2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.
3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடுகிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.
4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.
5. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.
6. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.
7.நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
8. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.
9. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.
10. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
11. நரசிம்மரை ‘மருத்யுவே ஸ்வாஹா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
12. ‘அடித்த கை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்துக் கேட்ட மறு வினாடியே உதவுபவர்’ என்று இதற்கு பொருள்.
13.நரசிம்ம ஜயந்தி அன்று பெருமாளை மாலை 7 மணிக்கு மேல் வழிபாடு செய்வது விசேஷம். அந்த வேளையில் சதுர்த்தசி திதி இருக்கவேண்டியது அவசியம். சில வேளை களில் சுவாதி நட்சத்திரமும் கூடிவரும். இது மிகவும் சிறப்பு.
14.நரசிம்மரை வழிபட.கராவலம்பம், நரசிம்ம சகஸ்ரநாமம் உள்ளிட்ட பல துதிகள் உள்ளன.அவற்றைச் சொல்ல இயலாதவர்கள் உக்ரம் வீரம் எனும் கீழ்க்காணும் ஸ்லோகத்தை 11 முறை சொன்னாலே அந்தப் பலன் கிடைக்கும்.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
15. நரசிம்மருக்கு உகந்த நிவேதனம் பானகம் மற்றும் வடை பருப்பு. எளிமையாகச் செய்ய உகந்த இந்த நிவேதனங்களைப் படைத்து வழிபடலாம்.
16. சுவாமிக்கு ‘ஓம் ஸ்ரீ நரசிம்மாய நம:’ என்று சொல்லி, செண்பக புஷ்பம் சாத்தி அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷம். மனோ ரஞ்சிதம் மலரும் சாத்தலாம்.
17. நரசிம்மருக்குப் பலாப்பழம் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால், மனதில் இருக்கும் கவலைகள் எல்லாம் விலகி ஓடும் என்பார்கள்.
18.சிலர் காலை முதலே விரதம் இருந்து மாலை வழிபாடு செய்வார்கள். காலையில் எழுந்து நீராடி பின் உபவாசம் இருக்க வேண் டும். நீராகாரங்கள் சாப்பிடலாம். மாலை பூஜை செய்வதற்கு முன்பும் நீராட வேண்டி யது அவசியம்.
நன்றி ! வாழ்கவளமுடன் !!
M.சூர்யா,சுப்பிரமணியன்

