Saturday 2 February 2019

சியாமளா நவராத்திரி - 2.2.2022 முதல் 10.02.2022 வரை



தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரைஅம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம்.

சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

சியாமளா நவராத்திரி தினங்களில் அம்பிகையை வழிபட்டு, ஸ்ரீ மாதங்கி தேவியின் அருளால், வெற்றி பெறுவோம்!!!!

.
சியாமளா சகஸ்ரநாமம்,ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே.ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்ன த்தைத் துதித்தாலும் சிறப்பான பயன்களைப் பெறலாம்.

ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி. இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகையிடம் லயிக்கச் செய்ய முடியும்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்மந்திரிணீஎன்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் விளங்குவதால், சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. எனவே சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.

கலைகளின் தேவதையாகவும், அரசபோக வாழ்வை அளிப்பவளாகவும் இவளே விளங்குகிறாள்.

கலைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு பெற, வாக்கு வளம் பெற, இவளை வணங்க வேண்டும்.

நவாவர்ண பூஜையும், குங்கும அபிஷேகமும் அம்பாள் ராஜமாதங்கிக்கு பிடித்தமானது.

மீனாட்சி அன்னையே ராஜமாதங்கியின் அம்சம்தான் என்பதால், மீனாட்சியை வணங்குவதே ராஜ ஷியாமளாவை வணங்குவது போல்தான்.

எனவே இந்த சியாமா நவராத்திரி நாட்களில்- சியாமளாவை- மீனாட்சியம்மனை வணங்கினால் சங்கீத சாகித்ய கலையருள் கிட்டுமென்பது திண்ணம். மாணவ மாணவியர் கல்வியில் உயர்வு பெறுவதும் திண்ணம்.
 நன்றி:இணையதள மற்றும் முகநூல் நண்பர்கள்  

வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com
fb link: https://www.facebook.com/surya.joy.52

Friday 1 February 2019

மகத்தான வாழ்வு தரும் மந்திரங்களும்,ஆன்மிக ரகசியங்களும் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் 3.2.2019 ஞாயிறு அன்று





பல சமயங்களின் குருமார்களிடம் கற்று,அனுபவித்துப் பலன் கண்ட ஆன்மீக ரகசியங்களில் எளிமையானதும்,இன்றைய அவசர உலகில் பயிற்சி செய்து வெற்றி,உயர்வு,பொருளாதாரம்,குடும்பஒற்றுமை,கல்வி,மகிழ்ச்சியோடு,நலமும்,வளமும்,நிம்மதியும் சேர்ந்த வாழ்விற்கான பயிற்சி வகுப்பு.



வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்றிரண்டு வகைகளில் அடக்கி விடலாம்.அவற்றை எளிய மந்திர ஜெபம் மற்றும் சில ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றிக் குறுகியகாலத்தில் சரி செய்து கொள்ள முடியும்.



சாதாரணமான பக்தர்கள்,உயர்நிலை உபாசகர்கள்,ஞானம் மற்றும் யோகநிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான விஷயங்கள் வகுப்பில் இடம் பெறும்.


ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=o_zqc4FaMe8&feature=youtu.be

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :
M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி


---------------------------------------------------------------------------------------

பயிற்சி நாள் : 3.2.2019
நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
பயிற்சிக் கட்டணம்: ரூ.1000

பயிற்சி நடைபெறும் இடம்:-

M.D.T. SCHOOL 
NEAR TIRUNELVELI OLD BUS STAND /RAILWAY STATION
TIRUNELVELI JUNCTION


M.D.T.ஸ்கூல் (ம.தி.தா. மேல்நிலைப்பள்ளி )  
திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் / ரயில்நிலையம் அருகில் 
திருநெல்வேலி சந்திப்பு  



---------------------------------------------------------------------

பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேனீர்,குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.



பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.



வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com
fb link: https://www.facebook.com/surya.joy.52