Friday, 29 June 2018

திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அய்யாவின் உபன்யாசங்கள் கேட்க உதவும் அப்ளிகேஷன்





https://play.google.com/store/apps/details?id=icm.kinchitkaram.androidapp


இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொண்டால் வேளுக்குடி கிருஷ்ணன் அய்யாவின் உபன்யாசங்கள் அனைத்தையும் கேட்டு மகிழ்வதோடு அவரது உபன்யாசங்கள் மற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்களும் தெரிந்து கொள்ளலாம்.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
மொபைல்: 9442193072
WHATSAPP/TELEGRAM:9788493072                                                                     

ms.spiritual1@gmail.com

Thursday, 21 June 2018

வேலை செய்யும் இடத்தில் / அலுவலகத்தில் எல்லோருடனும் இணக்கம் உண்டாக்கும் தாந்த்ரீகக் குறியீடு

இந்த யந்திரத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் இஷ்ட தெய்வத்தின் படம் அல்லது விளக்கின் முன் வைத்து,வேலை செய்யும் இடத்தில யாராலும் பிரச்னை ஏற்படாமல் எல்லோரோடும் இணக்கம் உண்டாகட்டும் என்று வேண்டிய பின் லேமினேஷன் செய்து  அலுவலகத்தில் உங்கள் இருப்பிடத்தில் இந்தப்
படத்தைப் பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.


அலுவகத்தில் இல்லாமல் மார்க்கெட்டிங் போன்ற வேலையில் உள்ளவர்கள்  சட்டைப்பை அல்லது மணிபர்சில் வைத்துக் கொள்ளவும்.








நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.
சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி 
Mobile: 9442193072
Whatsapp/  Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook ID : Surya Guru

Wednesday, 20 June 2018

சேமிப்பு அதிகரிக்க தாந்த்ரீகப் பரிகாரம்





சிலருக்கு என்னதான் சம்பாதித்தாலும் கையில் பணம் அறவே சேமிப்பாக நிற்பதில்லை.இந்தக் கவலை தீரக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச்  செய்யுங்கள்.


வன்னி மரத்தின் வேரில் கொஞ்சம் எடுத்து  ஒரு இரும்பு டப்பாவிற்குள் 
போட்டு மூடி வைத்து அதை உங்கள் பணப்பெட்டி அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ள பணம்சேமிப்பு அதிகரிக்கும்.




நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
Mobile: 9442193072
Whatsapp/  Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook ID : Surya Guru

Saturday, 16 June 2018

அதிசய பலன் தரும் தாந்த்ரீகப் பரிகாரங்கள் - 1

1.உங்களையோ / குழந்தைகளையோ நாய்கள் தொடர்ந்து துரத்திக் கொண்டே வந்து தொந்தரவு செய்தால் அல்லது பார்த்ததும் குரைத்துக் கொண்டே இருந்தால் கருப்பு கயிற்றில் 7 முடிச்சுகள்  போட்டு முழங்காலுக்குப்  பக்கத்திலோ அல்லது கணுக்காலிலோ கட்டிக் கொள்ளத் தொந்தரவு இருக்காது.


அதன் பிறகும் தொல்லை இருந்தால், அந்த நாயைப் பார்த்ததும் அடிக்கவோ திட்டவோ,பயந்து ஓடவோ செய்யாமல் கைவிரல்களை முறுக்கி கொண்டு,பற்களைக் கடித்துக் கொள்ள நாய் உங்களை ஒன்றும் செய்யாது.



2.அதிகம் பொய் பேசும் குழந்தைகள் திருந்த, தினமும் அதிகாலையில் சூரியனைப் பார்த்தபடி தர்ப்பணம் கொடுப்பது போல் நீர் விட்டு வரச் செய்ய நல்ல குணம் பெறுவார்கள்.


