Wednesday, 17 September 2014

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 4

டாய்லெட் அமைப்பு :-

பெங்சுயி  வாஸ்துவில் பணம் ஜலத் தத்துவத்தோடு தொடர்புடையது.எனவே கடை,வீடு,தொழிற்சாலைகளில் தேவையின்றி நீர் செலவாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.குழாய்கள்,தொட்டிகளில் லீக்கேஜ் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும். 


குளியல் அறை மற்றும் டாய்லெட் இவற்றில் நீர் தொடர்ந்தும் அதிகமாகவும் வெளியேறுவதால் டாய்லெட்டை பீரோ,பணப்பெட்டி ,அடுப்பறை,ஸ்டோர் ரூம் இவற்றின் அருகில் அமைக்கக்கூடாது .  


டாய்லெட் வீட்டின் பிரதான நுழைவாயிலின்  அருகிலும் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைத்தால் அடிக்கடி உடல் நலக்குறைவு,தீரா நோய்கள் ,கையிருப்புக்  குறைவு ,பணப்புழக்கம் இன்மை ஏற்படும்.

மாடிப்படியின் கீழும் அமைக்கக்கூடாது .அவ்வாறு அமைத்தால் அடிக்கடி வயிற்றில் நோய்,வலி  உண்டாகும்.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

suryatamil1.blogspot.com






வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 3




காசாளர் அறை (CASH COUNTER) அமைப்பு :-

கடை ,தொழிற்சாலைகளின் மைய நோக்கம் லாபமும் ,பணத்தைப் பெருக்குவதுமே. அதற்கு முக்கியமாக காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டரின் அமைப்பு சரியாக இருக்கவேண்டும். 

குறிப்பு :

1.உள்ளே வரும் வாடிக்கையாளர்களைக் காசாளர் எளிதில் காணும் வண்ணம் 
கேஷ் கவுன்டர் இருக்கவேண்டும்.

2.கடையின் மையப்பகுதியில் காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டர் இருந்தால் விற்பனை அதிகரிக்கும்.

3.குறிப்பாக காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டரை பிற கவுன்டர்களில் இருந்து தனித்து இருக்கும் படி சிறிது தள்ளி அமைப்பது நல்லது.

4.காசாளரின் பின்புறம் ஒரு கண்ணாடி வைத்தால் நிரந்தர பணப்புழக்கம், விற்பனை அதிகரிப்பு ஏற்படும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com



Tuesday, 16 September 2014

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் 2


தென்மேற்குத் திசை  - மண் தத்துவத்தைக் குறிக்கும்.இந்திய வாஸ்து சாஸ்திரத்தின் படி இத்திசை திருமண காரியம் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளை குறிக்கும்.

இத்திசையில் பசுமையான செடி,மரங்கள் வளர்க்கக்கூடாது.அவ்வாறு வளர்ந்தால் திருமணத்தடை கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும்.

இத்திசையில் அழகார மின்விளக்குகள் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும். குறிப்பாகத் தகுந்த வாழ்க்கை துணை அமைய உதவும். குறைந்தது மாலையில்  2 அல்லது 3 மணிநேரமாவது எறிந்தால் நல்ல பலன்களைத் தரும்.பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அழங்கார மின்விளக்குகள் வைத்தல் நலம்.தூசு படியாமால் அவ்வப்போது துடைத்து வைக்க வேண்டும்.



தெற்குத்திசை  - நீர்தத்துவத்தை குறிக்கிறது.இத்திசையில் மண்,களிமண், ஸ்படிகம்,கண்ணாடியினால் ஆன பொருட்களை வைக்கக்கூடாது.அவ்வாறு வைத்தால் அது தொழில்,வேலையில் பிரச்சனைகளை உண்டாக்கும்.

பெங்சுயி சாஸ்திரப்படி பொருளாதாரம் என்ற பணம் நீர் தத்துவத்தோடு தொடர்புடையது.தேவையின்றி நீரை வீணாக்குவது,நீர்க்குழாய்களில் நீர் வீணாய்க் கசிவது  பண விரயத்தை ,பண வரவில் தடையை உண்டாக்கும்.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் 1

பஞ்ச பூத இயற்கை சக்திகளை சமன்படுத்தல்,பரவ விடுதல்,ஈர்த்தல் இவைகளின்  மூலம் நமது வீடு,கடை  மற்றும் வசிப்பிடத்தை ஆரோக்யமானதாகவும் வளம் தருவதாகவும் வைத்துக்கொள்ள உதவும் முறைகளைக் கூறுவது வாஸ்து மற்றும் சீன பெங்சுயி சாஸ்திரம் .

வாஸ்து மற்றும் சீன பெங்சுயி சாஸ்திரம் பற்றிய பல  ரகசிய விபரங்களை இன்று முதல் பார்க்கலாம்.

                                          வாஸ்து பகவன் காயத்ரி 

ஓம்  அனுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தன்னோ வாஸ்து புருஷ ப்ரசோதயாத்


வீடு, கடை ,தொழிற்சாலை பீடைகளும் திருஷ்டிகள் ஆபத்துக்கள் நீங்க 

1.பயன்படுத்தாத, உடைந்த, செயல்படாத பொருள்களை அகற்றவும்.


2.ஒரு எச்சில் செய்யாத பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் கருந்துளசி அல்லது செந்துளசி இலைகளைப் பறித்து  1:30 மணிநேரம் கழித்து அந்த நீரை வீடு முழுவதும் வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து வர எல்லாப் பீடைகளும் நீங்கி நலமும் வளமும் உண்டாகும்.கடை,தொழிற்சாலை இவைகளானால் கடை,அல்லது தொழிற்சாலையில் தெளித்து கடை ,தொழிற்சாலையின் வாசல் முகப்பு பகுதியிலும் முதலாளி,மேனேஜர் அறைக,காசாளர் அறை மற்றும் முக்கியமான பகுதிகளிலும் தெளிக்கவும்.

இதை மாதம் ஒரு முறை  செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


Monday, 15 September 2014

கர்ப்பிணிகளின் பாதுகாப்பிற்கு கர்ப்ப ரக்ஷா மந்திரம் :-

அடிக்கடி கர்ப்பம் கலைந்து விடுதல்,குறைப்பிரசவம் ,ஊனம் மற்றும் ஆயுள் குறைவான குழந்தைப் பிறப்பு இவை நீங்கக் கீழே சொல்லியுள்ள மந்திரப்பிரயோகத்தைச் செய்து வர நல்ல பலன் உண்டாகும்.

கர்ப்ப ரக்ஷா மந்திரம் :-

ஓம் பரப்ரம்ம பரமாத்மனே  |
மம கர்ப்ப தீர்க்க ஜீவி சுதே குரு குரு ஸ்வாஹா||


இதைக் கர்ப்பமான பின்னர் வரும் முதல் மாத பௌர்ணமி அன்று ஆரம்பிக்கவும்.ஜபம் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு புதுப் பாத்திரம் அல்லது கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது  மஞ்சள் பொடி போட்டுக் கலந்து அதில் ஒரு பருத்தி நூலை நனைத்து (இடுப்பில் கட்டும் அளவு)  வைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த மந்திரத்தை மேற்கு முகமாக அமர்ந்து 1008 தடவை ஜெபித்து அந்த நூல் கயிற்றைக் கர்ப்ப ஸ்தீரியின் இடுப்பில் கட்டிக்கொள்ளச் செய்யவும்.கரு கலையாமல் பாதுகாக்கப்படும்.
மேலும் இந்த மந்திரத்தைத்  தினமும் 3 தடவை சொல்லி  வயிற்றைக்   கடிகாரச்சுற்றில் 3 தடவை சுற்றித் தடவிக் கொள்ளவும்.


நைவேத்தியம் -

வெற்றிலை, பாக்கு, பழங்கள், பால்,பாயசம்.


