ஞானமும் விழிப்புணர்வும் ( புத்தரின் வழியில் ) பயிற்சி வகுப்பு 21.5.2023
ஆன்மீக உலகில் பல மதங்களும் நம்பிக்கையை கீழ்ப்படிதலை அடிப்டையாகக் கொண்டவை.புத்த மதம் மட்டுமே கடவுள் பற்றிய கருத்தே இல்லாத முதல் சமயம்.மேலும்,வெறும் நம்பிக்கைக்குப் பதிலாகச் செயல்முறைகளையும் (TECHNIQUES AND DIRECT EXPERIENCE) நேரடியான அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டது புத்தமதம்.
புத்தரின் போதனைகளின் படி பயிற்சி செய்பவர்கள் நேரடியான அனுபவததைப் பெற்று ஞான சூரியனாகத் திகழ்வார்கள்.
1.ஞானம் மற்றும் விழிப்புணர்வு என்றால் என்ன ? ஞானத்தின் வெளிப்பாடு என்ன ? யோக மார்க்கம்,பக்தி மார்க்கத்தில் இருந்து ஞான மார்க்கம் எப்படி வேறுபடுகிறது.மற்ற மார்க்கங்களை விட ஞானமார்க்கமே உயர்ந்தது எனச் சொல்லப்படுகிறதே ஏன் அப்படி என்ன சிறப்பு ஞானமார்க்கத்தில் ?
ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஞான மார்க்கம் எப்படி உதவுகிறது.
2.புத்தரின் அருளிய தியான / ஞானப் பயிற்சிகள்.
3.புத்தரின் பார்வையில் புண்ணியம்,பாவம்,நன்மை தீமை என்பது பற்றிய விளக்கம் மற்ற சமயங்களில் கூறப்பட்ட கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து .அதைப் புரிந்து கொண்டு பின்பற்றினால் நம் அன்றாடச் செயல்பாடுகளில் உன்னதமான மாற்றம் உண்டாகும்.
4.இந்தியா,சீனா,திபெத்தில் பின்பற்றப்படும் புத்த முறைக்கும்,ஜப்பானில் பின்பற்றப்படும் ஜென் புத்த முறைக்கும் உள்ள வேறுபாடும் அதனால் உண்டாகும் பயன்களும்.
5.உடல் அல்லது மனம் அல்லது இரண்டிலும் சக்தி குறைவாக இருப்பதுவே நாம் செய்ய வேண்டிய பல காரியங்களைச் செய்யாமல் இருப்பதன் காரணம். புத்தரின் வழிமுறைகளைப் பின்பற்றி அதனால் கிடைக்கும் சக்திப் பெருக்கத்தை உடல் மற்றும் மனதின் நலத்திற்கும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தலாம்.
6.புத்தரின் போதனைகளைப் புரிந்து கொள்வதால் இதுவரை நாம் உணராத மனஅமைதி கிடைக்கும்.இது தெளிவாக முடிவெடுக்கவும்,புதிதாக எந்த விதமான குழப்பம்,பிரச்சனைகளை வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் உதவியாக இருக்கும்.
7.சிறு குழந்தையை போல் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் செயல்படலாம். ஒன்றும் செய்யத் தேவையில்லாத சமயங்களில் மனம் ஒடுங்கி அமைதியாக இருக்க விரும்பினால் அப்படியும் இருக்கலாம்.புத்தமதம் முக்கிய போதிக்கும் விஷயங்களில் சமநிலையான வாழ்க்கை முறையும் ஒன்று.(BALANCED LIFE).
8.உயர்நிலை குருமார்களின் ஆசிகளையும்,சூட்சும வழிகாட்டுதலையும் பெறும் முறைகள்.
9.புத்த மதத்தில் தெய்வங்களின் வழிபாடு உண்டா என்பது பற்றிய விளக்கங்கள்.
10.வாழ்க்கையில் நாம் பெரும்பாலான செயல்களை மயக்க நிலையிலேயே ஒரு இயந்திரம் போலச் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து வருகிறோம் ?
நாம் விரும்புவதற்கும் நாம் செயல்படுவதற்கும் இடையே பல குழப்பங்கள். நமக்குள்ளேயே ஏன் இவ்வளவு முரண்பாடுகள் ?
விதியும் மதியும் - வாழ்க்கை முழுமையாக விதிப்படியானதா அல்லது நம் சிந்தனை,சொல், செயல்களால் மாற்றி அமைத்துக் கொள்ள கூடியதா ? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும் ?
11.ஒரு நாளில் நான் செய்யும் செயல்களில் பலவும் தேவையற்றவை தான்.அந்த நேரங்களில் வாழ்க்கை நலமடைய எவ்வளவோ விஷயங்களைச் செய்யலாம். ஆனால்,எதுவும் உருப்படியாகச் செய்வதில்லை.காரணம் நம் மீது நமக்கு ஆளுமை அல்லது கவனம் இல்லை .இந்த மனநிலையைச் சரி செய்வது எப்படி ?
12.நல்ல விஷயங்களைச் செய்யத் துவங்குவதும்,அதைத் தொடர்ந்து செய்வதும் ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ? அதே நேரத்தில் கெட்ட காரியத்தைத் துவங்குவதும் அதை விடாமல் செய்வதும் ஏன் இவ்வளவு எளிதில் நடைபெறுகிறது ? செய்த பின் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் அதை மீண்டும் மீண்டும் செய்வது ஏன் ? இதில் இருந்து விடுபடுவது எப்படி ?
13.மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை.எப்போதும் துன்பம்,கவலை,வருத்தம் நிறைந்த மனதில் மகிழ்ச்சியைக் கொண்டு வர என்ன செய்யவேண்டும் ?
14.மனமும் அதன் தன்மையும்,நிம்மதியான வாழ்க்கைக்கு மனதைப் பயன்படுத்தும் விதம்.
15.தனியாக இருக்கும் பொழுதும்,உறங்கும் பொழுதும் தேவையில்லாத எண்ணங்கள் வந்து நிம்மதியைக் கெடுக்கிறதே ஏன் ? இதைச் சரி செய்வது எப்படி?
16.அதீத கோபம்,பதட்டம்,காமம் போன்ற உணர்ச்சிளைக் கையாள்வது எப்படி?
17.தீவிரமான ஆன்மீக ஈடுபாடு சரியா,தவறா ?
18.தவறான பழக்க வழக்கங்கள் நம்மிடம் இருந்து தானாக விலகிவிடும் ரகசியம் .
பயிற்சிக் கட்டணம் :RS.1500
21.5.2023 - ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை
பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில் அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்.
GOOGLE PAY NUMBER : 9442193072
PHONEPE NUMBER :9442193072
வங்கிக் கணக்கு விபரம் :-
M.SUBRAMANIAN
STATE BANK OF INDIA
TIRUNELVELI BRANCH
AC NO.32986914404
IFSC CODE: SBIN0000932
நன்றி! வாழ்க வளமுடன் !
M.சூர்யா,
தச்சநல்லூர்,
திருநெல்வேலி
வாட்சப் எண் : 9788493072
No comments:
Post a Comment