அடிப்படை ஜோதிடம் பயிற்சி வகுப்பு ( கூகிள் மீட்டில்) 6.7.2025 ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை.
ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தும் ஓரளவுக்கு மேல் புரியவில்லை என்றோ அல்லது மனப்பாடம் செய்வது கஷ்டமா இருக்கிறது என்றோ உணர்கிறீர்களா ?
ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறது.ஆனால்,எனக்கு ஜோதிடம் வருமா ?
போன்ற கேள்விகள் உங்கள் மனதில் இருந்தால் இந்த வகுப்பு உங்களுக்காகவே...
அடிப்படை ஜோதிடம் நன்றாகப் புரிந்து விட்டால் ஜோதிடத்தின் உட்பிரிவுகளான ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ளுதல், சம்பவங்கள் நடைபெறும் காலங்களை தசா,புத்தி,அந்தரம்,கோட்சாரம் மூலம் அறிதல் மற்றும் பிரசன்னம்,ஆருடம்,பரிகாரம் போன்ற அடுத்தடுத்த நிலைகளை எளிதில் கற்றுக் கொள்ளலாம்.
புதிதாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்,ஓரளவு அடிப்படை தெரியும் ஆனால் தெளிவாகத் தெரியாது என்ற நிலையில் இருப்பவர்களுக்கும், மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கும் இந்த வகுப்பு பயனுள்ளதாக இருக்கும்.
இன்று ஜோதிடம் குறித்து பயிற்சி அளிக்கும் பல அமைப்புகள் இருக்கின்றன. ஜோதிடத்திலும் பாரம்பரிய ஜோதிடம்,பிருகு நந்திநாடி,ஜாமக்கோள்,பிரசன்னம்,KP,KB,GMP இன்னும் பல முறைகள் இருக்கின்றன.அவற்றில் ஒவ்வொரு நடைமுறையில் அதிகம் பேர் பயன்படுத்தும் சில முறைகள் அவற்றின் சிறப்புகள் மற்றும் எங்கு ஜோதிடம் கற்கலாம் மற்றும் ஜோதிடம் பற்றிய சிறந்த புத்தகங்கள் பற்றியும் வகுப்பில் தகவல்கள் பகிரப்படும்.
வகுப்பு முடிந்த பின் டெலெக்ராமில் ஒரு குழுவில் அடிப்படை ஜோதிடம் பற்றிய விஷயங்களும்,ஜோதிடம் கற்றுத் தெளிய உதவும் பயனுள்ள புத்தகங்களும் பகிரப்படும்.
பயிற்சிக் கட்டணம்: Rs.300
மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட ஆடியோ கேட்கவும்.