இதை செய்ய முடியாதவர்கள் தொடர்பு கொண்டால் கர்ப்பப் பாதுகாப்பு ரக்ஷை செய்து தரப்படும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com




Friday, 12 September 2014

ஸ்ரீ ஹனுமத் சத்ரு ஜெய மந்திரம்


ஓம் நமோ பகவதே |
மஹாபலபராக்ரமாய |
மஹா விபத்தி நிவாரனாய |
பக்த ஜன மனோபீஷ்ட கல்பனா கல்பத்ருமாய |
துஷ்ட ஜன மனோரத ஸ்தம்பனாய| 
பிரபஞ்சன ப்ராணப்ரியாய ஸ்ரீம்||


ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று  ஒரு செம்புப் பாத்திரத்தில் நீர் வைத்துக் கொண்டு கொய்யாப்பழம் ,வெற்றிலை பாக்கு ,பால்,பழங்கள் படைத்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபிக்கவும். துளசிச் செடியின் வடக்கு பக்கம் வேரும் 3 வெற்றிலையும் சேர்த்து சிகப்பு நூலால் கட்டி செம்பில் உள்ள நீரால் கழுவி  ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீட்டு வாசலில் தொங்க விடவும்.மீதி நீரை வீடு முழுவதும் வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து விடவும்.

இந்த மந்திரப்பிரயோகத்தைச் செய்தால் நமது மன விருப்பங்கள் நிறைவேறும்.எதிரிகளால் ஏற்படும் தீவினைகள் பலிக்காமல் நீங்கும்.பேய் ,பிசாசு மற்றும் தீய சக்திகள் வீட்டை அண்டாது.

இந்த மந்திரத்தை ஒரு செம்பு யந்திரத்தில் எழுதி பன்னீர்,பால்,பச்சைக் கற்பூரம் கரைத்த தீர்த்தம்  மற்றும் பஞ்சகவ்யத்தால் அதைச் சுத்தி செய்து 1008  உரு மந்திரம் ஜெபித்துப் ப்ராண ப்ரதிஷ்டை செய்து  புஷ்ப அர்ச்சனை செய்து தாயத்தில் அடைத்து அதை வாகனத்தில் தொங்க விட விபத்துகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
உடலில் அணிந்து கொண்டால் எதிரிகளின் தீவினைகளாலோ தீய சக்திகளாலோ ஆபத்து நேராமல் காக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com






Thursday, 11 September 2014

தீரா நோய்கள் தீர



ஓம் ஸ்ரீ ஆஞ்சனேயாய நமஹ|
ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ |
ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயாய  நமஹ|
ஓம் ஸ்ரீ மகாபலிச் சக்ரவர்த்தியே நமஹ|
ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ|
ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமாய நமஹ| 
ஓம் ஸ்ரீ விபீஷணாய நமஹ| 


வலது கையில் ஒரு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஒன்றிரண்டு அருகம்புல்  போட்டு வடக்கு நோக்கி அமர்ந்தோ நின்றோ சிரஞ்ஜீவிகளான இந்த எழுவரின் நாமங்களையும் 21 தடவை  ஜெபித்து பின்னர் அந்த நீரை அருந்தி வர தீரா நோய்கள் தீருவதுடன் அகால மரணம் ஏற்படாமல் காக்கும்.

முடியாதவர்கள் எழுந்த உடனும் உறங்கும் முன்னரும் 1 தடவையாவது ஜெபித்து வர  மேற்கண்ட பலனில் பாதி கிட்டும்.

ஏதேனும் மருந்துகள் பயன்படுத்தும் போதும் குறைந்தது 1 முறையேனும் இந்த மந்திரங்களை ஜெபித்த பின் உண்டால்,பயன்படுத்தினால் விரைவில் நோய் குணமாகும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com



குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு

அடிக்கடி காரணமின்றி அழுதல் மற்றும் நோயால் கஷ்டப்படும் குழந்தைகள் ஆரோக்கியம் பெற இந்த மந்திர பிரயோகம் உதவும்.

ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் விபூதி பரப்பி  மேல்நோக்கிய முக்கோணம் வரைந்து அதன் நடுவில்  றீங் என்றெழுதி முக்கோணத்தின் முனைகளில் சூலம் வரைந்து    ''ஓம் துர்கே துர்கே ரக்ஷிணி ஸ்வாஹா  ''   என்று 108 தடவை ஜெபித்து பின்னர் அந்த விபூதியை பதனம் பண்ணி தேவையான நேரங்களில் குழந்தைகளுக்கு பூசிச் சிறிது உள்ளுக்குக் கொடுக்க
தொடர் அழுகை, அடிக்கடி நோய்வாய்ப்படுதல்  நீங்கும்.

                   





வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Saturday, 30 August 2014

சகல கார்ய சித்திக்கு அதிர்ஷ்ட நேரம்,அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்





மனிதர்கள் யாவருமே தொடர்ந்த வெற்றியையும் சந்தோஷத்தையும் விரும்புபவர்களே. ஆனாலும்,நாம் விரும்பும் வகையில் வாழ்க்கை இருப்பதில்லை .
கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றி வெற்றிகரமான வளமான வாழ்வு வாழலாம்.


1.பஞ்சபட்சி சாஸ்திரம் -அதிர்ஷ்ட நேரங்கள்,நாட்கள்,நிறங்கள்,திசை.
                                               தவிர்க்க வேண்டிய நேரங்கள்,நாட்கள்,நிறங்கள்,திசை.
                                               ஜெபிக்க வேண்டிய  பஞ்சாட்சர மந்திரம்.

2. திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு 

3. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்



1.பஞ்சபட்சி சாஸ்திரம்

ஒரு காரியத்தை நல்ல நாள், நட்சத்திரம், திதி ,யோகம் ,கரணம்  எல்லாம் பார்த்துச் செய்தாலும் அது சரிவர நடைபெறாமலோ  வெற்றி அடையாமலோ போகலாம்.ஆனால் ,பஞ்சபட்சி சாஸ்திரப்படி நமக்கு உரிய அதிர்ஷ்ட நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தோல்வியடையாது.மேலும் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களில் நமக்கு அதிர்ஷ்ட நேரம்,அதிர்ஷ்ட நிறம்,அதிர்ஷ்ட திசை நோக்கி மந்திர ஜபம்,தொழில் சார்ந்த பேச்சுவார்த்தை,சுபகார்யம் சத்ருஜெயம் சார்ந்த காரியங்கள் செய்ய யாவும் பின்னமின்றி வெற்றி பெறும்.
மேலும்  தவிர்க்கவேண்டிய நிறங்கள் ,நேரங்கள்,படுபட்சி நாட்கள் இவற்றை அறிந்து சுப காரியங்கள் செய்வதை விலக்க வேண்டும்.
என் நண்பரின் சகோதரிக்கு நல்ல நாள்,நட்சத்திரம்,நேரம் பஞ்சபக்ஷி சாஸ்திரப்படி படுபட்சி இல்லாத நாளாகப்  பார்த்து திருமணம் நடந்தும் மணப்பெண் எதிரிப் பட்சிக்கு  (தவிர்க்கவேண்டிய) உண்டான நிறத்தில் பட்டுச்சேலை கட்டி இருந்ததால் திருமண வாழ்க்கை முறிந்தது.

பணம்,ஆள் பழக்கம் இருந்தும் ஒரு கார்,வீடு வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் முடியவில்லை ,நீண்ட நாட்களாக கோர்ட் கேஸ் இருந்து முடிவாகாமல் உள்ளது, தொழில் சார்ந்தும் தீய சக்திகளைக் கொண்டும்  எதிரிகளால் பல தொல்லைகள் இது போன்ற பல முடியாத காரியங்களை  பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நமது அதிர்ஷ்ட நாள்,நேரத்தில் செயல்பட்டுத் தீர்வு காணலாம். 


2. திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு 

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும்  அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு  எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன் மனைவி அமையாது  கஷ்டம் ஏற்படும்.தொழில் சார்ந்த பார்ட்னர்கள் சரிவர அமையாமல் ஏமாற்றப்படலாம். இப்படி,எந்த வீடு நம் ஜாதகத்தில் சூன்யம் அடைகிறதோ அதன் பலன் நமக்குப்  பூரணமாகக்  கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த திதியில் சூன்யம் அடையும் கிரகங்களால் உண்டாகும் தீமைகளில்  இருந்து திதி சூன்ய பரிகாரம் என்று சொல்லப்படும் அந்தந்தத் திதிகளுக்குண்டான  திதி நித்யா தேவதைகளை வழிபட்டு வருவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பாவத்திற்கான கிரகங்கள் செயல்படத் தொடங்கி நலம் தரும்.


3. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்

பல பிறவிகளில் நாம் செய்த புண்ணிய பாவங்களின் தொகுப்பின் பெயர் சஞ்சிதகர்மா. இந்தப் பிறவியில் அனுபவிக்கும் கர்மாக்களுக்குப் பெயர் ப்ராரப்த கர்மா. இதில் நாம் இந்த ஜன்மத்தில் நமக்கு வரவேண்டிய நன்மைகள் நிறைவாகவும் விரைவாகவும் வரவும், தீமைகள்  மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தாமல்  இருக்கவும் எந்த  தெய்வத்தை வழிபடலாம்.நடப்பு தசா புத்தியில் மற்றும் தற்சமயம் உள்ள பிரச்சனைகள் தீரவும் எந்த தெய்வங்களை வழிபடலாம் அந்த தெய்வங்களின் உபாசனை,தீக்ஷை ,பூஜை,வழிபாட்டு முறைகள் பற்றி விளக்கமாக அறிய .குழந்தைகள் கல்வியில் உயர்வடைய ,பல நற்காரியங்களுக்குத் தெய்வங்களின் யந்திரங்கள், ரக்ஷைகளின் மூலம்  பலன் பெறும் முறைகள்.

உங்கள்  பிறந்தநாள் ,நட்சத்திரம்,நேரம் அல்லது ஜாதகம் அனுப்பி ஜாதகத்தின் மூலம் நமக்கான அம்சங்களை ஆராய்ந்து மேற்கண்ட ஆன்மீக வழிமுறைகளின் மூலம் உங்கள் அதிர்ஷ்ட நேரங்களின்  அட்டவணை ,படுபட்சி நாட்கள் ,பலமான நாட்கள்,திதி சூன்யப் பரிகார தேவதை,அதிர்ஷ்ட தெய்வங்களின் வழிபாட்டுமுறைகள் அறிந்து நலமும்,வளமும் பெறுவீர்களாக.


விவரங்களை கீழ்க்கண்ட மெயில் ஐடிக்கு மெயில் செய்யவும்.
ms.spiritual1@gmail.com

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல்  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

9442193072
9788493072    
     
                  வாழ்க வையகம் ||                         வாழ்க வளமுடன் ||



M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072  / 9788493072         

ms.spiritual1@gmail.com



Saturday, 16 August 2014

ஸ்ரீ ஹனுமன் வழிபாடு


                              ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ||

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||


ஸ்ரீ ஹனுமன் சிவ அம்சம் சிவனது வீரியத்தில் இருந்து தோன்றியவர் எனவே இவரது சஹஸ்ரநாமத்தில் '' ருத்ர வீர்ய ஸமுத்பவாய '' என்றொரு நாமம் உண்டு.

ஸ்ரீ ஹனுமான் சிவபெருமானின் 11 அவதாரங்களில் ஒருவர்(ஏகாதச ருத்ரர்களில்) .
  
ஸ்ரீ ஹனுமானை மகான்கள் ராமாயணம் என்ற பெரிய மாலையில் உள்ள ரத்தினம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஸ்ரீ ஹனுமான் பிரம்மா சரஸ்வதி முதலான அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும்,பல சிறப்பான சக்திகளும்,தன்மைகளும் கொண்டவர்.
இராமாயண காலத்தில் ராமாவதார நோக்கம் பூர்த்தி அடைந்த பின் ராமர் ,சீதா முதலானோர் விண்ணுலகம் செல்லும் போது ஸ்ரீ ஹனுமன் ஸ்ரீ ராமரிடம் நான் உங்கள் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டு இந்த மண்ணிலேயே இருந்து விடுகிறேன் எனக் கூறி என்றும் சிரஞ்சீவியாய் இருந்து வருபவர்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி,ஸ்ரீ மஹா வாராஹியைப்போல் ஸ்ரீ ஹனுமனும் விரைந்து அருள் செய்பவர்.

மாந்திரீகத்தில் இவரைக் கட்ட முடியாது.இவரைக்கொண்டு நியாயமான மற்றும் நல்ல காரியங்களை மட்டுமே செய்ய முடியும்.

இவருக்குத் தன் பலம் தெரியாததால் இவரைப் போற்றித் துதிப்பவர்களுக்கு மற்ற தெய்வங்களை விடச் சிறப்பான அருளை வழங்குவார்.இதன் காரணமாகவே "ஸ்தோத்ரப்பிரியர்" என்று அழைக்கப்படுகிறார்.

எல்லாத் தெய்வங்களைப்போல இவருக்கும் 108,1008 நாமங்கள் உள்ளன. இருந்தாலும் இவரது நாமங்களில் கீழ்க்காணும் 12 நாமங்கள் பிரசித்தி வாய்ந்தவை அவற்றைத் தினமும் அதிகாலையில் ஜெபித்து வருவது அவர் அருளை நிறைவாய்ப் பெற்றுத்தரும்.

1.ஹனுமத் த்வாதச நாமங்கள் :-

ஹனுமான்
ஆஞ்சநேயன்
வாயுபுத்திரன்
மகாபலிஷ்டன்
ராமேஷ்டன்
அர்ஜுனசகன்
பிங்காக்ஷன்
அமிர்தவிக்ரமன்
சமுத்திரத்தைத் தாண்டியவன்
சீதாசோகவிநாசகன்
லக்ஷ்மணப்ராண  ரக்ஷகன்
ராவணனின் கொழுப்பைப் பரிகாசம் செய்தவன்



தினமும் குளித்து முடித்து மேற்கண்ட இவரது பன்னிரு திருநாமங்களை ஜெபித்து  வர இவர் அருளைப் பூரணமாகப்  பெறலாம்.மேலும்,இந்த நாமங்களை யாத்திரையின் போதும்,ஆபத்தான தருணங்களிலும்,பயம் கொண்ட நேரத்திலும் ஜெபித்து வேண்டக் காவலாய் விளங்குவதோடு காரிய வெற்றியும் தரும்.


2. ஸ்ரீ ஹனுமான் ராம பக்தருள் சிறந்தவர். மேலும் இவர் தன்னை வணங்குபவர்களை விட ஸ்ரீ ராமரை வணங்கி அவர் நாமத்தைப் பாடுபவர்களுக்கு சிறப்பான பலன்களை நல்குவார்.எனவே .அதிகாலையில் குளித்த பின்னர்  "ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்" என்று குறைந்தது 27 தடவையும், அதிகமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபித்து வர இவர் அருளைப் பூரணமாகப் பெறலாம்.


3.ஆபத்தான தருணங்களில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஜெபித்து அவரை வேண்ட ஆபத்துகள் விலகும்.

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்|| 

ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||




4.பாதுகாப்பான பயணத்திற்கு :- 

தொலைதூரப் பயணம் செல்கையில் வழியில் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும்,தனிமையில் பயணம் செய்யும் போது பயம்,ஆபத்து நீங்கவும்,அடிக்கடி வாகன விபத்துகளைச் சந்திப்பவர்களும் இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப  ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது .

அபராஜித நமஸ்தேஸ்து நமஸ்தே ராமபூஜித |
பிரஸ்தானந்த கரிஷ்யாமி சித்திர்ப்பவது மே  ஸதா|| 






வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Wednesday, 13 August 2014

அதீத காம சிந்தனை நீங்க நல்லொழுக்கம் உடையவராக விளங்க உதவும் மந்திரம்


சனத்குமார : தேவரிஷி: சுக்ர :பீஷ்ம :ப்லவங்கமஹ|

பஞ்சைதானி ஸ்மரேந் நித்யம் காமஸ்தஸ்ய ந பாததே ||

இந்த மந்திரம் ஜெபித்து வர தவறான காம சிந்தனைகள்,தவறான தொடர்புகள்  குறைந்து ஒழுக்கம்  உண்டாகும்.
வளர்பிறை வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் வடக்கு நோக்கி அமர்ந்து ஆரம்பிக்கவும்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 11 August 2014

நவக்ரஹ தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்




அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி  நின்று இந்த மந்திரத்தை 108 தடவை  ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.

வடஇந்தியாவில் இதனை அதிகம் பேர் ஜபித்துப் பலன் அடைந்து வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை  அன்று இதைத் துவங்கவும்.

மந்திரம் :-

நமக்காக ஜெபிக்கும் போது 
ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா|| 


பிறருக்காக ஜெபிக்கும் போது 

ஓம் நமோ பகவதே பாஸ்கராய .................... சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா|| 

( ................ என்ற இடத்தில் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவருடைய அல்லது அந்த குடும்பத்தின் பெயர்    )


யந்திரம் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

சூர்யா,தச்சநல்லூர் 
திருநல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

துன்பங்கள்,மனக்கவலைகள் நீங்க


சிவலிங்கத்திற்குத் தும்பைப் பூவால் அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை 27 தடவை ஜெபித்து வரத் துன்பங்களும் மனக்கவலைகளும் தீரும்.


ஓம் மகேசாய த்ரிநேத்ராய நமஸ்தே சூலபாணயே |
ப்ரனதா க்லேச நாசாய மகாதேவாயதே நமஹ ||




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா.தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

Sunday, 10 August 2014

ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன மந்திரம்



க்ருத யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார் இவர் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் முதலில் ஸ்ரீ அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார்.பின்னர் ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும் அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு

1.விரும்பிய போதெல்லாம் ஆயிரம் கைகள் வரும் வரம்.

2.இவரது ராஜ்யத்தில் யாராவது அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.

3.எல்லா உலகங்களையும் வென்று அரசாளும் வரம்.

4.இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம்.

இந்த நான்கு வரங்களைப் பெற்று அவரது சீடர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.


ராவணனை விடப் பலம் பொருந்தியவர். ஒரு சமயம் ராவணணைக் கட்டி இழுத்துச் சிறைப் பிடித்தார் பின்னர் ராவணனின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி ராவணனை விடுதலை செய்தார்.

இவரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும்.

இவரது மந்திரம் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,இழந்த செல்வ நிலையைத் திரும்பப் பெற , அடகு வைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட,கடன் தீர போன்ற நன்மைகளை நிறைவாய் அருள வல்லது.

தொலைந்து போன நபர்  அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம| 
ராஜ சஹஸ்த்ரபாஹுகம் ||
யஸ்ய ஸ்மரண மாத்ரேன||
(........... )கதம் நஷ்டம் சலப்யதே  || 

கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டும்.



இழந்த செல்வ நிலையைத் திரும்பபெற,அடகுவைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட  கீழ்க்கண்ட இரண்டு மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.:-

மந்திரம் 1.

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே  ||

மந்திரம் 2.

க்ருத வீர்ய சுதோ ராஜா சஹஸ்ர புஜமண்டலஹ |
அவதாரோ ஹரே சாக்ஷாத் பாவயேத் சகலம் மம|
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரன மாத்ரேன நஷ்டத்ரவ்யம் ச லப்யதே  ||


3.
ஓம் கம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜா பாஹு சஹஸ்த்ரவான்|
ஹ்ரீம் தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே  ||
க்ரோம் சஹஸ்ரார ஹூம் பட் க்ரோம் ஹ்ரீம் ஓம் ||


இதில் தேவையான மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நாளில் அரசு அல்லது ஊண் காலத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்து 1008 உரு குறைந்தது 7 நாட்கள் ஜெபிக்கவும். 
  

செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் இவரை வழிபடச் சிறப்பு.


மந்திர சாஸ்திரத்தில் இவரது மந்திரஜபம் கொண்டு சத்ருஜெயம், நேர்மையான காரியங்களில் வெற்றி பெறுதல் எனப்  பலவிதமான  பிரயோக முறைகள் உள்ளன.தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று அஞ்சி வெளியிடவில்லை.


இவரது யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரத்தகட்டில் வரைந்து முன்னால் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.


தமிழ்நாட்டில் இவரை ஒரே ஒரு  ஆலயத்தில்  மட்டுமே பார்க்கலாம்.
கும்பகோணம் மாவட்டம் குடவாசலில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் சேங்காலிபுரம் என்னும் ஊர் உள்ளது. அங்குள்ள ஆலயத்தில் இவரது விக்ரகம் உள்ளது.அங்கு சென்று இவருக்கு பூஜை செய்து மந்திரம் ஜெபித்து வேண்டிக்கொள்வது சிறப்பான பலனைத் தரும்.



M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Saturday, 9 August 2014

ஸ்ரீ பரசுராமர் மந்திரம்


ஓம் ராம் ராம் | ஓம் ராம் ராம் | ஓம் பரசு ஹஸ்தாய நமஹ||

ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று இந்த மந்திரத்தை விஷ்ணு ஆலயத்தில் வைத்து 108 முறை தெற்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.பின்னர் வீட்டில் வைத்து ஜெபிக்கலாம்.

இந்த மந்திரம் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் ,நில அபகரிப்பு பிரச்சனை ,வறுமை ,தவறான தொடர்பு இவற்றில் இருந்து விடுதலை தரும்.


விற்க முடியாமல் இருக்கும் வீடுகள்,இடங்கள் விற்க:-

ஒரு செம்புப் பாத்திரத்தில்  நீர் நிரப்பி சில துளசி இலை,கொஞ்சம் வெண்ணிறமான பூக்களைப் போட்டு செவ்வாய்க்கிழமை அன்று கிழக்கு முகமாய் அமர்ந்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபித்து  ஜெபத்தின் சக்தி அந்த செம்புப் பாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தில் இறங்கட்டும் எனக் கூறி அந்த தீர்த்தத்தை அடுத்த நாள் (புதன்கிழமை ) அதிகாலை 6 மணிமுதல் 7 மணிக்குள் விற்காத இடத்தின் வடகிழக்கு மூலையில்  (ஈசான்யமூலை) சிறிய குழி பறித்து அதில் ஊற்றி விடவும்.விரைவில் விற்பனை ஆகிவிடும்.

