Sunday, 18 October 2015

வழக்குகளில் வெற்றி பெற,எதிரிகள் தொல்லை நீங்க காளி மந்திரம்




ஏதேனும் வழக்கில் சிக்கி உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் மட்டும் இந்த பிரயோகத்தைச் செய்யவும்.தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தினால் காரிய வெற்றி கிடைக்காது மேலும் தெய்வ நிந்தனை ஏற்படும்.


ஏதேனும் ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை
இரவில் 8 மணிக்கு மேல் விளக்கேற்றி  அதில் ஸ்ரீ காளிதேவியை எழுந்தருள வேண்டும் என்று வேண்டி உங்கள் கோரிக்கையை முன்வைத்து செந்நிறப் பூக்களால் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்து அர்ச்சிக்கவும்.
முதல் நாளும் 11 வது நாளும் வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும் மற்ற நாட்களில் வெற்றிலை,பாக்கு,பால்,பழம் மட்டும் வைத்து மந்திரம் ஜெபித்து வழிபடவும்.இவ்வாறு  தொடர்ந்து 11 நாட்கள் செய்யவும்.
தாமரைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றவும்.தினமும் திரியை மாற்ற வேண்டும்.முந்தைய நாள் பயன்படுத்திய திரியை ஒரு வெள்ளி அல்லது பித்தளை குங்குமச்சிமிழில் போட்டு வைக்கவும்.11 நாட்கள் முடிந்த பின் 12 ஆம் நாள் இரவில் எல்லாத்  திரிகளையும் போட்டு வைத்த குங்குமச்சிமிழை மூடி செந்நிரப்பூ பூக்கள் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி அர்ச்சிக்கவும். பின் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின் வடக்கு நோக்கி நின்று 3 தடவை  மந்திரம் ஜெபித்து ஸ்ரீ காளிதேவியை வழக்கில் வெற்றி தரவேண்டி  குங்குமச்சிமிழில் உள்ள எண்ணையைக் கொஞ்சம் எடுத்துப் புருவத்தில் தடவி வரவும். எதிரிகளால் தொல்லை நேராது.வழக்கிலும் வெற்றியுண்டாகும்.இதை வெளியில் எல்லோரிடமும் சொல்லாமல் ரகசியமாய்ச் செய்யவும்.

மந்திரம் :
ஓம் க்லீம் பீஜ ரூபிண்யை மஹாகாளிகாயை க்லீம் பட் ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Friday, 16 October 2015

வீட்டில் செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்

ஒரு சிறிய மண்பானை வாங்கி அதைப் பன்னீரும் தண்ணீரும்கலந்த கலவையால் கழுவிப் பின் அதில் கொஞ்சம் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைப் போட்டுக் கொஞ்சம் முனை மழுங்காத பட்டை தீட்டப்படாத பச்சரிசி அல்லது கோதுமையைப் போட்டுச் சிகப்புப் பட்டுத் துணியால் பானையின் வாயை மூடி அதை ஒரு வெண்பட்டு நூலால் கட்டி விடவும்.இதை வீட்டின் வடமேற்கு மூலையில் ஒரு பலகை போட்டு அல்லது ஒரு ஸ்டேண்ட் அடித்து அதில்  வைத்து விடவும்.சிறிது காலத்தில் செல்வம் பெருகத் துவங்கும்.இதை வீட்டினர் தவிர வெளியில் யாரிடமும் சொல்லாமல் செய்யவும்.நல்ல பலன் கண்ட பின்னரே பிறரிடம் சொல்லவேண்டும்.



இதைச் செய்ய வசதியற்றவர்கள் ஒரு கலசத்தில் மூன்று புண்ணிய நதிகளின் தீர்த்தத்தை ஊற்றி வடகிழக்குத் திசையில் வைக்கலாம்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்கவும்,உண்டான நஷ்டம் நீங்கவும் வேத பரிகாரம்


வளர்பிறையில் உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து அதிகாலையில் ஆலமர வேர் ஒரு சிறு துண்டு எடுத்துக் கொள்ளவும்.வீட்டிற்குக் கொண்டு வந்து பஞ்சகவ்ய அல்லது பன்னீர் விட்டுக் கழுவி வைத்துக்கொள்ளவும்.ஒரு வெள்ளை அல்லது மஞ்சள் பட்டு நூல் வாங்கி செஞ்சந்தனக் கட்டையை உரைத்து  அதை அந்தப் பட்டு  நூலில் தடவி தொழில்,வியாபார ஸ்தாபனங்களில்  வாசலில் கட்டவும்.பலரால் பயன்படுத்தி வெற்றி கண்ட இம்முறையைப் பின்பற்றி நீங்களும் தொழிலில் சிறக்க வாழ்த்துகிறேன்.   

