Wednesday, 2 November 2016

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி திருநெல்வேலியில் 06.11.2016 ஞாயிறு அன்று

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி 

06.11.2016 ஞாயிறு அன்று திருநெல்வேலியில்

சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக் கவலைகள்,வறுமை, கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சர்வ ஐஸ்வர்யத்தோடு கூடிய நிறைவான வாழ்வு வாழ  உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர்: M.சூர்யா,திருநெல்வேலி.
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும், அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள், மகான்கள் காட்டும் வழிமுறைகள்.


2.வாழ்நாள் முழுக்க பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.


3.எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர மற்றும் பஞ்சபக்ஷி சாஸ்திர இரகசியங்கள்.


4.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


5.இந்து மத,சூபி வழிமுறை மற்றும் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் தெய்வங்களின் சக்திவாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்களைப் பின்பற்றி வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் வெற்றியும் பெற உதவும் வழிமுறைகள்.
  

6.உங்கள் குல தெய்வ, அதிர்ஷ்ட தெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களின் உத்தரவாதமான அருளுதவி பெற உபாசனை முறைகள்.


7.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.


8.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள். 


9.உடனடி பலன் தரும் மந்திரங்கள் மற்றும் தாந்த்ரீக ரகசியங்கள் . 


10.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி காத்துக் கொள்ளத் தெய்வீக உதவி பெறும் வழிமுறைகள். 


வகுப்பு முடிவில் தொழில் விருத்தி,பணப்புழக்கம் அதிகரிக்க மற்றும் குடும்பப் பாதுகாப்பிற்கு யந்திரம் வழங்கப்படும்.

வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.

---------------------------------------------------------------------------------------



பயிற்சிக்கு வருபவர்கள் தங்கள் வருகையைக் கீழ்க்கண்ட மொபைல் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உறுதி செய்யவும்.

M.சூர்யா :-9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப்
எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். 

பயிற்சி நாள் :- 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி கட்டணம் :- ரூபாய் 1,000 மட்டும்.
பயிற்சி நேரம் :காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை  பயிற்சிக்கு வருபவர்களுக்கு நோட்புக்,பேனா,இருவேளை தேனீர் ,மதிய உணவு வழங்கப்படும்.
--------------------------------------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

போகர் குடில்
94B,சேரன்மகாதேவி ரோடு,
கோடீஸ்வரன் நகர் (குளத்தங்கரை பள்ளிவாசல் எதிரில்)
பேட்டை,
திருநெல்வேலி 

9442193072 / 9788493072  

பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் :குளத்தங்கரை பள்ளிவாசல்

திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து பேட்டை மற்றும் பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து பேருந்துகளும்  குளத்தங்கரைப் பள்ளிவாசல் ஸ்டாப்பில் நிற்கும்.
   

வரும் வழி :-

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ளக்     கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.
சூர்யா : 9442193072 / மூர்த்தி : 9443677730



பயிற்சிக்கு கட்டணம் நேரில் வந்து செலுத்திக் கொள்ளலாம்.
நண்பர்களுக்குப் பகிருங்கள் !!!
--------------------------------------------------------------------------------------------------
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com    

Friday, 28 October 2016

மனஅமைதி பெறவும்,அதீத கோபம் நீங்கவும் சாந்த துர்கா மந்திரம்

சாந்த துர்கா மந்திரம் :-

நமோ துர்கா மஹாதுர்கே நவதுர்கா ஸ்வரூபிணி |
கைவல்யவாஸினி தேவி சாந்த துர்கே நமோஸ்துதே ||

வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு செம்பில் நீர் வைத்து  இம்மந்திரத்தை ஜெபித்து நீர் அருந்தி வர மனக்கவலைகள் தீர்ந்து மனஅமைதி உண்டாகும்.

இரவில் தூக்கம் வராதவர்கள் இதைச் செய்து வர நிம்மதியான தூக்கம் வரும்.




வாழ்கவையகம் | வாழ்க வளமுடன் ||

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com  

Thursday, 13 October 2016

நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம் 28.8.2026 வெள்ளிக்கிழமை காலை 9.29 முதல் 11.29 வரை

சோடசக்கலை நேரம்

சோடசக்கலை நேரம் 28.8.2026 வெள்ளிக்கிழமை காலை 9.29 முதல் 11.29 வரை 


எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர்.

( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!

இந்த சோடசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள்  
Trinity எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும்,  
முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த  ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும்          (பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன்,கடல்பசு,கடல் பாசிகள்,ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,
பல்லி,ஆந்தை,புறா,கிளி,காட்டெருமை, காண்டாமிருகம், நாய்,குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும்  சூட்சுமமாக அதிரும்.


அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.


ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.


இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும் போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்து விடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

 
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.

அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை (திருமணம்,
 பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.
தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.


இந்த நேரத்தில் தியானம் செய்யலாம் அல்லது கீழே உள்ள மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.

1.ஓம் ரீங் சிவ சிவ
2.ஓம் ரீங் அங் உங் 
3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் 




சோடசக்கலை நேரத்தில் கிறிஸ்தவர்கள் "யா கேப்ரியல்" (YAA GABRIEL) என்று பச்சை மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிக்கலாம்.பச்சை மெழுகுவர்த்தி கிடைக்காதவர்கள் வெள்ளை மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிக்கலாம்.மேற்குத் திசை பார்த்து நின்று ஜெபிக்கவும்.



இஸ்லாமியர்கள் வெள்ளை ஆடை அணிந்து ஒழுச் செய்த பின், அத்தர்  பூசி  மேற்குத் திசை பார்த்து நின்று "யா வஹ்ஹாப்"(YAA WAHHAAB) அல்லது யா ராஃபியு (YAA RAAFIYU) என்று ஓதவும்.




வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் : 9788493072
ms.spiritual1@gmail.com 
facebook ID:  https://www.facebook.com/surya.joy.52