Thursday, 21 November 2013

செய்வினை,ஏவல்,வசியம் மற்றும் மாந்திரீக பாதிப்புகளால் உண்டான தீமைகள் நீங்க வழிபாடு

தற்சமயம் உறவுகள் மற்றும் பிறருடன் அனுசரிப்பு ,கர்ம பலன்களை ஏற்றுக்கொள்ளுதல்  போன்ற நற்குணங்களின்றி  தன் மகிழ்ச்சி மீதே குறியாக இருந்து,வெற்றி வேண்டும் என்பதற்காக எந்த தீய செயலையும் செய்து விட தயாராக இருக்கிறார்கள்.எந்த வினையும் அதற்கான பின் விளைவுகளை உரிய காலத்தில் தந்தே தீறும்.எனவே அத்தகைய தீவினை,தீயவர்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வர அவை யாவும் நீங்குவதுடன் மீண்டும் வராது காத்துக்கொள்ளலாம்.

இந்து தர்மத்தில்  அநேக தெய்வங்கள் இருந்தாலும் ஒவ்வொரு தெய்வமும் சில குறிப்பிட்ட பலன்களை அதிகமாக வளங்கக்கூடியவர்களாக    இருப்பார்கள்.உதாரணமாக ஸ்ரீ சரஸ்வதி நல்ல கல்வி, அறிவு, மேதாவிலாசம், ஞாபக சக்தி போன்ற தன்மைகளை அதிகமாக அருளும் தெய்வம்.

5 ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது .நாம் மிக பிரியத்துடன் தெய்வ வழிபாடு செய்து வருகிறோம்.ஆனால் தெய்வங்கள் நன்மையும் செய்கின்றன தீமையும் செய்கின்றன .இக்கருத்து என்னை முன் போல் உபாசனை செய்ய விடாமல் தடை செய்தது.வழக்கம் போல் தியானம் செய்கையில் என் மானச குரு அகஸ்தியரிடம் உளமார வேண்டி விளக்கம் அளிக்க வேண்டினேன்.சில நாட்களில் விடை கிடைத்தது.நம் பூமியைப்போல் பல்வேறு உலகங்கள் இருக்கின்றன அவற்றின் இயக்கத்தின் பொருட்டும் ,உயிர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப  பலன்களைத் தரவும் ஏக பரம்பொருளின் சார்பில் செயல்படும்  பணியாளர்களே  தெய்வங்களும், கிரகங்களும்,மற்றைய பூதங்கள் முதலான கணங்களும். எனவே அவர்கள் கர்ம தாதா எனப்படுகின்றனர்.
  
மந்திரசாஸ்திரத்தில் அபிசார பிரயோகம் எனப்படும்  செய்வினை, ஏவல், வசியம் மற்றும் மாந்திரீகப் பிரயோகங்களால்  உண்டான தீமைகள் நீங்க அநேக தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் கூறப்பட்டிருந்தாலும் அதில் மிக வலிமையானதும் எளிதானதும் ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடே.

ஹிரண்யனை வதம் செய்த பின்னும் ஸ்ரீ நரசிம்மரின் உக்கிரம் கட்டுப்படவில்லை அவரைக்கண்டு அன்னை ஸ்ரீ லக்ஷ்மியே அஞ்சினார் என புராணம் சொல்கிறது மற்ற தேவர்களை கேட்கவேண்டுமா எல்லோரும் சிவபிரானை வேண்ட சிவன் வீரபாகுவை அனுப்புகிறார் வீரபாகுவையும் தன் நகத்தால் கீறி அடித்து காயப்படுத்தி அனுப்புகிறார் நரசிம்மர்.இறுதியில் சிம்ம முகமும் மனித உடலும் தாங்கிய வடிவம் கொண்ட ஸ்ரீ நரசிம்மரை அடக்க  அதைவிட பிரம்மாண்டமான ஒரு சக்தியாக ஸ்ரீ சரபேஸ்வரரைப் படைத்து அனுப்புகிறார் சிவபெருமான்.இருவருக்கும் நடந்த யுத்தத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் ஜெயித்து ஸ்ரீ நரசிம்மரைத்  தன் மடியில் கிடத்தி ஆசுவாசப்படுத்தினார் .அதன் பின்னர் ஸ்ரீ நரசிம்மர் தெளிவடைந்து ஸ்ரீ சரபேஸ்வரரைப் போற்றிப் பாடிய சுலோகம் தான் ஸ்ரீ சரபேஸ்வராஷ்டகம். ஸ்ரீ சரபேஸ்வரர் யாழியைப் போன்ற உருவம் தாங்கி இருபுறமும் இறக்கைகளும் கொண்டவர்.ஒரு புறம் உள்ள இறக்கையில் இருந்து அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கையும் மறு புறம் உள்ள இறக்கையில் இருந்து அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியும் தோன்றினர்.இவர்கள் இருவரும் ஸ்ரீ சரபேஸ்வரரின் மனைவியர்.

இன்று பெரும்பாலோரால் நன்கு அறியப்பட்ட தெய்வமான அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியின் ஆலயம் ஒன்று கும்பகோணம் அருகில் அய்யாவாடியில் உள்ளது.இங்கு செய்யப்படும் ஹோமத்தில் சமித்தாக மிளகாய் வற்றல் இடப்படுகிறது.ஆனால் மிளகாய் நெடி வருவதில்லை. இவளும் சரபரை போன்று மாந்திரீக பாதிப்புகளை நீக்குபவள்.

அன்னை ஸ்ரீ சூலினி துர்கா -இவள் மாடன் முதலிய துர்தேவதைகளின் ஏவல்,மற்றும் நவக்கிரக தோஷங்களை நீக்கும் சக்தியுள்ள தெய்வம்.

மேற்கண்ட மாந்திரீக பாதிப்பு உள்ளவர்கள்,அல்லது நடப்பு தசா புத்திகளில் இத்தகைய தீமைகளை அனுபவிக்கும் அமைப்பு உள்ளவர்கள் ஸ்ரீ பிரத்யங்கிரா,ஸ்ரீ சரபேஸ்வரர் இவர்களை வழிபடுங்கள்.மற்றபடி இவர்களை சாதாரணமாக மிகத் தீவிரமாக உபாசிக்க வேண்டாம்.       

நவக்கிரங்களில் எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும்,குறிப்பாக ராகு கிரகம் மோசமாக இருந்தால்  தான் மாந்திரீக பாதிப்புகள் உண்டாகும்.எதுவாக இருப்பினும்  அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கையை வழிபட நன்மை உண்டாகும்.

மாந்திரீக பாதிப்பு உள்ளவர்கள் காலை மாலை அல்லது ராகு காலத்தில் எச்சில் படாத செம்பில் நீர் நிரப்பி சிறிது மஞ்சள் பொடி கலந்து கீழ்க்கண்ட சரப காயத்ரி மந்திரத்தை குறைந்தது 27 தடவை தெற்கு நோக்கி இருந்து ஜெபித்து அதை வீடு முழுவதும் தெளித்து வர மாந்திரீக பாதிப்புகள்  நீங்கும்.வீட்டில் உபயோகப்படுத்தாத பழைய துணிகள்,சாமான்கள் இருந்தால் அவற்றை வெளியேற்றுங்கள்.தீய சக்திகள் வர அவைகள் காரணமாகலாம்.ஸ்ரீ சரபரின்   காயத்ரி மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர தீய சக்திகளிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்..

மந்திரங்கள்:-

ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி:

ஓம் சாலுவேசாய வித்மஹே! 
பக்ஷி ராஜாய தீமஹி !
தன்னோ சரப ப்ரசோதயாத்!!

ஸ்ரீ சரபேஸ்வரர் மந்திரம் :

ஓம் கேம் காம் பட் ப்ராண க்ரஹாஸி ப்ராண க்ரஹாஸி ஹூம் பட் சத்ரு ஸம்ஹரணாய சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம் பட் ஸ்வாஹா ||


ஸ்ரீ ப்ரத்யங்கிரா  மந்திரம்:       

ஓம் க்ஷம்!
பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே !
கராள தம்ஷ்ட்ரே!
ப்ரத்யங்கிரே !
க்ஷம் ஹ்ரீம் ஹூம் ப்பட்!!  

ஸ்ரீ சூலினி துர்கா மந்திரம் 

ஜ்வல ஜ்வல சூலினி!!
துஷ்ட கிரஹ ஹூம் ப்பட் ஸ்வாஹா!!


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Wednesday, 20 November 2013

தசா புத்திகளில் துன்பங்கள் தீர வழிபாட்டு முறைகள்

தசா புத்திகளில் துன்பங்கள் தீர வழிபாட்டு முறைகள்:-

நமது பிறந்த ஜாதகம் என்பது நம் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது.எப்படி கண்ணாடியில் நம் முகம் தெரியுமோ அது போல் ஜாதகத்தை வைத்து நம் வாழ்வின் தன்மை அதாவது என்ன விதமான வாழ்க்கையை வாழ நாம் பிறந்துள்ளோம் என்று அறியலாம்.பிறக்கும் போது கிரகங்கள் இருக்கும் நிலைக்கேற்ப நம் வாழ்வு அமைந்தாலும் தற்சமய சூழ்நிலைகளுக்கு தசாபுத்தியே மூலம்.எனவே, தசா நாதனுக்கு  100% வலுவும்,புத்தி நாதனுக்கு 70% வலுவும் உண்டு.
எனவே ஜாதகத்தில் தற்சமயம் நடைபெற்று வரும் தசா நாதனையும் அதன் அதிதெய்வத்தையும்  வணங்கி வர அனுகூலமான சூழல் உண்டாகும்.தசா நாதனுக்கு அடுத்து புத்தி நாதன் வலுவானவர் என்பதால் புத்தி நாதனையும் அதன் அதிதெய்வத்தையும்  வணங்கி வர அனுகூலமான சூழல் உண்டாகும்.மேலும்,தசா புத்திகளை அனுசரித்து மனநிலையிலும் தொழில் வேலை சார்ந்த நிலைகளிலும் சில மாற்றங்களை செய்து கொள்ள விதியை மதி கொண்டு ஓரளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
மற்ற தசா புத்திகளோடு ஒப்பிடுகையில் 3,6,8,12ம் இட  அதிபதிகளின் தசை புத்தி அதிக துன்பங்களைக் கொண்டு வரும்.எனவே மேற்க்கண்ட அதிபர்களின் தசா புத்தி சமயங்களிலும்,தசா நாதனுக்கு பகை கொண்ட கிரகங்களின்  புத்தி நடைபெறும் சமயங்களிலும் கண்டிப்பாக வழிபாடும் நடவடிக்கைகளில் சில மாற்றங்களும் செய்துகொள்வது அவசியம்.


உதாரணமாக:-

சூரிய தசை நடைபெறும் போது அதிகாலையில் எழுந்து  சூரிய நமஸ்காரம் செய்து சூரிய மந்திரம்,காயத்ரி மந்திரம் ,சிவ,நாராயணன் வழிபாடு நன்மை தரும்.அதே சூரிய தசையில் சூரியனின் பகை கிரகங்களான சுக்கிரன்,சனி போன்ற கிரக புத்தி நடைபெறும் சமயம் நமக்கு தீமை உண்டாகும்.எனவே அவர்களின் அதி தெய்வ வழிபாடு செய்தல் அவசியம்.


