Monday 31 July 2017

அத்ரி மலை யாத்திரை 06.08.2017

பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அத்ரி மலை யாத்திரை, திட்டமிட்டபடியே 06.08.2017  ஞாயிறு அன்று மட்டும் ஒரு நாள் பயணமாகச்  செல்லவிருக்கிறோம்.


06.08.2017 அன்று காலை 7 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சேருமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.


அத்ரிமலைப் பயணம் முடித்து இரவு 8:00 முதல் 9:00 மணிக்குள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அல்லது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேருமாறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


100 க்கும் அதிகமானவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.


உறுதியாக வருகை தர இருக்கும் அன்பர்கள் பெயர் மற்றும் ஊர் சொல்லி முன்பதிவு செய்து கொள்ளவும்.


யாத்திரைக் கட்டணம்: RS.1,200 மட்டுமே.



காலை மற்றும் மதியம் உணவு,மினரல் வாட்டர் பாட்டில் வழங்கப்படும்.


அன்பர்கள் சத்சங்கத்தில் கற்றுத்தரப்படும் விஷயங்களைக் குறித்துக் கொள்ள நோட்டும்,பேனாவும் மட்டும் கொண்டு வந்தால் போதும்.

அத்ரி மலையில் உள்ள புனித சுனையில் ஆண்டு முழுவதும் வற்றாமல் 
வந்து கொண்டே இருக்கும் தீர்த்த நீர் மிக சக்தி வாய்ந்தது.பல 
கோவில்களுக்கு கும்பாபிஷேகம்,வருஷாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த நீரை எடுத்துச் செல்வார்கள். நீங்களும் தீர்த்தம் எடுத்துச் செல்ல விரும்பினால் அதற்கேற்ப 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் வாட்டர் கேன் கொண்டு வந்து எடுத்துச் செல்லலாம்.



கீழ்க்கண்ட ஸ்டேட் பேங்க் அல்லது இந்தியன் வங்கி கணக்கில் பயணக் கட்டணம் ரூ.1200 அல்லது முன்பணமாக ரூ.500 செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


M.SUBRAMANIAN,STATE BANK OF INDIA,AC NO.32986914404,TIRUNELVELI BRANCH,IFSC CODE: SBIN0000932  BRANCH CODE:00932

R.KALAISELVI,INDIAN BANK,THACHANALLUR BRANCH,AC NO.936681178
IFSC CODE:IDIB000T093  BRANCH CODE:00T093


நன்றி - வாழ்கவளமுடன்

M.சூர்யா 
தச்சநல்லூர்,திருநெல்வேலி 
9442193072 
WHATSAPP 9788493072   

Sunday 30 July 2017

அத்ரி மலை புனித யாத்திரை மற்றும் ஆன்மீக சத்சங்கம் 18.02.2018 ஞாயிறு அன்று

இதுவரை தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் என்னிடம் பயிற்சி பெற்ற பலரும்,பயிற்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களும் ஏதேனும் புனித ஸ்தல யாத்திரை ஏற்பாடு செய்து அங்கு பல ஆன்மீக விஷயங்களையும், சித்தர்கள் மற்றும் மஹான்கள் ஆன்மீக மற்றும் வாழ்வின் உயர்வுக்குச்  சொல்லியுள்ள பயிற்சி முறைகள் மற்றும் ரகசியங்களைக் கற்றுக் கொள்ளவும்,கலந்துரையாடவும் விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.
    
வரும் ஞாயிறு அன்று 18.02.2018 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அத்ரி மலையில் ஆன்மீகம்,சித்தர் ரகசியங்கள்,மந்திர ஜபம், யோகப் பயிற்சிகள், வாழ்விலும், ஆன்மீகத்திலும்  உயர்வடையப் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி அறிந்துகொள்ள நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அத்ரி மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் மற்றும் குற்றாலம் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.

