கிருஷ்ணாவதாரத்தின் புகழ் பாடும் ஸ்ரீ கோபால தாபினி உபநிஷத் ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தின் மேன்மை பற்றிக் கூறும் விஷயங்கள் :-
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக மேன்மையான அவதாரம் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரமே.எனவே அவர் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா என்று அழைக்கப் படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணணே சர்வ வ்யாபியும் யாவரும்,யாவும் இந்த பிரபஞ்சமும் அதற்கு அப்பால் உள்ள சர்வமும் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மாவில் அடங்கும் என்று விரிவாக விளக்குகிறது ஸ்ரீ கோபால தாபினி உபநிஷத் .
ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய ஸ்வாஹா ||
இம்மந்திர ஜபம் எல்லா நலமும்,வளமும் அருள்வதோடு முடிவில் மோக்ஷமும் அருளவல்லது.விரைவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் அருள் பெற்று அவரின் சமீபம் சென்று அடைய இம்மந்திரம் உதவும்.
இம்மாதிர ஜெபத்தினால் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும்.
இம்மந்திரத்தை வெண்ணையில் மந்திரித்துக் கொடுக்க அல்லது உண்டு வரக் குழந்தை பாக்கியம் கிட்டும்.
வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!
M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com
No comments:
Post a Comment