Friday, 29 April 2016

வாகனப் பாதுகாப்பிற்குப் பரிகாரம்



வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுதல்,அதிக மெயின்டனன்ஸ் செலவுகள் ஏற்படுவது,ப்ரேக் டவுன் ஆகுதல் போன்ற துன்பங்கள் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட பரிகாரம் செய்ய நிவர்த்தியாகும்.


1 பாக்கு,1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு,1 ஸ்பூன் கருப்பு எள்,கொஞ்சம் சிகப்பு குங்குமம் இவற்றை ஒன்றை சேர்த்து  ஒரு சுத்தமான கறுப்புத்துணியில் போட்டு முடிச்சுப் போட்டு  அதை வாகனத்தில் பம்பரில் அல்லது முன்பகுதியில் எங்காவது கட்டி வைத்துவிடவும்.

இதை எந்த நல்ல நாளிலும் செய்யலாம் அமாவாசை அன்று செய்வது சிறப்பு.
ஏற்கனவே உள்ளது கிழிந்தோ,தொலைந்தோ போய்விட்டால் மீண்டும் ஒன்றைத் தயார் செய்து கட்டி வைத்துக் கொள்ளவும்.


                           வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Sunday, 17 April 2016

ஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்



மகரிஷி வசிஷ்டர் செய்த கடும்தவத்தின் போது அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றி இந்த மந்திரத்தை உபதேசித்தார்கள்.இந்த மந்திரத்தை எவர் ஒருவர் தொடர்ந்து ஜெபித்து வருகிறாரோ அவரை ஒருபோதும் வறுமை பீடிப்பதில்லை என்று அருளியதோடு தினம் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தை ஜெபித்தால் கூட நான் அவர்கள் இல்லத்தில் குடியிருப்பேன் என்று ஆசி கூறியதாக மந்திர நூல்களில் உள்ளது.

இந்த மந்திரத்தை முன்பு ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும் இந்தத் தகவல் விடுபட்டதால் மீண்டும் குறிப்பிடுகிறேன்.

மந்திரம் 

ஓம் |ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் | லக்ஷ்மீ ஆகச்ச ஆகச்ச|
மம மந்திரே | திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

செல்வ விருத்தி தரும் அதிர்ஷ்ட தேங்காய் பிரயோகம்

ஏதேனும் ஒரு நல்ல நாளில் ஒரு மிகச்சிறிய அளவுள்ள தேங்காயை வாங்கி பூஜை அறையில் ஒரு இடத்தை பன்னீர் கொண்டு மெழுகித் துடைத்து அந்த இடத்தில் ஒரு வாழை இலை போட்டு அதில் தேங்காயை வைத்து சந்தனப் பொடி மற்றும் மல்லி,முல்லை அல்லது செந்தாமரை மலர் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்தபடியே அர்ச்சிக்கவும்.மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.அர்ச்சித்து முடித்த பின் அந்த தேங்காயை ஒரு மஞ்சள் துணியில்  முடிந்து கடை அல்லது பூஜை அறை அல்லது வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும்.தினமும் சாமி படங்களுக்கு ஊதுவத்தி,கற்பூரம் காட்டும் பொழுது இதற்கும் காட்டிவரக் கடன்,வறுமை தீர்ந்து நிறைவான செல்வம் கிட்டும்.

மந்திரம்:

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரசீத ப்ரசீத |
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹா ||


 


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

துன்பம் தீர ,நினைத்தது நிறைவேற ஹனுமான் சாலிசா பிரயோகம்

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று ஒரு தேங்காய் வாங்கிக் கொள்ளவும்.ஒரு சிகப்புநிற  காட்டன் நூல் வாங்கி அதை உங்கள் தலை முதல் பாதம் வரை அளக்கவும்.அந்தச் சிகப்பு நூலைத் தேங்காயில் சுற்றவும்.பின்னர் தேங்காயில் செந்தூரம் (ஆரஞ்சு நிறம்) கொண்டு ஒரு ஸ்வஸ்திக் வரையவும்.