நவக்கிரகங்களும் ஒவ்வொரு தெய்வத்தின் பிரதிநிதிகளே.இதன் விபரம் ஏற்கனவே  முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.

பால் வாங்க வேண்டுமானால் பால்காரன் நம் வீ ட்டிற்கு வரும்போதே வாங்கி விட்டால் அலைச்சல் மிச்சம் இல்லையென்றால் நாம் கடைக்கு சென்று அலைந்து வாங்கவேண்டும் .அதுபோல் ஓரு தெய்வத்தின் கிரகத்தின் அருள் பெற வேண்டுமானால் அந்த கிரகத்தின் நாளில் அந்த கிரக ஹோரையில் வழிபட நிறைவான பலன் உண்டாகும்.

மேற்கண்ட உதாரணப்படி: சூரிய தசைக்கு சூரியனையும்,சிவனையும் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரையில் வணங்கி, சுக்கிர புத்திக்கு சுக்கிரனையும் மகாலக்ஷ்மியையும்  வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையிலும் வணங்கி வரவேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்குரியது.அந்த நாளில் அந்த கிரகத்தின் ஹோரை நான்கு முறை வரும்.அதில் எதையாவது எடுத்து செய்யலாம்.ஆனால் அந்த நேரம் ராகுகாலம், எமகண்டம் தவிர்த்த  நேரங்களில் வரும் ஹோரையை பயன்படுத்தலாம்.
உதாரணம் :-

வெள்ளிக்கிழமை -சுக்கிரஹோரை கீழ்க்கண்ட நேரங்களில் வரும்.
அதிகாலை 6 முதல் 7 மணி வரை
மதியம்         1 முதல் 2 மணி வரை
இரவு             8 முதல் 9 மணி வரை
மறுநாள் அதிகாலை 3 முதல் 4 மணி வரை

இதே போல் ஒவ்வொரு கிரகத்தின் ஹோரையும் அதற்குண்டான நாளில் நாலு முறை வரும்.அதில் நல்ல நேரம் பார்த்து தேர்ந்தெடுத்து செய்யலாம்.

அது போல் நல்ல காரியங்கள் செய்ய சில ஹோரைகள் சிறந்தது என்று சொல்லப்படுகிறது ஆனாலும் பகை கிரகத்துக்குண்டான நாளில் அந்த கிரகத்தின் ஹோரைக்கு வீரியம் கிடையாது.உதாரணமாக ஞாயிற்றுகிழமை அன்று சுக்கிர ஹோரை,சனி ஹோரை சூரியனுக்கு சுக்கிரனும் ,சனியும் பகை கிரகங்கள்  எனவே அன்று அந்த ஹோரைகள் நல்ல பலனைத் தராது.

விளக்கேற்றும் போது தசா புத்தி நாதர்களை அறிந்து அவர்களுக்குண்டான நிறத்தில் புதுத்துணி வாங்கி அதை நூலாகத் திரித்து,அதற்குண்டான தானியத்தையும் அதில் வைத்து சுற்றி விளக்கேற்றி அதன் கருக்கை  நெற்றியில் இட்டு வர அவர்கள் அருள் உண்டாகும்.

உதாரணமாக சனி தசை என்றால் கருநீலம்  அல்லது கருப்பு நிறத்துணியை சிறிதாக வெட்டி எடுத்து அதில் சனியின் தானியமான எள்ளை சிறிது வைத்து முடிந்து அதை விளக்கேற்றப் பயன்படுத்தலாம்.

மேற்கண்டவற்றை அனுசரித்து நடக்க நன்மை உண்டாகும்.மேலும் கேள்விகள் இருந்தால் கீழ்க்கண்ட மொபைல் எண்ணுக்கோ ,ms.spiritual1@gmail.com என்ற  மெயில் id யிலோ தொடர்பு கொள்ளவும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Saturday, 9 November 2013

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - பிராணன்

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - பிராணன் 

முதலில் பிரதான அடுக்கான உடல்  பார்த்தோம். அடுக்கான பிராணன் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
 உடலில் உயிர் நிலைக்க பிராண அவசியம். நல்லவன்,கெட்டவன், உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என வேறுபாடின்றி யாவரும்  உயிர் வாழ்வது  பிராணனின் உதவியால் தானே.
இறைவழிபாடு,தியானம் செய்வதன் மூலம்  அதிக சக்தி பெறுகிறோம்.ஆனால் அந்த சக்தி நம்மிடம் பொருளாக வரவில்லை.சக்தி அலைகளாக வருகிறது.எனவே கண்ணால் காண முடியவில்லை.அந்த சக்தி  உடலில் எங்கேனும்,அல்லது வேறு எங்காவது வைத்துக்கொள்ளலாம்.அது  அப்படி வராமல் சக்தி அலைகளாக  பிராண சரீரத்தில் சேர்கிறது.எனவே பிராண சரீரம்  வலுவாக இருந்தால் மட்டுமே  வரும் சக்தியைச் சேமிக்கவும், தேவைக்கு அங்கிருந்து உபயோகப்படுத்தவும் செய்யலாம்.
உதாரணமாக ஒரு டம்ளரில் பெரிய பாத்திரத்தில் உள்ள  நீரை மேலிருந்து ஊற்றினால் அதில் மிக குறைவான நீர் மட்டுமே தங்கும்.வந்த தண்ணீர் அதிகம் ,நீர் ஊற்றப்பட்ட கிளாஸ்  மிக சிறியது .அது போல் உணவு,உணர்வு இவற்றில் முறையின்றி வாழும் நம்முடைய பிராண சரீரம் போதிய வலுவின்றியே இருக்கும்.


புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபோகும் முன் எப்படி அந்த வீட்டை ,தூசி தட்டி வெள்ளை அடித்து  வாழ தகுந்ததாக்கி அதன் பின் குடிஎருவோமோ அது போல் முதலில் நாடி ம்சுத்தி என்ற பயிற்சி செய்ய வேண்டும்.நமது உடலில் 72000 நாடி நரம்புகள் இருப்பதாக யோகசாஸ்திரம் கூறுகிறது.நாடி சுத்தி பயிற்சியின் மூலம் நாடிகள் தூய்மை அடைவதோடு ரத்தமும் சுத்தமாகும்.ஞாபக சக்தி கூடும்.முகத்தில் ஒளி உண்டாகும். நாடிகள் சுத்தமாகாமல் குண்டலினி யோகப் பயிற்சியில் இறங்கக்கூடாது என யோகநூல்கள் சொல்கின்றன.

நாம் அனேக தடவைகள் சில உறுதிமொழிகளை, குறிப்பாக ஒவ்வொரு புத்தாண்டின் போதும் அநேக முடிவுகளை எடுக்கிறோம்  ஆனால் மறு நாள் தூங்கி எழுந்ததும் அவற்றை மறந்து விடுவோம்.அல்லது அவற்றை தொடர்ந்து செய்ய மாட்டோம்.இதற்க்கு காரணம் வைராக்கிய குறைவு நல்ல பிராணசக்தி உள்ளவர்கள் மிகுந்த வைராக்கியம் உள்ளவர்களாகவும் எந்த செயலையும் சிறப்பாக செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இன்று அநேகர் பிராணசக்தியைக்  கொண்டு பல அற்புதங்கள் செய்கிறார்கள்.பிராண சக்தியினால் வியாதிகளைக்  குணமாக்குகிறார்கள்.

நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக  மூச்சை வெளியே விடுகிறோம்.சுவாசம் எப்போதும் மூக்கின் இரண்டில் ஒரு துவாரத்தின் வழியாகவே நடைபெறும்.அது இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.

வலதுபக்கம் சூரிய கலை ,இடது புறம் சந்திரகலை எனப்படும்.
இடம் வலமாக,வலம் இடமாக மாறும்போது சில நொடி,நிமிடம் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் சுவாசம் நடக்கும் அதற்கு சுழுமுனை எனப் பெயர்.

 திங்கள்,புதன்,வெள்ளி,வளர்பிறை வியாழன்  நாட்களில் அதிகாலை 4 முதல் 6 மணிவரை இடது புறம் சுவாசம் நடக்கும்.

செவ்வாய்,சனிக்கிழமை,ஞாயிறு,தேய்பிறை வியாழன்   நாட்களில்  அதிகாலை  4 முதல் 6 மணிவரை வலது புறம் சுவாசம் நடக்கும்.
பின் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.

சூரியகலை (வலது) நடக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள் :-

கடினமான வேலைகள் செய்யலாம்,உணவு உண்ண ,மலம் கழிக்க ,உடலுறவில் ஈடுபட,கடல் யாத்திரை போக,சண்டையிட,கஷ்டமான கலைகள் கற்க,குதிரை,மாடு முதலிய நாளுகள் விலங்குகள் வாங்க,மலை ஏற ,பளு தூக்க,நீந்த,பணம் கொடுக்கல் வாங்கல் செய்ய, அரசன், பெரியமனிதர்களைக் காண,மருந்து சாப்பிட,செரிக்க கடினமான ஆகாரம் உண்ண,வைத்தியம் பார்க்க நன்று.

சந்திர கலை (இடது) நடக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள் :-

எல்லா சுப காரியமும் செய்ய நன்று.நீர் அருந்த,தீர்மானம் செய்ய,நகை செய்ய நகை அணிய,புத்தாடை அணிய,திருமணம் பேச,பெண்பார்க்க, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள,வீடு கோயில் கட்ட,தர்மம் செய்ய,குளம்,கிணறு வெட்ட,வைத்திய சாஸ்திரம் கற்க,  மருந்து செய்ய,சாமான்கள் வாங்க,புதுவீடு குடிபுக,விதை விதைக்க,பாஷைகள் கற்க,நடனம்,பாடல் கற்க,நண்பர்கள் உறவினரை காண நன்று.

மேற்சொன்னவாறு காரியங்களை அந்தந்தக்  கலையில் சுவாசம் நக்கும் போது செய்ய வெற்றியுண்டாகும்.

சுழுமுனை நடக்கும் செய்யும் காரியம் தோல்வியடையும்.ஆனால் இறைவழிபாடு,தியானம் செய்ய மிகச்சிறப்பு.

சூரியகலையில் தம்பதியர் இணைந்தால் ஆண் குழந்தையும்,சந்திர கலையில் 
இணைந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.சுழிமுனையில் இணைந்தால் அலியாய்ப் பிறக்கும்.

ஏதேனும் வியாதி (உதாரணமாக :தலைவலி) ஏற்பட்டால் அது ஆரம்பித்த நிமிடம் எந்த பக்கமாக சுவாசம் ஓடுகிறது என பார்க்கவும் அதற்கு அடுத்த பக்கத்தில் சுவாசத்தை மாற்றினால் அந்த குறிப்பிட்ட வியாதி நீங்கிவிடும்.