3. பயணங்களில் தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்தித்து வருபவர்கள் அல்லது எப்பொழுதும் குறிப்பிட்ட வேலையாய் பயணம் சென்று வெற்றி பெறாமல் வெறும் கையுடன் திரும்புபவர்கள் பயணம் கிளம்பும் முன் பைரவருக்கு தேங்காய் வாங்கி அர்ப்பணித்து வேண்டிக்கொண்டு செல்ல சுபமாகும்.


4.கடன் தீர்ந்து செல்வவளம் பெற மந்திரம்


"கோவல்லபாய ஸ்வாஹா"

என்ற மந்திரத்தைத் தினமும் உங்களால் முடிந்தவரை ஜெபித்து வரவும்.
ஜபம் 1,50,000 எண்ணிக்கையைத் தொடும் நாள் முதல் பலனை அனுபவிக்கத்
துவங்குவீர்கள்.



5.முகத்தில் கரும்புள்ளிகள் (Black Spots) அதிகம் இருந்தால் வெள்ளி டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்து அதை 5 மணிநேரத்திற்குப் பின் குடித்து வரவும்.
காலை,மாலை இரண்டு வேளையும் செய்து வர விரைவில் கரும்புள்ளிகள்
நீங்குவதோடு முகவசீகரமும் உண்டாகும்.


6.குழந்தைகள் பசியெடுக்காமல்  அல்லது ஓழுங்காகச் சாப்பிடாமல் இருந்தால் ஒரு எலுமிச்சம்பழம் எடுத்துக் கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதிற்குள் நினைத்துக் கொண்டே குழந்தையின் வயிற்றை 11 தடவை
சுற்றவும்.பின்னர்,அந்தப் பழத்தை நசுக்கி எறிந்து விடவும்.இப்படி 11 நாட்கள் செய்து வர, குழந்தைக்கு நன்றாகச் சாப்பிடத் துவங்கி ஆரோக்கியமாய் வளரும்.


7.எதிரிகளால் தொடர் தொல்லைகளை அனுபவித்து வருபவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் உணவில் உப்பு சேர்க்காமல் இருக்கவும்.
இது எதிரிகளால் வரும் தொல்லைகளைக் குறைத்து மன நிம்மதி தரும்.


8.அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தாலும், புறம் பேசி வந்தாலும் தினமும் வாசல் கதவு அருகில் மாலை நேரத்தில் 3 மெழுகுவர்த்தி ஏற்றி வர சில நாட்களில் பிரச்சனைகள் குறைவதோடு அவர்களை நண்பர்களாகவும் மாற்றிவிடும்.


9.பணம் வாங்கியவர் தராமல் இழுத்தடித்தால், உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு நீலநிறப் பூவைச் சமர்ப்பித்து அந்த நபரின் பெயரை சொல்லி வேண்டி வரவும். தொடர்ந்து 43 நாட்கள் செய்து வரவும்.அதன் பின் அவரிடம் பணம் கேட்கவும்.



10.தொழிலில் பங்குதாரருடன் பிரச்சனை தீர கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வரவும்.

1). செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும்.

2). தானாக விழுந்த ஒரு அரசமர இலையில்  2 சொட்டு தேன் விட்டு அந்த இலையை ஓடும் நீரில்   விட்டு விடவும்.


11. உங்களிடமுள்ள விலைமதிப்பு மிக்க பொருட்கள் தொடர்ந்து பழுதடைந்தோ அல்லது தொலைந்தோ வந்தால்,சனிக்கிழமைகளில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் எள்ளால் செய்யப்பட இனிப்பு வகைகளை ஒரு ஸ்கை ப்ளூ நிறத் துணியில் முடிந்து தர்மம்  செய்து வரவும்.இழப்புகள் தடுக்கப்படும்.


12.வீட்டில் மீன்,நாய்,பசு,பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் தொடர்ந்து இறந்து வந்தால் குடும்பத்தில் எதேனும் பெரிய நோய் பாதிப்பு அல்லது உயிர் பாதிப்பு ஏற்படலாம்.அப்படியான  சூழ்நிலை இருந்தால்,வருடம் தோறும் வீட்டின் மூத்த உறுப்பினரின் ஜாதகப்படி நல்ல நாளாகப் பார்த்து பித்ரு தோஷ ஹோமம் செய்யவும்.வருடம் 1 முறை என தொடர்ந்து 5 வருடத்திற்குச்  செய்து வரவும்.பேரிழப்பு தடுக்கப்படும்.


