துன்ப நிவாரணம் ,குடும்ப விருத்தி,செல்வ நிலையில் உயர்வும் உண்டாகும்.

மேற்கு முகமாய் விளக்கேற்ற எல்லாரோடும் இணக்கமான  உறவு உண்டாகும்.வசீகர சக்தியும் தேஜசும் உண்டாகும்.கடன் தீரும்.

வடக்கு  முகமாய் விளக்கேற்ற திருமணத்தடை நீங்கும்.

தெற்கு முகமாய் விளக்கேற்றக் கூடாது.

1.மந்திரம் 

தேஹி சௌபாக்யம் ஆரோக்கியம்  தேஹி மே  பரமம் சுகம் |

ரூபம் தேஹி  ஜெயம்  தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி ||

இதை சொல்லி விளக்கேற்றி குறைந்தது 27 தடவை ஜெபித்து வர வளமும் , நலமும், காரிய வெற்றியும் கிட்டும்.


2.மந்திரம் 

மந்திர சாஸ்திரத்தில் நிறைசெல்வம் பெற ஹோமம்  செய்யும் போது ஜெபிக்கப்படும் சக்தி வாய்ந்த  ஸ்துதிகளில் சிறந்த ஒன்று  ஸ்ரீ லக்ஷ்மி ஹ்ருதயம்.அதில் உள்ள சில சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் நிறைந்த செல்வச்செழிப்பு அருளும்.

சர்வ மங்கள சம்பூர்ணா சர்வைஸ்வர்ய சமந்விதா|
ஆத்யாதி ஸ்ரீ மகாலக்ஷ்மீஹி த்வத்கலா மயி திஷ்ட்டது ||

ப்ரசீத மே  மகாலக்ஷ்மி சுப்ரசீத மஹா சிவே |
அசலா பவ சுப்ரீதா சுஸ்திரா பவ மத்க்ருஹே ||

இதைத் தினமும் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஜெபித்து வர  செல்வ நிலையில் உயர்வு கிட்டும்.



வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

  




Saturday, 20 September 2014

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் : 7


செல்வம் ஈர்க்க ,பணவரவு நிலைக்க வாஸ்துக் குறிப்புகள்


1.வீட்டின் முன்னர் ஒரு துளசிச் செடி நட்டு வளர்க்கவும்.அல்லது ஒரு பூந்தொட்டியில் வைத்து வீட்டு முன் வளர்க்கவும். தினமும் கிழக்கு நோக்கி நின்று செடிக்குத் தண்ணீர் விடவும். 

2.வீட்டில் எப்பொழுதும் துடைப்பம்,டஸ்டர்,பிரஷ்,குப்பைகள் போட்டு வைக்கும் பக்கெட்டுகள் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்யும் பொருட்கள் அனைத்தும் வீட்டில் நுழைபவர்கள் பார்வையில் எளிதில் படும்படி வைக்கக் கூடாது.

3.பணம் வைக்கும் பீரோ.லாக்கர்,கபோர்டில் பெங்சுயி அதிர்ஷ்ட(வளம்பெருக்கும்) சிம்பலை ஒட்டி வைக்கவும். 



                வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் : 6

அலுவலகம் அமைப்பு :-

அலுவலகத்தின் அமைப்பு நல்ல முறையிலும் அழகாகவும் இருந்தாலும் கூட நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பு வகிக்கும் முதலாளி,மேனேஜிங் டைரக்டர், மேனேஜர் போன்றோர் அமரும் விதம் சரியாக இல்லையென்றால் நிறுவனம் தொடர்ந்த சரிவையே சந்திக்கும்.

இதைச் சரி செய்ய பெங்சுயி கூறும் வழிமுறைகள் இதோ:- இவை நம்நாட்டு வாஸ்து குறிப்பு போலவே உள்ளது.

