Thursday, 23 April 2015

பூமி ,வீடு, வாகனம்,சுகவாழ்வு பெறச் சொல்லவேண்டிய ரிக்வேத மந்திரம்



இந்த ரிக் வேத சூக்த மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வர அதி விரைவில் சொந்த வீடு,பூமி,வாகனம் இவற்றோடு கூடிய வளமான வாழ்வு அமையும்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இம்மந்திரம் பலன் தராது. கிழக்கு முகமாக அமர்ந்து முன்னால் விளக்கேற்றி வைத்துக்கொண்டு ஜெபிக்கவும்.

மந்திரம் :-

க்ஷேத்ரஸ்ய பதினாவயம் ஹிதேனேவ ஜயாமஸி |
காமச்வம் போஷயித்வா ஸனோ ம்ருளா தீத்ருசே ||



இது ரிக்வேதத்தில் உள்ள சூக்த மந்திரத்தின் ஒரு பகுதி.
ரிஷி :- வாமதேவர்.
சந்தஸ்:- அனுஷ்டுப்.


                                வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திர சுலோகம்



ஸ்ரீ காயத்ரி மந்திர சுலோகம் :-

சாவித்திரி வேதமாதாச காயத்ரி ச சரஸ்வதி |
சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ  சதாசர்வ அர்த்த சாதினீ |
சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச ||



இம்மந்திர சுலோகம் ஸ்ரீ கருட புராணத்தில் உள்ளது.இதை ஜெபித்து வர பாபங்கள் விலகும்.குளிக்கும் முன் குளிக்கப் பயன்படுத்தும் நீரில் வலது கையின் நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து  பின் குளித்து வர பாவ வினைகளால் வரும் துன்பங்கள் குறைந்து நிம்மதி உண்டாகும்.இறை வழிபாட்டின் பொழுது இடது கரத்தில் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் கொஞ்சம் தெளித்துக் கொண்டு  கொஞ்சம் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

கொடுத்த பணம் வசூலாகப் பரிகாரம் - ஸ்ரீ பைரவ வழிபாடு




செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையான ஆடை அணிந்து வெறும் வயிற்றில் சிவாலயம் சென்று பைரவர் சந்நிதியில் வடக்கு முகமாக அமர்ந்து அகல் விளக்கில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி அதன் முன் குங்குமம் இட்டு "ஓம் ஹ்ரீம் வம் பைரவாய நமஹ" என்று 27 தடவை ஜெபித்து வேண்டி வர  கொடுத்த பணம் வசூலாகும் சூழல் விரைவில் உருவாகும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday, 22 April 2015

ஸ்ரீ சுப்பிரமணிய மாலா மந்திரம்




ஓம் சரஹணபவாய  ஸாம் ஸீம் ஸூம் ஸைம்  ஸௌம் ஸஹ சுப்ரஹ்மண்யாய | குமாராய, குக்குடத்வஜாய, குங்குமவர்ணாய, மஹாமோஹனாய |த்வாதசாக்ஷராய, சர்வ சத்ருஹராய,பரசைன்ய வித்வம்சகாய,தேவசேனாதிபதயே ஸ்வாஹா ||


இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 108 தடவை ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தீமைகளில் இருந்து காப்பாற்றும்.எதிரிகள் பலர் இருந்தாலும் அவர்களின் தீய செயல்களை ஸ்தம்பனம் செய்து உங்களை ரட்சிக்கும். மேலும் நல்ல வசீகரண சக்தியையும் தரும்.இம்மந்திரத்தைச்  சந்தனத்தில் ஜெபித்து அணிந்து வர  ராஜ வசீகரமும் பிரம்ம தேஜசும் உண்டாகும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம்







மந்திரம் 

ஓம் வஜ்ரபுவே நமஹ||


இம்மந்திரம் மந்திர சாஸ்திர நூலான ஸ்ரீ சாரதா திலகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.தொடர்ந்து பல விபத்துக்கள்,எதிர்பாராத பிரச்சனைகளால் துன்பம் அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தை ஜெபித்து வர ரக்ஷையாக விளங்கிக் காக்கும்.