பின்னர் அந்தத் தேங்காயைக் கையில் வைத்துக் கொண்டு  ஹனுமான் சாலிசா ஸ்லோகத்தைக் குறைந்தது 3 தடவை அதிகபட்சம் 9 தடவை ஜெபிக்கவும்.ஜெபித்து முடித்த பின் அந்தத் தேங்காயை ஹனுமான் ஆலயத்தில் கொடுத்து விடவும்.உங்கள் நியாயமான கோரிக்கைகள்  நிறைவேறும்.மேலும்,வாழ்வில் பல துன்பங்கள்,தொடர் இழப்புகள், சரிவுகளைச் சந்தித்து வாழ்வா,சாவா என்ற நிலையில் உள்ளவர்களும் இதைச் செய்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.


கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்ய ஹனுமான் சாலிசா ஸ்லோகத்தைக் காணலாம்.

http://anumar.vayusutha.in/sthuthi1.html





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Saturday, 12 March 2016

கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்


ஒரு சுத்தமான இரும்புத் தட்டு ஒன்று எடுத்துக் கொள்ளவும்.ஒரு கற்பூரத்தைத் தரையில் ஏற்றி அதற்குச் சில அங்குலம் மேல் அந்தத் தட்டைக் கவிழ்த்துப் பிடிக்கவும்.அதில் புகைபட்டு, கரி பிடிக்கும்.அந்தக் கரியைத் தொட்டுத் தெற்கு நோக்கி அமர்ந்து, ஒரு தூய்மையான வெள்ளை நிறப் பேப்பரில் யார் பணம் தர வேண்டுமோ அவருடைய பெயரை வலது கை நடுவிரலால் எழுதவும்.எழுதும் பொழுது அவர் முகத்தை மனதில் நிறுத்தி அவர் விரைவில் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டே எழுதவும்.பின்னர் அந்தப் பேப்பரை மடித்து அதன் மேல் ஒரு கனமான பொருள் அல்லது கல் ஒன்றை வைத்து விடவும்.விரைவில் அந்தப் பணம் உங்களிடம் வந்து சேரும்.இதை வியாபாரிகள்,தனி நபர்கள்,தொழில் செய்பவர்கள், நிறுவனங்கள் நடுத்துபவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Tuesday, 1 March 2016

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும் மந்திரம்





பாற்கடல் கடையும் பொழுது  அதில் இருந்து தோன்றிய உயர்ந்த பொருட்களில் ஒன்று சங்கு அதிலும் வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது .மகாலட்சுமிக்கு ஈடானது ஏன் என்றால் மகாலக்ஷ்மியும் அதில் இருந்து தோன்றியவளே.எனவே வலம்புரிச் சங்கு "லக்ஷ்மி சகோதராய" என்று அழைக்கப் படுகிறது.ஸ்ரீ மஹாவிஷ்ணு  வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை ஹ்ருதய கமலத்திலும் தாங்கியபடி காட்சி யளிக்கிறார்.

வலம்புரிச் சங்கு வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை :-
1.கரும்புள்ளிகள்,கருப்பு நிறத்தில் குழிகள் இருக்கக் கூடாது.
2.செயற்கை நிறங்கள் பூசப் பட்டதாக இருக்கக் கூடாது.
3.வெடிப்பு,கீறல் இல்லாததாக இருக்க வேண்டும்.
4.வாய் பகுதி மற்றும் பிற பகுதிகள் சேதமடையாததாக இருக்க வேண்டும்.
5.தாமச குணம் என்று சொல்லப்படும் மந்தபுத்தி உடையவர்கள்,மாந்திரீகம் செய்பவர்கள் மட்டும் கருநிற வலம்புரிச் சங்கு பயன்படுத்தலாம். மற்றவர்கள் கருப்பு தவிர வெண்ணிற அல்லது  மாநிறம் உள்ள சங்கைப் பயன்படுத்த வேண்டும்.வெள்ளையே சிறந்தது.


1.சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது.

2.வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு வாழை இலையில் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அதன் மேல் சங்கை வைத்து இந்த மந்திரத்தை சொல்லவும்.அல்லது ஒரு மஞ்சள் பட்டு அல்லது மஞ்சள் காட்டன் துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து அதன் மேல் சங்கை வைத்து அதற்குச் சந்தனம்,குங்குமம் வைத்து மல்லிகை,பிச்சி,ரோஜா அல்லது செந்தாமரை மலர்கள் கொண்டு கீழே உள்ள மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜெபித்து அர்ச்சிக்கவும்.பின்னர் சாம்பிராணி அல்லது ஊதுவத்தியால் தூபம் காட்டிக் கற்பூர தீபம் காட்டிக்  கற்கண்டு,பால் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யவும்.