பிரதான வாசலுக்கு நேர் எதிரே அலுவலக அறை ( OFFICE ROOM ) இருக்கக் கூடாது.இப்படியான அமைப்பு அதில் அமரும் நபரையும் அவரது நிர்வாகத் தன்மையையும் பாதிக்கும்.எனவே ,பிரதான வாசலில் இருந்து தூரத்தில் அல்லது சற்றுத் தள்ளி ஏதேனும் ஒரு மூலையில் அமைக்கப்படவேண்டும்.

மேலும்,அமர்பவரின் பின்னால் ஜன்னல் (WINDOW) இருக்கக்கூடாது.அவ்வாறு இருந்தால் அமர்பவரின் நிலை அடிக்கடி மாறுதலைச் சந்திக்கும்படியும், நிலையற்றதாகவும் இருக்கும்.பின்னால் சுவர் இருந்தால் நல்லது.

உள்ளே வருபவர்களைத் தான் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும் வண்ணமும் அலுவலக அமைப்பு இருக்கவேண்டும்.  


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com




Wednesday, 17 September 2014

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 5


சமையல் அறை அமைப்பு:-

நமது சமையல் அறையின் அமைப்பு நிதிநிலையின் தன்மையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

பிரதான வாசலுக்கு நேர் எதிரே சமையல் அறை அமைக்கக்கூடாது. ஏனென்றால் பிரபஞ்ச சக்தி பிரதான நுழைவு வாயில் வழியாகவே வீட்டினுள் வருகிறது.எனவே மேற்கண்டபடி சமையல் அறை அமைந்தால் பிரபஞ்ச சக்தி நெருப்பில் கலந்து கரைந்து விடும்.செல்வம் சந்ததி என எல்லா நிலைகளிலும் விருத்திக் குறைவு ஏற்படும்.


வீட்டின் மையப் பகுதியில் சமையல் அறை அமைந்தால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்யத்தைக் கெடுக்கும்.

அடித்தளத்தில் (BASEMENT) அமைந்தால் பெண்களின் உடல்நிலையைப் பாதிக்கும். 


தவிர்க்கமுடியாத காரணத்தினால் அல்லது இடமின்மையால் மேற்கண்டவாறு சமையல் அறை அமைந்திருந்தால் சமையல் அறையில்  கதவு ஜன்னல்களில் திரைச்சீலையும், 5 குழல்களால் ஆன காற்று மணியும் WIND CHIME தொங்கவிடவும்  (படம் இணைக்கப்பட்டுள்ளது) அமைக்கவும்.இது எதிர்மறையான பாதிப்புகளைக் குறைக்கும்.

அடுப்பு - சமையல் அறையின் பிரதான வாயிலை நோக்கியபடி எளிதில் பார்வையில் படும் வண்ணமும் வைக்கப்படவேண்டும்.

சிங் மற்றும் கேஸ் சிலிண்டர் ஒரே திசையில் அருகருகே வைக்கப்படக் கூடாது.சிங் சமையல் அறையின் வடக்கு பக்கம் வைக்கப்படவேண்டும்.அப்படி இயலாத பட்சத்தில் தெற்குத் திசை தவிர மற்ற திசையில் அமைக்கலாம். 


காஸ் சிலிண்டர் - அக்னி தத்துவத்தின் திசையான தெற்குத் திசையில் வைக்கப்படவேண்டும்.

டைனிங் டேபிள்  - சமையல் அறையின் தெற்குப்பக்கம் இருக்கவேண்டும்.
கண்ணாடி மற்றும் உலோகத்தினால் ஆனதைவிட மரத்தினால் செய்யப்பட்ட டைனிங் டேபிள் சிறந்தது.அது வட்டம் ,சதுரம்,செவ்வகம் என ,இருக்கலாம்.
உத்தரத்தின் கீழ் அமைக்கக்கூடாது.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


5 குழல்களால் ஆன காற்று மணியும் WIND CHIME AND MODEL KITCHEN 





வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 4

டாய்லெட் அமைப்பு :-

பெங்சுயி  வாஸ்துவில் பணம் ஜலத் தத்துவத்தோடு தொடர்புடையது.எனவே கடை,வீடு,தொழிற்சாலைகளில் தேவையின்றி நீர் செலவாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.குழாய்கள்,தொட்டிகளில் லீக்கேஜ் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும். 