மேலே சூரிய கலை,சந்திர கலையில் செய்ய காரியங்களை பற்றி கூறினேன்.உதாரணமாக நமக்கு சூரிய கலை நடந்து கொண்டிருக்கிறது ஆ னால் நாம் செய்ய வேண்டிய காரியம் சந்திர கலையில் செய்ய வேண்டியது .இதுபோன்ற தருணங்களில் என்ன செய்யலாம். அடுத்த பக்கம் மாறும் வரை எல்லா நேரங்களிலும் காத்திருக்க முடியாது

சுவாசத்தை மாற்றும் முறைகள்:-
1.மூச்சு ஓடும் பக்க அக்குளில்(வலது பக்கம் எனில் வலது கை அக்குள்) ஒரு துண்டை சுருட்டி மடித்து வைத்துக்கொண்டு  கையை பின்புறம் மடக்க கொள்ள  சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு மாறும்.

2.காலை மடக்காமல் மூச்சு ஓடும் பக்கம்  சாய்ந்து படுத்து அந்த பக்கத்து கையை தலைக்கு வைத்து படுத்திருந்தால் சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு மாறும்.

3.ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி,ஸ்ரீ புவனேஸ்வரி,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மந்திரத்தில் சித்தி பெற்றிருந்தால் அந்த சக்தியிடம் வேண்டினால் மூச்சு உடனே மாறும்.நான் இந்த முறையில் மூச்சை மாற்றுகிறேன்.


மேலே சொன்னவாறு ஒவ்வொரு பக்கம் மூச்சு ஓடும் போதும்  இழுக்கும் மூச்சை விட வெளிவிடும் மூச்சின் அளவு நமக்கு அதிகம்.அதுவும் சூரியகலையை விட சந்திர கலையில் அதிகமாக பிராணன் வீணாகிறது.எனவே யோகியர் சுழுமுனை அல்லது சூரிய கலையில் சுவாசம் வருமாறு வைத்துக்கொள்கிறார்கள்.இயல்பாக நஷ்டமாகும் பிராணன் போக பேசும் போது,கடின உழைப்பின் போது ,உடல் உறவு கொள்ளும் போது, தூங்கும் போதும் அதிக பிராணன் வீணானாலும் உறங்கும் நேரம் அதிகம் ஆகையால் உறக்கத்தின் போது பெருமளவில் பிராணன் நஷ்டமடைகிறது. எனவே சூரியகலையில் உறங்கினால் பிராண நஷ்டத்தை குறைத்துக் கொள்ளலாம். அதற்கு இடது கையைத் தலைக்கு வைத்து இடது புறமாகச் சாய்ந்து படுக்க வேண்டும்.மதிய உணவிற்குப்பின் பெரும்பாலோர் உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அவர்களும் இவ்வாறு உறங்கினால் சீக்கிரம் உண்ட உணவு ஜீரணமாகும்.

மேலும் சூரிய,சந்திர ,சுழுமுனை இவற்றை பயன்படித்தி ஆரூடம் சொல்லலாம்,பிறக்கப் போகும் குழந்தை ஆனா பெண்ணா என்று அறியலாம்,காணாமல் போன பொருள்,நபர்  வருமா வராதா மற்றும் அநேக காரியங்கள் செய்யலாம். விவரித்தால் அதிகம் போகும் எனவே இத்துடன் முடிக்கிறேன்.


நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக  மூச்சை வெளியே விடுகிறோம்.புது இரண்டு சக்கர வாகனம் எடுத்தவுடன் குறிப்பிட்ட கிலோமீட்டர் வரை 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் அப்போதுதான் அதற்கு  அதிக மைலேஜ் கிடைக்கும்.அதுபோல் நாடிசுத்தி மற்றும் பிராணாயாமம் செய்து வர வர அதிக சுவாசம் உள்ளே சென்று குறைந்த சுவாசம் வெளிச் செல்லும்.நமக்கு நிறைய பிராண சக்தி கிடைக்கும்.   


பிராண சரீரத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள்  :-

நாடிசுத்தி :-

உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.

1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்கு துவாரத்தை அடைத்து இடது மூக்கு துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்கு துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
  
இப்படி செய்தால் ஒரு தடவை(சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதை காலை,மதியம் உணவுக்கு முன்,மாலை ,நள்ளிரவு என 4 வேளையும் செய்து வர பிராண சரீரம் மிக வலிமையுடன் திகழும்.
நாடி சுத்தியை குறைந்தது ஒரு மாதமாவது செய்து பின் மற்ற பிராணயாம பயிற்சிகளை செய்தல் நலம்.

பிராணயாமம்:-

இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக  மூச்சை உள்ளிழுத்து பின்னர் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.

இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளை பெரிதாக்கி சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதை சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.நேர்முகத்தேர்வுக்குக் காத்திருக்கும் போது சில தடவைகள் செய்ய பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய  மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.

கபாலபாதி:-

இரு மூக்கு துவாரத்தின் வழியாகவும் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக மூச்சை இழுத்தும்,வெளியிடவும் செய்யவேண்டும்.இதன் மூலம் கபாலம் எனும் தலையில் தங்கிய சளி வெளியேறும்.
ஒவ்வொரு வியாதி வரும் போதும் அது  நமக்கு முன்கூட்டியே
எச்சரிக்கை செய்துவிட்டுதான் வருகிறது.உதாரணமாக சளி பிடிக்கும் முன் தும்மல் வரும்,தொண்டையில் ஒரு மாதிரியான அரிப்பு வரும் அதை உணர்ந்து இந்த கபாலபதி பயிற்சியை 20 தடவை முதல் 30 தடவை வரை செய்ய சளி பிடிக்காது.இதை தொடர்ந்து செய்து வர சைனஸ் நீங்கும்.

சீத்காரி :-

சீதளம் என்றால் குளிர்ச்சி   எனப்பொருள்.

பற்களைச்  சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.

சீத்தளி:-

நாக்கை குழல் போல் மடித்து மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.

வெயிலில் எங்காவது அலைந்து நன்கு வேர்த்து விட்டால் வீடு அல்லது அலுவலகம் வந்து சேர்ந்ததும் இதைச்  செய்ய உடனே வியர்வை நிற்கும்.
உஷ்ணமான உடல் அமைப்பு கொண்டவர்கள் இந்த ப்ராணாயாமங்களை தினமும் செய்து வர உடலில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.உஷ்ண தேகமானால் அதிக காமம் உண்டாகும்,சிறுநீரோடு விந்து,நாதம் வெளியேறும்,பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உண்டாகும் அவை யாவும் இந்த ப்ரானாயாமத்தினால் தீரும்.ரொம்ப சோர்வாக உணரும் வேளைகளில் இதனை செய்ய உடனே சக்தி கிடைக்கும்.இரவில் விளித்து படிக்கும் மாணவர்கள் இதை சில தடவைகள் செய்ய உறக்கம் உடனே வராமல் சக்தியும் கிடைக்கும்.  
சீத்தளி,சீத்காரி இரண்டு ப்ராணாயாமங்களையும் மழை மற்றும் பனிக்காலங்களில் செய்ய வேண்டாம்.


பிரபஞ்ச ஆற்றல் ,பிராண சக்தி அதிகம் பெற பயிற்சி:-

நாக்கை ''ழ''  சொல்வது போல் மடித்து மேல் அன்னத்தில் படுமாறு வைத்துக்கொண்டு உச்சந்தலையில் உள்ள துரியத்தில் மனம் வைத்து தியானிக்க வேண்டும்.இதை அதிகபட்சமாக 20 நிமிடங்கள் செய்யலாம் அதற்கு மேல் செய்யவேண்டாம்.

இந்த பயிற்சி அநேக யோகிகளால் பயிலப்பட்டது.இதனை செய்ய உடனடியாக பிரபஞ்ச சக்தி நம் தலை வழியே நமக்குள் இறங்குவதை உணரலாம்.இது கர்ம வினை சார்ந்த நம் சிந்தனையில் ஏற்படும் குழப்பங்களை நேக்கும்.நம் செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும்.சித்தர் தரிசனம்  உண்டாகும்.அநேக ஆன்மீக அனுபவங்கள் உண்டாகும்.

மேலும் பயிற்சிகள் கற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Saturday, 26 October 2013

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - உடல் ( பசி ,தூக்கம், காமம் )


                      வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - பகுதி 1-உடல் 

உடல்,பிராணன்,மனம்,ஆன்மா,பொருளாதாரம் என்ற ஐந்து நிலைகளிலும் பலமாக இருக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே அது ஒரு  முழுமையான வாழ்வாக இருக்கும்.எண்ணிய யாவினையும் அடைந்து அனுபவித்து உயர மேற்கண்ட ஐந்து நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.

பசி,தூக்கம், காமம் இவை கடவுள் எல்லா உயிர்களுக்கும் இயற்கையாகவே கொடுத்தது.இவை யாவும் ஆசைகள் இல்லை தேவைகள்.இவற்றில் எதுவும் தவறு இல்லை.ஆனால் மிதமிஞ்சிய ,முறையற்ற செயல்பாடுகளே தவறு.இயற்கையை நன்கு உற்று நோக்கினால் செடி,மரம்,விலங்குகள் என யாவும் பிறக்கின்றன ,வாழ்கின்றன, சாப்பிடுகின்றன, இனத்தைப்  பெருக்குகின்றன.இயற்கையில் இதற்கு மேலான அர்த்தமோ ரகசியமோ இல்லை.ஏனென்றால் அவைகளெல்லாம் அளவான சுதந்திரத்தோடு படைக்கப்பட்டவை.மனிதன் மாத்திரமே எல்லைஅற்ற சுதந்திரத்தோடும் ,இறைவன் எனும் விதையை  தனக்குள் கொண்டும் படைக்கப்பட்டிருக்கின்றான்.அவ்வாறு இறைவனைப்போல் ஆன  அநேகம் மகான்களும் சித்தர்களும் உலகெங்கும் எல்லா காலங்களிலும் தோன்றியவாறே உள்ளனர்.என் சக மனிதனுக்கு சாத்தியமானது எனக்கும் சாத்தியமே என உணர்ந்து வாழ்வை சரியாகவும்,முழுமையாகவும் வாழ்ந்து ,சில அப்யாசங்களையும்  செய்து வர நமக்குள் உள்ள இறைவன்  எனும் விதை மரமாகி நமக்கும் உலகுக்கும் பயன்பட வாழலாம்.அதற்கு உடல்,பிராணன்,மனம்,ஆத்மா,பொருளாதாரம் என எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்கவேண்டும்.

சித்தர்கள்,மகான்கள்,தெய்வங்கள் என்போர் தவம் புரிந்து சக்திகளை அடைந்து சக்தி மயமாக இருக்கின்றனர்.நாமும் உடல், பிராணன்,மனம், ஆன்மா, பொருளாதாரம் என்ற நான்கிலும் சக்தி உடையவர்களாக விளங்கினால் அடைய முடியாத விஷயம் எதுவுமில்லை.

அதற்கு என்ன செய்ய வேண்டும்.மனம்,ஆன்மா என்று எவ்வளவுதான் பேசினாலும்,படித்தாலும் அவற்றை குறித்த நேரடி அனுபவம் அனேகமாக நம்மில் பலருக்கு பூஜ்ஜியம் தான்.உதாரணமாக ஒரு வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றால் முதலில் பிராதான வாயில் கதவைத் திறந்து (MAIN GATE) பின்னர்  வீட்டின் கதவைத் திறந்து உட்செல்வோம்.அது போலவே நமக்கு கண்ணுக்குத் தெரியும் உடலில் இருந்து பின் நுட்பமான விஷயங்களுக்குச்  செல்லலாம். உடல் அளவில் சக்தி பெற்று உடலைக்கடந்து ப்ராணனை, மனதை ,ஆன்மாவை புரிந்து கொள்ளலாம்.

