Thursday, 29 November 2018

தன ஆகர்ஷண தாந்த்ரீகப் பரிகாரம்

சுத்தமான வாழை இலையில் சிகப்பு அல்லது பச்சை மையால் உங்களது பெயரை எழுதி அதன் கீழ்  MONEY PAISE YAA NAZAR AAYE.

அதற்கு ஜவ்வாது அல்லது சந்தன அத்தர் தடவி  ஊதுவத்தி காண்பித்து நீங்கள் தூங்கும் அறையின் வடமேற்கு மூலையில் சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளவும்.

குறைந்தது ஒன்று அல்லது இது போல் ஒன்றுக்கு மேற்பட்டவை செய்து வைத்துக் கொள்ளலாம்.

நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA

Wednesday, 31 October 2018

குடும்ப ஒற்றுமை உண்டாக்கும் மந்திரம்

ஓம் க்சௌம் க்சௌம்

OM KSHOUM KSHOUM 

இந்த மந்திரத்தைக் குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள் வடக்கு நோக்கி அமர்ந்து அதிகமதிகமாக ஜெபித்து வரக் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று சுக்ரஹோரையில்
ஆரம்பிக்கவும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072  
ms.spiritual1@gmail.com
fb link:  https://www.facebook.com/surya.joy.52

Wednesday, 24 October 2018

தடைகள்,துன்பங்களை நீக்கி உடனடி பலன் தரும் கணபதி மந்திரம்

எதிர்பாராத பிரச்சனைகள்
தொடர் தடைகள்
திட்டமிட்ட செயல்கள் கடைசி நிமிடத்தில் தடைபட்டு நின்று விடுதல் தொழில்,வியாபாரம்.திருமணத் தடைகள்

போன்ற துன்பங்களைச் சந்தித்து வருபவர்கள் இந்த மந்திர ஜெபத்தின் துணையால் நலம் அடையலாம்.       

சங்கடஹர சதுர்த்தி அன்று கணபதியைப் பூஜித்து மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்.

தினமும் கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.

குறைந்தது 108 தடவையாவது ஜெபிக்கவும்.அதிகமாக ஜெபித்து வர விரைவில் பலன் பெறலாம்.

அதிகாலையில் ஜெபிப்பது நிறைவான பலன் தரும்.

மந்திரம் :-
ஓம் வக்ரதுண்டாய ஹும் 
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா  

நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA

Tuesday, 2 October 2018

வேலை கிடைக்க உதவும் லால் கிதாப் பரிகாரங்கள்

வேலை தேடி வருபவர்கள் ஒரு புது பூந்தொட்டி வாங்கி மண்ணில் ஓரமாக 21 ஒரு ரூபாய் காயின்களைப்  புதைத்து வைக்கவும்.அதன் பின் அந்த பூந்தொட்டியில் துளசிச் செடியை வளர்த்து வரவும்.தினமும் செடிக்கு நீர் ஊற்றி பூந்தொட்டியை 11 தடவை வலம் வரவும்.

வேலை கிடைத்ததும் புதைத்து வைத்த காயின்களைக் கழுவி 9 வயதுள்ள பெண் குழந்தையிடம் கொடுத்து விடவும். காயின்களைப் பூந்தொட்டியில் இருந்து எடுக்கும் பொழுது செடியை அழித்து விடாமல் கவனமாக எடுக்கவும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி பெற

வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குச் ( INTERVIEW) செல்பவர்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தால்,நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் பொழுது ஐந்து
கோமதிச் சக்கரங்களை பன்னீரில் கழுவிச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு செல்லவும்.இன்டெர்வியூவில் தேர்வாகி விட்டால் கோமதிச்
சக்கரத்தை  அருகில் உள்ள சிவன் கோயிலில் கொடுத்து விடவும்.அல்லது கோவில் உண்டியலில் போட்டு விடவும்.

நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA

Thursday, 27 September 2018

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் அரிய புத்தகங்களின் விற்பனை 10 % முதல் 50% தள்ளுபடி விலையில் செப்டெம்பர் 24 முதல் அக்டோபர் 24 வரை

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் அரிய புத்தகங்களின் விற்பனை 10 % முதல் 50% தள்ளுபடி விலையில் செப்டெம்பர் 24 முதல் அக்டோபர் 24 வரை

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் மாமன்னர் சரபோஜி பிறந்த நாள் விழாவையொட்டி புதிய நூல்கள் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டன.