3.பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சங்கை மஞ்சள் பட்டு அல்லது காட்டன் துணியில் சுற்றி வைக்கலாம்.அல்லது ஒரு சிறிய பித்தளை,வெள்ளி, செம்பு தட்டு அல்லது கிண்ணத்தில் சுத்தமான நீர் ஊற்றி அதில் சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு அதில் வைக்க நல்ல பலன்களைத் தரும்.அந்த நீரைத் தினமும் மாற்ற வேண்டும்.முந்தைய நாளில் பயன்படுத்திய நீரைக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வறுமை நீங்கும்.
குளிக்க முடியாதவர்கள் அந்த நீரை காலில் மிதிபடாதபடி மரம் அல்லது செடிகளுக்கு  ஊற்றி விடவும்.

தொழில் செய்யும் இடங்களில் தெளித்து வரத் தொழில் விருத்தி உண்டாகும்.
வியாபாரிகள்,தொழில் அதிபர்கள் அந்த நீரால் முகம் கழுவி வெளியில் செல்ல சகல காரியங்களில் வெற்றியும் வசீகர சக்தியும் உண்டாகும்.

யாவரும் தினமும் அந்த நீரால் முகம் கழுவி வர அவர்களை ஒருபோதும் வறுமை வாட்டாது.


கீழே தரப்பட்டுள்ள மந்திரங்களில் உங்கள் மனம் விரும்பும் மந்திரம் எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து ஜெபிக்கலாம்.பூஜை ஆரம்பித்து முடியும் வரை மந்திரத்தை மாற்றக்கூடாது.

1.ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகோதராய நமஹ 

2.ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீதரகரஸ்தாய | பயோனிதி ஜாதாய |லக்ஷ்மி சகோதராய | தக்ஷிணாவர்த்த சங்காய நமஹ ||

3.ஓம் ஹ்ரீம் ஸ்ரீதர கரஸ்தாய |  லக்ஷ்மி ப்ரியாய | தக்ஷிணாவர்த்த சங்காய |மம சிந்தித  பல ப்ராப்தார்த்தாய  நமஹ ||
   

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Monday, 29 February 2016

செல்வ வளமும்,தொழில் விருத்தியும் தரும் ஸ்ரீ ஐஸ்வர்யலட்சுமி மந்திரம்







இந்தப் பூஜையைத் தீபாவளி,நவராத்திரி,மாதப்பிறப்பு போன்ற ஏதாவது சுப தினங்களில் வருடத்திற்கு 2 அல்லது 3 தடவை செய்து வர நிறைவான பலன்களை எதிர்பார்க்கலாம்.


வளர்பிறை வியாழக்கிழமை அன்று மாலை குளித்து முடித்துச் சுத்தமான ஆடை அணிந்து மஞ்சள் துண்டு மேல்வஸ்திரமாக அணிந்து அகல் விளக்கு அல்லது வெள்ளி விளக்கில் நெய் ஊற்றித் தாமரைத்தண்டு அல்லது பன்னீரில் நனைத்துக் காய்ந்த பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றவும்.

ஒரு கும்பத்தில் நீர் நிரப்பி அதில் இரண்டு ஏலக்காய்,இரண்டு கற்கண்டு, சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு,ஒரு மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து அதில் 11 மாவிலைகளைச்   சுற்றி வைத்து கும்பத்திற்குப் பூச்சூடவும்.வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு வாழை இலையில் மஞ்சள் பொடியால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அந்தச் செம்பை அதன் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபிக்கவும்.

நைவேத்தியமாக வெல்லம்,தேங்காய்த் துருவல்,ஏலக்காய் போட்டுக் காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பழங்கள் வைக்கவும்.மல்லிகை,பிச்சி (முல்லை ) அல்லது வாசனை உள்ள ரோஜாப் பூக்கள் ஜெபத்திற்கு உகந்தவை.

