Monday, 29 June 2015

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரங்கள்

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  மந்திரங்கள்  





யஜுர் வேதத்தில் உள்ள  உபநிஷத்துக்களில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி உபநிஷதமும் ஒன்று.பிரம்ம வர்த்தத்தில் சனகாதி முனிவரகுள் ஒரு யாகம் செய்யும் பொருட்டு கூடியிருந்தார்கள்.அப்போது அம்மரதத்தின் அடியில் வசித்து வந்த சிரஞ்சீவிகளில் ஒருவரான ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியிடம் அவரின் சிரஞ்சீவித்தன்மையை எவ்வாறு அடைந்து அதைக்  கடைபிடிக்கிறீர்கள் என்று சனகாதி முனிவர்கள் கேட்டனர்.

அதற்கு ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி நான் சிவ தத்துவத்தை அறிந்த அதை அப்யாசித்ததன் மூலம் சிரஞ்சீவித்துவம் பெற்று விளங்குகிறேன் என்றார்.யுகங்களின் முடிவில் பிரளத்தில் உலகம் அழிவுரும் பொழுது
எல்லா படைப்புகளும் ,ஜீவ ராசிகளும் இறைவனான சிவபெருமானில் ஒடுங்கும்.அந்த சமயம் லோகத்தில் சிவன் மட்டுமே தன் சுயம்ப்ரகாசமான நிலையில் விளங்குவார்.அவர் வடிவில் ஒன்றான ஞான வடிவினதான தக்ஷிணாமூர்த்தியை உபாசிப்பதன் மூலம் நீங்களும் மிகச் சிறந்த ஞானத்தினை அடைந்து மேலான ஆன்ம நிலையை அடையலாம் எனக்கூறி அதற்காகப்       பின்வரும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் 3 சக்தி வாய்ந்த மந்திரங்களை உபதேசம் செய்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
24 அக்ஷர ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரம் 

பிரம்மா ரிஷி
காயத்ரி சந்தஸ்
தக்ஷிணாமூர்த்தி தேவதா

ஓம்|நமோ பகவதே |தக்ஷிணாமூர்த்தே |மஹ்யம் மேதாம் |
பிரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||

த்யானம் :-

ஸ்படிகம் போன்ற மேனியை உடையவரும், கரங்களில் முத்துமணி மாலை, அமிர்த கலசம்,ஞான முத்திரை தாங்கியவரும்,நாகாபரணம் பூண்டவரும்,சிரசிலே சந்திரனைத் தரித்தவரும்,சர்வ அலங்காரம் பூண்டவருமான  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  தேவரை என் ஹ்ருதய கமலத்தில் தியானிக்கிறேன் என்று மனத்தால் பாவித்து மந்திரத்தை ஜெபிக்கவேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

9 அட்சர  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரம் 

ஓம் ஆம் அ: சிவாய நம ஓம் ||

த்யானம் :-

நன்மைகளை மாத்திரம் அருள்செய்யும் தென்முகக் கடவுளும்,தமது மூன்று கரங்களில் மான் மழு சூலம் ஏந்தியவரும், ஒரு கரத்தைத் தனது கால் மூட்டில் வைத்திருப்பவரும்,நாகாபரணம் பூண்டவரும்,பால் போன்ற வெண்ணிறம் உடையவரும் ,கல்லால மரத்தின் கீழ் சனகாதியர் புடை சூழ அமர்ந்த வண்ணம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தியானிக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரம் 

ஓம் ப்ரூம் |நமோ ஹ்ரீம் |ஐம்  தக்ஷிணாமூர்த்தயே |ஞானம் தேஹி ஸ்வாஹா ||

த்யானம் :-





திருநீறணிந்த வெண்ணிற மேனியை உடையவரும்,கரங்களில் முத்துமணி மாலை,ஞான முத்திரை,வீணை,புத்தகம் இவற்றைத் தரித்தவரும் தாங்கியவரும்,சர்வ அலங்காரம் பூண்டவருமான,யானைத்தோலைப் போர்த்தியவரும்,சிரசிலே சந்திரனைத் தரித்தவரும்,  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  தேவரை என் ஹ்ருதய கமலத்தில் தியானிக்கிறேன் என்று மனத்தால் பாவித்து மந்திரத்தை ஜெபிக்கவேண்டும்.

யுக ஆரம்பத்தில் இம்மந்திரத்தை ஜெபம் செய்ததின் பலனாகப் பிரம்ம தேவர் படைக்கும் தொழில் பற்றிய ஞானத்தினைப் பெறுவதாக இந்த உபநிஷத் கூறுகிறது.



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com