குளியல் அறை மற்றும் டாய்லெட் இவற்றில் நீர் தொடர்ந்தும் அதிகமாகவும் வெளியேறுவதால் டாய்லெட்டை பீரோ,பணப்பெட்டி ,அடுப்பறை,ஸ்டோர் ரூம் இவற்றின் அருகில் அமைக்கக்கூடாது .  


டாய்லெட் வீட்டின் பிரதான நுழைவாயிலின்  அருகிலும் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைத்தால் அடிக்கடி உடல் நலக்குறைவு,தீரா நோய்கள் ,கையிருப்புக்  குறைவு ,பணப்புழக்கம் இன்மை ஏற்படும்.

மாடிப்படியின் கீழும் அமைக்கக்கூடாது .அவ்வாறு அமைத்தால் அடிக்கடி வயிற்றில் நோய்,வலி  உண்டாகும்.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

suryatamil1.blogspot.com






வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 3




காசாளர் அறை (CASH COUNTER) அமைப்பு :-

கடை ,தொழிற்சாலைகளின் மைய நோக்கம் லாபமும் ,பணத்தைப் பெருக்குவதுமே. அதற்கு முக்கியமாக காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டரின் அமைப்பு சரியாக இருக்கவேண்டும். 

குறிப்பு :

1.உள்ளே வரும் வாடிக்கையாளர்களைக் காசாளர் எளிதில் காணும் வண்ணம் 
கேஷ் கவுன்டர் இருக்கவேண்டும்.

2.கடையின் மையப்பகுதியில் காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டர் இருந்தால் விற்பனை அதிகரிக்கும்.

3.குறிப்பாக காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டரை பிற கவுன்டர்களில் இருந்து தனித்து இருக்கும் படி சிறிது தள்ளி அமைப்பது நல்லது.

4.காசாளரின் பின்புறம் ஒரு கண்ணாடி வைத்தால் நிரந்தர பணப்புழக்கம், விற்பனை அதிகரிப்பு ஏற்படும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com



Tuesday, 16 September 2014

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் 2


தென்மேற்குத் திசை  - மண் தத்துவத்தைக் குறிக்கும்.இந்திய வாஸ்து சாஸ்திரத்தின் படி இத்திசை திருமண காரியம் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளை குறிக்கும்.

இத்திசையில் பசுமையான செடி,மரங்கள் வளர்க்கக்கூடாது.அவ்வாறு வளர்ந்தால் திருமணத்தடை கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும்.

இத்திசையில் அழகார மின்விளக்குகள் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும். குறிப்பாகத் தகுந்த வாழ்க்கை துணை அமைய உதவும். குறைந்தது மாலையில்  2 அல்லது 3 மணிநேரமாவது எறிந்தால் நல்ல பலன்களைத் தரும்.பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அழங்கார மின்விளக்குகள் வைத்தல் நலம்.தூசு படியாமால் அவ்வப்போது துடைத்து வைக்க வேண்டும்.



தெற்குத்திசை  - நீர்தத்துவத்தை குறிக்கிறது.இத்திசையில் மண்,களிமண், ஸ்படிகம்,கண்ணாடியினால் ஆன பொருட்களை வைக்கக்கூடாது.அவ்வாறு வைத்தால் அது தொழில்,வேலையில் பிரச்சனைகளை உண்டாக்கும்.

