Sunday, 15 October 2017

தொழில் விருத்தி ,தன விருத்தி யந்திரம்


இந்த யந்திரத்தின் பலன் :-
அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்து வ்ரும். 
பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தொழில் சார்ந்த கடன்கள் தீரும்.
-----
இந்த பூஜையைச் செய்யும் நாளில் உங்களுக்கு ஆகாத திதி,நட்சத்திரம் மற்றும் படுபட்சி நாட்களைத் தவிர்த்து அதிர்ஷ்டமும்,பலமும் கூடிய நாளில் செய்யவும்.

வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ரஹோரையில்  அல்லது  வளர்பிறை  வியாழக்கிழமை அன்று  குரு ஹோரையில் செய்வது சிறப்பு.

வெள்ளிக்கிழமை அன்று செய்வதாக இருந்தால் வெள்ளை நிற ஆடை அணிந்து வெள்ளை விரிப்பில் அமர்ந்து பூஜை செய்யவும்.

வியாழக்கிழமை அன்று செய்வதாக இருந்தால் மஞ்சள் நிற ஆடை அணிந்து மஞ்சள் விரிப்பில் அமர்ந்து பூஜை செய்யவும்.

வெள்ளி அல்லது தங்கத்தகட்டில் வரைந்து பயன்படுத்தினால் நீண்ட கால பயனைத் தரும்.

வெள்ளித்தகடு பயன்படுத்துபவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ரஹோரையில் வரையவும்.

தங்கத்தகடு பயன்படுத்துபவர்கள் வளர்பிறை  வியாழக்கிழமை அன்று  குரு ஹோரையில் வரையவும்.

வெள்ளி அல்லது தங்கத்தகடு பயன்படுத்த முடியாதவர்கள் செம்புத் தகட்டில் யந்திரத்தை எழுதவும்.
 
நெய் விளக்கேற்றி விளக்கிற்குச் சந்தனம்,குங்குமம் வைத்துப் பூக்களால் அலங்கரிக்கவும்.அர்ச்சிக்கவும்.

வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பால் பாயசம் வைக்கவும்.

யந்திரத்தைப் பால்,இளநீர்,பன்னீர் விட்டுக் கழுவி,விபூதி போட்டு ஒரு சுத்தமான துணியால் துடைத்த பின் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமர்ந்து எழுதவும்.

யந்திரம் வரைய  இரும்பு பயன்படுத்தாமல் செம்பு,பித்தளை அல்லது வெள்ளிக் குச்சி பயன்படுத்தவும்.மாதுளை மரக்குச்சி பயன்படுத்தலாம்.

யந்திரம் வரைந்த பின்,பச்சரிசி பரப்பி அதன் மேல் யந்திரத்தை வைத்துச்   சந்தனம்,குங்குமம் வைத்து  நான்கு மூலையிலும் ஜவ்வாது தடவி "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வரியை நமஹ"  என்று 108 தடவை ஜெபித்து  மல்லிகை,முல்லை,பிச்சி போன்ற வெண்ணிறப் பூக்களால் யந்திரத்திற்கு  அர்ச்சனை செய்யவும். 

அர்ச்சனை செய்த பின் விளக்கிற்கும்,யந்திரத்திற்கும் தூபம்,தீபம் காட்டவும்.

பூஜை முடிந்ததும் ஒரு சிறிய மண்பானையில் யந்திரத்தை வைத்து அதனுள்  கொஞ்சம் பூக்கள் போட்டு, கீழ்க்கண்ட நான்கு பொருள்களையும் பானையில் போட்டு மஞ்சள் துணியால் பானையின் வாய்ப்பகுதியை மூடவும்.பூஜை செய்த அன்றே நல்ல நேரமிருந்தால் அன்றும் அல்லது இன்னொரு நல்ல நாள்,நல்ல நேரத்திலோ தொழில் ஸ்தாபனத்தில் முக்கியமான பொறுப்பில் உள்ள நபர் அல்லது முதலாளி அமரும் இடத்தின் கீழ் பானையைப் புதைத்து வைக்கவும்.  

பானையில் யந்திரத்துடன் போட வேண்டிய பொருட்கள்:-
கொட்டைப்பாக்கு கொஞ்சம் 
மஞ்சள் கொஞ்சம் 
தனியா (கொத்துமல்லி விதை) கொஞ்சம் 
வெள்ளி நாணயம் அல்லது ஒரு ரூபாய் நாணயம் 


நன்றி .வாழ்கவளமுடன்

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      :  9442193072


WHATSAPP : 9788493072

Wednesday, 4 October 2017

குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்


ஓம் கம் கணபதயே நமஹ மம புத்ரஸ்ய புத்தி தேஹி தேஹி ஹூம் பட்


வளர்பிறை புதன்கிழமை அன்று  தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமையும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும்.

