அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை
அகத்தியர் தனது சௌமியசாகரம் என்ற நூலில் மந்திரவாள் என்ற பகுதியில் சில மந்திரப் பிரயோகங்களைக் கூறியிருக்கிறார்.அவற்றில் அஷ்ட கர்மங் பிரயோக மந்திரங்களும் உள்ளது.சில தவறான மனிதர்களால் தீய காரியத்திற்குப் பயன்படுத்தக் கூடும் என அஞ்சி அவற்றைத் தவிர்த்துப் பொதுவாக யாவரும் ஜெபித்து நன்மை பெறக்கூடிய சில மந்திரங்களையும் அவற்றின் பலன்களையும் கூறுகிறேன்.
ஜெப விதிகள்:-
பொதுவாக சித்தர் மந்திரங்களுக்குச் சாபம் உண்டு.
சித்தியான ஒரு குருவிடம் சாபநிவர்த்தி செய்து முறைப்படி குரு உபதேசம் பெற்று ஜெபிப்பது உத்தமம்.
இதில் உள்ள மந்திரங்களை ஜெபம் செய்து வரும் காலங்களில் கணவன், மனைவி தாம்பத்யம் தீட்டு அல்ல.
யாரையும் சபிக்க வேண்டாம்.அகந்தையுடன் செயல்பட வேண்டாம். பாப காரியங்களைத் தவிர்த்து ஒழுக்கம் கடைபிடிக்கவும்.
பிரம்மச்சாரிகள்,வயதானவர்கள் காவி உடை அணியலாம். மற்றவர்கள் வெள்ளை,மஞ்சள்,பச்சை இவற்றில் ஏதேனும் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து ஜெபிக்கவும்.
ஆனால்,அசைவ உணவு கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.இல்லை என்றால் மந்திரம் ஓரளவு தான் வேலை செய்யும்.நீண்ட நாட்களுக்குப் பலன் தராது.
1.சர்வ வசீகர மந்திரம்
ஓம் ரீங் வசி வசி
என்று தினமும் 4 திசைகள் அல்லது எட்டுத் திசைகளையும் நோக்கி ஜெபிக்கவும். ஒரு திசைக்கு 108 என 90 நாட்கள் ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.மனிதர்கள்,விலங்குகள் என சர்வமும் வசியமாகும்.
4 திசைகள் அல்லது எட்டுத் திசைகளையும் நோக்கி ஜெபிக்க இயலாதவர்கள் கிழக்கு நோக்கி அமர்ந்து லக்ஷம் உரு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.
2.சர்வ ஆகர்ஷண மந்திரம்
ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
என்று தினமும் 1008 தடவை ஜெபிக்கவும்.லக்ஷம் உருவில் சித்தியாகும்.
3.வீக்கம் வற்ற ,கட்டிகள் உடைய
ஓம் ரீங் கசி கசி
1008 அல்லது 12000 உருவில் அவரவர் கர்ம பலனின் படி சித்தியாகும்.சித்தியான பின் தேவையானவர்களுக்கு மந்திரிக்கலாம்.
மந்திரம் சித்தியான பின் 108 தடவை ஜெபித்து உடையாத கட்டிகள், வீக்கம் உள்ளவர்களுக்கு விபூதியில் மந்திரித்து பூசச் செய்து வர குணமாகும்,
இவற்றில் உங்கள் தகுதி,சூழ்நிலை,தேவை அடிப்படையில் எது அவசியமோ அதற்கான மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துச் செய்து பலன் பெறுங்கள்.
நம் வாழ்வு நலமும் வளமும் பெற குரு ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியரையும், குரு பத்னி அன்னை ஸ்ரீ ஸ்ரீ லோபா முத்ராவையும் வேண்டுகிறேன்.
வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!
4.தீரா நோய்களும்,பீடைகளும் நீங்க
ஓம் ரீங் நசி நசி
இம்மந்திரத்தை ஜெபித்து வரத் தீராத நோய் என்று மருத்துவர்களால் கை விடப்பட்ட நோய்களுக்கு கூட ஜெபித்து நோய் நீங்கப் பெற்றவர்கள் ஏராளம்.
இம்மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபித்து வருவதால் பீடைகள் மற்றும் நம் நல்வாழ்விற்குத் தேவையற்ற தீவினைகள்,தோஷ,சாப பாதிப்புகள் நீங்கும்.
5.சர்வ மங்களமும் தரும் மந்திரம்
ஓம் ரீங் சிவ சிவ
மந்திரவாளில் உள்ள மந்திரங்களில் இது ரத்தினம் போன்றது.எல்லா நன்மைகளையும் தரக்கூடியது என்று சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.இதன் பலனை அனுபவித்தவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.
வருந்தத்தக்க பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு சர்வ ஐஸ்வர்யமும் தரும்.வாழ்வில் தொடர்ந்து கஷ்டங்களையே அனுபவித்து வருபவர்களுக்கு இம்மந்திரம் அருமருந்து.இம்மந்திரத்தைக் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஜெபித்து வர விரைவில் வாழ்க்கை நல்ல திசையில் பயணிக்கத் துவங்கும்.
இடது உள்ளங்கையில் அல்லது ஒரு செம்பு,பித்தளை அல்லது வெண்கலத் தட்டில் விபூதி பரப்பி வைத்துக் கொண்டு அதில் இம்மந்திரத்தை எழுதி மந்திரத்தை 1008 உரு ஜெபித்து வைத்துக் கொண்டு அதைத் தினமும் அணிந்து வர எல்லா நிலைகளிலும் மேன்மை பெறலாம்.
6.விஷக்கடி,பூச்சிக்கடி,வசிய மருந்து பாதிப்புகள் நீங்க
ஓம் ரீங் மசி மசி
இம்மந்திரத்தை ஜெபித்து விபூதியில் மந்திரித்துப் பூசி வர விஷம், விஷக்கடி,பூச்சிக்கடி,வசிய மருந்து விஷ பாதிப்புகள் நீங்கும்.
7.தேவி மந்திரம்
ஓம் ரீங் சிவயவசி
குரு உபதேசப்படி சுழிமுனையில் மனம் வைத்து காலை,மதியம்,மாலை என மூன்று வேளையும் இம்மந்திரம் ஜெபித்து வர லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் மேன்மை உண்டாகும்.
நம் வாழ்வு நலமும் வளமும் பெற குரு ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியரையும், குரு பத்னி அன்னை ஸ்ரீ ஸ்ரீ லோபா முத்ராவையும் வேண்டுகிறேன்.
வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!
No comments:
Post a Comment