Sunday, 29 December 2024

மந்திர உபாசனையும் உங்கள் அதிர்ஷ்ட தெய்வமும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்) 5.1.2025 ஞாயிறு அன்று மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை

மந்திர உபாசனையும் உங்கள் அதிர்ஷ்ட தெய்வமும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்)  5.1.2025 ஞாயிறு அன்று மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை 


இந்த வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மந்திர உபாசனை மற்றும் பல்வேறு தெய்வங்களின் மந்திரங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தகவல்களோடு உங்கள் ஜாதகப்படி நீங்கள் வழிபட வேண்டிய அதிர்ஷ்ட தெய்வங்களின் மந்திரங்களும் இடம் பெறும்.


அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 



சிவன்,விஷ்ணு,முருகன்,ஹனுமான்,பைரவர்,ராஜமாதங்கி,மஹாவாராஹி,வாக்வாதினி,அஸ்வாரூடா, துர்க்கை,தக்ஷிண காளி ,புவனேஸ்வரி,பகளாமுகி,ப்ரத்யங்கிரா,சூலினி துர்கா,மஹாலக்ஷ்மி இன்னும் சில தெய்வங்களின் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் ரகசியங்கள் நிறைந்த பயிற்சி வகுப்பு.

   

1.உங்கள் ஜாதகப்படி விரைவாகவும் நிறைவாகவும் பலன் தரக்கூடிய தெய்வம்,மந்திரம் மற்றும் வழிபாட்டு  முறை கண்டறிந்து சொல்லப்படும்.


2.நம்முடைய நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும் பிரச்சனைகள் தீரவும் அதற்கான தெய்வங்களைச் சரியாகத்   தேர்ந்தெடுத்து வழிபடுவது பற்றிய விளக்கம். 


3.அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


4.உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?



5.உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



6.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் தரத் தொடங்குவதற்குச்
 செய்ய  வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



7.மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


8.மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 


9.ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.



10.நாயன்மார்கள்,ஆழ்வார்கள்,மீரா போல பக்தி யோகத்தின் மூலம் இறைநிலை அடைய உபாசனையில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்.


11.பிறருக்குத் தெய்வங்களின் மந்திர வழிபாடுகள் மூலம் உதவிகள் செய்ய /நோய்கள் தீரக் குணமளிக்க  விரும்பினால் அதற்கான தெய்வங்களும் வழிபடும் முறைகளும்.


12.முறைப்படியாக தீக்ஷை பெற்று ஜெபிக்கும் மந்திரங்கள் மட்டுமே காலம் முழுவதும் முழுமையாகப் பலித்துப் பலன் தரும்.வகுப்பில் தீக்ஷை வழங்கப்படும்.குல தெய்வ தோஷம்,சாபம்,கட்டுக்கள் இருந்தால் தீக்ஷை கொடுக்கும் சமயம் அவைகள் நீங்கிவிடும். 


மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.



ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு
விடை அளிக்கும் சத்சங்கம்.அந்த நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  5.1.2025 ஞாயிறு 

பயிற்சி நேரம்:  மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை 

பயிற்சிக் கட்டணம் : RS.2000



பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு முன்பதிவு செய்யவும்.


பயிற்சிக்கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY  / 
PHONEPENUMBER : 9788493072 (SUBRAMANIAN)



வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


-------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com   










Wednesday, 18 December 2024

அகத்தியர் மந்திரவாள்

                                     அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 


அகத்தியர் தனது  சௌமியசாகரம் என்ற நூலில் மந்திரவாள் என்ற பகுதியில் சில மந்திரப் பிரயோகங்களைக் கூறியிருக்கிறார்.அவற்றில் அஷ்ட கர்மங் பிரயோக மந்திரங்களும் உள்ளது.சில தவறான மனிதர்களால் தீய காரியத்திற்குப் பயன்படுத்தக் கூடும் என அஞ்சி அவற்றைத் தவிர்த்துப்  பொதுவாக யாவரும் ஜெபித்து நன்மை பெறக்கூடிய சில மந்திரங்களையும் அவற்றின்  பலன்களையும் கூறுகிறேன்.  



ஜெப விதிகள்:-

பொதுவாக சித்தர் மந்திரங்களுக்குச் சாபம் உண்டு.

சித்தியான ஒரு குருவிடம் சாபநிவர்த்தி செய்து முறைப்படி குரு உபதேசம் பெற்று ஜெபிப்பது உத்தமம்.

இதில் உள்ள மந்திரங்களை ஜெபம் செய்து வரும் காலங்களில் கணவன், மனைவி தாம்பத்யம் தீட்டு அல்ல.

யாரையும் சபிக்க வேண்டாம்.அகந்தையுடன் செயல்பட வேண்டாம். பாப காரியங்களைத் தவிர்த்து ஒழுக்கம் கடைபிடிக்கவும்.  