பிரயோகம் :-

கிழக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் ஜவ்வாது கலந்த விபூதி பரப்பி அதில் இம்மந்திரத்தை ஊதுவத்திக் குச்சி அல்லது வலது கை மோதிர விரல் கொண்டு எழுதி 108 தடவை  இம்மந்திரத்தை ஜபம் செய்த பின் அணிந்து வர உயர்ந்த பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

காரிய சித்தி தரும் ஸ்ரீ சக்தி கணபதி மந்திரம்



மந்திரம் :-

ஹரி ஓம் திரு உள்ளமே ஆதித் திருஉள்ளமே |
செந்தாமரையில் பிறந்திடும் மருவே |
உன் முகம் என் முகமாக உன் கண் என் கண்ணாக |
கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||

எப்பொழுது வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன், அலுவலகத்திற்குச்  செல்லும் முன்,குறிப்பிட்ட விஷயமாக ஏதேனும் பெரிய மனிதர்களைச்  சந்திக்கச் செல்லும் முன், வாடிக்கையாளரைச் சந்திக்கச் செல்லும் முன் மேலே உள்ள மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விநாயகரையும் பராசக்தியையும் வணங்கிய பின் செல்ல உங்கள் செயல் வெற்றிகரமாக முடியும்.இம்மந்திரத்தை நான் கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்திப் பலன் அடைந்திருக்கிறேன்.


                                   வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 16 April 2015

வயிற்றுவலி போக்கும் தாந்த்ரீக யந்திரம்




கீழே உள்ள யந்திரத்தை ஒரு வியாழக்கிழமை அன்று அதிகாலை 6:00 முதல் 7:00 மணிக்குள் பன்னீர் கலந்த அஷ்டகந்த கலவையால் ஒரு தூய வெள்ளை நிறப் பேப்பரில்  எழுதிப் பூக்களால் அர்ச்சித்துச் செம்புத் தாயத்தில் போட்டுக் கழுத்தில் அணிந்து கொள்ளக் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் குணம் அடையலாம்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

அழகு,செல்வம்,நற்குணம் நிறைந்த கணவன் கிடைக்க ஸ்ரீ ருக்மிணீ மந்திரம்

ஸ்ரீ ருக்மிணீ தேவி மந்திரம் 

ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா 

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது பெருமாள் கோயில் சென்று மேற்கு நோக்கி அமர்ந்து நற்குணம்,செல்வம்,அழகும் நிறைந்த கணவன் கிடைக்க அருள் செய் என்று ஸ்ரீ கிருஷ்ணனோடு சேர்ந்த ருக்மிணீ தேவியை மனதார வேண்டிய பின் மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.

பின் வரும் நாட்களில் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ ஜெபித்து வரலாம்.

வீட்டில் ஜெபிப்பதானால் நெய் விளக்கேற்றி அந்தத் தீப ஒளியில் ஸ்ரீ ருக்மிணீ சமேத ஸ்ரீ கிருஷ்ணரை எழுந்தருள வேண்டிப் பின்  ஜெபிக்கவும்.இயன்றதைப் படைத்து ஜபம் முடிந்த பின் விளக்கின் கருக்கை வகிடு அல்லது நெற்றியில் இட்டு  வர விரைவில் நல்ல இடத்தில் திருணம் நடைபெறும்.




வாழ்கவளமுடன்  

M.சூர்யா - தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Sunday, 29 March 2015

ஆதித்ய பைரவ மந்திரம்








இம்மந்திரத்தைப் புத்தாண்டு அன்று அல்லது பிறந்த நாள் அன்று ஜெபிக்கத் துவங்க வேண்டும்.தனது பிறந்த நேரத்தில் ஜெபிக்க மிக நல்ல பலன் உண்டாகும்.

உதாரணமாகத் தனது பிறந்த நாள் 10.02.1983 அன்று காலை 8:00 மணி என்றால் அந்த மந்திரத்தை 10.02.1983 காலை 8:00 மணிக்கு ஜெபிக்கத் துவங்கிப் பின் தினமும் காலையில் 8:00 மணிக்கு ஜெபித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ஆதித்ய பைரவ மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய |
சௌபாக்கியம் ப்ரசீத ப்ரசீத |
ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் |


இம்மந்திரம் ஜெபிக்கும் முன் குருவை வணங்கிக் குரு வந்தன மந்திரம் ஜெபித்துப் பின் தொடங்கவும்.

இம்மந்திரம் தொழில்,வேலை மற்றும் செல்வ நிலையில் விரைவான முன்னேற்றத்தையும், நல்ல நிர்வாகத்திறன்,கிரக தோஷங்கள் நீங்குதல் இவற்றையும் அருளும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday, 18 March 2015

வியாபார விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்







தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களில்  விளக்கேற்றிக்  கற்கண்டு படைத்து இந்த மந்திரத்தை முடிந்த வரை ஜெபித்து வரத் தொழில் / வியாபாரத்தில் நிறைவான முன்னேற்றம் உண்டாகும்.