அத்ரிமஹரிக்கும்,அனுசூயாதேவிக்கும் குழந்தையாக தத்தாத்ரேயர் என்ற பெயரில் மும்மூர்த்திகளும் அவதரித்தனர். இந்த புனித மலையானது ஸ்ரீ அத்ரி மகரிஷி,அனுசூயாதேவி,
கோரக்கர் முதலான சித்தர் பெருமக்கள் அருள் நிறைந்த ஸ்தலம்.        

இம்மலையையும் இதன் சிறப்பையும் பற்றி பல்வேறு சித்தர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.

கடனா அணைக்கட்டும்,வருடம் முழுவதும் நீர்வரத்தும் கொண்ட பசுமையான மலை.

மலை ஏறும் வழியில் ஆறும்,அருவியும் உள்ளது.அங்கேயே குளித்துக் கொள்ளலாம்.

மலைப் பயணம்  மற்றும் சத்சங்கம் முடிந்ததும் நேரம் இருந்தால் பொட்டல்புதூர் மற்றும் சிவசைலம் ஆலயங்களுக்குச் செல்லலாம்.


தமிழகத்தில் மேற்குப் பார்த்த படி அமைந்துள்ள சிவாலயங்களில் சிவசைலம் கோயிலும் ஒன்று.அத்ரிமலை செல்லும் வழியில் உள்ளது.


8 KM தொலைவில் பொட்டல்புதூர் என்ற ஊரில் முஹைதீன் ஆண்டவர் தர்கா உள்ளது.நம் சித்தர்களில் மூத்த மற்றும் முதன்மையான சித்தராக அகஸ்தியர் மதிக்கப்படுவது போல், இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பரம்பரையில் தர்காக்களில் அடக்கமாகி இருக்கும் அனைத்து ஞானவான்களுக்கும் தலைமைக் குருவாய் விளங்கும் முஹைதீன் ஆண்டவர்கள் தர்கா அமைந்துள்ளது. இங்கு நாகூர் ஆண்டவர் உட்பட தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பல இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள் தவம் செய்து அறிய ஆன்மீக உயரங்களை அடைந்திருக்கிறார்கள்.முஹைதீன் ஆண்டவரை வழிபட்டால் தீய சக்திகள் மற்றும் மாந்த்ரீகத்தால் ஏற்பட்ட தீவினைகள் விரைவில் தீரும்.மேலும் அவர்களை வழிபட்டுத் தரிசித்து, உதவி பெறும் முறைகளும் பகிரப்படும்.   


   
25 பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருப்பதால் 
யாத்திரையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு அவசியம்.

கட்டணம்,வரும் வழி,வந்து சேர வேண்டிய நேரம் மற்றும் பிற விபரங்களைக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொண்டு அறிந்து கொள்ளவும்.


காலை,மாலை உணவுடன் குடிநீர் பாட்டிலும் 

கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு:-


1.விரதம் எதுவும்பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை.
பயணத்திற்கு அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அசைவம் சாப்பிடாமல் சைவ உணவு மட்டும் சாப்பிடவும்.

2.கடந்த முறை பயணத்தின் போது கலந்து கொண்ட பலருக்கும்  பாலா மந்திர தீட்சை தந்தேன்.மிகச் சிலர் மட்டுமே முறையாய் தொடர்ந்து ஜெபித்து வருகிறார்கள்.பலர் தொடர்ச்சியாய் செய்யவில்லை.

மந்திரசித்தியோடு லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வின் தடைகளை  
நீக்கி உயர்வான வாழ்வு வாழ உதவும் ஸ்ரீ வாலை கணபதி மந்திரம் தீட்சை தரப்படும்.

3.தண்ணீர் பாட்டில் 1 அல்லது அதற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.ஒன்று குடிப்பதற்கு, இன்னொன்று மலையில் உள்ள புனித தீர்த்தத்தில் நீர் பிடித்து வைத்துக் கொள்ளவும்.

4.  45 நிமிடங்கள் முதல் 1:30 மணி நேரம் வரை மலை ஏற வேண்டி இருப்பதால் மலை ஏற முடியாதவர்கள்,வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் பயணத்தைத் தவிக்கவும்.

5.முடிந்தவரையில் காலையில் சீக்கிரம் வர முயற்சி செய்யவும்.

