Monday 29 May 2017

கொடுத்த பணம் விரைவில் வசூலாகப் பரிகாரம்

உப்பு,வெந்தயம்,கருப்பு எள் இவை மூன்றையும் பொடி செய்து ஒரு சுத்தமான வெள்ளைத்துணியில் போட்டுக் கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்துக் கொண்டால் வர வேண்டிய பணம் விரைவில் வந்துவிடும்.

இந்தப் பரிகாரத்தை குரு அல்லது சுக்ர ஹோரையில் செய்யவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
WHATSAPP : 9788493072 

ms.spiritual1@gmail.com 



Sunday 28 May 2017

எப்பொழுதும் கைவசம் பணம் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்

எப்பொழுதும் கைவசம் பணம் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்

ஆந்தை படம் ஒன்றை மணி பர்ஸ் ,லாக்கர்,கல்லாப்பெட்டி இவற்றில் சந்தனம் குங்குமம் தடவி வைத்துக் கொள்ள அந்த இடத்தில் ஒரு நாளும் பணம் அறவே இல்லாமல் போகாத படி தொடர்ந்த பணப்புழக்கம் இருக்கும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
WHATSAPP : 9788493072 
ms.spiritual1@gmail.com 



Wednesday 24 May 2017

சகலகலாவல்லி மாலை

குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாதுஷாவாக இருந்தார். அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது. தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார். அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது.

சகலகலாவல்லி மாலை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே!

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே!

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே!

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே!

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே!

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே!

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே! 

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே!


Thursday 18 May 2017

சகலமும் தரும் ஸ்ரீ காமதேனு மந்திரம்

காமதேனு ஒரு தேவ லோகப்பசு. சகல தேவர்களும் தேவதைகளும் காமதேனுவில் அடக்கம்.வட இந்தியாவில் இந்தப் பூஜை மிகப் பிரசித்தம்.

எனவே,காமதேனுவைப் பூஜிக்கிறவர்கள் தங்களது மனவிருப்பங்கள் நிறைவேறப்பெறுவார்கள் என்று மந்திரம் சாஸ்திரம் கூறுகிறது.


பகவத்கீதையில் கூட ஸ்ரீ கிருஷ்ண பகவான்
"நான் பசுக்களில் காமதேனுவாக இருக்கிறேன் என்று கூறுகிறார்".

காமதேனுவின் கன்றின் பெயர் நந்தினி.காமதேனுவைப் போலவே அதன் கன்றும் புனிதமானதாகக்   கருதப்படுகிறது.எப்பொழுதும் காமதேனுவுடன் அதன் கன்று இருக்கும் படி உள்ள படம் அல்லது விக்கிரகம் வைத்தே பூஜிக்க வேண்டும்.

தேவர்கள் தலைவன் இந்திரன் கீழ்க்கண்ட மந்திரங்களைக் கொண்டு காமதேனுவைப் பூஜித்துப் பலன் பெற்றிருக்கிறார்.

காமதேனு காயத்ரி மந்த்ரம்

ஓம் சுப காமாயை வித்மஹே
காம தத்ராயை ச தீமஹி
தன்னோ தேனு ப்ரசோதயாத்

காமதேனு அம்பிகா மந்த்ரம்

நமோ தேவ்யை மஹா தேவ்யை
சுரப்யை ச நமோ நமஹ
கவம் பீஜ ஸ்வரூபாய
நமஸ்தே ஜெகதம்பிகே

காமதேனு மூல மந்த்ரம்

ஓம் க்லீம் காமதுகே
அமோகே வரதே விச்சே
ஸ்புர ஸ்புர ஸ்ரீம்
பரஸ்ரீம் ஸ்ரீ காமதேனுவே நமோ நமஹ


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072 
ms.spiritual1@gmail.com 



Monday 15 May 2017

குழந்தைகளுக்குத் தொடர் நோய் ஆபத்து ,கண் திருஷ்டி விலக

ஏதேனும் ஒரு நாளில் சூரிய அஸ்தமன நேரத்தில் இதைச் செய்யவும்.

வீட்டில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் இதைச் செய்யலாம்.

கருப்புப் புள்ளிகள் இல்லாத எலுமிச்சை ஒன்று வாங்கிக் கொள்ளவும். 