உடலை திருப்திப்படுத்த நல்ல சாப்பாடு,நல்ல தூக்கம்,நிறைவான காமம் வேண்டும்.

மனதை திருப்திப்படுத்த நேசித்தல்,நேசிக்கப்படுதல்,புகழ் பட வாழ்தல் இவை வேண்டும்.

முதலில் உடலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

உடல்  - பசி தூக்கம், காமம் :- 

பசி,தூக்கம்,காமம் மூன்றும் கடவுளின் சொந்த தயாரிப்புகள் அவைகளின் மூலமே அவைகளை அனுபவித்து கடந்து செல்ல முடியும்.

பசி:
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினில் உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை நானிருந்து ஓம்புகின்றேனே -திருமூலர் திருமந்திரம்


                          உடலின் இயல்பே ஆரோக்கியம் தான் .வியாதி என்பது நம் உணவு,கர்மவினை,சூழல்,கவனக்குறைவு இவற்றின் காரணமாக வந்து போகும் ஒன்று.அருகில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல நாம் நடந்தே கூட சென்று விடலாம்.ஆனால், தொலை தூரத்திற்கு செல்ல வேண்டும் அதுவும் விரைவாய் சென்று சேரவேண்டும் என்றால் விரைவாக செல்லக்கூடிய நல்ல நிலையில் உள்ள ஒரு  வாகனம்தேவை.அந்த வாகனமே நம் உடல்.அதை எப்படி சரியாக வைத்துக்கொள்ளலாம்.

ஸ்தூல உடல் ரிஷிகளால் அன்னமயகோசம் என்றழைக்கப்படுகிறது  அதாவது உணவால் ஆன அடுக்கு/தளம் என்று பொருள் .உண்ணும் உணவே நம் கண்ணுக்குத் தெரியாமல் மனமாக மாறுகிறது என வேதங்களும், உபநிடதங்களும் கூறுகின்றன.
தொல்காப்பியம்  கூட ''உணவெனப்படுவது நீரும் மண்ணும்'' என்கிறது.

உதாரணமாக:-
ஒரு மிளகாயை எடுத்துக்கொள்வோம்
அது ஒரு ஜடப்பொருள் - ஸ்தூலம்
அதை உண்டால்  சுவையான காரம்தெரியும் - அது சூட்சுமம்
மிளகாயை உடல் செரித்து தேவையானதை ஈர்த்துக் கொண்ட பின் எஞ்சியது கழிவாகவும்,மனதில் கோபம் என்ற அம்சமாகவும் மாறுகிறது.-அதிசூக்குமம்

உடல்,மனம்,ஆன்மா போல் எல்லாப்பொருளுக்கும்,உயிருக்கும்  மூன்று தன்மைகள் உண்டு.

உருளைக்கிழங்கில் வாயு எனப்படும் வாதத்தின் அம்சம் அதிகம் உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு உணவுப் பொருளிலும் வாதம், பித்தம், சிலேத்துமம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அம்சம் தூக்கலாக இருக்கும்.இவற்றில் வாதம் காற்றின் அம்சம்,பித்தம் நெருப்பின் அம்சம்,சிலேத்துமம் நீரின் அம்சம்.இயல்பாகவே நம் உடல் என்ன அம்சமோ அதை அறிந்து அதற்கு ஒத்துக்கொள்ளும் உணவு வகைகளை உண்ணவேண்டும்.

ஆயுர்வேதம் கூறுகிறது :- நீங்கள் வசிக்கும் இடத்தில் வளரும் அல்லது உங்கள் வசிப்பிடத்தின் சூழலில் வளரும் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துகொண்டால் உணவுப்பொருட்களால் நோய் வராது. லங்கனம் பரம ஔஷதம்  அதாவது நன்கு பசி ஏற்பட்ட பின்னர் உணவு உண்ணுதல்,உடலை சதை அதிகமில்லாமல் ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளுவதன் மூலம் வியாதிகளைத் தவிர்க்கலாம். தேன்,பேரிச்சை,முந்திரிப்பழம் போன்ற எளிதில் கெட்டுப்போகாதவைகளை அதிகம் சேர்த்துக்கொண்டால் அது உடலை இளமையாக வைக்கும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் -
முதலில் உண்ட உணவு நன்கு செரிமானமாகி நன்கு பசி ஏற்பட்ட பின் உணவு உண்டால் உடலில் நோயே வராது என வள்ளுவர் கூறுகிறார்.

திருமுருக கிருபானந்தவாரியார் ஒரு முறை சொன்னது:- ''பசி வந்த பின் வாயில் உணவை வைத்து பசி நிற்கும் முன்னமே கையை எடுத்து விடு உனக்கு வியாதி இல்லை ''.

தூக்கம் :-

எப்படி உணவு உடலுக்குச் சக்தியளிக்கிறதோ அது போலவே தூக்கமும் சக்தியளிக்கிறது.தூக்கமும் ஒரு வகை சாப்பாடு தான்.இரவில் போதுமான அளவு  தூங்கவில்லை என்றால் பகலில் சுறுசுறுப்புடன் வேலை செய்ய முடியாது.சக்தியைத்தரும் தூக்கத்தை முறையாகச் செய்யவேண்டும்.

சரியாகத் தூங்கும் முறை:-

எப்படி ஒரு டூவீலரை  நிறுத்தி வைக்கும் போது அந்த வண்டி கியரில் இருந்தால் ஒவ்வொரு கியராக குறைத்து  நியூட்ரளுக்கு கொண்டு வந்து நிறுத்துவோமோ அதைப் போல் பகல் முழுதும் ,இரவு தூங்கும் வரை உடலும் ,மனமும் செயல் பட்டுக்கொண்டே இருக்கிறது  அதைப் படுத்தவுடன் உணர்வுடன் உடல் உறுப்புகளைக் கவனமாகத்  தளர்த்தி நாம் படுத்திருக்கும் நிலையை உணர்ந்தவாறு தூங்கவேண்டும்.அப்படித் தூங்கினால் குறைந்த நேரம் தூங்கினாலும் அதிக சக்தி கிடைக்கும்.கனவுகள் குறைந்த ஆழ்ந்த நல்லுறக்கம் வாய்க்கும்.சரியாகத்தூங்காவிட்டால் உடல் சூடு அதிகமாவதுடன் காமம் மிகும்,செயல் வேகம் குறையும்,சோம்பல் உண்டாகும்.எப்படி உறங்கும் போது முறையாக உறங்கினோமோ அது போல் எழும் போதும் பதறி எழாமல் மெல்ல கை,கால்களை அசைத்து உடலைக்  கவனித்தவாறே எழ வேண்டும்.

காமம்:-

எவ்வளவோ ஒழுக்கவிதிகளை நம் முன்னோர்கள்,உலக மகான்கள் சொல்லியிருந்தாலும் பொய் சொல்லாதே,யாரையும் துன்புறுத்தாதே,திருடாதே,முறையற்ற காமம் தவறு என பல ஒழுக்க விதிகள் இருந்தாலும் காமம் என்ற விஷயத்தில் பலர் ஒருவரை மிஞ்சி இன்னொருவர் சிறப்பாக நடிப்பவராக,காண்பித்துக்கொள்கிறார்களே அன்றி காமத்தில் தெளிவாக இருக்க முடியவில்லை.அது ஏன் என்று பார்க்கலாம்.
திருடாதே என்றால் நம் பொருளை ஒருவர் திருடினால் நமக்கும் இப்படித்தானே  வருத்தம் உண்டாகும் என்று யோசித்தே உணரலாம். ஒருவரை அடித்தால் அவருக்கு வலிக்கும் நமக்கும் இப்படித்தானே  வருத்தம் உண்டாகும் என்று யோசித்தே உணரலாம்.
ஆனால் இவற்றில் சரியாக இருக்கமுடிந்தாலும் காமத்தில் மட்டும் ஏன் முடியவில்லை.
இரண்டு பேர் காமம் கொண்டால் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தானே ஓழிய வருத்தம் இல்லை .
ஒரு உதாரண சூழல் :- இரண்டு பேர் காமம் கொள்கின்றனர் .நல்லவன்,கேட்டவன்,யோகி,சிறுவர்கள் என யார் அதை கண்டாலும் வேதனைப்படுவதோ,குற்றமாக உணர்வதோ இல்லை.எந்த புனிதமான கோயிலுக்கும் ,இமாலயத்திற்கும் சென்று காமத்தில் எது,என்ன தவறு உள்ளது என கேள்வி கேட்டாலோ,தியானம் செய்தாலோ அதற்கு பதில் கிடைக்காது.இதனால் தான் எத்தனை புத்தகம் படித்தாலும் ,கேட்டாலும் காமம் குறித்த தெளிவு உண்டாவதில்லை ஏனென்றால் மனம் எப்பொழுதும் நிரூபணம் கேட்கும்.தத்துவம் கேட்காது.எனவே காமத்தை உணர ,கடந்து வர வேறு மாற்று வழிகள் இல்லை.பிறவி சித்தர்கள் விதிவிலக்கு.அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு மிகச் சிலரே தோன்றுகிறார்கள் அவர்கள் தங்கள் முற்பிறவிகளில் அவற்றை அனுபவித்து கடந்திருப்பார்கள்.

எனவே காமத்தைச் சரியாக அனுபவிக்காமல் ஆன்மீகத்தில் உயர முடியாது.ஜான் ஏறினால் முழம் சறுக்கும்.

                            இந்து தர்மம் ஒரு சம்பூர்ண மார்க்கம் ,ஏனென்றால் கடவுள் முதல் வைத்தியம்,காமம் என எல்லாத் தேவைகளைப் பற்றியும் நிறைவான விளக்கங்களும்,கிரந்தங்களும் ஞானப்பெருமக்கள் இயற்றி  இருக்கின்றனர்.சிறுவயதில் தோன்றிய காமத்தை 25 வயதிற்கு மேல் திருமணமான பிறகே அனுபவிக்கிறோம்.அத்தனை வருடம் அடக்கி வைத்திருந்த காமத்தை திருமணமான பிறகும் சரியாக அனுபவித்து அந்த அதீத ஆசையை நிதானத்திற்குக் கொண்டுவர வேண்டாமா?.
அதற்கு என்ன செய்யலாம்? மனைவியோடு காமம் கொள்ளும் போது உச்சகட்டம் அடைந்ததும் அந்த சுகானுபவம் எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று அந்த நேரத்திலேயே கவனமாக உணரவேண்டும்.ஆரம்பத்தில் அடிக்கடி மறந்து விடுவோம் ஆனால் தொடர்ந்து முயற்சித்து எல்லா நேரமும் அந்த சுகானுபவத்தை கவனிக்க கவனிக்க காமம் திகட்டி விடும்.உதாரணமாக ,ஒரு ஸ்வீட் கடையில் வேலைசெய்யும் ஒருவர் அடிக்கடி ஏதேனும் ஸ்வீட் எடுத்து சாப்பிட்டபடியே  இருப்பார்.மேலும் ஆரம்ப நாட்களில் வீட்டிற்கும் அதிகம் எடுத்து வருவார்.காலப்போக்கில் தொடர்ந்து சாப்பிட்டதின் விளைவாக அவருக்கு அது திகட்டிப்போய்  அருகிலேயே ஸ்வீட் இருந்தாலும் மனம் அதை சாப்பிடு,சாப்பிடு  என்று அரிப்பதில்லை.அரிதாக விரும்பினால் உண்பார்.ஆனால் நாமோ சாகும் வரை ஸ்வீட்டின் மேல் அதீத பிரியம் உள்ளவர்களாக இருப்பதோடு ,இறந்தபின்னும் நமக்கு படைக்கிறார்கள்.

