Thursday, 13 February 2020

அத்ரி மலை புனித யாத்திரை மற்றும் ஆன்மீக சத்சங்கம் 23.02.2020 ஞாயிறு அன்று

23.02.2020 ஞாயிறு மாசி மாதம் அமாவாசை அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அத்ரி மலையில் வாழ்விலும், ஆன்மீகத்திலும் உயர்வடைய உதவும் ஆன்மீகம், சித்தர் ரகசியங்கள்,மந்திர ஜபம்,யோகப் பயிற்சிகள் பற்றி அறிந்து கொள்ள நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அத்ரி மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் மற்றும் குற்றாலம் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.


அத்ரிமகரிஷிக்கும்,அனுசூயாதேவிக்கும் குழந்தையாக தத்தாத்ரேயர் என்ற பெயரில் மும்மூர்த்திகளும் அவதரித்தனர். இந்த புனித மலையானது ஸ்ரீ அத்ரி மகரிஷி,அனுசூயாதேவி,கோரக்கர் முதலான சித்தர் பெருமக்கள் அருள் நிறைந்த ஸ்தலம்.


இம்மலையையும் இதன் சிறப்பையும் பற்றி பல்வேறு சித்தர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.


கடனா அணைக்கட்டு வருடம் முழுவதும் நீர்வரத்தும் கொண்ட பசுமையான மலை.

 

மலை ஏறும் வழியில் ஆறும்,அருவியும் உள்ளது.அங்கேயே குளித்துக் கொள்ளலாம்.
 

தமிழகத்தில் மேற்குப் பார்த்த படி அமைந்துள்ள சிவாலயங்களில் சிவசைலம் கோயிலும் ஒன்று.அத்ரிமலை செல்லும் வழியில் உள்ளது.
மலைப் பயணம் மற்றும் சத்சங்கம் முடிந்ததும் நேரம் இருந்தால் சிவசைலம் ஆலயத்திற்குச் செல்லலாம்.

  
20 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருப்பதால் யாத்திரையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர் மற்றும் ஊர் சொல்லி முன்பதிவு அவசியம்.


யாத்திரைக் கட்டணம்: RS.700 மட்டுமே




வரும் வழி பற்றிய விபரம் :

வரும் வழி,வந்து சேர வேண்டிய நேரம் மற்றும் பிற விபரங்களைக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


காலையில் அதிக வெயில் வரும் முன் மலை ஏறும் படி முடிவு செய்திருப்பதால் முடிந்தவரை காலையில் சீக்கிரமே வர முயற்சிக்கவும். அல்லது முன்தினம் வந்து ரூம் எடுத்து தங்கிக் கொண்டால் வசதியாக இருக்கும்.


23.02.2020 ஞாயிறு அன்று மிகச்சரியாக காலை 7 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேனில் அல்லது டாக்ஸியில் மலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.எனவே, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு காலை 6 முதல் 6:30 மணிக்குள் வந்து சேர்ந்து விட வேண்டும்.
 
மேலும்,மாலை 3 மணிக்குள் மலையில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும்.45 நிமிடங்கள் முதல் 1:30 மணி நேரம் வரை மலை ஏற வேண்டி இருப்பதால் மலை ஏற முடியாதவர்கள்,வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் பயணத்தைத் தவிக்கவும்.



தனியே கார் அல்லது வேறு வாகனத்தில் வருபவர்கள் கீழே உள்ள என்னுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வரும்வழி பற்றி அறிந்து கொள்ளவும்.



அத்ரிமலைப் பயணம் முடித்து இரவு 8:00 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அல்லது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேருமாறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அன்பர்கள் சத்சங்கத்தில் பகிரப்படும் விஷயங்களைக் குறித்துக் கொள்ள நோட்டு,பேனா,மதிய உணவு,மினரல் வாட்டர் பாட்டில் வழங்கப்படும்.


அத்ரி மலையில் உள்ள புனித சுனையில் ஆண்டு முழுவதும் வற்றாமல் 
வந்து கொண்டே இருக்கும் தீர்த்த நீர் மிக சக்தி வாய்ந்தது.பல 
கோவில்களுக்கு கும்பாபிஷேகம்,வருஷாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த நீரை எடுத்துச் செல்வார்கள். நீங்களும் தீர்த்தம் எடுத்துச் செல்ல விரும்பினால் அதற்கேற்ப 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் வாட்டர் கேன் கொண்டு வந்து எடுத்துச் செல்லலாம்.