பெங்சுயி சாஸ்திரப்படி பொருளாதாரம் என்ற பணம் நீர் தத்துவத்தோடு தொடர்புடையது.தேவையின்றி நீரை வீணாக்குவது,நீர்க்குழாய்களில் நீர் வீணாய்க் கசிவது  பண விரயத்தை ,பண வரவில் தடையை உண்டாக்கும்.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் 1

பஞ்ச பூத இயற்கை சக்திகளை சமன்படுத்தல்,பரவ விடுதல்,ஈர்த்தல் இவைகளின்  மூலம் நமது வீடு,கடை  மற்றும் வசிப்பிடத்தை ஆரோக்யமானதாகவும் வளம் தருவதாகவும் வைத்துக்கொள்ள உதவும் முறைகளைக் கூறுவது வாஸ்து மற்றும் சீன பெங்சுயி சாஸ்திரம் .

வாஸ்து மற்றும் சீன பெங்சுயி சாஸ்திரம் பற்றிய பல  ரகசிய விபரங்களை இன்று முதல் பார்க்கலாம்.

                                          வாஸ்து பகவன் காயத்ரி 

ஓம்  அனுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தன்னோ வாஸ்து புருஷ ப்ரசோதயாத்


வீடு, கடை ,தொழிற்சாலை பீடைகளும் திருஷ்டிகள் ஆபத்துக்கள் நீங்க 

1.பயன்படுத்தாத, உடைந்த, செயல்படாத பொருள்களை அகற்றவும்.


2.ஒரு எச்சில் செய்யாத பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் கருந்துளசி அல்லது செந்துளசி இலைகளைப் பறித்து  1:30 மணிநேரம் கழித்து அந்த நீரை வீடு முழுவதும் வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து வர எல்லாப் பீடைகளும் நீங்கி நலமும் வளமும் உண்டாகும்.கடை,தொழிற்சாலை இவைகளானால் கடை,அல்லது தொழிற்சாலையில் தெளித்து கடை ,தொழிற்சாலையின் வாசல் முகப்பு பகுதியிலும் முதலாளி,மேனேஜர் அறைக,காசாளர் அறை மற்றும் முக்கியமான பகுதிகளிலும் தெளிக்கவும்.

இதை மாதம் ஒரு முறை  செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


Monday, 15 September 2014

கர்ப்பிணிகளின் பாதுகாப்பிற்கு கர்ப்ப ரக்ஷா மந்திரம் :-

அடிக்கடி கர்ப்பம் கலைந்து விடுதல்,குறைப்பிரசவம் ,ஊனம் மற்றும் ஆயுள் குறைவான குழந்தைப் பிறப்பு இவை நீங்கக் கீழே சொல்லியுள்ள மந்திரப்பிரயோகத்தைச் செய்து வர நல்ல பலன் உண்டாகும்.

கர்ப்ப ரக்ஷா மந்திரம் :-

ஓம் பரப்ரம்ம பரமாத்மனே  |
மம கர்ப்ப தீர்க்க ஜீவி சுதே குரு குரு ஸ்வாஹா||


இதைக் கர்ப்பமான பின்னர் வரும் முதல் மாத பௌர்ணமி அன்று ஆரம்பிக்கவும்.ஜபம் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு புதுப் பாத்திரம் அல்லது கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது  மஞ்சள் பொடி போட்டுக் கலந்து அதில் ஒரு பருத்தி நூலை நனைத்து (இடுப்பில் கட்டும் அளவு)  வைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த மந்திரத்தை மேற்கு முகமாக அமர்ந்து 1008 தடவை ஜெபித்து அந்த நூல் கயிற்றைக் கர்ப்ப ஸ்தீரியின் இடுப்பில் கட்டிக்கொள்ளச் செய்யவும்.கரு கலையாமல் பாதுகாக்கப்படும்.
மேலும் இந்த மந்திரத்தைத்  தினமும் 3 தடவை சொல்லி  வயிற்றைக்   கடிகாரச்சுற்றில் 3 தடவை சுற்றித் தடவிக் கொள்ளவும்.


நைவேத்தியம் -

வெற்றிலை, பாக்கு, பழங்கள், பால்,பாயசம்.