முதல் மனிதனைக் கடவுள் படைத்தார்,பின்னர்    தோன்றிய எந்த விலங்கும் ,மனிதனும் அவரவர் மூலமாகவே படைக்கிறார்.எனவே இது தவறு இல்லை.இது குறித்த குற்ற உணர்ச்சி தேவை இல்லை.

                       திருமணத்தின் போது பார்க்கப்படும் ஜாதகப்  பொருத்தங்களில் யோனி பொருத்தம் என்பதும் ஒன்று.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த  நட்சத்திரத்தில் பிறந்தவர்களோடு  காமத்தில் நிறைவான அனுபவம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  குறிப்பிட்ட திசைகளில் தலை வைத்து உறவு கொள்ள திருப்தியான, மனம் மகிழும் வண்ணம் காமம் அமையும்.இதைப்பற்றி இதற்கு மேல் வெளிப்படையாக சொல்வது சரியாக இருக்காது.ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் ஜாதகம் அல்லது பிறந்தநாள்,பிறந்தநேரம்,பிறந்த ஊர்  இவற்றுடன் எனது இணைய முகவரிக்கு (ms.spiritual1@gmail.com) மெயில் அனுப்புங்கள்.

அடுத்த பதிவில் பிராணன் பற்றி பார்க்கலாம்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Monday, 21 October 2013

அழகு கூட ஜெபிக்க வேண்டிய மந்திரம்

அழகு கூட ஜெபிக்க வேண்டிய மந்திரம்:-

ஒவ்வொரு திங்கள் கிழமை இரவும் 8 முதல் 9 மணிக்குள் ஸ்ரீ சௌந்தர்யதேவியை வணங்கி கீழ்க்கண்ட மந்திரத்தை  கிழக்கு நோக்கி அமர்ந்து குறைந்தது 27 தடவை  அதிகமாக 108 தடவை வரை ஜெபித்து வர பெண்கள் மேலும் அழகாவதுடன்  ,முகத்தில் தேவையற்ற பரு,தழும்பு இவைகள் அற்ற மிருதுவான தோல் அமைவதுடன்,முக வசீகரம் உண்டாகும். இதைக் குறைந்தது 11 வாரங்கள் செய்யவும்.வளர்பிறை திங்கள்கிழமை அன்று ஆரம்பிக்கவும்.பௌர்ணமி அன்று செய்ய மந்திரம் விரைவில் சித்திக்கும்.


ஒம் சௌந்தர்யே சௌந்தர்ய ப்ரதே சித்திம் தேஹி நமஹ


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Wednesday, 25 September 2013

நவக்கிரஹ வழிபாடு

நவக்கிரஹ வழிபாடு:-




                                     நவக்கிரஹங்களும் தெய்வங்களும் நாம் இந்த ஜன்மத்தில் கொண்டு வந்த வினைகளை (பிராரப்த கர்மா ) அனுபவிக்க சூழ்நிலையையும், எண்ணங்களையும் உண்டாக்குகின்றனர்.எனவே,நவக்கிரகங்களை, தெய்வங்களை பழிப்பது கூடாது. இருப்பினும்,அவர்களை வழிபட்டால் நன்மைகளை நிறைவாகவும்,தீமைகளின் கெடுபலன்களை குறைத்தும் அருள்செய்வார்கள்.

தற்சமயம் எந்த கிரகத்தின் தசா புத்தி நடைபெற்று வருகிறதோ அதற்கான மந்திரத்தை  ஜெபித்து வரலாம்.மேலும,அவற்றிற்கான கூடுதல் பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.சூர்யபகவான் :-

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||

வேலையில்,அரசியலில்,உடல்நலத்தில் குறிப்பாகத் தலை தொடர்பான வியாதிகளை  தீர்க்கும். தந்தைகள் இம்மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய தகப்பன் ஸ்தானத்துக்கு அதிபதி கிரகமான சூர்யன் அருள்வார்.


2.சந்திரபகவான் :-

ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ சந்திராய நமஹ|

மனக்குழப்பம்,வேதனைகள்,வயிறு,மற்றும் இரத்தம் தொடர்பான வியாதிகள் நீங்கும்.தாய்மார்கள் இம்மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய தாய்  ஸ்தானத்துக்கு அதிபதி கிரகமான சந்திரன் அருள்வார்.


3.செவ்வாய்பகவான்:-

ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ|

கணவன்,மனைவி உறவு மேம்படும்.வாகனங்கள் ,வீடு,சொத்து  வாங்க மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் தீரும்.விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும்.

4.குருபகவான்:-

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ ப்ரஹஸ்பதயே நமஹ||

வாழ்வில் எடுத்த காரியங்களில் வெற்றியும்,பாதுகாப்பும் ஏற்படும்.சமூகத்தில் மதிப்பும்,மரியாதையும் ஏற்படும்.தொழில்,வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.

5.சனிபகவான்:-

ஓம் க்ஹ்ராம் க்ஹ்ரீம் க்ஹ்ரௌம் சஹ சனீஸ்வராய  நமஹ|

காரியத்தடை,கடன்,வறுமை,அவமானம்,வியாதிகள் நீங்கும்.


6.புதபகவான்:-

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ|

புத்திக்கூர்மை,கலைகளில் தேர்ச்சி உண்டாகும்.தொழில் வெற்றி,வாக்குவன்மை உண்டாகும்.

7.சுக்ரபகவான்:-

ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ சுக்ராய நமஹ|

பொன்,பொருள் சேர்க்கை,கலைகளில் சிறப்புத்தேர்ச்சி,பெண்களுடன் சிறப்பான தொடர்புகொள்ளும் திறன் உண்டாகும். 

8.ராகுபகவான் :-

ஓம் ப்ஹ்ராம் ப்ஹ்ரீம் ப்ஹ்ரௌம் சஹ ராகவே  நமஹ|

மனக்குழப்பம்,தீய சக்திகளால் தொல்லை,சட்டப்பபிரச்சனைகள் தீரும்.


9.கேதுபகவான் :-

ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ கேதவே நமஹ|

இழந்த புகழை  மீண்டும் பெறலாம்.தீய ஆவிகளின் தொல்லை ,ஏவல் தீரும்.
ஒவ்வாமை தொடர்பான வியாதிகள் நீங்கும்.திடீர் தீய நிகழ்வுகளில் இருந்து  பாதுகாப்பு கிட்டும்.



வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Thursday, 19 September 2013

நவக்கிரஹ மந்த்ரங்கள்

நவக்கிரஹ மந்த்ரங்கள் :-




சூர்யபகவான்:-

சுலோகம்:-
ஓம் ஜபாகுசும சங்காசம்|
காச்யபேயம் மகாத்யுதிம்||
தமோரிம் சர்வ  பாபக்னம்|
ப்ரனதோஸ்மி  திவாகரம்||

மந்திரம்:- ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||     இதை 40 நாட்களுக்குள் ஆறாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:- க்ரீம்
உகந்த நாள் :ஞாயிற்றுக்கிழமை .
திசை-கிழக்கு
அதி தெய்வம் :-சிவன்
ரத்தினம்:மாணிக்கம்
நிறம்:ரத்தச்சிகப்பு
-----------------------------------------------------------------------------------

சந்திரபகவான்:-

சுலோகம்:-
ததி ஷங்க துஷாராபம்|
க்ஷீரோ தார்ணவ சம்பவம்|
நமாமி சசினம் சோமம்|
சம்போர் மகுட  பூஷணம்||

மந்திரம்:- ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ சந்திராய நமஹ|     இதை 40 நாட்களுக்குள் பத்தாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ரீம்
உகந்த நாள் :-திங்கள்கிழமை
திசை:- வடமேற்கு
அதி தெய்வம் :-பார்வதி
ரத்தினம்:முத்து
நிறம்:வெண்மை


------------------------------------------------------------------------------------

செவ்வாய்பகவான்:-

சுலோகம்:-
தரணி கர்ப்ப சம்பூதம்|
வித்யுத் காந்தி சமப்ரபம்||
குமாரம் சக்தி ஹஸ்தம் தம்|
மங்களம் பிரணமாம்யஹம்||

மந்திரம்:- ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ||    இதை 40 நாட்களுக்குள் ஏழாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ஹ்ரீம்
உகந்த நாள் :-செவ்வாய்க்கிழமை
திசை:- தெற்கு
அதி தெய்வம் :-முருகன்
ரத்தினம்: பவளம்
நிறம்:சிகப்பு  அல்லது பவளச்சிகப்பு

---------------------------------------------------------------------------------
புதபகவான்:-

சுலோகம்:-
பிரியங்கு கலிகா ஷ்யாமம் |
ரூபேணா பிரதிமம் புதம்|
சௌம்யம் சௌம்ய குணோ பேதம்||
தம் புதம் பிரணமாம்யஹம்||

மந்திரம்:- ஓம் ப்ராம்(B) ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ||      இதை 40 நாட்களுக்குள் பதினேழாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ஸ்ரீம்
உகந்த நாள் :-புதன்கிழமை
திசை:-வடக்கு
அதி தெய்வம் :-விஷ்ணு
ரத்தினம்:பச்சை
நிறம்:பச்சை

-----------------------------------------------------------------------------------
குரு பகவான்:-

சுலோகம்:-
தேவா நாம் ச ரிஷீனாஞ்ச||
குரும் காஞ்சன சந்நிபம்|
பக்திபூதம் த்ரிலோகேசம் ||
தம் நமாமி ப்ரஹஸ்பதிம்||

மந்திரம்:- ஓம்|ஜ்ராம் ஜ்ரீம் ஜ்ரௌம் சஹ குருவே நமஹ||     இதை 40 நாட்களுக்குள் பதினாராயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ஔம்
உகந்த நாள் :-வியாழக்கிழமை
திசை:-வடகிழக்கு
அதி தெய்வம் :-தக்ஷிணாமூர்த்தி / பிரம்மா
ரத்தினம்:புஷ்பராகம்
நிறம்: மஞ்சள் அல்லது பொன்னிறம்

-----------------------------------------------------------------------------
சுக்ர பகவான்:-

சுலோகம்:-
ஹிமகுந்த ம்ருனாலாபம்|
தைத்யானம் பரமம் குரும் |
சர்வ சாஸ்திர ப்ரவக்தாரம் |
பார்கவம் ப்ரணமாம்யஹம்||