கிழக்கு பார்த்து ஜெபிக்கவும்.

ஒவ்வொரு தடவை மந்திரம் ஜெபிக்கும் பொழுதும் அருகம்புல்லால் கணபதி படம் அல்லது சிலைக்கு அர்ச்சிக்கவும்.

என் மகன் / மகள் (உங்கள் குழந்தையின் பெயர் குறிப்பிடவும்) கல்வி வளர்ச்சிக்காக இந்த மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஜெபிக்க ஆரம்பிக்கவும் .

வெற்றிலை,பாக்கு,அவல்,பொரிகடலை,பால்,பழம் படைக்கவும். 


நன்றி.வாழ்கவளமுடன் 

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      : 9442193072

WHATSAPP : 9788493072

எதிர்பாராத பணவரவைத் தரும் ஸ்ரீ துர்கா தேவி மந்திரம்

உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத ஏதேனும் ஒரு நல்ல நாளில் வடக்குப் பார்த்து அமர்ந்து இந்த மந்திர ஜெபத்தை செய்யவும்.

துர்கா தேவி சிலை அல்லது படத்திற்கு பூக்கள் அணிவித்து,அதன் முன்  நெய் விளக்கேற்றி ,ஊதுவத்தி ஏற்றி வைக்கவும்.

நாள் ஒன்றுக்கு 1188 (108*11=1188) எண்ணிக்கை வீதம் தொடர்ந்து 1 வாரம் ஜெபிக்கவும்.

துர்கா தேவிக்கு நைவேத்யமாக இனிப்புகள் படைக்கவும்.பூஜை முடிந்த பின் ,சிறு பெண் குழந்தைகளுக்கு இனிப்புப் பலகாரங்கள் கொடுக்கவும்.

மூல மந்த்ரம்:-

ஓம் ஸ்ரீம் க்லீம் க்ரீம் தேவத்யை நமஹ : குரு குரு ரித்தி வ்ருத்தி ஸ்வாஹா 

நன்றி.வாழ்கவளமுடன் .

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      : 9442193072
WHATSAPP : 9788493072



Sunday, 1 October 2017

ஆன்மீக,யோக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு - சென்னையில் 08.10.2017 ஞாயிறு அன்று

வாழ்வின் முன்னேற்றத்திற்கும்,ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.நலமும் வளமும் கூடிய வாழ்விற்குச் சித்தர்கள்,மஹான்கள் மற்றும் தெய்வங்களின் பூரண அருளும்,உதவியும் பெறும் வழிமுறைகள். 


2.செல்வ வளம் பெற உதவும் எளிமையான மற்றும் விரைவான பலன் தரும் மந்திரங்களும்,விதிமுறைகளும்.

3.ஒன்று அல்லது இரண்டு மந்திங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஜெபித்து வருவதன் மூலம் அனைத்து வகையான நன்மைகளையும் வாழ்வில் பெறும் ரகசியம் 

4.நமக்கான சரியான ஆன்மீகப் பாதை எது என்று கண்டறிந்து அதில் விரைவாக உயர்வடைய உதவும் வழிமுறைகள்.

5.யோக நிலையில் வளர்ச்சி அடையவும்,உடலும்,மனமும் ஆரோக்கியம் பெறவும் உதவும் சித்தர்கள் அருளிய பயிற்சி முறைகள்.

6.நமது சூக்கும உடலில் உள்ள 7 சக்கரங்களையும் தூய்மை செய்து  சக்தியூட்டும் பயிற்சிகள்.

7.தடைகள் யாவும் தகர்ந்து சகல காரியங்களிலும் வெற்றி தரும் ஆன்மீக விதிகள்.

8.மந்திரங்கள் விரைவில் பலன் தரவும்,சாபங்கள்,தோஷங்கள் நீங்கவும் செய்ய வேண்டியவை.

9.மந்திர ஜெபம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போவதற்கான காரணங்களும்,அவற்றைச் சரி செய்யும் முறைகளும்.

10.வீடு,கடை மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து தோஷம் மற்றும் எந்த தோஷமும் நீங்கச் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்.

11.சைவ மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வளம் பெறும் உபாசனை முறைகள்.