இதை செய்ய முடியாதவர்கள் தொடர்பு கொண்டால் கர்ப்பப் பாதுகாப்பு ரக்ஷை செய்து தரப்படும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com




Friday, 12 September 2014

ஸ்ரீ ஹனுமத் சத்ரு ஜெய மந்திரம்


ஓம் நமோ பகவதே |
மஹாபலபராக்ரமாய |
மஹா விபத்தி நிவாரனாய |
பக்த ஜன மனோபீஷ்ட கல்பனா கல்பத்ருமாய |
துஷ்ட ஜன மனோரத ஸ்தம்பனாய| 
பிரபஞ்சன ப்ராணப்ரியாய ஸ்ரீம்||


ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று  ஒரு செம்புப் பாத்திரத்தில் நீர் வைத்துக் கொண்டு கொய்யாப்பழம் ,வெற்றிலை பாக்கு ,பால்,பழங்கள் படைத்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபிக்கவும். துளசிச் செடியின் வடக்கு பக்கம் வேரும் 3 வெற்றிலையும் சேர்த்து சிகப்பு நூலால் கட்டி செம்பில் உள்ள நீரால் கழுவி  ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீட்டு வாசலில் தொங்க விடவும்.மீதி நீரை வீடு முழுவதும் வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து விடவும்.

இந்த மந்திரப்பிரயோகத்தைச் செய்தால் நமது மன விருப்பங்கள் நிறைவேறும்.எதிரிகளால் ஏற்படும் தீவினைகள் பலிக்காமல் நீங்கும்.பேய் ,பிசாசு மற்றும் தீய சக்திகள் வீட்டை அண்டாது.

இந்த மந்திரத்தை ஒரு செம்பு யந்திரத்தில் எழுதி பன்னீர்,பால்,பச்சைக் கற்பூரம் கரைத்த தீர்த்தம்  மற்றும் பஞ்சகவ்யத்தால் அதைச் சுத்தி செய்து 1008  உரு மந்திரம் ஜெபித்துப் ப்ராண ப்ரதிஷ்டை செய்து  புஷ்ப அர்ச்சனை செய்து தாயத்தில் அடைத்து அதை வாகனத்தில் தொங்க விட விபத்துகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
உடலில் அணிந்து கொண்டால் எதிரிகளின் தீவினைகளாலோ தீய சக்திகளாலோ ஆபத்து நேராமல் காக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com






Thursday, 11 September 2014

தீரா நோய்கள் தீர



ஓம் ஸ்ரீ ஆஞ்சனேயாய நமஹ|
ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ |
ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயாய  நமஹ|
ஓம் ஸ்ரீ மகாபலிச் சக்ரவர்த்தியே நமஹ|
ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ|
ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமாய நமஹ| 
ஓம் ஸ்ரீ விபீஷணாய நமஹ| 


வலது கையில் ஒரு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஒன்றிரண்டு அருகம்புல்  போட்டு வடக்கு நோக்கி அமர்ந்தோ நின்றோ சிரஞ்ஜீவிகளான இந்த எழுவரின் நாமங்களையும் 21 தடவை  ஜெபித்து பின்னர் அந்த நீரை அருந்தி வர தீரா நோய்கள் தீருவதுடன் அகால மரணம் ஏற்படாமல் காக்கும்.

முடியாதவர்கள் எழுந்த உடனும் உறங்கும் முன்னரும் 1 தடவையாவது ஜெபித்து வர  மேற்கண்ட பலனில் பாதி கிட்டும்.

ஏதேனும் மருந்துகள் பயன்படுத்தும் போதும் குறைந்தது 1 முறையேனும் இந்த மந்திரங்களை ஜெபித்த பின் உண்டால்,பயன்படுத்தினால் விரைவில் நோய் குணமாகும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com



குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு

அடிக்கடி காரணமின்றி அழுதல் மற்றும் நோயால் கஷ்டப்படும் குழந்தைகள் ஆரோக்கியம் பெற இந்த மந்திர பிரயோகம் உதவும்.

ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் விபூதி பரப்பி  மேல்நோக்கிய முக்கோணம் வரைந்து அதன் நடுவில்  றீங் என்றெழுதி முக்கோணத்தின் முனைகளில் சூலம் வரைந்து    ''ஓம் துர்கே துர்கே ரக்ஷிணி ஸ்வாஹா  ''   என்று 108 தடவை ஜெபித்து பின்னர் அந்த விபூதியை பதனம் பண்ணி தேவையான நேரங்களில் குழந்தைகளுக்கு பூசிச் சிறிது உள்ளுக்குக் கொடுக்க
தொடர் அழுகை, அடிக்கடி நோய்வாய்ப்படுதல்  நீங்கும்.

                   





வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Saturday, 30 August 2014

சகல கார்ய சித்திக்கு அதிர்ஷ்ட நேரம்,அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்





மனிதர்கள் யாவருமே தொடர்ந்த வெற்றியையும் சந்தோஷத்தையும் விரும்புபவர்களே. ஆனாலும்,நாம் விரும்பும் வகையில் வாழ்க்கை இருப்பதில்லை .
கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றி வெற்றிகரமான வளமான வாழ்வு வாழலாம்.


1.பஞ்சபட்சி சாஸ்திரம் -அதிர்ஷ்ட நேரங்கள்,நாட்கள்,நிறங்கள்,திசை.
                                               தவிர்க்க வேண்டிய நேரங்கள்,நாட்கள்,நிறங்கள்,திசை.
                                               ஜெபிக்க வேண்டிய  பஞ்சாட்சர மந்திரம்.

2. திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு 

3. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்



1.பஞ்சபட்சி சாஸ்திரம்

ஒரு காரியத்தை நல்ல நாள், நட்சத்திரம், திதி ,யோகம் ,கரணம்  எல்லாம் பார்த்துச் செய்தாலும் அது சரிவர நடைபெறாமலோ  வெற்றி அடையாமலோ போகலாம்.ஆனால் ,பஞ்சபட்சி சாஸ்திரப்படி நமக்கு உரிய அதிர்ஷ்ட நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தோல்வியடையாது.மேலும் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களில் நமக்கு அதிர்ஷ்ட நேரம்,அதிர்ஷ்ட நிறம்,அதிர்ஷ்ட திசை நோக்கி மந்திர ஜபம்,தொழில் சார்ந்த பேச்சுவார்த்தை,சுபகார்யம் சத்ருஜெயம் சார்ந்த காரியங்கள் செய்ய யாவும் பின்னமின்றி வெற்றி பெறும்.
மேலும்  தவிர்க்கவேண்டிய நிறங்கள் ,நேரங்கள்,படுபட்சி நாட்கள் இவற்றை அறிந்து சுப காரியங்கள் செய்வதை விலக்க வேண்டும்.
என் நண்பரின் சகோதரிக்கு நல்ல நாள்,நட்சத்திரம்,நேரம் பஞ்சபக்ஷி சாஸ்திரப்படி படுபட்சி இல்லாத நாளாகப்  பார்த்து திருமணம் நடந்தும் மணப்பெண் எதிரிப் பட்சிக்கு  (தவிர்க்கவேண்டிய) உண்டான நிறத்தில் பட்டுச்சேலை கட்டி இருந்ததால் திருமண வாழ்க்கை முறிந்தது.

பணம்,ஆள் பழக்கம் இருந்தும் ஒரு கார்,வீடு வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் முடியவில்லை ,நீண்ட நாட்களாக கோர்ட் கேஸ் இருந்து முடிவாகாமல் உள்ளது, தொழில் சார்ந்தும் தீய சக்திகளைக் கொண்டும்  எதிரிகளால் பல தொல்லைகள் இது போன்ற பல முடியாத காரியங்களை  பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நமது அதிர்ஷ்ட நாள்,நேரத்தில் செயல்பட்டுத் தீர்வு காணலாம். 


2. திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு 

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும்  அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு  எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன் மனைவி அமையாது  கஷ்டம் ஏற்படும்.தொழில் சார்ந்த பார்ட்னர்கள் சரிவர அமையாமல் ஏமாற்றப்படலாம். இப்படி,எந்த வீடு நம் ஜாதகத்தில் சூன்யம் அடைகிறதோ அதன் பலன் நமக்குப்  பூரணமாகக்  கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த திதியில் சூன்யம் அடையும் கிரகங்களால் உண்டாகும் தீமைகளில்  இருந்து திதி சூன்ய பரிகாரம் என்று சொல்லப்படும் அந்தந்தத் திதிகளுக்குண்டான  திதி நித்யா தேவதைகளை வழிபட்டு வருவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பாவத்திற்கான கிரகங்கள் செயல்படத் தொடங்கி நலம் தரும்.


3. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்

பல பிறவிகளில் நாம் செய்த புண்ணிய பாவங்களின் தொகுப்பின் பெயர் சஞ்சிதகர்மா. இந்தப் பிறவியில் அனுபவிக்கும் கர்மாக்களுக்குப் பெயர் ப்ராரப்த கர்மா. இதில் நாம் இந்த ஜன்மத்தில் நமக்கு வரவேண்டிய நன்மைகள் நிறைவாகவும் விரைவாகவும் வரவும், தீமைகள்  மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தாமல்  இருக்கவும் எந்த  தெய்வத்தை வழிபடலாம்.நடப்பு தசா புத்தியில் மற்றும் தற்சமயம் உள்ள பிரச்சனைகள் தீரவும் எந்த தெய்வங்களை வழிபடலாம் அந்த தெய்வங்களின் உபாசனை,தீக்ஷை ,பூஜை,வழிபாட்டு முறைகள் பற்றி விளக்கமாக அறிய .குழந்தைகள் கல்வியில் உயர்வடைய ,பல நற்காரியங்களுக்குத் தெய்வங்களின் யந்திரங்கள், ரக்ஷைகளின் மூலம்  பலன் பெறும் முறைகள்.

உங்கள்  பிறந்தநாள் ,நட்சத்திரம்,நேரம் அல்லது ஜாதகம் அனுப்பி ஜாதகத்தின் மூலம் நமக்கான அம்சங்களை ஆராய்ந்து மேற்கண்ட ஆன்மீக வழிமுறைகளின் மூலம் உங்கள் அதிர்ஷ்ட நேரங்களின்  அட்டவணை ,படுபட்சி நாட்கள் ,பலமான நாட்கள்,திதி சூன்யப் பரிகார தேவதை,அதிர்ஷ்ட தெய்வங்களின் வழிபாட்டுமுறைகள் அறிந்து நலமும்,வளமும் பெறுவீர்களாக.


விவரங்களை கீழ்க்கண்ட மெயில் ஐடிக்கு மெயில் செய்யவும்.
ms.spiritual1@gmail.com

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல்  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

9442193072
9788493072    
     
                  வாழ்க வையகம் ||                         வாழ்க வளமுடன் ||



M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072  / 9788493072         

ms.spiritual1@gmail.com



Saturday, 16 August 2014

ஸ்ரீ ஹனுமன் வழிபாடு


                              ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ||

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||


ஸ்ரீ ஹனுமன் சிவ அம்சம் சிவனது வீரியத்தில் இருந்து தோன்றியவர் எனவே இவரது சஹஸ்ரநாமத்தில் '' ருத்ர வீர்ய ஸமுத்பவாய '' என்றொரு நாமம் உண்டு.

ஸ்ரீ ஹனுமான் சிவபெருமானின் 11 அவதாரங்களில் ஒருவர்(ஏகாதச ருத்ரர்களில்) .
  