மந்திரம்:- ஓம் ட்ராம் ட்ரீம் ட்ரோம் சஹ சுக்ராய நமஹ||     இதை 40 நாட்களுக்குள் இருபதாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-க்லீம்
உகந்த நாள் :-வெள்ளிக்கிழமை
திசை:-தென்கிழக்கு
அதி தெய்வம் :-லக்ஷ்மி / இந்திரன்/ வருணன்
ரத்தினம்:வைரம்
நிறம்:பட்டு போன்ற வெண்மை

--------------------------------------------------------------------------------------
சனி பகவான்:-

சுலோகம்:-
நீலாஞ்சனா சமபாசம் |
ரவி புத்ரம் யமாக்ராஜம்|
சாயா மார்த்தாண்ட சம்பூதம்|
தம் நமாமி சனைச்சரம்||

மந்திரம்:- ஓம் ப்ராம் (P) ப்ரீம் ப்ரௌம் சஹ சனைச்சராய நமஹ||      இதை 40 நாட்களுக்குள் பத்தொன்பதாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ஐம்
உகந்த நாள் :-சனிக்கிழமை
திசை:-மேற்கு
அதி தெய்வம் :-யமன் /சாஸ்தா /சிவன்/பைரவர்
ரத்தினம்: நீலம்
நிறம்:கருப்பு

------------------------------------------------------------------
ராகு பகவான்:-

சுலோகம்:-
அர்த்த காயம் மஹா வீர்யம் |
சந்திராதித்ய விமர்த்தனம்|
சிம்ஹிகா கர்ப்ப சம்பூதம்|
தம் ராஹும் ப்ரணமாம்யஹம்||

மந்திரம்:- ஓம் ப்ராம் (BH) ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ||    இதை 40 நாட்களுக்குள் பதினெட்டாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-ஹ்ரௌம்
உகந்த நாள் :-செவ்வாய்
திசை:-தென்மேற்கு
அதி தெய்வம் :-காளி / துர்க்கை
ரத்தினம்:கோமேதகம்
நிறம்:சித்திரங்கள் சேர்த்த கருப்பு

----------------------------------------------------------------------------------
கேது பகவான்:-

சுலோகம்:-
பலாச புஷ்ப சங்காசம்|
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்|
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||

மந்திரம்:- ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ கேதவே  நமஹ|     இதை 40 நாட்களுக்குள் ஏழாயிரம்  தடவை ஜெபித்து முடித்தால்  மந்திரம் பலித்து நற்பலன்களை வழங்கும்.

மந்திர பீஜம்:-சௌம்
உகந்த நாள் :-சனிக்கிழமை,ஞாயிற்றுகிழமை
திசை:-வடமேற்கு
அதி தெய்வம் :-விநாயகர் / சண்டிகேஸ்வரர்
ரத்தினம்: வைடூர்யம்
நிறம்:புள்ளிகளுடன் கூடிய சிகப்பு அல்லது பலவர்ணம்

------------------------------------------------------------------------------------
முக்கிய குறிப்பு :-

மேற்கண்ட மந்திரங்களை அந்தந்த கிரகத்தின் தசா புத்தி,அல்லது அந்தரம் நடக்கும்போது,அல்லது குறிப்பிட்ட கிரகத்தின் தோஷம் நீங்க அவற்றிற்குரிய கிழமையில் ஜெபிக்கத் தொடங்கவும்.அதன் திசையை நோக்கி ஜெபித்து வர விரைவில் பலன் தரும்.கிரக அதிதெய்வங்களின் ஆலயத்தில் வைத்து ஜெபிக்க பன்மடங்கு பலன் தரும்.

நடப்பு தசா,புத்தி அதற்குண்டான கிரகம்,அதன் அதி தேவதையின் மந்திரம்,யந்திரம் வைத்து அதற்குண்டான மந்திரங்களைச் சொல்லி ஜபம்,ஹோமம்,அர்ச்சனை செய்து பூஜித்து வரக் கெடுபலன்கள் குறைந்து நலம் உண்டாகும். 


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Tuesday, 10 September 2013

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்

முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்:-




சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே


மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்   அருளியது  எந்த காரியத்திற்காக  கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு  அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.

ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து  மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின்  பிரயோகம்:-

1.சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர  சர்வ வசீகரம் உண்டாகும்.

2.ரஹணபவச - என தொடர்ந்து ஜெபித்து வர  செல்வம், செல்வாக்குடன் கூடிய  வளவாழ்வு உண்டாகும்.

3.ஹணபவசர - என தொடர்ந்து ஜெபித்து வர  பகை,பிணி நோய்கள் தீரும்.

4.ணபவசரஹ - என தொடர்ந்து ஜெபித்து வர  எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள்  நீங்கும்.

5.பவசரஹண - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள்   வரை  நம்மை விரும்பும்.

6.வசரஹணப - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது  கார்த்திகை நட்சத்திரத்தன்றோ , செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு.90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.முதல் நாளும் ,ஜெபம் முடிக்கும் நாளும்  வெற்றிலை,பாக்கு,திணை மாவு,பழங்கள் வைத்து  வழிபடவும்.மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம்.டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.

ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து   (அதாவது மேலே முதலாவது கோணம் ) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில் ''றீங்'' என்று எழுதி ஜெபம்  செய்து அந்த விபூதியை அணிந்து வர  விரைவான சிறந்த பலன் உண்டாகும்.

மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் ஓம் றீங் எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும்.
உதாரணமாக :-

சர்வ வசீகரம் வேண்டி ''சரஹணபவ'' என ஜெபிக்கவேண்டும் அதை ''ஓம் றீங் சரஹணபவ'' என ஜெபிக்க வேண்டும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

திக்குவாய் சரியாக பரிகாரம்

திக்குவாய் சரியாக பரிகாரம்:-




குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்-குறள்

குழந்தைகள் முதல் முதிர்ந்தோர் வரை திக்கு வாய் இருந்தால் அது நீங்க கீழ்க்கண்ட பரிகாரம் மற்றும் பூஜா முறையைத் தொடர்ந்து செய்து வர அவரவர் வினைப்பதிவிற்கேற்ப விரைவில் நலம் உண்டாகும்.

1.உளுந்து 10 கிராம் ,கொள்ளு 10 கிராம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து தலையணைக்கடியில் வைத்து 90 நாட்கள்  உறங்கி வர வேண்டும்.90 நாள் கழிந்ததும் அதை கோவில் குளங்களில் போட்டு விடவும்.


2.செம்புத்தட்டில் தேன் ஊற்றி அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதி பின்  கீழ்க்கண்ட மந்திரங்களில் ஒன்றை குறைந்தது 27 தடவை ஜெபித்து அந்த தேனை அவர்கள் நாக்கில் தடவி விட்டு வரலாம்.இதை வளர்பிறை புதன்கிழமை புதன் ஹோரையில் தொடங்கவும்.பின் தினமோ அல்லது புதன்கிழமைகளிலோ செய்து வரலாம்.


மந்திரம்:-

1.ஓம் ஐம் வத வத வாக்வாதினி நமஹ.


2. ஓம் ஐம் க்லீம் சௌம் |நமோ பகவதி சரஸ்வதி மம முக வாக் சித்தம் குரு குரு ஸ்வாஹா||



வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Wednesday, 14 August 2013

காலசர்ப்ப தோஷம் பாதிப்புகள் குறைய ஜெபிக்க வேண்டிய மந்திரம்




ஓம் புஜங்கேஷாய வித்மஹே |
சர்ப்பராஜாய தீமஹி |
தன்னோ நாக ப்ரசோதயாத் ||

இதனை தினமும் குறைந்தது 27  அல்லது அதற்குமேலும் ஜெபித்து வர காலசர்ப்ப தோஷ பாதிப்புகள் குறையும்.
வெள்ளை நூல் எடுத்து மஞ்சளில் நனைத்து அதை ஆலயங்களில் உள்ள நாகர் சிலைக்கு அணிவித்து வெற்றிலை,பாக்கு,பழம்,பால் படைத்து காலசர்ப்ப தோசத்தின் பாதிப்புகள் குறைய வேண்டி வழிபட்டு  மறுநாள் அந்த நூலை  எடுத்து வலது கையில் அணிந்து கொள்ள  நன்மை உண்டாகும்..


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Wednesday, 31 July 2013

குழந்தைப்பேறு அருளும் மந்திரம் 1

குழந்தைப்பேறு அருளும் மந்திரம் 




16 செல்வங்களுள் குழந்தைபேறு சிறந்த செல்வமாக கருதப்படுகிறது.குழந்தைப்பேறு  இல்லாதவர்கள் படும் மனக்கவலை சொல்ல முடியாதது அதற்கு வெறுமனே ஆறுதல் மட்டும் சொல்லி ஆற்றமுடியாது. எனக்குத்  தெரிய பல மந்திர ஜெபம்,பிரயோகம் இருப்பினும் அவற்றில் எளிய முறைகளை இங்கு பதிகிறேன்.


1.கிருஷ்ண மந்திரம்:-

ஓம்| க்லீம் கிருஷ்ணாய |கோவிந்தாய| கோபிஜன வல்லபாய ஸ்வாஹா ||

இம்மந்திரத்திற்கு   ரிஷி நாரதர்  அவரை மந்திரம் பலிக்க வேண்டிக்கொண்டு  பின் ஜெபிக்கவும்.இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தொடர்ந்து ஜெபித்து வர   விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி   இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர  மந்திரத்தின் சக்தியைக்  கூட்டும்.


2.கிருஷ்ண மந்திரம்: 

தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே |
தேஹிமே தனயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத:|
தேவ தேவ ஜகன்னாத கோத்ர வ்ருத்திகரப்ரபோ|
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து  தொடர்ந்து  ஜெபித்து வர  விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி   இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர மந்திரத்தின் சக்தியைக்  கூட்டும்.

3.கிருஷ்ண மந்திரம்: 

இந்திரா நீல  சமயச்சாயம் பீதாம்பரதரம் ஹரிம் |
சங்க: சக்ர:கதாபத்மை :லசத்பாஹு விசிந்தயேத்|| 

இதனை ஒரு தேய்பிறை அஷ்டமியில் இருந்து மறு தேய்பிறை அஷ்டமி வரை 1 மாதம் தினம் 8 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து  ஜெபித்து   வர   விரைவில்  குழந்தை பாக்கியம் கிட்டும்.இம்மந்திரம் குழந்தை பாக்கியம் மட்டுமின்றி எண்ணிய எண்ணங்களையும் நிறைவேற்றும்.





வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Tuesday, 16 July 2013

நோய் நீக்கும் மந்திரங்கள்

நோய் நீக்கும் மந்திரங்கள்:-




1.அமிர்த சஞ்சீவினி மந்திரம்:-

ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |சாந்தி குரு குரு ஸ்வாஹா||

                                         அசுரகுரு சுக்ராச்சாரியார் இம்மந்திரத்தை உபயோகித்தே இறந்தவர்களைக்கூட  மீண்டும் உயிர் பெறச்செய்தார்.வியக்கத்தக்க வகையிலும்,உடனடியான பலன்களையும் தரும் இம்மந்திரத்தை உபயோகித்து பலனடையுங்கள் .நமக்காக ஜெபிப்பதானால் மேற்கண்ட மந்திரத்தை அப்படியே ஜெபிக்கலாம் .பிறருக்காக ஜெபிப்பதானால் சாந்தி என்ற வார்த்தைக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவரின் பெயரை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

உதாரணமாக:- முருகன் என்பவருக்காக ஜெபிப்பதானால்

ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |முருகன் சாந்தி குரு குரு ஸ்வாஹா||

என ஜெபிக்க வேண்டும்.