குறிப்பு:மரத்தின் தெற்கு பக்கம் உள்ள வேரை மட்டும் எடுக்கக் கூடாது.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Tuesday, 22 September 2015

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஸ்ரீ துர்கா மந்திரம்









வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் சிகப்பு அல்லது வெண்ணிற ஆடை அணிந்து விளக்கேற்றி ஸ்ரீ துர்கா தேவியை விளக்கில் எழுந்தருள வேண்டி நைவேத்தியமாக வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பாயசம் வைத்து விரிப்பில் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் தெளித்து அமர்ந்து  கீழ்க்கண்ட மந்திரத்தை 108 தடவை முதல் நாள் ஜெபிக்கவும்.அடுத்து வரும் நாட்களில் குறைந்தது  54 தடவையாவது ஜெபித்து வர உங்கள் கர்ம பலனைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்களில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.

ஜெபம் செய்து முடிந்ததும் " ஸ்ரீ துர்கா மாதா தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் அழைத்தால் வந்து அருள் செய்ய வேண்டுகிறேன் " என்று வேண்டி விளக்கைக் குளிர்வித்து விளக்குத் திரியின் கருக்கை நெற்றியில் அல்லது தலை வகிட்டில் அல்லது புருவத்தில் தடவி வரவும்.விரைவான பலனைத் தரும்.


மந்திரம்  

வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ...........................வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா

முக்கிய குறிப்பு : .மந்திரத்தில் .....................கோடிடப்பட்டுள்ள இடத்தில் கணவன் அல்லது மனைவி பெயரைக் குறிப்பிட்டு ஜெபிக்கவும்.
உதாரணமாக கணவர் பெயர் கிருஷ்ணன் என்றால்

வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே கிருஷ்ணன் வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா  என்று ஜெபிக்கவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

ஸ்ரீ விஷ்ணு மந்திரங்கள்







1.வறுமை நீங்க

ஓம் ஸ்ரீம் ஹரயே  நமஹ


2.பக்தி,ஞானம்,முக்தி பெற 

 ஓம் ஹ்ரீம் ஹரயே நமஹ

3.தம்பதிகள் ஒற்றுமைக்கு ,குடும்பம் நலம் பெற

ஓம் க்லீம் ஹரயே நமஹ

4.எதிரிகளை வெல்ல 

ஓம் ஹூம் ஹரயே நமஹ



மேலே உள்ள மந்திரங்களில் உங்கள் தேவைக்கேற்ற மந்திரத்தைத்  தேர்ந்தெடுத்து, 90 நாட்கள் தொடர்ந்து ஜெபம் செய்து வரக் குறிப்பிட்ட பலன் கிட்டும்.இவை எளிமையான வலிமையான மந்திரங்கள்.ஜெப காலங்களில் அசைவ உணவு தவிர்க்கவும்.அசைவம் சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்து ஜெபிக்கவும்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Sunday, 13 September 2015

ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம்



வைஷ்ணவத்தில் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி அருள் செய்வதைப் போலவே சைவத்தில் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கி அருள் புரிபவள்.

சித்தர்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வங்கள் வாலை,புவனை,திரிபுரை என்ற முப்பெரும் மகாசக்திகளே.அகஸ்தியர் தனது பல பாடல்களில் இவர்களது உபாசனை பற்றியும் எந்த வாழ்க்கை முறை உள்ளவர்கள் யாரை உபாசனை செய்து சித்தி பெறலாம் என்பது பற்றியும் விரிவாகவே கூறுகிறார்.

தரித்திரம் நீக்கி நிறைந்த செல்வம் தருவதில் தனிச் சிறப்பானது புவனேஸ்வரி வழிபாடு.இது விரைவான பலன்களைத் தரவல்லது.


இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி அன்று துவங்கித் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை,கடன்,நோய்கள் அற்ற வளமான,நலமான வாழ்வு தருவாள். புவனேஸ்வரி யந்திரம் வைத்து வழிபட்டால் நல்லது.ஏன் என்றால் நாம் எல்லா நேரத்திலும் சுத்தமாக,ஆன்மீக விதிகளின்படி இருக்க இயலாது.எனவே யந்திரம் முன்னே வைத்து ஜெபித்தால் நமது மந்திர ஜெபத்தின் சக்தியை யந்திரம் உள்வாங்கி சக்தியைப்  வீடு முழுவதும் பரப்பி வாழ்வை வளமாக்கும்.

பௌர்ணமி அன்று விசேஷமாக பூஜை செய்து நைவேத்யங்கள் படைத்து வழிபடவும்.மற்ற நாட்களில் உங்களால் முடிந்ததைப் படைத்து வழிபடுங்கள்.


முறைப்படி ஒரு குருவிடம் தீக்ஷை பெற்று ஜெபித்து பூஜை விதிகளை அறிந்து ஜெபித்து வருவதன் மூலம் மட்டுமே நிறைவான பலன் கிடைக்கும். 




1. ஓம் ஸ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை நமஹா 

2. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை ஸ்வாஹா 

3. ஸ்ரீம் ஹ்ரீம் புவனேஸ்வர்யை நமஹா 



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Friday, 11 September 2015

வீட்டில் திருட்டு நேராமல் காக்க ,திருடர் பயம் நீங்க ஆன்மீகத் தீர்வு




                                      சமீப காலமாக திருட்டு அதிகரித்து நகை,பணம் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வதோடு  அதன் உரிமையாளர்களைக் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.அனேக அன்பர்களின் வேண்டுகோளின்படி
இதற்கு எளிமையும்,வலிமையான  இரண்டு தீர்வுகளை  இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.இவற்றில் எது உங்களுக்கு எளிமையானதோ அதைச் செய்து பயன்பெறுங்கள்.


பரிகாரம் 1




மேற்கண்ட இந்த அரேபிய யந்திரத்தை, சுத்தமான வெள்ளைப் பேப்பரில் பிரிண்ட் எடுத்து அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து அசுத்தம் படாத படி வைத்திருக்கவும்.இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க திருடர் அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள். இது எளிமையான மற்றும் மிகச்சக்தி வாய்ந்த முறை.


பிரிண்ட் எடுக்க முடியாதவர்கள் குளித்து முடித்து மேற்கு நோக்கி அமர்ந்து ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பரில் மேற்கண்ட படத்தில் உள்ள படி எழுதி
அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து அசுத்தம் படாத படி வைத்திருக்கவும்.இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க திருடர் அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள்.


பரிகாரம் 2





மேற்கண்ட இந்த அரேபிய யந்திரத்தை சுத்தமான வெள்ளை பேப்பரில் பிரிண்ட் எடுத்து அல்லது எழுதி அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பித்து லேமினேஷன் அல்லது  பிரேம் செய்து  வீட்டின் தலைவாசலில் மாட்டவும். தலைவாசலுக்குக் கிழக்கு ஓரத்தில் படம் இருக்கும் படி இருந்தால் மிக நல்லது.இதுவும் திருடர்கள் வராமல் காக்கும்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com







Wednesday, 2 September 2015

பொன்னும் பொருளும் அள்ளித்தரும் ஸ்ரீ ஐஸ்வர்யதாரா தேவி மந்திரம்






மந்திரம்

ஓம்|ஸ்ரீங் ஸ்த்ரீம் |மஹாபத்மே பத்மவாஸினி |திரவ்ய சித்திம்|
ஸ்த்ரீம் ஸ்ரீங் ஹூம் பட் || 


 எளிமையான,நிறைவான பலனைத் தரும் இம்மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்கத் துவங்கி தினமும் அல்லது 90 நாட்களுக்கு ஜெபித்து வரவும்.