ஜெபம் முடிந்ததும் ஜெபம் யாருக்காகச் செய்யப்பட்டதோ அவர் தன் மீது அந்த கும்பதீர்த்தத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்துக் கொள்ளவும்.பின் கும்பதீர்த்தத்தை  தொழிற்சாலை,கடை முழுவதும் தெளித்து விடவும்.சர்வ பீடை,கண் திருஷ்டி,தரித்திரம் நீங்கி லாபம் கொழிக்கத் துவங்கும்.



இந்த பூஜையை வீட்டிலும் செய்யலாம்.தரித்திரம் நீங்கி செல்வநிலையில் உயர்வு கிட்டும்.



மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் லக்ஷ்மீ | துர்பாக்ய நாசினி சௌபாக்ய ப்ரதாயினி |
ஸ்ரீம் ஸ்வாஹா ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

சர்வ கார்ய சித்தி தரும் பிரதோஷ கால மந்திர ஜெபம்




இதை வளர்பிறை பிரதோஷத்தன்று  பிரதோஷ வேளையில் ஜெபிக்கத் துவங்கி தொடங்கவும்.

தூய்மையான இடத்தில் அமர்ந்து தூய ஆடை அணிந்து விளக்கேற்றி ருத்ராக்ஷ மாலையால் மந்திரத்தை 1008 எண்ணிக்கை ஜெபம் செய்து பின்னர் ஹோமபாத்திரம் அல்லது ஹோம குண்டம் அமைத்து ஹோம அக்னியில் 108 எண்ணிக்கை ஒவ்வொரு தடவை மந்திரம் ஜெபிக்கும் பொழுது ஒரு அஸ்வகந்தா பூ (அமுக்கரா பூ) போடவும்.ஜெபம் முடிந்ததும் விளக்கிற்குச் சாம்பிராணி அல்லது ஊதுவத்தியினால் தூபம், கற்பூரதீபம் காண்பித்துப் பூஜையை நிறைவு செய்யவும்.இது போல் தொடர்ந்து 7 பிரதோஷங்கள் செய்ய வாழ்வில் சர்வ காரியங்களும் வெற்றியடைந்து   வளமான வாழ்வு வாழலாம் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

மந்திரம் :

ஓம் நமோ பத்மாவதி பத்மநேத்ர |
வஜ்ர வஜ்ராங்குச ப்ரத்யக்ஷம் பவதி||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

சர்வ கார்ய சித்தியும் சர்வ வசீகரமும் தரும் மந்திரம்


சர்வ ஐஸ்வர்யமும்,எல்லோராலும் நேசிக்கப்படும் பேறும்,மனோ விருப்பங்களை நிறைவேற்றும் ஸ்ரீ பத்மாவதி தாய் மந்திரம்.

இம்மந்திரம் சித்திக்க லக்ஷம் உரு ஜெபிக்க வேண்டும்.12 ஆயிரம் உரு ஜெபத்திற்கு மேல் பலன் தெரிய ஆரம்பிக்கும்.லக்ஷம் உரு ஜெபித்தவர்கள் தங்கள் இறுதிக்காலம் வரை வறுமையை அனுபவிக்க மாட்டார்கள்.

இதை வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று மாலை  5:30 முதல் 7:30 மணிக்குள் ஜெபிக்க ஆரம்பித்து அவரவர் திறனுக்கேற்ப ஜெபம் செய்து வருதல் நன்று.

தினமும் இரவில் குளித்து முடித்துத் தூய்மையான இடத்தில் அமர்ந்து தூய ஆடை அணிந்து முன்னால் அகல் விளக்கு அல்லது வெள்ளி விளக்கில் நெய் ஊற்றித் தாமரைத்தண்டு அல்லது பன்னீரில் நனைத்துக் காய்ந்த பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றவும்.


மந்திரம் :
ஓம் நமோ பகவதி பத்மாவதி |சர்வஜன மோஹினி|
சர்வகார்யகாரிணி | மம விகட சங்கட சம்ஹாரிணி |
மம மனோரத பூரணி |மம சர்வ சிந்த பூரணி |
ஓம் பத்மாவதி நம ஸ்வாஹா ||



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

நிறைசெல்வம் தரும் ஸ்ரீ பத்மாவதி மந்திரம்



உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளில்  இம்மந்திரத்தை ஜெபிக்கத் துவங்கவும்.வெள்ளிக்கிழமையாக இருந்தால் சிறப்பு.

