Thursday, 4 April 2019

அம்பிகையின் அருள் பொழியும் வசந்த நவராத்திரி - பங்குனி மாதம் 8-ஆம் தேதி (22.3.2023) சனிக்கிழமை முதல் பங்குனி மாதம் 16-ந்தேதி (30.3.2023) சனிக்கிழமை வரை

அம்பிகையின் அருள் பொழியும் வசந்த  நவராத்திரி - பங்குனி மாதம் 8-ஆம் தேதி (22.3.2023) புதன்கிழமை முதல் பங்குனி மாதம் 30-ந்தேதி (30.3.2023) வியாழக்கிழமை வரை.



வசந்த நவராத்திரி மஹிமை:


வசந்த மாதம் அதாவது பங்குனி அமாவாசைக்கு மறுநாளிலிருந்து வரும் ஒன்பது தினங்கள் ஸ்ரீலலிதா நவராத்ரோத்சவம் அல்லது வசந்த நவராத்ரோத்ஸவம் எனும் விஷேஷமான நவராத்திரி.ஸ்ரீவித்யோபாசகர்கள் சந்த்ரகலையை அனுஸரித்து பதினைந்து தினங்கள் அதாவது பௌர்ணமி வரை ஸ்ரீ லலிதா பரமேச்வரியையும், ஸ்ரீ வித்யோபாஸகர் அல்லாதவர் ஒன்பது தினங்களில் நவமி வரை ஸ்ரீ லலிதேச்வரியை உபாஸிக்க வேண்டிய அத்புதமான தினங்கள்.


இந்த நவராத்திரிஷ ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி உபாஸனைக்கு விஷேஷம் என்பது மஹான்களின் வாக்கு. பன்னிரண்டு மாத சுக்ல பக்ஷ பதினைந்து தினங்களுமே நவராத்ர ம் என்றும் அபிப்ராயம் உண்டு. அவற்றும் சைத்ர நவராத்ரியும், சரத் நவராத்ரியும் அதிவிஷேஷமானவை.


போகமோக்ஷாதிகளை அளிக்கக்கூடியதான வல்லமை இந்த நவராத்திரி பூஜைக்கு உண்டு. ராஜராஜேச்வரியான அம்பாளே வஸந்த நவராத்ரத்திற்கு அதிதேவதையானதால் இதன் மஹத்வத்தினைக் கூற முடியாது. தேவீ பாகவதமும் வஸந்த சரத் நவராத்ரங்களின் வைபவத்தினை விஷேஷமாகக் கூறுகின்றது.


வேதமும் தந்த்ரமும் என இரு வழிகளாலும் ஆராதிக்கப்படவேண்டியவள் பரதேவதை. அவளே ஆத்மஸ்வரூபிணி. அதை உணர்வதற்கான புண்யகாலமே இந்த வஸந்த நவராத்ரி உத்ஸவம்.

பரதேவதையை ஆராதித்து போகமோக்ஷாதிகளை பெறுவோம்.


நன்றி :- மயிலாடுதுறை ராகவன்