கீழ்க்கண்ட ஸ்டேட் பேங்க் அல்லது இந்தியன் வங்கி கணக்கில் பயணக் கட்டணம் ரூ.700 அல்லது முன்பணமாக ரூ.500 செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


M.SUBRAMANIAN,STATE BANK OF INDIA,AC NO.32986914404,TIRUNELVELI BRANCH,IFSC CODE: SBIN0000932  BRANCH CODE:00932

GOOGLE PAY :9442193072


R.KALAISELVI,INDIAN BANK,THACHANALLUR BRANCH,AC NO.936681178
IFSC CODE:IDIB000T093  BRANCH CODE:00T093




கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு:-


1.விரதம் எதுவும் பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை. பயணத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அசைவம் சாப்பிடாமல் சைவ உணவு மட்டும் சாப்பிடவும்.

2.மந்திரசித்தியோடு லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வின் தடைகளை நீக்கி உயர்வு,செல்வ வளம்,மகிழ்ச்சியுடன் வாழ உதவும் ஸ்ரீமஹாகணபதி மந்திரம் தீட்சை தரப்படும்.மேலும் யோகம்,ஞானம்,சித்தர்கள்,மந்திரம்,
உபாசனை,பிரச்சனைகளுக்குப் பரிகாரங்கள் என பல ஆன்மீக விஷயங்கள் பற்றி சத்சங்கம் நடைபெறும்.



மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072

------------------------------------------------------------------------------
அத்ரி மலையின் சிறப்புகள் :

இம்மலையில் அத்ரி முனிவர்,கோரக்கர்,பிருகு முனிவர் போன்ற சித்தர்கள்  தவம் இயற்றியுள்ளார்கள்.


பசுமை போர்த்திய மூலிகை மலைகள், வானத்தையும், வனத்தையும் இணைக்கும் மேகக்கூட்டங்களை காண கண்கோடி வேண்டும். அத்ரிமலை அடிவாரத்தில் கடனா அணை, ஜில்லென வீசும் பொதிகை மலைத்தென்றல், நாசி துவாரங்களை துளையிட்டு செல்லும் மூலிகை மனம்... என நற்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கடனா அணையை(85 அடி உயரம்) அடைய வேண்டும் அங்கிருந்து அணை வழியாக 7 கி.மீதுாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். இடையே அத்ரி கங்கா நதியை கடக்க வேண்டும். வனத்தில் செல்லும்போது சித்தர்கள் வாழ்ந்த அடிச்சுவடுகளை காணலாம். இப்படி ஒவ்வொரு பகுதியாக கடந்து சென்ற பின் 'அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி ஆசிரமம் (இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமானது) அமைந்துள்ளது.

கோரக்க சித்தருக்காக அத்ரிமகரிஷி தோற்றுவித்த 'கங்கா நதி ஊற்று' இன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனை ஊற்றாக உள்ளது. இங்கு, அகத்தியர் கோரக்கர் இணைந்த கோயில் உள்ளது. இங்கு,சித்தர்கள் தியானம் செய்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்போது மன அமைதி, உள்ளத்தில் சாந்தி பிறக்கிறது' என்பது நிதர்சனம்.
இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி,தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர். கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.

அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர். இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு,கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.


இயற்கை அன்னையின் அரவணைப்பில் பிறந்த அத்ரி மலையின் அற்புதங்களை ஒருமுறையேனும் வந்து பாருங்களேன்!  


அத்ரி மலை மற்றும் அருகில் உள்ள ஸ்தலங்கள் :

அத்ரி பரமேஸ்வரர் ஆலயம் 






தவம் செய்யக் குகை போல் மாறி நிற்கும் மரம் 

வற்றாத  புண்ணிய தீர்த்தம்

 அகத்தியர் மற்றும் அத்ரி மகரிஷி விக்கிரகம் 



அத்ரி மலைத் தோற்றம் .

 குகை 












மலைப் பாதை 







நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Thursday, 6 February 2020

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் மற்றும் அடிப்படை ஜோதிடம் பற்றிய பயிற்சி வகுப்பு 9.2.2020 ஞாயிறு அன்று சென்னையில்


1.நமது வாழ்வில் நியாயமான விருப்பங்கள் விரைவில் நிறைவேறவும், மனதை வருந்த வைக்கும் நோய்,பகை,கடன்,துன்பங்கள் நீங்கவும் உதவும் எளிமையும்,வலிமையும் கொண்ட மந்திரங்கள்.