தினமும் இரவில் குளித்து முடித்துத் தூய்மையான இடத்தில் அமர்ந்து தூய ஆடை அணிந்து முன்னால் அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரைத்தண்டு அல்லது பன்னீரில் நனைத்துக் காய்ந்த பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றவும்.

தினமும் 108 தடவை தொடர்ந்து 21 நாட்கள் ஜெபிக்கவும்.

ஜெபம் செய்து வரும் நாட்களில் மது,மாமிசம்,உடலுறவு தவிர்க்கவும்.

ஸ்ரீ பத்மாவதி மந்திரம்

ஓம் நமோ பத்மாவதி | பத்மநேத்ர வஜ்ர வஜ்ராங்குச ப்ரத்யக்ஷம் பவதி ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Saturday, 20 February 2016

பாம்பு ஓட மற்றும் விஷ ஜந்துக்கள் தொல்லை தராமல் இருக்க


சிலர் வீட்டில் அடிக்கடி பாம்புகள் வந்து அதனால் விஷபயம் ஏற்பட்டு கஷ்டப் படுபவர்கள் பாம்பைக் கண்டுடன் முனிராஜ் ஆஸ்தீக் நமஹா என்று சில தடவைகள் சொன்ன உடனே பாம்பு நம் பார்வையில் படாமல் விலகிச் சென்று விடும்.இதை எந்த விஷ ஜந்துவை விரட்டவும் பயன்படுத்தலாம்.

வீட்டில் அல்லது கடையில் பாம்புத் தொல்லை நிரந்தமாக இல்லாமல் இருக்க விரும்புவோர் :

ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பரில் நான்கு பக்கமும் இம்மந்திரத்தைக் பன்னீர் விட்டுக் குழைத்த குங்குமத்தால் எழுதவும்.இது போல் 5 பேப்பரில் எழுதி வீட்டைச் சுற்றி நான்கு மூலைகளிலும் ஒவ்வொன்றைப் புதைத்து வைக்கவும்.மீதமுள்ள ஒன்றை வீட்டின் நிலைக் கதவில் சுருட்டி வைக்கவும் அல்லது லேமினேஷன் செய்து ஒட்டவும்.





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Thursday, 11 February 2016

யக்ஷணி மந்திர சித்தி தரும் யக்ஷராஜன் ஸ்ரீ குபேரதேவன் மந்திரம்



ஸ்ரீ யக்ஷராஜன் குபேரன் மந்திரம்,பிரயோகமும் 

யக்ஷிணி மற்றும் யக்ஷர்களின் அரசன் ஸ்ரீ குபேர தேவன் ஆவார்.நம்மிடம் நம் ஹிந்து மத நூல்களில் யக்ஷிணிகளை உபாசனை செய்து பலனடையும் மந்திரங்கள் மட்டுமே உண்டு. நம் கிரந்தங்களில் குபேரதேவன் மந்திரங்கள் பல உள்ளன.குபேரதேவனைத் தவிர பிற யக்ஷர்களின் உபாசனை  மந்திரங்கள் ஜைனர்களிடம்  ரகசியமாக உள்ளன. எக்ஷணி மந்திரங்களைச் சிலரிடம் உபதேசம் பெற்று ஜெபித்து வருகிறேன் ஆனால் தீக்ஷை தரும் பொழுது சொன்னவிதமாக பலன்களோ தரிசனமோ கிட்டவில்லை என்று பலர் வருத்தம் தெரிவித்தனர்.அவர்களின் குறை தீரும் பொருட்டு இம்மந்திரத்தை வெளியிடுகிறேன்.இதை 12000 எண்ணிக்கை ஜெபம் செய்தால் மந்திர சித்தியாகிவிடும்.பின்,எந்த யக்ஷிணி மந்திரத்தை ஜெபம் செய்யும் முன்னும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின் ஜெபம் செய்ய விரைவில் அந்த யக்ஷணி மனமகிழ்ந்து சாதகனுக்கு வேண்டுவன தந்தருள்வாள்.