ஸ்ரீ ஹனுமானை மகான்கள் ராமாயணம் என்ற பெரிய மாலையில் உள்ள ரத்தினம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஸ்ரீ ஹனுமான் பிரம்மா சரஸ்வதி முதலான அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும்,பல சிறப்பான சக்திகளும்,தன்மைகளும் கொண்டவர்.
இராமாயண காலத்தில் ராமாவதார நோக்கம் பூர்த்தி அடைந்த பின் ராமர் ,சீதா முதலானோர் விண்ணுலகம் செல்லும் போது ஸ்ரீ ஹனுமன் ஸ்ரீ ராமரிடம் நான் உங்கள் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டு இந்த மண்ணிலேயே இருந்து விடுகிறேன் எனக் கூறி என்றும் சிரஞ்சீவியாய் இருந்து வருபவர்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி,ஸ்ரீ மஹா வாராஹியைப்போல் ஸ்ரீ ஹனுமனும் விரைந்து அருள் செய்பவர்.

மாந்திரீகத்தில் இவரைக் கட்ட முடியாது.இவரைக்கொண்டு நியாயமான மற்றும் நல்ல காரியங்களை மட்டுமே செய்ய முடியும்.

இவருக்குத் தன் பலம் தெரியாததால் இவரைப் போற்றித் துதிப்பவர்களுக்கு மற்ற தெய்வங்களை விடச் சிறப்பான அருளை வழங்குவார்.இதன் காரணமாகவே "ஸ்தோத்ரப்பிரியர்" என்று அழைக்கப்படுகிறார்.

எல்லாத் தெய்வங்களைப்போல இவருக்கும் 108,1008 நாமங்கள் உள்ளன. இருந்தாலும் இவரது நாமங்களில் கீழ்க்காணும் 12 நாமங்கள் பிரசித்தி வாய்ந்தவை அவற்றைத் தினமும் அதிகாலையில் ஜெபித்து வருவது அவர் அருளை நிறைவாய்ப் பெற்றுத்தரும்.

1.ஹனுமத் த்வாதச நாமங்கள் :-

ஹனுமான்
ஆஞ்சநேயன்
வாயுபுத்திரன்
மகாபலிஷ்டன்
ராமேஷ்டன்
அர்ஜுனசகன்
பிங்காக்ஷன்
அமிர்தவிக்ரமன்
சமுத்திரத்தைத் தாண்டியவன்
சீதாசோகவிநாசகன்
லக்ஷ்மணப்ராண  ரக்ஷகன்
ராவணனின் கொழுப்பைப் பரிகாசம் செய்தவன்



தினமும் குளித்து முடித்து மேற்கண்ட இவரது பன்னிரு திருநாமங்களை ஜெபித்து  வர இவர் அருளைப் பூரணமாகப்  பெறலாம்.மேலும்,இந்த நாமங்களை யாத்திரையின் போதும்,ஆபத்தான தருணங்களிலும்,பயம் கொண்ட நேரத்திலும் ஜெபித்து வேண்டக் காவலாய் விளங்குவதோடு காரிய வெற்றியும் தரும்.


2. ஸ்ரீ ஹனுமான் ராம பக்தருள் சிறந்தவர். மேலும் இவர் தன்னை வணங்குபவர்களை விட ஸ்ரீ ராமரை வணங்கி அவர் நாமத்தைப் பாடுபவர்களுக்கு சிறப்பான பலன்களை நல்குவார்.எனவே .அதிகாலையில் குளித்த பின்னர்  "ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்" என்று குறைந்தது 27 தடவையும், அதிகமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபித்து வர இவர் அருளைப் பூரணமாகப் பெறலாம்.


3.ஆபத்தான தருணங்களில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஜெபித்து அவரை வேண்ட ஆபத்துகள் விலகும்.

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 

ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||




4.பாதுகாப்பான பயணத்திற்கு :- 

தொலைதூரப் பயணம் செல்கையில் வழியில் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும்,தனிமையில் பயணம் செய்யும் போது பயம்,ஆபத்து நீங்கவும்,அடிக்கடி வாகன விபத்துகளைச் சந்திப்பவர்களும் இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப  ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது .

அபராஜித நமஸ்தேஸ்து நமஸ்தே ராமபூஜித |
பிரஸ்தானந்த கரிஷ்யாமி சித்திர்ப்பவது மே  ஸதா|| 






வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com