2.தன்வந்திரி மந்திரம்:-

ஓம் |நமோ பகவதே வாசுதேவாய|தன்வந்திரியே |அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய வினாசனாய  |த்ரைலோக்ய நாதாய |ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு,சக்கரம்,அட்டைபூச்சி,அமிர்தகலசம் இவற்றுடன்  தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.ஆயுர்வேதம் அவரால் தோன்றியது.கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தாலும் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம் (பயம்,திருஷ்டி நீங்க)



மானசா எனப்படும் ஜரத்காரு தேவி மந்திரம் :-


ஓம்|ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ||க்லீம் ஐம்|மானசா தேவ்யை நமஹா||

கையில் கொஞ்சம் திருநீர் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த திருநீரை பயம்,அல்லது திருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு பூசி விட உடனே குழந்தை அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பித்து விடும்.அனுபவத்தில் கண்டது.


1008 உரு ஜெபித்து சித்தி கொண்ட பின் மேற்கண்ட பிரயோகம் செய்யவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Friday, 12 July 2013

ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்

1.ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்:

நம்மில் பலரும் அனேக விஷயங்கள்,நூல்களை படிக்கிறோம் ஆனால் மிகச்சிலரே படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கிறோம்.கீழ்க்கண்ட மந்திரங்களை ஜெபித்து வருவதின் மூலம் நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

சரஸ்வதி மால் மந்திரம் :-

ஓம்|ஆம்| ஐம் சரஸ்வதி|க்லீம் சரஸ்வதி|சௌம் சரஸ்வதி|
வேணுகாணி |வித்யாவதி |பாலமோகினி|பக்தரட்சகி|
வித்தக சக்தி|வேதபூஷணி |
உருவாய் அருவாய் உள்ளே இரு இரு|
சிந்தையில் நின்று செந்தமிழ் ஓது|
மனதில் இருந்து மாமறை ஓது |
கருத்தில் இருந்து கலை பல ஓது|
நாவில் இருந்து நானே நீயாய்
சொல்லும் பொருளாய் வல்லியே வா வா|
சொல்லால் உலகம் எல்லாம் வணங்க|
நில்லு நில்லு என் நினைவினில் நில்லு|
வெல்லு வெல்லு வல்லோர் வணங்க|
மானமும் கல்வியும் மோனமும் தா தா |
அஷ்டலக்ஷ்மியும் அடியேனைக் காக்க|
இஷ்ட சக்தியாய் இருந்து நீ காக்க|
வா வா தேவி வரம் தர வா வா|
காவாய் காவாய் கடாட்சம் குரு குரு||

இதனை தினமும் 3 அல்லது 11 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

2.சரஸ்வதி மந்திரம்|

ஓம்| ஐம்|வத வத வாக்வாதினி நமஹ| 

(அல்லது)

ஓம்|ஐம் க்லீம் சௌம் வத வத வாக்வாதினி நமஹ|

இதனை தினமும் குறைந்தது 27 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Tuesday, 9 July 2013

திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடக்க ,நல்ல குணமுடைய மனைவி அமைய ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-

1.திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடக்க ,நல்ல  குணமுடைய மனைவி அமைய ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-

ஓம் |பத்னீம் மனோரமாம் தேஹி|| மனோ விருத்தானுசாரிநீம் |தாரிநீம் துர்கசம்சார சாகரஸ்ய குலோத்பவாம்||

மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டு திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தை குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும்  ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

2நல்ல குணமுடைய மனைவி அமைய, சீக்கிரம் கல்யாணமாக ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-

ஓம்|கந்தர்வராஜ விச்வாவஸோ ||மமாபிலஷிதாம் கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||

மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டு திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தை குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும்  ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.ஹோமம் செய்து ரக்ஷை கட்டினால் விரைவான பலன் கிட்டும்.
3. துர்கா மந்த்ரம் :-

ஓம்|ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதி ஹிஸா |
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா பிரயச்சதிஹி ||  

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி, இம்மந்திரத்தைக் குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

4.ஜாதகப்படி தாமதத் திருமண அமைப்புள்ளவர்கள் இந்த மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நிகழும்.  

ஓம் |ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் க்லீம் க்லூம்  ஜம் ஜம் |
வனாக்யே காமேச்வரி வனதேவதே ஸ்வாஹா||

5.திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகக் கீழ்க்கண்ட   மந்திரங்களில் ஒன்றைத் தினமும் 108 முறை கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.

ஸ்ரீ கணேஷ மந்திரம் :-

ஓம் |ஸ்ரீகணேஷம் விக்னேஷம் விவாஹார்த்ததே நமஹா ||

வேத மந்திரம்:-

ஓம் யக்ஞோ பவித்ரம் சஹஜம் ரஹத் பிரஜாபதி ஸ்வாஹா ||


6.அம்மன் குங்கும பரிகாரம்:-

பேரம் பேசாமல் குங்குமம் வாங்கி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயம் சென்று அந்தக் குங்குமத்தை அம்மன் காலடியில்
வைத்து உங்கள் பெயருக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்று அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை அம்மன் பிரசாதமாக வாங்கி வீட்டில் விளக்கு முன் வைத்து கொள்ளவும்.தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு முகமாய் நின்று அந்தக் குங்குமத்தை வலது கை மோதிர மற்றும் பெருவிரலால் எடுத்து "ஓம் ஹ்ரீம் சிவப்ரியாயை நம" என்று 11 தடவை ஜெபித்துக் குங்குமம் இட்டுக் கொள்ளவும்.விரைவில் திருமணம் நடக்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072



சித்தர் தரிசன மந்திரங்கள்

                                        சித்தர் தரிசன மந்திரங்கள்


சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார்.


1.சித்தர் தரிசன மந்திரம்:-

ஓம் || கிலி  ரங் அங் சிங் ||

இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன்,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும் யோக, ஞான  ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது பரிபூரணம் 1000 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

2.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம கிலி ஓம்  |||


இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்  உண்டாவதுடன் தொழில் முறைகள் (வாதம் ,வைத்தியம்), யோக ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது ஞான சைதன்யம் 51 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.



3.சித்தர் தரிசன மந்திரம்:-


சிவயநம ஓம் கிலீம் ||

இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாகும்.சித்தர் பெருமக்கள் யாராவது காட்சி தருவார்கள் அச்சமயம் யார் வழியைப் பின்பற்றி அல்லது யார் நூலைப் பின்பற்றி இந்த முறையை அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள்.அப்பொழுது அகஸ்தியரின் நூலைப் பின்பற்றி இம்முறையை அறிந்தேன் அய்யா என்று மறுமொழி கூற வேண்டும்.


தெரிசிக்கத் தியானமொன்று சொல்லக்கேளாய் 
சிவயநம ஓம் க்லீம் என்று சேவி
வரிசிக்குஞ் சித்தரெல்லாம்  வெளியிற்காணு 
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு 
பரிசிக்கும் படியவரைக் கண்டாயானால் 
பணிந்திடுவாய் பாதத்திற் சிரசு தட்ட
கிரிசிக்கும் ஆர்நூலிற் சார்ந்தாயென்று 
கேட்கிலகத்தீசுரர் தன கிருபை யென்னே

- அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் 97 



4.சித்தர் தரிசன மந்திரம்:-


ஓம்|சிங் ரங் அங் சிங்|


இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள்  அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர  சித்தர்கள் தரிசனம் தந்து நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் .


மேற்கண்ட மந்திரங்களில் எது உங்களுக்கு பிரியமானதோ அதைத்  தேர்ந்தெடுத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும்.


ஜெப விதிமுறை :

1.ஜெபிக்கும் போது அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் வைத்துக் கொள்ளவும்.

2.ஜெபம் செய்யும் இடத்தில் சந்தனமும்,பன்னீரும் கலந்து தெளிப்பது நல்லது.

3.அசைவம் எப்போதும் தவிர்க்கவும்.சைவ உணவு விரைவான பலன் தரும்.

4.குடும்பஸ்தர்கள் வெள்ளை உடை அணிவது நல்லது.

5.முழு நேர ஆன்மீகவாதிகள்,பிரம்மச்சாரிகள்,போன்றோர் மட்டும் காவி அணிந்து கொள்ளலாம்.

6.உணவு,உறக்கம்,உணர்ச்சி இவற்றில் சமநிலையைப் பேணவும்.

7.தனக்கும்,பிற உயிர்களுக்கும் தீமை தரக்கூடிய செயல்களைத் தவிர்க்கவும். 

8.இரவில் ஜெபம் செய்வதாக ஜெபித்து முடித்த பின் இருந்தால் தனியாக உறங்கினால் நல்லது. 

9.விரிப்பின் மேல் வெள்ளை வேஷ்டி விரித்து அதில் உறங்கவும்.

10.சந்தன அத்தர் அல்லது ஜாவ்வாது  சிறிது பூசிக் கொள்ளவும்.

11.மல்லிகை,ரோஜா,முல்லை போன்ற பயன்படுத்தலாம்.

12.பழங்கள்,இனிப்பு வகைகள் படைக்கவும்.   


மேலும் விபரங்களுக்குக்  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வீடியோ பார்க்கவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Monday, 8 July 2013

அகத்தியர் துதி

அகத்தியர் துதி




ஓம் ஸ்ரீ ஸ்ரீ சத்குரு ஸ்வகுரு அகத்திய குருப்யோ நமஹ
ஓம் ஸ்ரீ ஸ்ரீ குருபத்னி லோபாமுத்ராயை நமஹ 
அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

சித்தர்களில் முதன்மையானவரும்,ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாடல்களின் மூலம் வைத்தியம்,ஜோதிடம்,மந்திரசாஸ்திரம் முதலான பல கலைகளைப்பற்றி இவரைப்போல் தெளிவுபட விளக்கியவர்கள் இலர்.             
அகத்தியர் எனது மானசீக குரு.

நான் இயற்றி அன்றாடம் கூறி வரும் ஸ்ரீ அகத்தியர் துதியை கீழே கொடுத்துள்ளேன். 

தலை உச்சியில்(சஹஸ்ராரத்தில்) கீழ்க்கண்ட குரு வந்தன முத்திரையைப்  போட்டபடி  இந்த ஸ்துதியை ஜெபித்து யோகம்,தவம்,தியானம்,மந்திரஜபம் செய்து வர அவற்றில் சித்தி கிடைக்கும்.