மந்திரம் :-
ஓம் யக்ஷராஜ நமஸ்துப்யம் சங்கர ப்ரியபாந்தவ:|
காலா காலே மகா காலே யக்ஷிணி வசம்கா குரு ||


இம்மந்திரம் விரைவான முழுமையான பலன்களைத் தர ஜெபகாலங்களில் கடைப்பிடிக்கக் வேண்டியவை:-

1.பிரம்மச்சர்யம்
2.மௌன விரதம் இருக்கலாம்.அல்லது குறைவாக பேசவேண்டும்.
3.மது,மாமிசம்,புகையிலை தவிர்க்கவும்.
4.பகல் பொழுது தூங்கக்கூடாது.
5.இரவில் வெறும் தரையில் படுத்துத் தூங்கவேண்டும்.
6.நெற்றியில் மந்திரம் 3 தடவை ஜெபித்து சிகப்பு சந்தனம் அணிந்து கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

Monday, 8 February 2016

விரைவில் செல்வந்தராகத் தாந்த்ரீக ரகசியம்

பவளமல்லிச் செடி  



பவளமல்லிச் செடியின் வேரில் ஒரு சிறு துண்டும்,11 சிறிய வெள்ளைக் குண்டுமணியும் சேர்த்து ஒரு தாயத்தில் அடைத்துத் தூப,தீபம் காண்பித்து இடுப்பில் கட்டிக்கொள்ள  விரைவில் செல்வந்தராகலாம்.
வெண்குண்டுமணி என்பது சிகப்புக் குண்டுமணி போலவே இருக்கும் இதைச்  சேர்த்து ஜெபமாலையும் செய்கிறார்கள்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com 

தன ஆகர்ஷண ரகசியம்

நொச்சிச் செடிக்கு வெள்ளிக்கிழமை அன்று காப்புக்கட்டி அதன் ஆணிவேரை எடுத்து சந்தனம்,குங்குமம் தடவித் தூபம்,தீபம் காண்பித்து உங்கள் பர்சில் அல்லது கேஷ் லாக்கரில் வைத்துக்கொள்ள எந்த வழியிலாவது பணம் உங்களிடம் வந்து கொண்டே இருக்கும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com


ms.guru83@gmail.com

Thursday, 4 February 2016

கொடுத்த பணம் வசூலாகத் தாந்த்ரீகப் பரிகாரம்

மஞ்சள் பொடியைக் கொஞ்சம் நீர் விட்டுக் குழைத்து வைத்துக் கொள்ளவும். ஓம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனாய நமஹா  என்று 27 தடவை   ஜெபித்து விரைவில் இன்ன நபர் என் பணத்தை திருப்பித்தர அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிய பின்  பணம் திருப்பித்தர வேண்டியவரின் முகத்தை மனதில் நினைத்தபடியே அவரது பெயரை அந்த மஞ்சள் கலவையை ஒரு சிறு குச்சியால் தொட்டு  ஒரு தூய வெள்ளைப் பேப்பரில் எழுதவும். எழுதிய பின் அதைச் சுருட்டி ஒரு வெள்ளைநூலால் கட்டி ஆறு ,ஏரி ,கடல் போன்ற ஏதேனும் நீர் நிலைகளில் விட்டு விடவும்.விரைவில் பணம் திரும்பிவிடும்.இதை வெளிநபர்களிடம் சொல்லாமல் ரகசியமாகச் செய்யவும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

(ட்ரான்ஸ்பர்) பணிஇடமாற்றம் தரும் தாந்த்ரீகப் பரிகாரம்




பணி இடமாற்றம் விரும்புவோர் அதிகாலையில் குளித்து முடித்துச் சுத்தமான ஆடை அணிந்து 11 காய்ந்த மிளகாய் வற்றலை எடுத்துச் சூரியனை நோக்கி நின்று உங்கள் பணியிட மாற்றம் குறித்து வேண்டியபடியே அந்த மிளகாய்வற்றலைக் கிழக்குத் திசை நோக்கி எறிந்து விடவும்.இதை 43 நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவும்.43 நாட்களுக்கு முன்னரே உங்கள் விருப்பம் நிறைவேறினால் பரிகாரத்தை நிறுத்தி விடலாம்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

ஸ்ரீ சனீஸ்வரபகவானால் உண்டாகும் பாதிப்புகள் நீக்கும் எளிய தாந்த்ரீகப் பரிகாரங்கள்



1.உணவில் கருப்பு உப்பு அள்ளது கல்உப்பு  சேர்த்து வரலாம்.