வீட்டில் ,தொழில் செய்யும் இடங்களில் உள்ள தீய சக்திகளால் உண்டான பாதிப்புகள் நீங்க:-

ஒரு செம்புப் பாத்திரத்தில்  நீர் நிரப்பி சில துளசி இலை,கொஞ்சம் வெண்ணிறமான பூக்களைப் போட்டு செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு முகமாய் அமர்ந்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபித்து  ஜெபத்தின் சக்தி அந்த செம்புப் பாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தில் இறங்கட்டும் எனக் கூறி அந்த தீர்த்தத்தை வலம்புரிச்சங்கில் ஊற்றிச் செவ்வாய்க்கிழமை இரவு 8 முதல் 9 மணிக்குள் பாதிப்படைந்த வீடு, கடை, தொழிற்சாலைகளில் தெளித்து விடத் தீமைகள் நீங்கும் இதை மாதம் ஒரு முறையேனும் வளர்பிறை செவ்வாய்க்கிழமை  அன்று செய்து வர திருஷ்டி மற்றும் எந்த தீய சக்திகளாலும் உண்டான பாதிப்புகள் நீங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


Monday, 4 August 2014

பொன்னும் பொருளும் சேர்ந்து கோடீஸ்வரராக ,குழந்தை பாக்கியம் பெற

பொன்னும் பொருளும் சேர்ந்து கோடீஸ்வரராக  ,குழந்தை பாக்கியம் பெறவும் பாம்பன் ஸ்ரீ குமரகுருபரர் அருளியுள்ள பதிகங்களைப் படித்துப் பயன்பெறுங்கள் .

JUST RIGHT CLICK ON THE PICTURE AND SAVE AS JPEG FILE.



வாழ்க வையகம்| வாழ்க வளமுடன்||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Saturday, 2 August 2014

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்

                                                                  ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் 



                                         ஸ்ரீ தனவர்ஷிணி  லக்ஷ்மி மந்திரம் 





தொடர்ந்த பணம் மற்றும் செல்வவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷினி லக்ஷ்மி மந்திர பிரயோகம்   

சித்தர்கள், ரிஷிகளில் பலர் இல்லறத்தில் மனைவியோடும் நிறை செல்வத்தோடும் வாழ்ந்து நன்கு அனுபவித்துப் பின்னரே ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை எட்டியுள்ளார்கள்.எந்த ஒரு பலனுக்கும் ஒன்று இரண்டல்ல நமது வேதத்தில் ஏராளமான மந்திரப் பிரயோகங்கள் உள்ளன.

தாந்திரீக மற்றும் மந்திர சாஸ்திரத்தில் உள்ள மறைக்கப்பட்ட பல ரகசியங்களைப் பலரது நல்வாழ்விற்காக வெளியிடுகிறேன்.நான் வெளியிடும் பல மந்திரங்கள் மந்திர சாத்திர நூல்களில் உள்ளவையே இதுவரை தமிழில் புத்தகங்களில் வெளிவராதவை.சில மட்டும் வடமாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.பின்பற்றிப் பலனடையுங்கள்.


ஸ்ரீ விஸ்வாமித்ர மகரிஷி  ஒரு காலத்தில் மிகுந்த வறுமையை அனுபவித்து வந்தார்  அதில் இருந்து விடுபடவும் ,மன்னர்களுக்கே பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் செல்வம் அளிக்கும் அளவுக்கு நிறைந்த செல்வவளம் உள்ளவராக விளங்கவும் அவருக்கு உதவியது இந்த மந்திரப் பிரயோகமே .

மேலும் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த மந்திரப் பிரயோகத்தை மிக உயர்வாகக்  குறிப்பிடுவதோடு தமது உடனுறை சீடர்கள் வளவாழ்வு வாழ இந்த மந்திரப் பிரயோகத்தைச் செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள் .


பிரயோக முறை :-

1.ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத்   துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு  நோக்கி அமரவும்.

2.நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி,ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை,குங்குமம் ,பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.

3.வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும்.

4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.

தியான ஸ்லோகம் :-

ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||


மூலமந்த்ரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |


ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும் .நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.





வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன்||


M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com| 

Friday, 1 August 2014

தீய பழக்கங்களில்,தவறான தொடர்புகளில் இருந்து விடுபட





நமக்கு அறிமுகமான அல்லது குடும்பத்தில் யாரேனும் மது,சூதாட்டம் ,போதைப்பொருள் அல்லது தவறான காமத்தொடர்பு போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி  இருந்தால் அவர்களை நேர்வழிக்கு வரச்செய்ய சக்தி வாய்ந்த இந்த தாந்த்ரீகப் பரிகார முறையைப் பின்பற்றி நலம் பெறுங்கள்.


இரவில் குளித்து முடித்து 10 மணிக்கு பத்ரகாளி படத்தின்  முன் நல்லெண்ணெய் விளக்கேற்றித் தெற்கு முகமாக அமர்ந்து யார் தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டுமோ அவர் திருந்த வேண்டும் என்று வேண்டிச் சங்கல்பம் செய்து கொண்டு  கீழ்காணும் மந்திரத்தை 108 எண்ணிக்கை உள்ள கருமணி மாலையால் 15 சுற்று  ஜெபிக்க வேண்டும்.(108*15+1620 எண்ணிக்கை ) .

விளக்கின் முன்னால் பாதிக்கப்பட்ட நபரின் போட்டோ வைத்துக்கொள்ளவும்.

ஜெபம் செய்து முடித்ததும் ஜெபம் செய்யப் பயன்படுத்திய மாலையை அந்த நபரின் போட்டோ மீது வைத்து விடவும்.5 நாட்கள் கழித்து அந்த போட்டோ, ,ஜபமாலை ,காளிபடம் ,பூஜைக்குப் பயன்படுத்திய பொருட்கள் (விளக்கு தவிர) இவற்றை ஆற்றில் போட்டு விடவும். விரைவில் பாதிக்கப்பட்ட நபர் திருந்தி நேர்வழிக்கு வந்து விடுவார்.

மூல மந்திரம்:-

 ஓம் க்லீம் உச்சாடய பத்ரகாளி அவதர அவதர க்லீம் ஹூம் பட்|| 


 கருமணி மாலை



வாழ்க வையகம் || வாழ்கவளமுடன் ||

சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Thursday, 31 July 2014

பாதுகா பைரவ மந்திர சாதனை




கலியுகத்தில் மக்கள் எல்லா ஒழுக்க மற்றும் சாத்திர நியதிகளைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் அவர்களுக்கு இறையருள் பெற்று நல்வால்வு வாழ பகவான் ஸ்ரீ பைரவ மந்திர சாதனையும் வழிபாடும் மிக எளிதானதாக இருக்கும் என்று  மந்திர சாஸ்திர நூல்கள்  கூறுகின்றன.

 பைரவர் சிவனது மற்றொரு வடிவமே என்றும் சிவனின் அடியவர்களைச்  சாதாரண மற்றும் மரணத்திற்கு ஒப்பான துன்பங்களில் இருந்து காத்தருள்வதே அவரது பிரதான இயல்பு எனச் சிவ புராணம் கூறுகிறது.

பாதுகா பைரவ சாதனையின் பலன்கள் :-

1.எல்லாவிதமான துன்பங்கள்,தடைகள்,மரணகண்டங்கள் இவற்றில் இருந்து தீர்வு

2.குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி மன அமைதி பெற

3.வருடத்திற்கு ஒருமுறை இந்த மந்திர ஜப சாதனை செய்து வந்தால் எதிர்காலத்தில் நமது கர்ம வினையால் நிகழவிருக்கும் பல துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

4.வழக்குகளில் வெற்றி பெற ,எதிரிகளால் பாதிப்பு வராமல்  இருக்க

5.ஒருவரின் வாழ்வும் செல்வங்களும் பாதுகாக்கப் பெற


ஜப ( பூஜை  )முறை :-

ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று குளித்து முடித்து சுத்தமான ஆடை அணிந்து ஒரு மரப்பலகை  வைத்து அதில் கருப்பு எள் மூன்று கைப்பிடி எடுத்து குவித்து வைக்கவும்.அதன் மேல் பாதுகா பைரவ யந்திரத்தை வைக்கவும்.நெய்விளக்கேற்றி விளக்கையும் யந்திரத்தையும் குங்குமத்தால் அர்ச்சித்து இந்த சாதனையில் சித்தி அருள வேண்டவும்.