-------------------------------------------------------------------------------

முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழலில் எளிய முறையில் செய்து பார்த்து விரைவான பலன் பெறக் கூடிய,
பலமுறை அனுபவத்தில் வெற்றி கண்ட முறைகளை மட்டும்
பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

*************************************
வகுப்பு முடிந்து செல்லும் பொழுது வாழ்க்கை என்றால் என்ன? விதி என்றால் என்ன? அதை நாம் மாற்ற முடியுமா? நாம் விரும்பியபடி நாம் வாழ முடியாமல் தடுப்பது எது ?
சரியை,கிரியை,யோகம்,ஞானம் போன்ற ஆன்மீகப் பாதையில் எது சிறந்தது ? இதை எனக்கான பாதை எது? வாழ்க்கையை நிறைவும், மகிழ்ச்சியும்,ஞானமும் உள்ள விதம் சரியான
கோணத்தில் வாழ்வது எப்படி? மற்றும் காமம் முதல் கடவுள் வரை அனைத்தயும் பற்றி தெளிவு பெறுவீர்கள்.
*************************************


வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஹீலிங் மற்றும் ஏழு ஆதாரச் சக்கரங்கள் தூய்மை செய்து அவற்றின் இயக்கம் சரி செய்யப்படும்.  

-------------------------------------------------------------------------------
தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ,
மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

-------------------------------------------------------------------------------
விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 


---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  08.10.2017 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : K.M.L.நாதன் திருமண மண்டபம் 
பெரம்பூர் -ரெட் ஹில்ஸ் ரோடு,புதிய லட்சுமி புரம்,கொளத்தூர்  
சென்னை 600009


பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் :கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம்(ரெட்ஹில்ஸ்) செல்லும் பேருந்தில் ஏறி ரெட்டேரி சிக்னல்  ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து நடந்து வரவும் 


வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள கீழ்கண்ட இரு நபர்களில் ஒருவரைத் தொடர்பு கொள்ளவும்.
திரு.சக்திவேல்  -   9841530789
திரு.செல்வம்     -   9841685645
------------------------------------------------------------------------------

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


M.சூர்யா-தச்சநல்லூர்,
திருநெல்வேலி

மொபைல்   : 9442193072
வாட்ஸ்அப்  : 9788493072

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

----------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072 

ms.spiritual1@gmail.com 



Wednesday, 27 September 2017

தீமைகளை நீக்கும் எளிய தாந்த்ரீக பரிகாரங்கள்


1.தினமும் இரவில் உறங்கும் பொழுது தலையணையின் கீழ் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலையில் விழித்த்து எழுந்த பின் அதை வீட்டில் சுத்தம் செய்யும் வேலை செய்பவர் அல்லது வீட்டு வேலை செய்பவர்களிடம் கொடுத்து விடவும்.இப்படித் தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர நாம் அனுபவித்து வரும் தீமைகள் விலகும்.


2.ஒரு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவும்.காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அந்த வெள்ளைப்பூண்டு காய்ந்து வறண்டு இருந்தாலோ அல்லது அடர்மஞ்சள் நிறமாக இருந்தாலோ உங்களுக்கு மாந்த்ரீக ரீதியாக ஏதோ தீமை செய்யப்பட்டுள்ளது அல்லது அதிகமான கண்திருஷ்டி உள்ளது என்று அர்த்தம்.தகுந்த பரிகாரம் செய்து கொள்ளவும்.

3.ஹனுமான் சிலை அல்லது படத்தின் முன் ஒரு விளக்கேற்றி 2 கிராம்பு எடுத்து அதை அந்த தீப ஜோதியில் எரித்து விடவும்.அதன் பின் ஹநுமானுக்கு தூபம்.தீபம் காட்டவும்.

4.முக்கியமான காரியமாக வெளியில் செல்லும் பொழுது,வீட்டின் தலை வாசலில் கருப்பு மிளகு கொஞ்சம் வைத்து அதை மிதித்த பின் வெளியில் கிளம்ப காரிய சித்தியாகும்.

5.கொஞ்சம் கருப்பு மிளகு,கொஞ்சம் பணம் அல்லது நாணயங்களை வைத்து ஒரு கருப்புத் துணியில் வைத்துக் கட்டி அதை யாருக்காவது தானமாகக்  கொடுத்து விடவும்.இதனால் சனீஸவர பகவானால் ஏற்படும் தோஷங்கள், கெடுபலன்கள் குறையும். 


6. ஐந்து கருமிளகு எடுத்துக் கொள்ளவும்.நான்கு தெருக்கள் அல்லது ரோடுகள் இணையும்  நாற்சந்திக்குச் சென்று ஒவ்வொரு மிளகை ஒவ்வொரு திசையில் வீசவும்.ஐந்தாவது மிளகை வானை நோக்கி வீசவும்.பின்னர் திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குச் செல்லவும்.


7.ஐந்து அல்லது அதற்கு அதிகமாகவோ ஊதுவத்தி ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை ஜெபித்தபடி வீடு அல்லது அலுவலகத்தின் 4 திசை மற்றும் 4 மூலைகளிலும்,வானை நோக்கியும் பூமிக்கும்  என 10 திசைகளிலும் காட்டி வர துஷ்ட சக்திகள் ,கண் திருஷ்டி பாதிப்புகள் நீங்கும்.