2.கண்மை அல்லது இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சுர்மா பவுடர் கண்களில் போட்டு வர சனிக்கிரக கெடுபலன்கள் குறையும்.


3.ஜனன ஜாதகத்தில் 7 மற்றும் 11 ஆம் வீட்டில் சனி பகவான் அமையப் பெற்றவர்கள் புதிதாக ஒரு சிறு மண்கலயம் அல்லது பானை வாங்கி ஆலயத்திற்கு அல்லது வயதானவர்களுக்குத் தானமாக வழங்க சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.


4.மேலும்,ஏழாம் இடத்தில் சனிபகவான் அமையப் பெற்றவர்கள் ஏற்கனவே செய்துவரும் பரிகாரங்கள் எதுவானாலும் அவை முழுப் பலன்தர மது, மாமிசம்,புகையிலை,பீடி ,சிகரெட் போன்ற பழக்கங்களை அறவே கைவிட்டு விட தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.அல்லது பெரும்பொருள் இழப்பு,அவமானம்,நண்பர்கள் எதிரிகளைச் சரியாகக் கணித்து நடந்து கொள்ளும் திறன் இன்மை இவை ஏற்படும்.


5.இரும்பாலான பர்னிச்சர் பொருட்கள் பயன்படுத்துவது சனீஸ்வரருக்கு பிரியமானது எனவே இதுவும் கெடுபலன்கள் குறைய உதவும்.



6.ஜாதகத்தில் சனீஸ்வரர் பாதகமான ஸ்தானத்தில் அமைந்து  அதனால் குழந்தை இன்மை அல்லது அடிக்கடி கரு களைந்து போகுதல் இவை ஏற்பட்டால் அந்தப் பெண்மணி தான் உண்ணும் முன் தான் உண்ணும் உணவில் உள்ள அத்தனை வகைகளிலும் தனியே சிறிது எடுத்து வைத்து அதை கருப்பு நிறமுள்ள நாய்க்கு போட்டு வர இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.கருப்பு நிற நாய்க்கு இடுவது சிறப்பு, தங்கள் பகுதியில் கருப்பு நிற நாய் இல்லாதவர்கள் வேறு நாய்க்குப் போடலாம்.
நாய்க்கு உணவு படைக்கும் பொழுது அதை பைரவராகப் பாவித்து மனதிற்குள் ஓம் ஹ்ரீம் காலபைரவாய மம சனிக்கிரக தோஷம் நசி நசி என்ற  மந்திரத்தை 3 தடவை ஜெபித்துக் கொள்ளவும்.
இந்தப் பரிகாரத்தைச் செய்ய முடியாத பெண்கள் ,குளிக்கும் முன்  அந்த நீரில் ஒன்றிரண்டு மரமஞ்சளைப் போட்டுச் சில நிமிடங்கள் கழித்துக் குளித்து வரவும்.

7.ஜனன ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனியும்,ராகுவும் சேர்ந்து 
இருந்தால் அல்லது சனிதசை,புத்தி,அந்தரம் இவற்றில் பாதகமான பலன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால் சனிக்கிழமை தோறும் யூகலிப்டஸ் இலை ஒன்றை எடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொள்ளவும்.இதனால் சனிக்கிரக பாதிப்புகள் குறையும்.


வாழ்கவளமுடன்
M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 /9 788493072

Wednesday, 3 February 2016

மகாலட்சுமி வீட்டில் நிலைத்து வாசம் செய்ய அருளும் மந்திரம்



தினமும் விளக்கேற்றும் முன் ஊதுவத்தி ஏற்றி வீட்டு நிலைவரை சென்று இந்த மந்திரத்தை 3 தடவை ஜெபித்தபின் அந்த ஊதுவத்தியை விளக்கிற்கு முன் வைத்து விளக்கேற்ற வேண்டும்.அதன் பின் விளக்கிற்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும்.முடிந்தால் பூக்கள் சூடலாம்.இதை அதிகாலையிலும் இரவு துவங்கும் வேளையிலும் செய்து வர ஸ்ரீ மகாலட்சுமி என்றென்றும் நிரந்தரமாக உங்கள் இல்லத்தில் வாசம் செய்வாள்.இதை அலுவலகம், கடை, போன்ற இடங்களிலும் முடிந்த நேரங்களில் செய்யலாம்.
வெள்ளிக்கிழமைக மாலை நேரத்தில் பன்னீர் வாங்கி வைத்து இம்மந்திரத்தை 108 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து அந்தப் பன்னீரை வீட்டில், கடையில்,வீட்டில் உள்ளவர்கள் முகத்தில் தெளித்து வர தரித்திரம் நீங்கி வளம் கொழிக்கும்.