சுகந்தவன மகாத்மியம்,  கிரந்த எழுத்துப் பயிற்சி கையேடு, சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, ஜலக்ரீடலு, ஸ்ரீராமதாஸ உபாஸனா பத்ததி, சாகநட்சத்திரமாலா, கலிவிடம்பனம், தமிழ் இலக்கியத்தில் அறிவியல் - பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள் ஆகிய புதிய நூல்கள்
வெளியிடப்பட்டன

மேலும், 16 மறுபதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டன.

இந்நூலகத்தில் 71,000-க்கும் அதிகமான அச்சு நூல்கள், தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி, இந்தி போன்ற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி போன்ற அயலக மொழிகளிலும் நூல்கள் உள்ளன. தவிர, 49,000-க்கும் அதிகமான ஓலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி மொழிகளில் அமைந்த இச்சுவடிகளில் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஜோதிடம், சிற்ப சாத்திரம் உள்பட பல்வேறு பொருள்களில் அமைந்துள்ளன. இச்சுவடிகள் கிட்டத்தட்ட 550 ஆண்டுகளில் இருந்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

50 சதவீதத் தள்ளுபடி:
இந்த விழாவையொட்டி, சரஸ்வதி மகால் நூலகத்தில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திங்கள்கிழமை (செப்.24) தொடங்கியது. தொடர்ந்து அக். 24-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு விற்பனையில் 1.4.2016-க்கு முன்பு வெளியிடப்பட்ட நூல்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடியும், அதன் பிறகு வெளியான நூல்களுக்கு 10 சதவீதத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

நன்றி தினமணி

இந்த அறிய நூல்களை வாங்கி பயன்பெறவும்.

இந்தப் பதிவின் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்து தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் புத்தக விலைப்பட்டியல் PDF பைலை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

https://drive.google.com/file/d/16r53idNEYJLxLQwaXeo7ADoqQSPpuU82/view?usp=sharing

மேலும் விரிவான விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து
ஆடியோ கேட்கவும்.

https://drive.google.com/file/d/1THfoaPT9pG8tzc1ngeUtulYHkWgwzh0h/view?usp=sharing

நன்றி வாழ்கவளமுடன்

M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்:  9788493072
ms.spiritual1@gmail.com  

Tuesday, 18 September 2018

வெற்றியும்,செல்வமும் தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் - 23.09.2018 ஞாயிறு அன்று

                                              ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் எளிமையாகச் செய்து வாழ்வில் வளமும்,நலமும் தரக்கூடிய ஆன்மீக ரகசியங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு.

கடந்த 15 ஆண்டுகளுக்கும்  மேல் பல குருமார்களிடம் கற்று,அனுபவமும் ஆராய்ச்சியும் செய்து நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

12 பேர் மட்டுமே அனுமதி.எனவே ,வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்யவும்.

வகுப்பில் கற்றுக் கொள்ள இருக்கும் விஷயங்கள்:- 

வாழ்க்கையை வெற்றியும்,ஐஸ்வர்யமும் கொண்டதாக மாற்றும் உயர்நிலை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள்,விரைவான பலன் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்.

சித்தர்களின் ஆன்மீக விதிகளைப் பின்பற்றி குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் நீண்ட நாள் வறுமை,கடன்,நோய்,
தொடர் துன்பங்கள் மற்றும் கர்மவினைப் பாதிப்பில் இருந்து விடுபடும் ரகசியங்கள்.

கிரக தோஷம்,பித்ரு தோஷம் மற்றும் பல வகையான சாபம்,தோஷங்களை எளிமையாகப் போக்கிக் கொள்ளும் மந்திரங்கள் மற்றும் தவ முறைகள்.

முறைப்படி தீக்ஷை பெறாமல் ஜெபிக்கப்பட்ட மந்திரங்களால் உண்டான தவறான பாதிப்புகளைச் சமன் செய்யும் முறைகள்.

குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் கணவன்,மனைவி,குழந்தைகள்,குடும்ப ஒற்றுமை,மகிழ்ச்சி,செல்வ வளம்,ஒழுக்கம்,உடல்,மன பலத்துடனும் இருக்கச் செய்ய உதவும் தெய்வீக விதிகள்.

வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள வாஸ்துக் குறைபாடுகள் மற்றும் தீய சக்திகளாலான பாதிப்புகள் நீங்கி, சுபிட்சம் நீங்கச் செய்ய வேண்டிய எளிய தாந்த்ரீகத் தீர்வுகள்.

அதீத ஆன்மீக ஆர்வத்தால் செய்த தியானம் மற்றும் மந்திர ஜெபத்தால் ஏற்பட்ட குடும்பத்தில் குழப்பம்,
சண்டை சச்சரவு,வருமானக் குறைவைச் சரி செய்யும் வழிகள்.

சகல காரிய சித்திக்கு உதவும் தாந்த்ரீக விதிகள்.

முழு நேர ஆன்மீகவாதிகள் மற்றும் குடும்பஸ்தர்களுக்கான தெய்வ வழிபாடுகள் மற்றும் தியான முறைகள் என்ன? அவற்றை எவ்வளவு  நேரம் செய்வது? எப்படி செய்வது?

ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபடும் பொழுது வருமானக் குறைவும்,அதீத காமமும் ஏன் உண்டாகிறது?

பரிகாரங்கள்,பூஜைகள்,மந்திர ஜெபங்கள் எதிர் பார்த்த பலனைத் தருவது இல்லையே ஏன்?

உடல் பலம் ,மனபலம்,ஆன்ம பலம் பெறச் செய்ய வேண்டிய எளிய மற்றும் நிறைவான சக்தி தரும் தியானம் மற்றும் யோகப்பயிற்சி முறைகள்.

வெற்றிகரமான வாழ்விற்குத் தேவையான அறிவு,தெளிவு,அதிர்ஷ்டம் தரும் தெய்வம் என்ன? அதன் வழிபாட்டு முறைகள் பற்றிய விளக்கம்.

நம் வாழ்வில் உயர்நிலை அடையத் தீர்மானித்த திட்டங்களையும் பயிற்சிகளையும் தொடர்ந்து செயல்படுத்த நம் சொந்த உடலும்,மனமும் ஒத்துழைப்பதில்லையே ஏன்? இதற்கு என்ன செய்ய வேண்டும்?

வாழ்வின் வெற்றிக்கும், ஆன்மீக வெற்றிக்கும் செய்து வரும் பயிற்சிகளை ஏன் தொடர்ந்து செய்ய முடிவதில்லை?
-------------------------------------------------------------

மதியம் உணவு இடைவேளைக்குப் பின்  வகுப்பில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் போக உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள்,ஆன்மீக சந்தேகங்கள், போன்ற எந்த விதமான கேள்விகளையும் கேட்டுப் பலன் பெறலாம்.

---------------------------------
விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும். 

------------------------------------------------------

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

----------------------------------------------------------------------------------------

பயிற்சி நடைபெறும் இடம்:

சுக்ரா கேப்பிடல் 

66A/11, பாபுஜி நகர் 
ஹோட்டல் ஆர்யாஸ் எதிர் ரோடு   
RR ஹோட்டல் பின்புறம் 
திருநெல்வேலி ஜங்ஷன்  627001

SUKRA CAPITAL
66A/11, BABUJI NAGAR,
HOTEL ARYAAS OPP ROAD
R.R HOTEL BACK SIDE
TIRUNELVELI JUNCTION 627001

பயிற்சி நேரம்: காலை 9:30 முதல் 4:30 வரை 
  
---------------------------------------------------------------------

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு,குறிப்பேடு 
மற்றும் பேனா வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.

நன்றி வாழ்கவளமுடன்

M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்:  9788493072
ms.spiritual1@gmail.com  

Wednesday, 12 September 2018

கணபதி மந்திரங்களும் பலன்களும்

மந்திர சாஸ்திரத்தில் பல வகையான விநாயகர் மந்திரங்கள்  உள்ளன.அவற்றில் சில மந்திரங்களும் அவற்றின் பலன்களும் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து படித்துப் பயன் பெறுங்கள்.

http://suryatamil1.blogspot.com/2013/07/1.html

http://suryatamil1.blogspot.com/2013/07/2.html

http://suryatamil1.blogspot.com/2013/07/blog-post_2.html

நன்றி.வாழ்கவளமுடன்  

M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்:  9788493072
ms.spiritual1@gmail.com

Thursday, 30 August 2018

வெற்றியும்,செல்வமும் தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு சென்னையில் - 2.9.2018 ஞாயிறு அன்று

                                          ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் எளிமையாகச் செய்து பலன் பெறக்கூடிய ஆன்மீக ரகசியங்கள்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும்  மேல் பல குருமார்களிடம் கற்று,அனுபவமும் ஆராய்ச்சியும் செய்து நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

இந்த வகுப்பில் கற்றுக் கொள்ள இருக்கும் விஷயங்கள்:- 

வாழ்க்கையை வெற்றியும்,ஐஸ்வர்யமும் கொண்டதாக மாற்றும் உயர்நிலை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள்,விரைவான பலன் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்.

