Thursday 9 May 2019

ஸ்ரீ பகளாமுகி ஜெயந்தி - 12.05.2019 - ஞாயிறு - வைஷாக சுக்ல அஷ்டமி


வருகின்ற 12.05.2019 வைஷாக சுக்ல அஷ்டமி ஸ்ரீ பகளாமுகி ஜெயந்தி


சக்தி உபாசனையில் தசமஹாவித்யா என்ற பத்து பெருந்தேவியர் வழிபாடு மிகுந்த சக்தி வாய்ந்தது.

தசமஹாவித்யாதேவிகளில் பகளாமுகி என்ற அன்னையின் ஜயந்தி அதாவது அவதார தினம் வரும் 12.5.2019 (வளர்பிறை அஷ்டமி) அன்று.


வளர்பிறை அஷ்டமி திதி 11.5.2019 சனிக்கிழமை இரவு 7.13 PM துவங்கி 12.5.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.49 PM க்கு முடிவடைகிறது.இந்த நேரத்தில் பகளாமுகி தேவியை பூஜிப்பது சிறப்பு.


பகளாமுகி மூலமந்திரம்:-

ஓம் ஹ்ர்லீம் பகலாமுகீ சர்வ துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய ஜிஹ்வாம் கீலய புத்திம் வினாசய ஹ்ர்லீம் ஓம் ஸ்வாஹா 

(ஹ்ர்லீம் என்பதை ஹ்லீம் என்றும் ஜெபிப்பார்கள்)

இம்மந்திரத்தை அருளிய நாரத மகரிஷியை மந்திரம் சித்தியாக வேண்டியபின் மூலமந்திரம் ஜெபிக்கவும்.

மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சித்து வழிபடவும்.

வழக்கு,தர்க்கம்,வாதம் போன்ற சூழ்நிலைகளில் முறைப்படி இவள் மந்திரம் ஜெபித்து வேண்டிக்கொண்டு செல்ல.வெற்றி உண்டாகும்.   

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்+சனி சேர்க்கை,செவ்வாய்+ராகு சேர்க்கை, செவ்வாய் நீச்சம் போன்ற அமைப்பு இருந்து அதனால் பாதிப்புகளை அனுபவித்து வருபவர்கள் இந்த அம்பாளை வணங்கி வருவதன் மூலம் கெடுபலன்கள் குறைந்து நலம் பெறலாம்.  

மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும்.



வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com

fb link: https://www.facebook.com/surya.joy.52



No comments:

Post a Comment