மந்திரம் :

ஓம் ஐம் ஸ்ரீம்|மஹாலக்ஷ்ம்யை |
கமலதாரிண்யை  கருட வாஹின்யை |
ஸ்ரீம் ஐம் நமஹ ||  


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Sunday, 15 March 2015

நன்றாகப் படிக்க - நினைவாற்றல் பெருக

ஒரு சிகப்புத் துணியில் கொஞ்சம் பெருஞ்சீரகம் வைத்து முடிந்து அதைத் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்பில் நாட்டமும் ,நினைவாற்றலும் அதிகரிக்கும்.


  


 வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 2 March 2015

குழந்தைகளின் தொடர் அழுகை ,பயம் நீங்க





குழந்தைகள் காரணமின்றித் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால்,அல்லது  தூக்கத்தில் இருந்து திடீர் என்று எழுந்து வீரிட்டு அழுது கொண்டே இருந்தால் கனவில் அல்லது உண்மையில் ஏதேனும் தீய சக்திகளைக் கண்டு பயந்திருக்கும்.அப்படி  அடிக்கடி ஏற்பட்டால் சாமிக்கு ஏற்றிய ஊதுபத்தியின் சாம்பலைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.அந்தச் சாம்பலைக் கையில் வைத்துக் கொண்டு, கீழே உள்ள மந்திரத்தை 11 தடவை ஜெபித்துப் பைரவரை வேண்டி அதைக் குழந்தையின் நெற்றியில் பூசி விடக் குணம் கிடைத்துக்  குழந்தை நிம்மதியாக உறங்கும்.


பாலரக்ஷ காலபைரவ மந்திரம் :-

கபாலமாலிகா கண்டம் ஜ்வாலா பாவக லோசனம் |
கபால கதாம்த்யுக்ரம் கலியே கால பைரவம் ||
 

வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 26 February 2015

கனவில் தீர்வுகள் சொல்லும் ஸ்ரீ ஸ்வப்ன சக்ரேஸ்வரி மந்திரம்



இதை ஒரு அமாவாசை அன்று ஜெபிக்கத் தொடங்கவும்.ஒரு புது விளக்கு வாங்கி (அகல் விளக்கு அல்லது எந்த விளக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.) அதில் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றி இம்மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும். குறைந்தது 108 தடவை அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் .மந்திர ஜெபத்தின் எண்ணிக்கை கூடக்கூடச் சிறப்பான பலன் கிடைக்கும். 90 நாட்கள் ஜெபித்து வரவும்.ஜெபம் செய்யும் முன் விளக்கின் அருகில் ஒரு செம்பில் கொஞ்சம் பச்சைக்கற்பூரம் அல்லது ஒரு ஏலக்காய் போட்டு  நீர் வைக்கவும்.ஜபம் முடிந்ததும் அந்த நீரைக் குடித்து விடவும். அவரவரது பூர்வ ஜென்ம புண்ணிய பலனைப் பொருத்துச் சிலருக்கு முன் பின்னாகப் பலிக்கும்.

முதல் நாள் பச்சைக் கற்பூரம், தேங்காய்த் துருவல்,ஏலக்காய் போட்டுக் காய்ச்சிய பால், வெற்றிலை,பாக்கு, பழங்கள், பலகாரங்கள் வைத்து ஜெபிக்கவும்.மல்லிகை,பிச்சி அல்லது தாமரை இதழ்களால் மந்திரத்தை 27 தடவை  ஜெபித்து விளக்கின் பாதத்தில் பூவைச் சமர்ப்பிக்கவும்.

அடுத்து வரும் நாட்களில் வாழைப்பழம், கற்கண்டு மட்டுமாவது படைக்கவும்.அசைவம் தவிர்க்கவும்.

முதல் நாளைப் போல் 90 வது நாளும் சிறப்பாக நைவேத்யம் படைத்து பூஜிக்கவும்.



ஸ்ரீ ஸ்வப்ன சக்ரேஸ்வரி தேவி மந்திரம் :-

ஓம் நம ஸ்வப்ன சக்ரேஸ்வரி |
ஸ்வப்னே அவதர அவதர |
கதம் வர்த்தமானம் கதய ஸ்வாஹா ||


                                    வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன் !

M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072  / 9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com        

தேர்வில் வெற்றியும் ,அதிக மதிப்பெண்கள் பெறவும் ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்




இம்மந்திரத்தை அதிகாலையிலும் படிக்கும் முன்னும் ஜெபித்து வர கல்வியில் நல்ல முன்னேற்றமும் அதிகமான மதிப்பெண்களும் கிட்டும்.வெள்ளைத்துணி விரித்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து  ஜெபிக்கவும்.