பிரம்மச்சாரிகள்,வயதானவர்கள் காவி உடை அணியலாம். மற்றவர்கள் வெள்ளை,மஞ்சள்,பச்சை இவற்றில் ஏதேனும் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து ஜெபிக்கவும்.  

ஆனால்,அசைவ உணவு கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.இல்லை என்றால் மந்திரம் ஓரளவு தான் வேலை செய்யும்.நீண்ட நாட்களுக்குப் பலன் தராது.


1.சர்வ வசீகர மந்திரம் 

ஓம் ரீங் வசி வசி

என்று தினமும் 4 திசைகள் அல்லது எட்டுத்  திசைகளையும் நோக்கி ஜெபிக்கவும். ஒரு திசைக்கு 108 என 90 நாட்கள் ஜெபித்து  வர சர்வ வசீகரம் உண்டாகும்.மனிதர்கள்,விலங்குகள் என சர்வமும் வசியமாகும்.

4 திசைகள் அல்லது எட்டுத்  திசைகளையும் நோக்கி ஜெபிக்க இயலாதவர்கள்  கிழக்கு நோக்கி அமர்ந்து லக்ஷம் உரு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.


2.சர்வ ஆகர்ஷண மந்திரம் 

ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய

என்று தினமும் 1008 தடவை ஜெபிக்கவும்.லக்ஷம் உருவில் சித்தியாகும்.

3.வீக்கம் வற்ற ,கட்டிகள் உடைய 

ஓம் ரீங் கசி கசி

1008 அல்லது 12000 உருவில் அவரவர் கர்ம பலனின் படி சித்தியாகும்.சித்தியான  பின் தேவையானவர்களுக்கு மந்திரிக்கலாம்.

மந்திரம் சித்தியான பின் 108 தடவை ஜெபித்து உடையாத கட்டிகள், வீக்கம் உள்ளவர்களுக்கு விபூதியில் மந்திரித்து பூசச் செய்து வர குணமாகும், 


4.தீரா நோய்களும்,பீடைகளும் நீங்க

ஓம் ரீங் நசி நசி 

இம்மந்திரத்தை ஜெபித்து வரத்  தீராத நோய் என்று மருத்துவர்களால் கை விடப்பட்ட  நோய்களுக்கு கூட ஜெபித்து நோய் நீங்கப் பெற்றவர்கள் ஏராளம்.
இம்மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபித்து வருவதால் பீடைகள் மற்றும் நம் நல்வாழ்விற்குத் தேவையற்ற தீவினைகள்,தோஷ,சாப பாதிப்புகள் நீங்கும்.  



5.சர்வ மங்களமும் தரும் மந்திரம் 

ஓம் ரீங் சிவ சிவ

மந்திரவாளில் உள்ள மந்திரங்களில் இது ரத்தினம் போன்றது.எல்லா நன்மைகளையும் தரக்கூடியது என்று சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.இதன் பலனை அனுபவித்தவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.

வருந்தத்தக்க பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதோடு சர்வ ஐஸ்வர்யமும் தரும்.வாழ்வில் தொடர்ந்து கஷ்டங்களையே அனுபவித்து வருபவர்களுக்கு இம்மந்திரம் அருமருந்து.இம்மந்திரத்தைக் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி  ஜெபித்து வர விரைவில் வாழ்க்கை நல்ல திசையில் பயணிக்கத் துவங்கும்.

இடது உள்ளங்கையில் அல்லது ஒரு செம்பு,பித்தளை அல்லது வெண்கலத் தட்டில் விபூதி பரப்பி வைத்துக் கொண்டு அதில் இம்மந்திரத்தை எழுதி மந்திரத்தை 1008 உரு ஜெபித்து வைத்துக் கொண்டு அதைத் தினமும் அணிந்து வர எல்லா நிலைகளிலும் மேன்மை பெறலாம்.


6.விஷக்கடி,பூச்சிக்கடி,வசிய மருந்து பாதிப்புகள் நீங்க 

ஓம் ரீங் மசி மசி 

இம்மந்திரத்தை ஜெபித்து விபூதியில் மந்திரித்துப் பூசி வர விஷம், விஷக்கடி,பூச்சிக்கடி,வசிய மருந்து விஷ பாதிப்புகள் நீங்கும்.



7.தேவி மந்திரம் 

ஓம் ரீங் சிவயவசி 


குரு உபதேசப்படி சுழிமுனையில் மனம் வைத்து காலை,மதியம்,மாலை என மூன்று வேளையும்  இம்மந்திரம் ஜெபித்து வர லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் மேன்மை உண்டாகும்.

  
இவற்றில் உங்கள் தகுதி,சூழ்நிலை,தேவை அடிப்படையில் எது அவசியமோ அதற்கான மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துச் செய்து பலன் பெறுங்கள்.

நம் வாழ்வு நலமும் வளமும் பெற குரு ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியரையும், குரு பத்னி அன்னை ஸ்ரீ ஸ்ரீ லோபா முத்ராவையும் வேண்டுகிறேன்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com