   
நன்றி.வாழ்கவளமுடன் .

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      : 9442193072
WHATSAPP : 9788493072


Friday, 15 September 2017

கணவன் மனைவி அன்புடன் வாழ உதவும் காமதேவன் மந்திரம்


இம்மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று துவங்கி, தொடர்ந்து ஜெபித்து வரவும்.

தினமும் சுக்ர ஹோரையில் ஜெபித்து வர விரைவான,நிறைவான பலன் கிடைக்கும்.

வெண்ணிற ஆடை அணிந்து ஜெபிக்கவும்.

கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.

சந்தனத்தை ஓம் க்லீம் காமதேவாய நம  என்று 3 தடவை ஜெபித்து குழைத்து நெஞ்சிலும் நெற்றியிலும் அணிந்து கொள்ளவும்.

ஓம் க்லீம் காமதேவாய நம  என்று 3 தடவை ஜெபித்துக் குங்குமத்தை நெற்றியில் அணிந்து கொள்ளவும்.

சிவாலயத்தில் உள்ள அம்மன் சன்னதியில் இருந்து ஜெபித்தால் விரைவில் பலிதமாகும்.

ரதி மன்மதன் படம் வைத்து அதன் முன் மஞ்சளால் ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் காமதேவன் யந்திரம் வைத்து அதன் மேல் நெய் விளக்கேற்றவும்.யந்திரம் வைக்க இயலாதவர்கள்,குங்குமத்தால் க்லீம்
என்று எழுதி  அதன் மேல் நெய் விளக்கேற்றவும்.

முடிந்தால், ரதி மன்மதன் படத்தின் அருகில் மஞ்சளால் ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் குங்குமத்தால் க்லீம்  என்று எழுதி  அதன் மேல் தம்பதிகள் போட்டோ ஒன்றை வைத்து ஜெபிக்கலாம்.

-------------------
ஆண்கள் இந்த மந்திரத்தை ஜெபிக்கவும் 

ஓம் காமதேவாய காம வசங்கராய | மம பத்னி ஹ்ருதயம் ஸ்தம்பய மோஹய மோஹய வசமானய  ஸ்வாஹா ||  

-----------------------------
பெண்கள் இந்த மந்திரத்தை ஜெபிக்கவும் 

ஓம் காமதேவாய காம வசங்கராய | மம பதி ஹ்ருதயம் ஸ்தம்பய மோஹய மோஹய வசமானய  ஸ்வாஹா ||
----------------
வெள்ளிக்கிழமை அன்று பகல் 6 முதல் 7 மணிக்குள் அல்லது இரவில் 8 முதல் 9 மணிக்குள் நெய்விளக்கேற்றி, அந்த தீபத்தில் ரதிதேவியையும், மன்மதனையும் எழுந்தருள வேண்டிய பின் இம்மந்திரத்தை ஜெபித்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை நெற்றியில் அணிந்து வரவும்.


நன்றி.வாழ்கவளமுடன் .

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      : 9442193072
WHATSAPP : 9788493072


Monday, 11 September 2017

காரியத்தடைகளை நீக்கும் கணபதி மந்திரம்



ஏதேனும் குறிப்பிட்ட காரியத்தில் அல்லது எடுத்த காரியங்களில் எல்லாம் தடைகளை அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தைத் தினமும் காலையில் 108 தடவை ஜெபித்து வர அவர்களது காரியங்கள் யாவும் இறையருளால் தடையின்றி நடந்தேறும்.

வளர்பிறை வியாழன் ,ஞாயிறு அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்று மந்திர ஜெபத்தை ஆரம்பிக்கவும்.

முதல் நாள் அவள்,பொறிகடலை,தேங்காய்,வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள் வைத்து ஜெபிக்கவும்.மற்ற நாட்களில் உங்களால் இயன்றதைப் படைத்து வழிபடவும்.

மந்திரம் :-

ஓம் க்லௌம் கம் கணபதயே மம வாஞ்சித கார்ய சித்தி குரு குரு ஸ்வாஹா


OM GLOUM GAM GANAPATHAYE MAMA VAANCHITHA KAARYA SIDDHI KURU KURU SWAHAA


நன்றி.வாழ்கவளமுடன் .


M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
 MOBILE      : 9442193072
WHATSAPP : 9788493072

Thursday, 17 August 2017

ஆன்மீக,யோக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு - கரூர் மாவட்டம் குளித்தலையில் 20.08.2017 ஞாயிறு அன்று

வாழ்வின் முன்னேற்றத்திற்கும்,ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு 




பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.நலமும் வளமும் கூடிய வாழ்விற்குச் சித்தர்கள்,மஹான்கள் மற்றும் தெய்வங்களின் பூரண அருளும்,உதவியும் பெறும் வழிமுறைகள். 