குழந்தையை வீட்டில் நிற்க வைத்து அந்த எலுமிச்சையை குழந்தையின் தலை முதல் கால் வரை ஏழு முறை சுற்றவும்.சுற்றும் பொழுது ஓம் ஸ்ரீ ஹனுமதே நம என்று ஜெபித்தபடியே சுற்றவும்.அதன் பின்னர் ஒரு நாற்சந்தியில் அந்த எலுமிச்சையை  ஒரு கத்தியால் நான்கு துண்டாக நறுக்கி அங்கேயே அந்த எலுமிச்சையையும்,அந்தக் கத்தியையும் போட்டு விட்டுத்  திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வந்து கை,கால்களைக் கழுவிக் கொள்ளவும்.


இதனால் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நோய்,விபத்துகள்,கண் திருஷ்டி பாதிப்புகளை நீங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP 9788493072
ms.spiritual1@gmail.com



Tuesday 2 May 2017

வளமான வாழ்வு தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி திருநெல்வேலியில் 07.05.2017 ஞாயிறு அன்று

சித்தர்களின்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றி கவலைகள்,வறுமை, கடன் இல்லாமல் சர்வ ஐஸ்வர்யத்துடன்  வாழ உதவும் ஆன்மீக ரகசியங்களைப் பயிற்சி அளிக்க உள்ளோம்.

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :

1.கர்ம வினையின் இயக்கமும்,அதைக் கடக்கவும்,தீர்க்கவும்
சித்தர்கள்,மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் இல்லாமல் நிறைவான
செல்வமும்,செல்வாக்கும் பெற்று வாழவும், வேலை மற்றும்
தொழிலில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.நமக்குப் பிடித்தபடி வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய
வேண்டிய பயிற்சிகள்.

4.அதீத காமம்,கோபம்,மந்தபுத்தி,தள்ளிப் போடும் குணம்
மற்றும் எந்தத் தீய குணங்களையும் சரி செய்யும் வழிகள்.

5.எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின்
சர சாஸ்திர ரகசியங்கள்.

6.தொடர்ச்சியான காரியத்தடை,முன்னேற்றமின்மை நீங்கி
சகல காரியமும் சித்தியடைய உதவும்  வழிமுறைகள்.

7.குலதெய்வம்,அதிர்ஷ்ட தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின்  உத்தரவாதமான அருள் உதவி பெற உபாசனை ரகசியங்கள்.

8.குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாழ்வில் அவசியமான
தேவைகளை நிறைவேற்றும் தெய்வ வழிபாடுகள்.

9.மந்திர ஜெபத்தால் கிடைக்கும் சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளவும்,அதனால் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

10.உடனடியாகப் பலன் தரும் மேற்கத்திய மற்றும் பிற நாடுகளில் பின்பற்றப்படும் மந்திரங்கள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்.

11.எதிரிகளாலும்,எந்தத் தீய சக்திகளாலும் எந்தவிதமான தீங்கும்
நேராமல் காத்துக் கொள்ள உதவும் தெய்வ ரகசியங்கள்.

12.தவறான மந்திரவாதிகள் மற்றும் ஜோதிடர்களிடம் சிக்காமல்
சுபதெய்வங்களின் உதவியால் நம் பிரச்சனைகளை நாமே சரிசெய்து
கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகள்.


வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை
அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.

முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழலில் எளிய முறையில் செய்து பார்த்து விரைவான பலன் பெறக் கூடிய,
பலமுறை அனுபவத்தில் வெற்றி கண்ட முறைகளை மட்டும்
பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ, மாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :   07.05.2017 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : தச்சநல்லூர் 
                                                               திருநெல்வேலி 627358


திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர்.

ஷேர் ஆட்டோ மற்றும் பேருந்து வசதி உள்ளது.சந்திமறித்தம்மன் கோவில் ஸ்டாப்பில் இறங்கவும்.

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வரும் விபரம் மற்றும் பயிற்சிக்                           கட்டணம் பற்றிய விபரங்களைக் கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.


M.சூர்யா-தச்சநல்லூர்,
திருநெல்வேலி

9442193072
9788493072



பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு, நோட்டு,பேனா,பயிற்சிப் புத்தகம் வழங்கப்படும்.

----------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072 
ms.spiritual1@gmail.com