Tuesday 2 July 2013

மந்திர ஜெபம்

மந்திர ஜெபம் :-



தெய்வங்களிடமிருந்து அருள் பெற நாம் ஸ்தோத்திரம், கவசம், நாமாவளி, மந்திரம் இவற்றைச் செய்து வருகிறோம்.நிபந்தனையற்ற ஆழ்ந்த அன்புடன் அழைத்தால் எந்தத் தெய்வமும் உடனே வந்து அருள் செய்யும்.நமக்கு அந்த  அளவுக்கு அன்பும் பக்தியும் செய்யத் தெரியாததால் நாம் மேற்காணும் வழிகளைப் பின்பற்றுகிறோம்.அவற்றுள் மிக விரைந்து பலன் தருவது மூலமந்திரங்களே.

மூலமந்திரங்களை ஜெபிக்கும் போது ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு சில விதிமுறைகள் உள்ளன அவற்றைப் பின்பற்றினால் உயர்ந்த பலன்கிட்டும்.

எல்லாருக்கும் எல்லா மந்திரங்களும் பலிப்பதில்லை.மேலும் தேவையில்லாத
துர்மந்திரங்களை ஜெபிக்காமல் சாத்வீக மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.

முதலில் விநாயக மந்திரத்தைச் சித்தி செய்து கொள்ளவேண்டும்.

எல்லாத் தெய்வ வடிவங்களுக்கும் ஒரு உயர்ந்த தத்துவார்த்த விளக்கம் உள்ளது.

விநாயகருக்கான  விளக்கம்.

1.விநாயகருக்கான தனிப்பெரும் அடையாளம் துதிக்கை.அதன் பொருள் மூச்சு ஆழமாக இழுக்கப்பட வேண்டும்.

2.காதுகள்-வலது காதிலிருந்து இடது காது வரை துதிக்கையையும் சேர்த்து
உற்று நோக்கினால் ஓம்கார வடிவம்.

3.இருந்த இடத்திலிருந்தே பிரபஞ்ச இயக்கம்,ஜோதிடம்,வைத்தியம் யாவற்றையும் அறிந்த ரிஷி,சித்தர்கள் யானையான விநாயகருக்கு எலியை வாகனமாக ஏன் வைத்தார்கள் என்பதற்குத் தரும் விளக்கம்.எலி எப்போதும் வெளிச்சத்தில் நடமாடுவதோ,தங்குவதோ கிடையாது.அதுபோல்
மூலாதாரத்திற்கு அதிதெய்வமான  கணபதி எலியின் மேல் அமர்ந்திருப்பது   எலியைப்போல் மனம் இயல்பு நிலையில் அல்லது மூலாதாரச்சக்கரம் செயல்படுகின்றநிலையில் இருள் போன்ற தீய மற்றும் அற்ப விஷயங்களைப் பற்றியே சிந்திக்கவும், செயல்படவும் செய்யும்.எனவே, அதுபோன்ற மாயையில் இருந்து உயர எலியாகிய நம் மனம் கீழேயும்,நம் மூச்சு ஆழமாகவும் இழுக்கப்பட்டு யோக நிலையில் இருந்து நம் வினைக்கு நாமே நாயகனாக இருக்க வேண்டும் என்பதாகும்.


விநாயகருக்கு 51 வகையான வடிவங்கள் உண்டு அதற்கென்றுள்ள  பிரத்யேக மந்திரங்களும் உள்ளன.அவற்றில் சில மந்திரங்களையும்,பலன்களையும் பார்க்கலாம்.


ஸ்ரீ மகாகணபதி மந்திரம்:-

1.ஓம் ||ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ||க்லௌம் கம் கணபதயே|| வரவரத சர்வ ஜனம் மே|| வசமானய ஸ்வாஹா||

மேற்கண்டவாறு இம்மந்திரத்தை 5 இடங்களில் சிறிது நிறுத்தி ஜெபிக்கவும்.இதனைக் கிழக்கு முகமாக அமர்ந்து முதல் நாள் 27 முறை பின்னர் 54,108 என்று இயன்றவரை ஜெபித்துவரவும்.

மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம். இம்மந்திரத்திற்கு ரிஷி கனக ரிஷி.

மந்திர சாஸ்திரத்தின் உயர்ந்த வித்தையான ஸ்ரீ வித்யையில் இதுவே முதல் உபதேசமாக வழங்கப்பட்டு வருகிறது,மேலும் இதுவே  மந்திர சாஸ்திரத்தின் முதல் படி என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் கிட்டும் பிரதான பலன் சத்வகுண சுத்தி எனப்படும் எண்ணத்தூய்மை.தேஜஸ்,செல்வம்,சௌபாக்கியம்,மனிதன் உட்பட சர்வ ஜீவராசிகளும் வசீகரம் ஆகி அதாவது எல்லா உயிர்களுடனும் இணக்கமான உறவு கொண்ட நல்வாழ்வு கிடைக்கப்பெறும்.

இம்மந்திரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் ஜெபிப்பது 100 % பலன் தரும்.அல்லது இளஞ்சூரியன் உள்ள நேரத்திற்குள் ஜெபிப்பது நலம்.வசதி இல்லாதவர்கள் நேரம் கிடைக்கையில் ஜெபிக்கலாம்

சித்தி பெற்ற குருவிடம் மந்திரங்களை முறைப்படி உபதேசம் (தீட்சை) பெற்று வழிபாடு பற்றிய போதுமான விஷயங்களைத் தெரிந்து
ஜெபிப்பதே நிறைவான பலன்களைத் தரும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

No comments:

Post a Comment