6.காலையில் அதிக வெயில் வரும் முன் மலை ஏறும் படி முடிவு செய்திருப்பதால் முடிந்தவரை காலையில் சீக்கிரமே வர முயற்சிக்கவும்.அல்லது முன்தினம் வந்து ரூம் எடுத்து தங்கிக் கொண்டால் வசதியாக இருக்கும்.


மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.


நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072

------------------------------------------------------------------------------
அத்ரி மலையின் சிறப்புகள் :

இம்மலையில் அத்ரி முனிவர்,கோரக்கர்,பிருகு முனிவர் போன்ற சித்தர்கள்  தவம் இயற்றியுள்ளார்கள்.


பசுமை போர்த்திய மூலிகை மலைகள்வானத்தையும்வனத்தையும் இணைக்கும் மேகக்கூட்டங்களை காண கண்கோடி வேண்டும்அத்ரிமலை அடிவாரத்தில் கடனா அணைஜில்லென வீசும் பொதிகை மலைத்தென்றல்நாசி துவாரங்களை துளையிட்டு செல்லும் மூலிகை மனம்... என நற்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கடனா அணையை(85 அடி உயரம்அடைய வேண்டும் அங்கிருந்து அணை வழியாக 7 கி.மீதுாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும்இடையே அத்ரி கங்கா நதியை கடக்க வேண்டும்வனத்தில் செல்லும்போது சித்தர்கள் வாழ்ந்த அடிச்சுவடுகளை காணலாம்இப்படி ஒவ்வொரு பகுதியாக கடந்து சென்ற பின் 'அனுசுயா தேவிஅத்ரி மகரிஷி ஆசிரமம் (இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமானதுஅமைந்துள்ளது.

கோரக்க சித்தருக்காக அத்ரிமகரிஷி தோற்றுவித்த 'கங்கா நதி ஊற்றுஇன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனை ஊற்றாக உள்ளதுஇங்குஅகத்தியர் கோரக்கர் இணைந்த கோயில் உள்ளதுஇங்கு,சித்தர்கள் தியானம் செய்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்போது மன அமைதிஉள்ளத்தில் சாந்தி பிறக்கிறதுஎன்பது நிதர்சனம்.


இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கைவள்ளி,தெய்வானை சமேத முருகப்பெருமான்விநாயகர்மகிஷாசுரமர்த்தினிசுற்றுப்பாதையில் அகத்தியர்அத்ரிநாக தேவதைகள்சாஸ்தா பீடம் அமைந்துள்ளனகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்திவிஷ்ணுபிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்கருவறையில் அத்ரி பரமேஸ்வரன்அத்ரி பரமேஸ்வரியும்எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர்கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.

அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும்செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர்இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும்ராகு-கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குகாலை 6 மணி முதல் மாலை 6  மணி வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு.
இயற்கை அன்னையின் அரவணைப்பில் பிறந்த அத்ரி மலையின் அற்புதங்களை ஒருமுறையேனும் வந்து பாருங்களேன்!  


வரும் வழி பற்றிய விபரம் :

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையதிற்கு 18.02.2018 ஞாயிறு அன்று காலை 6 அல்லது 7 மணிக்குள் வந்து சேர்ந்து விட வேண்டும்அங்கிருந்து வேனில் அல்லது டாக்ஸியில் மலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு  உள்ளது.தனியே கார் அல்லது வேறு வாகனத்தில் வருபவர்கள் கீழே உள்ள என்னுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வரும்வழி பற்றி அறிந்து கொள்ளவும்.    


அத்ரி மலை மற்றும் அருகில் உள்ள ஸ்தலங்கள் :

அத்ரி பரமேஸ்வரர் ஆலயம் 






தவம் செய்யக் குகை போல் மாறி நிற்கும் மரம் 

வற்றாத  புண்ணிய தீர்த்தம்

 அகத்தியர் மற்றும் அத்ரி மகரிஷி விக்கிரகம் 



அத்ரி மலைத் தோற்றம் .

 குகை 












மலைப் பாதை 







நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com