எப்பொழுதும் குழந்தைகள் படிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது.இது படிப்பில் விருப்பம் உண்டாகச் செய்யும் மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம் 

ஓம் நமோ பகவதி சரஸ்வதி வாக்வாதினி |
பிரம்மரூபிணி புத்திபத்தினி |
மம வித்யாம் தேஹி தேஹி ஸ்வாஹா ||


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

தொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்




இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும்.தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.

கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை  மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர்.காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும்.அல்லது மாலை 6:15 முதல்  6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை,தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.   


மந்திரம் :-

ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா || 


வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன்  !

M.சூர்யா
தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

வியாபாரம்,தொழில் விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்




வட இந்திய வியாபாரிகள் பின்பற்றும் ஒரு ரகசிய முறையை இங்கு தருகிறேன் .படித்துப் பயன்பெறுங்கள்.

தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில்  மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பாயசம்,கற்கண்டு,பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.விளக்கேற்றி "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்" என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.
தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும்.

மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

மந்திரம் :-   

ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ || 

வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன்  !

M.சூர்யா
தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Thursday, 19 February 2015

நவக்கிரஹ சாந்திக்கு லால் கிதாப் வழங்கும் எளிய பரிகாரங்கள்




உங்கள்  ஜாதகத்தில் ஏதாவது கிரகதோஷம் இருந்தாலோ, அல்லது தற்சமயம் நடக்கும் தசா புத்திகளால் பாதிப்பு இருந்தாலும் அந்த பாதிப்பைத் தரும் கிரகம் எதுவோ அதற்கான பரிகாரத்தைச் செய்து வர பாதிப்பு குறையும்.


இவை யாவும் அதிகச் செலவு இல்லாத எளிய பரிகாரங்கள்.


1.சூரியபகவான்  - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை  செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

2.சந்திரபகவான்  -   வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

3.செவ்வாய்பகவான்  -   தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப்  பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின்   கெடுபலன்கள் குறையும்.

4.புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின்  கெடுபலன்கள் குறையும்.

5.குருபகவான்  - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான  கெடுபலன்கள் குறையும்.

6.சுக்ரபகவான்  - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

7.சனிபகவான்  -  ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

8.கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.


9.ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான   கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Sunday, 15 February 2015

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்





1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.


3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .


4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.


5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.


6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"  என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது  தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.  



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 12 February 2015

செரிமானக் கோளாறு போக்கும் மந்திரம்


தற்காலத்தில் உடல் உழைப்பு குறைந்து விட்டதாலும் ரசாயன உரங்கள் தெளிக்கப்பட்ட உணவுகள் உண்பதாலும் நம்மில் பலருக்கு உண்ட உணவு சரிவர செரிமானம் ஆவதில்லை.செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் வயிற்றில் வலது கையை வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 7 தடவை ஜெபிக்க உணவு விரைவில் செரிமானமாகும்.

மந்திரம் :-

நம சர்வ பூதாதிபதயே ஹும் பட் ஸ்வாஹா ||



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம்


                                 எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வி கண்டு வருபவர்கள் இம்மந்திரத்தைத்  தினமும்  கிழக்கு முகமாக அமர்ந்து 108 தடவை ஜெபித்து வரக் காரியத்தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.

ஏதேனும் காரியம் தொடங்கும் முன் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ விநாயகரை வணங்கி எந்தக் காரியம் செய்யவிருக்கிறோமோ  அதைக் குறிப்பிட்டுச் சங்கல்பம் செய்து கொண்டு இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின் துவங்க அதில் வெற்றி உண்டாகும்.

ஏற்கனவே ஆரம்பித்துப் பாதியில் நிற்கும் வேலை சிறப்பாக  நடந்து முடிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 6:30 மணிக்குள்  ஒரு  தேங்காய் வாங்கி தலையை  3 தடவை சுற்றி ஆறு அல்லது நீர் நிலையில் போட்டு விடவும்.பின்னர் ஆலயம் சென்று கணபதியை வணங்கி அவர் முன் கிழக்கு முகமாக அமர்ந்து சங்கல்பம் செய்து மந்திரத்தை 108 தடவை ஜெபிக்க வெற்றி கிட்டும்.

எந்தச் செயலைத் துவங்கும் முன்னும் கோயிலில் உள்ள யானைக்குப் பழம், கரும்பு,வெல்லம் கலந்த பச்சரிசி இவற்றில் ஏதாவது கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.        



சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம் 

ஓம் கம் கணபதயே கார்ய சித்தி குரு குரு ஸ்வாஹா ||


                        வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com