குரு வந்தன முத்திரை என்ற ம்ருகி முத்திரை 



அகஸ்தியர் துதி:- 

1.தமிழ் மொழிக்குக் கர்த்தாவும்

2.வைத்தியம்,ஜோதிடம்,மந்திரங்கள் குறித்துத் தமிழில் பல நூல்கள் இயற்றியவரும்       

3.முருகப்பெருமானிடம் பிரணவ மந்திரோபதேசம் பெற்ற முனிசிஷ்யரும் (முனி ச்ரேஷ்டரும்)

4.சண்முகப்ரியரும் 

5.சக்திதாசரும்,சாக்த உபாசனா சிகரமும்

6.பொதிகைமுனி,கும்பமுனி,குறுமுனி,குருமுனி என்றழைக்கப்படுபவரும்

7.ராவணேஸ்வரரை வீணையால் வென்றவரும்

8.புலஸ்தியர்,தேரையர் போன்ற சித்தர் பெருமக்களின் குருநாதரும்

9.சிவபெருமான்,அன்னைபார்வதி திருமணத்தின் போது பூமியின் வடபாகம் தாழ்ந்து தென்பக்கம் உயர்ந்ததைச் சமன் செய்தவரும்  

10.ஸ்ரீ ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்தவரும்

11.ஸ்ரீ வித்யா உபாசனையில் துதிக்கப்படுபவரும் 

12.ஸ்ரீ ஹயக்ரீவரால் ஸ்ரீ வித்யா உபதேசமும்,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமமும் உபதேசிக்கப்பட்டவருமான  

ஸ்ரீ அகஸ்திய குருவே உங்கள் திருவடிகளும்,அன்னை ஸ்ரீ லோபாமுத்திரையின் திருவடிகளும் அடியேன் துரிய கமலத்தின் மேல் இருந்து நான் வாழ்விலும்,ஆன்மீகத்திலும் உயர ஆசீர்வதித்து வழிகாட்ட வேண்டுகிறேன்.
            


திருநெல்வேலி -பாபநாசம்-அகஸ்தியர் அருவியின் மேல் உள்ள கல்யாணி தீர்த்தம் என்ற புனித ஸ்தலத்தில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குரு ஸ்ரீ அகஸ்தியர் -அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா விக்ரஹம்.     

        
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
WHATSAPP/TELEGRAM NO : 9788493072

Saturday, 6 July 2013

விரதங்களின் அவசியம் என்ன ?

விரதங்களின் அவசியம் என்ன ?

இறைவழிபாட்டில் விரதங்கள் அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. இந்து,இஸ்லாமிய,பௌத்த,சமண மற்றும் எல்லா மதங்களிலும் விரதங்கள் பல்வேறு காலங்களில் அனுசரிக்கப்படுகிறது.


விரதங்களின் முக்கியத்துவம் என்னவென்றால்:-

முன் அத்தியாயங்களில் சொன்னவாறு நமக்கு ஐந்து சரீர அடுக்குகள் (பஞ்சகோசங்கள்) உள்ளது. அன்னமயகோசம் என்பது உணவு மற்றும் தண்ணீரின் துணையால் உண்டாவது.

இறைவழிபாடு ,மந்திர ஜெபம் ,தியானம் இவற்றின் மூலம் நமக்கு இறையருள் கண்ணால் பார்க்கமுடியாத சக்தி அலைகளாக நம்மை வந்து அடைகிறது.அந்த சக்தி அலைகள் நமது பிராண மற்றும் மன அடுக்குகளில் வந்து தங்குகிறது உடலில் மிகச்சிறிய அளவே சேர்கிறது.எனவே அவற்றை சுத்தமானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

வள்ளலார் முதலிய சித்தர் ஞானியர் யாவரும் சிறு தெய்வ வழிபாட்டைத்  தவிர்க்க வலியுறுத்துகின்றனர்.சிறு தெய்வங்களை வழிபட்டால் சித்த சுத்தி எனப்படும் மனத்தூய்மை ஏற்படாது.


மூலாதார முதலான ஏழு சக்கரங்களில் நமது சக்தி எங்கு தற்சமயம் உள்ளதோ அதற்கேற்ப நமது எண்ண ஓட்டமும்,செயல்பாடுகளும் இருக்கும்.




அன்னமய கோசம் என்ற நமது சரீரத்தில் உணவு,நீர் அதிகம் தங்கியிருந்தால் அன்னமயகோசமே வலுவான இயக்கத்தில் இருக்கும்.உணவு தண்ணீர் இவை உடலுக்குள் சென்றாலே செரிமானம் துவங்கி சரீரத்தில் கழிவுகள் உருவாகத் தொடங்கி விடும்.கழிவுகளை நமக்குள் அடக்கியவாறே ஜபம்,தியானம் ,பூஜை, ஆலயவழிபாடு செய்து வருகிறோம்.சாத்வீக தெய்வங்களாகிய சிவன்,விஷ்ணு,புவனேஸ்வரி மற்றும் ஏனைய பெருந்தெய்வங்களை வழிபட்டு  அவர்களின் சக்தி நமக்குள் வர வேண்டும் என்றால்  நமது ஸ்தூல சரீரத்தில் உணவு,தண்ணீர்,கழிவுகள்  இல்லாமல் தூய்மையாக இருந்தால் நல்லது.இதை முன்னிட்டே நமது முன்னோர்கள் வெறும் வயிற்றில் இருந்து  ஆன்மீகப்பயிற்சிகளைச் செய்ய வலியுருத்தியிருக்கிறார்கள்.


இறைவழிபாட்டிற்கு மாத்திரமல்ல தியானம்,யோகம் இவற்றிற்கும் இது பொருந்தும்.ஏனென்றால் தியான மற்றும் யோகம் இவை பிராணன் மற்றும் மனதின் உதவியால் செய்யப்படுவதால் விரதம் அல்லது வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால் அதனால் கிடைக்கும் சக்தி அலைகள் முழுமையாய்ப்   பிராண  மற்றும்  மன அடுக்குகளில் தங்கி நமது ஆன்ம உயர்வுக்கு உதவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Friday, 5 July 2013

மந்திர ஜபம் 3 - ஸ்ரீ பாலா மந்திரம்





மந்திர ஜபம் 3 :-

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,
சித்தர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்  இருக்கிறான் என்று  கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்குப் புரிந்தாலும் எவ்வாறு,நமக்குள் எங்கு உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது  (இது குறித்து வெளிப்படையாக வெளியிடக்கூடாது விரும்பியவர்கள் நேரில் கேட்டால் விளக்கம் தரப்படும்) பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை  விட மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.
பீஜம் என்றால் விதை  என்று பொருள்.விதைக்குள் எப்படி மரம் அடக்கமோ அப்படி பீஜத்திற்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-

1. ஸ்ரீ  பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:-

ஐம்|க்லீம்|சௌம்|


2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்| சௌம் க்லீம் ஐம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:-

ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

இம்மந்திரத்திற்கு ரிஷி தக்ஷிணா மூர்த்தி

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

வாலையடி சித்தருக்குத் தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.

பாலா மந்திரம் மிக உயர்வான சித்திகளைத் தரக் கூடியது.

சக்தி உபாசனை கத்தி மேல் பயணம் போன்றது.வசீகர சக்தி,ஆண், பெண் வசீகரம் எல்லாம் தருவதால் பல நேரங்களில் வழி தவறிப் போகும் சாத்தியம் உண்டு அப்படிச் செயல்பட்டால் உங்கள் மந்திர ஆற்றல் விரயமாகி வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைச் சந்திக்க நேரும்.
எனவே,முறைப்படி குருவிடம் சாபநிவர்த்தி செய்யப்பெற்று தீட்சை பெற்று ஜெபிப்பதே நிறைவான பலன்களைத் தரும்.

தீட்சை மற்றும் பிரயோக விதிகளை அறியத் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

Thursday, 4 July 2013

மந்திர ஜபம் 2



மந்திர ஜபம் 2:-

1.க்ஷிப்ர கணபதி :-

ஓம்|கம் க்ஷிப்ர ப்ரசாதனாய நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர எண்ணிய காரியங்கள் காலதாமதமின்றி விரைவில் முடியும்.

2.ஹேரம்ப கணபதி:-

ஓம் கூம் நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மனச்சாந்தி உண்டாகும். 

3.நிதிகணபதி:-

ஓம் |வக்ரதுண்டாய ஹூம்||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை நீங்கும் .தேவைகள் நிறைவேறத் தேவைப்படும் தனம் தடையின்றி வரும் .

4.சங்கஷ்டஹர கணபதி :-

ஓம் |நமோ ஹேரம்ப |மதமோதித|மம சர்வ சங்கஷ்டம் நிவாரய|ஹூம் பட் ஸ்வாஹா||   

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர துன்பங்கள் நீங்கும்.இதனை சங்கடஹரசதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி)அன்று ஆரம்பித்து செய்யவேண்டும். வளர்பிறை சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது அதனால் தோஷம் உண்டாகும்,பல பிரச்சனைகள் வரும்.கிருஷ்ணபரமாத்மாவே அவ்வாறு பார்த்ததனால் பல சங்கடங்களை அனுபவித்தார்.மேற்கண்ட கணபதி வழிபாட்டை தேய்பிறை சதுர்த்தியில் செய்து தன மனக்கவலை நீங்கப்பெற்றார்.நீங்களும் இதை செய்து துன்பம் நீங்கிய வளவாழ்வை வாழுங்கள்.

5.கடன் தீர கணபதி வழிபாடு :-

கீழ்க்கண்ட இரு மந்திரங்களும் கடன் தீர உதவும் சிறந்த மந்திரங்கள்.இரண்டில் எதையும் செய்யலாம்.

ருணஹர கணபதி:-
ஓம் |கணேசாய |ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||

ருஊநாசன கணபதி:-    

ஓம்|க்லௌம் க்ரோம் கணேசாய|ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||ஸ்வாஹா || 

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர மலையளவு  கடனும் விரைவில் தீரும்.

கடன் பட்டவர்கள் செவ்வாய் கிழமை மதியம் 12:00 - 1:30 மணிக்குள் கடன் தொகையில் சிறிதளவாவது  திரும்பசெலுத்தினால் கடன் விரைவில் தீரும்.புதன் கிழமை கடனை திரும்பச்செலுத்தக்கூடாது அவ்வாறு செலுத்தினால் கடன் அடையாது கூடிவிடும்.
கிருத்திகை,கேட்டை,பூராடம் நட்சத்திரத்தன்று கடனை திரும்பச்செலுத்த,அடகு வைத்த பத்திரம்,நகை இவைகளை மீட்க திரும்பவும் கடன் வாங்கும் அடகு வைக்கும் சூழ்நிலை வராது.


6.அர்க்க கணபதி:-

ஒம்|நமோ கணபதயே|அர்க்க கணபதே|வரவரத சர்வஜனம் |மே வசமானய ஸ்வாஹா ||   

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர சூர்யன் மற்றும் நவக்ரஹ சாந்தி உண்டாகும்.அதாவது நவக்ரகங்களால் உண்டான தோஷம் விலகும்.   

7.அபீஷ்டவரத கணபதி:-

ஓம்|ஸ்ரீம் ஸ்ரீம் கணாதிபதயே |ஏகதந்தாய |லம்போதராய|ஹேரம்பாய|நாளிகேரப்ரியாய|மோதக பக்ஷணாய|மமாபீஷ்ட பலம் தேஹி |ப்ரதிகூலம் மே நச்யது |அனுகூலம் மே வசமானய ஸ்வாஹா||    

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர எண்ணிய காரியம் சித்தியாகும்.தொடர்ந்த ஜெபத்தின் பலனாக தொட்ட காரியம் எல்லாம் சிறந்து விளங்கும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072