தேங்காய்த் துண்டுகள்,தேன்,பச்சரிசி,ஏலக்காய் கலந்த நைவேத்யம் படைத்து வழிபட ஆபரணம்,ஆடைகள் நிறைவாகச் சேரும் யோகம் உண்டாகும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com



தந்த்ரோக்த சர்வ கார்ய சித்தி மந்திரம்




எல்லா காரியங்களிலும் வெற்றி அருளும் இம்மந்திரத்தைத் தாந்த்ரீக குருமார்கள் ரகசியமாக குருபரம்பையாக உபதேசித்து வருகின்றனர்.எனது வலைத்தளத்தைத் தொடர்ந்து பார்வையிட்டு வரும் அன்பர்களின் நலன் கருதி வெளியிடுகிறேன்.

நமக்கு தொழில்,வியாபாரம்,வேலை,குழந்தைகள் படிப்பு,பள்ளியில் சேர்க்கை,பெரிய மனிதர்களின் உதவி வேண்டுதல் இப்படிப் பல தேவைகள் வாழ்வில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.அவற்றில் சரி பாதி அல்லது அதற்கு மேலான காரியங்களில் தோல்வியையும் துன்பத்தையும் சந்தித்து வருபவர்கள் ஏராளம்.ஒவ்வொரு காரிய வெற்றிக்கும் தனிப்பட்ட சிறப்பான பூஜை மற்றும் மந்திரங்களை இன்றைக்குள்ள பிஸியான காலகட்டத்தில் செய்ய இயலாது.அதற்கு ஒரு எளிதான மந்திர ரீதியான தீர்வாக இம்மந்திரம் விளங்கும்.

ஜெப விதிகள் :-

இம்மந்திரத்தைக் கிரகணத்தன்று ஜெபிக்கவேண்டும்.
வெள்ளை நிற ஆடை அணிந்து வெள்ளை நிற விரிப்பில் அமர்ந்து வடக்கு முகமாக ஜெபிக்கவும்.
முதலில் குருவை மனதில் நினைத்து ஓம் கும் குருப்யோ நமஹ என 108 தடவை ஜெபிக்கவேண்டும்.அதன் பின்னரே கார்ய சித்தி மந்திரம் 1008 தடவை ஜெபிக்கவேண்டும்.இவ்வாறு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.

இது உங்கள் காரியங்கள் யாவிலும் வெற்றி தரும்.எந்த ஒரு முக்கியமான வேலையில் ஈடுபடுவதாக இருந்தாலும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வேண்டிச் செல்ல அதில் வெற்றி கிட்டும்.தனக்கோ பிறருக்கோ துன்பம் தரும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. 

தந்த்ரோக்த சர்வ கார்ய சித்தி மந்திரம் 


ஓம் சர்வோதய சம்பூர்ண லாப ப்ராப்த்யர்த்தே நமஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com


Sunday, 16 August 2015

கர்ப்பம் கலையாமல் இருக்க ,பிறந்த குழந்தை இறப்பில் இருந்து காக்கப்பட




அடிக்கடி கர்ப்பம் கலைந்து விடுபவர்கள் ,தொடர்ந்து குழந்தை பிறந்து பிறந்து இறந்து விடுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கர்ப்பிணியின் உடல் உயரத்தை அளந்து அதே அளவிற்குச் சிகப்புக் கயிறு அளந்து அதை எனது முகவரிக்கு அனுப்பி வைத்தால் பூஜித்து அனுப்புகிறேன்.அதை அணிந்தால் சர்வ நிச்சயமாகக் கர்ப்பம் கலையாது. கர்ப்பிணியின் பெயர் மற்றும் கர்ப்பிணியின் தாயின் பெயர் குறிப்பிட்டு ஒரு ஒரு பேப்பரில் எழுதிக் கயிறுடன் வைத்து அனுப்பவும்.

அநேகர் தொந்தரவு செய்யக் கூடும் என்பதால் எனது முகவரியை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை.எனவே நேரில் வரவேண்டாம்.மேலே குறிப்பிட்ட தேவை உள்ளவர்கள் எனது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் எனது முகவரியை SMS செய்கிறேன்.   

வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com


Sunday, 9 August 2015

சர்வ கார்ய சித்தியும் சர்வ ஐஸ்வர்யமும் தரும் ஸ்ரீ பகளாமுகி மந்திரம்




தசமஹா வித்யா என்ற 10 பெரும்தெய்வங்களில் இவளும் ஒருவள். விரைந்து அருள் செய்யும் தெய்வங்களில் ஸ்ரீ பகளமுகியும் ஒரு சக்தி.அதர்வண ரஹசிய ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயம் மிக உயர்ந்த பலன்களைத் தருவது. இம்மந்திர ஸ்லோகத்தில் கீழ்க்கண்ட மந்திரம் வருகிறது. ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயத்தையும் இம்மந்திரத்தையும் சேர்த்துப் படித்து வந்தால் சர்வ காரியமும் சித்திப்பதொடு மனோ விருப்பங்களை விரைவில் நிறைவேற்றும்.வறுமை ஒழியும்.


மஞ்சள் வண்ண ஆடை அணிந்து மேற்கு முகமாக அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.மஞ்சள் நிறப்பூக்கள் மிக பிடித்தமானவை.தேன்,எள் , சம்பாஅவல், நெய் கலந்த நைவேத்யம் மிகப் பிடித்தமானது.

ஸ்ரீ பகளாமுகி மந்திரம் :-  

ஓம் ஹ்ராம் ஐம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீ பகலானனே |
மம ரிபூன் நாசய நாசய |
மம ஐஸ்வர்யாணி தேஹி தேஹி |
சீக்ரம் மனோ வாஞ்ச்சித கார்யம் ஸாதய ஸாதய |
ஹ்ரீம் ஸ்வாஹா ||



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Wednesday, 29 July 2015

செல்வ விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்



இம்மந்திரம் எவ்வளவு கொடிய வறுமை ,கடன்,பொருளாதார முடக்கம் இவற்றைச்  சரி செய்யும்  வல்லமை கொண்டது.உங்களுக்கு படுபக்ஷி இல்லாத ஒரு நல்ல நாளாகப் பார்த்து அல்லது ஒரு பௌர்ணமி நாளில் ஜெபிக்கத் தொடங்கவும்.முதல் நாளில் 108 உருவும் அடுத்து வரும் நாட்களில் குறைந்தது 27 தடவையாவது ஜெபித்து வரவும்.மாலை 5:45 முதல் 7:30 மணிக்குள் ஜெபிப்பது சிறப்பு  அல்லது அதிகாலை 5:30 முதல் 7:00 மணிக்குள்  ஜெபிக்கலாம்.தொடர்ந்து  90 நாட்களுக்கு  ஜெபித்து வர  நிறைவான பலன் கிடைக்கும்.அதன் பின்னரும் விடாமல் ஜெபித்து வர நிறைசெல்வத்துடன் வாழலாம்.

மந்திரம் :-

ஓம் | ஹ்ரீம் ஸ்ரீம் | ஸ்திர  அஷ்டலக்ஷ்மி | மம க்ரஹே நிவாசய |
குரு  குரு ஸ்வாஹா ||


நைவேத்யம் :-

முதல் நாள் வெற்றிலை,பாக்கு,பால், பழங்கள்,பாயசம் வைத்து வைபடவும்,மற்ற நாட்களில் இயன்றதை படைக்கலாம்.முதல் நாள்,90 வது நாள்,மற்றும் வெள்ளிகிழமை, பௌர்ணமி நாட்களில் விசேஷமாக பூஜை செய்ய விரைவான பலன்களை அள்ளித்தரும்.

வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Thursday, 23 July 2015

ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்


கிருஷ்ணாவதாரத்தின் புகழ் பாடும் ஸ்ரீ  கோபால தாபினி உபநிஷத் ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தின் மேன்மை பற்றிக் கூறும் விஷயங்கள் :-


ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக மேன்மையான அவதாரம் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரமே.எனவே அவர் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா என்று அழைக்கப் படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணணே சர்வ வ்யாபியும் யாவரும்,யாவும் இந்த பிரபஞ்சமும் அதற்கு அப்பால் உள்ள சர்வமும் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மாவில் அடங்கும் என்று விரிவாக விளக்குகிறது ஸ்ரீ  கோபால தாபினி உபநிஷத் .

ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் 

க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய ஸ்வாஹா ||

இம்மந்திர ஜபம் எல்லா நலமும்,வளமும் அருள்வதோடு முடிவில் மோக்ஷமும் அருளவல்லது.விரைவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் அருள் பெற்று அவரின் சமீபம் சென்று அடைய இம்மந்திரம் உதவும்.

இம்மாதிர ஜெபத்தினால் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும்.