நாமும்,நம் அடுத்த தலைமுறை வாரிசுகளும்  செல்வச் செழிப்புடன் வாழ உதவும் ரகசியங்கள்.

சித்தர்களின் ஆன்மீக விதிகளைப் பின்பற்றி குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் நீண்ட நாள் வறுமை,கடன்,நோய்,
தொடர் துன்பங்கள் மற்றும் கர்மவினைப் பாதிப்பில் இருந்து விடுபடும் ரகசியங்கள்.

கிரக தோஷம்,பித்ரு தோஷம் மற்றும் பல வகையான சாபம்,தோஷங்களை எளிமையாகப் போக்கிக் கொள்ளும் மந்திரங்கள் மற்றும் தவ முறைகள்.

முறைப்படி தீக்ஷை பெறாமல் ஜெபிக்கப்பட்ட மந்திரங்களால் உண்டான தவறான பாதிப்புகளைச் சமன் செய்யும் முறைகள்.

குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் கணவன்,மனைவி,குழந்தைகள்,குடும்ப ஒற்றுமை,மகிழ்ச்சி,செல்வ வளம்,ஒழுக்கம்,உடல்,மன பலத்துடனும் இருக்கச் செய்ய உதவும் தெய்வீக விதிகள்.

வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள வாஸ்துக் குறைபாடுகள் மற்றும் தீய சக்திகளாலான பாதிப்புகள் நீங்கி, சுபிட்சம் நீங்கச் செய்ய வேண்டிய எளிய தாந்த்ரீகத் தீர்வுகள்.

அதீத ஆன்மீக ஆர்வத்தால் செய்த தியானம் மற்றும் மந்திர ஜெபத்தால் ஏற்பட்ட குடும்பத்தில் குழப்பம்,சண்டை சச்சரவு,வருமானக் குறைவைச் சரி செய்யும் வழிகள்.

சகல காரிய சித்திக்கு உதவும் தாந்த்ரீக விதிகள்.

முழு நேர ஆன்மீகவாதிகள் மற்றும் குடும்பஸ்தர்களுக்கான தெய்வ வழிபாடுகள் மற்றும் தியான முறைகள் என்ன? அவற்றை எவ்வளவு  நேரம் செய்வது? எப்படி செய்வது?

வாழ்வின் வெற்றிக்கும், ஆன்மீக வெற்றிக்கும் செய்து வரும் பயிற்சிகளை ஏன் தொடர்ந்து செய்ய முடிவதில்லை?

ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபடும் பொழுது வருமானக் குறைவும்,அதீத காமமும் ஏன் உண்டாகிறது?

பரிகாரங்கள்,பூஜைகள்,மந்திர ஜெபங்கள் எதிர் பார்த்த பலனைத் தருவது இல்லையே ஏன்?

உடல் பலம் ,மனபலம்,ஆன்ம பலம் பெறச் செய்ய வேண்டிய எளிய மற்றும் நிறைவான சக்தி தரும் பயிற்சி முறைகள்.

வெற்றிகரமான வாழ்விற்குத் தேவையான அறிவு,தெளிவு,அதிர்ஷ்டம் தரும் தெய்வம் என்ன? அதன் வழிபாட்டு முறைகள்.
-------------------------------------------------------------

மதியம் உணவு இடைவேளைக்குப் பின்  வகுப்பில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் போக உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள்,ஆன்மீக சந்தேகங்கள்,ஜோதிடம் சரியா? எந்த விஷயத்திற்கு எல்லாம் ஜோதிடர்களை அணுகலாம்,ஜோதிடர்களை எப்படி அணுகினால் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெறலாம் போன்ற எந்த விதமான கேள்விகளையும் கேட்டுப் பலன் பெறலாம்.

---------------------------------
விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும். 