2.நமக்கான சரியான ஆன்மீகப் பாதை எது என்று கண்டறிந்து அதில் விரைவாக உயர்வடைய உதவும் வழிமுறைகள்.

3.யோக நிலையில் வளர்ச்சி அடையவும்,உடலும்,மனமும் ஆரோக்கியம் பெறவும் உதவும் சித்தர்களின் ஆன்மீக ரகசியங்கள்.

4. நமது சூக்கும உடலில் உள்ள 7 சக்கரங்களையும் தூய்மை செய்து  சக்தியூட்டும் பயிற்சிகள்.

5.தடைகள் யாவும் தகர்ந்து சகல காரியங்களிலும் வெற்றி தரும் ஆன்மீக விதிகள்.

6.மந்திரங்கள் விரைவில் பலன் தரவும்,சாபங்கள்,தோஷங்கள் நீங்கவும் செய்ய வேண்டியவை.

7.மந்திர ஜெபம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யமுடியாமல் போவதற்கான காரணங்களும்,அவற்றைச் சரி செய்யும் முறைகளும்.

8.வீடு,கடை மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து தோஷம் மற்றும் எந்த தோஷமும் நீங்கச் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்.

9.சைவ மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வளம் பெறும் உபாசனை முறைகள்.

10.செல்வ வளம் பெற ஜெபிக்க வேண்டிய மந்திரங்களும்,பின்பற்ற 
வேண்டிய விதிகளும்.


முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழலில் எளிய முறையில் செய்து பார்த்து விரைவான பலன் பெறக் கூடிய,
பலமுறை அனுபவத்தில் வெற்றி கண்ட முறைகளை மட்டும்
பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஹீலிங் மற்றும் ஏழு ஆதாரச் சக்கரங்கள் தூய்மை செய்து அவற்றின் இயக்கம் சரி செய்யப்படும்.  


தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ, மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

-------------------------------------------------------------------------------
விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 


---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  20.08.2017 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : 

அரசு வழக்கறிஞர்.Mr.நாகராஜன் 
பழைய கோர்ட் தெரு 
குளித்தலை 
கரூர் மாவட்டம்  
தொலைபேசி:7010554355  /  8903673696

குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில்.

குளித்தலை பேருந்து நிலையம் அருகில். 

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வரும் விபரம் பற்றி அறிய 7010554355 அல்லது 8903673696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


------------------------------------------------------------------------------

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


M.சூர்யா-தச்சநல்லூர்,
திருநெல்வேலி

மொபைல்   : 9442193072
வாட்ஸ்அப்  : 9788493072

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

----------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072 
ms.spiritual1@gmail.com 



Friday, 4 August 2017

ஸ்ரீ மாதங்கி காயத்ரி மந்த்ரம்


ஸ்ரீ மாதங்கி காயத்ரி மந்த்ரம் 

ஓம் சுக்ர ப்ரியாயை வித்மஹே
ஸ்ரீ காமேஸ்வர்யை தீமஹி
தந்நோ ஷ்யாமளா ப்ரசோதயாத்


வெள்ளிக்கிழமை காலை அல்லது இரவு சுக்ர ஹோரையில் குளித்து முடித்து ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் குங்குமம் பரப்பி இம்மந்திரத்தை வெற்றிலைக் காம்பால் எழுதி 108 தடவை ஜெபித்து அந்தக் குங்குமத்திற்குத்  தூபம்,தீபம்,கற்பூரம் காட்டிய பின் ஒரு குங்குமச் சிமிழில் வைத்துக் கொள்ளவும்.
(வெள்ளிக் குங்குமச் சிமிழ் சிறப்பான பலனைத் தரும்).

இம்மந்திரம் ஜெபித்து உருவேற்றிய குங்குமம் சர்வ வசீகரம் தரும்.

தம்பதிகள் அணிந்து வர அன்யோன்யம் அதிகரிக்கும்.

தொழில் அதிபர்கள்,வியாபாரிகள் அணிந்து கொள்ள அதிகமான வாடிக்கையாளர்களை  ஈர்க்கலாம்.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
WHATSAPP : 9788493072
ms.spiritual1@gmail.com 

Wednesday, 2 August 2017

செல்வவிருத்தி தரும் ஸ்ரீ ஸ்வர்ண கணபதி மந்திரம்




இம்மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வர வறுமை நீங்கி பொன்,பொருள் சேர்க்கையுடன் வளமான வாழ்வு கிடைக்கும்.


