ஆண்டு இறுதித் தேர்வு நெருங்கும் சமயம் மாணவ,மாணவிகள் மிகுந்த மன நெருக்கடிக்குள் தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் இந்தப் பதிவு அவசியம் தேவையானதாக இருக்கும் என்று பகிர்கிறேன்.
எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.
நல்ல நினைவாற்றலுக்கு மந்திர சாஸ்திரம் கூறும் சில வழிமுறைகளை விளக்குகிறேன்.பின்பற்றி பலன் பெறுங்கள்.
1.ஸ்ரீ ஹயக்ரீவர் சுலோகம்,காயத்ரி,மூல மந்திரம்:-
கீழ்க்காணும் சுலோகம்,மூலமந்திரம்,காயத்ரி அனைத்தையுமோ அல்லது இயன்றதையோ ஜெபித்து வர கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.
ஸ்ரீ ஹயக்ரீவர் சுலோகம்:
ஓம் ருக்யஜுர் சாமரூபாய |
வேதாஹரண கர்மணே |
பிரணவோத்கீத வசசே |
மஹா அச்வ சிரசே நமஹா ||
ஓம் உத்கீத பிரணவோத்கீத |
சர்வ வாகீச்வரேச்வரஹ |
சர்வ வேத மயா சிந்த்ய |
சர்வம் போதய போதய ||
ஓம் விச்வோத் தீர்ணஸ்வரூபாய |
சின்மயானந்த ரூபிணே |
துப்யம் நமோ ஹயக்ரீவ |
வித்யா ராஜாய விஷ்ணவே ||
ஓம் ஆசக்ராய விசக்ராய |
ஸுசக்ராய தீசக்ரிணே |
ஜ்வாலா சக்ராய ச இத்யுக்த்வா |
மஹா சக்ராய தே நமஹா ||
இதைப் படிப்போர் நல்ல கல்வியும்,செல்வமும்,ஞானமும் பெறுவார்கள் என ஸ்ரீ விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது.
ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரி :-
ஓம் ஸ்ரீ வாகீச்வராய வித்மஹே |
ஹயக்ரீவாய தீமஹி |
தன்னோ ஹம்சஹ ப்ரசோதயாத் ||
இந்த ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரி ஜெபம் சகல கலைகளிலும் தேர்ச்சியைத் தரும்.
ஸ்ரீ ஹயக்ரீவர் மூலமந்திரம் :-
1. ஓம் ஞானானந்த மயம் தேவம்|
நிர்மலம் ஸ்படிகாக்ருதிம் |
ஆதாரம் சர்வ வித்யானாம் |
ஹயக்ரீவம் உபாஸ்மஹே ||
2. ஓம் ஐம் ஹ்ரீம் ஹ்ரசௌம் | ஓம் நமோ பகவதே ஹயக்ரீவாய விஷ்ணவே | மஹ்யம் மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ப்ரயச்ச ஸ்வாஹா ||
3. ஓம் ஐம் ஐம் | ஓம் ஹ்ராம் ஹ்ரௌம் ஹயக்ரீவாய ஸ்வாஹா ||
மேற்கண்ட மந்திரங்கள் ஜெபிக்க பெரியதாகவும் கடினமாகவும் இருப்பதாகத் தோன்றினால் ''ஓம் ஹ்ரசௌம் ஹயக்ரீவாய நமஹ '' என்று ஜெபித்து வரலாம் .
சிறப்பான முறையில் பலன் பெற விரும்புவோர் ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜெபித்து ஹோமம் செய்து ரஹஸ்ய குங்கும அர்ச்சனை செய்த குங்குமத்தை அணிவதன் மூலமோ, ரக்ஷை அணிந்தோ அல்லது அஞ்சனம் செய்து திலகமாக அணிந்து வர அல்லது வகிட்டில் வைத்து வர விரைவான் நிறைவான பலன் பெறலாம் .
ஏதேனும் ஒரு வளர்பிறை புதன் கிழமை அன்று நவக்ரஹங்களில் புதனுக்கு அல்லது ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கோ பச்சைப் பட்டு சார்த்தி ஒரு பச்சை நிற துண்டு வாங்கி அதை ஸ்ரீ மகாவிஷ்ணு அல்லது ஸ்ரீ புதபகவான் பாதத்தில் வைத்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வாங்கி பின்னர் அதில் சிறிது பன்னீர் தெளித்து புதன் எந்திரம் அதில் கைகொண்டு வரைந்து அதில் ஈசான்ய திசை (வடகிழக்கு) நோக்கி அமர்ந்து படித்து வர நல்ல நினைவாற்றலும்,கல்வியில் பிரியமும்,சிறந்த தேர்ச்சியும் உண்டாகும்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||
M.சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
No comments:
Post a Comment