தசா புத்திகளில் துன்பங்கள் தீர வழிபாட்டு முறைகள்:-
நமது பிறந்த ஜாதகம் என்பது நம் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது.எப்படி கண்ணாடியில் நம் முகம் தெரியுமோ அது போல் ஜாதகத்தை வைத்து நம் வாழ்வின் தன்மை அதாவது என்ன விதமான வாழ்க்கையை வாழ நாம் பிறந்துள்ளோம் என்று அறியலாம்.பிறக்கும் போது கிரகங்கள் இருக்கும் நிலைக்கேற்ப நம் வாழ்வு அமைந்தாலும் தற்சமய சூழ்நிலைகளுக்கு தசாபுத்தியே மூலம்.எனவே, தசா நாதனுக்கு 100% வலுவும்,புத்தி நாதனுக்கு 70% வலுவும் உண்டு.
எனவே ஜாதகத்தில் தற்சமயம் நடைபெற்று வரும் தசா நாதனையும் அதன் அதிதெய்வத்தையும் வணங்கி வர அனுகூலமான சூழல் உண்டாகும்.தசா நாதனுக்கு அடுத்து புத்தி நாதன் வலுவானவர் என்பதால் புத்தி நாதனையும் அதன் அதிதெய்வத்தையும் வணங்கி வர அனுகூலமான சூழல் உண்டாகும்.மேலும்,தசா புத்திகளை அனுசரித்து மனநிலையிலும் தொழில் வேலை சார்ந்த நிலைகளிலும் சில மாற்றங்களை செய்து கொள்ள விதியை மதி கொண்டு ஓரளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
மற்ற தசா புத்திகளோடு ஒப்பிடுகையில் 3,6,8,12ம் இட அதிபதிகளின் தசை புத்தி அதிக துன்பங்களைக் கொண்டு வரும்.எனவே மேற்க்கண்ட அதிபர்களின் தசா புத்தி சமயங்களிலும்,தசா நாதனுக்கு பகை கொண்ட கிரகங்களின் புத்தி நடைபெறும் சமயங்களிலும் கண்டிப்பாக வழிபாடும் நடவடிக்கைகளில் சில மாற்றங்களும் செய்துகொள்வது அவசியம்.
உதாரணமாக:-
சூரிய தசை நடைபெறும் போது அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து சூரிய மந்திரம்,காயத்ரி மந்திரம் ,சிவ,நாராயணன் வழிபாடு நன்மை தரும்.அதே சூரிய தசையில் சூரியனின் பகை கிரகங்களான சுக்கிரன்,சனி போன்ற கிரக புத்தி நடைபெறும் சமயம் நமக்கு தீமை உண்டாகும்.எனவே அவர்களின் அதி தெய்வ வழிபாடு செய்தல் அவசியம்.
நவக்கிரகங்களும் ஒவ்வொரு தெய்வத்தின் பிரதிநிதிகளே.இதன் விபரம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.
பால் வாங்க வேண்டுமானால் பால்காரன் நம் வீ ட்டிற்கு வரும்போதே வாங்கி விட்டால் அலைச்சல் மிச்சம் இல்லையென்றால் நாம் கடைக்கு சென்று அலைந்து வாங்கவேண்டும் .அதுபோல் ஓரு தெய்வத்தின் கிரகத்தின் அருள் பெற வேண்டுமானால் அந்த கிரகத்தின் நாளில் அந்த கிரக ஹோரையில் வழிபட நிறைவான பலன் உண்டாகும்.
மேற்கண்ட உதாரணப்படி: சூரிய தசைக்கு சூரியனையும்,சிவனையும் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரையில் வணங்கி, சுக்கிர புத்திக்கு சுக்கிரனையும் மகாலக்ஷ்மியையும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையிலும் வணங்கி வரவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்குரியது.அந்த நாளில் அந்த கிரகத்தின் ஹோரை நான்கு முறை வரும்.அதில் எதையாவது எடுத்து செய்யலாம்.ஆனால் அந்த நேரம் ராகுகாலம், எமகண்டம் தவிர்த்த நேரங்களில் வரும் ஹோரையை பயன்படுத்தலாம்.
உதாரணம் :-
வெள்ளிக்கிழமை -சுக்கிரஹோரை கீழ்க்கண்ட நேரங்களில் வரும்.
அதிகாலை 6 முதல் 7 மணி வரை
மதியம் 1 முதல் 2 மணி வரை
இரவு 8 முதல் 9 மணி வரை
மறுநாள் அதிகாலை 3 முதல் 4 மணி வரை
இதே போல் ஒவ்வொரு கிரகத்தின் ஹோரையும் அதற்குண்டான நாளில் நாலு முறை வரும்.அதில் நல்ல நேரம் பார்த்து தேர்ந்தெடுத்து செய்யலாம்.
அது போல் நல்ல காரியங்கள் செய்ய சில ஹோரைகள் சிறந்தது என்று சொல்லப்படுகிறது ஆனாலும் பகை கிரகத்துக்குண்டான நாளில் அந்த கிரகத்தின் ஹோரைக்கு வீரியம் கிடையாது.உதாரணமாக ஞாயிற்றுகிழமை அன்று சுக்கிர ஹோரை,சனி ஹோரை சூரியனுக்கு சுக்கிரனும் ,சனியும் பகை கிரகங்கள் எனவே அன்று அந்த ஹோரைகள் நல்ல பலனைத் தராது.
விளக்கேற்றும் போது தசா புத்தி நாதர்களை அறிந்து அவர்களுக்குண்டான நிறத்தில் புதுத்துணி வாங்கி அதை நூலாகத் திரித்து,அதற்குண்டான தானியத்தையும் அதில் வைத்து சுற்றி விளக்கேற்றி அதன் கருக்கை நெற்றியில் இட்டு வர அவர்கள் அருள் உண்டாகும்.
உதாரணமாக சனி தசை என்றால் கருநீலம் அல்லது கருப்பு நிறத்துணியை சிறிதாக வெட்டி எடுத்து அதில் சனியின் தானியமான எள்ளை சிறிது வைத்து முடிந்து அதை விளக்கேற்றப் பயன்படுத்தலாம்.
மேற்கண்டவற்றை அனுசரித்து நடக்க நன்மை உண்டாகும்.மேலும் கேள்விகள் இருந்தால் கீழ்க்கண்ட மொபைல் எண்ணுக்கோ ,ms.spiritual1@gmail.com என்ற மெயில் id யிலோ தொடர்பு கொள்ளவும்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||
M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

No comments:
Post a Comment