Sunday 15 October 2017

தொழில் விருத்தி ,தன விருத்தி யந்திரம்


இந்த யந்திரத்தின் பலன் :-
அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்து வ்ரும். 
பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தொழில் சார்ந்த கடன்கள் தீரும்.
-----
இந்த பூஜையைச் செய்யும் நாளில் உங்களுக்கு ஆகாத திதி,நட்சத்திரம் மற்றும் படுபட்சி நாட்களைத் தவிர்த்து அதிர்ஷ்டமும்,பலமும் கூடிய நாளில் செய்யவும்.

வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ரஹோரையில்  அல்லது  வளர்பிறை  வியாழக்கிழமை அன்று  குரு ஹோரையில் செய்வது சிறப்பு.

வெள்ளிக்கிழமை அன்று செய்வதாக இருந்தால் வெள்ளை நிற ஆடை அணிந்து வெள்ளை விரிப்பில் அமர்ந்து பூஜை செய்யவும்.

வியாழக்கிழமை அன்று செய்வதாக இருந்தால் மஞ்சள் நிற ஆடை அணிந்து மஞ்சள் விரிப்பில் அமர்ந்து பூஜை செய்யவும்.

வெள்ளி அல்லது தங்கத்தகட்டில் வரைந்து பயன்படுத்தினால் நீண்ட கால பயனைத் தரும்.

வெள்ளித்தகடு பயன்படுத்துபவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ரஹோரையில் வரையவும்.

தங்கத்தகடு பயன்படுத்துபவர்கள் வளர்பிறை  வியாழக்கிழமை அன்று  குரு ஹோரையில் வரையவும்.

வெள்ளி அல்லது தங்கத்தகடு பயன்படுத்த முடியாதவர்கள் செம்புத் தகட்டில் யந்திரத்தை எழுதவும்.
 
நெய் விளக்கேற்றி விளக்கிற்குச் சந்தனம்,குங்குமம் வைத்துப் பூக்களால் அலங்கரிக்கவும்.அர்ச்சிக்கவும்.

வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பால் பாயசம் வைக்கவும்.

யந்திரத்தைப் பால்,இளநீர்,பன்னீர் விட்டுக் கழுவி,விபூதி போட்டு ஒரு சுத்தமான துணியால் துடைத்த பின் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமர்ந்து எழுதவும்.

யந்திரம் வரைய  இரும்பு பயன்படுத்தாமல் செம்பு,பித்தளை அல்லது வெள்ளிக் குச்சி பயன்படுத்தவும்.மாதுளை மரக்குச்சி பயன்படுத்தலாம்.

யந்திரம் வரைந்த பின்,பச்சரிசி பரப்பி அதன் மேல் யந்திரத்தை வைத்துச்   சந்தனம்,குங்குமம் வைத்து  நான்கு மூலையிலும் ஜவ்வாது தடவி "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வரியை நமஹ"  என்று 108 தடவை ஜெபித்து  மல்லிகை,முல்லை,பிச்சி போன்ற வெண்ணிறப் பூக்களால் யந்திரத்திற்கு  அர்ச்சனை செய்யவும். 

அர்ச்சனை செய்த பின் விளக்கிற்கும்,யந்திரத்திற்கும் தூபம்,தீபம் காட்டவும்.

பூஜை முடிந்ததும் ஒரு சிறிய மண்பானையில் யந்திரத்தை வைத்து அதனுள்  கொஞ்சம் பூக்கள் போட்டு, கீழ்க்கண்ட நான்கு பொருள்களையும் பானையில் போட்டு மஞ்சள் துணியால் பானையின் வாய்ப்பகுதியை மூடவும்.பூஜை செய்த அன்றே நல்ல நேரமிருந்தால் அன்றும் அல்லது இன்னொரு நல்ல நாள்,நல்ல நேரத்திலோ தொழில் ஸ்தாபனத்தில் முக்கியமான பொறுப்பில் உள்ள நபர் அல்லது முதலாளி அமரும் இடத்தின் கீழ் பானையைப் புதைத்து வைக்கவும்.  

பானையில் யந்திரத்துடன் போட வேண்டிய பொருட்கள்:-
கொட்டைப்பாக்கு கொஞ்சம் 
மஞ்சள் கொஞ்சம் 
தனியா (கொத்துமல்லி விதை) கொஞ்சம் 
வெள்ளி நாணயம் அல்லது ஒரு ரூபாய் நாணயம் 


நன்றி .வாழ்கவளமுடன்

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE      :  9442193072


WHATSAPP : 9788493072

No comments:

Post a Comment