இம்மந்திரத்தை வெண்ணையில் மந்திரித்துக் கொடுக்க அல்லது உண்டு வரக்  குழந்தை பாக்கியம் கிட்டும்.




வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Monday, 29 June 2015

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரங்கள்

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  மந்திரங்கள்  





யஜுர் வேதத்தில் உள்ள  உபநிஷத்துக்களில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி உபநிஷதமும் ஒன்று.பிரம்ம வர்த்தத்தில் சனகாதி முனிவரகுள் ஒரு யாகம் செய்யும் பொருட்டு கூடியிருந்தார்கள்.அப்போது அம்மரதத்தின் அடியில் வசித்து வந்த சிரஞ்சீவிகளில் ஒருவரான ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியிடம் அவரின் சிரஞ்சீவித்தன்மையை எவ்வாறு அடைந்து அதைக்  கடைபிடிக்கிறீர்கள் என்று சனகாதி முனிவர்கள் கேட்டனர்.

அதற்கு ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி நான் சிவ தத்துவத்தை அறிந்த அதை அப்யாசித்ததன் மூலம் சிரஞ்சீவித்துவம் பெற்று விளங்குகிறேன் என்றார்.யுகங்களின் முடிவில் பிரளத்தில் உலகம் அழிவுரும் பொழுது
எல்லா படைப்புகளும் ,ஜீவ ராசிகளும் இறைவனான சிவபெருமானில் ஒடுங்கும்.அந்த சமயம் லோகத்தில் சிவன் மட்டுமே தன் சுயம்ப்ரகாசமான நிலையில் விளங்குவார்.அவர் வடிவில் ஒன்றான ஞான வடிவினதான தக்ஷிணாமூர்த்தியை உபாசிப்பதன் மூலம் நீங்களும் மிகச் சிறந்த ஞானத்தினை அடைந்து மேலான ஆன்ம நிலையை அடையலாம் எனக்கூறி அதற்காகப்       பின்வரும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் 3 சக்தி வாய்ந்த மந்திரங்களை உபதேசம் செய்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
24 அக்ஷர ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரம் 

பிரம்மா ரிஷி
காயத்ரி சந்தஸ்
தக்ஷிணாமூர்த்தி தேவதா

ஓம்|நமோ பகவதே |தக்ஷிணாமூர்த்தே |மஹ்யம் மேதாம் |
பிரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||

த்யானம் :-

ஸ்படிகம் போன்ற மேனியை உடையவரும், கரங்களில் முத்துமணி மாலை, அமிர்த கலசம்,ஞான முத்திரை தாங்கியவரும்,நாகாபரணம் பூண்டவரும்,சிரசிலே சந்திரனைத் தரித்தவரும்,சர்வ அலங்காரம் பூண்டவருமான  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  தேவரை என் ஹ்ருதய கமலத்தில் தியானிக்கிறேன் என்று மனத்தால் பாவித்து மந்திரத்தை ஜெபிக்கவேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

9 அட்சர  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரம் 

ஓம் ஆம் அ: சிவாய நம ஓம் ||

த்யானம் :-

நன்மைகளை மாத்திரம் அருள்செய்யும் தென்முகக் கடவுளும்,தமது மூன்று கரங்களில் மான் மழு சூலம் ஏந்தியவரும், ஒரு கரத்தைத் தனது கால் மூட்டில் வைத்திருப்பவரும்,நாகாபரணம் பூண்டவரும்,பால் போன்ற வெண்ணிறம் உடையவரும் ,கல்லால மரத்தின் கீழ் சனகாதியர் புடை சூழ அமர்ந்த வண்ணம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தியானிக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரம் 

ஓம் ப்ரூம் |நமோ ஹ்ரீம் |ஐம்  தக்ஷிணாமூர்த்தயே |ஞானம் தேஹி ஸ்வாஹா ||

த்யானம் :-





திருநீறணிந்த வெண்ணிற மேனியை உடையவரும்,கரங்களில் முத்துமணி மாலை,ஞான முத்திரை,வீணை,புத்தகம் இவற்றைத் தரித்தவரும் தாங்கியவரும்,சர்வ அலங்காரம் பூண்டவருமான,யானைத்தோலைப் போர்த்தியவரும்,சிரசிலே சந்திரனைத் தரித்தவரும்,  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  தேவரை என் ஹ்ருதய கமலத்தில் தியானிக்கிறேன் என்று மனத்தால் பாவித்து மந்திரத்தை ஜெபிக்கவேண்டும்.