13.சிறு வயது முதலே வறுமையையும்,கஷ்டங்களையும் அதிகமாக அனுபவித்து வருபவர்கள்,யாரிடமும் எதையும் நன்கொடையாகவோ, தானமாகவோ,பரிசாகவோ பெறாமல் இருப்பது நல்லது.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
Mobile: 9442193072
Whatsapp/  Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook ID : Surya Guru

Monday, 28 May 2018

ஆரோக்கியம் தரும் யந்திரம்

                            யந்திரத்தில் வரைய வேண்டிய பீஜ மந்திரம்  



நோய்களை நீக்கி ஆரோக்யம் தரும் இந்த யந்திரத்தைக் கீழ்க்கண்ட இரண்டு முறைகளில் எது உங்களுக்கு எளிமையானதோ அதைப் பின்பற்றிச் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

முறை 1:

ஒரு வெள்ளை பேப்பரில் பச்சை நிற மை பேனாவால் மேலே உள்ள  பீஜ மந்திரத்தை  9 தடவை எழுதவும்.எழுதிய பின் அந்த பேப்பரை ஒரு சுத்தமான  மரப்பலகையில் வைத்து அதற்கு ஊதுவத்தி காண்பித்து அதன்முன் ஒரு தீபம் ஏற்றி வைக்கவும்.ஊதுவத்தியும் தீபமும் அணைந்த பின் அந்த பேப்பரை எடுத்து ஒரு தாயத்தில் அடைத்து வலது கை புஜத்தில் அணிந்து கொள்ளவும்.
   

முறை 2: 

 ஒரு வெள்ளை பேப்பரில் பச்சை நிற மை பேனாவால் மேலே உள்ள  பீஜ மந்திரத்தை 11 தடவை எழுதவும்.மேலே கண்ட முறைப்படி பூஜித்து கழுத்தில் கட்டிக் கொள்ளளவும்.


குறிப்பு :-   இந்தத் தாயத்தை வடக்கு பார்த்த படி அமர்ந்து வரைந்து 1008 தடவை டம் (TAM)  என்ற பீஜ மந்திரத்தை ஜெபித்த பின் யந்திரத்தைப் 
பூக்களால் அர்ச்சிக்கவும்.

வடக்கு பார்த்து  அமர்ந்து தினமும் குறைந்தது 108 தடவை  டம் (TAM)  என்ற பீஜ மந்திரத்தை ஜெபித்து வர நிறைவான பலன் கிடைக்கும்.


இந்தத் தாயத்து அணிவதால் பல நோய்கள் குணமாகும் என்றாலும் கீழே  
குறிப்பிட்ட சில நோய்களை விரைவாக நீக்கும் :-

1.நினைவாற்றல் குறைவு
2.கை,கால் இணைப்புகளில் உள்ள வலி மரத்துப் போதல்,தசை வலி 
3.மன அழுத்தம்
4.பயங்கரமான கனவுகள் அதனால் தூக்கமின்மை
5. மூக்கில் ரத்தம் வடிதல்
6.தாய்ப்பால் சுரப்புக் குறைவு
7.குழந்தைகளின் தொடர் அழுகை


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
Mobile: 9442193072
Whatsapp/  Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook ID : Surya Guru


Tuesday, 22 May 2018

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஸ்ரீ துர்கா தேவி மந்திரம்

மந்திரம் :

க்லீம் க்லீம் ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ........(கணவன் அல்லது மனைவியின் பெயர் ) க்லீம் க்லீம் மோஹனம் குரு குரு க்லீம் க்லீம் ஸ்வாஹா 


வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் வெண்ணிற ஆடை அணிந்து விளக்கேற்றி ஸ்ரீ துர்கா தேவியை விளக்கில் எழுந்தருள வேண்டி நைவேத்தியமாக வெற்றிலை,பாக்கு,பழங்கள், பாயசம் வைத்து விரிப்பில் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் தெளித்து அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 தடவை முதல் நாள் ஜெபிக்கவும்.அடுத்து வரும் நாட்களில் குறைந்தது  54 தடவையாவது ஜெபித்து வர உங்கள் கர்ம பலனைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்களில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.
ஜெபம் செய்து முடிந்ததும் " ஸ்ரீ துர்கா மாதா தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் அழைத்தால் வந்து அருள் செய்ய வேண்டுகிறேன் " என்று வேண்டி விளக்கைக் குளிர்வித்து விளக்குத் திரியின் கருக்கை நெற்றியில் அல்லது தலை வகிட்டில் அல்லது புருவத்தில் தடவி வரவும்.விரைவான பலனைத் தரும்.


முக்கிய குறிப்பு : 

மந்திரத்தில் .....................கோடிடப்பட்டுள்ள இடத்தில் கணவன் அல்லது மனைவி பெயரைக் குறிப்பிட்டு ஜெபிக்கவும்.

உதாரணமாக கணவர் பெயர் கிருஷ்ணன் என்றால்

க்லீம் க்லீம் ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே கிருஷ்ணன் க்லீம் க்லீம் மோஹனம் குரு குரு க்லீம் க்லீம் ஸ்வாஹா 

 என்று ஜெபிக்கவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்திருநெல்வேலிMobile:9442193072Whatsapp / telegram: 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook :Surya Guru
https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Sunday, 13 May 2018

நமக்கான தெய்வ மந்திரங்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து ஜெபிப்பது எப்படி ? - பாகம் 1




நமக்கான தெய்வ மந்திரங்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து ஜெபிப்பது எப்படி ? - பாகம் 1 


மந்திர சாஸ்திரம்,ஜோதிடசாஸ்திரம் கூறும் வழிமுறைப்படியும், சம்பந்தப்பட்ட நபரை நேரில் பார்த்தும் நன்றாகக் கணித்து அதற்கேற்ற சரியான தெய்வங்களை வழிபட்டு வருவது நாம்  இப்பிறவியில் அனுபவித்துத்  தீர்க்க வேண்டிய கர்மவினைகளைச் சரியான முறையில் அனுபவித்தும்,எதிர்கொண்டும்,கடந்தும் செல்லப் பேருதவியாக இருக்கும்.



தீக்ஷை பெற்று மந்திர ஜெப விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு ஜெபித்து வந்தால் விரைவான,நிறைவான பலன் கிடைக்கும்.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
மொபைல்: 9442193072
WHATSAPP/TELEGRAM:9788493072                                                                       
ms.spiritual1@gmail.com

Saturday, 12 May 2018

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மகிமை,மூலமந்திரம்,உபாசனை




சித்தர்களால் வாலைத்தாய்,வாலைக்குமரி என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாலாவின் வழிபாடு கல்வி,செல்வம்,வீரம்,நீங்காப் புகழ்,சித்தர் நிலை  இவற்றோடு தெய்வ நிலைக்கு உயர்த்த வல்லது.


பாலா மந்திரத்தில் வேதவழி முறை, சித்தர் வழிமுறை,தாந்த்ரீக வழிமுறை எனப் பல முறைகள் வழக்கத்தில் உள்ளன.

இந்த மந்திரத்திற்கு அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தேவியின் சாபம் உள்ளதால்,மந்திரத்தைக் குருவிடம் முறைப்படி தீக்ஷை பெற்று சாபநிவர்த்தி செய்து ஜெபித்தால் மட்டுமே உத்தம சித்தி கிடைக்கும்.

-------------------------------------------

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.

எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.

எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சித்தர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்  இருக்கிறான் என்று  கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்குப் புரிந்தாலும் எவ்வாறு,நமக்குள் எங்கு உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது
(இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.


சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.


ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை  விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.
பீஜம் என்றால் விதை  என்று பொருள்.விதைக்குள் எப்படி மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாகச் சொல்லப்படுகிறது.


ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ  பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-

ஐம்|க்லீம்|சௌம்|


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி


முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.


மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

வாலையடி சித்தருக்குத் தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.


பாலா மந்திரம் மிக உயர்வான சித்திகளைத் தரக் கூடியது.



சக்தி உபாசனை கத்தி மேல் பயணம் போன்றது.வசீகர சக்தி,ஆண், பெண் வசீகரம் எல்லாம் தருவதால் பல நேரங்களில் வழி தவறிப் போகும் சாத்தியம் உண்டு அப்படிச் செயல்பட்டால் உங்கள் மந்திர ஆற்றல் விரயமாகி வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைச் சந்திக்க நேரும்.
எனவே,முறைப்படி குருவிடம் சாபநிவர்த்தி செய்யப்பெற்று தீட்சை 
பெற்று ஜெபிப்பதே விரைவான,நிறைவான பலனைத் தரும்.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP  / TELEGRAMNO : 9788493072
ms.spiritual1@gmail.com

Saturday, 28 April 2018

சித்ரா பௌர்ணமி / புத்த பூர்ணிமா 29.04.2018


பௌர்ணமி ஆரம்பம் 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 6.58 முதல்
30.04.2018 திங்கள் கிழமை காலை 6.52 வரை


இன்று புத்தரின் 2580 வது பிறந்தநாள்.

புத்தர் பெருமான் பிறந்தது,ஞானம் அடைந்தது,சமாதியானதும் மிகச் சிறப்பு வாய்ந்த இந்த நாளில் தான்.

-------------------------------------------------
     
சித்ரா பௌர்ணமி வழிபாடு பற்றி இந்தக் கட்டுரையைப் படித்து அறிந்து கொள்ளவும்.

--------------------------
சித்ரா பவுர்ணமி நாளில் முறையாக விரதமிருந்து பவுர்ணமியை கொண்டாடினால் முன்னேற்றத்தின் முதற்படிக்குச் செல்ல இயலும்.

சித்திரையில் வரும் பவுர்ணமியைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதுமட்டுமல்ல நாம் செய்யும் பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ரகுப்தனையும் சிந்தையில் நினைத்து வழிபட்டால் அத்தனை காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.



திதி பார்த்து வழிபட்டால் விதிமாறும் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள். நமக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாவிட்டாலும், விதியின் வலிமையை கொஞ்சம் குறைக்கவாவது வழிகாட்டுவது திதியின் அடிப்படையில் நாம் வழிபடுகின்ற வழிபாடுகள் தான்.



சதுர்த்தி திதியில் ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் விலகும். ஏகாதசி திதியில் பெருமாளை வழிபட்டால் பெருமைகள் வந்து சேரும். அஷ்டமி திதியில் கிருஷ்ணரை வழிபட்டால் கீர்த்திகள் உண்டாகும். நவமி திதியில் ராமபிரானை வழிபட்டால் நல்ல இல்லறம் அமையும். அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் கூடும். பவுர்ணமி திதியில் மலை வலம் வந்து சிவன், உமையவள், மால்மருகன் ஆகியோரை வழிபட்டால் மலைக்குமளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.


மாதம் தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை மட்டும் சித்ராபவுர்ணமி என்று சிறப்புப் பெயரிட்டு நாம் அழைப்பது வழக்கம். ராஜகிரகங்களாக விளங்கும் சூரியனும், சந்திரனும் உச்சம் பெற்று திகழும் அந்த நாளில் முறையாக விரதமிருந்து பவுர்ணமியை கொண்டாடினால் முன்னேற்றத்தின் முதற்படிக்குச் செல்ல இயலும்.