இம்மந்திரம் ஜெபிக்க ஆரம்பிக்கும் பொழுது,

ஓம் ஸ்ரீ பார்கவ ரிஷியே நமஹ என்று 3 தடவை சொல்லி எனக்கு இந்த மந்திரம் பலிக்க ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் என்று பார்கவ ரிஷியை வேண்டிய பின் மந்திரம் ஜெபிக்கவும்.




ஸ்ரீ ஸ்வர்ண கணபதி மந்திரம் 

ஓம் க்ஷ்ம்ர்யூம்  | க்ஷிப்ர கணபதயே | ஸ்வர்ண கேஹே வ்யவஸ்திதாய |
ஸ்வர்ணப்ரதாய | க்லீம் வஷட் ஸ்வாஹா || 


அன்பர்களின் வசதிக்காக மந்திரம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது 

OM KSHMRYOOM KASHIPRA GANAPATHAYE SWARNA GEHE WYAVASTHITHAAYA SWARNA PRATHAAYA KLEEM VASHAT SWAHA


சதுர்த்தி அன்று ஆரம்பிக்கவும்.(உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நாளாக இருக்க வேண்டும்.)

விநாயகர் படம் அல்லது விக்கிரகம் முன் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றவும்.
முதல் நாள் சுண்டல்,கொழுக்கட்டை,அவல்,பொரிகடலை, அச்சுவெல்லம், பழங்கள் வைத்து சிறப்பாக பூஜை செய்யவும்.அருகம்புல்லால் அர்ச்சிக்கவும்.


அடுத்து வரும் நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்யவும்.

சதுர்த்தி, சங்கடஹர  சதுர்த்தி நாட்களில் நைவேத்யம் சிறப்பாகப் படைத்து வழிபடவும்.

ருத்ராட்சம் அல்லது ஸ்படிக மாலையால் ஜெபிக்கவும்.


விரைவான பலன் பெற பிரயோகம்:

வெள்ளெருக்கு வடக்கு வேரில் செய்யப்பட்ட கணபதிக்கு ஆவாஹனாதி பூஜைகள் செய்து அவர் முன் அமர்ந்து இம்மந்திரம் ஜெபித்து வர சகல காரியத் தடைகள்,ஏவல்,பில்லி,சூனியம்,தீவினைகள் விலகி உயர்வான வாழ்வு அமையும்.


நன்றி,வாழ்க வளமுடன்

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE:9442193072
WHATSAPP : 9788493072       

Monday, 31 July 2017

அத்ரி மலை யாத்திரை 06.08.2017

பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அத்ரி மலை யாத்திரை, திட்டமிட்டபடியே 06.08.2017  ஞாயிறு அன்று மட்டும் ஒரு நாள் பயணமாகச்  செல்லவிருக்கிறோம்.


06.08.2017 அன்று காலை 7 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சேருமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.


அத்ரிமலைப் பயணம் முடித்து இரவு 8:00 முதல் 9:00 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அல்லது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேருமாறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


100 க்கும் அதிகமானவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.


உறுதியாக வருகை தர இருக்கும் அன்பர்கள் பெயர் மற்றும் ஊர் சொல்லி முன்பதிவு செய்து கொள்ளவும்.


யாத்திரைக் கட்டணம்: RS.1,200 மட்டுமே.



காலை மற்றும் மதியம் உணவு,மினரல் வாட்டர் பாட்டில் வழங்கப்படும்.


அன்பர்கள் சத்சங்கத்தில் கற்றுத்தரப்படும் விஷயங்களைக் குறித்துக் கொள்ள நோட்டும்,பேனாவும் மட்டும் கொண்டு வந்தால் போதும்.

அத்ரி மலையில் உள்ள புனித சுனையில் ஆண்டு முழுவதும் வற்றாமல் 
வந்து கொண்டே இருக்கும் தீர்த்த நீர் மிக சக்தி வாய்ந்தது.பல 
கோவில்களுக்கு கும்பாபிஷேகம்,வருஷாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த நீரை எடுத்துச் செல்வார்கள். நீங்களும் தீர்த்தம் எடுத்துச் செல்ல விரும்பினால் அதற்கேற்ப 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் வாட்டர் கேன் கொண்டு வந்து எடுத்துச் செல்லலாம்.