மந்திரம் :-

ஓம் சபரிதேவ்யோ மம க்ருஹே லக்ஷ்மி ஸ்திர  குரு குரு  ஸ்வாஹா ||


வாழ்கவளமுடன்
M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 /9 788493072

Monday, 1 February 2016

பண வரவை அதிகரிக்கும் எண் யந்திரம்

                                                            வாழ்கவளமுடன்


உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்லநாளில் வெள்ளை விரிப்பு விரித்து அதில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கீழே உள்ள யந்திரத்தை ஒரு சுத்தமான வெள்ளை நிறப் பேப்பரில் சிகப்பு மையால் எழுதவும்.பின்,அதற்குப்  பஞ்சோபசார பூஜை செய்யவும்.

பஞ்சோபசார பூஜை முறை :-

1.யந்திரத்திற்குச் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
2.யந்திரத்திற்குச் செந்தாமரை இதழ்கள் அல்லது மல்லிகை அல்லது பிச்சிப் பூவால் அர்ச்சனை செய்யவும்..
3.ஊதுவத்தி காண்பிக்கவும்.
4.கற்பூரம் காண்பிக்கவும்.
5.வெற்றிலை பாக்கு,பழம்,கற்கண்டு,தேங்காய் ,பால் நைவேத்யம் செய்யவும்.

பின்னர் யந்திரத்தை லேமினேட் செய்து கல்லாவில் வைத்துக்கொள்ளவும். பெரிய கம்பெனியாக இருந்தால் கேஷ் பாக்ஸ் அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ளப் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அளவிற்கு நிறைவாக வந்து கொண்டே இருக்கும்.



                                                      வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி
9442193072
9788493072

Tuesday, 26 January 2016

குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்




உங்கள் ஜாதகத்தில் குரு க்ரஹ தோஷம் உள்ளது என்று ஜோதிடர் கூறினால் அதன் பாதிப்பு நீங்கித் திருமணம் மற்றும் வாழ்வில் சுப காரியங்கள் இனிதே நடைபெறக் கீழ்க்கண்ட செலவற்ற,எளிய பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ செய்து வர விரைவில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


1.அதிகாலையில் எழுந்து,குளித்துவிட்டு நெற்றியில் மஞ்சள்பொடி,சந்தனம் அல்லது குங்குமம் வைத்துக் கொள்ளவும்.

2.அரசமர வேருக்கு வலது உள்ளங்கையில் பட்டுச் செல்லும்படி  நீர் ஊற்றவும்.
3.வீட்டிலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ மஞ்சள்நிறமான பூக்கள் கொண்ட செடிகளை வளர்க்கலாம்,

4.முடிந்தால் வியாழக்கிழமை தோறும் விரதமிருக்கலாம்.அல்லது அரை வயிறு உண்டு ,தகாத மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கவும்.

5.வியாழக்கிழமை அன்று மௌன விரதம் இருக்கலாம்.நாள் முழுக்க மௌன விரதம் இருக்க முடியாதவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 மணிக்குள் குளித்து முடித்து 6 முதல் 7 மணி வரை மௌனமாக இருந்து ஏதேனும் மந்திரங்களை மனதிற்குள் ஜெபித்து வரலாம்.அல்லது தியானம் செய்யலாம்.

6.கீழே உள்ள குரு யந்திரத்தை ஒரு தூய்மையான வெள்ளைப் பேப்பரில் மஞ்சள் பொடியும்,பன்னீரும் கலந்த கலவையினால் வரைந்து 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைத்து பிரேம் செய்து வடக்குப் பக்கச் சுவற்றில் மாட்டி வணங்கி வரவும்.

குருபகவான் எண் யந்திரம் 



   


வாழ்கவளமுடன்

M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com