அன்றைய தினம் நாம், ‘மலையளவு செய்த பாவத்தை கடுகளாவாகக் குறைத்து எழுது என்றும், கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தி எழுது’ என்றும் சித்ரகுப்தனிடம் வேண்டிக் கொள்ள வேண்டுமாம். அப்பொழுதுதான் நமது பாவக்கணக்கின் அளவு குறைந்து, புண்ணியக் கணக்கின் அளவு உயரும் என்பார்கள். ஆனால் நாம் காலக் கணக்கை மாற்றி எழுதச் சொல்லக்கூடாது.


அதேசமயம் நாம் இன்று சித்ரகுப்தனுக்குப் பொங்கல் வைத்துப் படைத்து வழிபடுகின்ற பொழுது இனிமேல் நான் செய்யும் செயல்கள் புண்ணியம் தருவதாக அமைய நீ வழிகாட்டு. வாழ்க்கைப் பாதையை சீராகவும், நேராகவும், ஆக்கிக் கொடு. ஆயுள் வளரவும், ஆற்றல் பெருகவும், செல்வம் பெருகவும் வாசலைத் திறந்து வழியைக் காட்டு என்று வேண்டிக் கொண்டால் நமது வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமையும்.


பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து அருகில் வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து ‘சித்திரகுப்தன் படியளப்பு’ என்றும் அதில் எழுதி வைப்பர்.


சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கிப் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கி வடியும் பொழுது சித்திர குப்தனைச் சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும். சர்க் கரைப்பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள் போன்றவற்றை இலையில் பரப்பி வைத்து, பழங்களில் பலாச்சுளை, திராட்சை, மாம்பழம், முழு நுங்கு போன்றவற்றையும் வைத்துப் படைக்க வேண்டும்.


அன்றைய தினம் வைக்கும் குழம்பில் கூட தட்டைப் பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது நல்லது. ஜவ்வரிசி பாயசம், அப்பளம் வைத்து, இளநீர், பானகம், நீர்மோர் போன்றவைகளையும் அருகில் வைத்து முத்தாய்ப்பாக நடுவில் கரகம் வைக்க வேண்டும்.


நமது வாழ்வில் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க பொங்கல் வைக்கின்றோம். கனிவாக வாழ்வமைய கனி வர்க்கங் களைப் படைக்கின்றோம். நவதான்யம் மற்றும் அனைத்துச் செல்வத்திற்கும் அதிபதியான குபேரனுக்கு இணையானவர் என்பதாலும் தட்டைப் பயறு வைக்கின்றோம். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற மாவிலை, கிரகங்கள் சாதகமாக விளங்க கரகம் வைத்து வழிபடுகின்றோம்.


பூமா தேவியால் பயிர் விளைவதால் தினமும் உணவு கிடைக்கவே வெண்கலக் கிண்ணத்தில் மண்ணும் தண்ணீரும் வைத்து அதன்மேல் தண்ணீர் நிரம்பிய செம்பின்மீது மாவிலைக் கொத்தும், மாங்காயும் வைப்பது வழக்கம். மற்ற கும்பங்களில் தேங்காய் வைப்பது வழக்கம். ஆனால் சித்ரகுப்தன் வழிபாட்டில் மாங்காய் வைப்பது தான் வழக்கம். அதன் அருகில் கோலமிட்டுக் குத்துவிளக்கேற்ற வேண்டும். பொங்கல் பொங்கி வரும்பொழுது சங்கு ஊதுவது அவசியமாகும். பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி தான். விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு நிலாப் பார்த்து வழிபட்ட பிறகு தான் உணவு அருந்த வேண்டும். நமது பாவ புண்ணியத்தையும் பதிந்து வைத்து அடுத்த பிறவிக்கு அனுகூலம் தரும் சித்ர குப்தனை வழிபட்டால் செல்வநிலை உயரும். தேவையானவைகள் தேவையான நேரத்தில் நடக்கும்.


இந்தச் சித்ரகுப்தனுக்கு காஞ்சீபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலிலும் தனிச்சன்னிதி சித்ர குப்தனுக்கு உள்ளது. இங்கும் சென்று சித்ர குப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். 


நன்றி -https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/04/09110330/1155931/chitra-pournami-viratham.vpf