கீழ்க்கண்ட ஸ்டேட் பேங்க் அல்லது இந்தியன் வங்கி கணக்கில் பயணக் கட்டணம் ரூ.1200 அல்லது முன்பணமாக ரூ.500 செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


M.SUBRAMANIAN,STATE BANK OF INDIA,AC NO.32986914404,TIRUNELVELI BRANCH,IFSC CODE: SBIN0000932  BRANCH CODE:00932

R.KALAISELVI,INDIAN BANK,THACHANALLUR BRANCH,AC NO.936681178
IFSC CODE:IDIB000T093  BRANCH CODE:00T093


நன்றி - வாழ்கவளமுடன்

M.சூர்யா 
தச்சநல்லூர்,திருநெல்வேலி 
9442193072 
WHATSAPP 9788493072   

Sunday, 30 July 2017

அத்ரி மலை புனித யாத்திரை மற்றும் ஆன்மீக சத்சங்கம் 18.02.2018 ஞாயிறு அன்று

இதுவரை தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் என்னிடம் பயிற்சி பெற்ற பலரும்,பயிற்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களும் ஏதேனும் புனித ஸ்தல யாத்திரை ஏற்பாடு செய்து அங்கு பல ஆன்மீக விஷயங்களையும், சித்தர்கள் மற்றும் மஹான்கள் ஆன்மீக மற்றும் வாழ்வின் உயர்வுக்குச்  சொல்லியுள்ள பயிற்சி முறைகள் மற்றும் ரகசியங்களைக் கற்றுக் கொள்ளவும்,கலந்துரையாடவும் விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.
    
வரும் ஞாயிறு அன்று 18.02.2018 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அத்ரி மலையில் ஆன்மீகம்,சித்தர் ரகசியங்கள்,மந்திர ஜபம், யோகப் பயிற்சிகள், வாழ்விலும், ஆன்மீகத்திலும்  உயர்வடையப் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி அறிந்துகொள்ள நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அத்ரி மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் மற்றும் குற்றாலம் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.

அத்ரிமஹரிக்கும்,அனுசூயாதேவிக்கும் குழந்தையாக தத்தாத்ரேயர் என்ற பெயரில் மும்மூர்த்திகளும் அவதரித்தனர். இந்த புனித மலையானது ஸ்ரீ அத்ரி மகரிஷி,அனுசூயாதேவி,
கோரக்கர் முதலான சித்தர் பெருமக்கள் அருள் நிறைந்த ஸ்தலம்.        

இம்மலையையும் இதன் சிறப்பையும் பற்றி பல்வேறு சித்தர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.

கடனா அணைக்கட்டும்,வருடம் முழுவதும் நீர்வரத்தும் கொண்ட பசுமையான மலை.

மலை ஏறும் வழியில் ஆறும்,அருவியும் உள்ளது.அங்கேயே குளித்துக் கொள்ளலாம்.

மலைப் பயணம்  மற்றும் சத்சங்கம் முடிந்ததும் நேரம் இருந்தால் பொட்டல்புதூர் மற்றும் சிவசைலம் ஆலயங்களுக்குச் செல்லலாம்.


தமிழகத்தில் மேற்குப் பார்த்த படி அமைந்துள்ள சிவாலயங்களில் சிவசைலம் கோயிலும் ஒன்று.அத்ரிமலை செல்லும் வழியில் உள்ளது.


8 KM தொலைவில் பொட்டல்புதூர் என்ற ஊரில் முஹைதீன் ஆண்டவர் தர்கா உள்ளது.நம் சித்தர்களில் மூத்த மற்றும் முதன்மையான சித்தராக அகஸ்தியர் மதிக்கப்படுவது போல், இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பரம்பரையில் தர்காக்களில் அடக்கமாகி இருக்கும் அனைத்து ஞானவான்களுக்கும் தலைமைக் குருவாய் விளங்கும் முஹைதீன் ஆண்டவர்கள் தர்கா அமைந்துள்ளது. இங்கு நாகூர் ஆண்டவர் உட்பட தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பல இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள் தவம் செய்து அறிய ஆன்மீக உயரங்களை அடைந்திருக்கிறார்கள்.முஹைதீன் ஆண்டவரை வழிபட்டால் தீய சக்திகள் மற்றும் மாந்த்ரீகத்தால் ஏற்பட்ட தீவினைகள் விரைவில் தீரும்.மேலும் அவர்களை வழிபட்டுத் தரிசித்து, உதவி பெறும் முறைகளும் பகிரப்படும்.   


   
25 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருப்பதால் 
யாத்திரையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு அவசியம்.

கட்டணம்,வரும் வழி,வந்து சேர வேண்டிய நேரம் மற்றும் பிற விபரங்களைக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொண்டு அறிந்து கொள்ளவும்.


காலை,மாலை உணவுடன் குடிநீர் பாட்டிலும் 

கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு:-


1.விரதம் எதுவும்பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை.
பயணத்திற்கு அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அசைவம் சாப்பிடாமல் சைவ உணவு மட்டும் சாப்பிடவும்.