யுக ஆரம்பத்தில் இம்மந்திரத்தை ஜெபம் செய்ததின் பலனாகப் பிரம்ம தேவர் படைக்கும் தொழில் பற்றிய ஞானத்தினைப் பெறுவதாக இந்த உபநிஷத் கூறுகிறது.



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Saturday, 23 May 2015

தடைகள் விலக,தைரியம் வளர,எதிரிகள் நீங்க ஸ்ரீ வீர நரசிம்ஹ மந்திரம்




ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள்  மிகச் சிறந்த வரப்ரசாதி ஸ்ரீ நரசிம்ஹர். இவரை உபாசிப்பவர்கள் யாருக்கும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.நம் தரப்பில் நியாயம் இருந்தால் நம்மை எந்த விதமான தீமைகளில் இருந்தும் காத்து ரட்சிக்கவல்லவர் என்ற நம்பிக்கையோடு இவரை உபாசிக்கலாம்.சைவ உஅவு உண்பவர்கள் மட்டும் உபாசனை செய்யலாம்.மற்றவர்கள் சுத்தமாக இருக்கும் நாளில் மட்டும் ஜெபிக்கலாம்.


வேதத்திலும் ,தந்திர சாஸ்திரத்திலும் பல இடங்களில் வேறுபட்ட வழிமுறைகளில் இவரை உபாசனை செய்யும் முறைகள் உள்ளன.தந்திர சாஸ்திரம் 9 ரூபங்களில் நரசிம்ஹரை உபாசனை செய்யும் முறைகளையும் அதன் மாறுபட்ட பலன்களையும் விவரிக்கிறது.ஷண்மத ஸ்தாபகர் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த வீர நரசிம்ஹரை உபாசனை செய்தார்.இந்த உபாசனையின் பலனாக  அவர் அடைந்த பலன்கள் அநேகம்.நோய் நீங்கப்பெற்றார், காபாலிகர்கள் செய்த அபிசார மாந்திரீகப் பிரயோகங்களை வெற்றி கண்டார் இப்படிப் பலப்பல......


ஜாதகத்தில் செவ்வாய் ,ராகு,சூரியன் இவர்களில் யாரேனும் ஒருவராவது பலம் பெற்றவர்கள் இவரை முழுமுதற் தெய்வமாக எண்ணி உபாசனை செய்யத் தகுதியானவர்கள்.ஸ்ரீ வீர நரசிம்மர் வழிபாடு எதிரிகளை நீக்கி ,வழக்குகளில் வெற்றி தந்து,நோய்களை நீக்கி,தடைகள் நீக்கி,பயம் போக்கி நிம்மதியான வாழ்வு தரும்.உபாசித்து உயர்வடைவீர்களாக.
ஜெப விதிமுறைகள்  :-

1) ஜெபத்தை வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கவேண்டும்.
இரவில் 9 மணிக்கு மேல் ஜெபிக்கவும்.

2) பன்னீரில் நனைத்துக் காய்ந்த  சிகப்புத்துணியைத் திரியாக்கி நெய் விளக்கேற்றவும்.

3) சிகப்பு நிற ஆடை அணியவும்.

4) சிகப்புக் கம்பளி விரித்து அதன் மேல் அமர்ந்து ஜெபிக்கவும்.

5) சிகப்பு மணி மாலையைப் பயன்படுத்தி ஜெபிக்கவும்.

6)  51000எண்ணிக்கை ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.


மூலமந்திரம் 

ஓம் க்ஷ்ரௌம் பட் 


பிரயோகம் 

மந்திரம் சித்தியான பின் பசு நெய்யால்  108 எண்ணிக்கை ஹோமம் செய்யவும்.

பின்னர் ஏதேனும் காரியமாக வெளியில் செல்கையில் இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து புருவ நடுவில்குங்குமம் அணிந்து செல்ல எந்தத் தீமையும் ஏற்படாது ரக்ஷையாய்க் காத்து வெற்றி தரும்.

