அகத்தியர் துதி
அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை
சித்தர்களில் முதன்மையானவரும்,ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாடல்களின் மூலம் வைத்தியம்,ஜோதிடம்,மந்திரசாஸ்திரம் முதலான பல கலைகளைப்பற்றி இவரைப்போல் தெளிவுபட விளக்கியவர்கள் இலர்.
அகத்தியர் எனது மானசீக குரு.
அகத்தியர் எனது மானசீக குரு.
நான் இயற்றி அன்றாடம் கூறி வரும் ஸ்ரீ அகத்தியர் துதியை கீழே கொடுத்துள்ளேன்.
தலை உச்சியில்(சஹஸ்ராரத்தில்) கீழ்க்கண்ட குரு வந்தன முத்திரையைப் போட்டபடி இந்த ஸ்துதியை ஜெபித்து யோகம்,தவம்,தியானம்,மந்திரஜபம் செய்து வர அவற்றில் சித்தி கிடைக்கும்.
குரு வந்தன முத்திரை என்ற ம்ருகி முத்திரை
அகஸ்தியர் துதி:-
தலை உச்சியில்(சஹஸ்ராரத்தில்) கீழ்க்கண்ட குரு வந்தன முத்திரையைப் போட்டபடி இந்த ஸ்துதியை ஜெபித்து யோகம்,தவம்,தியானம்,மந்திரஜபம் செய்து வர அவற்றில் சித்தி கிடைக்கும்.
குரு வந்தன முத்திரை என்ற ம்ருகி முத்திரை
அகஸ்தியர் துதி:-
1.தமிழ் மொழிக்குக் கர்த்தாவும்
2.வைத்தியம்,ஜோதிடம்,மந்திரங்கள் குறித்துத் தமிழில் பல நூல்கள் இயற்றியவரும்
3.முருகப்பெருமானிடம் பிரணவ மந்திரோபதேசம் பெற்ற முனிசிஷ்யரும் (முனி ச்ரேஷ்டரும்)
4.சண்முகப்ரியரும்
5.சக்திதாசரும்,சாக்த உபாசனா சிகரமும்
6.பொதிகைமுனி,கும்பமுனி,குறுமுனி,குருமுனி என்றழைக்கப்படுபவரும்
7.ராவணேஸ்வரரை வீணையால் வென்றவரும்
8.புலஸ்தியர்,தேரையர் போன்ற சித்தர் பெருமக்களின் குருநாதரும்
9.சிவபெருமான்,அன்னைபார்வதி திருமணத்தின் போது பூமியின் வடபாகம் தாழ்ந்து தென்பக்கம் உயர்ந்ததைச் சமன் செய்தவரும்
10.ஸ்ரீ ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்தவரும்
11.ஸ்ரீ வித்யா உபாசனையில் துதிக்கப்படுபவரும்
12.ஸ்ரீ ஹயக்ரீவரால் ஸ்ரீ வித்யா உபதேசமும்,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமமும் உபதேசிக்கப்பட்டவருமான
ஸ்ரீ அகஸ்திய குருவே உங்கள் திருவடிகளும்,அன்னை ஸ்ரீ லோபாமுத்திரையின் திருவடிகளும் அடியேன் துரிய கமலத்தின் மேல் இருந்து நான் வாழ்விலும்,ஆன்மீகத்திலும் உயர ஆசீர்வதித்து வழிகாட்ட வேண்டுகிறேன்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||
M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
WHATSAPP/TELEGRAM NO : 9788493072
M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
WHATSAPP/TELEGRAM NO : 9788493072
No comments:
Post a Comment