2.கடந்த முறை பயணத்தின் போது கலந்து கொண்ட பலருக்கும்  பாலா மந்திர தீட்சை தந்தேன்.மிகச் சிலர் மட்டுமே முறையாய் தொடர்ந்து ஜெபித்து வருகிறார்கள்.பலர் தொடர்ச்சியாய் செய்யவில்லை.

மந்திரசித்தியோடு லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வின் தடைகளை  
நீக்கி உயர்வான வாழ்வு வாழ உதவும் ஸ்ரீ வாலை கணபதி மந்திரம் தீட்சை தரப்படும்.

3.தண்ணீர் பாட்டில் 1 அல்லது அதற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.ஒன்று குடிப்பதற்கு, இன்னொன்று மலையில் உள்ள புனித தீர்த்தத்தில் நீர் பிடித்து வைத்துக் கொள்ளவும்.

4.  45 நிமிடங்கள் முதல் 1:30 மணி நேரம் வரை மலை ஏற வேண்டி இருப்பதால் மலை ஏற முடியாதவர்கள்,வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் பயணத்தைத் தவிக்கவும்.

5.முடிந்தவரையில் காலையில் சீக்கிரம் வர முயற்சி செய்யவும்.

6.காலையில் அதிக வெயில் வரும் முன் மலை ஏறும் படி முடிவு செய்திருப்பதால் முடிந்தவரை காலையில் சீக்கிரமே வர முயற்சிக்கவும்.அல்லது முன்தினம் வந்து ரூம் எடுத்து தங்கிக் கொண்டால் வசதியாக இருக்கும்.


மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.


நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072

------------------------------------------------------------------------------
அத்ரி மலையின் சிறப்புகள் :

இம்மலையில் அத்ரி முனிவர்,கோரக்கர்,பிருகு முனிவர் போன்ற சித்தர்கள்  தவம் இயற்றியுள்ளார்கள்.


பசுமை போர்த்திய மூலிகை மலைகள், வானத்தையும், வனத்தையும் இணைக்கும் மேகக்கூட்டங்களை காண கண்கோடி வேண்டும். அத்ரிமலை அடிவாரத்தில் கடனா அணை, ஜில்லென வீசும் பொதிகை மலைத்தென்றல், நாசி துவாரங்களை துளையிட்டு செல்லும் மூலிகை மனம்... என நற்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கடனா அணையை(85 அடி உயரம்) அடைய வேண்டும் அங்கிருந்து அணை வழியாக 7 கி.மீதுாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். இடையே அத்ரி கங்கா நதியை கடக்க வேண்டும். வனத்தில் செல்லும்போது சித்தர்கள் வாழ்ந்த அடிச்சுவடுகளை காணலாம். இப்படி ஒவ்வொரு பகுதியாக கடந்து சென்ற பின் 'அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி ஆசிரமம் (இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமானது) அமைந்துள்ளது.

கோரக்க சித்தருக்காக அத்ரிமகரிஷி தோற்றுவித்த 'கங்கா நதி ஊற்று' இன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனை ஊற்றாக உள்ளது. இங்கு, அகத்தியர் கோரக்கர் இணைந்த கோயில் உள்ளது. இங்கு,சித்தர்கள் தியானம் செய்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்போது மன அமைதி, உள்ளத்தில் சாந்தி பிறக்கிறது' என்பது நிதர்சனம்.


இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி,தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர். கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.

அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர். இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு-கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 6 மணி முதல் மாலை 6  மணி வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு.
இயற்கை அன்னையின் அரவணைப்பில் பிறந்த அத்ரி மலையின் அற்புதங்களை ஒருமுறையேனும் வந்து பாருங்களேன்!  


வரும் வழி பற்றிய விபரம் :

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையதிற்கு 18.02.2018 ஞாயிறு அன்று காலை 6 அல்லது 7 மணிக்குள் வந்து சேர்ந்து விட வேண்டும்.  அங்கிருந்து வேனில் அல்லது டாக்ஸியில் மலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு  உள்ளது.தனியே கார் அல்லது வேறு வாகனத்தில் வருபவர்கள் கீழே உள்ள என்னுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வரும்வழி பற்றி அறிந்து கொள்ளவும்.    


அத்ரி மலை மற்றும் அருகில் உள்ள ஸ்தலங்கள் :

அத்ரி பரமேஸ்வரர் ஆலயம் 






தவம் செய்யக் குகை போல் மாறி நிற்கும் மரம் 

வற்றாத  புண்ணிய தீர்த்தம்

 அகத்தியர் மற்றும் அத்ரி மகரிஷி விக்கிரகம் 



அத்ரி மலைத் தோற்றம் .

 குகை 












மலைப் பாதை 







நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com