மந்திரத்தை தீக்ஷை பெற்று நெறிமுறை அறிந்து ஜெபிப்பது நல்ல பலனைத் தரும்

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க ஸ்ரீ மாதங்கி மந்திரம்







மந்திரம் 
ஹ்ரீம் ஸ்ரீம் மாதங்க்யை க்ரியாசித்திம் வித்யா ப்ரதாயினி நமஹா ||

ஏதேனும் ஒரு நல்ல நாளில் தொடங்கி இம்மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வர ஈடுபடும் கலைகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுப்  புகழுடன் கூடிய நிலையை அடையலாம்.குறிப்பாகப் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,ஆராய்ச்சி சம்பந்தமான கல்வி கற்பவர்கள்,சங்கீதம், பரதம்,ஜோதிடம்,மருத்துவம் போன்ற கடினமான கலைகளைக் கற்பவர்கள் இந்த மந்திர ஜெபத்தின் மூலம் மிகுந்த நன்மைகளைப் பெறலாம்.

வடக்கு முகமாக அமர்ந்து இரவு 10 மணிக்கு மேல் ஜெபிக்க வேண்டும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Monday, 11 May 2015

பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்




கீழே உள்ள இரண்டு பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து வரவும்.


பரிகாரம் 1:-
பௌர்ணமி அன்று ஆலமரத்தை    108 தடவை வலம் வந்து சர்க்கரை கலந்த நீரை மாற வேறில் ஊற்றி வழிபட விரைவில் திருமணமாகும்.


பரிகாரம் 2:-

ஒரு வளர்பிறை வியாழக்கிழமை அன்று தொடங்கி வியாழக்கிழமைகள்  தோறும் ஆலமரம்,அரசமரம் அல்லது வாழை மரத்திற்கு நீர் விட்டு வரத்  திருமணத் தடை நீங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Thursday, 23 April 2015

பூமி ,வீடு, வாகனம்,சுகவாழ்வு பெறச் சொல்லவேண்டிய ரிக்வேத மந்திரம்



இந்த ரிக் வேத சூக்த மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வர அதி விரைவில் சொந்த வீடு,பூமி,வாகனம் இவற்றோடு கூடிய வளமான வாழ்வு அமையும்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இம்மந்திரம் பலன் தராது. கிழக்கு முகமாக அமர்ந்து முன்னால் விளக்கேற்றி வைத்துக்கொண்டு ஜெபிக்கவும்.

மந்திரம் :-

க்ஷேத்ரஸ்ய பதினாவயம் ஹிதேனேவ ஜயாமஸி |
காமச்வம் போஷயித்வா ஸனோ ம்ருளா தீத்ருசே ||



இது ரிக்வேதத்தில் உள்ள சூக்த மந்திரத்தின் ஒரு பகுதி.
ரிஷி :- வாமதேவர்.
சந்தஸ்:- அனுஷ்டுப்.


                                வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திர சுலோகம்



ஸ்ரீ காயத்ரி மந்திர சுலோகம் :-

சாவித்திரி வேதமாதாச காயத்ரி ச சரஸ்வதி |
சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ  சதாசர்வ அர்த்த சாதினீ |
சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச ||



இம்மந்திர சுலோகம் ஸ்ரீ கருட புராணத்தில் உள்ளது.இதை ஜெபித்து வர பாபங்கள் விலகும்.குளிக்கும் முன் குளிக்கப் பயன்படுத்தும் நீரில் வலது கையின் நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து  பின் குளித்து வர பாவ வினைகளால் வரும் துன்பங்கள் குறைந்து நிம்மதி உண்டாகும்.இறை வழிபாட்டின் பொழுது இடது கரத்தில் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் கொஞ்சம் தெளித்துக் கொண்டு  கொஞ்சம் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

கொடுத்த பணம் வசூலாகப் பரிகாரம் - ஸ்ரீ பைரவ வழிபாடு




செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையான ஆடை அணிந்து வெறும் வயிற்றில் சிவாலயம் சென்று பைரவர் சந்நிதியில் வடக்கு முகமாக அமர்ந்து அகல் விளக்கில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி அதன் முன் குங்குமம் இட்டு "ஓம் ஹ்ரீம் வம் பைரவாய நமஹ" என்று 27 தடவை ஜெபித்து வேண்டி வர  கொடுத்த பணம் வசூலாகும் சூழல் விரைவில் உருவாகும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com