Wednesday, 29 July 2015

செல்வ விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்



இம்மந்திரம் எவ்வளவு கொடிய வறுமை ,கடன்,பொருளாதார முடக்கம் இவற்றைச்  சரி செய்யும்  வல்லமை கொண்டது.உங்களுக்கு படுபக்ஷி இல்லாத ஒரு நல்ல நாளாகப் பார்த்து அல்லது ஒரு பௌர்ணமி நாளில் ஜெபிக்கத் தொடங்கவும்.முதல் நாளில் 108 உருவும் அடுத்து வரும் நாட்களில் குறைந்தது 27 தடவையாவது ஜெபித்து வரவும்.மாலை 5:45 முதல் 7:30 மணிக்குள் ஜெபிப்பது சிறப்பு  அல்லது அதிகாலை 5:30 முதல் 7:00 மணிக்குள்  ஜெபிக்கலாம்.தொடர்ந்து  90 நாட்களுக்கு  ஜெபித்து வர  நிறைவான பலன் கிடைக்கும்.அதன் பின்னரும் விடாமல் ஜெபித்து வர நிறைசெல்வத்துடன் வாழலாம்.

மந்திரம் :-

ஓம் | ஹ்ரீம் ஸ்ரீம் | ஸ்திர  அஷ்டலக்ஷ்மி | மம க்ரஹே நிவாசய |
குரு  குரு ஸ்வாஹா ||


நைவேத்யம் :-

முதல் நாள் வெற்றிலை,பாக்கு,பால், பழங்கள்,பாயசம் வைத்து வைபடவும்,மற்ற நாட்களில் இயன்றதை படைக்கலாம்.முதல் நாள்,90 வது நாள்,மற்றும் வெள்ளிகிழமை, பௌர்ணமி நாட்களில் விசேஷமாக பூஜை செய்ய விரைவான பலன்களை அள்ளித்தரும்.

வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

Thursday, 23 July 2015

ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்


கிருஷ்ணாவதாரத்தின் புகழ் பாடும் ஸ்ரீ  கோபால தாபினி உபநிஷத் ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தின் மேன்மை பற்றிக் கூறும் விஷயங்கள் :-


ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக மேன்மையான அவதாரம் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரமே.எனவே அவர் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா என்று அழைக்கப் படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணணே சர்வ வ்யாபியும் யாவரும்,யாவும் இந்த பிரபஞ்சமும் அதற்கு அப்பால் உள்ள சர்வமும் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மாவில் அடங்கும் என்று விரிவாக விளக்குகிறது ஸ்ரீ  கோபால தாபினி உபநிஷத் .

ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் 

க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய ஸ்வாஹா ||

இம்மந்திர ஜபம் எல்லா நலமும்,வளமும் அருள்வதோடு முடிவில் மோக்ஷமும் அருளவல்லது.விரைவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் அருள் பெற்று அவரின் சமீபம் சென்று அடைய இம்மந்திரம் உதவும்.

இம்மாதிர ஜெபத்தினால் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும்.

இம்மந்திரத்தை வெண்ணையில் மந்திரித்துக் கொடுக்க அல்லது உண்டு வரக்  குழந்தை பாக்கியம் கிட்டும்.




வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com