த்யான ஸ்லோகம்:-

பக்த்யாம் நமாமி பாதுகாம் தருணம் த்ரிநேத்ரம்|
காம பிரதான வர கபால திரிசூல தண்டான் |
பக்தார்த்தி நாசகரணே ததாதம் கரேஷு |
தம் கோஸ்துபா பரான் பூஷித திவ்ய தேஹம் ||


இந்த த்யான ஸ்லோகத்தை ஜெபித்து பின்னர் வலது கையில் சிறிது அட்சதை எடுத்து எந்த பிரச்சனை நீங்க  வேண்டுமோ அதை உரக்கச் சொல்லி அட்சதையை வலது கையில் வைத்தபடி தலையைச் சுற்றவும்.பின்னர் அதை எல்லாத் திசைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் தூவி விடவும்.இதன் பின்னர் ருத்ராக்ஷ மாலையை ஏந்தி மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.

மூல மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் |
பாதுகாய ஆபதுத்தாரனாய |
குரு குரு  பாதுகாய |
ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா ||   


இந்த மந்திரத்தைத் தினம் 700 தடவை வீதம் தொடர்ந்து 7 நாட்களுக்கு ஜெபிக்கவும்.7 நாட்கள் கழித்து அந்த யந்திரத்தையும் ருத்ராக்ஷ மாலையையும் ஆற்றிலோ குளத்திலோ போட்டு விடவும்.விரைவில் நல்ல மாற்றங்களைக்  காணத் தொடங்குவீர்கள்.





வாழ்க வளமுடன்||   வாழ்க வையகம்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 21 July 2014

நிறை செல்வம் தரும் ஸ்ரீ குபேரன் வழிபாடு




ஸ்ரீ குபேரதேவன் ஐப்பசி மதம் பூராட நட்சத்திரம் தனுசு ராசி மீன லக்னத்தில் விச்ரவஸ் எனும் முனிவர் ,ஸ்வேதா தேவிக்கு மகனாகப் பிறந்தார்.

குபேரன் யக்ஷகணங்களின் தலைவர்.

சிவனின் தோழர் எனவே இவர் "சிவ ஸஹா " என்று அழைக்கப்படுகிறார்.குபேரன்  சிவபெருமானை வேண்டித் தவம் இருந்து வடதிசைக்கு அதிபதியாக விளங்குகிறார்.

இவர் சிவவழிபாட்டில் மிகுந்த பிரியம் உடையவராக இருந்தாலும் ஸ்ரீவித்யையில் ஷோடசிக்கு அடுத்த சிறந்த மந்திரமாகிய ஸ்ரீபஞ்சதசி மந்திரத்தை பிரியமுடன் ஜெபிப்பவர் என சில்பசாஸ்த்ரம் கூறுகிறது .

உங்களுக்கு படுபக்ஷி இல்லாத ஒரு நன்னாளில் குபேரனின் படத்தைத் தெற்கு நோக்கி வைத்து, குபேர யந்திரத்தைச் செம்பு,வெள்ளி,தங்கம் எந்த தகட்டிலாவது வரைந்து பால், பன்னீர், மல்லிகைமலர் நிரப்பிய செம்பில் உள்ள நீர்,வலம்புரி சங்கில் உள்ள நீர்,விபூதி கலந்த நீர் இவற்றால் அபிஷேகம் செய்து ப்ராண பிரதிஷ்டை செய்து  வாழைஇலையில் பச்சரிசி பரப்பி அதில் யந்திரத்தை வைத்து வலம்புரி சங்கில் நீர் நிரப்பி வடக்கு நோக்கி அமர்ந்து கீழ்க்கண்ட குபேர மந்திரத்தை 108 முறை தொடர்ந்து 21 நாட்கள் ஜெபிக்கவும்.இடையில் ஏதேனும் ஒரு நாள் செய்ய முடியாமல் போனால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பம் செய்யவும்.
பெண்கள் தங்கள் மாதாந்திர இடைவெளி காலம் பூஜையைத் தடைசெய்யாதவாறு முன்னரே திட்டமிட்டு பூஜையைத் தொடங்கி 21 நாட்கள் செய்து முடிக்கவும்.

21 நாட்கள் முடிந்த பின்னர் அதை தொடர்ந்து வரும் வளர்பிறை சப்தமி அன்று ஹோம  செய்யவும்.உங்களுக்கு ஹோமம் செய்ய வசதி இல்லை அல்லது தெரியாவிட்டால் புரோகிதர்களை அணுகவும்.

ஹோமதிரவியங்கள் :- பசு நெய்,பசும் பால் ,அருகம்புல் கொண்டு 108 தடவை மந்திரம் ஜெபித்து ஹோமம்  செய்ய மந்திர சித்தியாகி செல்வம் பெருகும் வாய்ப்புகள் ஏற்படத் தொடங்கி வளவாழ்வு அமையும்.

பின்னர் தினமும் 27 தடவை மட்டும் மந்திரம் ஜெபித்து வரவும்.

ஸ்ரீ குபேர ஆகர்ஷண மந்திரம் 

குபேர த்வம் தனாதீஷ க்ருஹே தே கமலா ஸ்தித |
த்வாம் தேவி ப்ரேஷ ஆஷுத்வம் மத்க்ருஹே தே நமோ நமஹா ||


 ஸ்ரீ குபேர யந்திரம் :-



ஸ்ரீ குபேர யந்திரத்தை வெள்ளி அல்லது தாமிரத்தகட்டில் வரைந்து முன்னால் வைத்து மந்திரம் ஜெபிக்க விரைவான பலன் கிடைக்கும்.


வாழ்க வளமுடன்||   வாழ்க வையகம்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

திருமணத்தடை நீங்க ,விரைவில் திருமணம் நடைபெற ,நல்ல குணமுடைய கணவன் அமையப் பெண்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள் :-


1. ஓம் |
    காத்யாயனி மஹாமாயே |
    மகாயோகின்யதீச்வரி |
    நந்தகோபசுதம் தேவீ  | 
    பதிம் மே குருதே நமஹ ||


ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.


2. துர்கா மந்த்ரம் :-

ஓம்|ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதி ஹிஸா |
    பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா பிரயச்சதிஹி ||  

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டுத் திரியினால்  விளக்கேற்றி,  இம்மந்திரத்தைக் குறைந்தது 27 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.

3.ஜாதகப்படி தாமதத் திருமண அமைப்புள்ளவர்கள் இந்த மந்திரம் ஜெபித்து வர விரைவில் திருமணம் நிகழும்.  


ஓம் |
ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் க்லீம் க்லூம்  ஜம் ஜம் |
வனாக்யே காமேச்வரி வனதேவதே ஸ்வாஹா||

4.திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகக் கீழ்க்கண்ட   மந்திரங்களில் ஒன்றைத் தினமும் 108 முறை கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.

ஸ்ரீ கணேஷ மந்திரம் :-

ஓம் |ஸ்ரீகணேஷம் விக்னேஷம் விவாஹார்த்ததே நமஹா ||

வேத மந்திரம்:-

ஓம் யக்ஞோ பவித்ரம் சஹஜம் ரஹத் பிரஜாபதி ஸ்வாஹா ||


5.அம்மன் குங்கும பரிகாரம்:-

பேரம் பேசாமல் குங்குமம் வாங்கி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயம் சென்று அந்தக் குங்குமத்தை அம்மன் காலடியில்
வைத்து உங்கள் பெயருக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்று அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை அம்மன் பிரசாதமாக வாங்கி வீட்டில் விளக்கு முன் வைத்து கொள்ளவும்.தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு முகமாய் நின்று அந்தக் குங்குமத்தை வலது கை மோதிர மற்றும் பெருவிரலால் எடுத்து "ஓம் ஹ்ரீம் சிவப்ரியாயை நம" என்று 3     தடவை ஜெபித்துக் குங்குமம் இட்டுக் கொள்ளவும்.விரைவில் திருமணம் நடக்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர் ,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9442193072 / 9788493072


Sunday, 13 July 2014

காரிய சித்திக்கான ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்





1.ஆரோக்யமான வலிமையான உடலைப் பெற

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | வஜ்ர தேஹாய |வஜ்ர நகாய |வஜ்ர முஹாய| வஜ்ர ரோம்னே |வஜ்ர நேத்ராய|வஜ்ர தந்தாய |வஜ்ர கராய| வஜ்ர பக்தாய|ராம தூதாய ஸ்வாஹா||

2.எதிரிகள் நோய்கள் தீர

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ சத்ரு சம்ஹரணாய| சர்வ ரோகஹராய |சர்வ வசீகரணாய| ராம தூதாய ஸ்வாஹா||

3.மந்திர மாந்திரீகம் ,எதிரிகள்,த்ருஷ்டி,வியாதி ,பயம் நீங்க ,காரியன் சித்திக்க


ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ யந்த்ர மந்த்ர தந்த்ர த்ராடக நாசகாய | சர்வ ஜ்வரச் சேதகாய|சர்வ வ்யாதி நிக்ருந்தகாய |சர்வ பய ப்ரசமனாய |சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய|சர்வ கார்ய சித்திப்ரதாய | ராம தூதாய ஸ்வாஹா||

4. துர்தேவதைகளின் உபத்ரவம் நீங்க 

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ| பூத பிரேத பிசாச |டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய | ராம தூதாய ஸ்வாஹா||

இந்த மந்திரத்தைச் செவ்வாய்க்கிழமை அன்று 1008 தடவை ஜெபித்து அந்த நீரை வீட்டில் தெற்குத் திசை தொடங்கி கடிகாரச் சுற்றில்,தென்மேற்கு,மேற்கு , ,வடமேற்கு ,வடக்கு,வடகிழக்கு,கிழக்கு ,தென்கிழக்கு என 8 திசைகளிலும் தெளித்துப் பின்னர் வீட்டின் தலை வாசலிலும் தெளித்து அதன் பின்னர் வீட்டில் உள்ளவர்கள் மீதும் தெளித்துக் கொள்ள துஷ்ட சக்திகளின் உபத்ரவம் நீங்கும். 


5.மந்திரம் 

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | சர்வ க்ரஹான பூத பவிஷ்ய வர்த்தமானான் சமீப ஸ்தான் |சர்வ கால துஷ்ட புத்தி உச்சாடய  உச்சாடய| பர பலானி க்ஷோபய க்ஷோபய|மம சர்வ கார்யானி சாதய சாதய ஸ்வாஹா||

இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து  வர கெட்ட புத்தி நீங்கும்.தீய சக்திகளால் தீங்கு நேராது.ஒரு நபரை பார்த்தவுடன் சரியாக கணிக்க முடியும்.
சகல காரியமும் சித்தியாகும்.


செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று வெற்றிலை, பாக்கு, கொய்யாப்பழம்,பழங்கள் வைத்துத் தேவையான மந்திரத்தை 108 வீதம் வேண்டிய காரியம் நிறைவேறும் வரை ஜெபித்து வரவும். 


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com 

Tuesday, 8 July 2014

நோய் தீர்க்கும் ஸ்ரீ இந்திராக்ஷி மந்திரம்

ஓம்|
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஈம் |
ஸ்ரீ  இந்திராக்ஷி தேவ்யை |
சீக்ரம் மம சர்வ வியாதி நிவாரய நிவாரய ஹூம் பட் ||

ஒரு செம்பில் அல்லது வலம்புரிச் சங்கில் நீர் வைத்து இந்த மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்தவாறு 108 உரு ஜெபித்து  அந்த நீரை அருந்தி வர நோய் விரைவில் குணமாகும்.

உங்களுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ செய்வதாக இருந்தாலும் தங்கள் பட்சிக்கு அரசு பக்ஷி நடக்கும் நேரத்தில் நோய் நீங்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு செய்யவும்.

வலம்புரிச் சங்கில் இந்த மந்திரத்தை ஜெபம் செய்த தீர்த்தத்தைக்   குழந்தைகளுக்கு அருந்த கொடுத்து முகத்தில் சிறிது தெளித்தால் அடிக்கடி வரும் காய்ச்சல் ,நீங்காத ஜுரம்,அடிக்கடி பயந்து அழுதல் இவை நீங்கும்.



வாழ்க வளமுடன்||   வாழ்க வையகம்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

சர்வசித்திப்ரத ஸ்ரீ மாதங்கி மந்த்ரம்




ஓம்|
க்லீம் ஹூம் மாதங்க்யை|
மம வாஞ்சிதம் சித்தே பட் ||

இந்த மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து கிழக்கு முகமாக அமர்ந்து 108 உரு வீதம் தொடர்ந்து  ஜெபித்து வர பதவி உயர்வு,வேலை வாய்ப்பு,குழந்தை பாக்கியம்,வீடு,வாகனம் இவற்றோடு உங்கள் மனோவிருப்பங்களும் நிறைவேறும்.

மந்திரம் ஜெபிக்கும் முன் ஏதேனும் குறிப்பிட்ட தேவை (திருமணம்,வேலை , பதவி உயர்வு,)இருந்தால் அதை சங்கல்பித்து பின்னர் ஜெபிக்கவும்.

என் நண்பர்கள் பலருக்கு இதைப் பரிந்துரைத்து அனைவரும் வியக்கும் அளவிற்கு பலன் அடைந்துள்ளனர்.நீங்களும் செய்து எல்லா நிலையிலும் உயர்ந்த வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 627358
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com 

Tuesday, 24 June 2014

செல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்

இந்து சம்பிரதாயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அன்னை மிக உயர்ந்த தெய்வமாகப்  போற்றி வழிபடப்படுகிறாள்.

மந்திர சாஸ்திர நூல்களான மந்திர மகாநிதி,குலார்ணவ தந்திரம் ,தத்த சம்ஹிதை முதலான எல்லா புகழ்பெற்ற நூல்களும் இவளை உயர்வாக குறிப்பிடுகின்றன.ஒவ்வொரு குறிப்பிட்ட பயனுக்கும் ஒரு தெய்வத்தை வணங்குவோம் ஆனால் இவளை வழிபட கல்வி,செல்வம்,வீரம்,என யாவும் கிட்டும்.இவள் ஒரு தெய்வமே .

இவளை உபாசிக்க இந்திரனை போல் செல்வம் நிறைந்தவராகலாம் என்று ரிக் வேதம் சொல்கிறது.பூர்வ ஜன்ம புண்யம் உள்ளவர்களே இவளை உபாசிக்க முடியும்.
ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்தின் போது அவர்களது குரு வசிஷ்டர் :- "இந்த உலகத்தில் செல்வம் இல்லாதவன் உறவினர்களால் கூட மதிக்கப்படமாட்டான் .உயர் புகழும் செல்வமும் பெற புவனேஸ்வரி வழிபாடே ஆகச் சிறந்தது.இவளை வழிபடுபவனும் அவன் தலைமுறைகளும், வறுமையைக் காணமாட்டார்கள் " என ஸ்ரீ ராமனிடம் கூறினார்.ராம ராஜ்ஜியம் செழிப்புடன் விளங்க ராமரின் புவனேஸ்வரி வழிபாடே காரணம்.

ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா துவாரகா நகரத்தைப் பெற உதவியதும் இவளை வழிபாட்ட பயனே .

எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்று சிவபிரானும் கூறுகிறார்.

நமது பூமியைப்போல் 224 உலகங்கள் இருப்பதாக வேதம் கூறுகிறது அவை யாவற்றுக்கும் புவனேஸ்வரியே அதிபதி.புவனம் என்றால் அண்டம்,உலகம் என்றும் ஈஸ்வரி என்றால் காப்பவள் என்றும் பொருள் எனவே இவள் புவனேஸ்வரி எனப்படுகிறாள்.