------------------------------------------------------

தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ, மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

----------------------------------------------------------------------------------------

பயிற்சி நடைபெறும் இடம்:

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி (சவுத்)
அறை எண்: 12,தரைத் தளம், 
பர்கிட் ரோடு
தி .நகர் 
சென்னை  -600017
(T.நகர் பஸ்ஸ்டாண்ட் எதிர் ரோடு )
தண்டபாணித் தெரு ஆரம்பத்தில் உள்ள வாசல் வழியாக வரவும்.

பயிற்சி நேரம்: காலை 9:15 முதல் 4:30 வரை 
  
---------------------------------------------------------------------

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு,குறிப்பேடு  மற்றும் பேனா வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.

நன்றி வாழ்கவளமுடன்

M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்:  9788493072
ms.spiritual1@gmail.com  

குழந்தை வரம் தரும் சந்ததி விரதம்

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
Mobile:9442193072
Whatsapp: 9788493072
ms.spiritual1@gmail.com

Monday, 27 August 2018

ஐஸ்வர்ய வாழ்வு தரும் தெய்வீக ரகசியங்கள் பயிற்சி சென்னை T.நகரில் 2.9.2018 ஞாயிறு அன்று

இன்றைய அவசர வாழ்வில் செய்து பார்த்து விரைவில் பலன் தரும் 
எளிய தெய்வீக ரகசியங்களைப் பின்பற்றி பொருளாதாரம்,குடும்ப ஒற்றுமை,மகிழ்ச்சி இவற்றோடு நலமும், வளமும் சேர்ந்த வாழ்வு தரும் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு.

பல சமயங்களின் ஆன்மீக ரகசியங்களைப் பல குருமார்களிடம் கற்று, பயிற்சி செய்து,அனுபவித்து, ஆராய்ச்சி செய்த ஆன்மீக ரகசியங்களில் எளிமையானதும்,இன்றைய அவசர உலகில் பயிற்சி செய்து பலன் பெறக் கூடிய வெற்றியும்,உயர்வும் தரும் பயிற்சிகள் பற்றிப் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

ஆன்மீகப் பயிற்சிகளில் குடும்ப வாழ்வில் உள்ளவர்கள்,முழு நேர யோக மற்றும் ஆன்மீக வாழ்வில் உள்ளவர்கள் அவரவர் வயது,வாழ்க்கைச்
சூழ்நிலைக்கு ஏற்ப என்ன விதமான தெய்வங்களை எப்படி வழிபடுவது  மற்றும் என்ன விதமான யோகம்,ஆன்மீகப் பயிற்சிகளை எப்படி எவ்வளவு செய்யலாம் என்ற விஷயங்களும் பகிரப்படும்.  
   
சாதாரணமான பக்தர்கள்,உயர்நிலை உபாசகர்கள்,ஞானம் மற்றும் யோகநிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான விஷயங்கள் வகுப்பில் இடம் பெறும்.

ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.
பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

மதிய உணவு இடைவேளைக்குப்  பின் உங்கள் வாழ்க்கை பிரச்சனைகள் தீர உதவும் தீர்வுகள்,வழிபாட்டு முறைகள்,பக்திமார்க்கம்,உபாசனா மார்க்கம், யோகமார்க்கம்,ஞான மார்க்கம்,தியான முறைகள், நோய்கள்
நீங்கவும்,மன ஒருமை, மன அமைதி,குழந்தை வளர்ப்பு,ஒழுக்கம், 
தம்பதிகள் ஒற்றுமை என பல தலைப்புகளில் உங்களுக்கு அவசியமான கேள்விகளைக் கேட்டு விடை பெறலாம்.

விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும். 

------------------------------------------------------

தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ, மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

----------------------------------------------------------------------------------------

பயிற்சி நடைபெறும் இடம்:

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி (சவுத்)
அறை எண்: 12,தரைத் தளம், 
பர்கிட் ரோடு
தி .நகர் 
சென்னை  -600017
(T.நகர் பஸ்ஸ்டாண்ட் எதிர் ரோடு )
தண்டபாணித் தெரு ஆரம்பத்தில் உள்ள வாசல் வழியாக வரவும்.
  
---------------------------------------------------------------------
பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு,குறிப்பேடுமற்றும் பேனா வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072  
ms.spiritual1@gmail.com
fb link:  https://www.facebook.com/surya.joy.52