2.வாழ்வில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதில்லை.நம்முடைய வாழ்க்கையும்,நம்மைச் சேர்ந்தவர்களுடைய வாழ்க்கையும்  என்ன  விதமாக இருக்கும் என்று வாழ்க்கையின் பாதையை அறிந்து கொள்ள முடிந்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாக வாழ முடியும்.அதற்கு ஜோதிட சாஸ்திரம் பற்றிய அறிவு நிச்சயமான வகையில் உதவி செய்யும்.  


ஜோதிடம் முழுமையாகக் கற்றுக் கொள்வதன் மூலம் அது சாத்தியம்.


ஜோதிடத்தில் ஒன்றுமே தெரியாதவர்கள் மற்றும் ஜோதிடத்தில் மிகக் குறைந்த அறிவு அல்லது அனுபவம் உள்ளவர்கள்,ஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இவர்களுக்கு இன்னும் ஆழமாகக் கற்றுக் கொள்ளத் தூண்டும் வகையிலும்,நம்மாலும் ஜோதிடம் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் ஜோதிடம் பற்றிய சில அடிப்படை விஷயங்களை இந்த வகுப்பில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.மேலும் ஜோதிடத்தில் உள்ள பல வகைகள் பற்றியும்,ஜோதிடம் கற்றுக் கொள்ள உதவும் சிறந்த புத்தகங்கள் மற்றும் ஜோதிட ஆசிரியர்கள் பற்றிய தகவல்களும் இந்த வகுப்பில் பகிரப்படும்.


இதன் பின் இந்த வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கென ஒரு தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கி அதில் ஜோதிடம் பற்றிய பல விஷயங்கள் இலவசமாகப் பகிரப்படும்.


காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரை சூஃபி மந்திரங்கள் பற்றியும் மதிய உணவுக்கு பின் 2 மணி முதல் 4 மணி வரை அடிப்படை ஜோதிடம் பற்றியும் பார்க்கலாம்.


இந்தப் பயிற்சி வகுப்பில் 20 முதல் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.எனவே முன்பதிவு செய்யவும். 


சூஃபி மந்திரங்கள் மூலம் சில எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறப்பான
பலன்களைப் பெறலாம். 

நைவேத்யம் போன்ற செலவுகள் இல்லாத எளிமையான மந்திர ஜெபம், விரைவான பலன்களைத் தரும் ரகசியங்கள் இடம்பெறும்.

சைவம்,அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.



இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது.நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.எனவே தவறான எதிர்பார்ப்புடன் பயிற்சிக்கு வரவேண்டாம்.



வகுப்பில் கற்றுத் தரப்படும் இந்த விதிகளைப் பயன்படுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :-


1.ஜோதிடம் பற்றிய அடிப்படை விஷயங்கள் பகிரப்படும் (BASIC ASTROLOGY) 
மற்றும் ஜோதிடம் கற்க உதவும் சிறந்த புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள்.


சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-

1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில் நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.நாளுக்கு நாள் தொழிலில் வருமானம் உயர்வதை அனுபவத்தில் உணரலாம்.


3.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக,உண்மையாக,உதவியாக, வாழலாம்.


4.பிரிந்தவர் சேர ,திருமணத் தடை நீங்க,விரும்பியவரை மணக்க (இருவருக்கும் காதல் இருந்தால் ) உதவும் ரகசியங்கள்.


5.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்,பதவி உயர்வு,உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


6.குடும்பத்திலும்,வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக ஆவார்கள்.


 7.எதிர்ப்புகள்,குழந்தை இன்மை,தீய சக்திகளின் தொல்லைகள், விபத்துக்கள், நோய்களை நீக்கும்.


8.குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


9.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளைக் கொண்டு நமக்கு மீண்டும் தீமை செய்யாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.


10.அழகு,அதிகாரம்,தைரியம்,உடல்,மன பலம்,தீர்க்காயுள் உண்டாகும்.


11.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


12.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்,சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.





பயிற்சி நாள்: 9.2.2020 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.2000


(சூர்யா  - அக்பர் அலி )

பயிற்சி நடைபெறும் இடம்:-

கேசரி மேல்நிலைப்பள்ளி
பாண்டி பஜார்
தி.நகர்
சென்னை 600017
ஹோட்டல் GRT கிராண்ட் அருகில்/தேனாம்பேட்டை சிக்னல் அருகில்

GOOGLE MAP:- 


பேனா,நோட்டு,பயிற்சிக் கையேடு,மதிய உணவு வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com