இவள் ரிஷிகளாலும்,தெய்வங்களாலும் பூஜிக்கப்படுபவள்.

இந்த மந்திர ஜெபத்தை பௌர்ணமி அன்று தொடங்கவும்.மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் பட்டுத்துணி  உடுத்தி மஞ்சள் துண்டு விரித்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.

நெய் விளக்கேற்றி  விளக்கில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை ஆவாஹனம் செய்து ,வாழையிலையில் பச்சரிசி பரப்பி  அதில்  புவனேஸ்வரி யந்திரம் வைத்து  அந்த யந்திரத்தை குங்குமம்,ரோஜா இதழ்கள்  மற்றும் அக்ஷதையால் அர்ச்சித்து  3000 தடவை மந்திரம் சொல்ல வேண்டும்.இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய மந்திரம் சித்தியாகும்.பின்னர் அந்த யந்திரத்தையும் ஜப மாலையையும் ஆற்றில் விட்டு விட வேண்டும்.

பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு இனிப்பு பண்டம்,பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து பூஜையை நிறைவு செய்க.

இந்த ஜப முறை கலியுகத்தில் விரைவான நிறைவான நல்வாழ்வு தரும் என்று சொல்லப்படுகிறது.

மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ||

கடை,அலுவலகம் இவைகளில் ஹ்ரீம் என்ற மந்திரம் மேலே வரும்படி பெயர்பலகை வைக்க ,விசிட்டிங் கார்டிலும் மேலே ஹ்ரீம் என்று வரும்படி அடித்து விநியோகிக்க தொழில் அபிவிருத்தி,ஜன ஆகர்ஷணம்,தன ஆகர்ஷணம்  உண்டாகும்.தொழில் ஸ்தாபனங்கள் ,வீடு ,கடை இவற்றின் வாசலில் மஞ்சளால் ஹ்ரீம் என்று எழுதி அருகில் ஒரு ஸ்வஸ்திக் வரைந்து  வைக்க திருஷ்டி,எதிரிகளும் தீய எண்ணம் போன்றவை வேலை செய்யாது மேலும் அனேக அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.


இது போக புவனேஸ்வரி மந்திரத்தின் முன்னும் பின்னும் அனேக பீஜங்களைச் சேர்த்துப் பல காரியங்களுக்கு ஜெபிக்கும் பிரயோக முறைகள் உள்ளன.அவற்றை விளக்கினால் பக்கம் அதிகமாகும்.


புவனேஸ்வரியை வழிபட விருப்பம் உள்ளவர்கள் உபதேசம் (தீக்ஷை) பெற்று ஜெபிப்பது சிறப்பு.


புவனேஸ்வரி பீஜம் வரையப்பட்ட யந்திரத்திற்கு மல்லிகை மலர்களால் புவனேஸ்வரி பீஜத்துடன் கூடிய சஹஸ்ரநாமங்களால் அர்ச்சனை செய்து அவள் பீஜ மந்திரத்தை 1008 ஆவர்த்தி ஜெபித்து அந்த யந்திரத்தை இடது கையில் கட்டிக்கொள்ள  கொடிய தரித்திரம் ,வறுமை ,நோய் இவற்றுடன் எப்போதும் துன்பங்களையே சந்தித்துவருவோரின் துயரங்களும்  நீங்கும்.


வேதம்,மந்திர சாஸ்திரத்தில் உள்ள யாரும் எளிதில் வெளியிடாத மறைக்கப்பட்ட பல பயனுள்ள மந்திரங்களை யாவரின் நலம் வேண்டியும் வெளியிடுகிறேன்.




வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
9442193072 / 9788493072 

Monday, 23 June 2014

அழகு ,மனஅமைதி தரும் ஸ்ரீ சந்திரபகவான் மந்திரம்:-



திங்கள் கிழமைகள் தோறும்  ( நான்காம்பிறை நாள் தவிர ),மற்றும் பௌர்ணமி தோறும் இரவில் 8 முதல் 9 மணிக்குள்  ஸ்ரீ சந்திர பகவானை வணங்கி தீபம்,தூபம் காட்டி வணங்கி கீழ்க்கண்ட மந்திரத்தை  கிழக்கு நோக்கி அமர்ந்து குறைந்தது 27 தடவை  அதிகமாக 108 தடவை வரை ஜெபித்து வர அழகு கூடுவதுடன் ,மன அமைதி கிட்டும் ,அதிகம் கோபம் கொள்பவர்கள் சாந்த குணம் பெறுவர் . பார்வதி தேவியின் அருளும்,மஹாலக்ஷ்மியின் அருளும்  உண்டாகும்.முகத்தில் தேவையற்ற பரு,தழும்பு இவைகள் அற்ற மிருதுவான தோல் அமைவதுடன்,முக வசீகரம் உண்டாகும்.வளர்பிறை திங்கள்கிழமை அன்று ஆரம்பிக்கவும்.

மந்திரம்:

ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ ||



வாழ்க வையகம்| வாழ்க வளமுடன்||

M.சூர்யா
தச்சநல்லூர் ,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9788493072

Sunday, 22 June 2014

தொழில் விருத்திக்கு ஸ்ரீ பகளாமுகி மந்திரம்



ஓம் ஐம் ஹ்லீம்|
வியாபார விருத்திம்|
ஹ்லீம் ஐம் ஓம் ||

ஏதேனும் ஒரு வியாழக்கிழமை அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் கிழக்கு முகமாக  விளக்கேற்றி மேற்கு நோக்கி அமர்ந்து விளக்கின் முன்னால் மஞ்சள் பட்டுத்துணி வைத்து விளக்கிற்கு இந்த மந்திரத்தைச் சொல்லி 18 தடவை மஞ்சள் அல்லது செந்நிறப் பூக்களால் அர்ச்சிக்கவும்.பின்னர் மஞ்சள் பட்டுத்துணியில் மஞ்சளால் (தண்ணீரில் குழைத்த மஞ்சள்) கீழ்நோக்கிய முக்கோணம் ஒன்று வரைந்து அதனுள் ஹ்லீம் என்று எழுதி முக்கோணத்தின் மூலைகளிலும் நடுவிலும்  குங்குமம் வைத்து அதன் மேல் ஒரு தேங்காயும் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 எண்ணிக்கை ஜெபித்து மஞ்சள்  துணியில் தேங்காயை முடிந்து கடை அல்லது தொழில் ஸ்தாபனங்களில் முதலாளி அமரும் இடத்தில் உள்ள விளக்கின் அருகில் வைக்க எதிரிகளின் தொல்லை,திருஷ்டி இவை நீங்குவதுடன் தொழிலில் வியக்கத்தக்க முன்னேற்றம் உண்டாகும்.


வெள்ளி,செவ்வாய்,அமாவாசை, பௌர்ணமி நாட்களில் செம்பில் தண்ணீர் வைத்து அதில் சிறிது மஞ்சள் பொடி போட்டு இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து அந்த நீரை வீடு ,கடை,அலுவலகங்களில் தெளிக்க சிறப்பான பலன்கள் ஏற்படும்.



வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 16 June 2014

வீட்டில் பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்


மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.

ஒரு வீட்டில் பூஜை அறை வடகிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரைத்  தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்குத் திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.

பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளைச்  சொம்பில் அல்லது டம்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டிய து, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன் றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.

சில வீடுகளில் இடப் பற்றாக்குறை கார ணமாகப் படுக்கை அறை அல்லது சமையல் அறைச் சுவர்களில் உள்ள அலமாரிகளைப் பூஜை அறையாகப் பயன் படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வடகிழக்கு மூலையில் வைக் கலாம்.

கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும்.
பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.

ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண் ணங்களை கொண்டு வரும்.

அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

வாழ்க வையகம் ||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி  
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com