Monday 21 July 2014

நிறை செல்வம் தரும் ஸ்ரீ குபேரன் வழிபாடு




ஸ்ரீ குபேரதேவன் ஐப்பசி மதம் பூராட நட்சத்திரம் தனுசு ராசி மீன லக்னத்தில் விச்ரவஸ் எனும் முனிவர் ,ஸ்வேதா தேவிக்கு மகனாகப் பிறந்தார்.

குபேரன் யக்ஷகணங்களின் தலைவர்.

சிவனின் தோழர் எனவே இவர் "சிவ ஸஹா " என்று அழைக்கப்படுகிறார்.குபேரன்  சிவபெருமானை வேண்டித் தவம் இருந்து வடதிசைக்கு அதிபதியாக விளங்குகிறார்.

இவர் சிவவழிபாட்டில் மிகுந்த பிரியம் உடையவராக இருந்தாலும் ஸ்ரீவித்யையில் ஷோடசிக்கு அடுத்த சிறந்த மந்திரமாகிய ஸ்ரீபஞ்சதசி மந்திரத்தை பிரியமுடன் ஜெபிப்பவர் என சில்பசாஸ்த்ரம் கூறுகிறது .

உங்களுக்கு படுபக்ஷி இல்லாத ஒரு நன்னாளில் குபேரனின் படத்தைத் தெற்கு நோக்கி வைத்து, குபேர யந்திரத்தைச் செம்பு,வெள்ளி,தங்கம் எந்த தகட்டிலாவது வரைந்து பால், பன்னீர், மல்லிகைமலர் நிரப்பிய செம்பில் உள்ள நீர்,வலம்புரி சங்கில் உள்ள நீர்,விபூதி கலந்த நீர் இவற்றால் அபிஷேகம் செய்து ப்ராண பிரதிஷ்டை செய்து  வாழைஇலையில் பச்சரிசி பரப்பி அதில் யந்திரத்தை வைத்து வலம்புரி சங்கில் நீர் நிரப்பி வடக்கு நோக்கி அமர்ந்து கீழ்க்கண்ட குபேர மந்திரத்தை 108 முறை தொடர்ந்து 21 நாட்கள் ஜெபிக்கவும்.இடையில் ஏதேனும் ஒரு நாள் செய்ய முடியாமல் போனால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பம் செய்யவும்.
பெண்கள் தங்கள் மாதாந்திர இடைவெளி காலம் பூஜையைத் தடைசெய்யாதவாறு முன்னரே திட்டமிட்டு பூஜையைத் தொடங்கி 21 நாட்கள் செய்து முடிக்கவும்.

21 நாட்கள் முடிந்த பின்னர் அதை தொடர்ந்து வரும் வளர்பிறை சப்தமி அன்று ஹோம  செய்யவும்.உங்களுக்கு ஹோமம் செய்ய வசதி இல்லை அல்லது தெரியாவிட்டால் புரோகிதர்களை அணுகவும்.

ஹோமதிரவியங்கள் :- பசு நெய்,பசும் பால் ,அருகம்புல் கொண்டு 108 தடவை மந்திரம் ஜெபித்து ஹோமம்  செய்ய மந்திர சித்தியாகி செல்வம் பெருகும் வாய்ப்புகள் ஏற்படத் தொடங்கி வளவாழ்வு அமையும்.

பின்னர் தினமும் 27 தடவை மட்டும் மந்திரம் ஜெபித்து வரவும்.

ஸ்ரீ குபேர ஆகர்ஷண மந்திரம் 

குபேர த்வம் தனாதீஷ க்ருஹே தே கமலா ஸ்தித |
த்வாம் தேவி ப்ரேஷ ஆஷுத்வம் மத்க்ருஹே தே நமோ நமஹா ||


 ஸ்ரீ குபேர யந்திரம் :-



ஸ்ரீ குபேர யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரத்தகட்டில் வரைந்து முன்னால் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.


வாழ்க வளமுடன்||   வாழ்க வையகம்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment